அத்தியாயம் 25
யஷ்வந்த்தை போதுமான வகையில் வெறுப்பேற்றி விட்டு, அதன் மூலம் தன் கோபத்தின் ஒரு பகுதியை ஆற்றிக் கொண்ட ஹர்ஷவர்தன் நேரே பிரியம்வதாவை சேர்த்திருந்த மருத்துவமனைக்கு தான் சென்றான்.
அங்கு அவளிற்கான சிகிச்சை இன்னமும் நடந்து கொண்டு தான் இருந்தது. அபிஜித் மருத்துவரிடம் பிரியம்வதாவின் தற்போதைய நிலை பற்றி வினவ, அவர் என்ன கூறப் போகிறாரோ என்று உயிரை கையில் பிடித்தபடி நின்றிருந்தான் ஹர்ஷவர்தன்.
“பேஷண்ட் டேஞ்சர் சோனை தாண்டிட்டாங்கன்னாலும், அவங்க உடம்பு முழுக்க நிறைய இஞ்சுரிஸ் இருக்கு. அதுல இருந்து ரெக்கவராக குறைஞ்சது மூணுல இருந்து ஆறு மாசம் ஆகலாம். ஸ்கேன் பண்ணி பார்த்ததுல ஃபிரேக்சர்ஸ் எதுவும் இல்லங்கிறது கொஞ்சம் ஆறுதலான விஷயம்!” என்றார் அந்த மருத்துவர்.
அருகில் மொத்த கவலையையும் குத்தகைக்கு எடுத்ததை போல நிற்கும் ஹர்ஷவர்தனை ஒரு பார்வை பார்த்த அபிஜித் தயங்கியபடியே அந்த மருத்துவரிடம், “வாஸ் ஷீ செக்ஸுவலி அப்யூஸ்ட்?” என்று வினவ, “நோ. ஆனா, ரொம்ப வயலண்ட்டா ஹேண்டில் பண்ணியிருக்கான். அவங்க மணிக்கட்டே கன்றி சிவந்து போயிருக்கு.” என்றார் அவர்.
அதைக் கேட்ட ஹர்ஷவர்தனோ, தன்னவள் பட்ட வேதனைகளை, அதற்கு காரணமானவனும் அனுபவிக்க வேண்டும் என்று அந்நிமிடமே முடிவெடித்து விட்டான்.
“இப்போ நான் அவளை பார்க்கலாமா டாக்டர்?” என்று ஹர்ஷவர்தன் உள்ளே சென்று விட்ட குரலில் கேட்க, முதலில், “அவங்க கான்ஷியஸ்ல இல்ல.” என்று சொல்ல வந்த அந்த மருத்துவர் அவன் முகத்தை பார்த்து என்ன நினைத்தாரோ, “அவங்களை டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துட்டு வாங்க.” என்றார்.
அந்த அறைக்குள் நுழைந்ததிலிருந்து பிரியம்வதாவை விட்டு விழிகளை நகர்த்த வில்லை ஹர்ஷவர்தன். அவர்களின் திருமணம் முடிந்த இத்தனை நாட்களையும் கணக்கு வைத்தால் கூட, அவன் அவளை இத்தனை நிமிடங்கள் சேர்த்து வைத்து பார்த்ததில்லை எனலாம்.
மெல்ல அவளருகே சென்றவன், அவளை தீண்டினால் கூட அவளிற்கு வலிக்குமோ என்று எண்ணியவனாக, அவளருகே குனிந்து, காயப்பட்ட அவள் கரத்தின் மீது பட்டும் படாமலும் தன் கரத்தை வைத்தவன், “சாரி வது… உன்னை எவ்ளோ பெரிய ஆபத்துல சிக்க வச்சுட்டேன்ல! ஐ’ம் வெரி சாரி… இந்த ‘சாரி’, உன் வலியை குறைக்காதுன்னு தெரியும். ஆனா, அதை தவிர என்னால இப்போ எதுவுமே செய்ய முடியாதே.” என்று கூறும்போதே கண்ணீர் அவன் கன்னத்தை நனைக்க ஆரம்பித்தது.
“நீ முழிச்சுருந்தா, இதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியுமான்னு தெரியல. நீ சொல்ல விடுவியான்னும் தெரியல. அதுக்கு உன்மேல தப்பு சொல்ல மாட்டேன். ஏன்னா, இங்க தப்பு என்மேல தான்! உன்னை கோபப்படுத்தினதுல இருந்து, நீ தனியா போனதும் உடனே தேடாம லூசுத்தனமா நான் கோபப்பட்டது வரை, எல்லாமே என் தப்பு தான். அதுக்கு என் கூட இருந்து என்ன தண்டனை வேணும்னாலும் குடும்மா. திரும்ப இன்னொரு முறை தனியா விட்டுட்டு போயிடாத.” என்று கிட்டத்தட்ட கெஞ்சினான் ஹர்ஷவர்தன்.
அவன் அடுத்து பேசுவதற்குள், பிரியம்வதாவை கவனித்துக் கொள்ளும் செவிலியர் வந்து, “சார், டைம்மாச்சு…” என்று கூற, ஹர்ஷவர்தனோ நிதானமாக அவன் மனைவியை ஏறிட்டு பார்த்தபடி அங்கிருந்து வெளியேறினான்.
பிரியம்வதா இருந்த அறையிலிருந்து முகத்தை துடைத்தபடி வெளியே வந்த ஹர்ஷவர்தனை வரவேற்றது, பிரஜனின் அடி தான்!
கன்னமே சிவந்து போகும் அளவிற்கு நண்பனை அடித்த பிரஜனை அபிஜித் தான் தடுத்து நிறுத்தினான். ஆனால், அவன் பேச்சை யாரும் தடுக்க வில்லை.
“பைத்தியமா டா நீ! உன்னை ஏமாத்தி விட்டுட்டு போன எவளோ ஒருத்திக்காக, உன்னையே நினைச்சுட்டு இருந்தவளை, விட்டுட்டேல! ச்சீ, எத்தனை முறை சொன்னேன்… ஒரு முறையாவது, என்ன சொல்றோம், எதுக்கு சொல்றோம்னு யோசிச்சு பார்த்துருக்கியா? அது எப்படி? உனக்கு நீ பண்ற எல்லாமே சரியா தான தெரியும்.” என்று கோபத்தில் கத்திக் கொண்டிருந்தான் பிரஜன்.
அவனை தடுக்க முடியாமல் அபிஜித் ஒருபுறம் தடுமாற, அவன் சொல்வதெல்லாம் சரி என்பதால் எதுவும் பேசாமல் அமைதியாக அவன் திட்டுக்களை எல்லாம் வாங்கிக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்.
உள்ளே இருந்த செவிலியர் வந்து சத்தமிட்ட பின்னர் தான் மௌனமானான் பிரஜன். அப்போதும் ஹர்ஷவர்தனை முறைத்தபடி இருக்க, “விடேன் டா, அதான் வந்ததும் அடிச்சு, திட்டியாச்சு… இப்பவும் ஏன் முறைச்சுட்டு இருக்க?” என்று அபிஜித் கேட்க, “பின்ன கொஞ்ச சொல்றியா? இவ்ளோ நடந்தும், முன்னாடியே சொல்றதுக்கு என்ன இவனுக்கு? இதுல, அவளை கடத்தி இருக்காங்கன்னே, யாரோ சொல்லி தான் சாருக்கு தெரிஞ்சுருக்கு!” என்று கோபம் தாளாமல் மெல்லிய குரலில் பொரிந்து கொண்டிருந்தான் பிரஜன்.
அத்தனை நேரம் வாயே திறக்காத ஹர்ஷவர்தனோ, “ஹ்ம்ம், ஒர்ஸ்ட் ஹஸ்பண்ட்ல நான்! எல்லாத்துலயும் பெஸ்ட்டா இருக்கணும்னு நினைச்சு, இப்போ என் வாழ்க்கைல ரொம்ப ஒர்ஸ்ட்டா இருந்துருக்கேன்.” என்று புலம்ப, “இப்போ நீயும் ஏன் ஆரம்பிக்குற?” என்றான் அபிஜித்.
“பிரஜன் சொன்னதுல என்ன தப்பு அபி? ஒய்ஃப் எங்கன்னு தெரியாம, தெரிஞ்சுக்க கூட முயற்சி பண்ணாம இருந்த நானெல்லாம் என்ன ஹஸ்பண்ட்?” என்றவனின் கண்கள் கலங்கி விட, “அவளை இப்படி பார்க்க முடியல டா. கை, கால்னு… ப்ச்… அவ இப்போ அனுபவிக்குற வலி எல்லாம் என்னால தான? நான் மட்டும் கொஞ்சம் யோசிச்சுருந்தா, இதெல்லாம் நடந்துருக்காது தான?” என்று அழுதான் ஹர்ஷவர்தன்.
அத்தனை நேரம் அவன் மீது கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த பிரஜனிற்கு நண்பனின் அழுகையை காண முடியவில்லை.
“விடு டா, நடக்கணும்னு இருந்தது நடந்துடுச்சு. இனிமே, இப்படி எதுவும் நடக்காம பார்த்துக்கோ.” என்று ஹர்ஷவர்தனின் தோளை தட்டிக் கொடுத்தான் பிரஜன்.
இது தானே நட்பு! தப்பு செய்தால் தட்டிக் கொடுப்பதும், துன்பம் வரும் வேளையில் தாங்கிக் கொள்வதும்!
பின்னர், அபிஜித்திடம் நடந்தவற்றை கேட்டு அறிந்து கொண்ட பிரஜன், “அந்த நாயை எல்லாம் பார்த்ததும் போட்டு தள்ளாம, இன்னும் எதுக்கு காவல் காத்துட்டு இருக்கீங்க?” என்று வினவ, “இல்ல பிரஜன், அப்படி செஞ்சா, இவனை பத்தின விஷயம் எதுவும் வெளியுலகத்துக்கு தெரியாம போயிடும். இவனால பாதிக்கப்பட்ட எத்தனையோ பேருக்கு நியாயமும் கிடைக்காது. அதுக்காகவாவது, இந்த வழக்கை சட்டப்படி கொண்டு போகணும். அப்போ தான், இவனை மாதிரி இருக்க மத்தவங்களுக்கு பயம் வரும்.” என்றான் அபிஜித்.
“க்கும், சட்டப்படி தண்டனை கிடைச்சுடுமா? அப்படின்னாலும், இன்னும் எத்தனை வருஷம் இந்த வழக்கை ஜவ்வா இழுப்பானுங்களோ!” என்று பிரஜன் சலிக்க, “வழக்கு மட்டும் தான் சட்டப்படி போறது. அவனுக்கு தண்டனை என் கையால தான்.” என்றான் ஹர்ஷவர்தன் தீர்மானமாக!
“எப்பா ராசா, இப்போ தான் உன் பொண்டாட்டியை காப்பாத்திருக்க ஞாபகம் இருக்கா? திரும்ப அதுக்குள்ள போகாத.” என்று பிரஜன் எச்சரிக்க, “வது மேல கை வச்சவனை சும்மா விட சொல்றியா? இப்படி தனக்கு பிரச்சனை வரக்கூடாதுன்னு ஒவ்வொருத்தரும் விட்டதால தான் இவ்ளோ பெருசா வளர்ந்து நிக்கிறான். நான் இதுக்கு முன்னாடி செஞ்ச தப்பு, தகுந்த பாதுகாப்பை எனக்கும், என்னை சேர்ந்தவங்களுக்கும் ஏற்படுத்தாம, எந்த திட்டமும் இல்லாம செயல்பட்டது தான். அவனை எதிர்த்தது இல்ல!” என்றான் ஹர்ஷவர்தன்.
அவனின் தெளிவை பார்த்த பிரஜனே வியந்து தான் போனான்.
“ஹப்பாடா, ரெண்டு வருஷமா காணாம போன என் ஹர்ஷா திரும்ப கிடைச்சுட்டான். இதுக்காக மட்டும் வேணும்னா அந்த நாய்க்கு தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்.” என்று நண்பனை அணைத்துக் கொள்ள, அங்கு இதமான சூழல் நிலவியது.
பின்னர் பிரஜனிடம், “வதுவை பத்திரமா பார்த்துக்கோ டா. எல்லாத்தையும் முடிச்சுட்டு தான், இனி அவளை பார்ப்பேன். அதுவரை என்னை கேட்டா… ‘அவளுக்கான’ நியாயத்துக்காக போயிருக்கேன் சொல்லு.” என்றான் ஹர்ஷவர்தன்.
அவனை அனுப்பி வைத்த பிரஜனிற்கு தெரியவில்லை, மீண்டும் அவனே நண்பனை அழைக்கப் போவது!
*****
அபிஜித்தும் ஹர்ஷவர்தனும் மருத்துவமனை வாசலை அடையும் சமயம் கவினிடமிருந்து ஹர்ஷவர்தனிற்கு அழைப்பு வந்தது.
அதில், கவின் மூச்சு வாங்கியபடி பேச முற்பட, அவன் எங்கோ ஓடிக் கொண்டிருப்பது தெளிவாக கேட்டது ஹர்ஷவர்தனிற்கு.
கவினின் பரபரப்பு ஹர்ஷவர்தனிற்கும் தொற்றிக் கொள்ள, “கவின், என்னாச்சு?” என்று வினவ, “சா…ர் நான்… மாட்டி…க்கிட்டேன்…” என்றான் கவின்.
“ஹலோ கவின், தெளிவா சொல்லுங்க. இப்போ நீங்க எங்க இருக்கீங்க?” என்று ஹர்ஷவர்தன் வினவும்போதே, வாகனத்தை துரிதப்படுத்தினான் அபிஜித்.
கவின் அவனிருக்கும் இடத்தை கூற, “ஸ்டே சேஃப் கவின். நாங்க இன்னும் பத்து நிமிஷத்துல அங்க ரீச்சாகிடுவோம்!” என்ற ஹர்ஷவர்தனிடம், “சார், பயமா இருக்கு சார்… நான் இல்லாம என் குடும்பம்…” என்று கவின் அழுதபடி கூறினான்.
கவினின் அழுகை ஹர்ஷவர்தனை உலுக்கியது. தான் தேவையில்லாமல் அவனை இதில் இழுத்து விட்டோமோ என்று ஒருநொடி நினைக்க, மறுநொடியே அந்த நினைப்பை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, “கவின், நல்லா கேளுங்க… இதுக்குள்ள நீங்க வரதுக்கு நான் தான் காரணம். உங்க பாதுகாப்புக்கும் நான் தான் பொறுப்பு! அவ்ளோ சீக்கிரம் விட்டுட மாட்டேன்…” என்றவன், அபிஜித்தை திரும்பி பார்த்து, “விட்டுட மாட்டோம்! கொஞ்ச நேரத்துக்கு மட்டும் பாதுகாப்பா இருங்க.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, துப்பாக்கி சத்தம் கேட்டது. அத்துடன் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
அபிஜித்தோ காவலர்களிற்கு தகவல் கூறி, அருகிலிருப்பவர்களை விரைந்து அங்கு செல்லுமாறு கட்டளையிட்டவன், வெளிறி இருந்த ஹர்ஷவர்தனின் முகம் பார்த்து, என்னவென்று கேட்டான்.
“கன் ஷாட் சத்தம் கேட்டது அபி.” என்று ஹர்ஷவர்தன் கூற, “ரிலாக்ஸ் ஹர்ஷா, கவினுக்கு ஒன்னுமாகி இருக்காது.” என்று கூறினாலும் அபிஜித்திற்கும் மனது பதறியது.
அதே பதற்றத்துடன் கவின் சொன்ன இடத்தை அடைந்தான். ஆளரவமற்ற இடத்திலிருந்த கைவிடப்பட்ட குடவுன் அது. அதற்கு வெளியே நின்றிருந்த இரண்டு காவலர்களை சமீபித்த அபிஜித், அவர்களிடம் தகவல்களை சேகரித்தான் அபிஜித்.
“சார், உள்ள நாலு பேர் இருக்கானுங்க. ஒருமுறை துப்பாக்கி சத்தம் கேட்டுச்சு. அதுக்கப்பறம் எந்த சத்தமும் இல்ல. ரெண்டு பேர் மட்டும் இருந்ததால, உள்ள போகாம இன்னும் போலீஸ் ஃபோர்ஸ் அனுப்ப சொல்லிருந்தோம். உள்ள இருக்கவனுங்களுக்கு நம்ம வந்துட்டோம்னு தெரிஞ்சு தான் அமைதியா இருக்கானுங்க போல சார்.” என்றார் ஒரு காவலர்.
“ஹ்ம்ம், வெளிய போறதுக்கு வேற வழி ஏதாவது இருக்கான்னு செக் பண்ணீங்களா?” என்று கேட்டு உறுதிபடுத்திக் கொள்ளும் நேரத்திலேயே, மற்ற ஆட்களும் வந்துவிட, துப்பாக்கி ஏந்தியபடி உள்ளே சென்றனர் காவல் படையினர், அவர்களிற்கு தலைமை தாங்கி அபிஜித் முன்னே சென்றவன், வெளியே காவலிற்கென்று ஹர்ஷவர்தனை விட்டுச் சென்றான்.
அபிஜித் உள்ளே சென்ற இரண்டாம் நிமிடம், துப்பாக்கி சுடும் சத்தம் மூன்று முறை கேட்டு அடங்க, அதில் பதறிய ஹர்ஷவர்தன் வேகமாக உள்ளே சென்றான்.
அங்கு ஒரு காவலருக்கு காலில் அடிபட்டு இருக்க, மற்றவர்கள் குற்றவாளிகளை சுற்றி வளைத்திருந்தனர். அவர்களில் ஒருவன் கைலாஷ்.
ஹர்ஷவர்தனின் விழிகள் நொடியினில் அனைத்தையும் ஆராய்ந்தவன், கவினை தேட, ஒரு மூலையில் மயங்க போகும் நிலையில் இருந்தான் அவன். அவனை சோதித்துக் கொண்டிருந்தான் அபிஜித்.
“அபி, கவினுக்கு என்னாச்சு?” என்று ஹர்ஷவர்தன் வினவ, “காயம் எதுவுமில்ல ஹர்ஷா. ஒன்னு சோர்வுனால மயக்கம் வந்துருக்கணும், இல்லன்னா இவனுங்க ஏதாவது போதை மருந்தை ஏத்தியிருக்கணும்.” என்றான் அபிஜித்.
கவின் மயங்க இருக்கும் கடைசி நிமிடம், “சார்… அவன் ரொம்ப மோசமானவன்… நம்ம நினைச்சதை விட…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “கவின், நீங்க முதல்ல ரெஸ்ட் எடுங்க. அப்பறம் அவனை பார்க்கலாம்.” என்று கவினை சில காவலர்களுடன் மருத்துவமனை அனுப்பி வைத்தான் அபிஜித்.
கவின் என்ன கூற வந்தான் என்ற யோசனையில் இருந்த ஹர்ஷவர்தனை தடுத்தது கைலாஷின் குரல்.
“நீங்க ஜெய்ச்சுட்டதா நினைப்பா?” என்று மாட்டிய போதும் இறுமாப்பாகவே கேட்டான் கைலாஷ். எல்லாம் யஷ்வந்த் கொடுத்த தைரியமோ என்னவோ!
அவன் குரல் கேட்டதும் விரைந்து அவனை நோக்கி சென்ற ஹர்ஷவர்தனோ, அவனை சப்பென்று அறைந்தவன், “உன்னை மறுபடி பார்க்கவே கூடாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்போ நீயே கண்ணு முன்னாடி வந்து நிக்கிற.” என்றவன், கீழே விழுந்திருந்தவனை மிதிக்க, “போதும் ஹர்ஷா, ஸ்டேஷன் கூட்டிட்டு போகணும்.” என்று தடுத்தான் அபிஜித்.
“நீயெல்லாம் ஒரு அண்ணனா? தங்கச்சி இறப்புக்கு காரணமானவன் கிட்ட பணத்தை வாங்கி, கேஸை வாபஸ் வாங்க வச்சுருக்க. இதுல, எங்க கிட்டயே நியாயம் வாங்க போறேன்னு சொல்லி வேவு பார்க்க வந்துருக்க… ராஸ்கல்!” என்ற ஹர்ஷவர்தன் மீண்டும் கைலாஷை அடிக்க செல்ல, “ஆமா, பணத்துக்காக தான் அப்படி செஞ்சேன். தங்கச்சி… தங்கச்சி… என்ன பெரிய தங்கச்சி? ஒழுக்கமா வீட்டுல இருக்காம, டேட்டிங் லவ்னு சுத்துனா, இப்படி தான் எவனாவது வந்து ஏமாத்துவான். சரி அதான் செத்துட்டாள… இப்போ அவனுங்களை எதிர்த்து ஏதாவது பு*ங்க முடியுமா? இல்ல தான? அதான் சந்தர்பத்தை யூஸ் பண்ணிக்கிட்டேன். இதுல என்ன தப்பு? இந்த காலத்துல பணம் இல்லாம ஏதாவது செய்ய முடியுமா?” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, அபிஜித்தை மீறி அவனை வாயிலேயே மிதித்திருந்தான் ஹர்ஷவர்தன்.
அபிஜித்தும் அதற்கு மேல் ஹர்ஷவர்தனை தடுக்கவில்லை.
“இடியட்! நீயெல்லாம் அண்ணனா இல்ல, மனுஷனாவே இருக்க தகுதி இல்ல. சுயநல பிசாசு. உயிரோட இருந்தா, இன்னும் யாரை எல்லாம் வித்து காசு பார்ப்பியோ!” என்று கேட்டபடி கைலாஷை, அவன் சோர்வடையும் வரை அடித்து தள்ளினான் ஹர்ஷவர்தன்.
பின், மீண்டும் இடைவெட்டிய அபிஜித், “ஹர்ஷா, அவனும் சஸ்பெக்ட்… உயிரோட வேணும். எல்லாரையும் காயத்தோட கோர்ட்ல நிறுத்த முடியாது.” என்று கூறியதும் தான் கைலாஷை விட்டான்.
அப்போதும் அடங்காத கைலாஷ், “போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போறீங்களா? எத்தனை நாள் என்னை அங்க வச்சுருக்க முடியும்? அதுவும் அந்த வீணாப்போன பி.ஏவை கடத்துனேன்னா?” என்று எகத்தாளமாக பேச, “நீ சொன்ன அதே வீணாப்போனவனால தான், நீ யாருன்னு தெரிஞ்சுது. அப்பறம், உன்னை யாராவது வந்து காப்பாத்துவாங்கன்னு கனவு காணாத… நீ யாரை நம்புறியோ, அவனே உள்ள தான் இருக்கான்.” என்ற அபிஜித், கைலாஷின் கரங்களில் விலங்கை பூட்டினான்.
அப்போது ஹர்ஷவர்தனின் அலைபேசிக்கு பிரஜனிடமிருந்து அழைப்பு வந்தது. பிரியம்வதா நிலை பற்றிய பதற்றத்துடனே அதை ஏற்றான் ஹர்ஷவர்தன்.
“ஹலோ பிரஜன், வது… வது முழிச்சுட்டாளா?’ என்று ஹர்ஷவர்தன் வினவ, “ஹர்ஷா, நீ உடனே இங்க வா.” என்றான் பிரஜன்.
நண்பனின் குரலிலிருந்த பதற்றம் ஹர்ஷவர்தனை தடுமாற செய்ய, “என்னடா ஆச்சு? வதுக்கு என்ன? ஏதாவது சொல்லி தொலையேன்.” என்றவாறே வாகனத்தை நோக்கி ஓடினான்.
“வதுக்கு ஒன்னுமில்ல டா. ஆனா… நீ இங்க வா.” என்று பிரஜன் தயங்க, அவனை திட்டிக் கொண்டே மருத்துவமனைக்கு வாகனத்தை விரட்டினான். காவல் நிலையம் செல்ல எத்தனித்த அபிஜித்தும், ஹர்ஷவர்தனின் பயந்த முகத்தை கண்டு, அவனுடன் மருத்துவமனைக்கு சென்றான்.
அங்கு ஹர்ஷவர்தனிற்கான அடுத்தக்கட்ட அதிர்ச்சியாக மௌனிகாவை பற்றிய தகவல் கிடைத்தது, அதுவும் பிரியம்வதாவிடம் இருந்து!
தொடரும்…
Very thrilling. …
Tq so much sis 😍😍😍
Suspect yaarunnu therinjum avana sikka vaikkursthula yevlo sikkal…kedi appdi vela paaththurukkaan…entha mind ah positive ah use pannirukkalaam…good going ma 👍👍👍
Unmai dhan sis… Indha generation pasanga ellaarum intelligent ah dhan irukanga… Aana adha nallatha seiyya use panna matinguranga… Adhan prechanaiye 😷😷😷
Tq so much sis 😍😍😍
harshavum abi yum sernthu ivlo kandu pidichitanga but apovum ethum pana mudilaye ivanungala vathu avala pathi ena solla pora therila . twist mela twist ah iruke . very interesting
Aama sis culprit namma kannuku munnadiye dhan irupan aana avana onum panna mudiyuradhu ila… Adhan ipo reality 😕😕😕 Tq so much sis 😍😍😍