Skip to content
Home » மாண்புறு மங்கையே – 8

மாண்புறு மங்கையே – 8

நெஞ்சமேற இறங்க மூச்சு வாங்கி நின்றாள். இத்தனைக்கும் அவள் ஓடி எங்கும் செல்ல வில்லை. மாடிப்படிகளில் ஏறி இறங்கவில்லை. வேலைகள் ஏதும் செய்யவில்லை, இருந்தும் அவளுக்கு மூச்சு வாங்க காரணம் சுடர் சொன்ன செய்தியே.

காலையில் மிலானி வந்து போனதை கேட்டு, அவளால் அவளாகவே இருக்க முடியவில்லை. ‘எங்கே மாட்டிக் கொள்வோமோ?’ என்ற எண்ணம எழ ஆரம்பித்தது.’என்ன செய்வது?’ என்று யோசித்தவள், போனை கையிலெடுத்து யாருக்கோ அழைத்தாள்.

“சேஃப்பா தானே இருக்காங்க? போலீஸ் இந்தக் கேஸ்ஸ விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.” என்றாள்.

அதற்கு அங்கே என்ன சொல்லப் பட்டதோ”கொஞ்ச நாளைக்கு அவங்க அங்கே இருக்கட்டும் அவங்களுக்கு என்ன உதவி வேணும்ன்னாலும் செய்ங்க. அங்க எல்லாம் வசதியோட தானே இருக்காங்க…?””…..””ம்ம்… கவனம்” என்று போனை வைத்தாள்.

நெஞ்சில் கை வைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டவளுக்கு பாரங்கள் ‘இறங்கியதா?’ என்று கேட்டால், ‘இல்லை’ என்பாள்.

கணவன் செய்த தவறுக்கு அப்பழுக்கற்ற அம்மடந்தை என்ன செய்தாளோ? அவளது வதனம் தான் என்ன செய்ததோ? அதை அழிக்க திட்டம் தீட்டி, இதோ செய்தும் முடித்து விட்டாள்.தன்னை குருவாய், தமக்கையாய், இதயத்தில் உயர்ந்த இடத்தை கொடுத்தவளுக்கு, அவள் கொடுத்ததோ துரோகம் என்னும் பரிசே…!தன் கணவன் தன்னை விட்டு பிரிய காரணம் அந்த வதனம் தான். அதை அழித்தால், மீண்டும் தன்னிடமே வந்து சேர்வான் என்ற எண்ணத்தை எவ்வாறு அவளால் விதைக்க முடிந்ததோ. இதோ பெரும் பாவத்தை அறுவடை செய்ய காத்திருக்கிறாள் என்று கொஞ்சம் கொஞ்சமாக காலம் உணர்ந்த ஆரம்பித்தது.தன் தங்கையாய் எண்ணி அவளது திறமையை மெச்சி அவளை தன் மனதில் உயர்ந்த இடத்தில் வைத்திருந்தாள். ஆனால் கணவனின் திடீர் காதல் தங்கையாய் பாவித்தவளை விரோதியாக்கியது. அவள் மேல் வன்மம் வளர காரணம் கணவனின் ‘பிரிவு’ என்னும் முடிவு தான். அந்த திடீர் காதலுக்கு, சுடர் தான் என்ன செய்வாள்? கணவனைத் தண்டிக்காமல் ஒரு பாவமறியாது அப்பேதைக்கு எத்தனை பெரிய தண்டனை?வாழ்க்கை முழுக்க அவள் அவ்வடுவை சுமக்க, சுடர் என்ன பாவம் செய்தாளோ வதனாவை நம்பியது தான் அவள் செய்த பெரும் பாவமா? பெண்களே இங்கே பெண்களுக்கு எதிரி என்ற கூற்று மெய்யெனப்படும் படி அவள் மேல் கொண்ட பொறாமையும் வஞ்சகமும் வதனாவை அவ்வாறு செய்ய வைத்தது.பணம் கொடுத்து அவளது முகத்தை சிதைக்கச் சொல்லிருந்தாள். அதன்படி செய்தும் முடிக்க, சுடர் முகம் சிதைந்ததால் கண்டிப்பாக அவளை ‘வேண்டாம்’ என்று சொல்லிக் கணவன் தன்னோடு இணைவான் என்றெண்ணி இருந்தாள் வதனா. ஆனால் அவனோ கூடுதலாக சுடருக்காக வருந்தி மேலும் வதனாவை சோதித்தான். அது ஒரு புறம் இருக்க, தான் செய்த வினையின் ப(ல)யனை பெற காத்திருக்கிறாள்.சுடரைக் கொல்லும் அந்த வடு வதனாவையும் கொன்றது.

அவளைப் பார்க்க நேர்கையில் இதயத்தில் விஷக்கத்தியை வைத்து பலமுறை குத்தி “ஏன் செய்தாய்?” எனக் கேட்டு சாவடித்தது.முள் படுக்கையில் உறக்கம் போல தான் அவளது நித்திரை. தன் கணவனை மீட்க எண்ணி இருந்தவளை புதை குழியில் தள்ளியது. செய்தார்க்கு செய்த வினை கிட்டும்… இதோ அனுபவிக்க காத்து கொண்டிருக்கிறாள்.

முத்துவின் விவரம் அடங்கிய கோப்புகளை பார்த்து கொண்டிருந்தாள் மிலானி பிக்பாக்கெட், செயின் திருட்டு கேஸூகள் மட்டுமே அவன் மேல் பதிவாகிருந்தது. கொலை, கற்பழிப்பென்று வேறு எந்தக் கேஸூகளில் அவன் பெயர் அடிப்படவில்லை. கோப்புக்களை மூடி வைத்தவள். அதைக் கொண்டு வந்த கான்ஸ்டப்பில் பரமசிவனிடம் விசாரித்தாள்.

“அண்ணா, இந்த முத்துவை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?”

அவனா மேடம், அப்பப்ப பிக்பாக்கெட், செயின் திருட்டுனு திருட்டு தொழிலில் பண்ணிட்டு இருந்தான். செல்லா ஆட்கள் கூட சுத்திட்டு திரிவான். இப்ப கூட ஒரு செயின் திருட்டு கேஸ்ல அவனை பிடிச்சோம் மேடம், நல்லா அடி வெளுத்துட்டோம். அதுக்கு அப்புறம் அவன் மேல எந்தக் கேஸூம் வரல மேடம், இடையில் ஒரு நாள் அவனை பார்த்தேன்.”என்ன டா ஸ்டேஷன் பக்கம் ஆள காணோமே திருந்திட்டீயானு கேட்டேன் மேடம்.”

அதுக்கு அவன், “ஆமா சார் திருந்திட்டேன். உழைச்சி சம்பாதிக்கலாம் முடிவு பண்ணிட்டேன் சார். நீங்க ஏதாவது எனக்கு வேலை வாங்கி கொடுங்க புண்ணியமா போகும்.” சொன்னான் மேடம். நானும், “திருட்டு பயலுக்கு எவன் டா வேலை கொடுப்பா…? போடா திருட்டு பயலே வந்துட்டேன் மேடம்.” என்றார்.

“ஏன் அண்ணா, நாம அரெஸ்ட் பண்ணி அடிச்சு கோர்ட்ல ஒப்படைச்சு தண்டனை வாங்கி கொடுக்கிறது எதுக்கு? மறுபடியும் அதே தப்ப செய்யனும்ன்றனாலயா? அவன் திருந்தனும்ன்றனால தானே. அவனே திருந்தி வந்ததுக்கு அப்றம் அவனுக்கு உதவிச் செயலைன்னாலும் திருட்டு பயலே சொல்லாம இருந்திருக்கலாமே. இனி இது போல நடந்துக்காதீங்க. திருந்தி வாழ்ற மனுசங்கள மனுசங்களா மதிங்க.” என்றாள்.”சாரி மேடம்.” என்றார்வருந்தி.

“ஒ.கே முத்துவோட வீடு எங்க இருக்கு?”அவன் வீடு எங்க இருக்குனு தெரியாது, ஆனால் அவங்க அக்கா வீடு தெரியும் மேடம்…” என்றார்.

“நீங்க அட்ரஸ் கொடுத்துட்டு போங்க.” என்றவள் முத்துவைப் பத்தி யோசிக்க தொடங்கினாள்.

காவியா, வித்யா இருபக்கமும் வேலைப் பார்த்து கொண்டிருக்க, சுடரும் அவர்கள் நடுவில் நின்று ஒரு பெண்ணுக்கு ஒப்பனைகள் செய்து முடித்தாள்.

தன் முகத்தைக், கண்ணாடியில் கண்டதும் அசந்தவள் அவளருகில் சிரிப்போடு நின்றிருந்த, சுடரை அடிப்பட்ட பார்வையில் பார்த்தாள்.

அவள் முதல் முறையாக வதனாவின் அழகு நிலையத்திற்கு வந்திருப்பாள் போலும், சுடரைப் பற்றித் தெரிந்திருக்க வில்லை.

வதனாவிடம், “பேசஷியல் செய்ய வேண்டும்” என்று கூற, “சுடர்” என்று வதனா அழைக்க, முகத்தை மறைக்காமல் வந்து நின்றாள். அந்தப் புதியவள், “ஸ்ஸ்… ” என பயந்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.”ஓ.. சாரி…!” என்று தனது சாலை வைத்து முகத்தை மறைத்தாள்.

“மேம்க்கு பேஷியல் பண்ணனுமா, பண்ணி விடு!” என்றாள்.”ஓ… மேம் இவங்க பண்றதா இருந்தால் எனக்கு வேணாம். நான் வேற எங்கயாவது பண்ணிக்கிறேன்.” நகர இருந்தவளை வதனா தடுத்தாள். சுடருக்கோ கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. உதட்டை கடித்து வெளி வர துடிக்கும் நீரை தடுத்தாள்.

“அவ முகத்தை பார்த்து தப்பா நினைக்காதீங்க, ஒரு சான்ஸ் கொடுங்க. கண்டிப்பா அவளோட ஒர்க் உங்களுக்கு பிடிக்கும். இங்க வரவங்க மோஸ்ட்டிலி சுடரை எதிர்பார்ப்பாங்க, அந்தளவு அவளோட ஒர்க் பெர்ஃபெக்ட்டா இருக்கும். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கு சாடிஸ்ஃபெக்க்ஷன் இல்லைன்னா, நீங்க மணி ‘பே’ பண்ண வேணாம். ப்ளீஸ்” எனவும் ஒரு மனதாக ஒத்துக்கொண்டவளுக்கு, இப்பவும் தன்னை நினைத்து வெட்கம் கொண்டாள்.

அவள் கையை பற்றி,”உங்க முகத்தை பார்த்ததும், தவறா நினைச்சிட்டேன். ஆனா, நீங்க அது தப்புன்னு என் முகத்தை அழகாக்கி சொல்லாம சொல்லிட்டீங்க. ரியலி, ஐ ம் இம்பரெஸ்ஸ்ட். ரொம்ப அழகா பண்ணிருக்கீங்க, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என்னையும் உங்க கஷ்டமர் லிஸ்ட் சேர்த்துக்கோங்க சுடர், என்னை மட்டுமில்ல, என்னோடு சேர்ந்து என் பிரண்ட்ஸையும். உங்களை அவங்களுக்கு ரெக்கமெண்ட் பண்றேன். உங்க நம்பர் கொடுங்க ப்ளீஸ்.” வேணாம் என்ற வாயால் இனி நீங்க தான் செய்ய வேண்டும் என்ற சொல்ல வைத்த திருப்தியில் அவளிடம் நம்பரை கொடுத்தாள். வதனாவிடம் சொல்லி விட்டுச் சென்றாள்.

“தேங்க்ஸ் மேம். என் மேல நம்பிக்கை வச்சி எனக்காக பேசினதுக்கு. எங்க நீங்களும் என் முகத்தால உங்க தொழில் கெட்டு போயிடும் நினைச்சிடுவீங்களோனு பயந்துட்டேன் மேம்.” என்றாள் கண்கள் கலங்க,

“என்ன சுடர், நான் அப்படி நெனச்சு இருந்தால் உன்னை ஏன் வேலைக்கு மறுபடியும் கூப்பிட போறேன்…? நீ இந்தப் பார்லரோட பிக்கெஸ்ட் பார்ட். உன்னை எப்பயும் இழக்க மாட்டேன். அப்றம் உன் திறமை என்னைக்கும் உன்னை இது போல நிக்க வைக்காது. மூவ் ஆன் பண்ணு முகத்தை பத்தின எண்ணத்திலிருந்து, கோ ஆன் உன் திறமையை வைத்து…!” அவளை ஊக்கவித்தாள். வதனாவை அணைத்துக் கொண்டாள், ஆனால் வதனாவோ அணைக்க வில்லை, அவள் கைகள் நடுங்கின.

சுடர் அன்பால் அணைத்தாலும் அவளுக்கு அது தான் செய்த பாவத்தின் தண்டனையாக தான் இருந்தது. அவளுக்கு சந்தேகம் வரக் கூடாதென்று அவள் முதுகை வருடி கொடுத்தாள்.

அப்போது வந்த ரித்திக் இருவரையும் பார்த்து முறுவலுடன் அருகில் வந்தவன், “என்ன இங்க ஒரே பாசப் படமாக இருக்கு…?” அவன் குரல் கேட்டதும் இருவரும் பிரிந்தனர்.

“சொல்லுங்க பாச மலர்களே, என்ன நடந்ததுனு ரெண்டு பேரும் அணைச்சிட்டு நிக்கறீங்க…?”வதனா நடந்ததைக் கூறினாள். அவனுக்கு தான் கோபம் வந்தது.

“என்ன வதனா, அந்தப் பொண்ண நீ சும்மாவா விட்ட, முகத்த சுழிக்கற அளவுக்கு, அவள் முகம் இருந்திடல. இந்த மாதிரி கஸ்டமர ஏன் விடுற வதனா…?” அவன் சத்தம் போட வதனா அவனை வெறித்தாள்.

“சார், ஏன் கோபப்படுறீங்க? என்னை முதல் முறையா பார்க்கற எல்லாரும் முகம் சுழிக்கத்தான் செய்வாங்க. அதுக்காக அவங்களை குத்தம் சொல்றதா? அவங்களுக்கு உங்களை போல பழக்கம் இல்லையே, இதோ அவங்களுக்கு பிடிச்சது போல அலங்காரம் செய்தேன். முகத்தை பார்த்து பேசிட்டு தான் போனாங்க. அவங்க முகம் சுழித்தது பத்தி எனக்கு எந்தக் கவலை இல்ல. இப்படி தான் நான் எனக்குள்ள எப்பயும் சொல்லிப்பேன்.” என்று கண்ணை சிமிட்டி சிரிக்க, இருவருக்கும் வருத்தமாக இருந்தது.

“ஹான்… ரித்திக் இப்போ ஏன் வந்தீங்க?”

“எனக்கு தெரிஞ்ச பேங்க் மேனேஜர் ஒருத்தர் கிட்ட சுடரை பத்தி சொல்லிருக்கேன். நாளைக்கு மார்னிங் உன்னை வந்து பார்க்கச் சொல்லிருக்கார். நீ போய் பாரு சுடர், கண்டிப்பா உனக்கு லோன் கிடைக்க உதவி பண்ணுவார். ஸ்யூரீட்டி சைன் கேட்டாலும் நான் போடுறேன். நீ பேசிட்டு மட்டும் வா.” என அவன் சொல்லவும் அவளுக்கு தலைகால் புரியவில்லை கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.

“ஹேய் சுடர் என்ன இது அழுத்துட்டு?” எனக் கண்ணீரை துடைத்து விட்டான்.”சார், ரொம்ப சந்தோஷமா இருக்கு, எனக்காக நீங்களும் மேமும் நிறைய செஞ்சிருக்கீங்க. இதுக்கெல்லாம் பதில் என்ன செய்ய போறேன் எனக்கு தெரியல.” என்று அழுதாள்.”ஹேய், நீ திருப்பி செய்யணும் நான் உனக்கு இதை செய்யல. எல்லாம் உன் திறமைக்காக தான் சுடர். உன் கனவை நிறைவேத்தின பங்கு எனக்கும் இருக்கணும். அதுக்காக தான் செய்றேன்.” என்றான்.

அவள், “அம்மா அப்பா அப்றம் எனக்கு நல்லது நினைக்கறது நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான். எப்பயும் நான் உங்களுக்கு நன்றியோடு இருப்பேன். நீங்க இதே போல என்னோட ஒவ்வொரு வளர்ச்சியிலையும் இருக்கணும்.” என்றதும் வதனா அவளை அணைத்தாள், சுடரும் அவளை இறுக அணைத்துக் கொள்ள, ரித்திக்கிற்கு சுடர் தன்னையும் அணைக்க வேண்டும் என்ற எண்ணமெழுந்தது.

.”உங்களை பார்க்க கொஞ்சம் பொறாமையா இருக்கு.” என்றான்.”என்ன சார் உங்க பொண்டாட்டிய கட்டிப்பிடிச்சது உங்களுக்கு பொறாமையா இருக்கா?” அவள் ஒரு அர்த்தத்தில் புரிந்து கொண்டு கேலி செய்ய வதனாவும் ரித்திக்கும் பார்த்துக் கொண்டனர். ஆனால் இருவரது பார்வையே குற்றம் சுமத்துவதில் இருந்தன.மிலானி, முத்துவின் அக்கா ரேவதி வீட்டை தேடிச் சென்றாள். ரேவதி சமைத்து கொண்டிருந்தவள், மிலானியை பார்த்ததும் பயந்து போனாள். விஷயம் அறிந்து நாகராஜ்ஜூம் வீட்டிற்கு விரைந்தான்.

“மிஸஸ்.ரேவதி, ஒரு பொண்ணு மேல ஆசிட் அடிச்ச கேஸ்ல உங்க தம்பிய சந்தேகத்தின் பேர்ல் அரேஸ்ட் பண்ண வந்திருக்கோம். அவன் எங்க?” என்றதும், ரேவதி, அதிர்ச்சியில் மயங்கி சரிந்தாள்

10 thoughts on “மாண்புறு மங்கையே – 8”

 1. Avatar

  Yemma vadhana pisasu un purushan panra velaiku ne Avan moonchila acid adichirundha engalukkum happy ah irundhrukum unakum endha kutra unarchiyum irundhurukadhu….indha rithik ah paarthalae kaandu alavadhu sis😠😠….

 2. CRVS2797

  அவனை பிடிச்சு என்ன பிரயோஜனம்…? எய்தவன் இருக்க அம்பை நொந்து என்ன பயன்..?

 3. Avatar

  வதனா இப்படி செஞ்சுருக்க வேணாம்!!… அவ புருஷன் மேல அடிச்சுருக்கலாம்!!… அவன் மேல தான தப்பு!!…

  1. Chitraharidas

   Enna இருந்தாலும் தான் புருசன் ஆச்சே எப்படி செய்வா? பாவம் சுடர் பலியாகிட்டா

 4. Avatar

  வதனா உன்னோட புருசன் பண்ண தவறுக்கு சுடர் என்ன பன்னுவா துரோகிகள் கிட்ட இருக்க சுடர் உன் நீயே காப்பத்திக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *