அத்தியாயம் 30
யஷ்வந்த்தின் வீட்டிலிருந்து வெளியே வந்த ஹர்ஷவர்தன், தான் பதிவு செய்தவைகளை கவினிற்கு அனுப்பி, உடனே அவற்றை வெளியிடக் கூறியவன், அபிஜித்திற்காக கூட காத்திருக்காமல் ஹரிஹரனின் காவல் நிலையம் நோக்கி வாகனத்தை விரட்டினான்.
யஷ்வந்த்தின் ரகசிய அறையில் கண்டெடுத்தவைகளை பற்றி அபிஜித் ஹரிஹரனிடம் கூறிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்து விட்டான் ஹர்ஷவர்தன்.
“ஹரிஹரன், ஹர்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க.” என்ற அபிஜித் விரைவாக கிளம்ப, அவன் பயந்ததிற்கேற்றவாறே யஷ்வந்த் காலை அடித்தே உடைத்திருந்தான் ஹர்ஷவர்தன்.
“உன்னை லவ் பண்ணதை தவிர வேற என்னடா தப்பு பண்ணா அவ? அவளை எதுக்கு டா இவ்ளோ கொடூரமான கொலை செஞ்சுருக்க? நீயெல்லாம் மனுஷ ஜென்மமே இல்ல. இன்னும் எதுக்கு உயிரோட இருந்து எல்லாரையும் காவு வாங்குற? செத்து தொலை!” என்று காட்டு கத்து கத்தியவாறே கண்மண் தெரியாமல் அடித்துக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்.
அவனின் இந்த அதிரடியை பார்த்து ஒருநொடி திகைப்பில் ஆழ்ந்த ஹரிஹரனோ, வேகமாக வந்து அவனை தடுக்க முயன்றான்.
“ஹர்ஷா, என்ன பண்றீங்க? விடுங்க அவனை. அவனை நீங்களே கொலை செஞ்சுடுவீங்க போல! ஃப்.ஐ.ஆர் ஃபைல் பண்ணியாச்சு. கோர்ட்ல ப்ரோடுயூஸ் பண்ணனும். விடுங்க ஹர்ஷா.” என்று கோபத்தில் துள்ளிக் கொண்டிருந்தவனை கரத்தால் அணைகட்டி தடுக்க பார்த்தான் ஹரிஹரன்.
அத்தனை வலியிலும், “உன் எக்ஸை பார்த்துட்ட போல? அவ என்ன தப்பு பண்ணாளா? உன்னை ஏமாத்தி பாதிலேயே விட்டுட்டு வந்தாளே, அதை மறந்துட்டியா? ஒருவேளை, இறந்து போனா, அவங்க செஞ்ச தப்பை எல்லாம் மறந்துடுவீங்களோ? அப்போ என் விஷயத்துலயும் அப்படி தான் நடக்குமோ?” என்று மூச்சு வாங்கியபடி பேசியவனை, எகிறிக் கொண்டு அடித்தான் ஹர்ஷவர்தன்.
“இந்த நாயை எல்லாம் கோர்ட்ல ஒப்படைச்சு, வருஷக்கணக்கா தீர்ப்புக்காக காத்துட்டு இருக்கணுமா? அதுவரைக்கும் இவன் சும்மாவா இருப்பான்? எவனையாவது மிரட்டி அவனோட தப்புக்களையும், அதுக்கான தண்டனையையும் அவன் தலையில கட்டிடுவான். இவனை உயிரோட விடுற ஒவ்வொரு நிமிஷமும், இந்த சமூகத்துக்கு ஆபத்து தான். அதுக்காக, உடனே எல்லாம் இவன் சாகக் கூடாது. ஒவ்வொரு செல்லுலையும் வலியை அனுபவிச்சு, கொஞ்சம் கொஞ்சமா துடிதுடிச்சு சாகணும்.” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான் ஹர்ஷவர்தன்.
அத்தனை நேரம் தென்படாத பயம், இப்போது யஷ்வந்த்தின் முகத்தில் தெரிய ஆரம்பிக்க, “இங்க பாருங்க ஏ.சி.பி, இவன் சொல்ற மாதிரி பண்ணா, நாளைக்கு நீங்க தான் உங்க டிப்பார்ட்மெண்ட்டுக்கு பதில் சொல்ல வேண்டியதிருக்கும். இது ஒன்னும் சாதாரண கேஸ் இல்ல. என்னை வச்சு நிறைய பெரிய ஆளுங்க இதுக்குள்ள வருவாங்க. ஒரு ஹை-ப்ரோஃபைல் கேஸ்ல, இவனை மாதிரி காமனரை இன்வால்வ் பண்றதே பெரிய தப்பு.” என்று பாடம் நடத்த ஆரம்பித்து விட்டான்.
“அந்த ஈர வெங்காயத்தை எல்லாம் நாங்க பார்த்துக்குறோம். நீ உன்னை பத்தி மட்டும் கவலைப்பட்டா போதும்.” என்று அவனின் வாயை அடைத்தான் ஹரிஹரன்.
அதற்குள் அபிஜித்தும் அங்கு வந்திருக்க, ஹர்ஷவர்தன் ஆடிய ஆட்டத்தின் விளைவை யஷ்வந்த்தின் உடலில் பார்த்தவன், ‘ஏன்டா’ என்பது போல ஹர்ஷவர்தனை பார்த்து வைத்தான்.
பின்னர், “நாம நினைச்சது மாதிரியே நியூஸ் ரொம்பவே ஃபாஸ்ட்டா பரவிட்டு இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல, என்குவரி க்ளிப்பிங்ஸ், ரெயிட் க்ளிப்பிங்ஸ் எல்லாம் எப்படி லீக்காச்சுன்னு நம்ம கிட்ட விளக்கம் கேட்க ஆரம்பிச்சுடுவாங்க. கூடவே, இவனை தேடி பெரிய தலைங்களோட ஆளுங்களும் வர ஆரம்பிச்சுடுவாங்க. அதுக்குள்ள, இவனை என்ன செய்யுறதுன்னு யோசிக்கணும்.” என்றான் அபிஜித்.
“என்ன செய்யன்னா? கதையை முடிச்சுட வேண்டியது தான்.” என்று ஹர்ஷவர்தன் கூற, “என்னை கொன்னுட்டா இதெல்லாம் நின்னுடும்னு நினைக்குறீங்களா? நான் இல்லன்னா இன்னொருத்தன் இந்த இடத்துக்கு வருவான். எங்களை சப்போர்ட் பண்ண பெரிய பெரிய வி.வி.ஐ.பியே வெயிட் பண்ணிட்டு இருக்கும் போது, இதெல்லாம் தடுத்துடலாம்னு கணக்கு போடாதீங்க. மக்கள் மாறுற வரை இது ஓயாது, அந்த மாற்றம் வரவும் போறதில்ல. இதுக்கு ஏன் நீங்க எல்லாரும் இவ்ளோ சிரமப்படுறீங்க? உங்க லைஃப் ஸ்மூத்தா போக நான் வழி சொல்றேன். நாம ஒரு டீலிங் போடலாம். என்ன சொல்றீங்க?” என்று கேட்ட யஷ்வந்த்தை மூவரும் கொலை வெறியுடன் பார்த்தனர்.
மற்ற இருவரையும் வெளியே அழைத்து வந்த அபிஜித், “என்ன செய்யலாம்?” என்று வினவ, ஹர்ஷவர்தன் முன்னர் ஹரிஹரனிடம் கூறியதை அபிஜித்திடமும் கூறினான்.
மேலும், “அதோட, அவன் கடைசியா சொன்னதும் யோசிக்க வேண்டிய விஷயம் அபி. இது அவனோட முடியாது. வக்கிரம் பிடிச்ச மக்கள் மாறாத வரை இது தொடர்ந்துட்டே தான் இருக்கும். அவனோட தொடர்புல இருக்க அந்த பெரிய தலைங்களுக்கு எல்லாம் தண்டனை கிடைக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்ல. ஈஸியா தப்பிச்சு வெளிய வந்துடுவானுங்க.” என்று பொறுமினான் ஹர்ஷவர்தன்.
“இது ஒரு மாஃபியா மாதிரி ஹர்ஷா. நம்மளால அட் அ டைம்ல மொத்தமா எல்லாம் இதை அழிக்க முடியாது. அப்பப்போ இது மாதிரி செஞ்சு கொஞ்சம் அடக்க தான் முடியும். மத்தபடி, இதுல சிக்காம பாதுகாப்பா இருக்குறதெல்லாம் இனி மக்களோட கையில! இந்த நியூஸ் பெரிய அவெர்னெஸ் க்ரியேட் பண்ணும்னு நம்புவோம்.” என்றான் அபிஜித்.
“சரி அந்த மாஃபியா கும்பல் மோப்பம் பிடிச்சு வரதுக்குள்ள யஷ்வந்த்தை இடம் மாத்தணும். போற வழியில என்ன செய்யுறதுன்னு யோசிக்கலாம்.” என்ற ஹரிஹரன், அதற்கான ஏற்பாட்டை செய்ய, காவல் வாகனத்தில் ஹரிஹனுடன் அவன் நம்பிக்கைக்குரிய ஒருவரை துணைக்கு வைத்துக் கொண்டு முன்னே செல்ல, அவர்களை பாதுகாப்பான இடைவெளியில் தொடர்ந்தனர் அபிஜித் மற்றும் ஹர்ஷவர்தன், அவர்களுடன் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் யஷ்வந்த்தும்!
ஊடகங்களிற்கு விஷயம் பரவியதால், அவர்களிடமிருந்து தப்பிக்கவே இந்த ஏற்பாடு!
*****
முதல் நாள் நள்ளிரவு வெளியான காணொளி காட்சிகள், இதோ அடுத்த நாளும் காட்டுத்தீ போல பரவி, பல செய்தி சேனல்களில் டி.ஆர்.பி ஏற உதவிக் கொண்டிருந்தன.
சமூக வலைத்தளங்களில் மக்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய, அங்கும் சூடான பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
பலர், அந்த வலைதளத்தின் உரிமையாளர்களையும் பயனாளர்களையும் திட்டி தீர்க்க, சில அறிவாளிகள் வழக்கம் போல பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக இருந்திருக்க வேண்டும் என்று பழியை அவர்கள் மீது போட்டனர்!
ஆக, இந்த விஷயம் நாட்டையே பரபரப்பாக வைத்திருந்து.
மற்றொரு பக்கம், அந்த காணொளி காட்சிகளில் சிக்கிய பல முக்கிய பிரமுகர்கள், அவை ஜோடிக்கப்பட்ட காட்சிகள் எனவும், யாரோ அவர்களிற்கு எதிராக செய்த சதி எனவும் சொல்லி தப்பிக்க முயற்சித்து வந்தனர்.
வெளியே இத்தனை நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க, அதற்கு காரணமானவனோ வலியில் அலறிக் கொண்டிருந்தான்.
தமிழ்நாடு – ஆந்திரா பார்டரிலுள்ள, ஹரிஹரனின் மனைவிக்கு சொந்தமான இடம் அது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த இடத்தில் ஆளரவம் சிறிதும் இல்லாமல் இருக்க, அது அவர்களிற்கு வசதியாக போயிற்று.
முன்தினம் இரவு காவல் நிலையத்திலிருந்து கிளம்பியவர்கள், ஹைதராபாத்தை விட்டு வெகு தூரம் வெளியே வந்ததும் தான் வாகனத்தை நிறுத்தினர்.
“ஹர்ஷா, இனிமே நாங்க ரிட்டர்னாகனும். எங்களை இப்போவே தேட ஆரம்பிச்சுருப்பாங்க. நீங்க நான் சொல்ற இடத்துக்கு அவனை கூட்டிட்டு போங்க. அங்க உங்களுக்கு தேவையான எல்லா உதவியும் கிடைக்கும்.” என்ற ஹரிஹரன், “நான் அப்போவே சொன்னேன்ல, அவனை பழிவாங்க உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்னு. அவனால பாதிக்கப்பட்ட எல்லாருக்காவும் நியாயம் உங்க மூலமா கிடைக்கட்டும். நாங்க, அதுக்குள்ள மத்ததை ஃபேஸ் பண்ண தயார் பண்றோம். பி கேர்ஃபுல்.” என்றும் கூறிவிட்டு, ஹர்ஷவர்தனின் துணைக்கு மற்றொரு நபரையும் அனுப்பி வைத்தான்.
அபிஜித்தோ வேறு எதுவும் சொல்லாமல், “பத்திரம்!” என்று மட்டும் கூறினான்.
அவர்களிடமிருந்து விடைபெற்ற ஹர்ஷவர்தனோ, இடையில் ஓய்வுக்கு கூட வாகனத்தை நிறுத்தாமல், ஹரிஹரன் கூறிய இடத்தை வந்தடைந்தான்.
ஹரிஹரன் கூறியது போல அங்கு ஏற்கனவே சிலர் ஹர்ஷவர்தனிற்கு உதவி செய்ய தயார் நிலையில் இருந்தனர்.
“சார் சொன்னாரு… நீங்க அவனை என்ன செய்யணும்னு மட்டும் சொல்லுங்க.” என்று நேராக விஷயத்திற்கு வந்தவர்களை ஒரு நொடியேனும் ஆச்சரியத்துடன் பார்த்த ஹர்ஷவர்தனோ, மறுநொடியே ஆத்திரத்தின் மறு உருவமாக மாறி அவர்கள் செய்ய வேண்டியவற்றை சொல்லி இருந்தான்.
அது போலவே வேலையை கச்சிதமாக முடித்து ஹர்ஷவர்தனை கூட்டிச் சென்று காட்டினர்.
அங்கு யஷ்வந்த்தின் கீழ் பாதி உடலை மட்டும் சிறு ஓட்டை வழியே வெளியே விட்டிருக்க, அவனின் கால்களை புசித்துக் கொண்டிருந்தன இரு வேட்டை நாய்கள். ஒருநாள் முழுவதும் பட்டினி போடப்பட்டதால், அவை கொலைபசியுடன் இருக்க, கிடைத்த மாமிசம் எதனுடையது என்று ஆராய்ந்து பார்க்க நேரமின்றி, கிடைத்தது வரை லாபம் என்று அவை சாப்பிட்டுக் கொண்டிருக்க, உயிரோடு இருக்கும் போதே இரையாகும் கொடூரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான் யஷ்வந்த்.
யஷ்வந்த் ஒவ்வொரு நொடியும் வலியில் துடித்தபடி கிடப்பதை கண்ட ஹர்ஷவர்தனிற்கு மனம் தடுமாறியது. அவன் என்ன சைக்கோவா, மற்றவர் துடிப்பதை ரசிப்பதற்கு?
இருப்பினும், யஷ்வந்த் செய்த குற்றங்கள் கண்முன் வந்து போக, இறுதியில் மௌனிகாவின் உடலற்ற தலையும் நினைவிலாட, தன் மனதை இரும்பாக்கிக் கொண்டவன், கத்தி கதறுபவனை, இரக்கமின்றி பார்த்தபடி நின்று விட்டான்.
யஷ்வந்த்தோ அந்த மிருகங்கள் கொடுத்த வலியை தாங்க முடியாமல்,, “பிளீஸ் என்னை கொன்னுடு…” என்று கதற, அவனருகே சென்ற ஹர்ஷவர்தனோ, “ஃபேன்டஸி ஃபேன்டஸின்னு அலைஞ்சேல, சாகும் போதும் ஃபேன்டஸியோடவே செத்து போ!” என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து தள்ளி நின்று கொண்டான்.
அப்போது ஹர்ஷவர்தனின் அலைபேசி ஒலிக்க, அழைத்தது அவன் மனைவி தான். அவன் அதை ஏற்க, அவனின் மொழிக்காக கூட காத்திராமல், “ஹலோ, எங்க இருக்கீங்க? நியூஸ்ல என்னவோ சொல்றாங்க?” என்று கேட்டாள் பிரியம்வதா.
அதற்கு அவன் மறுமொழி கூறும் முன்பே, யஷ்வந்த்தின் கதறல் சத்தம் அவளை அடைந்திருக்க, “ஹர்ஷா, எங்க இருக்கீங்க?” என்று பயத்துடன் வினவ, “வதும்மா ரிலாக்ஸ்… எனக்கு ஒன்னுமில்ல. நான் நல்லா இருக்கேன்.” என்று அவளின் பயம் குறைய வேண்டும் என்று அழுத்திக் கூறினான்.
“அப்பறம் ஏன்… அந்த சத்தம்…” என்று எப்படி கேட்பது என்று தெரியாமல் அவள் திணற, “உனக்கும் உன் அக்காக்கும் நியாயம் கிடைக்கணும்னு சொன்னேல, இதோ அந்த நியாயம்!” என்றான் ஹர்ஷவர்தன்.
“அவனை என்ன செஞ்சீங்க?” என்று அவள் வினவ, “அது உனக்கு தெரிய வேண்டாம்மா. இனி, அவன் இந்த உலகத்துல இல்ல. அதை மட்டும் தெரிஞ்சுக்கோ.” என்றான் ஹர்ஷவர்தன்.
அவளும் அதை புரிந்து கொண்டவளாக, “எப்போ வருவீங்க?” என்று வினவ, “நாளைக்கு மார்னிங் அங்க இருப்பேன் வது.” என்றவன் பேச்சை மாற்றும் பொருட்டு, “பிரஜன் என்ன பண்றான்?” என்று கேட்டு அவனிடமும் பேசினான்.
“எங்க டா இருக்க?” என்ற பிரஜனின் கேள்விக்கு பதில் சொல்லாமல், “அவனுக்கான தண்டனையை நிறைவேத்திட்டு இருக்கேன் டா.” என்று நடப்பதை சுருக்கமாக கூறி, “இது வதுக்கு தெரிய வேண்டாம்.” என்றும் கேட்டுக் கொண்டான் ஹர்ஷவர்தன்.
சில நொடிகள் மறுமுனை மௌனமாக இருக்க, “என்னாச்சு?” என்று வினவினான் ஹர்ஷவர்தன்.
“அவனுக்கு இந்த தண்டனை பத்தாதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன்.” என்று பிரஜனிடமிருந்து பதில் வர, “ஹ்ம்ம், நானும் முதல்ல அப்படி தான் நினைச்சேன். ஆனா, இதையே என்னால பார்க்க முடியாம வெளிய வந்துட்டேன். நான் என்ன அவனை மாதிரி எந்த உணர்வுகளும் இல்லாத சைக்கோவான்னு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன்.” என்று கூறிவிட்டு, மீண்டும் ஒருமுறை பத்திரமாக இருக்க சொல்லி அறிவுறுத்திவிட்டு அழைப்பை துண்டித்தான் ஹர்ஷவர்தன்.
உடலின் கீழ் பகுதி சதை முக்கால்வாசி காலியான நிலையில், அதிக உதிரப்போக்கினால் மயக்க நிலையில் இருந்து யஷ்வந்த்தை பார்த்த ஹர்ஷவர்தன் வன்மத்துடன், “அவன் சாகுற வரை மயங்க கூடாது.” என்று அங்கிருந்தவர்களிடம் கூறியவன், அதற்கு மேல் அங்கிருக்க மனமில்லாமல் வெளியே சென்று விட்டான்.
*****
அதே சமயம், கிட்டத்தட்ட இருபது மணி நேரமாக நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் செய்திக்கு காரணமானவன் எங்கே என்று ஹரிஹரனையும் அபிஜித்தையும் மாற்றி மாற்றி ஊடகமும் உயரதிகாரிகளும் கேள்வி கேட்க, அவர்களோ ஒரே வரியில், ‘அவன் தப்பிச்சுட்டான்.’ என்று கூறி இருந்தனர்.
“இவ்ளோ கேர்லெஸாவா இருப்பீங்க? உங்க கேஸ் ரெக்கார்ட் பார்த்தா, நல்லா தான் இருக்கு. ஆனா, இந்த கேஸ்ல மட்டும் ஏன் இவ்ளோ அசால்ட்டா இருந்துருக்கீங்க?” என்று உயரதிகாரிகள் வினவ, “என்ன சார் பண்ண, இந்த கேஸ்ல தான் நிறைய முக்கிய புள்ளிங்க மாட்டி இருக்காங்க. அதுல, யாரு அவன் தப்பிக்க உதவுனாங்கன்னு தெரியல. சிசிடிவி க்ளிப்பிங்ஸ் கூட இருக்கு. நீங்க பெர்மிஷன் குடுத்தா, அந்த லீக்கான வீடியோஸ்ல இருக்க ஆளுங்களை விசாரிக்குறோம்.” என்றனர் இருவரும்.
ஆதாரத்திற்கு, யஷ்வந்த்தை யாரோ கடத்தி கூட்டிக் கொண்டு போவது போல சிசிடிவி காட்சிகளை காட்டினர். அது, ஹர்ஷவர்தன் யஷ்வந்த்தை கூட்டிக் கொண்டு போகும் காட்சி தான். அதில் யஷ்வந்த்தின் முகம் மட்டும் தெளிவாக தெரியும் படியும், மற்றவர்களின் முகமோ, வாகனத்தின் எண்ணோ தெளிவற்ற நிலையில் இருக்கும் படியும் பார்த்துக் கொண்டனர்.
இருவருமே புத்திசாலித்தனமாக முக்கிய புள்ளிகளின் பெயரை இழுத்திருக்க, அதற்கு மேல் அதை விசாரிக்க சொல்லி உயரதிகாரிகள் உத்தரவிட முடியுமா?
மெல்ல மெல்ல யஷ்வந்த் காணாமல் போன செய்தி மக்கள் மத்தியில் மறந்து காணாமல் போன சமயம், காட்டு விலங்குகளால் தாக்கப்பட்ட நிலையில் ஒரு சடலம் கிடைக்கப்பட்டது.
சடலம் என்று கூறுவதற்கு பதில், சிதைந்த தலையும் அதனுடன் ஒட்டிக்கொண்டு சில எலும்புகளும் கிடைத்தன என்று கூறலாம்!
ஆய்வுகளின் முடிவில் அது யஷ்வந்த்துடையது என்றும் கண்டறியப்பட்டது.
மீண்டும் ஊடகங்கள் இந்த செய்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர்.
சிலர், யஷ்வந்த்தின் குற்றங்களை மனிதர்கள் கண்டு கொள்ளா விட்டாலும், இயற்கை சரியான தண்டனையை கொடுத்திருக்கிறது என்று கூற, பலர் காவல்துறையின் மெத்தனப் போக்கை விமர்சித்தனர்.
இன்னும் சிலர், இதை வைத்து அரசியல் செய்ய, மீதம் இருப்பவர்கள் யஷ்வந்த் வழக்கில் சம்பந்தம் இருப்பதாக கூறப்பட்டு, பின்பு இல்லை என்று சமாளிக்கப் பட்டவர்களை பற்றி கேள்வி எழுப்பினர்.
ஆக, ஏதோ ஒரு வகையில் பேசு பொருளானான் யஷ்வந்த். அவனையும் மறந்து, கடந்து போக தான் செய்வர் மக்கள். ஏனென்றால், இங்கு தான் தினம் தினம் புதிதாக ஒரு குற்றம் நடந்து கொண்டு இருக்கின்றதே!
ஆனால், அவனால் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் அவனை வாழ்நாள் முழுவதும் நினைவு வைத்துக் கொண்டு இருப்பர். அவர்கள் நினைவில், நஞ்சிலும் கொடியவனாக என்றும் நிலைத்திருப்பான் யஷ்வந்த்!
*****
ஒரு வருடம் கழித்து…
“வதும்மா, இன்னும் கொஞ்சம் தான் இருக்கு. இதை குடிச்சுடேன்.” என்று கையில் சூப்பை வைத்துக் கொண்டு ஹர்ஷவர்தன் கெஞ்ச, அவன் மனையாளோ ஒய்யாரமாக அவன் மீது கால்களை போட்டு நீள்சாய்விருக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி, காணொளி அழைப்பில் அவளின் மாமியாரிடம் கணவனை குறை சொல்லிக் கொண்டிருந்தாள்.
“அத்த, என்னதான் பிள்ளையை வளர்த்துருக்கீங்க? சூப்ல உப்போ காரமோ எதுவுமே இல்ல. அதை போய் வேஸ்ட் பண்ணாம குடின்னு படுத்திட்டு இருக்காரு.” என்று கூற, “அவன் கிடக்குறான் லூசுப்பைய. உங்க மாமாவையும் அப்பாவையும் கோர்த்து விட்டுட்டு நான் நாளைக்கே ஊருக்கு வரேன் பிரியாம்மா.” என்றார் வள்ளி.
“ம்மா, போன வாரம் தான வந்துட்டு போனீங்க.” என்று வேகவேகமாக மனைவியிடமிருந்து அலைபேசியை பறித்து ஹர்ஷவர்தன் வினவ, “நான் என் மருமகளை பார்க்க, எப்போ வேணும்னா வருவேன். உனக்கென்ன டா? அவளை ஊருக்கு அனுப்புன்னு சொன்னா, அதை செய்ய மாட்டானாம். ஏன் வர, எதுக்கு வரன்னு ஆயிரம் கேள்வி கேட்பானாம்! அப்படியே அப்பாவை மாதிரி பொறந்துருக்கான். என் பேரனாவது, என்னை மாதிரியோ, அவங்க அம்மாவை மாதிரியோ பிறக்கணும் கடவுளே!” என்று மகனை திட்டுவதில் ஆரம்பித்து வேண்டுதல் வரையிலும் சென்று விட்டார் வள்ளி!
ஹர்ஷவர்தனோ, ‘ஏன் டி’ என்னும் வகையில் பிரியம்வதாவை பார்க்க, அவளோ கண்ணடித்து, “லாஸ்ட் டைம் எனக்கு தெரியாம உங்க கேங்கை பார்க்க போனீங்கள, அதுக்கான பனிஷ்மெண்ட் இது. என்ஜாய்!” என்று வாயசைத்தவள், மாமியாருடன் ஐக்கியமாகி விட, அவளை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினான் ஹர்ஷவர்தன்.
இப்படி சண்டையும் சமாதானமுமாக, தவறும் தண்டனையுமாக, ஊடலும் கூடலுமாக அழகான கவிதையாக சென்று கொண்டிருக்கிறது ஹர்ஷவர்தன் மற்றும் பிரியம்வதாவின் வாழ்க்கை.
பிரியம்வதாவிற்கு நடந்ததை பற்றியோ, பிரார்த்தனா கொலைக்கு காரணம் பற்றியோ வீட்டினருக்கு தெரியாது. தெரிந்தால் அவளின் தந்தையால் தாங்கிக் கொள்ள முடியாது என்று பிரியம்வதா மறுத்து விட்டாள்.
மேலும், அவள் ‘கேங்’ என கூறுவது ஹர்ஷவர்தன், அபிஜித், ஹரிஹரன் மற்றும் பிரஜன் ஆகிய நால்வரையும் தான். யஷ்வந்த் வழக்கு முடிந்ததில் இருந்தே நால்வரும் அவ்வபோது கூட்டு சேர்ந்து உரையாடுவர். அது என்னவென்று யாருக்கும் தெரியாது. பிரியம்வதா உட்பட!
அதற்காக தான் இப்போது கூட ஹர்ஷவர்தனை வைத்து செய்து கொண்டிருக்கிறாள் பிரியம்வதா.
ஒருநாள் முழுவதும் அவனை அவள் பின்னே அலைய வைத்தவள், அடுத்த நாள் வெளியே செல்ல வேண்டும் என்று மட்டும் கூறி, அவனை அழைக்க, மனைவியை சமாதானப்படுத்த என்ன வேண்டுமென்றாலும் செய்ய சித்தமாக இருப்பவன், அடுத்த நொடியே எங்கு என்று கூட கேட்காமல் கிளம்பி விட்டான்.
வாகனத்தில் கூட அவள் வழி சொல்ல, அவன் மெதுவாக இயக்கினான். இறுதியில் அவர்கள் வந்த இடம், கல்லறை!
அப்போதே புரிந்து போனது ஹர்ஷவர்தனிற்கு!
எதுவும் பேசாமல் மௌனமாக பிரியம்வதாவின் பின்னே நடந்தவன், மௌனிகாவின் கல்லறை முன்பு அதே மௌனத்துடன் நின்றிருக்க, பிரியம்வதா மனதிற்குள்ளேயே, இல்லாமல் போனவளிடம் உரையாடினாள்.
‘முதல்ல, உங்க மேல ஒரு மிக்ஸட் ஃபீலிங் தான் இருந்துச்சு. ஒரு பக்கம், ஹர்ஷாவை விட்டுட்டு போனதை நினைச்சு கோபம், மறு பக்கம் அதே காரணத்துக்காக சந்தோஷம்! வேடிக்கையா இருக்குல. எனக்கும் அப்படி தான் இருந்துச்சு. ஆனா, எந்த சமயத்துலயும், நீங்க இல்லாம போகணும்னு நினைச்சதே இல்ல. உங்களுக்கு நடந்தது கொடூரத்தின் உச்சம். அது வேற யாருக்கும் நடக்க கூடாதுன்னு வேண்டிக்குறேன். இப்போ இங்க வந்தது கூட, எனக்காக இல்ல, ஹர்ஷாக்காக! அவருக்கு உங்களை காப்பாத்த முடியலன்னு கில்டி ஃபீலிங் ரொம்பவே இருக்கு. எனக்காக அதை வெளிய காட்டிக்கலன்னாலும், உள்ளுக்குள்ள அதை நினைச்சு மறுகிட்டு இருக்காருன்னு எனக்கு நல்லாவே தெரியும். அவரு மனசுல உங்களுக்கான ஸ்பேஸ் இருக்குறது எனக்கு பிரச்சனை இல்ல. ஆனா, அது கில்டிநெஸா இருக்கக் கூடாது! இதெல்லாம், ஏன் இங்க வந்து புலம்புறேன்னு எனக்கே தெரியல. ஏதோ ஒன்னு, அவரை இங்க கூட்டிட்டு வந்தா நார்மலாவாருன்னு என்னை உந்தி தள்ளுச்சு. அதான் அவரையும் கூட்டிட்டு வந்தேன்.’ என்று மனதிற்குள் கூறியவளை ஹர்ஷவர்தன் தான் இடைவெட்டினான்.
“போலாமா?” என்று அவன் வினவ, “இப்போ நீங்க ஓகேவா?” என்று நிர்மலமான முகத்துடன் அவள் கேட்டாள்.
எதுவும் பேசாமல் அவள் கரத்தை தன் இரு கரங்களிற்குள் பொத்திக் கொண்டவன், “நான் ரொம்ப லக்கி வது.” என்று உணர்ந்து சொன்னான்.
“நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே.” என்று விளையாட்டாக அவள் சொல்ல, “உனக்கு பதில் தான வேணும், அதை வீட்டுக்கு வந்து கேளு விதவிதமா சொல்றேன். இப்போ போலாமா?” என்று அவனும் விளையாட்டாகவே அவன் பதிலைக் கூறினான்.
இருவரின் கரமும் ஒன்றோடொன்று கோர்த்துக் கொள்ள, ஏதோ பேசியபடி அங்கிருந்து அவர்கள் நடக்க, அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய, அந்த கல்லறைக்கு அருகே இருந்த மரத்திலிருந்த பூக்கள் அவர்கள் மேல் விழுந்து வாழ்த்தியது.
வாகனத்தில் போகும் போது, ஹர்ஷவர்தனிற்கு அழைப்பு வர, வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்ததால், யாரென்று பார்க்காமல் ஸ்பீக்கரில் போட்டான் அவன்.
அழைத்தது பிரஜன் தான்!
“டேய், இன்னைக்கு மதியம் மூணு மணிக்கு மீட்டிங் ஞாபகம் இருக்குல…” என்று பிரஜனின் குரல் கேட்டதும், கணவனை முறைத்தாள் பிரியம்வதா.
மானசீகமாக தலையில் அடித்துக் கொண்ட ஹர்ஷவர்தனோ, அவளை சமாளிக்க எண்ணி வாயை திறக்க, அதற்குள் பிரஜனோ, “பிரியாக்கு தெரியாம வா டா. அது சரி, உனக்கு சொல்ல வேண்டாம். நீதான் அவளை ஈஸியா சமாளிக்குறியே. இந்த ஏ.சி.பி தான், ‘ஒயிட் கிளவுடுக்கு தெரியாம வர மாட்டேன்’னு ஒவ்வொரு முறையும் பிடிவாதம் பிடிக்குறாரு. அப்பறம் இந்த அபி பையன் வேற, புது பொண்டாட்டி பேரை சொல்லி எஸ்கேப்பாகிட்டே இருக்கான். ஹ்ம்ம், நான் மட்டும் தான், அப்போ இருந்து இப்போ வரை ஒரே மாதிரி இருக்கேன். சரி சரி, சீக்கிரம் வந்து சேரு.” என்று கொளுத்தி போட்டு அழைப்பை துண்டிக்க, அது நன்றாக பற்றிக் கொண்டது.
“மூணு மணிக்கு க்ளையண்ட் மீட்டிங்ன்னு தான சொன்னீங்க?” என்று கோபத்துடன் பிரியம்வதா கேட்க, “வதும்மா, இப்போ எதுக்கு டென்ஷன். பாரு முகமெல்லாம் சிவந்துருக்கு. நீ கோபப்பட்டா, பாப்பாவும் கோபப்படுமாமே. சிடுசிடுன்னு இருக்க ரெண்டு பேரை என்னால சமாளிக்க முடியாது மா.” என்று கொஞ்ச, அவனின் கொஞ்சல் வேலை செய்யவில்லை.
“ப்ச், கையை எடுங்க. அதென்ன எப்போ பார்த்தாலும் நாலு பேரும் மட்டும் சேர்ந்து மீட் பண்றீங்க. இதுல, எனக்கு தெரிய கூடாதாமே! பிரஜன் அண்ணாக்கு கால் பண்ணி, அதை தனியா விசாரிச்சுக்குறேன். இப்போ நீங்க சொல்லுங்க. என்ன ஃபிராடு வேலை பார்க்குறீங்க?” என்று அவள் விடாமல் கேட்க, வாகனத்தை ஓரமாக நிறுத்தியவனோ, “எந்த ஃபிராடு வேலையும் இல்லம்மா. என்னை பார்த்தா அப்படியா தெரியுது?” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டான்.
“ஃபிராடு தனத்துக்கான பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு! எனக்கு தெரியாம, ஏதாவது செஞ்சா…” என்று கூறியவளின் வாயை வேகமாக மூடியவன், “ஒருமுறை பட்டதே ஜென்மத்துக்கும் போதும்மா. திரும்ப திரும்ப அதை சொல்லாத.” என்று கூற, அதற்கு மேல் அவளின் மிரட்டல் இருக்குமா என்ன?
“ம்ச், நான் அதை சொல்ல வரலப்பா. இனிமே, அப்படி செஞ்சா அடி மிதி தான்னு சொல்ல வந்தேன்.” என்று கண்ணடித்தவளை இழுத்து அணைத்துக் கொண்டவன், சில நொடிகளிற்கு பின்னர், “மூணு மணிக்கு பெர்மிஷன் உண்டு தான?” என்று கேட்க, “ஃபிராடு ஃபிராடு!” என்று ஹர்ஷவர்தனை அடித்தாள் பிரியம்வதா.
தொடரும்…
Satiyana punishment tha antha yash6ku nalla venum inum kodurama irunthu irukalam kandipa ivana court submit panna entha punishment kedaikathu athuku ithu tha crt . Super harsha. Ipo rendu perum sernthu santhosama irukinga ok . But 4 perum sernthu ena panringa athuvum priya ku theriyama secret operation panringla ethum
Aama inum kodurama yosicha nammalum Yash mathri aagiduvome 😷😷😷 Hehe adhana… Maybe next part nu onnu irundha theriya varum 😊😊😊 Tq so much for ur continuos support throughout the story sis 😍😍😍
Sariyaana punishment. Eppothan satisfied ah erukku…kathailaavathu niyaayam kedaikkattum…
Excellent update dear 👍👍👍👍
Tq so much sis 😍😍😍
சரியான தண்டனை யஷ்வந்த்க்கு
யஷ்வந்த் சொல்லற மாதிரி மனிதர்களா திருந்தனும் இல்லைனா மௌனிகா & பிரியாவின் அக்காவை போல பல பேர் கஷ்ட படுவார்கள்…
அதே போல தண்டனைகளும் கடுமையாக மாறனும்
உண்மை தான்! இனி, அவங்களே அவங்களை பாதுகாத்துக்கணும் 🧘🏻♀️🧘🏻♀️🧘🏻♀️
Yashvanth oda mudivu spr…….. Spr ah finish pannitinga sis….. Harsha vathu happy ending 👌👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Tq so much for ur continuous support throughout the story sis 😍😍😍
Super move and nice story.. Fantastic ending👏👏👏👏👏👏
Tq so much for your continuous support from starring till the end 😍😍😍
அந்த சைட்ல ஒன்சைடா லவ் பண்ணேன் பழி வாங்கனும்னு சொன்ன பெண் யார்னு சொல்லவே இல்லை நீங்க
Adhu purpose ah dhan sollala sis… Idhu mathri vishayangala namma perusa eduthukadha oruthar dhan kaaranama irupanga… Adhe mathri dhan ingayum yarune theriyadha marandhu pona yaro oruthar ivlo periya vishayathuku kaaranama irukanga… Ipdi sollanum nu try pannadhu…Sariya convey aacha nu therila