அத்தியாயம் 29
“இப்போ என்ன தான் செய்யுறது?” என்று ஹர்ஷவர்தன் வினவ, ஹரிஹரனை பார்த்த அபிஜித், “யஷ்வந்த்தோட வாக்குமூல நியூஸ் வெளிய போறதுக்குள்ள, நான் சில போலீஸ் ஃபோர்ஸ் கூட்டிட்டு அவன் வீட்டுல ரெயிட் போய், அவனுக்கு எதிரா இருக்க ஆதாரங்களை சேகரிக்குறேன். நீங்க அதுக்குள்ள அவனோட பாஸ்ட் பத்தின டீடெயில்ஸை அவன்கிட்ட கறக்க முடியுதான்னு பாருங்க.” என்றான்.
“நானும் உன்னோட வரேன் அபி.” என்று ஹர்ஷவர்தன் கூற, அவனை தடுத்தாலும் பிரயோஜனம் இருக்காது என்பதை உணர்ந்த அபிஜித் ஒன்றும் சொல்லாமல் முன்னேறி செல்ல, அவனை தொடரப்போன ஹர்ஷவர்தனை நிறுத்திய ஹரிஹரன், “அங்க லைவ் வீடியோ எடுத்து, அதையும் கவினுக்கு அனுப்பிடுங்க ஹர்ஷா. மத்த வீடியோஸோட இதையும் லீக் பண்ணிடுவோம்.” என்றான்.
“போலீஸ் ரெயிட்… வீடியோ எடுத்தா அது பிரச்சனை ஆகாதா?” என்று ஹர்ஷவர்தன் தயங்க, “என்குவரி கிளிப்பிங்கையே வெளிய லீக் பண்ண போறோம். பிரச்சனை தான, அது வரும்போது பார்த்துக்கலாம்.” என்ற ஹரிஹரனோ விசாரணை அறைக்குள் சென்றான்.
“என்ன சார் நீங்க மட்டும் வரீங்க?” என்று நக்கலாக கேட்ட யஷ்வந்த்தை நெருங்கிய ஹரிஹரன், “உனக்கு அந்த திமிர் மட்டும் குறையவே இல்லல? ஆமா நீ இப்போ தான் இப்படியா, இல்ல சின்ன வயசுல இருந்தே இப்படியா? இப்போ தான்னா, பணம், அதிகாரம் எல்லாம் இருக்கு, சோ, அதை ஒருவழில ஒத்துக்கலாம். ஆனா, சின்ன வயசுல…” என்று அவனை பேச வைக்க தூண்டினான் ஹரிஹரன்.
ஹரிஹரன் சாதாரணமாக அதை கேட்டிருக்க, யஷ்வந்த்திற்கோ அவன் கேலி செய்வது போலிருக்க, கோபம் கொண்டு கத்த ஆரம்பித்தான்.
“ஆமா, நான் சின்ன வயசுல எதுவுமில்லாதவன் தான். அப்பன் யாருன்னு தெரியாத, அம்மா இருந்தும் இல்லாத, சில மணி நேர காம இச்சைக்கு பிறந்தவன் தான் நான். அதுல என்ன பிரச்சனை? ஏன், ரெட் லைட் ஏரியால பிறந்துருந்தா, இப்படி திமிரா இருக்கக் கூடாதா? திமிரெல்லாம் பணக்காரனுங்க கிட்ட மட்டும் தான் இருக்கணுமா?” என்று கேள்விகளை அடுக்கிய யஷ்வந்த், அவனே அதற்கு பதில்களும் கூறிக் கொண்டான்.
“என்னதான் இப்படி புரட்சிகரமா யோசிச்சாலும், மக்கள் மனசுல ஆழமா பதிஞ்ச விஷயத்தை மாத்த முடியல. நான் எப்பவும் ‘****’வோட மகன் தான்!” என்று கூறிய யஷ்வந்த்திற்கு, அவன் மறந்ததாக நினைத்த கடந்த கால வாழ்க்கை மனதிற்குள் எட்டிப் பார்த்தது.
“டேய், **** பையா, நீ இங்க என்ன பண்ற?”
“ரெட் லைட் ஏரியால பொறந்தவனுக்கு படிப்பு ஒன்னு தான் கேடு!”
“பொண்ணா பொறந்துருந்தா, இந்நேரம் உங்க அம்மாக்கு துணையா, உன்னையும் தொழில்ல இறக்கியிருப்பா. அதுக்கு கூட உதவல… வேணும்னா, ஒரு சின்ன ஆப்பரேஷன் பண்ணலாம். அது போக இருட்டுல கண்ணா தெரிய போகுது…”
இவை போக கேலி சிரிப்புகள் பல!
சிறுவன், எவற்றை எல்லாம் கேட்கக் கூடாதோ, அவற்றை எல்லாம் கேட்டே வளர்ந்தவன் யஷ்வந்த். மற்றவர்கள் தான் இப்படி என்றால், கலைக்க முடியாமல் போனதால், அவனை பெற்ற ‘அன்னை’யின் வார்த்தைகள் தான், அவன் இப்படி வளர்ந்திருப்பதற்கு முக்கிய காரணமாகிப் போனது.
“சனியன், நீ எப்போ வயித்துக்குள்ள வந்தியோ, அப்போ இருந்தே என்னை தரித்திரம் பிடிச்சு ஆட்டுது. நீயெல்லாம் பொறக்கலன்னு யாரு அழுதா? உன்னால என் அழகு போச்சு, காசு போச்சு, கஸ்டமரும் போச்சு. உன்னால எனக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கா? ஆனா, நான் மட்டும் உனக்கு ஓசில மூணு வேளை சோறு போடனுமா? இனி, என்னால முடியாது, என்னத்தையாவது பண்ணி காசு கொண்டு வா. அப்போ தான் இனி உனக்கு சோறு!” என்று அவள் கூற, அன்னை சொல்லிக் கொடுத்த முதல் பாடமே, ‘எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும்’ என்று யஷ்வந்த்தின் மனதில் பதிந்து போனது.
விளைவு, அச்சிறு வயதிலேயே திருடனாகிப் போனான் யஷ்வந்த்!
அத்துடன் விட்டாளா அவனின் தாய்?
ஒருமுறை அவள், அவளின் பிரதான ‘கஸ்டமருடன்’ பேசிக் கொண்டிருந்ததை யஷ்வந்த் கேட்க நேர்ந்தது.
அதாவது, யஷ்வந்த்திற்கு அறுவை சிகிச்சை மூலம் பெண்ணியல்புகளை வரவழைத்து தொழிலில் ஈடுபடுத்தலாம் என்று அந்த இருவரும் திட்டம் தீட்ட, திருடிய பணத்தை சந்தோஷமாக எடுத்து வந்த யஷ்வந்த்தின் மனதில் வெறுப்பையும் கோபத்தையும் ஒருசேர வரவழைத்தது அவர்களின் திட்டம்.
இதற்கு மேல் விட்டால், அந்த சாக்கடைக்குள் அமிழ்த்தாமல் விட மாட்டார்கள் என்பதை உணர்ந்து, துணிந்து அந்த காரியத்தை செய்தான். ஆம், அவனின் ‘அன்னை’யையும் அவளின் நண்பர்கள் சிலரையும், அவர்கள் தன்னிலை மறந்து போதையில் திளைத்த நேரத்தில், கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பித்து விட்டான்.
அதன்பிறகு தான் யாஸ்மினின் தந்தை வேலை செய்த அனாதை ஆசிரமத்தில் சேர்ந்தது, பின், சர்மா குழுமத்தின் ஒற்றை வாரிசாக தந்தெடுக்கப்பட்டது எல்லாம் நிகழ்ந்தன.
என்னதான், அவன் வாழ்க்கை பணம், புது நண்பர்கள் என்று மாறியிருந்தாலும், ஏதோ வெகுவாக குறைவது போலிருந்தது யஷ்வந்த்திற்கு.
அது என்னவென்று, பதின் வயதிலேயே, ‘பிஞ்சிலேயே வளர்ந்த’ அவனின் ‘நண்பர்’களின் மூலம் அறிந்து கொண்டான் யஷ்வந்த்.
அது தான் போதை… மருந்து செலுத்தி போதை ஏற்றுவது அல்ல, அந்தரங்க படங்கள் பார்த்து போதை கொள்வது!
காமம்! அவனிற்கு வெகு பரிச்சயமே! சொல்லப் போனால், அவன் பிறந்தகத்திலிருந்து தப்பித்து வந்ததிலிருந்து, அவன் வாழ்க்கையில் குறைந்தது அது ஒன்று தான்!
‘காமம்’ என்று அடையாளம் காட்டப்பட்ட அந்த வக்கிரத்திலேயே மூழ்கி கிடந்தவனிற்கு, அவன் அறியாமலேயே மனதிலும் உடலிலும் ஊறிப் போயிருந்தன அவ்வுணர்வுகள். இயற்கைக்கு மாறான இந்த மாற்றத்தை, மருத்துவ உதவியுடன் கட்டுப்படுத்தியிருக்க முடிந்திருக்கும். ஆனால், அதற்கு அவன் மீது யாராவது அக்கறை செலுத்தி கவனித்து பார்த்திருக்க வேண்டுமே!
தத்தெடுக்கப்பட்ட சில மாதங்களிலேயே தாய் இறந்து போக, தந்தையாகப்பட்டவருக்கோ தொழிலை வளர்க்கவும், ‘உறவு’களை பெருக்குவதற்குமே நேரம் சரியாக இருந்தது. இதிலும் பாதிக்கப்பட்டது யஷ்வந்த் தான்.
ஒரு குழந்தை அதன் பெற்றவர்களை ‘பார்த்து’ தான் வளரும். இங்கு, பெற்றவளும் சரி, தத்தெடுத்தவனும் சரி, காமத்தை தான் யஷ்வந்த்திற்கு பாடமாக புகட்டினர். விளைவு, ‘ஃபேன்டஸி நைட்ஸ்’ என்ற இருண்ட தளத்தின் உருவாக்கம்!
*****
தன் வாழ்க்கையின் இருண்ட பக்கத்தை மீண்டும் ஒருமுறை திருப்பி பார்த்த யஷ்வந்த், அதை சுருக்கமாக கூறி, “முதல்ல திருட்டு, அப்பறம் கொலை… அறியாத வயசுலேயே ரெண்டு பெரிய தப்பு பண்ணவனுக்கு, அடுத்து வைக்கிற அடியா கஷ்டம்? பதினைஞ்சு வயசுலயே ஃபிரெண்ட்ஸ் கூட பா** படம் பார்த்தேன். ஒரு கட்டத்துல அதுக்கு அடிக்ட்டாகி, அதை ஏன் நானே செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. இருபது வயசுல, பிராஸ்ட்யூட்ஸ் கிட்ட போனேன். ஏனோ, அது எனக்கு பத்தல. சின்ன வயசுலயே ‘அதை’ பார்த்து வளர்ந்ததாலயோ என்னவோ! அதுக்கும் என் அம்மா தான் காரணம்னு, அவளை திட்டிட்டே வந்தப்போ தான், ரோட்டுல என் அம்மாவை மாதிரியே இருந்த பொண்ணை பார்த்தேன். அதான் உங்க ஃபிரெண்டு பொண்டாட்டி! என்னோட இயலாமை கோபமா மாறுச்சு. அது, என் அம்மா மாதிரியே இருந்த பொண்ணை பழி வாங்க சொல்லுச்சு. ப்ச், ஆனா அவ தப்பிச்சுட்டா. அவ இல்லன்னா என்னன்னு, கைக்கு கிடைச்ச அவ அக்காவை தூக்கிட்டு போனேன். என் மனசு ஆறுற வரை அவளை ரே* பண்ணேன். பிராஸ்ட்யூட்ஸ் கிட்ட கிடைக்காத ஃபீல், அந்த பொண்ணு ‘விட்டுடு’ன்னு கெஞ்சி கத்துறப்போ கிடைச்சது. அவ்ளோ என்ஜாய் பண்ணேன்.” என்று சொல்லி அவன் சிரிக்க, முதலில் அவனிற்காக இரக்கப்பட்ட ஹரிஹரன், இறுதியில் கோபத்தை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டான்.
“யூ க்னோ வாட், அன்னைக்கு மட்டுமில்ல, மூணு நாள் அவளை வச்சு என்ஜாய் பண்ணேன். அவ எப்போ இறந்தான்னு கூட எனக்கு தெரியல. அப்போ தான் ‘நெக்ரோஃபைல்’னா என்னன்னு புரிஞ்சுது. அது எனக்கு பிடிச்சும் இருந்துச்சு. அடுத்த முயற்சியா, அனாதையா இறந்த பிணங்களை காசு கொடுத்து வாங்கி, என் லஸ்ட்டை சாடிஸ்ஃபை பண்ணேன். கொஞ்ச நாள்ல அதுவும் சலிச்சுடுச்சு. அதுக்கப்பறம் சைக்கோத்தனமா கொலை செஞ்சேன். அதுவும் ரெண்டு முறை தான். அதுக்கப்பறம் என்ன செய்றதுன்னு தெரியாம இருந்தப்போ தான், யாரோ ஒருத்தன் ‘மனுஷக் கறி’யை சாப்பிட்டா, சக்தி கிடைக்கும்னு சொல்ல, காரணம் என்னை ஈர்க்கலன்னாலும், காரியம் என்னை ரொம்பவே ஈர்த்துச்சு. அட்லாஸ்ட், அதையும் முயற்சி செஞ்சு பார்த்தேன்.” என்று எதையோ சாதித்ததை போல கூறியவனை, என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்தான் ஹரிஹரன்.
இத்தனையும் சொல்லும் போது, அவன் முகத்திலோ குரலிலோ, குற்றவுணர்வு என்பது சுத்தமாக இல்லை! ஏதோ, தன் வாழ்நாள் சாதனைகளை பட்டியலிடுவது போல தான் பேசிக் கொண்டிருந்தான் யஷ்வந்த்.
ஹரிஹரன் யோசனையில் இருக்க, யஷ்வந்த்தே தொடர்ந்தான்.
“ம்ச், என்னதான் ஹியூமன் ஃபிளெஷ் டேஸ்டியா இருந்தாலும், ஒரு கட்டத்துல அதுவும் எனக்கு சலிக்க ஆரம்பிச்சுடுச்சு. அப்போ தான், அதாவது 2012ல, சோசியல் மீடியால, ஒரு வீடியோ வைராலாச்சு. அந்த ஐடி கூட எனக்கு ஞாபகம் இருக்கு – ‘யூ ஒன்லி விஷ் 500’! பூனைகளை கொடுமை படுத்தி கொல்ற வீடியோ. முதல்ல, அது அவ்ளோ இம்பேக்ட்ஃபுல்லா இல்ல. ஆனா, அடுத்தடுத்து அதுல வந்த வீடியோஸ், இன்ட்ரெஸ்டிங்கா இருந்துச்சு. ஒரு சவுத்-ஈஸ்ட் ஏசியனை நு**க்கி, கையையும் காலையும் ஒன்னா சேர்த்து பின்னாடி கட்டி, கிட்டத்தட்ட நூறு முறை அவன் கழுத்தை ஸ்க்ரூ-டிரைவரால குத்தி, அவன் உயிரோட இருக்கும் போதே அவனோட பாடி பார்ட்ஸ் ஒவ்வொண்ணையும் வெட்டி… அது எனக்கு வேற மாதிரி வைப்ஸ் குடுத்துச்சு. என்னதான், அதுக்கு எதிரா மக்கள் கமெண்ட்ஸ் பாஸ் பண்ணாலும், என்னை மாதிரி சீக்ரெட்டா ரசிச்சவங்களும் இருக்கத்தான் செஞ்சாங்க.” என்று கூற, அத்தனை எளிதில் கலங்காத ஹரிஹரனிற்கே அவன் பேசுவதை கேட்க ஒரு மாதிரியாக இருந்தது.
“அப்போ தான் இந்த மாதிரி ஃபேன்டஸிக்களை ரசிக்கிறவங்களுக்காக ஒரு வெப்சைட் உருவாக்குனா என்னன்னு தோணுச்சு. எனக்கும் அதை பார்த்து ஹாப்பியா இருக்கும், அவங்களும் சந்தோஷமா இருக்கலாம். அதுக்கு செலக்ட் பண்ணது தான் டார்க் வெப்.” என்று ஆரம்பித்து, அவன் இணையதளத்தில் செய்த லீலைகளை எல்லாம் கூற, தலைவலிக்கவே ஆரம்பித்து விட்டது ஹரிஹரனிற்கு.
யஷ்வந்த் தன் பிரதாபங்களை சொல்லிக் கொண்டிருக்க, அவனை இடைவெட்டிய ஹரிஹரனோ, “இதெல்லாம் இப்போ எங்க கிட்ட ஏன் சொல்ற?” என்று காரணம் கேட்டான்.
“எப்படியோ உங்க கிட்ட மாட்டிக்கிட்டேன். என் கேர்லெஸ்நெஸால மத்தவங்களோட உதவியும் எனக்கு கிடைக்காதுன்னு புரிஞ்சுடுச்சு. இனி, எதுக்கு என்னை நானே முகமூடிக்கு பின்னாடி மறைக்கணும்? என்னை பத்தி எல்லா உண்மைகளையும் நானே சொல்லி ரெக்கார்டான தான் உண்டு. இல்லன்னா, நீங்களா ஏதாவது ஃபேக் கதையை கட்டிட்டீங்கன்னா, இவ்ளோ வருஷ உழைப்பும் வேஸ்ட்டாகிடும்ல! நாளைக்கே, என்னை வச்சு பயோபிக் எடுக்கலாம், சீரிஸ் எடுக்கலாம். அவ்ளோ கண்டெண்ட் இருக்கு. அப்போ நீங்க குடுக்குற ஃபேக்கான தகவலை வச்சு மாத்தி எடுத்துடக் கூடாதுல. அதான், என் கதையை நானே சொல்றேன். வரலாறு முக்கியம்ல.” என்றான் யஷ்வந்த் கோணல் சிரிப்புடன்.
அவனை முறைத்து பார்த்தபடியே அங்கிருந்து வெளியேறினான் ஹரிஹரன்.
*****
யஷ்வந்த்தின் வீட்டிற்கு காவல்துறை அதிகாரிகள் சிலருடன் சென்ற அபிஜித்தும், ஹர்ஷவர்தனும் முந்தைய வருகையில் பார்க்க மறந்திருந்த அறைக்குள் செல்ல முயன்றனர். உபயம், பிரியம்வதா!
அவள் சொல்லியிருக்கா விட்டால், அந்த இடத்தில் அப்படி ஒரு ரகசிய அறை இருப்பது யாராலுமே கண்டுபிடிக்க முடியாது. அப்படி வடிவமைக்கப்பட்டிருந்தது யஷ்வந்த்தின் பிரதான அறை!
உள்ளே சென்றதும், ஒருவித மணம் வீச, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அங்கிருந்த பொருட்களை ஆராய்ந்தனர்.
அங்கு ஒரு பெட்டி முழுவதும் வன் வட்டுகள் (ஹார்ட் டிஸ்க்) நிறைந்திருக்க, மேலும் அங்கிருந்த நான்கு கணினிகள், கணக்கிலடங்காத அலைபேசிகள் அனைத்தையும், உடன் வந்திருந்த காவலர்களிடம், ஆதாரங்களாக சேகரிக்க கூறிய அபிஜித் ஹர்ஷவர்தனை பார்த்தான்.
அவனோ தரையில் இருந்த ரத்த துளிகளை பார்த்து வேதனையுடன் நின்றிருந்தான்.
அபிஜித் அவனருகே செல்ல, அவன் வருவதை பின்னால் திரும்பி பார்க்காமலேயே யூகித்த ஹர்ஷவர்தன், “இது யாரோட ரத்தம்னு கூட தெரியாதுல?” என்று விரக்தியாக கேட்டான்.
அவனின் கவலை புரிந்தாலும் தலைக்கு மேல் வேலை இருப்பதால், “ஹர்ஷா, இது எமோஷனுக்காக நேரமில்லை.” என்று வந்த வேலையை நினைவு படுத்தினான் அபிஜித்.
அதை புரிந்து கொண்ட ஹர்ஷவர்தனும், தன் அலைபேசியில் அங்கிருக்கும் அனைத்தையும் காணொளியாக பதிவேற்ற ஆரம்பித்தான்.
அது ஒரு சிறிய ‘ஸ்டுடியோ’ வகை வீடு போலிருந்தது. சமையலறை தான் அதன் சிறப்பே!
ஓவன், கிரில், ஏர்-ஃப்ரையர் என்று நவீன பொருட்களால் நிரம்பி இருக்க, அது எதற்கு என்று தெரிந்ததால், சங்கோஜமாக இருந்தது ஹர்ஷவர்தனிற்கு.
என்னதான் சுத்தமாக காணப்பட்டாலும், அங்கு வீசிய ஒருவித வாடையும், சுவற்றிலும் தரையிலும் இருந்த பழுப்பு நிற கரைகளும் ஒவ்வாமையை கொடுத்தது ஹர்ஷவர்தனிற்கு. அதற்கு மேல் அங்கு நின்று படம்பிடிக்க முடியாமல் திரும்பி செல்லும் போது, அவன் கைப்பட்டு அடுப்பின் மீதிருந்த பெரிய குக்கர் கீழே விழ, அதனுள்ளிருந்து உருண்டு ஓடியது ஒரு மனித தலை!
அதைக் கண்ட அங்கிருந்த அனைவருமே திகைப்பில் ஆழ்ந்து விட்டனர்.
பின்னே, தலை முடி அகற்றப்பட்டு, பாதி வெந்தும், வேகாமலும், அழுக துவங்கிய நிலையில் இருந்த தலை, அதுவும் குக்கரினுள் இருந்து உருண்டு ஓடினால், யாராக இருந்தாலும் பதறத்தானே செய்வார்கள்!
இதில் ஹர்ஷவர்தனின் நிலை தான் மோசம்! காரணம், அந்த தலை அவனின் முன்னாள் காதலி மௌனிகாவுடையது!
அதிரிச்சியிலிருந்து வெளிவந்த ஹர்ஷவர்தன் மெல்ல அந்த தலையை நோக்கி நகர, அவனை தடுத்த அபிஜித், “வேண்டாம் ஹர்ஷா, நீ கொஞ்ச நேரம் வெளிய நில்லு.” என்று அவனின் மனநிலையை கருத்தில் கொண்டு பேசினான்.
“அதான் எல்லா கொடுமைகளையும் பார்த்தாச்சே அபி. இது என்ன செஞ்சுட போகுது°” என்று விரக்தியாக கேட்டவாறு அந்த தலையை நெருங்கி கீழே குனிந்தான் ஹர்ஷவர்தன்.
சில நொடிகள் அந்த தலையையே பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷவர்தன், “இதுக்காக தான் அவ்ளோ அவசரமா, என்னை விட்டுட்டு போனியா?” என்று முதல் முறையாக அந்த கேள்வியை, இல்லாமல் போனவளிடம் கேட்டு, விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறினான்.
அவன் மனமோ யஷ்வந்த்திற்கான தண்டனையை தீர்மானித்துக் கொண்டிருந்தது.
தொடரும்…
Ethellam yengayo nadakkuthunnu sonnaalum…etha pannravanga yellaam psychological problems erukkuravanga nu thaan thonuthu …..etha control pannrathukku yethuvumey panna mudiyaathaa 😒😒😒😒
Kandippa ipo iruka social media era la ellarume edho oru mana noi la avangakuke theriyama baadhikapattutu enna irukanga 😷😷😷 Sariyana parenting dhan ipo iruka ore control measure 🧘🏻♀️🧘🏻♀️🧘🏻♀️
😱😱😱😱😔😔
🧘🏻♀️🧘🏻♀️🧘🏻♀️
Idhelam yaroo seiranga aana adhuku paligada aahradhu namaku idhudhan mudivu nu theriyamalae uyire vidre ponnunga dhan 🤡
Unmai 😷😷😷 Idha dhan butterfly effect nu solranga pola 🧘🏻♀️🧘🏻♀️🧘🏻♀️
அச்சோ. .. யஷ்வந்த் சொன்னது கேட்டா பயம் தான் வருது
இது மாதிரி ஒன்னு இல்ல நிறைய பேர் இருக்காங்க வெளிய 🧘🏻♀️🧘🏻♀️🧘🏻♀️
Manusha mirugam intha yashwanth . Intha alavuku oru manushan manasu pathika paduthu la avan valarura suzhnilaiyala . Aanalum ithu enga varai poi iruku . Harsha kekurathum crt thane avan evlo love pani iruntha ketu irupan
Aama indha samoogathuke sariyana parenting evlo mukkiyam bu idhu kaatudhu… Ivan mattumilla padhikum mela psycho killers uruvaguradhuku kaaranam avanga childhood trauma dhan…
Aama oru pakkam paavam naalum innoru pakkam Harsha life ini nalla irukum… Idhula unmailaye paavapattava mouni dhan 😷😷😷
Nice epi ☹️☹️
Tq so much sis 😍😍😍