Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 22

மீண்டும் மலரும் உறவுகள் 22

நந்தா உதயா இருவரும் ஒரு துணி கடைக்கு முன்பு வண்டியை நிறுத்தினார்கள்.

உள்ளே சென்று தங்களுக்கு பிடித்த ஒரு புடவையை தேர்வு செய்தார்கள்.

இருவரும் இது பிடிக்கவில்லை அது பிடிக்கவில்லை என்று கடையில் நின்று வாதம் செய்து கொண்டிருந்தார்கள் .

பிறகு, இருவருக்குமே ஒரு புடவையை பார்த்தவுடன் பிடித்தது. இருவரும் இது என்று கை காண்பித்தவுடன் ஒருவர் மற்றொருவரை பார்த்து சிரித்துக் கொண்டார்கள் .

பிறகு ,அந்த புடவையை பேக் செய்ய சொல்லிவிட்டு பில் கவுண்டருக்கு சென்று பில் கட்டி விட்டு வெளியில் வந்தார்கள் .

இருவரும் கொஞ்சம் பூ வாங்கிக் கொண்டு ,இன்னும் ஒரு சில பொருட்கள் வாங்கிக் கொண்டு தங்கள் வீட்டிற்கு செல்லும் பொழுது மணி எட்டை தொட்டு இருந்தது.

அப்போது தேவி தான் என்னடா ரெண்டு பேரும் ஒரே நேரத்துல வரீங்க .மணி என்ன ஆகுது என்று கேட்டார்.

இருவரும் சிரித்த முகமாக சும்மா ஒரு நாள் ஜாலியா வெளிய போயிட்டு வரோம் .போயிட்டு வருவீங்க டா .

சாப்பாடு யார் செய்வது? நீதான் செய்யணும் வெற யார் செய்வா என்றான் நந்தா.

பசிக்கிறது சீக்கிரம் போய் செய் கா  சாப்பிடுவோம் என்றான் . நீங்க ரெண்டு பேரும் ஊர் சுத்திட்டு வருவீங்க நான் உங்களுக்கு சமைத்து வைப்பேனா .

என்னால எல்லாம் சாப்பாடு செய்ய முடியாது என்று விட்டு அவரது அறைக்கு சென்று விட்டார்

நந்தா ,உதயா இருவரும் சிரித்து விட்டு அவர்கள் வாங்கிக் கொண்டு வந்த உணவை கிச்சனுக்கு சென்று தட்டு எடுத்து உணவை வைத்தார்கள்.

பிறகு இருவரும் அம்மா, அக்கா என்று கூப்பிட்டவுடன் வெளியில் வந்தார்.
தெரியும் டா எனக்கு உங்களை பற்றி கேடிங்களா என்று விட்டு சாப்பிட உட்கார்ந்தார்

அவருக்கும் பசிக்க செய்தது .பிறகு  மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.

எவ்வளவு நேரம் டா வெளியே சுத்திட்டு வருவீங்க என்றார் .சும்மா என்றார்கள் .

பிறகு அனைவரும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டு படுக்க சென்று விட்டார்கள் .

உதயா ,நந்தா இருவரும் ஒரே அறையில் தான் தூங்குவார்கள். படுக்க சென்ற பிறகு உதயா நந்தா விடம் மாமா அந்த பொண்ணு உன்கிட்ட என்ன பேசிட்டு இருந்திச்சு என்று கேட்டான்

அது உனக்கு தேவையில்லாத விஷயம் என்றான். மாமா உன்னால இப்ப சொல்ல முடியுமா? முடியாதா ?என்று உதயா ஒரே வார்த்தையாக கேட்டவுடன் நந்தா தனது மச்சானை பார்த்து சிரித்து விட்டு சொல்லாட்டி உனக்கு தூக்கம் வராதே என்று சொல்லிவிட்டு காலேஜில் நடந்ததை ஒன்று விடாமல் சொன்னான்.

ஏன் ,மாமா உனக்கு அந்த பொண்ணு புடிக்கலையா ?சின்ன பொண்ணா இருந்தா என்ன?

உதயா சின்ன பொண்ணு, பெரிய பொண்ணு அப்படிலாம் அடுத்த விஷயம் டா என் மனசுல அந்த பொண்ணு மேல எந்த ஒரு ஃபீலிங்ஸ் யும் இல்லை. சரியா ?

சாதாரணமா எனக்கு கிளாஸ்ல இருக்க 10 பொண்ணுங்களோட அந்த பொண்ணு ஒன்னு .

பத்தோடு 11 அவ்வளவுதான் .அந்த பொண்ணு மேல தனிப்பட்ட விருப்பம் எனக்கு எதுவும் கிடையாது.

இதுக்கு மேல உனக்கு எப்படி புரிய வைக்கணும். அந்த பொண்ணுக்கு விருப்பம் இருக்கட்டும் இல்லாட்டி போகட்டும்.

அந்த பொண்ணு விருப்பறதுக்கு  நான் ஒன்னும் பண்ண முடியாது. சரியா ?உனக்கு கூட நாளைக்கு ஒரு பெண்ணை பிடிக்கலாம்.

அதுக்காக அந்த பொண்ணு விருப்பம் இல்லாம அந்த பொண்ணு கூட வாழ்ந்திட முடியுமா ?.

மாமா. அவ்வளவு தாண்டா .

அப்ப உங்க அக்கா பார்த்து வைக்கிற பொண்ணு .டேய் அக்கா பார்த்து வைக்கிற பொண்ணு  னா என்ன அர்த்தம்.

என்ன மாமா உனக்கு உங்க அக்கா பார்க்கிற பொண்ணு. நீ உங்க அக்காவா ஒரு பொண்ணா கல்யாணம் பண்றேன்னு வச்சுக்க.

ஆனா அந்த பொண்ண உனக்கு பிடிக்கவில்லை என்றால் .என் அக்கா எனக்கு பிடிக்காத பொண்ண கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்க.

சரியா. படு என்று விட்டு தனது மச்சானின் தலையில் லேசாக கொட்டிவிட்டு படுத்தான்.

நாளை தன் அக்காவே தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல சொல்ல ஒரு பெண்ணை திருமணம் செய்து வைப்பார்  என்பதை அப்பொழுது நந்தா உணரவில்லை.

உணர்ந்து இருந்தால் இப்பொழுது தனது மச்சான் இடம் இப்படி ஒரு வார்த்தை விட்டிருக்க மாட்டானோ என்னவோ .

உதயா விடம் சொல்லி விட்டு  அவனும் ஒருசில நொடிகளில் படுக்கையில் விழுந்தான். பிறகு தியாவை பற்றி யோசித்தான் .

பிறகு தனது தலையை உலுக்கி  விட்டு இந்த பொண்ணை பற்றி யோசிச்சிட்டு இருக்கோம்.

அந்த பொண்ண பத்தி நம்ம ஏன் யோசிக்கணும் என்று எண்ணிவிட்டு படுக்கையில் சரிந்தான் .

மறுநாள் காலைப் பொழுது நன்றாக இருந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை இன்று தேவிக்கு பிறந்தநாள் .

அதற்காகத்தான் இருவரும் கடைக்கு சென்று ஒரு சில பொருட்களும் வாங்கிக்கொண்டு தேவிக்கு நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று எண்ணி அவர்களுக்கு பிடித்தமான ஒரு புடவையும் தேர்வு செய்து கொண்டு வந்தார்கள்.

காலையில் எழுந்தவுடன் தேவி சமையலறையில் இருக்கும்பொழுது நந்தா அந்த புடவை எடுத்துக் கொண்டு சென்ற தன் அக்கா கையில் கொடுத்துவிட்டு அக்காவின் காதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா என்றான்.

நேத்து ரெண்டு பேரும் எங்கேயோ சுத்திட்டு வரும்போதே எனக்கு தெரியும்  டா என்று சிரித்தார்.

இந்த பக்கம் உதயாவும் வந்து அம்மா மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தே டே என்றான்.

தேங்க்ஸ் டா என்று இருவரின் தலையிலும் லேசாக கொட்டிவிட்டு இருவர் கையிலும் காபி கொடுத்தார் .

மூவரும்  ஒன்றாக உட்கார்ந்து டீ  குடித்தார்கள். சரி போய் குளிச்சிட்டு வா நாம வெளியே சாப்பிட்டு கோவிலுக்கு எங்கயாச்சு போயிட்டு வரலாம் என்றார்கள் உதயாவும்,நந்தாவும்.

போங்க போங்க இன்னைக்கு லீவு தானே காலையில் வீட்டில் சாப்பிட்டு பொறுமையா கிளம்பலாம் .

டேய் மூணு வேலையும் ஹோட்டலையா சாப்பிடுவாங்க நேத்தே ஹோட்டல் தான் சாப்பிட்டீங்க என்றார்.

ரொம்ப ஸ்ட்ரிக்ட் தான் என்று சிரித்துவிட்டு சரி மா நீ குளிச்சிட்டு இந்த புடவை கட்டிட்டு வா.

டேய் சாப்பாடு என்றவுடன் நாங்கள் இரண்டு பேரும் செய்கிறோம் என்றவுடன் நீங்க செய்ற சாப்பாடு சாப்பிட்டு எனக்கு எதுவும் ஆகாமல் இருந்தால் சரி என்று விட்டு சிரித்த முகமாகவே தேவி தன்னுடைய அறைக்கு குளிக்க சென்றார்.

குளித்துவிட்டு நேர்த்தியாக தனது தம்பியும் ,தனது மகனும் எடுத்துக் கொடுத்த புடவையைக் கட்டிக் கொண்டு வெளியில் வந்தார் .

இருவரும் தனது அக்காவையும், அம்மாவையும் தேவியை பார்த்துவிட்டு சூப்பரா இருக்கு என்று செய்கையில் செய்தார்கள்.

உங்களோட தேர்வு நல்லா இல்லாம போகுமா என்று விட்டு இருவரையும் பார்த்து சிரித்தார்.

பிறகு மூவரும் சாமி படத்திற்கு முன்பு விளக்கேற்றி சாமி கும்பிட்டு விட்டு தனது அப்பா அம்மா படத்திற்கும் விளக்கேற்றி சாமி கும்பிட்டார்கள் .

டேய் பசிக்குது என்றார். அதெல்லாம் சாப்பாடு ரெடி என்றவுடன் இருவரும் தேவி உட்கார்ந்த பிறகு  சமையலறைக்குச் சென்று தேவிக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை எடுத்துக் கொண்டு மேசையில் அடுக்கினார்கள்.

என்னடா இவ்வளவு என்றார் .உனக்கு பிடித்தது தான். இன்னைக்கு லீவு தானே சாப்பிடு என்ஜாய் என்று சொல்லி சிரித்துக் கொண்டே சொல்ல தேவி சாப்பிட அமர்ந்தார்.

மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் கழித்து மூவரும் சிரித்த முகத்துடன் கோவிலுக்கு சென்றார்கள் .

இப்போது சிரித்த முகத்துடன் கோவிலுக்கு செல்லும் மூவரும் வரும்போதும் இந்த சிரித்த முகத்துடன் வருவார்களா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *