Skip to content
Home » வஞ்சிப்பதோரும் பேரவா! – 28

வஞ்சிப்பதோரும் பேரவா! – 28

அத்தியாயம் 28

அபிஜித்தும் ஹரிஹரனும் யஷ்வந்த் முன்னே அமர்ந்திருக்க, அவர்களை வேறொரு அறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்.

“உனக்கு எதிரா எவிடன்ஸ் எல்லாம் கிடைச்சுடுச்சு. நீ எப்போ உண்மையை ஒத்துக்கப் போற?” என்று அபிஜித் நேரடியாக விஷயத்திற்கு வர, “எவிடன்ஸா, எது… ஓஹ், என்கிட்ட இருந்து ரெண்டு முறை தப்பிச்சுச்சே அந்த எவிடன்ஸா? அதெல்லாம் ஒரு நொடில இல்லாம பண்ணிட முடியும்.” என்று திமிராக பேசியவனை கொல்லும் வெறி கிளர்ந்தெழுந்தாலும், அடக்கிக் கொண்டான் ஹர்ஷவர்தன்.

மற்ற இருவரின் நிலையும் அதுவே! இவர்களின் உரையாடல் ரகசியமாக பதிவு செய்யப்படுவதால் பொறுமையாக இருக்க வேண்டியதாகிற்று.

“வெளிய இருக்கவங்க உனக்கு உதவி செய்வாங்கன்னு இன்னமும் நம்புறியா என்ன? உன் லாயர் விஷயத்தை சொல்லல?” என்று ஹரிஹரன் நக்கலாக வினவ, இப்போது யஷ்வந்த்திற்கு கோபம் எட்டிப் பார்த்தது.

“அந்த பிள்ளைப்பூச்சிக்கு இவ்ளோ தூரம் போக தைரியம் இருக்கும்னு நான் எதிர்பார்க்காதது என் தப்பு தான்!” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறிய யஷ்வந்த், “ஹோம் மினிஸ்டர் மகனையும், சென்டிரல் மினிஸ்டரையும் எனக்கு எதிரா திருப்பிட்டா, நான் வெளிய வர முடியாதா? எனக்கு அவங்களை விடவும் பவர்ஃபுல் பீப்பிளோட சப்போர்ட் இருக்கு.” என்று யஷ்வந்த் எகத்தாளமாக பேசினான்.

“தெரியுமே. உனக்கு ஏகப்பட்ட சப்போர்ட் இருக்கு, அந்த சப்போர்ட்டை எல்லாம் நீ எப்படி உருவாக்கிக்கிட்டன்னு தெரியுமே. அதான், அதோட ஆணிவேரை உலுக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்.” என்று அபிஜித் கூற, அத்தனை நேரம் யஷ்வந்த்திடமிருந்த பாவனை நொடியில் மாறியது.

“என்ன சொல்ற?” என்று யஷ்வந்த் பதற்றத்துடன் வினவ, “உன் வெப்சைட்டை ஹேக் பண்ணியாச்சு. அது கூட பெரிய விஷயமில்ல. இன்னும் கொஞ்ச நேரத்துல, அதுல இருக்க, உனக்கு சப்போர்ட் பண்றவங்களோட வீடியோஸை லீக் பண்ண போறோம். ஏற்கனவே, உன்னை பத்தின நியூஸ் வெளிய வந்தாச்சு. அப்போவே, உனக்கு சப்போர்ட் பண்றவங்களோட எண்ணிக்கை குறைய ஆரம்பிச்சாச்சு. மிச்சம் மீதி இருக்குறவங்க கூட, அவங்க வீடியோஸை வச்சு நீ மிரட்டுவங்கிறதால, அவங்க பதவிக்கு எந்த பாதிப்பும் வந்துடக் கூடாதுங்கிற பயத்துல உன்னை ஆதரிக்கலாம். இப்போ உனக்கு பணயமா வைக்க அந்த வீடியோஸ் இல்லன்னு வச்சுக்கோ, நீ என்னாவன்னு யோசிச்சு பார்த்தியா?” என்றான் அபிஜித்.

“யூ ராஸ்கல்ஸ்… என்னடா பண்ணீங்க என் வெப்சைட்டை?” என்று முதல் முறையாக பயத்தை வெளிப்படுத்தும் குரலில் கேட்டான் யஷ்வந்த்.

ஆம், அவனின் பலமும் பலவீனமும் அந்த இணையதளம் தான்!

ஏதோ ஒரு வகையில், அது அவனிற்கு மகிழ்ச்சியை தந்து கொண்டிருந்தது. இப்போது அதற்கு ஆபத்து என்னும் போது, அவனின் பாதிக்கப்பட்ட மனநிலை, உயரழுத்தத்தால் மேலும் பாதிக்கப்பட, சிந்திக்கும் ஆற்றலை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் துவங்கினான் யஷ்வந்த்.

சில நொடிகள் அந்த அறை மௌனத்தில் ஆழ்ந்திருக்க, அதைக் கலைத்தவன் யஷ்வந்த் தான்.

“இப்போ என்ன, நான் செஞ்சதை ஒத்துக்கணும், அவ்ளோ தான?” என்று யஷ்வந்த் நிதானமாக வினவ, சட்டென்று மாறிய அவனின் நிலை குறித்து யோசனையில் இருந்தனர் காவலர்கள்.

“என்ன இவ்ளோ நேரம் ஒத்துக்காதவன், இப்போ பேசுறான்னு பார்க்குறீங்களா? எனக்கு என் வெப்சைட் அவ்ளோ முக்கியம்! அதுவே, பாழா போனதுக்கு அப்பறம், நான் எதுக்கு மறைஞ்சு வாழனும்? ஆமா, ‘ஃபேன்டஸி நைட்ஸ்’ங்கிற டார்க் வெப் ஓனர், அட்மின், க்ரியேட்டர் எல்லாமே நான் தான். என்னோட ஃபேன்டஸிக்காக ஆரம்பிச்ச சைட், இன்னைக்கு பலரோட ஃபேன்டஸி தாகத்தை தீர்த்துட்டு இருக்கு.” என்று தீவிரமாக பேசியவன், திடீரென்று சிரிக்க ஆரம்பித்தான்.

அபிஜித்தும் ஹரிஹரனும், சிரிப்பவனை புரியாமல் பார்க்க, “ஆமா, என் வெப்சைட்ல நடக்குற எல்லாத்துக்கும், நான் தான் காரணம்னு நினைச்சுட்டு இருக்கீங்களா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டவன், தலையை இடவலமாக ஆட்டி, “நான் ஜஸ்ட் கேட்டலிஸ்ட் தான். ஒவ்வொருத்தரோட மனசுக்குள்ள இருக்குறதை வெளிய கொண்டு வர கேட்டலிஸ்ட், அவ்ளோ தான்! மத்ததெல்லாம் அதுவாவே நடந்துடும். மனுஷங்க இருக்காங்களே, அவங்க சரியான கோழைங்க… ஆனா, அதுவும் சந்தர்ப்பம் கிடைக்குற வரை தான்! அவங்களுக்கு ஒரு முகமூடியும், மீடியமும் கிடைச்சுட்டா, என்னவாகுங்கிறதுக்கு எக்ஸாம்பில் தான் என் வெப்சைட்! பார்த்தீங்க தான, ஒவ்வொரு க்ரைமும் எவ்ளோ இன்ட்ரெஸ்ட்டிங்கா இருந்துச்சுன்னு! செம கிரியேட்டிவிட்டில.” என்று ரசித்துக் கொண்டே கூறியவனை அருவருப்பாக பார்த்தனர் மற்றவர்கள்.

“கூலிப்படை ஏவி ஆளை தூக்குறதுல இருந்து, போதை, ட்ரக்ஸ்னு எல்லாமே என் சைட்ல நடந்துட்டு தான் இருக்கு. ஹ்ம்ம், போதைன்னு சொல்லும் போது தான் ஞாபகம் வருது… இந்த உலகத்துல பெரிய போதை எது தெரியுமா?” என்று இருவரையும் பார்த்து கேட்ட யஷ்வந்த், பதிலை எதிர்பார்க்காதவனாக, “கோகைன்? ஹெராயின்? பொண்ணுங்க? பணம்? புகழ்? ஊப்ஸ்… நோ, இது எதுவுமே இல்ல. மத்தவங்களை அவங்களுக்கே தெரியாம பார்க்குறது. காலைல முழிச்சதுல இருந்து, நைட் செ** பண்றது வரை அவங்க அந்தரங்கத்தை எல்லாம் பார்த்து ரசிக்கிறது… அது தான் பெரிய போதை! ஏன்னா, அவங்களுக்கு இப்படி ஒருத்தர் தன்னை பார்க்குறதே தெரியாதே! அப்போ ஒரு ஃபீலிங் இருக்கும் பாரு… ப்பா… யூ வில் ஃபீல் இன்வின்சிபில்… லைக் அ காட்! உண்மை தான்ல… கடவுள்னு ஒருத்தன் இருந்தா, அவனும் நம்மள இப்படி தான் பார்த்துட்டு இருப்பான்ல.” என்று கூறி ஆர்ப்பாட்டமாக சிரித்தான் யஷ்வந்த்.

அவன் மன வக்கிரங்களை கடவுளுடன் ஒப்பிட்டு பார்க்கும் மனம் பிறழ்ந்தவனை எதுவும் செய்ய இயலாமல் அமைதியாக வெறித்துக் கொண்டிருந்தனர் இருவரும்.

அவன் அவர்களின் எதிர்வினையை எல்லாம் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தான்.

“நான் என் சைட்டுக்கு எவ்ளோ உண்மையானவனா இருந்தேன் தெரியுமா? யூ க்னோ, மை வெப்சைட் இஸ் சச் அ ஃபேன்டஸி ஓர்ல்ட். நான் என்னோட மனைவியோட இருக்குறதை பார்க்கணும்னு ஒரு ரெக்வஸ்ட் வந்துச்சு. ஐ டூ லவ் ஃபேன்டஸி… அந்த ஐடியாவும் எனக்கு பிடிச்சுருந்துச்சு. என் மனைவியா யாரை செலக்ட் பண்ணலாம்னு போல் கூட வச்சேன். இன்ட்ரெஸ்டிங்க்லி, அந்த போல்ல செலக்ட்டானவ தான் மௌனிகா. அவளை கூட யாரோ ஒரு ஃபீமேல் யூசர் தான் சஜ்ஜஸ்ட் பண்ணாங்க. என்ன காரணம் தெரியுமா? மௌனிகாவோட எக்ஸ்-லவர்… அதான் உன் ஃபிரெண்டு மிஸ்டர். ஹர்ஷவர்தனை, அந்த பொண்ணு ஒன் சைடா லவ் பண்ணாளாம். அவன் அதை ரிஜக்ட் பண்ணதால, அதுக்கு காரணம் மௌனிகா தான்னு, அவளை பழிவாங்க தான் இந்த ஐடியாவாம். உங்களுக்கு சில்லியா தெரியுதுல. எனக்கு இது ஃபேன்டஸியா தெரிஞ்சுது.” என்று கோணலாக சிரித்தான் யஷ்வந்த்.

“ஆனா, எல்லாம் ரெண்டு மாசம் வரை தான். அதுக்கு மேல சலிச்சுடுச்சு. அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது தான், உன் ஃபிரெண்டோட என்ட்ரி! சரி, பழைய லவர்ஸ் திரும்ப பார்க்குறப்போ, ஃபீலிங்ஸ்ல ஏதாவது ஆகும், அதை கண்டெண்ட்டாக்கி என்ஜாய் பண்ணலாம்னு நினைச்சா, ரெண்டு பேரும் அதுக்கு ஒத்து வரல. அவ ஹஸ்பண்ட் நானே, அவ கூட தனியா பேச சந்தர்ப்பம் உருவாக்கி தந்தாலும், அந்த ***** எதுவுமே பண்ணல.” என்று கூற, அவனிற்கு அவனே போட்டுக் கொண்ட தடையையும் மீறி, அந்த விசாரணை அறைக்குள் நுழைந்த ஹர்ஷவர்தன், யஷ்வந்த்தை பலமாக தாக்கினான்.

“உன்னை மாதிரி சைக்கோவா டா நாங்க? வக்கிரம் பிடிச்சவனே… உன்னை சாதாரணமா எல்லாம் கொல்ல கூடாது.” என்று சொல்லியபடி அடித்த ஹர்ஷவர்தனை மற்ற இருவருக்கும் தடுக்க தோன்றவில்லை.

ஆனால், அத்தனை அடியை வாங்கிய பின்னரும் கூட யஷ்வந்த் அடங்கவில்லை.

“ஓஹ், நீயும் இங்க தான் இருக்கியா? உன் எக்ஸ் எப்படி இறந்தா தெரியுமா?” என்று யஷ்வந்த் கேட்க, அடிக்க வந்த ஹர்ஷவர்தனின் கரங்கள் அந்தரத்தில் நின்றன.

“எக்ஸை பார்த்தியா, ஜாலியா இருந்தியான்னு போகாம, உன்னை யாரு அவ லைஃப்புக்குள்ள போக சொன்னது? பாரு, உன்னால இப்போ அவ செத்து எனக்கு ஃபுட்டாவும் ஆகிட்டா.” என்று வேண்டுமென்றே ஹர்ஷவர்தனை வெறுப்பேற்றுவது போல பேச, நடந்தவை தெரிய வேண்டும் என்பதால் ஹர்ஷவர்தன் அமைதியாக இருந்தான்.

“அந்த ****க்கு எப்படியோ நான் பண்றதெல்லாம் தெரிய வந்துடுச்சு. அவளே விலகி போயிருந்தா கூட, நான் விட்டுருப்பேன். ஆனா, உன் மூலமா எப்போ போலீஸுக்கு போக நினைச்சாளோ, அப்பவே அவளை கொல்லனும்னு முடிவு பண்ணிட்டேன். மேடம் வேற என்னைப் பத்தி டைரி எழுதி வச்சுருக்குறது தெரிய வந்துச்சு. நீ எப்படியும் அவளை காப்பாத்துறேன்னு வருவன்னு நான் முன்னாடியே யூகிச்சேன். ஏன்னா, நீதான் அவ்ளோ நல்லவனாச்சே! சோ, உன்னை மாட்டி விட தான் அந்த டைரியை உன் கண்ணுல படுற மாதிரி வச்சேன். நீ என்ன நினைச்ச, என் பேலஸோட செக்யூரிட்டி அவ்ளோ வீக்னா? உன்னை உள்ள வர வைக்குறது தான் என் பிளானவே இருந்துச்சு. நான் நினைச்ச மாதிரி நீயும் உள்ள வந்த. ஆனா, போலீஸை பார்த்து சுதாரிச்சு அந்த டைரி பத்தி வாயே திறக்கல. மேபி, அதை நீ பார்க்கலையோன்னு கூட நான் நினைச்சேன். யூ க்னோ வாட், அன்னைக்கு அவ ரூம்ல நீ தேடிட்டு இருந்த அதே சமயம், என் சீக்ரெட் ரூம்ல தான் அவ இருந்தா, உயிரோட! ஆனா, உன்னை எப்போ இந்த போலீஸோட பார்த்தேனோ, அப்போ முடிவு பண்ணேன், அவ உயிரோட இருக்குறது சேஃப் இல்லன்னு.” என்று வில்லத்தனமாக சிரித்தான் யஷ்வந்த்.

“என் பொண்டாட்டிக்கு அவ எக்ஸ்-லவர் மேல எவ்ளோ பாசம் இருந்தா, சாகும் போது கூட உன் பேரை சொல்லிட்டு சாவா? ஆனா ஒன்னு, அவ வாழும் போதும் சரி, சாகும் போதும் சரி, எனக்கு சு**தை தந்துட்டு தான் போனா. இன்னும் அவ டேஸ்ட், என் நாக்குல நிக்குதுன்னா பார்த்துக்கோயேன்.” என்று கண்களை மூடி ஒருவித லயிப்பில் யஷ்வந்த் கூற, அதற்கு மேல் அங்கிருந்தால், அப்போதே அவனை கொன்று விடுவோம் என்று எண்ணியவனாக ஹர்ஷவர்தன் அங்கிருந்து வெளியேற முயற்சித்தான்.

அப்போதும் அவனை செல்ல விடாமல், “உன் பொண்டாட்டி பத்தி தெரிஞ்சுக்க வேண்டாமா?” என்று யஷ்வந்த் வினவ, திரும்பி பார்க்காமலேயே, “அதுக்குள்ள சாகுற ஆசை இருந்தா சொல்லு, இப்போவே மொத்தமா முடிச்சுடுறேன்.” என்று பல்லைக் கடித்தபடி கூறினான் ஹர்ஷவர்தன்.

அதை எல்லாம் கண்டு கொள்ளாத யஷ்வந்த்தோ, “அவ ஏற்கனவே சொல்லியிருப்பாளே, அவளுக்கு பதிலா அவ அக்காவை தூக்கிட்டு போன கதையை! ஹ்ம்ம், உன் பொண்டாட்டி தான் என்னோட முதல் விக்டிம்மா இருந்துருக்க வேண்டியவ. ப்ச், என்ன பண்ண? அப்போ மிஸ்ஸாகிட்டா. ஆனா, நானே எதிர்பார்க்காத விஷயம், அவ திரும்ப என் கண்ணு முன்னாடி வந்தது. ஆடு தானா வந்து சிக்குனா விட்டுடுவேனா என்ன? அதான், இந்த விஷயத்துக்குள்ள, அவளையும் இழுத்தேன். எல்லாம் சரியா போயிட்டு இருந்த சமயம்… ப்ச், திரும்ப மிஸ்ஸாகிட்டா… ஆனா, ஒரே ஆறுதல், அவ உடம்புல இருக்க காயங்கள். அது எதனால தெரியுமா? உங்களால… உங்களை எதுவும் செய்ய முடியாதப்போ, அவளை யூஸ் பண்ணிப்பேன்.” என்று கூறி முடிக்கவில்லை, அவன் குரல்வளையை நெறிக்க ஆரம்பித்து விட்டான் ஹர்ஷவர்தன்.

பெரும் சிரமத்துடன் ஹர்ஷவர்தனை தடுத்த மற்ற இருவரும், அவனை வெளியே அழைத்து வந்தனர்.

“ப்ச், விடுங்க என்னை. எனக்கு வர கோபத்துக்கு… அவனை பீஸ் பீஸா வெட்டி போட்டா கூட, என் கோபம் தீராது. ச்சீ, என்ன ஜென்மமோ இவன்?” என்று கோபத்தில் கத்தியவனை சமாதானப்படுத்திய அபிஜித், “ரிலாக்ஸ் ஹர்ஷா. அவன் உன்னை வெறுப்பேத்த தான் ரொம்ப நேரமா முயற்சி பண்ணிட்டு இருக்கான். அவன் மேல படுற ஒவ்வொரு காயத்துக்கும் போலீஸ் நாங்க விளக்கம் குடுக்கணும் ஹர்ஷா. அதை தெரிஞ்சுக்கிட்டு தான் ரொம்ப ஆடிட்டு இருக்கான்.” என்றான்.

“இவன் ஒரு ஆளுன்னு, இவன் காயத்துக்கு விளக்கம் குடுக்கணுமா? என்னை கேட்டா, இவனுக்கு தனியா டைம் ஸ்பெண்ட் பண்ணி விசாரணை எல்லாம் செய்யக் கூடாது. பார்த்ததும் கொன்னுட்டு போயிட்டே இருக்கணும்.” என்று கோபத்தில் கொந்தளித்தான் ஹர்ஷவர்தன்.

“உங்க கோபம் எனக்கு புரியுது ஹர்ஷா. ஆனா, அவன் ஏன் இப்படி சைக்கோவா மாறுனான்னு நமக்கு தெரியணும்ல. ஐ பெர்சனலி பிலீவ், இந்த மாதிரி அவன் மாறுறதுக்கு, இந்த சமூகமும் எந்த வகையிலயாவது காரணமா இருக்கும். அதை வெளிய கொண்டு வரணும் ஹர்ஷா. நாளைக்கு இதே மாதிரி இன்னொரு யஷ்வந்த் உருவாக கூடாதுன்னா, இந்த யஷ்வந்த்தோட பாஸ்ட் நமக்கு தெரிஞ்சாகணும். என்னை பொறுத்தவரை, சட்டம் எல்லாம் அதுக்கு பின்னாடி தான்.” என்று விளக்கம் கொடுத்த ஹரிஹரன், “டிரஸ்ட் மீ, அவனை பழிதீர்க்க உங்களுக்கு நிச்சயமா சான்ஸ் கிடைக்கும்.” என்றும் சேர்த்து கூறினான்.

அப்போது அபிஜித்திற்கு அழைப்பு வர, மறுமுனையில் என்ன கூறினரோ, அவன் பரபரப்பாக தொலைக்காட்சியை உயிர்பித்தான்.

அதில், ஆணையர் மகளின் கொலை வழக்கில் கைதான நால்வரும் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் இறந்திருந்த செய்தி ஓடிக் கொண்டிருந்தது. நால்வரையும் நீதிபதியிடம் அழைத்து செல்லும் வேளையில் தப்பி ஓட முயற்சிக்க, அதை தடுக்க பார்த்த ஆணையரையே சுட்டு தப்பிக்க பார்த்ததால் தான், இந்த துப்பாக்கி சூடு நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இதில், ஆணையர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் செய்தி ஓடிக் கொண்டிருந்தது.

அதை பார்த்த மூவரும் அதிர்ச்சியில் இருந்தனர், என்றாலும் அபிஜித்திற்கு தான் உட்சபட்ச அதிர்ச்சியாக இருந்தது.

இந்த சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னர் தான் ஆணையரிடம் பேசியிருந்தான் அபிஜித்.

“சார், அந்த நாலு பேரையும் கோர்ட்டுக்கு கூட்டிட்டு போனா, ஈஸியா வெளிய வந்துடுவானுங்க. நாலு பேரும் பெரிய புள்ளிங்களோட பசங்க. ஏற்கனவே, செம பிரஷர் சிசுவேஷன். இதுல, நீங்க இன்வால்வாக கூடாதுன்னு வேற சொல்லிட்டு இருக்காங்க. இப்போ என்ன செய்ய போறோம் சார்?” என்று அபிஜித் வினவ, “நீங்க அந்த அக்யூஸ்ட்டை விசாரிங்க அபிஜித், இதை நான் பார்த்துக்குறேன். என் பொண்ணுக்கு நியாயம் கிடைக்க என்ன வேணும்னாலும் செய்வேன்.” என்று கம்பீரமாக கூறி அழைப்பை துண்டித்திருந்தார் ஆணையர்.

அவர் கூறியதன் அர்த்தம் தற்போது தான் அபிஜித்திற்கு விளங்கியது.

“நல்லவேளை தப்பிச்சு ஓட டிரை பண்ணதால என்கவுன்டர் நடந்துச்சு. இல்லன்னா, பவரை யூஸ் பண்ணி வெளிய வந்துருப்பானுங்க ராஸ்கல்ஸ். கமிஷனர் தான் பாவம்.” என்றான் ஹர்ஷவர்தன்.

“அவனுங்க தப்பிக்க எல்லாம் இல்ல ஹர்ஷா. இந்த பிளான் கமிஷரோடதா தான் இருக்கணும். அவருக்கும் தெரியும் இந்த கேஸ் எப்படியும் கோர்ட்ல நிக்காதுன்னு. அதான், அவரோட உயிரை பணயமா வச்சு, அந்த நாலு பேரையும் கொன்னுருக்காரு. அவரோட பொண்ணுக்கான நியாயம், அவனுங்களோட மரணம்! அதை நிறைவேத்திட்டாரு.” என்று அபிஜித் கூற, ஹரிஹரன் அதை யூகித்திருந்தாலும், ஹர்ஷவர்தனிற்கு புது தகவலாக இருந்தது.

“ஆனா, கமிஷனர் ஏன் அவரை அவரே காயப்படுத்திக்கணும்? அதுவும், உயிருக்கு ஆபத்துன்னு சொல்றாங்களே?” என்று ஹர்ஷவர்தன் வினவ, “நார்மலா ஒரு போலீஸுக்கு சின்னதா ஒரு காயம்னு சொல்லி யாரையும் என்கவுண்டர் பண்ணிட முடியாது ஹர்ஷா. அதுவும், இவனுங்க மாதிரி இம்ஃபேக்ட்டான ஆளுங்கன்னா, நிறைய கேள்வி வரும். அவங்க குடும்பத்து ஆளுங்க போலீஸை பிரஷர் பண்ணுவாங்க. அதை ஓரளவு குறைக்க தான், கமிஷனர் இப்படி பண்ணியிருப்பாரு.” என்றான் அபிஜித்.

“ப்ச், குற்றவாளிகளை தண்டிக்க, எவ்ளோ பாடுபட வேண்டியதா இருக்கு? எத்தனை தியாகம் செய்ய வேண்டியதா இருக்கு? இதெல்லாம் எப்போ தான் மாறுமோ?” என்று ஆதங்கப்பட்டான் ஹர்ஷவர்தன்.

தொடரும்…

8 thoughts on “வஞ்சிப்பதோரும் பேரவா! – 28”

  1. Avatar

    அடப்பாவி பையல யஷ்வந்த் சொல்லறத கேக்கறப்ப நம்ம வாழ்க்கையிலும் இப்படி நடக்குமோன்னு பயமா இருக்கு

  2. Kalidevi

    sila saddist iruka tha seiranga intha ulagathula innoruthar life la ippadi vilayadurathu aruvarupana vishayam la avangaluku easy and jolly ah iruku athuku ellam serthu thandanai kedaikum kedaikanum veroda alikanum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *