Skip to content
Home » விழா

விழா

வளையல் சூட்டும் விழா

“ஹே மாலினி எப்படி இருக்க வா வா..”

“உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சு என்ன இந்த பக்கம் வர அதிசயமா இருக்கு “.

” உங்கள பாக்க தான் வந்துட்டு இருக்கேன் “.

“என்ன பாக்கவா அதிசயமா இருக்கு என் வீட்டு பக்கம் நீ வர மாட்டியே “..

“ஏதாவது விசேஷம் நல்லது கெட்டதுனா தானே என் வீட்டு பக்கம் தலை  காமிப்பா இல்லன்னா நான் ஒருத்தி உனக்கு சொந்தம்னு இருக்கறதே உனக்கு தெரியாதே”..

” அப்படி எல்லாம் இல்லைங்க அக்கா”.

” நீங்க வேற , ஏன் கா இப்படி பேசுறீங்க “..

“என்னோட நிலைமையும் உங்களுக்கு புரியும் தானே”.

” நான் வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருக்கேன். சும்மா நேரத்துல இருக்கும் பொழுது ஓய்வெடுத்தா நல்லா இருக்கும் தோணுது மத்தபடி எந்த சொந்த பந்தத்தையும் பார்க்க கூடாது பேசக்கூடாதுன்னு இல்ல கா”.

” நல்லா சொல்ற காயத்ரி ஆனா நான் போன் பண்ணா கூட எனக்கு அந்த வேலை இருக்கு இந்த வேலை இருக்கு நான் ப்ரீ ஆயிட்டு கூப்பிடுரேன் அப்படின்னு சொல்வ “..

“ஆனா கூப்பிட மாட்ட..”..

” ஆனா இன்னைக்கு வீடு தேடி வந்திருக்கு”..

” சரி உக்காரு என்று விட்டு மாலினிக்கு காயத்ரி தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க”..

” வாங்கி குடித்துவிட்டு அக்கா தப்பா எடுத்துக்காதீங்க இப்பயும் ஒரு முக்கியமான விஷயமா தான் வந்து இருக்கேன் “..

“சொல்லுடி நீ வரும்போதே எனக்கு தெரியாதா என்ன முக்கியமான விஷயம் “.

“அக்கா பாப்பா மாசமா இருக்கா நாளைக்கு வளைகாப்பு வைக்கலாம் என்றுதான் அதான் சொல்லிட்டு போக வந்தேன்”..

” என்னடி ?மாலினி நாளைக்கு வளைகாப்புன்னு இப்ப வந்து சொல்ற “..

“அதுவும் ஏழாவது மாசம்  நீ சொல்லவே இல்லையே “..

“அக்கா தப்பா எடுத்துக்காதீங்க நான் இன்னைக்கு தான் லீவு போட்டேன். மத்தபடி என்னென்ன செய்வேனோ அதெல்லாம் எங்க மாமியார் தான் பாத்துக்குறாங்க “..

“அதனாலதான் ,சரி சரி விடு உன்னோட சூழ்நிலை எனக்கு தெரிஞ்சது தானே சரி விடு வந்துறோம்”..

” நம்ம சொந்த பந்தத்துக்கெல்லாம் சொல்லிட்டியா ?”.

“பக்கத்துல இருக்கவங்களுக்கு நேர்ல போய் சொல்லிடுறேன்”.

” தூரத் தொலைவில் இருக்கவங்களுக்கு போன் பண்ணி தான் சொல்லணும் “..

சரிடி சரி பாரு உன்னோட சூழ்நிலைய எல்லாரும் புரிஞ்சிப்பாங்க ஆனால் தூரத்தில் இருக்கிறவங்களுக்கு எல்லாம் நீ முன்கூட்டியே சொல்லலாம் இல்ல “..

“நான் ஒரு சிலருக்கு சொல்லி இருக்கேன் கா. “

“நாளைக்கு காலையிலேயே வந்துருங்க நம்ம வேன் எடுத்துட்டு பாப்பா வீட்டுக்கு போயிடலாம் “..

“சரி மாலினி சரி பார்த்து போ என்று விட்டு காயத்ரி மாலினியை அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்குள் வந்தவர் “..

“தனது மகளிடம் இங்கு பார்த்தியா டி உன் சித்தியை நாளைக்கு உன் அக்காவுக்கு வளைகாப்புனு இன்னைக்கு வந்து சொல்றா என்று நொடிந்து கொண்டார்”..

” விடுமா சித்தி வேலைக்கு போயிட்டு இருக்காங்க “.

“வேலைக்கு போறத நான் தப்பு சொல்லல டி ஆனா என்றார் “..

“அம்மா விடு அவங்கவங்க சூழ்நிலை .அவங்க கிட்ட நேர்ல பேசும்போது நல்லவிதமா பேசிட்டு போன உடனே  தப்பா பேசுறியா ஏன்?”

” நீ வேற போடி என் தங்கச்சியை நான் ஏன் தப்பா பேச போறேன்”.

” தப்பா பேசல நாளைக்கு வளைகாப்பு இப்போ வந்து சொல்றாளே பொண்ணு மாசமா இருக்கா என்ற விஷயத்தை கூட நம்ம கிட்ட சொல்லல என்ற ஒரு ஆதங்கம் அவ்வளவுதான்”..

” சரிமா விடு நாளைக்கு அக்காவோட வளைகாப்புக்கு போய் சமாய்ச்சிடலாம். “

“நம்ப இல்லாம போலாம் டி என்றார் காயத்ரி”..

” மறுநாள் பொழுது நன்றாக புலர்ந்திருந்தது”..

” காயத்ரி தனது மகள் சுவாதியையும் அழைத்துக் கொண்டு மாலினி வீட்டுக்கு சென்று இருந்தார் “..

“கலை 6:00 மணி போல் காயத்ரி மாலினி வீட்டில் கூடியிருந்தார்”.

” அவரைப் போலவே இன்னும் ஒரு சில நெருங்கிய உறவினர்களும் ,அக்கம் பக்கம் இருப்பவர்களும் கூடியிருந்தார்கள். “

“காலை மணி 6:30 போல் அனைவருக்கும் டீ போட்டுக் கொடுத்துவிட்டு ஒரு சின்ன வேன் ரெடி பண்ணி இருந்தார்கள் “

“அந்த டிராவல்ஸில் அனைவரையும் மாலனியின் மகள் சாந்தவி வீட்டிற்கு வந்து விட்டார்கள் “

“காலை 8 மணி போல் சாந்தவி வீட்டில் அனைவரும் கூடி இருந்தார்கள் “..

“சாந்தவி வீட்டில்  நெருங்கிய உறவினர்களும், அவர்கள் வீட்டுக்கு அக்கம் பக்கம் இருப்பவர்களும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கூடி இருந்தார்கள் “..

“காலை 10.30 to 12 வளைகாப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது”

வளைகாப்பிற்கு தேவையான அனைத்து உணவு பதார்த்தங்களையும் ஏற்கனவே சாந்தவி வீட்டிலே சமையல்காரர்களை வைத்து செய்ய சொல்லி விட்டார் மாலினி “.

“தன் வீட்டிலிருந்து தன் மகளுக்கு என்று ஐந்து வகையான சாதம்  கொஞ்சம் கொஞ்சமாக செய்து எடுத்துக் கொண்டு வந்திருந்தார் “

“மற்றபடி சொந்த பந்தங்களுக்கும் அருகில் உள்ளவர்களுக்கும் பரிமாறுவதற்கு சமையல்காரர்களிடம் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்”

” இரு விட்டார்களும் ஆகும் செலவில் பாதி பாதியாக பிரித்துக் கொள்ளலாம் என்று முடிவும் செய்திருந்தார்கள். “

“அதற்கு ஏற்ப வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அனைத்து தேவையான பொருட்களும் வாங்கிக் கொண்டு வந்திருந்தார்கள் “

“தேவையான அனைத்தையும் மாலினியின் மாமியார்தான்  தன் மகளை அழைத்துக் கொண்டு சென்று வங்கிக் கொண்டு வந்திருந்தார் “

” சாந்தவியை சாந்தவியின் நாத்தனார் வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அழைத்து  கொண்டு வந்து உட்கார வைத்தார் “

“அப்பொழுது நாத்தனார் மாலை போடுமாறு சரோஜா சொன்னார்”

“இப்பொழுதெல்லாம் மாமா மாலை போட மாட்டார்களா என்று காயத்ரியின் மகள் சுவாதி வாயை வைத்துக் கொண்டு இல்லாமல் கேட்டாள் “

“அப்பொழுது மாலினியின் மாமியார் சரோஜா தான் இப்ப இருக்க புள்ளைங்களுக்கெல்லாம் என்ன தெரியுது என்றார்”

” ஏன் ?பாட்டி நான் என்ன தப்பா சொல்லிட்டேன் என்று கேட்டதற்கு அப்படியெல்லாம் எதுவும் இல்ல “

“வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கும்போது நாத்தனார் கூப்பிட்டு வந்து உட்கார வைத்தால் நல்லது “

“அதேபோல் நாத்தனார் மாலை போட வேண்டும் என்று சொல்வார்கள் என்று விட்டார் “

“எதையோ செய்யுங்க உங்க பஞ்சாங்கத்தில் நான் வரல என்று சுவாதி வாயை கோணித்து  காண்பித்தால் சுற்றியுள்ளவர்கள் சிரித்துவிட்டு வளைகாப்பு நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள்”

” சாந்தவியின் கணவன் குணாலையும் அருகில் உட்கார வைத்தார்கள் “

“இருவரும் திருமணத்தின் போது கட்டிருந்த பட்டு வேஸ்டி சட்டையும் கூரைப்புடுவையும் கட்டிருந்தார்கள்”

“கூரைப்புடவை எனக்கு வேண்டாம் அம்மா .எனக்கு திருமணத்தின் போது தான் கூரைபுடவை எடுத்தீர்கள் “

“இப்பொழுது வளைகாப்பிற்காவது புது புடவை கட்டிக் கொள்கிறேனே என்று சொன்னதற்கு சரோஜா பாட்டி ஒரே வார்த்தையாக அப்படி எல்லாம் செய்யக்கூடாது “

“திருமணத்தின் போது என்ன உடை அணிந்து இருந்தோமோ அதையேதான் வளைகாப்பின் போதும். அணிந்து கொள்ள வேண்டும் “

“பாட்டி எனக்கு வேறு ஏதாவது நல்ல புடவை எடுத்திருந்தாலும் பரவாயில்லை என்றதற்கு இதுவும் நல்ல புடவை தான் “

“கூரைப்புடவையை இப்பொழுது கட்டிக்கொண்டு நாளை உனக்கு குழந்தை பிறந்த பிறகு இந்த கூரை புடவையிலே உனது குழந்தைக்கு தொட்டில் கட்டலாம் என்றார் “..

“என்ன ஏன் ?என் குழந்தைக்கு தொட்டில் கூட உங்களால் வாங்கித் தர முடியாதா என்றதற்கு சரோஜா நொடிந்து கொண்டார் “

“என் மகனும்,மருமகளும் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள் எனக்கு இருப்பதும் நீ ஒரே பேத்தி உனக்கில்லாததா இருந்தாலும் சாஸ்திர சம்பிரதாயம் என்று இருக்கிறது அல்லவா “

“கூரைப் புடவையில் குழந்தைக்கு தொட்டில் கட்டினால் நல்லது என்றார் “

“ஏதோ ஒன்று சொல்கிறீர்கள் ஆக மொத்தம் எனக்கு ஒரு  நல்ல புடவை கூட கிடைக்காது “

“சாந்தவி உனக்கு புது புடவை தானே .ஒன்றல்ல இரண்டல்ல நான் பத்து கூட வாங்கித் தருகிறேன் “

“ஆனால் ,நீ வளைகாப்பியின் பொழுது கூரைப்புடவை தான் கட்ட வேண்டும் என்றார்”

” எதையோ செய்யுங்கள் என்று விட்டு அமைதியாகிவிட்டாள் சாந்தவி “

“வயதில் பெரியவர்  சாந்தவியின் பாட்டி சரோஜா முதலில் நலுங்க  வைத்துவிட்டு என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டுமோ ஒவ்வொன்றையும் செய்துவிட்டு வேப்பிலை காப்பு முதலில் அணிவித்தார்”

” பாட்டி இது என்ன செய்கிறாய் என்று சாந்தவி கேட்க “

“இது என்ன டி கேள்வி வேப்பிலை காப்பு என்றார் “

“அதான் எதற்காக ?ஏன் ?எனக்கு தங்க வளையல் கூட வாங்கவில்லையா ?என்றவுடன் சரோஜா பேத்தியை பார்த்து முறைத்து விட்டு என்னடி எதற்கெடுத்தாலும் நாங்கள் என்னவோ பஞ்சத்தில் அடிபட்டது போல் பேசிக் கொண்டிருக்கிறாய் “

“உனக்கு தங்க வளையல் எல்லாம் வாங்கிக்கொண்டு தான் வந்திருக்கிறோம். “

“உன் அப்பன் கடை கடையாக தேடி உனக்காக என்று வாங்கி இருக்கிறான் “இருந்தாலும் முதலில் நீ உனக்கு அதுவும் வயிற்றில் குழந்தை சுமந்து கொண்டிருக்கும் பெண்ணுக்கு வேப்பிலை காப்பு தான் அணிய வேண்டும் என்றார் “

“அப்பொழுது காயத்ரி அது தாண்டா மா இப்பொழுது உன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கும் உனக்கும் நல்லது என்றார். “

“அப்படி என்ன பெரியம்மா நல்லது என்று கேட்டாள் சாந்தவி”

“பாட்டியே சொல்வார்கள் என்றவுடன் என்ன பாட்டி என்று கேட்டாள் .சுற்றியுள்ள ஒரு சில இளவட்டங்களும் அப்படி அதில் என்ன நற்பயன்கள் இருக்கிறது என்று கேட்டவுடன் நற்பயன்களும் இருக்கிறது “

“உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கும்”

” வளைகாப்பு நிகழ்ச்சியின் போது வந்தவர்கள் ஒரு சிலரின் எண்ணங்கள் எதிர்மறையாகவும் இருக்கக் கூடும்”

அதேபோல்,” நோய் தொற்றில் இருப்பவர்களும் இருப்பார்கள். “

“இந்த வேப்பிலை காப்பு அவர்களை அருகில் அண்ட விடாமல் பார்த்துக் கொள்ளும்”

” தீய எண்ணங்களுடன் வருபவர்களின் எண்ணங்கள் உங்களை பாதிக்காத அளவிற்கு பார்த்துக் கொள்ளும் “

“அதேபோல் நோய் பட்டு உள்ளவர்கள் வந்தாலும் அவர்களின் நோய்வாய் உங்களை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் “

“அப்படியா ?அது எப்படி சாத்தியமாகும் என்று ஒரு இளம் பெண் கேட்டதற்கு “

”  தங்க வளையல்களை விட மண் வலைகளை போட்டால் மண்வலையலியன் சத்தத்தில் குழந்தையின் அசைவு நன்றாக உங்களுக்கு தெரியும் “

“நீங்கள் தினமும் குழந்தைகளிடம் பேச வேண்டும் உங்களுக்கு இப்பொழுது இருக்கும் பெண்களுக்கெல்லாம் வயிற்றில் இருக்கும் குழந்தைகளிடம் பேசுவதற்கு எங்கு நேரம் இருக்கிறது”

” கையில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதற்கே உங்களுக்கெல்லாம் நேரமில்லை “

“எப்பொழுது பார்த்தாலும் உங்கள் கண்ணுக்கு தெரிவது என்னவோ அந்த சின்ன சோப்பு டப்பா தானே என்றார் “

“சரோஜா கேட்க சுற்றியுள்ளவர்கள் என்ன சோப்பு டப்பாவா ?என்று சிரித்தார்கள் “

“பின்ன எந்த நேரமும் நீங்கள் அதையே தானே வைத்து சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார் “

“சரி பாட்டி நீங்கள் சொல்லுங்கள் இப்பொழுது வேப்பிலை காப்பு பற்றி என்ற உடன் வேப்பிலை காப்பு அணிவதால் நம் உடலில் இருக்கும் எந்த தீங்கும் அண்டாது”

” வேப்பிலை இருக்கும் இடத்தில் துஷ்ட சக்தியும் கிருமிகளும் அண்டாது. “

“வேப்பிலை வளையல்களை போல கண்ணாடி வளையல்களும் மகத்துவம் வாய்ந்தது தான்”

“கண்ணாடி வளையல் அணியும் பொழுது மனதில் மகிழ்ச்சி உண்டாகும் “

“கண்ணாடி வளையல் ஓசையால் எந்த துஷ்ட சக்தியும் அண்டாது ஆகையால்  தான் வளைகாப்பின் போது முதலில் வேப்பிலை காப்பு அணிகிறோம்”

” அதன் அடுத்த படியாக மண் வளையல்களும் அணிவிக்கப்படுகிறது என்றார் “

“சரி பாட்டி நீங்கள் சொல்வதை அனைத்தையும் ஒத்துக் கொள்கிறோம் என்று இளம்வட்டங்கள் சொன்ன பிறகு இதை கேட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல் நீங்களும் பின்பற்றுங்கள் “

“பின்பற்றுவதால் உங்களுக்கும் உங்களின் வாரிசுகளுக்கும் நன்மை உண்டாகும் என்றார் “

“சரி பாட்டி என்றவுடன் சரோஜா பாட்டியும் தனது பேத்திக்கு தங்க வளையல் அடுத்தபடியாக மண் வளையல் அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சியை சிறப்பாக முடித்து வைத்தார். “

“அதன் பின் ஒவ்வொரு பெரியவர்களாக வந்து வளையல் போட்டு வளைகாப்பு நிகழ்ச்சியும் நன்றாக முடித்து வைத்துவிட்டு சாந்தவியையும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையும் நல்ல முறையில் இருக்க வேண்டும் “

“சாந்தவி நல்ல முறையில் குழந்தை பெற்று எடுக்க வேண்டும் என்று வாழ்த்து விட்டு சென்றார்கள் “

“நாமும் அவர்களைப் போலவே சாந்தவியும் ,அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுவோம்”..

சரோஜா பாட்டி கூறியது போல் நாமும் அவர் கூறியதை காதில் வாங்கியதோடு நிற்காமல் அதை பின்பற்றவும் செய்வோம்

சுபம் ..

அன்புடன்

தனிமையும் காதலி

2 thoughts on “விழா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *