Skip to content
Home » மெய்யெனக் கொள்வாய் – 17 (prefinal)

மெய்யெனக் கொள்வாய் – 17 (prefinal)

அத்தியாயம் – 17 (1)

கீர்த்தி மட்டும் இல்லாமல் அத்வைத், பிரபஞ்சன், சந்திரன் மூவருமே கருணாகரன் வந்து கீர்த்தியைச் சந்திக்கும் தருணத்திற்காக காத்து இருந்தனர்.

அன்றைக்கு மாலை கீர்த்தியைத் தனியாக சந்திக்க வேண்டும் என கருணாகரன் மெசேஜ் அனுப்பினார். தனியாக என்றது கீர்த்திக்கு சரியாகப் படவில்லை. என்றாலும் தற்போது தன் காரியம் முக்கியம் என்று எண்ணி, தன் தந்தைக்கு அழைத்தாள்.

சந்திரனும் முதல் நாள் சத்யா கூறியதை எல்லாம் கேட்டதில் இருந்து கருணாகரன் மீது கட்டுக்கடங்கா கோபத்தில் தான் இருந்தார். கீர்த்தி அவரை சந்திப்பதே பிடிக்கவில்லை. அதுவும் தனியாக சந்திக்க வேண்டும் என்றதும் இன்னும் ஆத்திரம் தான்.

அதனால் கீர்த்தியின் கெஸ்ட் ஹவுசில் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் என்று சந்திரன் கூற, கருணாகரனுக்கும் அதைச் செய்தியாக அனுப்பி வைத்தாள் கீர்த்தி.

மாலையில் கருணாகரன் கீர்த்தியின் கெஸ்ட் ஹவுசை சுற்றி பார்த்தபடி வந்தார். கீர்த்தி ஹால் சோபாவில் அமர்ந்திருந்தாள். அங்கேயே சந்திரனும் அமர்ந்திருக்க, யாரோ என்று எண்ணியபடி உள்ளே வந்தார்.

கீர்த்தி அவரை உட்காரச் சொல்லி காட்டி விட்டு “என்ன விஷயம் சர்? என்னைத் தேடி வந்திருக்கீங்க?” என்றாள்.

கீர்த்தியின் தோரணை கருணாகரனுக்கு எரிச்சலூட்டியது. இதுவரை அவரைக் கண்டதும் எழுந்து நின்று வணங்கியவர்கள் தான் அதிகம். சில அதிகாரிகள் கூட இதில் அடக்கம் தான். ஆனாலும் இந்த அவமதிப்பைக் கண்டு கொள்ளாதவர் போல அமர்ந்தார்.

“ம். அப்புறம் சொல்லுமா. என் பையனும், நீயும் விரும்பறீங்களாம். எப்போ கல்யாணம் வச்சுக்கலாம்?” எனக் கேட்டார்.

“அப்படின்னு யாரு சொன்னா உங்களுக்கு?”

“அதான் மீடியா பூரா பேசிட்டு இருக்காங்களே. இன்னிக்கு நைட் எட்டு மணிக்கு என் வீட்டு வாசலில் ஒரு பிரஸ் மீட் கூட ஏற்பாடு பண்ணியிருக்கேன். அப்போவே சொல்லிட்டா, கடகடன்னு கல்யாண வேலைகள் ஆரம்பிச்சிடலாம்” என்றார்.

“ஓ. அது எப்படி சர் மீடியா சொன்னால் போதுமா? சம்பந்தப்பட்டவங்க சொல்ல வேணாமா? “

“நீங்க சொல்லாமலா மீடியாவில் வருது? நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பேட்டி கொடுத்ததைத் தான் பார்த்தேனே”

“இல்லையே. பேட்டியில் என் கல்யாணம் பற்றி எதுவும் நான் சொல்லலை. நான் இருக்கும்போது உங்க பையனும் சொல்லலை. அப்போ எதை வச்சு அப்படிச் சொல்றீங்க?”

“என்னமா அவன் கூட பழக்கமில்லாமலா ஹோட்டல் வரைக்கும் போயிருக்கீங்க?”

“சர், சினிமாலே இருந்துட்டு நீங்க இப்படிப் பேசறது வேடிக்கையா இருக்கு. நாங்க என்ன ரூம் போட்டுத் தங்கினோமா. இல்ல” என்று கூறும் போதே  “ஸ்ரீமா” என்று கோபமாகக் குரல் கொடுத்தார் சந்திரன்.

வரும்போதே சந்திரனைக் கவனித்திருந்தாலும், திரையுலக வட்டத்திற்குள் தெரிந்த முகம் இல்லை. மீடியா பக்கம் உள்ளவர் போலவும் தெரியவில்லை. சந்திரனின் தோற்றம் கொஞ்சம் பயத்தைக் கொடுத்தாலும், தன்னை விடப் பெரியாளா என்ன என்று நினைத்தார்.

“யாருயா நீ? நானும் அந்தப் பொண்ணும் பேசிட்டு இருக்கும் போது இடையிலே வர?” என்றார்.

“யாரா இருந்தா உங்களுக்கு என்ன சர்?”

“ஓ. பாடி கார்ட்டாக்கும். எந்த ஏஜென்ஸிபா நீ? என்ன சம்பளம் தராங்க? ஆள் நல்லா வாட்டசாட்டமா இருக்க. எனக்கு பெர்சனல் பாடிகார்டா வந்திடு. ரெண்டு மடங்கு சம்பளம் தரேன்”

“சர், தேவையில்லாமல் பேசிட்டு இருக்காதீங்க. உங்களுக்கு என்ன வேணும்?”

“என் பையன் உன்னை விரும்பறான். அவன் ஆசை நிறைவேறணும். அதுக்கு என்ன வேணும்னாலும் பண்ணுவேன்”

“நான் என்ன ஜடமா? உங்க பையன் கையில் என்னைத் தூக்கிக் கொடுக்க? அதோட உங்களால் என்ன பண்ண முடியும்?”

“என்ன வேணும்னாலும் பண்ண முடியும்.”

“சும்மா உதார் விடாதீங்க சர்”

“ஹ. உன் அம்மா பேசினதா சுத்துதே ஒரு ஆடியோ. அதுவே நான் உருவாக்கினது தான். அதை மாதிரி இன்னும் என்ன வேணும்னாலும் பண்ணலாம் தெரியும் தானே”

“எல்லாம் சும்மா வாய்ச் சவடால் தான்.”

“என்னை என்னன்னு நினைச்சுட்டு இருக்க? உன் அம்மாவுக்கு சப்போர்ட்டா என் மாமனார் வந்தார். அதனால் தான் அவளை இத்தனை நாள் சும்மா விட்டேன். நான் நினைச்சு இருந்தால் உன் அம்மா முகத்தை மார்பிங் பண்ணி வேறே மாதிரி வெளிலே விட்டுருப்பேன். அந்த அளவுக்கு இறங்க வேணாமேன்னுப் பார்த்தேன்.”

“ஹ. அப்படியெல்லாம் விட்டா சட்டம் சும்மா விடுமா என்ன? இல்லை அதுக்குப் பயந்து நாங்க எல்லாம் அடிமை மாதிரி இருப்போமா? காலம் மாறிப் போச்சு சர். எங்க மனசில் களங்கம் இல்லாதப்போ இதை எல்லாம் மோதி மிதிச்சுட்டுப் போய்கிட்டே இருப்போம்.”

“இந்த பெண்ணீயம் டயலாக் எல்லாம் நானும் நிறைய கேட்டு இருக்கேன். என் படத்திலே கூட யூஸ் பண்ணிருக்கேன். ஆனால் இன்னும் சமுதாயத்தில் ஆண் வைச்சது தான் சட்டம். ஏன் உன் அம்மா விஷயத்தில் எத்தனை பேர் சப்போர்ட்டுக்கு வந்தாங்க? அடுத்து நம்ம பேர் வந்துருமோன்னு ஓடி ஒளியத் தானே செஞ்சாங்க”

“உண்மைதான். ஆனால் அவங்களுக்கும் தைரியம் கொடுக்கத்தான் நானும், என் அம்மாவும் இதை சட்டப்படி சந்திக்க முடிவு பண்ணிருக்கோம்.”

“அதை எப்படி சமாளிக்கணும்னு எனக்குத் தெரியும். இப்போ நீ முடிவா என்னதான் சொல்ற?”

“எனக்கும் உங்க பையனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் உங்க நேரத்தை வீணாக்காமல் கிளம்புங்க”

“ஓ. இப்போ சொல்றேன். இதுக்கு நீ சம்மதிக்கலைனா, இன்னிக்கு நைட் எட்டு மணி பிரஸ் மீட்லே உன் அம்மாவிற்காக என்னைப் பழி வாங்க என் பையனை யூஸ் பண்ணறன்னு சொல்லுவேன். நான் ஏற்கனவே என் பையனோட, உன் போட்டோவை மார்பிங் பண்ணி வச்சிருக்கேன். அதை வெளியீட்டு என் பையன் சார்பில் நான் மீ டூ புகார் உன் மேலேயும் கொடுக்கப் போறேன். அப்போ என்ன செய்வ?” என்றார்.

“அட என்ன சர். இன்னும் எவ்ளோ நேரம் உங்க மொக்கையக் கேக்கறதுன்னு கவலைப்பட்டேன். இவ்ளோ சீக்கிரம் உண்மையச் சொல்லிட்டீங்க.”

“ஏன் உனக்குப் பயமா இல்லையா ?”

“இப்போ நீங்க பேசினது எல்லாம் நான் ரெகார்ட் பண்ணிருக்கேனே. உங்களுக்குப் பயமா இல்லையா?”

“பொம்பளப் பிள்ள நீயே இப்படி யோசிச்சா. நான் எல்லாம் பக்கா கிரிமினல். என் கார்லே சிக்னல் ஜாமர் வச்சிருக்கேன். என் மொபைல் மூலமா அப்போவே சிக்னல் ஆஃப் பண்ணிட்டேன்” என கருணாகரன் கொக்கரித்தார்.

கருணாகரன் சிரித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்த ஸ்ரீகீர்த்தி, “70 கிட்ஸ் உங்களுக்கே இவ்ளோ தெரிஞ்சிருந்தா, 2k கிட்ஸ் எங்களுக்கு என்ன எல்லாம் தெரியும். ஜாமர் கண்டுபிடிச்ச எங்களுக்கு அதை எப்படி முறியடிக்கிறதுன்னும் தெரியும். நீங்க உங்க ஜாமர் ஆன் பண்ணிண உடனே அதை ஹேக் பண்ணி ஆண்டி-ஜாமர் மோட் ஆக்டிவேட் பண்ணிட்டோம்.”

கருணாகரன் திகைத்துத் தன் மொபைல் போன் பார்க்க, அதில் ஜாமர் சாஃப்ட்வேர் செயல் இழந்து இருந்தது.

மீண்டும் கீர்த்தி “இதுக்கே அசந்துட்டா எப்படி? இப்போ நீங்க பேசின எல்லாம் சோசியல் மீடியாவில் லைவ்வா வீடியோ போயிட்டு இருக்கு. அதையும் பார்க்கலாமே” என்றாள்.

ஜாமர் இருக்கும் தைரியத்தில் தான் எல்லாவற்றையும் பேசியிருந்தார். இப்போது என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்த கருணாகரன் கீர்த்தியை முறைத்து விட்டு “இதற்கு எல்லாம் பதில் சொல்லாமல் விடமாட்டேன்” என்று கிளம்பினார்.

அத்தனை நேரம் அமைதியாய் இருந்த சந்திரன், கீர்த்திக்கு கண்களால் செய்கை காட்ட, கீர்த்தி மொபைல் ஆஃப் செய்து வைத்தாள். சரியாக வீடியோ வர வேண்டும் என அங்கிருந்த ஃபிளவர்வாஸ் ஒன்றின் மேல் சாய்த்து வைத்திருந்த மற்றொரு மொபைலும் ஆஃப் செய்தாள்.

அடுத்த நிமிடம் சந்திரன் கருணாகரன் தலையில் ஓங்கி ஒரு குத்து விட்டார். அந்த அடியில் தலை கிறுகிறுவென சுற்றியது. வெளியில் ஒரு காயமும் தெரியாமல், அடி வெளுத்து விட்டுப் பிறகு தான் சந்திரன் சொன்னார்.

“நான் யாருன்னு கேட்டியே? சத்யாவின் கணவன். ஸ்ரீகீர்த்தியின் அப்பா” என கருணாகரன் முகத்தில் பயத்தில் வெளுத்தது.

“அடி வெளியில் தெரியற மாதிரியே செஞ்சிருப்பேன். ஆனால் அதைச் சாக்கா வச்சு ஹாஸ்பிடலில் போய் படுத்து ரெஸ்ட் எடுக்கக் கூடாது இல்ல. அதான் ஊமை அடி அடிச்சுருக்கேன். போ” என்று வெளியில் தள்ளினார்.

அப்போது ஸ்ரீகீர்த்தியின் லாண்ட்லைன் ஃபோன் அடிக்க, வாட்ச்மேன் அவளைத் தேடி உறவினர் வந்திருப்பதாகக் கூறினார்.

கீர்த்தி யோசனையோடு உள்ளே வரச் சொல்ல, வந்திருந்தவனைப் பார்த்து கருணாகரன் திகைத்தார்.

கீர்த்தி யார் இவர் என்று பார்க்க, சந்திரன் திகைப்போடு “விவேக், நீ எங்கே இங்கே?” என்று ஆச்சரியமாகக் கேட்டார்.

“மாமா, நீங்களும் இங்கே தான் இருக்கீங்களா?” என்றவன் “நல்லதாப் போச்சு” என்றான் வந்திருந்த விவேக் என்பவன்.

“அப்பா, யாரு இவர்?”

“இவன் விவேக்மா, உன் அமுதா அத்தையின் மகன்” என்று அறிமுகப்படுத்தினார்.

“ஹலோ” என்றவள், “நீங்க இங்கே எப்படி வந்தீங்க?” எனக் கேட்டார்.

“சோசியல் மீடியாலே இந்த லைவ் பார்த்தேன். அப்போ இவரைப் (கருணாகரனை) பார்த்தப்போ தான் எனக்கு ஒரு விஷயம் நியாபாகத்துக்கு வந்துது. அதைச் சொல்லத் தான் உங்க வீட்டுக்குப் போனேன். அத்தை தான் அட்ரஸ் கொடுத்து அனுப்பி வைச்சாங்க. உங்க லைவ் முடியறதுக்குள்ளே வரணும்னு நினைச்சேன். முடியலை. பட் நான் சொல்ல வேண்டியதை மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்கே சொல்லிட்டு தான் வந்தேன்” என்றான் விவேக்.

“என்ன சொல்றீங்க?” என இருவரும் கேட்க, டிவி ஆன் பண்ணச் சொன்னான்.

அதில் கருணாகரன் மனைவியின் பேட்டி ஓடிக் கொண்டிருக்க, இடையில் விவேக் பேசுவதும் ஒளிபரப்பாகியது.

அதைக் கண்ட கருணாகரன் அந்த இடத்தை விட்டு அப்படியே வெளியேறி விட்டார்.

இந்த அத்தியாயத்தின் அடுத்த பாகம் லிங்க் https://praveenathangarajnovels.com/%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-17-2/

5 thoughts on “மெய்யெனக் கொள்வாய் – 17 (prefinal)”

  1. Avatar

    கருணாகரன் தானே வந்து வசமா மாட்டிக் கிட்டார். சந்திரன் 👌👌👌👌

  2. Avatar

    .கருணாகரன் தான் செய்த (ஆடியோ வெளியிட்டது)செயலை ஒத்துக்கிட்டதும் இல்லாமல் அடுத்து செய்ய இருந்த இழி (போட்டோ மார்பிங்)செயலையும் ஒத்துக்கிட்டார் கீர்த்தி இதை மீடியாவுக்கு கசிய விட்டதால் கருணாகரனோட ரியாக்ஷன் எப்படி இருக்கும் சந்திரன் அடித்த ஆர்மி அடி எப்படி இருந்ததுன்னு கருணாகரனிம் கேக்கனும் விவேக்குக்கு சத்தியா பத்தின நியூஸ் என்ன தெரியும் எப்படி தெரியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *