Skip to content
Home » மாண்புறு மங்கையே  22

மாண்புறு மங்கையே  22

காலையில் ஒன்பது மணியளவில் கனிஷ்காவும் ரோகினியும் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பியவர்கள் காலை பத்து மணிவாக்கில் மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.

அங்கிருந்து ஆட்டோவில் பத்தரை போல சுடர் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் இருவரும். கதிர், கார்த்திக், சுடர் மூவரும் ஒன்பதரை மணிக்கே நீதி மன்றத்திற்குச் சென்றிருந்தனர்.

வீட்டில் தெய்வானை, மதி, ஆரஞ்சிம்மாள் மட்டுமே இருந்தனர். “தெய்வானை! தெய்வானை! அம்மா! சுடர்!” என அழைத்த படியே ரோகினியும் அவருடன் கனிஷ்காவும் உள்ளே நுழைந்தனர்.

உள்ளிலிருந்து தெய்வானை வர, ரோகினியையும் தன் மருமகளை கண்டு பெரிதாய் விழிகளை விரித்து அவர்களை நோக்கி வந்தார்.

“ரோகினி எப்படி இருக்க? மருமகளே நீ எப்படி இருக்க?”அவள் முகம் வழித்து கொஞ்சினார். “அத்தை மதியென” அழைத்தவாறே இருவரையும் உள்ளே அழைத்து வந்தார்.

“நாங்க நல்லா இருக்கோம் தெய்வானை. நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க? லாக்டவுனுக்கு முன்னாடி உங்களை எல்லாரையும் பார்த்தது எவ்வளவு நாள் ஆச்சு? இந்தக் கொரோனா வந்து எல்லாரையும் ஒரு வழி ஆக்கிருச்சு.” என்று சலித்து கொண்டார்.

“அதான், உன்னை இங்க வான்னு கூப்பிட்டோம். நீ தான் ரொம்ப யோசித்து வரவே இல்ல! நீயும் இங்கே இருந்திருக்கலாம். கார்த்திக்கும் சிங்கபூர்ல மாட்டிக் கிட்டான். நீங்க அங்க தனியா என்ன கஷ்டப்படுவீங்களோனு ஒரு பக்கம் கவலை வேற, எப்படியோ வீட்லே அடைக்காம கொஞ்சம் தளர்வு போட்டானுங்களே இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா மனுசங்க முகத்தையே பார்க்க முடியுது ரோகினி.” என்று அவரும் பெருமூச்சை இழுத்து விட்டார்.

அப்போது ஆரஞ்சிம்மாளும் வர, அவரிடமும் குசலம் விசாரித்தனர் இருவரும். “வீட்ல நீங்க மட்டும் தான் இருக்கீங்களா? எங்க என் மருமக சுடரைக் காணோம்?” என வீட்டை சுத்தி பார்க்க,

“என்ன ரோ, உனக்கு உன் மருமக மட்டும் தான் மருமகளா நான் இல்லையா? வந்ததுல இருந்து உன் வாயில, தெய்வானை, அம்மா, சுடர்னு தான் வந்திருக்கு மதினு வாய் நிறைய கூப்பிட்டியா நீ? நானும் நீ கூப்பிடுவனு ஆசையா அத்தைன்னு ஓடி வரலாம் பார்த்தா நீ என்னை கூப்பிடவே இல்ல. இந்த வீட்ல தான் என்னை மதிக்கலன்னா, நீயும் கூடவா.” என முகத்தைச் சுருக்கி கோபம் கொள்ள,

“அச்சச்சோ! அப்படி எல்லாம் இல்ல என் தங்கமே. நீ தான் எங்க வீட்டு கடைக்குட்டி மருமக, செல்லக் குட்டி மருமக மன்னிச்சிருடா என் செல்ல மருமகளே. வேணும்னா நீ உள்ள போடா, அத்தை உன்னை ஆசையா என் செல்ல மருமகளேன்னு கூப்பிடுறேன், நீயும் ஆசையா ஓடி வருவ.” எனக் கிண்டல் செய்ய முகத்தை சுருக்கி கோபமாக ரோகினியை முறைத்தாள் மதி.

கனிஷ்காவோ இதழ் மடித்து சிரிக்க, தெய்வானையும் ஆரஞ்சிம்மாளும் மதியின் வதனத்தை கண்டு சிரிப்பை அடக்க முயன்றனர்.

“என்ன ரோ, நீ கூடவா” எனவும்,

“அப்படியெல்லாம் இல்ல டா நீ செல்லம்.” அவள் பண்ணு கன்னத்தில் முத்தம் வைக்க, “குஷ்க்கா எப்படி இருக்க?” அவளை வம்பிழுத்தவாறே நலம் விசாரிக்க, “அடியே! என் பேரை ஒழுங்கா கூப்பிடுறீ குண்டச்சி.” அவள் கூறிய பெயரை கேட்டு பல்லைக் கடித்தாள் கனிஷ்கா.

“முடியாது டி குஷ்கா! சொல்லு எப்படி இருக்க” மேலும் வம்பிழுக்க , “உன்னை…!” என அவளை துரத்த ஆரம்பித்தாள். “நான் என்ன டி பண்ண? உனக்கு யாரு கனிஷ்கா குஸ்கா னு பேரு வச்சது. எனக்கு அந்தப் பேரை சொல்லும் போதெல்லாம் குஷ்கா நியாபகம் தான் வருது. நீயும் குஷ்கா கலருல வேற இருக்கீயா சத்தியமா உனக்கு அந்த பேரு பக்காவா பொருந்தும்!” எனக் கேலி செய்தவாறே கனிஷ்காவின் கையில் சிக்காமல் ஓட, “அத்தை” என சிணுங்கினாள் கனிஷ்கா.

“அடியே! பிள்ளையை ஏன் டி வம்பிழுக்கற?” ஆரஞ்சிம்மாள் அதட்ட,

“என் அத்தை பொண்ண நான் கிண்டல் பண்ணுவேன் உனக்கு என்ன கிழவி? என் உரிமை இதெல்லாம் நீ கேட்கக் கூடாது என்ன அத்தை?” ரோகினியை பார்த்து கேட்டாள்.

“ஆமாண்டி செல்லம் உனக்கு இல்லாத உரிமையா? இவளும் பையனா பொறந்திருக்கலாம். என் செல்ல மருமகளையும் கட்டி வச்சு என்னோட வச்சிருப்பேன்.” மீண்டும் அவளை கொஞ்ச,

“அப்பாடா நான் தப்பிச்சேன் இல்லேன்னா, இந்தக் குண்டச்சி சோறு சாப்பிட நான் நாளும் முழுக்க நாயா உழைக்கணும், நல்லவேளை தப்பிச்சேன்.” என்றவளை முறைத்த மதி,

“என் அருமை உனக்கு இப்ப தெரியாது டி. நீ உன் புருசனுக்கு ஆக்கி ஆக்கிப் போட்டு அடுப்படிலே கரியாவேல அப்ப யோசிப்ப. பேசாம பையனா பொறந்து அத்தை மகளையே கட்டி இருக்கலாம்னு இது நடக்குதா இல்லையான்னு பாரு டி.” சபதமிட, அவளோ அவளுக்கு பழிப்பு காட்டினாள்.

இவர்கள் அலும்பலை கண்டு சிரித்த ரோகினி, தெய்வானையிடம் “தெய்வானை நானும் கேட்டுட்டே இருக்கேன் பதிலையே காணோம். எங்க டி என் மருமக, மக, அண்ணனும் மூணு பேரையும் காணோம். எங்க போயிருக்காங்க?”

“அவங்களா ரோகினி கேஸ் விஷயமா கோர்ட்டுக்கு போயிருக்காங்க இன்னைக்கு தான் தீர்ப்பு.” என்று சொல்லி பெருமூச்சு விட்டபடி,

ரோகினியோ பயந்து விட்டு, “என்ன தெய்வானை சொல்ற? என்ன கேஸ்? என்ன தீர்ப்பு யாருக்கு என்ன பிரச்சனை?” பதறி போய் கேட்க, அப்போது தான், தான் வாய்விட்டதை எண்ணி நாக்கை கடித்தார்.

மதி, தன் தலையில் அடித்துக் கொள்ள, தெய்வானை என்ன சொல்லி சமாளிக்க என எண்ண, “என்ன தெய்வானை, அமைதியா இருக்க? யாருக்கு என்ன ஆச்சு? எதுக்கு கோர்டுக்கு போயிருக்காங்க சொல்லு?” எனவும், தெய்வானை தன் மாமியாரை பார்க்க, அவரும் சொல்லும் படி சொல்ல, வேறு வழியின்றி அனைத்தையும் கூறி முடித்தார்.

அதிர்ச்சியில் இருவரும் வாயை அடைத்து போனார்கள். “என்ன தெய்வானை சொல்ற, என் மருமக முகத்துல ஆசிட் அடிச்சிட்டாங்களா? ஐயோ என் குழந்தை எப்படி அதை தாங்கினாளோ? ஒரு வார்த்தை சொல்ல மாட்டிங்களா நீங்க? தூரமா இருந்தால் உறவுனு இல்லாமையா போயிடுவோம். என் மருமக எவ்வளவு கஷ்டப்பட்டாளோ அவ கூட இருந்து துக்கத்தைக் கூட பகிர முடியுமா பண்ணிட்டீங்களே. அப்பவே என் மருமகள சென்னைக்கு கூட்டிட்டு போறேன் சொன்னேன். என்னோட அனுப்பிருந்தால் இந்நேரம் என் மருமகளுக்கு இப்படி எல்லாம் நடந்திருக்குமா? என் மருமக மனசளவில கூட யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டாளே அவளுக்கா இப்படி நடக்கணும்?” என்று அழுது கரைய, தெய்வானையும் உடன் சேர்ந்து அழுதனர்.

“ஏன் மா, நாங்க உயிரோட தானே இருக்கோம். ஒரு வார்த்தை சொல்ல கூடாதா? அப்படியா அந்நியமா போயிட்டோம். சொந்த அத்தைக்காரி கிட்ட சொல்லக் கூடாதுனு இருந்திருக்கீங்களே இன்னைக்கு நான் வரலேன்னா எனக்கு இன்னைக்கும் உண்மை தெரிஞ்சிருக்காது அப்படித்தானே !” ஆதங்கத்தை கொட்ட,

“அப்படி இல்லத்தா, நீயே அங்க தனியா இருந்து கஷ்டப்பட்ட, இதுல நாங்க இதை வேற சொல்லி நீ இன்னும் நோகவா! ஊரடங்கு போட்டு, யாரையும் வெளிய வரவிடாம பண்ணிட்டான். போதாக்குறைக்கு கொரோனா வேற ஆட்டி படைச்சிட்டு இருக்கு. எங்கையும் போகவும் முடியல வர முடியல, உயிரோட இருக்கறதே பெருசு நினைக்கறளவுக்கு உலகமே வந்திடுச்சு. நீயே வயசு பொண்ணை வச்சு தனியா கஷ்டபடுற இதுல இதையும் சொல்லிருந்தா உன் மனுசு முழுக்க இங்க தான் இருக்கும். ஆம்பள துணை இல்லம்மா உன்னால இங்க வந்திருக்க முடியாது எல்லாம் யோசித்து தான் சொல்லலாம விட்டோம்.” என்று சமாதானம் செய்தார்.

இருந்தும் அவர் சமாதானம் ஆக வில்லை, கத்திக் கொண்டே இருந்தார். எல்லாரும் எல்லாம் சொல்லி பார்த்தாலும் ம்கூம் கோவத்திலே அவரிருக்க, கேஸ் முடிந்து மூவரும் வர, ரோகினியின் கத்தல் வாசல் வரை கேட்க பயந்த படியே உள்ளே வந்தனர். இருவரையும் கண்டு முறைத்தவர் தன் மருமகளின் முகத்தை கண்டு நொறுங்கி தான் போனார்.

“சுடர்ம்மா” அவள் கன்னத்தை வருடி, “வலிக்குதாடா?” என்றார். “இல்லத்த பட்டு போச்சு” எனவும் வெடித்து அழுதார், “என் மருமகள இப்படி பார்க்கவா, இங்க வந்தேன்.” நெஞ்சை பிடித்து கதற, அவரை சமாதானம் பண்ணுவதற்குள் நாக்கு தள்ளியது அங்கிருப்பவர்களுக்கு.

“ம்மா, இப்போ தான் அவ எல்லாத்தையும் மறந்து இருக்கா? நீ அழுது அவளை மேலும் அழ வைக்காத அமைதியா இருமா.” என்றவனுக்கு ஒரு அடி கன்னத்தில் விழுந்தது.

“மா!” கன்னத்தில் கைவைத்து நிக்க, மதி, கனிஷ்கா இருவரும் சிரித்தனர். அவர்களை முறைத்து விட்டு, “ஏன் மா அடிச்ச?”

“பின்ன கொஞ்சனுமா உன்னை? ஏன் டா எங்கிட்ட சொல்லல. இவங்க தான் மறச்சாங்கன்னா நீயுமா? எதுக்குடா இங்க வந்த? சுடர் கொஞ்ச நாளா சரி இல்லை அங்க போய் என்னானு பார்த்துட்டு வரேன் சொல்லிட்டு தானே போன. இங்க வந்து உண்மைய தெரிஞ்சுகிட்ட நீ, ஏன்டா சொல்லல?” காட்டு கத்தலாக கத்த,

அவனோ, “ம்மா, முதல்ல அவ பிரச்சினைய முடிச்சிட்டு அப்புறமா உன்கிட்ட சொல்லலாம் இருந்தேன் மா. இப்போ மறச்சத்துக்கே என்னை அடிக்கறீயே, ஆரம்பத்துல இருந்தே மறைச்ச மாமாவ என்னானு கேளு? அவரை எதுவும் கேட்காம என்னையே அடிக்கற நீ.” எனக் கதிரை வாகாக மாட்டிவிட்டான்.

வேடிக்கை பார்த்தவன் மேல் ஓணானை விட்டது போல விதி விதிர்த்து நின்றார். ‘அட சண்டாளா! என்னை ஏன்டா மாட்டி விட்ட?’ என்பது போல அவனை முறைக்க, அவனோ அவருக்கு பழிப்பு கட்டினான்.

“அவர் தான் என்னை சொந்த தங்கச்சியாவே பார்க்கலேல, அவர் மனைவியோட சொந்தமா தானே பார்க்கறார். அப்போ எப்படி சொல்லுவார்?” என அவரும் முகத்தை சிலுப்பிக் கொள்ள,

“ஐயோ தங்கச்சி. அப்படியெல்லாம் நான் நினைக்கல மா. எனக்கு கூட பிறந்த தங்கச்சி இருந்தால் கூட இவ்வளவு பாசம் இந்த குடும்பத்து மேலே வச்சிருக்கும்மா தெரிலே மா. உன்னை, நான் என் மனைவி சொந்தமா என்னைக்கும் பார்த்தது இல்லே டா நெசம் டா.” எனக் கண்கலங்க,

தன் தமயனின் கண்ணீர் ரோகினி பதற வைக்க, “அண்ணா, தப்பா எடுத்துக்காதீங்க. பிள்ளைக்கு இப்படி நடந்ததை சொல்லலாம விட்ட ஆதங்கம் தான் அண்ணா.” என்று அவரும் மூக்கை சிந்த, அவரை எப்படி சமாதானம் செய்ய அனைவரும் யோசிக்க அவரை அணைத்த சுடர்,

“உங்க அன்பு எனக்கு கிடைக்க நான் என்ன புண்ணியம் பண்ணினேனோ. எனக்காக நீங்க சிந்தற கண்ணீர் என்னைக்கும் விலைமதிப்பற்ற பொக்கிஷம் அதை வீணாக்கதீங்க அத்த. உங்க மருமக நிறையவே உடைஞ்சு போயிட்டா. நீங்களும் உங்க அன்பும் நம்ம குடும்பத்தோட அன்பும் தான் என்னை மறுபடியும் ஒட்ட வைக்கும். நீங்களே அழுது மேலும் என்னை உடைக்காதீங்க அத்த.” எனவும் பதறியவர், “இல்லடா இனி இதை பத்தி பேச மாட்டேன்!” என அவளை இறுக அணைக்க அவர்கள் இருவரையும் சேர்த்தே கார்த்திக் அணைக்க மதியும் கனிஷ்காவும் அணைத்துக் கொள்ள, மிதி இருந்த மூவரின் மனதும் நிம்மதி அடைந்தன.

குடும்பம் மொத்தமும் அன்றைய நாளை மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் கழித்தனர். அன்று இரவே கார்த்திக்கின் எண்ணத்தையும் ஆரஞ்சிம்மாள் கூறியதையும் கூறி ரோகினி முடிவை அனைவரும் எதிரபார்த்திருக்க,

அவரோ, “இதுக்கு தானே நான் ரொம்ப நாளா காத்துட்டு இருந்தேன். நான் தான் எப்போவே சம்மதம் சொல்லிட்டேனே இன்னும் என்ன? ஜாதகம் பார்த்து ஒரு நல்ல நாளல்ல தேதி குறிப்போம். கல்யாணத்தை சிம்பிளா வச்சிட்டு ஒரு ரிசப்சன் போல வைப்போம் என்ன அண்ணா சொல்றீங்க?” எனவும் எல்லாருக்கும் அதில் சம்மதம் தான்.

மறுநாளே ஜாதகம் பார்க்க, அந்த ஜோசியரோ பத்து பொருத்தம் பொருந்தி இருப்பதை சொன்னவர், கல்யாணத்திற்கு ஒரு நல்ல நாள் குறித்து சொல்ல, அவர்களும் அதே நாளில் திருமணத்தை மிகவும் எளிமையாக வைக்க முடிவு செய் துகல்யாண வேலைகளை தொடங்கியும் இருந்தனர்.

முடிவு செய்த நல்ல நாளில் சுடர் கழுத்தில் தாலி கட்டி மனைவியாக்கி கொண்டான் கார்த்திக். திருமணம் முடிந்து ஒரு வாரம் மதுரையில் இருந்தவர்கள் சுடரை அழைத்துக் கொண்டு சென்னைக்கு சென்றனர். அவளை வற்புறுத்தவில்லை அவளாக முன் வந்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்ள போவதாக தன் விருப்பத்தை சொல்ல, அவள் விருப்பத்தை ஏற்றுக்கொள்ள அவளும் பிளாஸ்டிக் சார்ஜரி செய்து கொண்டாள்.

கார்த்திக் அவளை தன் தொழிலுக்கு பார்ட்னராக்கி கொண்டான். அதிலிருந்து வரும் லாபத்தில் அவளது கனவான பியூட்டி பாலர் வைத்தும் கொடுத்தான். கனிஷ்காவுடன் சேர்ந்து அதனை பார்த்துக் கொண்டாள். நிறைய பட வாய்ப்புகள் அவர்களுக்கும் வரவும், பார்லர் பிசியாக ஓடவும் அவளது நாட்கள் சக்கரம் வீடு, குடும்பம், வேலை என சுழன்றது.

மேலும் ஏழு ஆண்டுகள் கழித்து வெளிவந்த வதனாவிற்காக காத்திருந்தான் ரித்திக். அவளை கையோடு அழைத்துக் கொண்டு ஒரு குழந்தையை தத்தெடுக்க, மூவராக , குடும்பமாக சந்தோஷமாக வாழ ஆரம்பித்தனர்.

முத்துவோ தன் தமக்கைக்கு பிறந்த மகளை தூக்கி உச்சி நுகர்ந்தான். நாகராஜிற்கு உதவியாக முத்துவும் மாறியும் கடையை பார்த்து கொண்டு தொழிலில் முன்னேற்றம் கண்டு வளர ஆரம்பித்தனர்

முற்றும்.

15 thoughts on “மாண்புறு மங்கையே  22”

 1. Avatar

  கார்த்திக், சுடர் கல்யாணம் ரொம்ப ரொம்ப நிம்மதி!!… நிறைவா இருந்தது!!..

 2. Kalidevi

  Superb story pengaluku kandipa thairiyam , thiramai, sathikanum endra ennam kandipa venum athuku intha mari oru nalla family support venum and love support venum iruntha intha ulagam avlo alaga irukum

 3. Avatar

  சூப்பர் கதை … கதை கரு ஆசிட்டால பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை அதை எளிமையாகவும் அழகாகவும் சொன்னது சூப்பர்

 4. Avatar
  Bhuvaneswari Raghunandan

  SAIRAM. good thought . karthik n his mom has accepted sudar. that is good . this can happen in stories only . but in real life it is difficult to accept . s i agree changing the mind set by these stories is possible , but not sure how much change we can expect . more over selling of acid at local shops should be banned . let us not forget even after plastic surgery the face will not become normal. plastic surgery is costly.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *