அத்தியாயம் 27
பிரியம்வதா கூற வந்ததை முழுதாக கூட கேட்க முடியாமல் கழிப்பறை நோக்கி ஓடினான் ஹர்ஷவர்தன். எத்தனையோ வழக்குகளை சந்தித்த அபிஜித்தால் கூட, யஷ்வந்த் இழைத்திருக்கும் கொடுமைகளை இரண்டாம் முறையாகினும் சாதாரணமாக கேட்க முடியவில்லை.
“சைக்கோ பேய்! செத்தா கூட நிம்மதியா சாக விடமாட்டான் போல! மிருகங்க கூட பசிக்கு தான் மத்த ஜீவன்களை சாப்பிடும். இவனுக்கு எல்லாம் என்ன தேவைன்னு இப்படி இருக்கான்?” என்று பிரஜன் தான் முதலில் வாயை திறந்தான்.
“ஹ்ம்ம், நார்த் சைட்ல ஒருத்தனை மூளை இல்லன்னு திட்டுனதுக்கு, அவன் யாரெல்லாம் இண்டெலிஜெண்ட்னு நினைக்குறானோ அவங்களை கொலை செஞ்சு மூளையை சூப் வச்சு குடிச்சானாம். நாகரிகம் வளர வளர மனுஷன் பைத்தியமாகிடுவான் போல.” என்று சலித்துக் கொண்டான் அபிஜித்.
“அண்ணா, ஹர்ஷாவை போய் பாருங்க.” என்று பிரஜனிற்கு பிரியம்வதா நினைவு படுத்த, கழிப்பறை நோக்கி சென்றான் பிரஜன்.
வெளியே தன்னைத்தானே சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்த ஹர்ஷவர்தனை சமீபித்தான் பிரஜன்.
நண்பனை கண்டதும் அவனிடம் ஆறுதல் தேடிய ஹர்ஷவர்தனோ, “இவனெல்லாம் என்ன ஜென்மம் டா? ஈவு இரக்கம்னு கொஞ்சம் கூட இல்லாம, மனுஷத் தன்மையை முழுசா தொலைச்சுட்டு… ச்சை! முதல்ல, மௌனிகாவோட அந்தரங்க வீடியோவை அந்த வக்கிரம் பிடிச்ச வெப்சைட்ல போட்டான். அடுத்து, அவளை கடத்தி, நான் தான் கடத்துனேன்னு நாடகமாடுனான். இப்போ… அவளை கொலை செஞ்சதோட மட்டுமில்லாம… ச்சீ, சொல்லவே அருவருப்பா இருக்கு… இவ்ளோ பெரிய சைக்கோவா இருப்பான்னு நான் நினைச்சே பார்க்கல.” என்று ஹர்ஷவர்தன் புலம்ப, “உண்மையை சொல்லணும்னா, முதல்ல, மௌனிகா மேல இருந்த கோபத்துல, இந்த மாதிரி ஒருத்தன் தான் அவளுக்கு சரின்னு நினைச்சேன். ஆனா, இவனை பத்தி ஒவ்வொரு விஷயமா தெரிய வரும்போது, அவளை நினைச்சு பாவமா தான் இருக்கு.” என்று பிரஜனும் வருத்தம் கொண்டான்.
சில நிமிடங்கள் அப்படியே கழிய, “இப்படியே ஃபீல் பண்ணிட்டு இருந்தா எதுவும் நடக்கப் போறது இல்ல. அடுத்து என்னன்னு யோசிக்கணும் ஹர்ஷா. இவனை மாதிரி ஒரு ஜென்மம் எல்லாம் உயிரோடவே இருக்கக் கூடாது.” என்று பேசியவாறே ஹர்ஷவர்தனை பிரியம்வதா இருந்த அறைக்கு அழைத்து வந்தான் பிரஜன்.
உள்ளே நுழைந்ததும் பிரியம்வதாவின் அருகே வந்த ஹர்ஷவர்தன், “இப்படி ஒரு சைக்கோ கிட்ட உன்னை தொலைச்சுருக்கேன்னு இப்போ நினைச்சாலும் படபடன்னு இருக்கு வது. ஐ’ம் ரியலி சாரி!” என்று உணர்வுபூர்வமாக மன்னிப்பு கேட்க, அவன் கரத்தை ஆறுதலாக தட்டிக் கொடுத்தவளோ, “போனது போகட்டும் ஹர்ஷா. அவனை என்ன செய்யுறதுன்னு பாருங்க. இது என் அக்காக்காக மட்டும் கேட்கல, அவனால தெரிஞ்சோ, தெரியாமலயோ பாதிக்கப்பட்ட எத்தனையோ பேருக்காக!” என்றாள்.
ஹர்ஷவர்தன் அபிஜித்தை அர்த்தத்துடன் பார்த்துவிட்டு, “நீ ரெஸ்ட் எடு வது. பிரஜன் உனக்கு துணையா இருப்பான். அந்த நாயை அழிக்குறது தான் இப்போதைக்கு என்னோட வேலை.” என்று அவளிற்கு ஆயிரம் பத்திரங்கள் கூறிவிட்டு, பிரஜனிடமும் சொல்லிக் கொண்டு யஷ்வந்த்தை பார்க்க கிளம்பினான் அபிஜித்துடன்.
*****
காவல் நிலையத்தில் இருந்த ஹரிஹரனிற்கு இன்னமும் கோபம் அடங்கவில்லை. அவன் மனைவியை உடலளவிலும் மனதளவிலும் நோகடிக்க திட்டம் தீட்டியவனை கண்முன் வைத்துக் கொண்டு இயல்பாக இருக்க முடியுமா என்ன? அதுவும் ஹரிஹரனால்?!
மேலும், தற்போது தமிழ்நாட்டிலிருந்து வந்த தகவலும் அவன் கோபத்தை அதிகரித்திருந்தது. அங்கு ஒரே நாளில் இருவேறு இடங்களில் ஒரே மாதிரி நிகழ்ந்துள்ள கொலை வழக்குகளை விசாரித்த போது, இறந்த இரு பெண்களில் ஒருத்தி, பள்ளியில் படித்த போதே, ‘ஃபேன்டஸி நைட்ஸ்’ இணையதளத்தில், அவளாகவே முன்வந்து அவளின் ‘ஸ்டரிப்பிங்’ காணொளிகளை நேரலையாக பதிவிட்டதாகவும், அப்பெண்ணின் கொலையில் யஷ்வந்த்திற்கு சம்பந்தம் இருக்கலாமோ என்ற சந்தேகம் இருப்பதாகவும் தகவல் வந்திருந்தது.
‘ச்சே, இவனுங்க தான் இப்படி இருக்கானுங்கன்னா, மக்கள் அதை விட மோசமா இருக்காங்க!’ என்று யோசித்துக் கொண்டிருந்த போது தான், அபிஜித் அழைத்து பிரியம்வதா கூறியவை அனைத்தையும் பகிர்ந்து, தாங்கள் அங்கு வருவதாகவும் கூறி விட்டு அழைப்பை துண்டித்தான்.
கேள்விப்பட்ட தகவல்கள் அதிர்ச்சியை தந்தாலும், விரைவாக செயல்பட வேண்டும் என்பதால், பிரியம்வதா கூறியவற்றை புகாராக மாற்றி, அதற்கான ஆவணங்களை தயார் செய்ய ஆரம்பித்தான்.
யஷ்வந்த்தோ சற்று முன்னர் அவனின் வழக்கறிஞருடனான சந்திப்பை எண்ணிப் பார்த்து, தீவிர யோசனையில் இருந்தான்.
சற்று முன்னர் வந்த அவனின் வழக்கறிஞரோ, ஆணையர் மகள் விஷயத்தில் கைதான அந்த நால்வரின் பெற்றோரும், யஷ்வந்த் தான் அதற்கு காரணம் என்று அவன் மீது கோபமாக உள்ளதாக கூறி, “இப்போதைக்கு நீங்க ஜெயில்ல இருக்குறது தான் சேஃப் சார்.” என்றிருந்தார்.
“இடியட்! இதை சொல்ல தான் உன்னை பெர்சனல் லாயரா வச்சுருக்கேனா? அந்த நாலு பேரை மறைஞ்சுருக்க சொன்னா, ஊர் சுத்தி மாட்டிக்கிட்டு, இப்போ என்னை குத்தம் சொல்றாங்களா? அந்த நாலு பேரும் உத்தமன்களா இருந்த மாதிரியும், நான் அவனுங்களை கெடுத்த மாதிரியும் அவங்க பேரண்ட்ஸ் வேற ஸீன் போட்டுட்டு இருக்காங்க. இதெல்லாம் கேட்க கேட்க, பத்திக்கிட்டு வருது. எத்தனையோ பேர் கான்டெக்ட்ஸ் இருந்தும், பெயில் எடுக்க கூடவா வக்கில்லாம இருக்கேன்? நீ என்ன பண்ணுவன்னு தெரியாது, நாளைக்கே நான் பெயில்ல வெளிய வரணும். அடுத்த வாரம், ஏதோ ஒரு நாட்டுக்கு நான் சேஃபா போய் சேரணும். எவனை மிரட்டுவியோ எனக்கு தெரியாது.” என்று முதலில் திட்டி, இறுதியில் மிரட்டியிருந்தான் யஷ்வந்த்.
“சார், யாருமே டீலிங்கு வர மாட்டிங்குறாங்க. இதுல, உங்க வெப்சைட் வேற ஹேக் ஆகியிருக்குன்னு நியூஸ் சீக்ரெட்டா பரவிட்டு இருக்கு. ஒரு சிலர், அதுக்கு நீங்க தான் காரணம்னு பேசிட்டு இருக்காங்க. உங்க பி.ஏ தான் அதை பரப்புனதே.” என்று வழக்கறிஞர் கூற, “அந்த ***** தான் எல்லாத்துக்கும் காரணம். ஒன்னும் தெரியாத உதவாக்கரைன்னு நினைச்சு, ஃப்ரீயா விட்டதுக்கு என்ன எல்லாம் பண்ணியிருக்கான் *****! எல்லாம் முடிஞ்சு வெளிய வந்ததும், எல்லாரையும் கவனிச்சுக்குறேன்.” என்று கறுவிய யஷ்வந்த், “அந்த ஹோம் மினிஸ்டர் பையனுக்கு கால் பண்ணி, அவன் வீடியோவை லீக் பண்ணுவேன்னு சொல்லி ஹெல்ப் கேளு. அந்த சென்டிரல் மினிஸ்டர் என்ன ஆனான்?” என்று கேள்விகளை அடுக்க ஆரம்பித்தான் யஷ்வந்த்.
“சார், உங்க வெப்சைட் ஹேக்கிங் பிளானே, ஹோம் மினிஸ்டர் மகனும், அந்த சென்டிரல் மினிஸ்டரும் சேர்ந்து போட்டது தானாம்.” என்று அவர் கூற, “இம்பாசிபில். ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் தெரியாது. அப்பறம் எப்படி இந்த கனெக்ஷன்?” என்று யோசிக்கும் போதே, யஷ்வந்த்தின் மனக்கண்ணில் கவினின் முகம் மின்னி மறைந்தது.
*****
அன்று, கவின் யஷ்வந்த்தின் வீட்டிலிருந்து, அவனை அலுவலகம் அழைத்து சென்று, பிரியம்வதாவை அவனறியாமல் காப்பாற்றிய தினம்…
செல்லும் வழியில் எரிச்சல் மிகுந்த குரலில், “என்னதான் வேணுமாம் அந்த இடியட்டுக்கு. ஹோம் மினிஸ்டர் பையன்னு ஓவரா தான் ஸீன் போடுறான்.” என்று திட்டியவாறே, அவனின் தனிப்பட்ட மடிக்கணினியில் ஏதோ செய்த யஷ்வந்த், மாற்றியமைக்கப்பட்ட காணொளி காட்சியை கவனிடம் காட்டினான்.
அதில், இரு ஆண்கள் ஒன்றாக அந்தரங்கமாக இருப்பது போல பல வீடியோ காட்சிகள் வெட்டி ஒட்டப்பட்டிருந்தது.
“இதை அந்த பா**** கிட்ட காட்டி மிரட்டி நம்ம டீலிங்கு ஒத்துக்க வை.” என்று யஷ்வந்த் கூற, கவினோ பதறியபடி, “நானா சார்? நான் எப்படி…” என்று திணற, “உன்னை பி.ஏவா வச்சுருக்குறது, என் வேலையை குறைக்க தான். இதை கூட செய்யலன்னா, நீயெல்லாம் என்ன பி.ஏ? இருக்க பிரச்சனைல, இந்த சில்லி விஷயத்தை எல்லாம் நான் பார்த்துட்டு இருக்க முடியாது. புரிஞ்சுதா?” என்ற யஷ்வந்த், முதல் முறையாக அந்த தவறை செய்திருந்தான்.
அவனின் தனிப்பட்ட மடிக்கணினியை கவினிடம் கொடுத்திருந்தான்.
பிரியம்வதாவை எதுவும் செய்ய முடியாத கோபம் உண்டாக்கிய தடுமாற்றமா, இல்லை கவினை யஷ்வந்த் பெரிதாக நினைக்கவில்லையோ, காரணம் அவன் மட்டுமே அறிவான்.
ஏற்கனவே பதற்றத்தில் இருந்த கவின், இதை ஹர்ஷவர்தன் மூலம் அபிஜித்திடம் கூறினான்.
“யஷ்வந்த்துக்கு எதிரா ஆதாரமே கிடைச்சாலும், அவனுக்கு இருக்க கனெக்ஷன்ஸ் வச்சு, அதெல்லாம் ஒன்னுமில்லாம ஆக்கிடுவான். முதல்ல அவனோட கனெக்ஷனை உடைக்கணும். அதுக்கு இது தான் சரியான சந்தர்ப்பம் கவின். அவன் அந்த ஹோம் மினிஸ்டர் மகனோட வீடியோஸை காட்டி மிரட்ட தான சொன்னான்? நீங்க அதை அப்படியே ஹோம் மினிஸ்டர் மகன் கிட்ட சொல்லி, அவனோட குட் புக்ஸ்ல இருக்க பாருங்க. சூழ்நிலை சரியா வந்தா, முன்னாடி சொன்ன சென்டிரல் மினிஸ்டரையும் ஹோம் மினிஸ்டர் மகனையும் சேர்த்து விட்டு, யஷ்வந்த்துக்கு எதிரா நிறுத்துவோம். இதுல நீங்க தான் கேர்ஃபுல்லா இருக்கணும். இந்த விஷயம் நம்ம மிஷன் முடியுற வரை வெளிய தெரிஞ்சுடக் கூடாது.” என்று அபிஜித் திட்டம் தீட்டி கொடுக்க, பயம் ஒருபுறம் இருந்தாலும் அபிஜித் கூறியபடியே செயல்பட்டான் கவின்.
இதில், யஷ்வந்த்தின் தனிப்பட்ட கணினியும் கையில் கிடைக்க, அவனிற்கு தெரிந்த கணினி ஊடுருவும் திறனை (ஹேக்கிங்) வைத்து பல தகவல்களை சேகரித்தான் கவின்.
அதில் ஒன்று தான், கைலாஷ் பற்றிய தகவல்!
அதன்பின்னர், மத்திய மந்திரியும், உள்துறை அமைச்சரின் மகனும் சேர்ந்து கொண்டு, யஷ்வந்ததின் பிடியில் இருக்கும் மற்றவர்களிடம் பொய்யாக தகவலை பரப்பி, அவனிற்கு யாரும் உதவி செய்யாமல் பார்த்துக் கொண்டனர்.
இது கூட ஒருவகையில் கவினின் செயல் தான். ஆணையர் மகளின் வழக்கில் யஷ்வந்த்தை காவலர்கள் கண்காணிப்பதாக கூறி, ஒருவேளை அவன் கைது செய்யப்பட்டால், அவனிற்கு உதவி எதுவும் கிடைக்காமல் செய்து விட்டாலே, அவனிடமிருந்து அவர்கள் தப்பிக்கலாம் என்ற தகவலை இருவரிடமும் சமயம் பார்த்து கூறியவன் கவின் தான். உபயம் நம் நாயகர்கள்!
இதோ, அனைத்தும் மூவரின் திட்டப்படி நடக்க, அதன் விளைவு, கைதாகி அரை நாள் முடிந்த போதும், எவ்வித உதவியும் கிட்டாமல் காவல் நிலையத்திலேயே கிடந்தான் யஷ்வந்த்!
பணமும் அதிகாரமும் பெரியது தான். ஆனால், அதனையும் நேரமும் சமயோஜிதமும் கொண்டு தோற்கடிக்கலாம் என்பதை விதி யஷ்வந்த்திற்கு கற்றுக் கொடுத்து கொண்டு இருக்கிறது!
*****
தன் மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டிருந்த யஷ்வந்த்தை யாரோ பலமாக தாக்கினர்.
இம்முறை அடித்தது அபிஜித் தான்!
“ராஸ்கல், என்னவெல்லாம் பண்ணி வச்சுருக்க?” என்று யஷ்வந்த்தை அடிக்க, முதலில் அவன் எதற்கு அடிக்கிறான் என்று புரியாத யஷ்வந்த்திற்கு, சில நொடிகளில் அதன் காரணம் விளங்கி விட, ஆர்ப்பாட்டமான சிரிப்புடன் ஹர்ஷவர்தனை பார்த்தவன், “என்ன உன் பொண்டாட்டி முழிச்சுட்டா போல? உன் எக்ஸை பத்தியும் சொல்லிட்டாளா? நியாயமா பார்த்தா, நீ என்னை சப்போர்ட்ல பண்ணனும்? உன்னை விட பணக்காரனா நான் வந்ததும், உன்னை ஏமாத்திட்டு போனவளை, நானே தண்டிச்சுருக்கேன். சும்மா சொல்லக் கூடாது, ஷீ வாஸ் டேஸ்டி!” என்று அப்போதும் திமிராக பேசிய யஷ்வந்த்தின் வாயிலேயே குத்திய ஹர்ஷவர்தன், “அவளை தண்டிக்க நீ யாரு டா நா**?” என்று மீண்டும் அடித்தான்.
இருவரையும் பிரித்த ஹரிஹரன் கண்களை காட்ட, அங்கு அவர்களை படம்பிடித்து கொண்டிருந்தது சிசிடிவி.
சற்று நிதானத்திற்கு வந்த ஹர்ஷவர்தனையும் அபிஜித்தையும் வெளியே அழைத்து சென்ற ஹரிஹரன், “பிரியம்வதாவை கடத்தி ஹராஸ் பண்ணது, என் ஒய்ஃபை கடத்த முயற்சி பண்ணது, கமிஷனர் பொண்ணு டெத்ல இன்வால்வானதுன்னு இப்போதைக்கு மூணு கேஸ்ல, அவன் மேல ஃப்.ஐ.ஆர் ஃபைல் பண்ணியாச்சு. அநேகமா, இன்னைக்கு மிட்நைட்ல… ஐ மீன் இன்னும் கொஞ்ச நேரத்துல, அந்த நாலு பேரையும் என்கவுன்டர் பண்ண போறதா நியூஸ் வந்துச்சு. அது நடந்தா, அவங்க பேரண்ட்ஸ் யஷ்வந்த்தை அட்டாக் பண்ண சான்ஸ் இருக்கு. அதை வச்சு, பெரிய தலைங்களோட வக்கிர பக்கத்தை வெளிய வராம தடுக்க, கேஸை திசை திருப்பிடுவாங்க. நமக்கு இருக்க ஒரே பிளஸ், எப்படியோ யஷ்வந்த் கைது செய்யப்பட்டிருக்க விஷயமும், அந்த வெப்சைட் பத்தின விஷயமும் ஆல்ரெடி வெளிய கசிஞ்சுடுச்சு. சோ, அந்த பெரிய தலைங்க முந்திக்கிறதுக்குள்ள, யஷ்வந்த் கிட்டயிருந்து, நமக்கு தேவையான விஷயங்களை கறந்து, அதை உடனே, வெளியே லீக் பண்ணனும்.” என்றான்.
“லீக் பண்ணாலும், கொஞ்ச நாள்ல இதை மறந்து வேற விஷயத்துக்கு தாவிடுவாங்க நம்ம மக்கள். என்ன பண்றது, மறதி நம்ம தேசிய வியாதியாகிடுச்சே.” என்று சலித்துக் கொண்ட ஹர்ஷவர்தனிடம், “ஓவர் நைட்ல நம்ம மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது ஹர்ஷா. ஆனா, இது ஒரு தொடக்க புள்ளியா இருக்கட்டும். நூறுல அட்லீஸ்ட் பத்து சதவிகித மக்களுக்காவது இந்த விஷயம் ஒரு அவேர்நெஸை க்ரியேட் பண்ணட்டும்.” என்றான் அபிஜித்.
“எஸ், ஏதோ நம்மளால முடிஞ்சுது.” என்ற ஹரிஹரன், ஹர்ஷவர்தனிடம் திரும்பி, “நாங்க ரெண்டு பேரும் அவனை இன்வெஸ்டிகேட் பண்ண ஆரம்பிக்குறோம். சரியான டைம்மா பார்த்து கவின் கிட்ட அந்த வெப்சைட்ல இருக்க சில தகவல்களை நான் சொல்ற சேனல்களுக்கு லீக் பண்ண சொல்லுங்க. அப்படியே அவருக்கு தெரிஞ்ச, நம்பகமான சோசியல் மீடியா ஆளுங்க இருந்தா, அவங்களுக்கும் லீக் பண்ண சொல்லுங்க. எவ்ளோ வேகமாக பரவுதோ, அவ்ளோ இம்பேக்ட் இருக்கும்.” என்றான்.
அதை ஆமோதித்த ஹர்ஷவர்தனோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சற்று முன்னர் கண் விழித்திருந்த கவினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தான்.
“சார், என்னை விடுங்க. அந்த பாவி… ச்சீ, மனுஷஜென்மமா அவன்? அவனை சும்மா விடக் கூடாது சார். அவன் ஒய்ப்பையே கொலை செஞ்சு… சாப்பிட்டுருக்கான் சார். அதை லைவ்வா வேற, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் டெலிகாஸ்ட் பண்ணி… ச்சை, இவங்க எல்லாம் ஒரு கூட்டம் போல இருக்கானுங்க. மனுஷங்க கறியை சாப்பிட்டு, அதுல சுகம் அனுபவிக்குறாங்க சார். இப்படியே போனா, நாடு நாசமா போகும். அவனை சும்மா விடாதீங்க.” என்று உடல்நிலையையும் மீறி பதறினான் கவின்.
“ரிலாக்ஸ் கவின். இந்த விஷயம் பிரியம்வதா மூலமா எங்களுக்கு தெரிஞ்சுடுச்சு. ஆனா, இவனுங்க ஒரு கல்ட் கும்பல் போல செயல்படுறாங்கங்கிறது புது தகவல்.” என்ற ஹர்ஷவர்தன், “உங்களால முடிஞ்சா ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்று தயக்கத்துடன் வினவினான்.
ஏற்கனவே, தங்களிற்கு உதவி செய்ய போய், அந்த கயவர்களிடம் சிக்கி, அதிர்ஷ்டவசமாக தப்பியவனை மீண்டும் ஆபத்தில் தள்ள தயக்கமாக இருந்தது ஹர்ஷவர்தனிற்கு. கவினின் பாதுகாப்பிற்கு உறுதி அளித்திருந்தானே, அதனால் உண்டான தயக்கம் இது!
“என்ன ஹெல்ப்னு சொல்லுங்க சார். அவனை தடுக்க என்னால முடிஞ்சதை நானும் செய்யுறேன். முன்னாடி தான் கோழையா எதுவும் செய்யல. அந்த குற்றவுணர்வே என்னை இதுவரை துரத்திட்டு இருக்கு. இவ்ளோ தெரிஞ்சதுக்கு அப்பறமும் நான் எதுவும் செய்யலன்னா, நான் மனுஷனா இருக்கவே தகுதி இல்லாதவனாகிடுவேன்.” என்று உணர்வுபூர்வமாக பேசினான் கவின்.
“அந்த வெப்சைட் இப்பவும் உங்க கண்ட்ரோல்ல தான இருக்கு? நாங்க சொல்றப்போ, அந்த வெப்சைட்ல இருக்க சில சென்சிட்டிவ் விஷயங்களை மட்டும், நான் சொல்ற சேனல்களுக்கு லீக் பண்ணனும். இது ரொம்பவே ஆபத்தான விஷயம். அதனால, ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும்.” என்று எச்சரித்தான் ஹர்ஷவர்தன்.
“கண்டிப்பா சார். ஆனா, சென்சிடிவ் விஷயம் அப்படியே டெலிகாஸ்ட் பண்ணா… நல்லா இருக்காதே சார். அதுலயும் இவனுங்க வக்கிரதுக்கு ஒரு அளவே இல்லாமல இருக்கு!” என்று கவின் தயங்க, “சில விஷயங்கள் ஓபனா மக்களை ரீச்சான தான், இது எவ்ளோ பெரிய புதைகுழின்னு அவங்களுக்கு புரியும் கவின். வேணும்னா, ரொம்ப வல்கரா இருக்குறதை பிளர் பண்ணி சென்ட் பண்ணுங்க. மத்தது மக்களோட கைல! இனி, அவங்களை அவங்களே தான் பாதுகாத்துக்கணும்னு அப்பயாவது புரியட்டும்.” என்ற ஹர்ஷவர்தன், கவின் கூறியதை மற்ற இருவரிடமும் கூறினான்.
“இப்போ கண்டதையும் கல்ட்னு ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க. இது ஏதோ ஸ்டைல் சிம்பலாகிடுச்சு. உண்மையை சொல்லனும்னா, யஷ்வந்த்தை தடுத்தா மட்டும், இந்த எல்லா கொடுமைகளையும் தடுத்துட முடியாது. இவன் வேர்ல இருக்க சின்ன கிளை தான்! இவனை மாதிரி பல கிளைகள் ஒன்னா சேர்ந்து தான் டார்க் வெப்ங்கிற மரத்தை தாங்கி பிடிச்சுட்டு இருக்கானுங்க.” என்று பெருமூச்சு விட்டபடி கூறினான் அபிஜித்.
ஒரு கிளையை வெட்டவே இத்தனை பாடுபட வேண்டி இருந்தால், மரத்தை அழிக்க எத்தனை உழைப்பு அவசியமோ?
தொடரும்…
🤬🤬🤬🤬🤬
Yaruku indha smiley 🤔🤔🤔
இப்படியும் இன்னும் ஜென்மங்கள் இருக்கு இதுக்கு எல்லாம் தண்டனை கடுமையா இருக்கனும். ..
உண்மை தான் 🧘🏻♀️🧘🏻♀️🧘🏻♀️
Yes maratha vetta romba paadu padanum… Yepdi mulaikkithunga ne theriyala…. Spr going
Tq so much sis 😍😍😍
intha alavuku vakiram pidichavanga iruka than seiranga intha world la namaku theriyama engeyo ippadi nadakum atha tha inga oru story ah poduranga pola . intha jenmanaga kaila kedaicha avanungala konjam konjama vachi senji kollanum
True… Aama udane ellam kolla koodadhu 🧘🏻♀️🧘🏻♀️🧘🏻♀️
Nice epi👍👍
Tq so much sis 😍😍😍