Skip to content
Home » மெய்யெனக் கொள்வாய் – 18 – 2 (ஃபைனல்)

மெய்யெனக் கொள்வாய் – 18 – 2 (ஃபைனல்)

அத்தியாயம் – 18 -2

இதன் தொடர்ச்சி சத்யாவின் மேல் சந்திரன் குடும்பத்திற்கு முழு வெறுப்பு வந்தது. ஆனால் சந்திரனால் வெறுப்புக் கொள்ள முடியவில்லை. கோபம் மட்டுமே அதிகம் இருந்தது.

இல்லை என்றவர், கருணாகரன் தன்னிடம் ஸ்ரீகீர்த்தியை நடிக்கக் கேட்கும் போது எல்லாவற்றிற்கும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யவேண்டும் என்று கண்டிஷன் போட்டார். அதை எதிர்த்து மனோகரிடம் போனதால் தன் மீது கோபம் என்று மட்டும் கூறியிருந்ததாகச் சொன்னாள் சத்யா.

சத்யா பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த சந்திரன்  ஏதோ சொல்ல வந்து நிறுத்தியதைக் கவனித்தான் பிரபஞ்சன். தான் ஒரு ஃபோன் பேசிவிட்டு வருவதாகக் கூறி வெளியேறினான்.

பிரபஞ்சன் வெளியேறவும் சத்யாவின் புறம் திரும்பினான் சந்திரன். என் குரல் கேட்டதும் அன்றைக்கு இரவு என்னிடம் அழத் தெரிந்த உனக்கு இது நடந்தது என்று கூற முடியாதா? என்று கேட்டான்.

“இல்லை எனக்கு குற்றவுணர்ச்சி ஆகி விட்டது. உங்கள் சொல்லை மீறி நான் நடித்தத்தில், சட்டென்று கீர்த்திக்கும் கெட்ட பெயர் வந்துவிடுமோ என்று பயம் வந்து விட்டது” என்றாள் சத்யா.  

“சத்யா. இந்த விஷயம் எதுவுமே எனக்கு எப்போதும் பெரிசு இல்லை. ஆனால் என்னோட மனநிலைல தான் எல்லோரும் இருப்பாங்கனு சொல்ல முடியாது. சொந்த பந்தங்களோட வாழும் வாழ்க்கையில் தான் நிறைவு இருக்கும். யாரும் வேண்டாம்னு நினைச்சா ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையாகத் தான் இருக்கும். தவறுகளைக் கண்டிச்சு, அதை உணரும்போது அரவணைச்சுப் போறது தான் நிறைவான குடும்பமா இருக்கும். இதை உனக்கு மட்டும் சொல்லலை. என் அம்மாக்கும் சேர்த்து தான் சொல்றேன். சில நேரங்களில் வயது, உறவு முறையில் நேரடியா கண்டிக்க முடியாது. ஆனால் அதை உணர்த்த முடியும். உணர்த்தியும் இருக்கேன். அதனால் நீ தப்பே செஞ்சாலும் என்னால் கண்டிக்கத் தான் முடியும். தண்டிக்க முடியாது. அப்படி இருக்கும் போது தவறு உன் பக்கம் இல்லாதப்போ உனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் தேவையில்லை.” என்று எடுத்துக் கூறினான் சந்திரன்.

அப்போது தான் சந்திரன் பதினைந்து வருடங்களாகத் தன் அன்னையின் வீட்டிற்கு செல்லவில்லை என்றான். அத்தோடு தங்கைகள் வீட்டு விசேஷங்களுக்கு நேராகச் சென்று விட்டுத் திரும்பி விடுவதாகவும் கூறினான். அவர்கள் கொடுக்கும் பதில் மரியாதையை ஏற்றுக் கொள்வது இல்லை. எப்போது சத்யாவை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ அப்போது எனக்கான மரியாதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டான்.

இதை எல்லாம் சந்திரன் கூறும்போது தான் சத்யாவிற்கு சந்திரன் மனநிலையும் புரிய ஆரம்பித்தது.

இறுதி அத்தியாயத்தின் மூன்றாம் பாகம் லிங்க் இதோ

https://praveenathangarajnovels.com/மெய்யெனக்-கொள்வாய்-18-3/

8 thoughts on “மெய்யெனக் கொள்வாய் – 18 – 2 (ஃபைனல்)”

  1. Pingback: மெய்யெனக் கொள்வாய் - 18.1 (ஃபைனல்) - Praveena Thangaraj Novels

  2. Avatar

    சந்திரன் செம… இந்த காமாட்சியால தான் இவர்கள் பிரிவு நினைச்சேன் அப்படி தான் நடந்திருக்கு …

  3. Avatar

    சந்திரன் அருமையான காரெக்டர். அதே மாதிரி மனோகரும்.

  4. Avatar

    சத்தியாவும் சந்திரனும் பிரியாமல் இருந்திருந்தால் சந்திரன் நல்ல கணவனாக இருந்திப்பான் மகளின் மேல் உள்ள பாசமானது கருணாகரன் உல்லாசமா இருக்க காரணமகிடுச்சு இப்பவாவது கருணாகரனுக்கு தண்டனை கிடைக்குமா சந்திரன் பிரிஞ்சிருந்தாலும் சத்யாவுக்கு உண்டான மரியாதையை ஏற்படுத்தி வைச்சிருக்கான் சத்தியாவும் கொஞ்சம் பொருமையா சந்திரனிடத்தில் பேசி புரிய வைச்சிருக்கலாம் இந்த பிரிவு வந்திருக்காது

  5. Avatar

    Chandran sonnathu Pola karunagaran maathiri niraya per irukiraargal indha ulagil.
    Than manaiviyin mariyaadhai Kaaka parents veetuku kooda poganal irunthu irukiraar chandran. Good person.
    Sathya ,chandran I purinthu kondu irunthaal nallapadiyaaga vaazhnthu irukalaam.

  6. Avatar

    Arambathil irunthe chandran romba nalla charachter. mudincha varai ellathaiyum balance panna try pannaar. kadaaisi varai ponnoda poruppum eduthukitar. Army irukkravanga life style correctaa solli irukeenga. avar thanthu veettai vittu thalli irunthathu kaamtchikku migap periya thandanai. ellathaiyum onnu serthu neat aa kondu vanthuteenga. nice epi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *