Skip to content
Home » மேகத்தின் மோனம் டீசர்

மேகத்தின் மோனம் டீசர்

“அங்கயே நிக்குறதுக்காகவா இவ்ளோ செலவு பண்ணி கல்யாணம் செஞ்சு வச்சாங்க? உள்ள வா… இல்லனா என் மருமகளை ரூம் வாசல்ல நிக்க வச்சு அவமானப்படுத்துறியாடானு அதுக்கும் உன் மாமனார் குதிப்பார்”

எரிச்சலை வெளிப்படுத்த முடியாத கையாலாகாத்தனத்தோடு கூறிய முகிலனை இன்னும் தயக்கம் அகலாத விழிகளோடு பார்த்தபடி வாயிலருகே நின்று கொண்டிருந்தாள் மேகவர்ஷிணி.

முகிலன் அவள் இன்னும் உள்ளே வரவில்லை என்றதும் இடுப்பில் கையூன்றி முறைத்தான்.

“என்ன பிரச்சனை உனக்கு?” என்று அவன் சலிப்பாய் கேட்டதும்

“அது… எனக்கு உள்ள வர பயமா இருக்கு முகில்” என்று சொல்லிவிட்டுத் தரையில் பெருவிரலால் கோலமிட்டாள் அவள்.

அதைப் பார்த்ததும் தலையிலடித்துக்கொண்டான் அவன்.

பட்டென கையெடுத்துக் கும்பிட்டான்.

“அம்மா தாயே! நீ என்ன வேணும்னாலும் பண்ணு… ஆனா வெக்கப்படுறதா இப்ப ஒன்னு செஞ்சியே… அதை மட்டும் செய்யாத… தாங்க முடியல… நீயே வந்து ‘டேக் மீ முகில்’னு ஹஸ்கி வாய்ஸ்ல கொஞ்சுனாலும் எனக்கு இன்னைக்கு ரொமான்ஸ் பண்ணுற ஐடியா இல்ல… ஆளை விடுங்கடானு நார்த் பக்கம் ஓடப்போனவனை இழுத்து வச்சு அடாவடித்தனமா கல்யாணம் பண்ணுறப்ப இல்லாத பயம் இப்ப மட்டும் இன்ஸ்டண்டா வந்து ஒட்டிக்கிச்சா? ஒழுங்கா உள்ள வந்துடு… இல்லனா நான் காதை பிடிச்சு இழுத்துட்டு வந்துடுவேன்”

இனியும் அறைக்கு வெளியே நின்றால் தன் செவிமடல்களுக்கு அபாயம் என்பதால் ரிசார்ட்டில் தங்களுக்காக புக் செய்யப்பட்ட அறைக்குள் பிரவேசித்தாள் மேகவர்ஷிணி.

புக் செய்தவன் முகிலன் தான்! எல்லாம் பாரிவேந்தனுக்குப் பயந்து செய்ததே தவிர மனைவி மீது கொண்ட ஆசையால் செய்ததில்லை.

முதலிரவைத் தொடர்ந்து ஒரு வார தேனிலவும் அங்கே தான் அவர்களுக்கு. இதைத் திட்டமிட்டவனும் முகிலன் தான்.

மேகவர்ஷிணி ரிசார்ட் சிப்பந்திகள் செய்திருந்த அலங்காரங்களை மானசீகமாக மெச்சிக்கொண்டிருக்கையில் முகிலன் குளியலறையில் உடைமாற்றிவிட்டு வந்தான்.

கண்கள் அகல அறையை ரசித்துக்கொண்டிருந்த மேகவர்ஷிணியை ஊன்றி கவனிக்க ஆரம்பித்தான்.

பத்து நாட்களுக்கு முன்பு வரை அவள் யாரென்றே தெரியாது. ஆனால் இன்றோ மனைவியென்ற ஸ்தானத்தில் அவனோடு ஒரே அறையில் நிற்கிறாள்.

பயம், வெட்கம் என அவள் பலவிதமாக கதை சொன்னாலும் அதில் ஒன்றை கூட அவளிடம் காணவில்லை முகிலன். அவளது இருபது வயதுக்குரியான துடுக்குத்தனம் மட்டுமே வதனத்தில் நிரம்பியிருந்தது.

அவன் தன்னைக் குறுகுறுவென பார்த்ததும் மேகவர்ஷிணியின் கவனம் கலைந்தது.

என்ன பார்வை என்ற ரீதியில் புருவங்களை உயர்த்தி வினவியவளிடம் அவன் தான் தடுமாறிப்போனான்.

அவனது பார்வையில் காதலோ காமமோ துளியும் இல்லை! இப்படி கல்யாண பந்தத்தில் சிக்கிக்கொண்டேனே என்று நொந்து போன பாவனைதான் அவனது உடல்மொழியில் அவளுக்குத் தெரிந்தது.

ஆசைப்பட்டு முகிலனை வம்படியாக மணந்தவளுக்கு இப்படி அவன் நொந்து போவதைக் காண விருப்பமில்லை. எனவே அவனை இயல்புக்குக் கொண்டு வர பேச்சை ஆரம்பித்தாள்.

“கல்யாணத்துல விருப்பமேல்லனு சொல்லிட்டு பார்வை மட்டும் பலமா இருக்கு’

“பாக்குறதுக்கு ஜி.எஸ்.டி எதுவும் கட்டவேண்டாம்னு கேள்விப்பட்டேன்”

அவளைப் போலவே நக்கலாக முகிலனும் பதிலளிக்க முறுவலித்தாள் மேகவர்ஷிணி. அவளது சிரிப்பு எந்தவித கிளர்ச்சியையும் முகிலனுக்குள் விதைக்கவில்லை.

இயல்பான திருமணம் என்றால் புது மாப்பிள்ளைக்கே உரித்தான ஏக்கம், மனைவியைக் கண்டதும் எழும் தாபம் எல்லாம் அவனுக்கும் உண்டாகியிருக்குமோ என்னவோ? இப்போது அப்படி எதையும் அவன் உணரவில்லை.

ஆனால் இந்தப் பத்து நாட்களும் தன்னைப் பாடாய்ப்படுத்தி பம்பரமாகச் சுழலவிட்டவளைச் சீண்டத் தோண்டியது அவனுக்கு.

“புதுப்பொண்டாட்டியை பாக்குறதுக்கு மட்டும் இல்ல, அவளுக்கு முத்தா குடுக்கவும் ஜி.எஸ்.டி கிடையாது தெரியுமா?”

விசமமாகக் கேட்டபடி அவளை நெருங்கினான் அவன்.

இப்போது கொஞ்சம் அதிர்ந்தாள் மேகவர்ஷிணி.

அவன் நெருங்க அவள் விலக இறுதியில் சுவரில் இடித்து நின்றவளை இரு புறமும் அணையிட்டன முகிலனின் வலுவான கரங்கள்.

அவளுக்குப் பதற்றத்தில் வார்த்தை வரவில்லை. கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்தன. அவன் மீது மனமெங்கும் காதல் இருக்கிறது. ஆனால் முகிலனும் அதைப் பிரதிபலித்தால் தானே அவனது அருகாமையில் அவளால் புது மனைவியாய் நாணம் கொள்ள முடியும்.

அவனே வேண்டாவெறுப்பாய் திருமணம் செய்து கடனே என்று அழைத்து வந்திருக்கிறான்!

தொண்டையைச் செருமியவள் “உன் உடம்புல டெஸ்டோஸ்ட்ரான் வேலை செய்ய ஆரம்பிக்குதுனு புரியுது… சயின்ஸ் என்ன சொல்லுது தெரியுமா? ஒரு ஆண் விரும்பாத பொண்ணு கூடவும் இணையலாம்… பட் அது எல்லாம் டெஸ்டோஸ்ட்ரானோட விளையாட்டு மட்டும் தானாம்… அதுவே அவன் விரும்புன பொண்ணு கூட மனசார இணையுறப்ப தான் அவனுக்குள்ள ஆக்சிடோசின் சுரக்குமாம்… டெஸ்டோஸ்ட்ரான் சிம்பலைஸ் பண்ணுறது லஸ்டை மட்டும் தான்.. ஆனா ஆக்சிடோசின் தான் பியார், ப்ரேமா, காதலை உருவாக்கும்.. இப்ப சொல்லு… நீ டீம் டெஸ்டோஸ்ட்ரானா இல்ல டீம் ஆக்சிடோசினா?” என்று சாதுரியமாகக் கேட்டபடி அவனது கரத்தைத் தட்டிவிட்டாள்.

முகிலன் குறுஞ்சிரிப்போடு விலகிக்கொண்டவன் “ஃபர்ஸ்ட் நைட் ரூம்ல பயாலஜி க்ளாஸ் எடுத்த முதல் பொண்ணு நீயா தான் இருப்ப மேகா… டோண்ட் டேக் திஸ் சீரியஸ்… ஜஸ்ட் உன் கிட்ட விளையாடுனேன்… நீ எமோஷ்னலி ரொம்ப ஸ்ட்ராங்க்னு புரியுது… என்னால உன்னைக் காதலிக்க முடியுமானு தெரியல… பட் ஐயோ என் வாழ்க்கை இப்பிடி பாழுங்கிணத்துல விழுந்துடுச்சேனு புலம்புற நிலமைய நீ எனக்கு உருவாக்க மாட்டனு நம்புறேன்” என்று சொல்லிவிட்டுப் படுக்கைக்குப் போய்விட மேகவர்ஷிணி நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

“காலேஜ் முடியுற வரைக்கும் கண்ட்ரோலா இருக்கணும் மேகா… முதல்ல டிகிரி… அப்புறம் தான் குடும்பத்தலைவி போஸ்டிங்குக்குப் போகணும்… எப்பவும் இதை மறந்துடாத” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள் அவள்.

22 thoughts on “மேகத்தின் மோனம் டீசர்”

 1. CRVS

  ஓ மை காட்..! அப்ப இவ இன்னும் படிச்சிட்டிருக்காளா…?
  அப்புறம் எப்படி காதல்..?
  கல்யாணம் ..? புரியலையே..?
  பட் வெயிட்டிங் டு நோ..!

 2. Avatar
  KSATHIYABHAMA NATARAJAN

  சூப்பர்
  ஆவலுடன் கதைக்களம் காண காத்திருக்கிறோம்
  Biology kurippugalukkaga waittting

 3. Kalidevi

  Story started nice padichitu irukavangaluku ethuku ivlo sikram kalyanam ithula avan sonna mari biology class vera . Waiting for ud 1

 4. Avatar

  ஆரம்பமே அசத்தலா இருக்கு சகி ரொம்ப ரொம்ப எதிர்பார்க்க வைக்கிறிங்க சகி புது கதையின் பயணம் தொடர வாழ்த்துகள்

 5. Avatar

  முதல்ல புது கதைக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐 நித்தியாவோட கதையில ஹீரோயினி கெத்தா இல்லன்னா தான் அதிசயம்.
  மேகவர்ஷினி கேரக்டர் செமையா இருக்கும் போல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *