Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 60

மீண்டும் மலரும் உறவுகள் 60

நந்தா தனது மச்சானின் கையை பிடித்தவன் .

டேய் தனா சொல்றதுல ஒன்னும் தப்பில்லையே .

அவ நார்மலா சொன்னா .அதுக்கு ஏன் இப்ப கை ஓங்கிட்டு போற.

அப்புறம் நான் சந்தோஷமா இருக்கும்போது என்றான்.

ஒன்னும் இல்லடா என்று விட்டு தனாவை பார்த்தான் நந்தா.

எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை  அண்ணா.

அவர் ஆதங்கத்தில் தான் அடிக்க வந்துட்டாரு எனக்கு புரியுது என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் அமைதியாக விட்டாள்.

அன்று இரவு அனைவருக்குமே தூக்கம் தான் வரவில்லை.

ரூமுக்கு சென்ற பிறகு” நந்தா தான் அவளை பின்பக்கம் இருந்து கட்டி அணைத்து கொண்டு உனக்கு என்கிட்ட  சொல்லனும்னு தொணவே இல்லையா டி “என்றான்.

” எனக்கு பெரியம்மா  கிட்ட தான்  ஃபர்ஸ்ட் சொல்லணும் தோணுச்சு “.

அவங்களுக்கு ரெஸ்ட் கொடுக்கணும் என்ற விஷயம் இது மட்டும் தான் மாமா .

அவங்களே ரெஸ்ட் எடுக்க ஆசைப்பட்ட விசியமும்  இதுதான் .

அவங்க வாழ்நாள்ல அவங்க ஆசைப்பட்ட விஷயம் இதுதான் என்றவுடன் அவளை முன்பக்கம் திருப்பி கட்டி அணைத்துக் கொண்டு அவளது நெற்றியில் இதழ் பதித்தான் .

அன்று இரவு அப்படியே கழிய .

மறுநாள் காலேஜ் லீவு போட்டுவிட்டு வேலைக்கு லீவு எடுத்துவிட்டு அனைவரும் மருத்துவமனை சென்றிருந்தார்கள் .

தேவி மலருக்கும் அழைத்து சொல்லி இருக்க .

கண்ணனுக்கு தான் தன்னை மீறி கண்ணீர் வந்தது .கை கால்கள் நடுங்க நின்று இருந்தார்

அனைவரையும் விட கண்ணன் தான் தியா உள்ளே சென்றிருக்கும் வேளையில் ஓரிடத்தில் நிற்காமல் நடந்து கொண்டே இருந்தார்.

அதை பார்த்து உதயாவிற்கும் ,நந்தாவிற்கும்  தான் ஒரு மாதிரியாகி விட்டது .

சிறிது நேரத்திற்கு பிறகு அனைவரையும் உள்ளே அழைக்க .

எத்தனை பேர் எதுக்கு இப்படி கூட்டம் வந்து இருக்கீங்க .

அவங்க ஹஸ்பண்ட் மட்டும் இருந்தா போதாதா என்றவுடன் ..இல்லை டாக்டர் தப்பா எடுத்துக்காதீங்க எல்லாருமே இருந்தா என்று தனா சொல்ல .

சரி என்று விட்டு ரிசல்ட் என்னன்னு சொன்னீங்கன்னா என்று தனாவே கேட்க .

தனாவை பார்த்து சிரித்த டாக்டர் மொத்த குடும்பமும் ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கீங்க போல .

“ரிசல்ட் பாசிட்டிவா தான் வந்திருக்கு . உங்க வீட்டுக்கு புது பரிசு வரப்போகுது”.

சந்தியா மாசமா தான் இருக்காங்க. 2 மந்த் என்று சொன்னவுடன் தேவி நந்தாவையும் ,நந்தா தேவியையும்  பார்க்க .

தியா உள்ளே இருந்து வெளியில் வர .

“வேகமாக கண்ணன் ஓடி சென்று தன் மகளின் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு கண்ணம்மா உன்ன இப்பதான் கையில வாங்கின மாதிரி இருக்கு “என்றவுடன் தன்னையும் மீறி அவரை தியா  இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

இந்த நேரத்தில் இப்படி எல்லாம் ரொம்ப அழுத்தக்கூடாது.

ஏற்கனவே உங்க பொண்ணு ரொம்ப வீக்கா இருக்காங்க. பார்த்துக்கோங்க .

கொஞ்ச நாளைக்கு பார்த்து நடந்துக்கோங்க .அவங்க கர்ப்பப்பை லைட்டா வீக்கா இருக்கு என்றவுடன் சரி என்று விட்டு அனைவரும் வீட்டிற்கு வந்தார்கள் .

நந்தா வீட்டிற்கு மெதுவாகவே வர. வேறு எதுவும் பேசாமல் தியாவின் கையை பிடித்துக் கொண்டு வண்டியை ஒட்டிக்கொண்டு வந்தான் .

வீட்டிற்கு வந்தவுடன் கண்ணன் தன் மகளையே பார்த்துக் கொண்டு இருக்க .

நந்தா எதுவும் பேசாமல் சிறிது இடைவெளி விட்டு நகர்ந்து உட்கார்ந்தான்.

தியா வேகமாக கண்ணன் மடியில் சென்று படுத்துக் கொண்டாள்.

அவள் தலையை கோதி விட்டு நெற்றியில் இதழ் பதிக்க .

இப்பையும் நீ பண்ணது தப்பு தான் பா .ஆனா என்று வாய் எடுக்கும் போதே தியாவின் வாயில் கையை வைத்தவர் .

நான் செய்தது பச்ச துரோகம் ஒத்துக்கிறேன் கண்ணம்மா .அப்பாவுக்கு நீ ஒன்றை வருஷம் தண்டனை கொடுத்திட்ட.

ஆனா என் பேரப்பிள்ளையை தூக்க கூடாதுன்னு இல்ல,உன்ன பாக்க கூடாதுன்னு மட்டும் சொல்லிடாத .

நீ அப்பாவை மன்னிக்கலைன்னா கூட பரவால்லடா என்றார் .

அவரது  நெற்றி இதழ் பதித்து விட்டு எழுந்து  உட்கார்ந்தாள் .

“அடித்து நொடி கண்ணன்   சாஷ்டாங்கமாக  தேவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருந்தார் “.

தேவிக்கு ஒரு செடி அதிர்ச்சியாகி நகர்ந்து நின்றுவிட்டார் .

“நந்தா காலிலும் விழ வர .உங்க வயசுக்கு என் காலில் விழுந்து எனக்கும் என் பொண்டாட்டி வயிற்றில் இருக்கும் என்னோட சந்ததிக்கும் பாவத்தை சேர்த்திடாதீங்க” .

முடிஞ்சு போனதை பற்றி இங்க நான் யோசிக்கவும் ,பேசவும் விரும்பல .

எங்க அக்காவாகட்டும் .நான் ஆகட்டும் இது இப்படியே விட்டுருங்க .

இருக்க சந்தோஷத்தை கொண்டாடுவோம் என்று அமைதியாகி விட்டான் .

கண்ணனும் அதன் பிறகு அதைப்பற்றி பேசவில்லை.

நாட்கள் அனைவருக்கும் அழகாக சென்றது .

தேவி உள்ளங்கையில் வைத்து தியாவை பார்த்துக் கொள்ள .

உதயா தினமும் ஏதாவது ஒரு பழம் வாங்கிக் கொண்டு வருவான் .

வந்ததன் தனது அக்காவையும் மச்சானையும் சீண்ட எண்ணி அவ்வப்போது ஓவராக இருக்கிறது என்று சொல்வான்

தனா வீட்டிலும் சரி, காலேஜிலும் சரி தியாவை நன்றாக பார்த்துக் கொண்டாள் .

இறுதியாண்டில் இருப்பதால் தியாவிற்கு ஆறாவது செமஸ்டர் பிராக்டிகல் எக்ஸாம் நடந்து கொண்டு இருந்தது

தியாவிற்கு இப்பொழுது எல்லாம் மயக்கம் வர ஆரம்பித்திருந்தது .

அவள் பிராக்டிகல் எக்ஸாம் முடித்துவிட்டு வெளியில் வரும் வேளையில் அப்பொழுது தான் ஸ்டாப்புடன் பேசிக்கொண்டு வந்த நந்தா தியாவை பார்த்து விட்டு அவளை அமைதியாக கடந்து செல்லும் வேளையில் தியா மயக்கம் போட்டு கீழே விழ 

தியா என்று வேகமாக ஓடி சென்று அவளை  தாங்கி இருந்தான்.

சுற்றி இருந்த ஆசிரியர்கள் ஒரு சில நொடி அதிர்ச்சியாகி பார்க்க .

அவள் பின்னாடி நடந்து வந்து கொண்டிருந்த தனா வேகமாக நந்தாவின் கையில் இருந்து தியாவை வாங்கியவள் .

சார் என்று விட்டு தன் உடன் இருக்கும் மாணவர்களிடம் தண்ணீர் கேட்க .

தண்ணீர் கொடுத்த பிறகு அவளது முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள்.

ஆனால் தன்னையும் மீறி இங்கு நந்தாவிற்கு கை கால் நடுங்க 

சுற்றி இருந்த சிலர்கள் தான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க சார் ஒன்னும் பிரச்சனை இல்ல பேசிக்கலாம் என்று சொல்ல .

சுற்றி இருந்த அனைத்து மாணவர்களை பார்த்தவன் .தப்பா எடுத்துக்காதீங்க அது என்றான் .

இல்ல சார் எங்களுக்கும் தெரியும் .  தியா இப்போ பிரகன்டா இருக்கான்னு .அவளுக்கு இப்போ எல்லாம் அடிக்கடி லைட்டா தலை சுத்தல் இருக்கு தெரியும் .

நாங்க தப்பா எடுத்துக்கல என்று விட்டு அமைதியாகி விட்டார்கள் .

நேராக தனாவைப் பார்த்தவன் .ஒரு சில நொடி இங்கேயே இருங்க என்று விட்டு பிரின்ஸ்பல் பார்த்து விஷயத்தை கூறிவிட்டு தப்பா எடுத்துக்காதீங்க சார் என்று மன்னிப்பு கேட்டான்.

ஒன்னும் இல்லப்பா உன் வயசு  தாண்டி தான் நானும் வந்து இருக்கேன்

நானும் ஒரு குடும்பஸ்தன் தான் தன்னுடைய பொண்டாட்டி கேரிங்கா இருக்கும் நேரத்தில் தனக்கு எப்படி அடிச்சுக்கும் என்று  எனக்கும் தெரியும் போயிட்டு வா என்றவுடன் வாடகைக்கு அருகில் உள்ள காரை போன் செய்து வர வைத்தவன் .

தனது அக்காவிற்கும் போன் செய்து விஷயத்தை சொல்லிவிட்டு தியாவை ஹாஸ்பிடல் அழைத்து சென்றான்.

இப்பொழுது ஐந்தாவது மாதத்தை தொட்டிருந்த காரணத்தினால் இப்போதெல்லாம் அடிக்கடி தலை சுத்தல் வாந்தி என்று வந்து கொண்டிருந்தது.

ஹாஸ்பிடலில் இருந்தவன் தன் அக்காவிடம் புலம்பி கொண்டு இருந்தான் .

“நீ போட்டு குடுக்குற ஜூஸ் ஒழுங்கா குடிக்கிறாளா? இல்லையா “.

“அவளை நீ பாக்குறியா இல்லையா ?”என்று எதை எதையோ கேட்டுக் கொண்டு இருந்தான்.

தன் தம்பியை முறைத்து பார்த்துக் கொண்டு அவனது கத்தலை கேட்டுக்கொண்டு அமைதியாக தான் இருக்க செய்தார் தேவி.

வேகமாக ஓடி வந்த கண்ணன் என்ன ஆச்சு என்று கேட்க .

அவளுக்கு வாமிட்டிங் இன்னும் குறையல மயக்கமா இருக்கு என்று விட்டு அமைதியாகி விட்டான் .

இன்னும் இரண்டு நாட்கள் கழித்து ஸ்கேன் பண்ண வருவதாக இருந்த காரணத்தினால், இப்பொழுது ஹாஸ்பிடல் வந்திருந்ததால், ஸ்கேன் செய்துவிட்டு வெளியில் வந்த டாக்டர் சிரித்த முகமாகவே சுற்றிப் பார்த்தார்.

உதயா மட்டும் இல்லாமல் இருக்க இன்னும் ஒரு ஆள் குறையுது என்று கேட்ட உடன் தனா தன்னை மீறி சிரித்து விட்டாள் .

தேவியும் ,நந்தாவும் தனாவை முறைத்து கொண்டு இருக்கும் பொழுதே உதயா மூச்சு வாங்க வந்தான்.

தியாவுக்கு என்ன ஆச்சு என்று கேட்டான்.

அவனை பார்த்து சிரித்து விட்ட டாக்டர்  உன்னோட தங்கச்சிக்கு இது அஞ்சாவது மாசம் ஸ்கேன் இல்லையா என்றார் .

ஆமாம்  என்று மண்டையாட்டி விட்டு என்ன ஆச்சுன்னு கேட்கிறேன் டாக்டர் என்றான்.

உனக்கு ஒரு மருமக புள்ள மட்டும் இல்ல என்று அமைதியாகி  விட .

உதயா அதிர்ச்சியுடன் டாக்டரை  பார்த்துக் கொண்டிருந்தான் .

வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க .

இரட்டை பிள்ளைங்க உங்க மாமாவுக்கு ட்வின்ஸ் இன்னைக்கு எக்ஸாம் இருக்குன்னு  ஒழுங்கா சாப்பிட போல .

கொஞ்சம் நர்வசா இருந்து இருக்காங்க அதனால மட்டும் தான் மயக்கம் வந்திருக்கு .

அது இல்லாம ரொம்ப நேரமா நின்னுட்டு பிராக்டிகல் எக்ஸாம் பண்ணதாலையும் சோர்வா இருக்காங்க .

மத்தபடி ஒன்னும் பிரச்சனை இல்ல. அவங்க ஹெல்த்தியா தான் இருக்காங்க .

அவங்க ஹெல்த்தும் நல்லா தான் இருக்கு .அவங்க பெரியம்மா அவங்களை நல்லா தான் பாத்துக்குறாங்கன்னு அவங்க ஹஸ்பண்ட் கிட்ட சொல்ல சொன்னாங்க என்று டாக்டர் சிரித்த முகத்துடன் சொல்லிவிட்டு செல்ல.

நர்ஸ் உதவியுடன் வெளியில் வந்த தியா உதயாவின் அருகில் போய் நின்று கொள்ள .

தேவி தான் தனது தம்பியை முறைத்துக் கொண்டு நின்றார். பிறகு மருத்துவரிடம் சொல்லிக் கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் உதயா தியாவை தூக்கி சுற்றிவிட்டு தினமும் முன்பை விட இப்ப ரொம்ப ஹெல்த்தியா சாப்பிடணும் .

நல்லா உன்ன பாத்துக்கணும் என்று விட்டு தனாவை பார்க்க .

அவ பிராக்டிகல் எக்ஸாமுக்கு நின்றிருந்ததுக்கெல்லாம் அவளுக்கு பதில் நான் என் கால் கொடுத்து நிற்க  வைக்க முடியாது என்றாள்.

உதயா சிரித்து விட்டான்.

தேவி  சிரித்துவிட்டு மச்சானும் ,மாமானும் ஓவரா போறானுங்க டி.

நாலு சாத்துனா தான் ரெண்டு பேரும் சரியா வருவானுங்க என்றவுடன் கண்ணனுமே சிரித்து விட்டார் .

மொத்த குடும்பமும் சந்தோஷத்தில் தாண்டவம் ஆடியது என்று தான் சொல்ல வேண்டும்.

தேவி தியாவை தன் சொந்த மகளாகவே எண்ணி ஐந்தாவது மாதம் சாதமும் கொடுத்திருக்க அப்படியே நாட்கள் அழகாக சென்றது

ஏழாவது மாதம் சாதமும் விமர்சையாக கொடுத்து வளைகாப்பு விமர்சையாக செய்திருந்தார் .

மலர் தங்கள் வீட்டுக்கு அழைத்து செல்கிறேன் என்று சொன்னதற்கு கூட தியாவே நான் வரல மலரு.

தப்பா எடுத்துக்காத. தினமும் நீயும் அப்பாவும்  வந்து பார்த்துட்டு போங்க வேணாம்னு சொல்ல மாட்டேன்.

ஆனா என்னால பெரியம்மாவும்  சரி அண்ணனையும்  சரி விட்டுட்டு வர முடியாது என்ற உடன் அப்ப நான் இல்லன்னா உனக்கு பரவாயில்லையா டி என்றான் நந்தா.

“நீ ஏன் மாமா நீ என்னை விட்டு போக போற.”

“போயிடுவியா? என்ன..”நான் அங்க போன நீயும் தான என் கூட வருவ என்று அனைவரின் முன்பும் மாமா என்று அழைத்திருக்க.

என்னது  மாமா வா என்று சொல்லி சுற்றி இருந்த அனைவரும் சிரிக்க செய்தார்கள்.

தியா நந்தாவின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

நந்தாவுமே  சிரித்து விட்டான். அப்படியே அவளுக்கு எக்ஸாமும் முடிந்திருக்க .

தேவி எக்ஸாம் முடியும் வரை இருந்து அவளை கையோடு அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.

நாட்கள் வேகமாக சென்று ஒன்பதாவது மாதம் தொட்டிருக்க .

அவளுக்கு அடிக்கடி கால் வீங்கிக்கொண்டே இருக்க.

கால் அமுக்கிவிட்டு சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்து காலை மாலை இருவேளையும் கொதிக்க கொதிக்க சுடு தண்ணியில் குளிக்க வைக்க செய்தார் .

உள்ளங்கையில் வைத்து தேவி தாங்க ஒன்பதாவது மாத இறுதியில் இருந்த தியாவிற்கு டாக்டர் கொடுத்த தேதிக்கு 12 நாட்களுக்கு முன்பாகவே ஹாலில் தியா நந்தா ,உதயா இருவரிடமும் பேசிக்கொண்டே  கையையும் பற்றி கொண்டு நடந்து கொண்டிருந்தாள் .

அப்போது தன்னையும் மீறி அம்மா என்று கத்தி விட.

இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் என்ன ஆச்சு தியா என்று அவளை தாங்கி கொண்டு கேட்க .

தெரியல எனக்கு என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவளுடைய சத்தம் கேட்டு வெளியில் வந்து  தேவி தியா என்றவுடன் ..பெரியம்மா என்று அடிவயிற்றை பிடித்துக் கொண்டு அழ.

தேவியும் அருகில் வந்து விட .

மலரும் கண்ணனும் கூட தன் மகளுக்காக என்று சொல்லி ஒன்பதாவது மாதம் தொடங்கியுடன் இங்கே வந்து விட்டார்கள் .

முதலில் ஆரம்பத்தில் இருவருக்கும் இங்கு இருக்க ஒரு மாதிரியாக இருந்தாலும் ,தன் மருமகளுக்காக என்று எண்ணி அமைதியாகி விட்டார்கள்

வேகமாக மலர் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வர .

ஏற்கனவே காருக்கு சொல்லி இருந்ததால் ,காரில் தியாவை கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்றார்கள் .

குழந்தைக்கு தலை திரும்பி இருக்கு என்று சொல்லிவிட.

இங்கு கண்ணனுக்கு அழுகையே வந்துவிட்டது .

தேவியுமே கையை பிசைந்து கொண்டு நின்றார் .

மலர் இறைவனை வேண்டிக் கொண்டிருந்தார்.

உதயா ஒரு மூலையில் நின்று அழுது கொண்டு இருக்க .

உதயாவின் தோளில் கை வைத்த நந்தா டேய் என்னடா என்றவுடன் மாமா என்று கட்டிக்கொண்டு அழுதான்.

ஒன்னும்  இல்லடா என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே  வேகமாக வெளியில் வந்த நர்ஸ் நாந்தாவை டாக்டர் கூப்பிட்டதாக சொல்ல.

உள்ளே சென்று என்னாச்சு டாக்டர் ஏதாச்சும் ப்ராப்ளமா என்றான்.

  அதெல்லாம் எதுவும் இல்லப்பா குழந்தை தலை தான்  திரும்பி இருக்கு.

அவங்க புஷ் பண்ண போதும் முடிஞ்சா அளவுக்கு நார்மல் டெலிவரிக்கு தான் ட்ரை பண்ணிட்டு இருக்கோம் .

தியா ஒத்துழைச்சா மட்டும் போதும் .அவ உன்னை கூப்பிட சொன்னா  அதனால தான் கூப்பிட்டோம் என்றார்.

நந்தா நெளிந்து கொண்டே நான் இங்கே டெலிவரி ரூம்ல இருக்கறதுனால உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல இல்ல டாக்டர் என்றான்.

டாக்டர் சிரித்த முகத்துடன் பேச வருகையிலேயே தியா முந்திக்கொண்டு உன்னால இங்க இப்போ இருக்க முடியுமா ?முடியாதா? டா என்று கேட்டாள்

நந்தா அவளையே பார்த்து கொண்டு இருக்க .சிரித்த டாக்டர் நந்தா கொஞ்சம் ஹெல்ப் பண்ணுப்பா.

ரெட்டை உசுரு மொத்தம் மூணு உசுரு விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கா என்றார் .

அவளை முறைத்துப் பார்த்துவிட்டு தியா டாக்டர் சொல்றத செய் டி என்றான்.

நீ ஃபர்ஸ்ட் நான் சொல்றத செய் .என்ன டி என்றான்.

உன்னோட சட்டையை கழட்டு என்றாள்.

அவளை பார்த்து முறைக்க.

“உன்னால முடியுமா ? முடியாத மாமா என்று அவளுக்கு வார்த்தை மூச்சு வாங்கி கொண்டு வர”.

தனது சட்டையின் முதல் இரண்டு பட்டனை கழட்டிவிட .

அங்கு தியா என்று பச்சை குத்தி இருக்கும் பேரில் முத்தமிட்டு விட்டு அவனது நெஞ்சில் இருக்கும் ரோமங்களை பற்களாலே பிடித்து இழுத்தாள்.

“அடுத்த நொடி அம்மா என்று வேகமாக காத்திருந்தாள். அவளது கை நந்தாவின் கைகளை இறுக்கிக் கொண்டு இருக்க” ,

“அவளது பல் தடம் அவனது நெஞ்சில் பதிந்திருந்தது “.

“அடுத்த நொடி குழந்தையின் குரல் வீறிட்டு வந்தது” .

அங்கு தேவி இறைவனை வேண்டி விட்டு நல்ல முறையில் குழந்தை பிறந்திருக்க வேண்டும் என்று எண்ணினார்.

டாக்டர் இரண்டு குழந்தையும் சுத்தப்படுத்தியவர் தம்பி குழந்தை என்றவுடன் இருங்க நான் என்றவன் தியாவை பார்க்க .

அவள் அவனை குனிய சொல்ல.அவன் குனிந்த உடன் அவனது நெற்றியில் இதழ் பதித்தாள்.

உன் அண்ணனை வர சொல்லட்டா டி என்று கேட்க வேண்டாம் என்று மண்டையை ஆட்டியவள் .

“பெரியம்மா  என்றாள். மூச்சு திணற தம்பி ரொம்ப பேச வைக்க வேணாம் வயசு கம்மி இல்ல ,அதுவும் இரட்டை குழந்தை இல்லையா மூச்சு திணறுது என்றவுடன் வேகமாக வெளியில் சென்ற நந்தா தனது அக்காவை கையோடு அழைத்துக் கொண்டு வர”.

குழந்தை இரண்டையும் தேவியின் கையில் கொடுக்கப்பட்டது.

“தேவி முதலில் தியாவை பார்த்து அவளது நெற்றியில் முத்தம் வைத்து விட்டு  தங்கம் நீ தூங்கு டி என்று விட்டு இரண்டு குழந்தையுடனே வெளியில் வர “.

மலரும், கண்ணனும் வேகமாக ஓடி வந்து அருகில் பார்க்க .

உதயா அப்பொழுதும் அழுது கொண்டு நின்றான் .

தனா தான் என்ன  குழந்தை என்று விட்டு அமைதியாக விட.

தேவி ஒரு பொண்ணு ஒரு பையன் டா என்று தன் மகனை பார்க்க.

தேவியின் அருகில்  வேகமாக வந்த உதயா  “பெண் குழந்தையை தன் கையில் வாங்கிக் கொண்டு குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டவன் தங்க பிள்ளை மாமா கிட்ட வந்துட்டியா டி “என்றான்.

தேவி ஆண் குழந்தையை கொஞ்ச கண்ணன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

அடுத்த நொடி தேவியும் சரி ,உதயாவும் சரி தங்கள் கையில் இருக்கும் குழந்தையை கண்ணனின் அருகில் கொண்டு வந்து கொடுக்க .

கண்ணன் ஆனந்தமாக குழந்தையை கையில் வாங்கிக் கொண்டார்.

அந்த நெடி அவருக்கு தோன்றியது.

“தன்மகள் சொன்ன  தனக்கு தண்டனை என்ற வார்த்தை இதுவல்லவா” என்றுதான் எண்ணினார் .

இருவரையும் குழந்தையை வைத்துக் கொண்டே பார்த்துக்கொண்டு நின்றார் .

இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக நகர்ந்துவிட .

பிறகு ஒரு குழந்தையை மலர் கையிலும் ,இன்னொரு குழந்தையை தனா கையிலும்  கொடுத்தவர் .

“இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டு தான் செய்த தவறை உணர்ந்துவிட்டேன் என்ன மன்னிச்சிடுங்க” .

“நான் பண்ணுது சரின்னு சொல்ல மாட்டேன் .இனி இதை மாற்றவும் மன்னிக்கவும் முடியாதுன்னு எனக்கு தெரியும்.”

மறக்க கூடிய விஷயமும் இல்லை .நான் செஞ்சது தப்புதான் என்னை மன்னிச்சிடுங்க என்று கையெடுத்து கும்பிட.

தேவி கண்ணிலும் சரி ,உதயா கண்ணிலும் சரி கண்ணீர் தான் வந்திருந்தது.

அப்படியே அமைதியாக அரை மணி நேரம் கழிய ..

குழந்தையை பார்க்கணும் என்று தியா சொல்லி இருக்க .

அப்பொழுதுதான் தானாவும் மலரும் ஆளுக்கு ஒரு குழந்தையை தூக்கி கொண்டு உள்ளே வர.

வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள் தியா.

உள்ளே வந்த நந்தா தியாவையே பார்த்துக் கொண்டிருக்க .

“மாமா நீ குழந்தைய பார்த்திட்டியா “என்று கேட்டாள்.

“நானும் இன்னும் பசங்கள பார்க்கல டி “என்று அவள் அருகில் வந்து அவளது நெற்றியில் இதழ் பதிக்க இருவரும் ஒன்றாகவே குழந்தையை பார்த்தார்கள் .

உதயா ,தேவி இருவரும் உள்ளே வந்து அவள் கையில் அழுத்தம் கொடுக்க இருவரையும் பார்த்து சிரித்தாள்.

இப்பதான் “பெரியம்மா நான் பொறந்ததுக்கான அர்த்தமே ,என் வாழ்விற்கான அர்த்தமே கிடைச்சிருக்கு”. என்றாள் .

  “இருவரது கண்ணீரும் அவளது கையில் பட்டு தெரிக்க “.

“நாங்க ஒன்னும்  கேக்கலையே டி “என்று இருவரது  வாயில் இருந்தும் ஒரே வார்த்தையே  வர.

“நீங்க கேட்கல ஆனா என் உடம்புல ஓடுற ரத்தம் பண்ண தப்புக்கு நானும் பிரசித்தம் தேடணுமே பெரியம்மா “என்று அழுதாள் .

தேவி தான் வேகமாக அவளது கண்ணை துடைச்சு விட்டு.

” ஏற்கனவே வீக்கா இருக்க அழக்கூடாது .புள்ள பெத்து உடம்பு பச்சை உடம்புக்காரி என்றவுடன் கண்ணன் தன் மகளையும் கையெடுத்துக் கும்பிட “.

அவர் கையை கீழே இறக்கி விட்டாள்.

நந்தா அமைதியாகவே நின்று கொண்டு இருந்தான்.

அப்படியே மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்து விட்டு வீட்டிற்கு அழைத்து வந்தார்கள் .

கண்ணனே அங்கையே அழைச்சிட்டு போங்க நான் வந்து வந்து பார்க்கிறேன் .

என்னால அங்க தங்க முடியாது என்று விட்டார் .தியாவும் ,மலரும் கூட  எதுவும் பேசவில்லை. வீட்டில் உள்ளவர்களும் எதுவும் பேசவில்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *