மலர் பின் கட்டில் சிறிது நேரம் எதை எதையோ அசை போட்டுக்கொண்டு இருந்தவர் மதியத்திற்கு மேல் தன் மகள் இருக்கும் அறை கதவை தட்ட செய்தார் .
தியா என்று இரண்டு முறை கூப்பிட்டும் எந்த பதிலும் இல்லை. அமைதியாக இருந்தாள்.
அடிக்கடி தட்டியவுடன் எரிச்சலில் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து இப்ப என்ன வேணும் உனக்கு ..
எதுவும் வேணாம் டி ,உன் மனசுல என்ன இருக்கு .அது அப்படியே இருக்கட்டும் .
தான் அதை பத்தி பேச வரல. ஆனால் ,இப்படி ஒரே ரூம் குள்ளையே அடைந்து இருக்காத.
எனக்கு ஒரு மாதிரி இருக்கு. வந்து சாப்பிடு என்றார் .
இப்போது இது ஒன்று தான் குறைச்சலா ? என்று சுற்றி கண்ணை சுழல விட்டாள்.
கண்ணன் அங்கு இல்லை. உன் புருஷன் இல்லையோ ..கிளம்பியாச்சா..
உனக்கு என்ன டி இப்போ. என்கிட்ட தானே பேசிட்டு இருக்க. என்கிட்ட பேசு இப்ப எதுக்கு இதுல உங்க அப்பா வை இழுக்கிற ..
எங்க அப்பா வா என்று சிரித்தாள். மலர் அவளை அடிக்க கை ஓங்கி விட்டு ஓங்கிய வேகத்தில் கீழே இறக்கிவிட்டு அவளது கையை வேகமாக பிடித்தவர் நான் உன்னை அவருக்கு தான் டி பெத்தேன் என்றார்.
நான் உன்னை ஏதும் சொல்லவில்லையே..
அப்புறம் எதுக்காக அவரோட மாகளா? என்னோட அப்பா வானு கேட்கிற..
தியா ..
போதுமா நிறுத்து.. சரியா ?”எனக்கு இன்னமும் ரணமா வலிக்கிது” யோசிச்சா தலை வலிக்குது என்றாள்.
தியா நீ என்ன எப்படி வேணாலும் நினைச்சிக்கோ நான் செஞ்சது சரினு உன்கிட்ட வாதாட செய்யல..
அப்போ நான் இருந்த சூழ்நிலை வேற அத உனக்கு என்னால சொல்லி புரிய வைக்கவும் முடியாது.
நான் சொன்னாலும் புரிஞ்சுக்கிற நிலைமையில நீயும் இல்லை.
அதை நீ புரிஞ்சுக்கிற காலம் வரும். அதுக்காக நான் வெயிட் பண்றேன்.
ஆனா ,இப்போ அத நான் பேசக்கூட விரும்பல ..நீ வந்து சாப்பிடு என்றார் .
எனக்கு பசிக்கில. எனக்கு பசிக்கும்போது நான் சாப்பிட்டுக்குவேன் என்று விட்டு அமைதியாக கதவை திறந்து வைத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்து கொண்டாள் .
மலர் தன் மகளையே பார்த்துக் கொண்டிருந்தார். இன்று அவளுக்கு பிறந்தநாள் இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தினார் .
மலர் தன் கணவன் வருவார் என்று வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து தான் கண்ணன் வீட்டுக்கு வந்தார்.
மாமா சாப்பாடு என்று மலர் கேட்டார்.
மலர் அவ்வாறு கேட்டவுடன் ,கண்ணன் ஹாலில் இருந்த சொம்பை தூக்கி எறிந்து விட்டு எனக்கு இப்போது இது ஒன்று தான் குறைச்சல் டி ..
இத்தனை வருஷமா வாழ்ந்த வாழ்க்கையில உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை ல.
உன் பொண்ணுக்கும் என் மேல நம்பிக்கை இல்லைல போதும் நான் வாழ்ந்த வாழ்க்கை என்னன்னு எனக்கு நல்லா நிரூபிச்சிட்டீங்க..
நான் அவளுக்கு செஞ்சது துரோகமா இல்லையான்னு நான் பேச விரும்பல .
அது எனக்கு முடிஞ்சு போன விசயம் .அது உனக்கும் தெரியும் .
ஆனா ,நீங்க தான் உலகம்னு நினைச்சிட்டு இருந்த எனக்கு நல்ல பதிலடி கொடுத்துட்டீங்க போதும்..
உன் கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல. உன் பொண்ணு கிட்ட இருந்தும் நான் இதை எதிர்பார்க்கவில்லை என்று விட்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டார்.
மலருக்கு இப்பொழுது இதை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை.
நாம் கோவத்தில் வருத்தத்தில் எதுவும் பேசி விடக்கூடாது என்பதற்காக தானே அப்பொழுது கூட பேசாமல் அமைதியாக நகர்ந்து சென்றோம் என்று எண்ணினார்.
வேகமாக அறையில் இருந்து வெளியில் வந்த தியா சமையல் அறைக்கு சென்று தனக்கு டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் உட்கார்ந்து குடித்தாள்.
கண்ணன் அமைதியாக தன் மகளையே பார்த்துக் கொண்டிருந்தார்.
டீ குடித்துவிட்டு என்னையாவே எதுக்காக பார்த்துட்டு இருக்கீங்க..
“நீங்க செஞ்சதற்கான தண்டனையை நீங்க அனுபவிக்கிறீங்க.. அனுபவிங்க..”
நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்ல என்றாள். “கண்ணனுக்கு சுருக்கென்று தைத்தது .தண்டனையா ?”என்று..
ஆனால் ,வேறு எதுவும் பேச முடியவில்லை அவரால் ,தன் மகள் தன்னை ஏதாவது பேசினால் கூட பரவாயில்லை .
தான் உயிராக நேசிக்கும் மலரை வார்த்தைகளால் வதையித்து விடுவாளோ என்று அஞ்சியே அமைதியாக இருந்தார்.
தியா டீயை குடித்துவிட்டு கண்ணனிடமும் இவ்வாறு பேசி விட்டு பின் கட்டிற்கு சென்று விட்டாள் வேறு எதுவும் பேசவில்லை.
மலரும் ஒரு சில நொடி கண்ணனை உற்றுப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
மலருக்கு கண்ணன் இன்னும் காலையிலிருந்து சாப்பிடவில்லை என்பது உரைக்க..
வேகமாக சமையல் கட்டிற்குச் சென்று டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்து அருகில் வைத்தார்.
கண்ணன் நிமிர்ந்து மலரை முறைக்க.. மாமா நீ என்கிட்ட பேச வேண்டாம் ..
உனக்கு என்னை திட்டனுமுனு தோனினா திட்டு. அடிக்கணுமுனு தோனினா அடி ஆனா என் கிட்ட பேசமா,சாப்பிடாம மட்டும் இருக்காத என்று விட்டு கண்ணனை பார்த்தார்.
கண்ணன் அமைதியாக மலரின் கண்ணைப் பார்க்க செய்தார்.
கண்களில் அத்தனை வலிகளையும் தேக்கி வைத்துக்கொண்டு நிற்கும் மலரை பார்த்தவுடன் எதுவும் பேசாமல் டீ குடித்துவிட்டு அமைதியாக அறைக்கு சென்றார் .
மலருக்கு இப்பொழுது தன் மகளை தேற்றுவதா?இல்லை தனது மாமாவை தேற்றுவதா?என்று ஒன்றும் புரியாமல் பார்த்தார்.
அப்படியே மாலை பொழுது தாண்டி ,இரவு பொழுதும் வரத் தொடங்கியது.
தியா சமையல் அறைக்கு வந்து பாத்திரங்களை உருட்ட செய்தாள். என்னடி வேணும் நான் செஞ்சு தரேன் என்றார் மலர்.
ஒன்னும் தேவையில்லை.. எனக்கு என்ன வேணுமோ அத நான் பாத்துப்பேன் என்றாள்..
மலர் வேகமாக தியாவின் கையை பிடித்தவர். உன் அப்பாவுக்கு சொன்னது தான் உனக்கும்..
உனக்கு என் மேல கோவம் இருந்தாலும் அவர் மேல கோவம் இருந்தாலும் கத்து, திட்டு வேணான்னு சொல்லலா சாப்பிடாம இருக்காது ..
நான் எதுவும் பண்ணல.. யாரோட வாழ்க்கையும் கெடுக்கல ..
வேற ஒருத்தவங்களோட வாழ்க்கையும் புடுங்க நினைக்கல என்றாள் தியா.
மலருக்கு தன் மகள் பேசும் பேச்சு உள்ளுக்குள் தைக்க தான் செய்தது .இருந்தாலும் பொறுத்துக் கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தார்.
மலரு என்று கண்ணன் சமையலறை வாசலில் நின்று கத்தினர் .
அவருமே சத்தம் கேட்டு வெளியில் வந்தவர் தன் மகள் இப்பொழுதும் மலரையே குற்றம் சாட்டுவது போல் பேசுவதால் கத்த செய்தார்.
தியா கண்ணனை முறைத்துவிட்டு எனக்கு பசிக்குது தோசை வேணும் என்று விட்டு நகர்ந்தாள்.
நான் ஊத்திட்டு வரேன் நீ போ என்று விட்டு தோசை வார்க்க செய்தார் மலர்.
மடமட வென அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு ஹாலில் கொண்டு வந்து வைத்தார்.
தியா இருவரையும் பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் தட்டில் இரண்டு தோசைகளை போட்டு சாப்பிட்டு விட்டு வேகமாக அறைக்கு சென்று கதவை சாற்றி கொண்டாள்.
நான் தூங்க தான் போறேன் .தலை வலிக்குது என்ன வந்து டார்ச்சர் செய்ய வேண்டாம் என்று விட்டு படுத்துக் கொண்டாள்..
மலர் ரொம்ப நேரமாக கண்ணனையே பார்த்துக் கொண்டு இருந்தார்.
கண்ணன் எதுவும் பேசாமல் இருந்தவுடன் மலர் கண்ணனுக்கு ஒரு தட்டில் தோசையை போட்டு கொண்டு அவரிடம் கொடுக்க செய்தார்.
கண்ணன் அமைதியாக இருந்தார் .கோவமா இருந்தா அடி நாலு வார்த்தை திட்ட செய் சாப்பாட்டுல காமிக்காதீங்க அவ்வளவுதான் சொல்லுவேன் என்றார்.
மலரின் கையை உதிரிவிட்டு கண்ணன் தோசை எடுத்து சாப்பிட்டுவிட்டு ஹாலில் ஒரு மூலையில் சென்று படுத்துக் கொண்டார் .
மலர் அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துக் கொண்டு வெளியில் வந்தார்.
கண்ணன் மலரை முறைத்து விட்டு எழுந்து உட்கார்ந்து கொண்டு என்ன பட்டினி இருக்க வேணான்னு சொன்ன இப்ப நீ என்ன டி பண்ற ..
மாமா அது ..என்றார்.
அவ்வளவு தான் எல்லாம் இல்ல என்று கேட்டவுடன் அழுகையுடனே மலர் கண்ணனை வேகமாக ஓடிச் சென்று அணைத்துக் கொண்டு ஏன் ,மாமா இப்படிலாம் யோசிக்கிற ..
“நான் உன்னை தப்பா நினைச்சிருவேன் நினைக்கிறாயா? “இல்லை “உன்னை விட்டு போயிடுவேன்னு நினைக்கிறியா ? “எல்லாமே தப்பு தப்பா யோசிக்காத மாமா ..
நீ தான் மாமா என் உலகம். இத்தனை வருஷம் போகாத வா இப்ப போயிடுவேனா..
உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா மாமா என்று அழ செய்தார். அறையில் இருந்து தியா அனைத்தையும் கேட்க தான் செய்தாள் ..
தனது கண்ணீரை மௌனமாக துடைத்துக் கொண்டாள். உள்ளுக்குள் வலிக்கவும் செய்தது.
கண்ணன் மலரை நகர்த்தி விட்டவுடன் மலர் எதுவும் பேசாமல் சமையல் அறைக்கு சென்று தனக்கு இரண்டு தோசை வார்த்துக் கொண்டு அங்கே உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார்.
ஹாலில் இன்னொரு மூலையில் சென்று படுத்துக் கொண்டார்.
மலருக்கு தன் மகளையும் பார்க்க வேண்டும் .கணவனையும் பார்க்க வேண்டும். ஆனால் எப்படி என்று தான் புரியவில்லை..
உள்ளே சென்று படுத்தாள் அவளிடம் ஏதாவது பேச வேண்டி வரும். வார்த்தை வளரும் .
அது தனது கணவனுக்கும் ,மகளுக்கும் இடையில் இன்னும் பிரச்சனையை உண்டு பண்ணும் என எண்ணி ஹாலில் ஒரு மூலையில் சென்று அமைதியாக படுத்துக் கொண்டார் .
இரவு முழுவதும் மூவரும் தூங்கினார்களா ?இல்லையா ?என்பது அவர்களுக்கே வெளிச்சம் .