Skip to content
Home » வஞ்சிப்பதோரும் பேரவா! – 21

வஞ்சிப்பதோரும் பேரவா! – 21

அத்தியாயம் 21

பிரியம்வதா ஊருக்கு செல்லவில்லை என்பதை அறிந்து கொண்ட ஹர்ஷவர்தன் திகைப்பில் ஆழ்ந்து விட, அவனை திட்டி ஓய்ந்த அபிஜித்தோ, அடுத்து என்ன செய்வது என்பதை பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

அதற்குள் அத்தனை நேரம் சிலையாக சமைந்து நின்ற ஹர்ஷவர்தன் நிகழ்விற்கு வந்து, “அந்த பொறுக்கி நாய் தான் வதுவை கிட்னாப் பண்ணியிருக்கணும். என்கிட்ட மோதாம, அவளை தூக்கியிருக்கான் பரதேசி. ச்சை, எல்லாம் என் தப்பு! மத்தவங்களுக்குன்னு பார்க்க போய், இப்போ என் பொண்டாட்டியை தொலைச்சுட்டு நிக்கிறேன்.” என்று கோபமாக ஆரம்பித்தவன் புலம்பலில் முடித்தான்.

அபிஜித்தும் பிரஜனும் சொல்லும்போது புரியாதது, இப்போது புத்தியில் உரைத்தது ஹர்ஷவர்தனிற்கு. பட்டு தான் தெ(பு)ரியவேண்டும் என்பது விதியாக இருந்தால், யாரால் மாற்ற முடியும்!

குற்றவுணர்வில் புலம்பும் அவனை மேலும் குற்றம் சொல்ல விரும்பாத அபிஜித், “ஹர்ஷா, நீ எதுக்கும் ஸ்டேஷனுக்கு போய் கம்ப்லைண்ட் குடு.” என்று யோசனையுடன் கூற, “அதுக்கு முன்னாடி அந்த ****** கிட்ட போய் கேட்கணும் அபி.” என்று எழுந்தான் ஹர்ஷவர்தன்.

“என்ன கேட்கப் போற? நீ கேட்டா மட்டும் சொல்லிடுவானா? ஏற்கனவே, மௌனிகா கேஸ்ல உன்மேல சந்தேகம்னு போலீஸ் கிட்ட சொல்லியிருக்கான். இதுல, இப்போ நீ போய் பிரச்சனை செஞ்சா, இதையே சாக்கா வச்சு, கேஸை உன் பக்கம் திருப்பிடுவான். இதுக்காகவே கூட, பிரியாவை கடத்திருப்பான் அவன். அவன் சரியா பிளான் பண்ணி தான் காய் நகர்த்துறான் ஹர்ஷா. தயவு செஞ்சு, நீயா ஏதாவது பண்ணி அந்த டிராப்ல மாட்டிக்காத.” என்று கடுமையாகவே பேசினான் அபிஜித்.

அதில் சற்று அடங்கிய ஹர்ஷவர்தனும், மனதிற்குள் யஷ்வந்த்தை மானாவாரியாக திட்டி தன் கோபத்தை தணித்துக் கொள்ள பார்த்தான். திட்டியதும் தணிந்து விடும் கோபமா அது?

அதனுடனே, மனைவியின் நினைவும், இறுதியாக இருவருக்குள்ளும் நடந்த வார்த்தை போரும் நினைவுக்கு வர, ஆயிரமாவது முறையாக, அதற்காக தன்னைத்தானே திட்டிக் கொண்டான்.

நடக்காது என்று தெரிந்தும், எப்படியாவது காலத்தை பின்னோக்கி நகர்த்தி, நடந்த சண்டையை மாற்றி விட மாட்டோமா என்றிருந்தது ஹர்ஷவர்தனிற்கு.

காரணம், மாட்டியிருந்த மனைவி மட்டுமல்ல, அவள் மாட்டப்பட்டிருந்த ஆட்களும் தான். ஒருநொடி, அவர்களை பற்றி அபிஜித் கூறியவை, சற்று முன்னர் கவின் கூறியவை எல்லாம் மூளைக்குள் வந்து போக, தேகம் வெளிப்படையாகவே நடுங்க துவங்கியது ஹர்ஷவர்தனிற்கு.

‘வது, எவ்ளோ கோபமா இருந்தாலும், ஏன் என்னை விட்டுட்டு போன? இப்போ எங்கன்னு நான் உன்னை தேடுவேன்?’ என்று தொலைந்த மனைவியை தேடி மனதோடு வருந்தினான்.

தேடல்! காதலின் முதலடி அன்றோ!

அவனவளை பிரிந்து வாடும் போது, அவனின் மனம் வெளிப்படுவதே காதலின் விந்தையோ!

இனி, அவளைப் பார்ப்பானா? தேடலையும், அது உணர்த்திய காதலையும் அவளிடம் வெளிப்படுத்துவானா… விதியின் கைகளில்!!!

ஹர்ஷவர்தன் அவனின் வதுவின் நினைவுகளில் மூழ்கி இருக்க, அபிஜித்தோ ஆணையரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டான்.

பிரியம்வதா காணாமல் போன விஷயத்தையும், அதற்கு முன்னர், மௌனிகா வழக்கை ஹர்ஷவர்தன் பக்கம் திருப்ப யஷ்வந்த் செய்த முயற்சியையும் அவரிடம் கூறினான் அபிஜித்.

“இட்ஸ் கெட்டிங் மோர் அண்ட் மோர் காம்ப்ளிகேடட் அபிஜித். முதல்ல, உங்க ஃபிரெண்டை வேற எதுவும் செய்ய விடாம தடுங்க. மேபி, அந்த ஒரு விஷயம் கூட அவரோட ஒய்ஃப் இப்போ காணாம போனதுக்கு காரணமா இருக்கலாம்.” என்று அவர் கூற, அபிஜித்திற்கு அன்றைய நாள், காவல் நிலையத்திற்கு பிரியம்வதாவை யஷ்வந்த் அழைத்தது நினைவிற்கு வந்தது.

“நான் பார்த்துக்குறேன் சார்.” என்ற அபிஜித், “இப்போ ஹர்ஷாவை போலீஸ் கம்ப்லைன்ட் குடுக்க சொல்லியிருக்கேன் சார்.” என்றும் சேர்த்து கூற, “லீகலாவா?” என்று யோசித்தார் ஆணையர்.

“ஆமா சார், அந்த கேஸை நம்ம விட்டுட்டோங்கிற நியூஸ் இந்நேரத்துக்கு அவனுக்கு போயிருக்கும். என்னதான், மேலிடத்து பிரஷரால, நம்ம இன்வெஸ்டிகேஷனை ஸ்டாப் பண்ணிட்டோம்னு அவன் நினைச்சாலும், அவனை அப்படியே விட்டுடுவோம்னு அவன் நம்ப மாட்டான். சோ, நம்ம சீக்ரெட் இன்வெஸ்டிகேஷன் பத்தின நியூஸ் அவன் காதுக்கு போகக் கூடாதுன்னா, அவன் சம்பந்தப்பட்ட வேற கேஸை நம்ம எடுத்துருக்கோம்னு நியூஸ் அவனுக்கு போகணும். அதுக்கப்பறம், அதையும் அவன் பவரை யூஸ் பண்ணி தடுக்கலாம். ஆனா, நம்ம சீக்ரெட்டா விசாரிக்கிறோம்னு அவன் யூகிக்க மாட்டான்.” என்று தன் திட்டத்தை கூறினான் அபிஜித்.

“குட் ஒன் அபிஜித். அப்போ அப்படியே ப்ரோசீட் பண்ணுங்க. உங்க ஃபிரெண்டு கேஸ்ல இன்வெஸ்டிகேட் பண்றதுக்கு எனக்கு தெரிஞ்ச இன்னொரு நேர்மையான போலீஸை அப்பாயின்ட் பண்றேன். அந்த யஷ்வந்த் தடுக்காத வரை, அவரு லீகலா அதை ஹேண்டில் பண்ணட்டும். நீங்களும் அவருக்கு ஹெல்ப் பண்ணுங்க. அதை அந்த யஷ்வந்த் கவனிக்கிற மாதிரியும் செய்ங்க.” என்றார் அவர்.

அதற்கு பிறகு, வேலைகள் விரைவாக நடக்க, பிரியம்வதா காணாமல் போனதாக ஹர்ஷவர்தன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த செய்தி யஷ்வந்த்தை அடைந்தது.

அதில் கோணல் சிரிப்பு சிரித்தவன், “நீ காணாம போனதே இப்போ தான் உன் புருஷனுக்கு தெரிஞ்சுருக்கு பாரேன்.” என்று எதிரில் மயக்கத்தில் இருந்தவளிடம் கூறினான் யஷ்வந்த்.

அடுத்த அரை மணி நேரத்தில், யஷ்வந்த்தின் அலுவலகத்திற்கு வந்த காவலர்கள் இருவர், பிரியம்வதா காணாமல் போன வழக்கில் யஷ்வந்த்திடம் விசாரிக்க, அவனை காவல் நிலையத்திற்கு அழைக்க, அவனும் மறுக்காமல் அவர்களுடன் சென்றான்.

காவல் நிலையத்திற்குள் நுழைந்த யஷ்வந்த்தை கொலை வெறியுடன் ஹர்ஷவர்தன் முறைக்க, அவனோ ஹர்ஷவர்தனை பார்த்து இகழ்ச்சியாக சிரித்தான்.

பின், முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்ட யஷ்வந்த், “நான் என் மனைவி காணாம போன கேஸ்ல உங்க மேல சந்தேகம் இருக்குன்னு சொன்னதுக்கு, பழி வாங்குறீங்களா ஹர்ஷா?” என்று கேட்க, அவனை அடிக்க பாய்ந்த ஹர்ஷர்தனை அபிஜித் பிடித்து வைத்துக் கொண்டான்.

அடுத்து அபிஜித்திடம் வந்த யஷ்வந்த், “உங்களை வேற கேஸுக்கு மாத்திட்டாங்களாமே!” என்று உச்சுக்கொட்ட, அவனிடம் கோபத்தை வெளிப்படுத்தாத குரலில், “போலீஸ் டிப்பார்ட்மெண்ட்ல நடக்குறது எல்லாம் உடனுக்குடனே உங்களுக்கு தெரிஞ்சுடுது போலயே. அப்போ, எங்க டிப்பார்ட்மெண்ட்லயே ஸ்பை வச்சுருக்கீங்க, அப்படி தான? எனக்கு தெரிஞ்சு, நிறைய தப்பு பண்றவங்க தான் இப்படி ஸ்பை வேலையெல்லாம் பார்ப்பாங்க. இனிமே, தப்புக்களை குறைச்சுகிறது நல்லது. ஏன்னா, எல்லா நேரமும் ஒன்னா இருக்காது பாருங்க. திடீர்னு ஏதாவது ஒரு கேஸ்ல சிக்கிட்டீங்கன்னு வச்சுக்கோங்க, அவ்ளோ தான்… திரும்ப வெளிய வரவே முடியாது.”  என்று கோணல் புன்னகையுடன் அவனிற்கு பதில் கொடுத்தான் அபிஜித்.

அதைக் கேட்ட யஷ்வந்த்திற்கு உள்ளும் புறமும் எரிந்தாலும், இருக்கும் இடம் உணர்ந்து, பார்வையாலேயே இருவரையும் எரித்து விட்டு விசாரணைக்கு சென்றான்.

அடுத்த அரை மணி நேரம், யஷ்வந்த்தை விசாரித்து பார்த்ததில், அவனை குற்றம்சாட்டும் அளவிற்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. பிரியம்வதா காணாமல் போன தினத்திலிருந்து, இப்போது வரை, அவன் எங்கு இருந்தான் என்பதற்கான ஆதாரங்களை வைத்திருந்தான் யஷ்வந்த்.

அதுவே, அந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியான ஹரிஹரனிற்கு சந்தேகத்தை கொடுக்க, “என்ன சார், விக்டிம் கடத்தப்படுவாங்க, அதுக்கு நாங்க உங்களை விசாரிப்போம்னு முன்னாடியே தெரிஞ்சு வச்ச மாதிரி, எல்லா ஆதாரங்களையும் பக்காவா செட் பண்ணிட்டீங்க போல!” என்றவனின் குரல் கேலியாக ஒலித்தாலும், அவன் முகமோ அதற்கு எதிர்மறையாக மிக அழுத்தத்துடன் காணப்பட்டது.

ஹரிஹரனின் கேள்வியில், யஷ்வந்த்தின் முகம் ஒருநொடி சுருங்கி, மீண்டும் இயல்பாக, அதுவே ஹரிஹரனிற்கு காட்டிக் கொடுத்து விட்டது.

இருப்பினும், அவனிற்கெதிராக சாட்சியோ, ஆதாரமோ இல்லாத நிலையில், அதற்கு மேலும் அவனை விசாரணை என்ற பெயரில் பிடித்து வைக்க முடியாததால், “நீங்க இப்போ போலாம்…” என்று இடைவெளி விட்ட ஹரிஹரன், “திரும்ப ஏதாவதுன்னா கூப்பிடுறோம். சோ, காண்டேக்ட்லேயே இருங்க.” என்று கிண்டலாக கூறி, யஷ்வந்த்தின் இரத்த அழுத்தத்தை உயர்த்தினான்.

அதில் பல்லைக் கடித்த யஷ்வந்த், அங்கிருந்து நகரப் போக, “அப்பறம், என் பொண்டாட்டியை இதுல இழுக்க முயற்சிக்க வேண்டாம். வச்சு செஞ்சு விட்டுடுவா. இப்போ களரி வேற கத்துக்குறா. சோ, ரத்தக்களரி ஆக வேண்டாம்னா தள்ளியே இருங்க.” என்று மிரட்டலையும் கேலியாகவே விடுத்தவன், ஒலிவாங்கியில் அவன் குரல் எட்டாத வகையில் எதிராளியின் அருகே சென்று, “இத்தனையும் மீறி, அவ மேல உங்க பார்வை பட்டாலே, சிதைச்சு விட்டுடுவேன்… கண்ணை சொன்னேன்!” என்று நேரடியாகவே மிரட்டினான்.

மிகுந்த கோபத்துடன் விசாரணை அறையை விட்டு யஷ்வந்த் வெளியே வர, அறை வாயிலில் பரபரப்பாக நின்றிருந்த ஹர்ஷவர்தனை பார்த்தவுடன், கோபம் போய் அதனிடத்தை உற்சாகம் ஆட்கொண்டு விட்டது.

அவனருகே சென்ற யஷ்வந்த், “எனக்கும் உங்க மனநிலை புரியுது ஹர்ஷா. நானும் என் பொண்டாட்டியை தொலைச்சுட்டு தேடிட்டு இருக்கேன். ‘அவ கிடைச்சுடுவா’ங்கிற நம்பிக்கை தான் என்னை உயிரோட வச்சுருக்கு. நீங்களும் நம்புங்க… நம்பிட்டே இருங்க…” என்றவனின் பேச்சு, ஹர்ஷவர்தனிற்கு ஆறுதல் கூறுவது போலிருந்தாலும், அவன் முகமும் குரலும் மகிழ்ச்சியை மறைக்க முடியாமல் வெளிப்படுத்தி, ஹர்ஷவர்தனின் கோபத்தை உயர்த்தியது.

மிகுந்த கோபத்துடன் யஷ்வந்த்தின் சட்டையை பிடித்த ஹர்ஷவர்தன், “பொறுக்கி நாயே, என்னையும் உன்னையும் கம்பேர் பண்ணாத டா. ரெண்டு பேரையும் கடத்தி வச்சுருக்குறதே நீதான். இதுல, இங்க வந்து நல்லவன் மாதிரி டிராமா பண்றீயா?” என்று கத்த, அவன் கரத்தை தன் சட்டையிலிருந்து தட்டி விட்ட யஷ்வந்த்தோ, “அதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா மிஸ்டர். ஹர்ஷவர்தன்? அபிஜித், நீங்களே சொல்லுங்க… என்னை குற்றவாளின்னு கூண்டுல ஏத்தனும்னா ஆதாரம் இருக்கணும்ல. அப்படி ஏதாவது இருக்கா?” என்று நக்கலாக வினவினான்.

“பொய்யா ஆதாரத்தை க்ரியேட் பண்ண ரொம்ப நேரம் ஆகாது மிஸ்டர். யஷ்வந்த். அதை வச்சு லாக்கப்ல தள்ளி, உங்க ஆளுங்க உங்களை காப்பாத்த வரதுக்குள்ள, எங்க வேலையை முடிச்சுடுவோம். அதுக்கப்பறம், என்னத்தையாவது சொல்லி சமாளிச்சுடுவோம். உங்களை மாதிரி ஆளுங்களுக்கு வளையுற சட்டம், எங்களுக்கு கொஞ்சமே கொஞ்சம் வளையாதா என்ன?” என்று முறைத்தபடி கூறிய ஹரிஹரன், பின் தன் குரலை மாற்றிக் கொண்டு, “நீங்க சும்மா சொன்னீங்க பார்த்தீங்களா, அதே மாதிரி நானும், ஒரு பேச்சுக்கு சொன்னேன். அப்படியெல்லாம் நாங்க பண்ண மாட்டோம். ஏன்னா, நாங்க தான் நேர்மையான போலீசாச்சே.” என்று மீசையை முறுக்கிக் கொண்டான்.

அங்கிருந்த மூவரையும் முறைத்த யஷ்வந்த் விடுவிடுவென்று அங்கிருந்து வெளியேற, “கொஞ்சம் நிதானமா பேசியிருக்கலாம் ஹரிஹரன். இதுக்கான எதிர்வினை எப்படி இருக்கப் போகுதோ!” என்று அபிஜித் கவலைப்பட, “நிச்சயம், அவனுக்கு கோபம் தலைக்கேறி இருக்கும்! அதுல, அவன் மூளை வேலை செய்யாம போய், தப்பை தப்பா செய்ய வாய்ப்பிருக்கு.” என்று பூடகமாக பேசினான் ஹரிஹரன்.

*****

வீட்டிற்கு வந்த யஷ்வந்த்தோ கோபத்தில் கொந்தளித்தபடி யாரிடமோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.

“அந்த புது போலீஸ் யாருன்னு விசாரிச்சியா? இடியட், எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே மிரட்டுவான்? சென்டிரல் மினிஸ்டரே பார்த்து பயப்படுற ஆள் நானு. சாதாரண போலீஸ் இவன்… என்னை மிரட்டுவானா?” என்று கத்தினான்.

மறுமுனையில் பேசியவனோ, “சார், அவன் இன்னைக்கு தான் தமிழ்நாட்டுல இருந்து இங்க டிரான்ஸ்ஃபராகி வந்துருக்கான். ரொம்ப கெடுபிடியான ஆளாம். அவனோட வேலை செஞ்ச போலீஸே அவனுக்கு பயப்படுவாங்களாம். ஒரு கேஸை எடுத்தா, முடிக்காம விட மாட்டானாம். இதுவரை, பல டிரான்ஸ்ஃபர் கிடைச்சுருக்காம். இவனோட இந்த அதிரடியால, சில நேரம் ப்ரோமோஷன் கூட ரத்தாகி இருக்காம். ஆனாலும், அசர மாட்டானாம்…” என்று இன்னும் ஏதோ கூற வந்தவனை எரிச்சலுடன் இடைவெட்டிய யஷ்வந்த், “இப்போ அவனை புகழ சொன்னேனா உன்னை?” என்று திட்டினான்.

பின், “எதுக்கும் அசராத, பயப்படாத ஆள் உலகத்துலயே இருக்க மாட்டாங்க. மத்த ரெண்டு பேரை விட, ஹீ லுக்ஸ் ஸோ டேஞ்சரஸ். அவனோட ஃபேமிலி, ஃபிரெண்ட்ஸ்னு எல்லாரோட டீடெயில்ஸும் வேணும்.” என்றான் யஷ்வந்த்.

அதைக் கேட்டவனோ, “அப்போ உங்களுக்கும் பயம் இருக்கா சார்?” என்று அதிகப்பிரசங்கித்தனமாக கேள்வி கேட்க, வேறு ஏதோ சிந்தனையில் இருந்த யஷ்வந்த்தும், “மனசு எதை ரொம்ப விரும்புதோ, அதுக்கு ஆபத்து வரப்போ, எல்லாரும் பதறுவாங்க, பயப்படுவாங்க. அவங்க மனசு, மூளை சொல்றதை கேட்காது. தப்பு தப்பா முடிவெடுக்க வைக்கும். அதுல, நான் மட்டும் என்ன விதிவிலக்கு?” என்று பதிலளித்தவன், “உன்கிட்ட சொன்ன வேலையை முடிச்சுட்டு என்னை கூப்பிடு. இப்போ எனக்கு வேற வேலை இருக்கு.” என்றவனின் குரலில் வன்மம் கொட்டிக் கிடந்தது.

நேராக நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டு மயக்கத்தில் இருந்த பிரியம்வதாவை கன்னத்தில் அடித்து எழுப்பியவன், அவளின் மோவாயை அழுந்த பற்றியபடி, “எவ்ளோ தைரியம் இருந்தா, உன் புருஷன் என் சட்டையை பிடிப்பான்? உன் புருஷன் செஞ்சதுக்கு, இனி செய்ய போறதுக்கு எல்லாம் நீ தண்டனை அனுபவிக்கப் போற! அந்த புது போலீஸ்காரன்… ப்ச், அவனும் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டான். அவன் பொண்டாட்டி பெரிய இவளாமே! அவளையும் தூக்குறேன். இப்போ உன்னை கவனிக்குறேன்.” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறியவன், வெறி பிடித்ததை போல அவளைப் பிணைத்திருந்த கயிறை எல்லாம் அகற்ற ஆரம்பித்தான்.

அவை பெண்ணவளின் உடலில் காயத்தை ஏற்படுத்த, வாயை அடைத்திருந்ததால், வலியில் கத்த கூட முடியாமல் முனக ஆரம்பித்தாள் பிரியம்வதா.

அவனின் அந்த மிருகத்தனமான செயலில் அவன் கரமும் காயம் கண்டது. எனினும், அவன் மூளையோ, அவனிற்கு எதிரிலிருப்பவளை துன்புறுத்த சொல்ல, அவன் வலியெல்லாம் பின்னுக்கு சென்றது.

இரண்டு நிமிட போராட்டத்திற்கு பிறகு, வெற்றிகரமாக அவளை அந்த கயிற்றிலிருந்து வெளியே கொண்டு வந்து விட, அந்த சிறு நிம்மதியை கூட அனுபவிக்க விடாமல், தரதரவென்று அவளை இழுத்துக் கொண்டு சென்றான்.

அவனிடமிருந்து விடுபட, எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டாள். ஆனால், பலன் என்னவோ பூஜ்யம் தான்!

அதில் அவள் கீழே விழுந்து விட, அப்போதும் விடாமல் அவன் கைக்கு கிடைத்த அவளின் கூந்தலை முரட்டுத்தனமாக பற்றிக் கொண்டு முன்னேறினான் முரடனாய்.

பெண்ணாய் பிறந்தால் இது தான் விதி போலும்!

அவன் செல்லும் இடம் கட்டில் என்பதை அறிந்து கொண்ட பிரியம்வதா, முன்னதை விட பலமாக போராட, எல்லாம் வீணென்று ஆனது அவன் அசுரப் பலத்திற்கு முன்.

இயல்பாகவே அவன் பலம் அத்தகையதா, இல்லை கண்மண் தெரியாத கோபம் அவனை பலப்படுத்தி இருக்கிறதா என்பது அவனை படைத்த ஆண்டவனிற்கே வெளிச்சம்!

கிட்டத்தட்ட ஐந்து நிமிட போராட்டத்திலேயே முக்கால்வாசி சக்தியை இழந்திருந்தாள் பிரியம்வதா. இரு நாட்களாக சாப்பிடாத உடலில் எத்தனை சக்தி இருந்துவிட போகிறது.

அவளின் உடல் மெல்ல தளர, மனமோ வேகமாக அடித்துக் கொண்டது.

கணவனிடம் சொல்லாமல் தனியாக கிளம்பி வந்தது, எத்தனை பெரிய ஆபத்தை விளைவித்திருக்கிறது என்பதை நன்கு உணர்த்தியது விதி, யஷ்வந்த்தின் மூலம்!

இப்போது உணர்ந்து என்ன பயன்?

வாழ்வின் இறுதி நிமிடங்களில், அவர்கள் செய்த தவறுகள் எல்லாம் நினைவினில் வந்து போகுமாம். அந்த தருணம் தான் இதுவோ என்ற எண்ணத்திற்கு வந்து விட்டாள் பிரியம்வதா.

அவளால் சுத்தமாக முடியவில்லை. அந்த அரக்கனை தாண்டி சிறு கையசைவை கூட அவளால் நிகழ்த்த முடியவில்லை. தளர்ந்தாள்… அது அவனிற்கு வசதியாக போயிற்று. ஒரே இழுப்பில் அவளை கட்டிலில் கிடத்தினான்.

ஆடைகள் நெகிழ்ந்து, வெளியே தெரிந்த பாகங்கள் சற்று முன்னர் நடந்த போராட்டத்தின் பரிசாக செந்நிற திரவத்தை பூசியிருக்க, அதை திருப்தியாக பார்த்தவனோ, “இதோ என்னை எதிர்த்தவங்களுக்கான தண்டனை. உன் தண்டனை காலம் முடிஞ்சு, உன் உடலை அவனுங்க பார்க்கும்போது, இனி என்னை எதிர்க்க எவனுக்கும் துணிவு இருக்காது.” என்று இடியென சிரித்தவன், அவனைக் காண பயந்து கண்களை மூடி, கைகளையும் கால்களையும் மடக்கி மனம் மறித்து போய் கிடந்தவளை நெருங்கினான்.

புராணத்தில் தான் பெண்ணின் மானம் காக்க கடவுள் உதவுவார் போல!

தொடரும்…

13 thoughts on “வஞ்சிப்பதோரும் பேரவா! – 21”

  1. Avatar
    Shanmugasree sudhakar

    Yenda ipdi. Entha kadavul vanthu kapathuvaru vathu va. Adei police karanugala yarum antha dash ah follow senju varalaiyada.

  2. Avatar

    புராணங்களில் தான் கடவுள் வருவார் … இந்த நடப்பு உலகத்தில் நல்லவர்களுக்கு இடமில்லை

  3. Priyarajan

    Kasapana unmai aabathu ngum pothu pakathula irupavangale help panrathu illa… Kadavul enga irunthu varuvaru… Let’s see vathuva kapatha yar varanganu pakalam👌👌👌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *