Skip to content
Home » வேண்டும்நீ எந்தன் நிழலாய் – 3

வேண்டும்நீ எந்தன் நிழலாய் – 3

அத்தியாயம் – 3

பிரதம மந்திரி வாழ்த்துக்கள் தெரிவித்து பூங்கொத்து ஒன்றையும் அனுப்பி இருந்தார்.. அதன்பின் அமைச்சரை வைத்து ‘மேத்ராஷ்’ என்ற பெயரில் புதிய ஃபேஷன் கம்பெனியை திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினான் நிதின் அவனது கூடவே நின்றிருந்தான் ஆராஷி..

“எல்லாருக்கும் வணக்கம்.. எங்களோட அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்..ரெனி ஃபேஷன் உலகம் பூரா பேர் வாங்கி இருக்குனா அதுக்கு உங்கள மாதிரி ஆளுங்க தான் காரணம்.. இந்த இந்தோ-ஜப்பான் கொலாபுரேஷன்க்கும் உங்களோட ஆதரவு எப்பவும் வேணும்னு கேட்டுக்கிறேன்..

இந்த கொலாபுரேஷன் எங்க அப்பா மிஸ்டர் சரத் ஶ்ரீ யோட ஆசை அவர் இப்போ உயிரோட இல்லைனாலும் அவரோட ஆசையை நிறைவேத்தனும்னு தான் இதை ஆரம்பிச்சு இருக்கோம்.. அண்ட் ஆராஷி சார் எங்க கம்பெனியோட ப்ராண்ட் அம்பாசிடர் அதுவும் ஒரு காரணம் நாங்க இந்த பிஸினஸ் துவங்க.. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் எங்க ஃபவுண்டர் சைட்ல இருந்து ஒரு அனவுன்ஸ்மெண்ட்

ஆஸ் அ ஃபவுண்டரா அவங்களால இந்த அன்ப்ளான்ட் ஃபங்க்ஷன் ல கலந்துக்க வரமுடியல..இந்த கொலாபுரேஷன் ப்ளான்ட்டு தான் ஆனா இன்னைக்கு நடக்குறது அன்ப்ளான்ட்.. அதான் அவங்களால கலந்துக்க முடியாம போய்டுச்சு..அதுக்காக பகிரங்கமாக எல்லார் முன்னாடியும்..” என்று நிறுத்தியவன் ஆராஷியை ஒரு பார்வை பார்த்துவிட்டு 

“பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்குறாங்களாம்.. மீடியாக்கள் சப்போர்ட் எப்பவும் இருக்கனும்னு கேட்டுகிட்டாங்க” என்று படிக்க அனைவரும் தங்களுக்குள் கிசுகிசுக்க.. அவன் பேசிய அனைத்தும் ஆராஷிக்கு அவன் பி.ஏ வால் டிரான்ஸ்லேட் செய்யப்பட்டது..

“அவ்வளவு தான் எங்க சைட்ல இருந்து நாங்க விளக்கமும் மன்னிப்பும் கொடுத்துட்டோம்..எப்பவும் போல இப்பவும் நம்ம இந்தியாக்கு பெருமை சேர்க்கிறமாதிரி நாம முன்னேறி காட்டுவோம்..அதுக்கு உங்க எல்லாரோட ஒத்துழைப்பும் எங்களுக்கு தேவை..இனி உங்க ஆராஷி பேசுவார்” 

என்றுவிட்டு மைக்கை ஆராஷியிடம் நீட்ட வாங்கியவன் மாஸ்க்கை கழட்டிவிட்டு விசில் சத்தம் அடங்கும்வரை அமைதியாய் நின்றவன் நன்றி கூறிவிட்டு பேச துவங்கினான்..

“ஏ கிரேட் தேங்கஸ் ஃபார் திஸ் வொண்டர்ஃபுல் ஆப்பர்ச்சுனிட்டி..வீ வில் கிவ் அவர் ஃபுல் எபெக்ட்ஸ் ஃபார் திஸ் பிசினஸ்.. அண்ட் கிரேட் தேங்க்ஸ் ஃபார் மிஸ்டர் சரத் ஶ்ரீ சார்.. சச் ஏ வொண்டர்ஃபுல் பர்சன் ஐ மெட் இன் மை லைஃப்.. ஐ வில் ட்ரை ட்டூ ரீச் இஸ் விஷ்..ப்ளீஸ் சப்போர்ட் ஆல்..தேங்க்ஸ் ட்டூ ஆல்..ஹாவ் ஏ சுவீட் பிரேக்பாஸ்ட்” என்றுவிட்டு உரையை முடிக்க அத்துடன் பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிய அடுத்த பத்து நிமிடத்தில் ஓரியன்டேஷன் மீட்டிங் என்று இருந்ததால் நிலவினி, சாஹித்யன், அருந்ததி, ஷரத்தா, தேஜாஶ்ரீ, என அனைவரும் அதற்கான ஏற்பாடுகளை துவங்க ஆராஷியும் ரியோட்டோவும் ஓய்வு அறைக்கு செல்லப்போக அதற்குள் மினிஸ்டர் கிளம்புவதாக கூற அவரை அனுப்ப வேண்டும் என்று நிதின் அருகில் நின்றான்.. நிதினும் அமைதியாக மினிஸ்டரை அனுப்பிவிட்டு பத்திரிக்கையாளர்களை சாப்பிட சொல்லிவிட்டு அவசரமாக மீட்டிங்குக்கு சென்றான்.. போகும் முன் ஃபேக்ஸ் வந்த அட்ரஸ்ஸை செக் செய்ய சொல்ல ஏற்கனவே செக் செய்த அவனது பி.ஏ “ஜப்பானின் டோக்கியோ ஏர்போர்ட்.. அங்க கேட்டா அவங்க வேற ஊருக்கு போய்ட்டதா சொல்றாங்க சார்..அண்ட் அவங்க லண்டன் போக டிக்கெட் எடுத்து இருக்காங்க ஆனா அதுல போகாம வேற ப்ளைட்ல போயிருக்கலாம் சொல்றாங்க ஏன்னா அவங்க போர்டிங் பண்ணி இருக்காங்க கம்ப்ளீட்டா விசாரிச்சுட்டேன் அவங்க அங்க இல்ல சார்” என்று கூற அதை கேட்டு கொண்டு தான் இருந்தான் ஆராஷியும்..

அவனுக்கு என்ன புரியவா போகுது என்ற மனரீதியில் அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்..

ஆனால் அவர்கள் பேச்சை உன்னிப்பாக கவனித்தவன் இதழில் வலி நிறைந்த லேசான புன்னகை தவழ அதை பார்த்த ரியோட்டோ அவன் தோளை தட்ட அவனை பார்த்து லேசாக சிரித்தான் ஆராஷி..

இனிதான் வெடிக்க போகுது பூகம்பம் போல..

ஷேர் ஹோல்டர்ஸ், சி.இ.ஓ, மற்றும் பாட்னர் கம்பெனி மெம்பர்ஸ் மட்டும் கலந்து கொள்ள கூடிய ஸ்பெஷல் ஓரியன்டேஷன் மீட்டிங் துவங்கியது..

அதுவரை மாஸ்க்கும் முழுதாய் மறைக்கும் ஃகேப்பும் ஓவர்கோட்டும் போட்டு இருந்த ரியோட்டோ அதை கழட்டி வைத்து விட்டு அமர்ந்தான் formal லுக்கில் அழகாக இருந்தான்.. அதை பார்த்து அருந்ததி ஜொல் விட ஆரம்பித்து விட்டாள்..

ஆனால் அவனை பார்த்து அதிர்ந்தாள் தேஜாஶ்ரீ.. அவளை பார்த்தபடிதான் எல்லாம் செய்தான் ரியோட்டோ..

முதலில் அதிர்ந்த தேஜாவின் முகம் கோவமாய் மாறியது.. அதை பார்த்தவனுக்கும் கோவம் தலைக்கேறியது இருப்பினும் பொறுமையுடன் இருந்தான்..

ஆனால் தேஜுவின் இந்த அவதாரம் புரியாமல் முழித்தது நம் பட்டாளம்தான்..

அவள் கையை பிடித்த நிதின்

“எந்தாயி மோளே? நீ சுகந்தன்னே?” என்று கேட்க தன் முகத்தை மாற்றியவள்

“ஹான் சேட்டா..ஏதும் ஆகிட்டில்லா..ஸ்டார்ட் த மீட்டிங்” என்று கூற அவளையே பார்த்தவன்

“Sure ஆ மோளே..ஞான் ஸ்டார்ட் செய்யட்டோ?” என்று மீண்டும் கேட்க..

“ஷியூர் சேட்டா.. நோ இஷ்யூ” என்றாள் அவளும்..

அதன்பின் நிதின் எழுந்து

பேசத்துவங்கினான்..

(அவங்க இங்கிலீசுலேயே பேசிக்கிட்டாங்கபா.. நாம கூகுள் மாமாட்ட கேட்டு தமிழ்ல படிப்போம்)

“எல்லாருக்கும் வணக்கம்..

இது மேத்ராஷ் ஃபேஷன்ஸ்ஸோட ஃபவுண்டர் அண்ட் பாட்னர்ஸ் அண்ட் ஷேர் ஹோல்டர்ஸ் மீட்டிங்.. 

முதல்ல இந்தியாவுல அதுவும் நம்ம ரெனி ஃபேஷன்ஸ் கூட டை அப் வெச்சுக்க விரும்பி இந்த ஸ்டார்ட் அப் பிஸினஸ்ஸ இவ்வளவு தூரம் கொண்டு வர ஏற்பாடு செஞ்ச நம்ம பாட்னர் ஆராஷி ஷிமிஜுவ நான் வெல்கம் பன்றேன்.. அவரோட சகோதரர் ரியோட்டோ ஷிமிஜு வையும் வெல்கம் பன்றேன்..” என்று கூற தூக்கி வாரி போட்டது தேஜுவிற்கு..அதை அப்பட்டமாக காட்டிவிட்டது..அப்போது தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..அவள் முகம் காட்டியதை பார்த்தவன் அமைதியாகவே இருந்தான்.. நிதினோ பேச்சை நிறுத்தாமல் பேசினான்..

“அண்ட் திடீர்னு ஃபங்க்ஷன் ப்ளான் ஆனதால நம்ம ஃபவுண்டரால எதுலயும் எமர்ஜென்சியா கலந்துக்க முடியல அதுக்காக அவங்க ஸ்பெஷலா மன்னிப்பு கேட்டாங்க ஆராஷி ஷிமிஜு கிட்ட.. அவங்க ஃபவுண்டரா செஞ்ச மாற்றங்களை நான் இப்போ சொல்லிடுறேன்..” என்றபடி ஃபேக்ஸ்ஸில் வந்ததை படிக்க ஆரம்பித்தான்..

“இந்த மேத்ராஷ் ஃபேஷன்ஸ்ஸ பொறுத்தவரை ஃபவுண்டர்க்கு மட்டும் தான் முடிவை மாத்துற அதிகாரம் இருக்கு..அதன்படி ஷேர் ஹோல்டரா இருக்குற தேஜாஶ்ரீ யை அவங்க இந்த மேத்ராஷ்ஷோட லீகல் பிஸினஸ் பாட்னராவும் பிஸினஸ் டெவலபராவும் மாத்துறாங்க.. அவங்க தலமையிலையும் ரெனி ஃபேஷன்ஸ் சார்பாகவும் தேஜாஶ்ரீ இந்த முழு பொறுப்ப ஏற்று நடத்தனும்னு ஃபவுண்டரோட ஆடர்.. ஆஸ் ஏ சி.இ.ஓ.. என்னால பிஸினஸ்க்கு எல்லா விதமான உதவியும் செய்யமுடியும் அண்ட் நீங்க டிஸ்கஸ் பண்ணி முடிவு எடுக்க ஹெல்ப் பண்ண முடியும்..ஆனால் எந்த சூழ்நிலையிலும் பிஸினஸ் கேன்சல் பன்ற அதிகாரம் ஃபவுண்டர தவிர யாருக்கும் இல்ல.. இதுல ஒன் ஆஃப் த ஃபவுண்டரா ஆராஷிக்கு உரிமை இருக்கு மாற்றம் செய்ய..அதைதான் சொல்லி ஃபேக்ஸ் அனுப்பி இருக்காங்க அவங்க சிக்னேச்சரோட” என்றுவிட்டு அந்த ஃபேக்ஸ் காபி ஆராஷியின் டேபிள் முன்பு வைக்கப்பட்டது..

அதை எடுத்து படித்தவன் முகத்தில் ஏதோ ஒரு வெளிச்சம் ‘நாம சரியான ரூட்லதான் போறோம்னு’ மனதில் தோன்ற புன்னகைத்துக்கொண்டான்..

இங்கோ எலியும் பூனையுமாய் முறைத்துக்கொண்டு அமர்ந்து இருந்தனர் ரியோட்டோவும் தேஜாஶ்ரீ யும்..

“அண்ட் மத்த டீடெயில்ஸ் யார் யார்க்கு என்ன என்ன வொர்க்னு அனெதர் ஃபவுண்டரா ஆராஷி சொல்லுவார்” என்றபடி அவன் அமர எழுந்து நின்று அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தான் ஆராஷி..

“உங்கே எல்லாருக்கும் வணக்கம்” என்று பேச எல்லோருக்கும் இதயமே நின்றுவிடும் போல அதிர்ந்து நோக்கினர் அவனை..

சிறு வெட்க புன்னகை சிந்தியவன்..

“நான் தமில் பேசுறேனு ஷாக்கா? கொஞ்சேம் கொஞ்சேம் கத்துக்கறேன்..” என்று கூறி சிரிக்க யார் முகத்திலும் ஈயாடவில்லை.. 

“ஓகே..லெட்ஸ் கம் த பாயிண்ட்.. ஆன் திஸ் பிஸினஸ் ஐ அப்பாயிண்ட் மிசஸ்.தேஜாஶ்ரீ அண்ட் மிஸ்டர்.தேஜாஶ்ரீ ஈஸ் பிஸினஸ் டெவலப் டீம்” என்று கூற அடுத்த ஷாக் அனைவருக்கும்..நிதினோ

“சாரி மிஸ்டர் ஆராஷி தேஜாஶ்ரீ ஹஸ்பண்ட் நவ் நாட் ஹியர்” என்று கூற..

“இஸிட்..ஆஸ்க் மிசஸ்.தேஜாஶ்ரீ” என்று தேஜாவை பார்த்துக்கொண்டே பேச இதில் எதுவோ இருக்கிறது என்று உணர்ந்த நிதின் அமைதியாக தேஜுவை பார்க்க அவளோ அமைதியாக அதே சமயம் கோவமாக அமர்ந்திருந்தாள்..

“வாட்ஸ் திஸ் தேஜு? ஹி ஈஸ் ஹியர்?” என்று கேட்க அவளிடம் பதிலே இல்லை குனிந்த தலை நிமிரவும் இல்லை..

“வூ ஈஸ் தட் பர்சன்?” என்று கேட்க ஆராஷியோ ரியோட்டோவை கை காட்ட மீண்டும் அதிர்ச்சி எல்லோருக்கும்..

“வாட்” என்று அதிர்ந்து எழுந்துவிட்டாள் அருந்ததி(வட போச்சே)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *