மாதங்கள் உருண்டோடியது .உதயா 12 ஆம் வகுப்பு இறுதி தேர்வு எழுதியிருந்தான் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தான் .
மேற்கொண்டு என்ன படிக்கிறாய் என்று கேட்டதற்கு தேவி அமைதியாகவே இருந்தார் .
என்ன படிக்கட்டும் என்று கேட்டான் அப்போது நந்தா சிரித்து முகமாக டேய் உன் அம்மாவை கேட்டா படிக்க செய்கிறாய் .
உனக்கென்று ஒரு விருப்பம் இருக்கும் அல்லவா? அதை சொல் என்றான்.
இருந்தாலும் மாமா .அம்மா என்ன விரும்புகிறார்கள் என்று என்றான்.
உன் அம்மா விரும்ப வேண்டியது அவருடைய வாழ்க்கையில் ,உன்னுடைய வாழ்க்கையில் இல்லை சரியா ?
நீ என்ன படிக்க வேண்டும் என்று நீ தான் தீர்மானிக்க வேண்டும். உன் அம்மாவும் நானும் இல்லை என்றவுடன் தன் தாயைப் பார்த்தான்.
தேவியும் சிரித்த முகமாக உன் மாமா சொல்வதில் ஒன்றும் தவறு இல்லையே டா உனக்கு என்ன படிக்க வேண்டும் என்ற எண்ணமோ அதை நீயே தேர்வு செய் என்றார் .
ஒரு சில நொடி அமைதிக்கு பிறகு மாமா ஏதாவது நல்ல படிப்பு சொல் நான் அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்கிறேன் என்றவுடன் நந்தா சிரித்துவிட்டு டேய் 12ஆம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்று ரிசல்ட் வந்துவிட்டது.
இப்பொழுது போய் என்ன படிக்க வேண்டும் என்று கேட்கிறாய் .
இதை இப்பொழுது கேட்டிருக்கக்கூடாது . நீ 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதவது கேட்டிருக்க வேண்டும் என்று சிரித்தான்.
உதயா சிரித்துக் கொண்டே விடு மாமா நீ இருக்க நம்பிக்கையில் என்று
உதயா நந்தாவின் தோளில் கை போட்டான் .
ரொம்ப நம்பிக்கை டா மச்சான் என்று விட்டு அவனும் நாலைந்து படிப்பை பற்றி சொன்னவுடன் எனக்கு எது சூஸ் ஆகும் எனக்கு இது பெஸ்ட்டா இருக்கும் என்று கொஞ்சம் ஜூஸ் பண்ணு மாமா என்று கொஞ்சினான் .
நந்தா உதயாவை மேலிருந்து கூழ் வரை பார்த்துவிட்டு நீ ஒரு முடிவோட தாண்டா மச்சான் இருக்க எப்படியோ அங்க சுத்தி இங்க சுத்தி நம்மல இத தான் படிக்க சொல்லுவாங்க .
நம்பல தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று எல்லாம் முடிவு பண்ணிட்ட என்றான் உதயா சிரித்தான்.
உதயா சிரித்தவுடன் டேய் பிச்சுப்புடுவேன் படவா உனக்குன்னு ஒரு ஆசை இருக்கும் இல்ல.
அதை யோசி சரியா டைம் இருக்கு டைம் எடுத்துக்கோ என்று விட்டு நந்தா நகர்ந்தான்.
தேவியும் உன் மாமா சொன்னது தாண்டா என்னோட முடிவும் என்று விட்டு நகர்ந்தார் .
உதயாவும் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு தான் அக்ரிகல்ச்சர் படிப்பதாக சொன்னான். தேவி ஒரு சில நொடி யோசித்தார் .
நந்தா சிறிது யோசித்து விட்டு சரிடா மச்சான் படி என்றான்.
அப்ப நம்ம கொஞ்சம் இடம் வாங்கிடலாமா ?என்றான்
எதுக்கு மாமா ?அக்ரிகல்ச்சர் படிக்கணும் என்று முடிவு பண்ணிட்ட அப்புறம் என்ன ?.
மாமா இருப்பதை வைத்து ட்ரைல் பார்த்துக் கொள்ளலாம் என்றான்.
டேய் அதெல்லாம் எங்க அப்பா அம்மா சொத்து என்னோடது என்றான் நந்து சிரித்த முகமாக.
அது எங்க அம்மாவுக்கும் சொந்தம். உனக்கு மட்டும் இல்ல என்றான். இந்த பக்கம் உதயா .
ஆரம்பிச்சிட்டீங்களா இரண்டு பேரும் போய் இருக்க வேலையை பாருங்கடா அக்ரிகல்ச்சர் படிக்கிறேன்னு சொல்லிட்டு உன் மாமா கூட போயிட்டு அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்கிட்டு வந்து நல்ல காலேஜ் எங்க இருக்குன்னு பார்த்து அப்ளை பண்ணு என்றார்.
உதயா ஒரே வார்த்தையாக நல்ல காலேஜ் பாருங்க வேண்டாம்னு சொல்ல மாட்டேன் .ஆனா உங்கள விட்டு வெளியே எங்கேயும் போகமாட்டேன் இங்கேயே என்றான் .
டேய் வெளியே போய் படிச்சு லைஃப் என்ஜாய் பண்ணுடா என்றான் நந்தா
இங்க கோயம்புத்தூர்ல நல்ல காலேஜ் எங்கேயும் இல்லையோ ?.
மச்சான் பொறு டா. மச்சான் இங்கேயே பாக்குறேன் விடு என்று விட்டு உதயாவை அழைத்துக் கொண்டு இருவரும் வெளியில் சென்றார்கள் .
செல்லும் பொழுது நந்தா அக்கா இரவு எதுவும் சமைக்க வேண்டாம். நான் வெளியில் ஏதாவது வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று விட்டு நகர்ந்தான்.
ரொம்ப நேரம் சிஸ்டமையே பார்த்துட்டே இருக்காத என்றான். டேய் அது தாண்டா என்னுடைய வேலையே .
இப்படி சிஸ்டமையே தான் பார்த்து பார்த்து கண்ணாடி போட்டு சோடாபுட்டி மாதிரி ஆயிடு என்று சிரித்துவிட்டு நகர்ந்தான் .
போகும் தனது தம்பியின் சிரித்த முகத்தை பார்த்து உனக்கு முதலில் திருமணம் செய்து வைத்தாக வேண்டும்டா என்று எண்ணினார் .
உனக்கேத்த நல்ல பெண்ணை எங்கு தேடி கண்டு பிடிப்பேன். அவள் வந்து பிறகு உனக்கும் எனக்குமான உறவு என்று யோசித்தார்.
அப்போது,தான் அவர் புத்தியில் ஒன்று உரைத்தது .ஒருவேளை தன் தம்பி தன்னையும் ,தன் மகனையும் யோசித்துத் திருமணத்தை தள்ளி போடுகிறானோ என்று யோசித்தார்.
அவன் வந்தவுடன் முதலில் இதைப் பற்றி பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டார் .சமையல் வேலையும் இல்லை என்று உடன் தான் இப்போது சிஸ்டம் முன்னாடி உட்காரும் நிலைமையில் இல்லை என்பதால் தனது ஃபோனில் பழைய பாடல்கள் ஓடவிட்டு பாடல் வரிகளை ரசிக்க செய்தார்.
அப்படியே நேரம் கழிந்திருந்தது .இரவு 8:00 மணி போல் மாமன், மச்சான் இருவரும் சிரித்த முகமாக வீட்டிற்குள் நுழைந்தார்கள் .
தன் அக்கா ஹாலில் இருக்கும் சோபாவில் தலை சாய்த்து உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு உன் அம்மாவ பாத்தியாடா கதவு கூட சாத்தாம.
யார் வராங்கன்னு தெரியாது அளவுக்கு பாட்டு கேட்டு தூங்குவது என்றான்.
விடு மாமா ரொம்ப நாள் கழிச்சு பாட்டு கேட்டு தூங்கி இருக்கிறாங்க என்றான்.
தேவி தூக்கத்திலிருந்து எழுந்தார் தனது மகனும் ,தம்பியும் நிற்பதை பார்த்துவிட்டு எவ்வளவு நேரம் டா எங்கு சுற்றி விட்டு வருகிறீர்கள் என்றார்.
அம்மா நல்ல காலேஜ் பார்த்தாச்சு .நாளைக்கு போயிட்டு அப்ளிகேஷன் ஃபார்ம் ஃபில் பண்ணி கொடுத்துட்டு வந்தர வேண்டியது தான் என்றான்.
சாப்பிடலாமா பசிக்குது என்றார் .சரிக்கா என்று மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.
சாப்பிட்டு முடித்தவுடன் தனது தம்பியிடம் நான் ஒன்று கேட்பேன் என் மீது கோபம் கொள்ள கூடாது என்றார்.
கோபம் கொள்ளாதவாறு கேட்டால் நான் ஏன் கோபம் கொள்ள போகிறேன் என்று நந்தா சிரித்த முகமாகவே கேட்டான்.
தன் தாய் என்ன கேட்க போகிறார் என்று ஆவலாக தன் தாயின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் உதயா.
தேவி ஒரு சில நொடி நிதானித்து விட்டு ஒருவேளை நீ திருமணம் செய்து கொண்டால் வரப்போகும் பெண்ணால் இந்த வீட்டிற்குள் ஏதாவது பிரச்சனை நிகழுமோ இல்லை என்னையும் உதயாவையும் இழக்க நேரிடுமோ என்று நீ திருமணத்தை தள்ளி போடுகிறாயா என்று கேட்டார் .
நந்தா தனது அக்காவை முறைத்தான் உதயா இப்படி ஒன்று இருக்கிறதோ ?இத்தனை நாள் இதை நான் யோசிக்கவில்லையே .
என் மாமாவிற்கு என்று ஒரு பெண் மனைவியாக வந்தாள் .நானும் ,அம்மாவும் மாமாவை விட்டு செல்ல வேண்டுமா ?
எங்கள் உறவு அவ்வளவுதான என்று யோசித்தான். உதயா யோசிப்பது போல் நந்தாவிற்க்கு என்று ஒரு பெண் வந்தால் அந்த பெண்ணால் இந்த குடும்பம் சிதறுமா ?என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் .
அன்புடன்
தனிமையின் காதலி