Skip to content
Home » வேண்டும்நீ எந்தன் நிழலாய் – 6

வேண்டும்நீ எந்தன் நிழலாய் – 6

வேண்டும் நீ எந்தன் நிழலாய்

அத்தியாயம் – 6

ரியோட்டோவும் தேஜுவும் காதலை பரிமாறிக்கொள்ளவில்லையே தவிர ஒருவரையொருவர் புரிந்து கொள்வதை நிறுத்தவில்லை.. ஆனால் அதிக புரிதலும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணராமல் போனது அந்த இளம் ஜோடிகள்..

‘இவங்க லவ்வ சொல்லிக்காதவரை தான் நமக்கு லாபம்.. அதனால முதல்ல நான் என் லவ்வ தேஜுகிட்ட சொல்லிடனும்.. அதும் ரியோ முன்னாடியே சொல்லனும் அப்போதான் ப்ரண்ட்காக அவன் அவளை எனக்கு விட்டு கொடுப்பான்’ என்று தாறுமாறாக தனக்குள் ப்ளான் செய்தவன் அடுத்த நாளே தன் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தான்..

மறுநாள்..

கிளாஸ் முடிந்து ரியோட்டோவும் தேஜுவும் ஒன்றாகதான் வீட்டுக்கு செல்வார்கள்..

அன்று மதியம்வரை கிளாஸ் இருந்ததால் தேஜு வெளியே வர லேட்டானது.. ஆனாலும் ரியோட்டோவிற்காக அவனது கிளாஸ் வெளியே காத்திருந்தாள்.. அன்றைய தினம் டீக்வாண்டோ கிளாஸ் முடித்து லேட்டாக வந்தான் ரியோட்டோ.. இதுதான் சரியான தருணம் என உணர்ந்த ரென் தேஜுவிடம் பேச சென்றான்..

ரென்னும் அவனது எண்ணமும் தேஜுவிற்கு ஓரளவுக்கு தெரியும் ஆனால் ரியோட்டோவுடனான அவனது ப்ரண்ட்ஷிப்பை கலைக்க விரும்பாததால் அவள் அமைதியாகவே இருந்தாள் 

அதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு..

ஒருநாள்.. ரியோட்டோவிடம் அவனது நெருங்கிய இன்னொரு நண்பன் ரென்னை பற்றி கூறி அவனது நட்பை துண்டிக்க சொல்ல உலகில் யார் வந்து தன் நண்பனை பற்றி சொன்னாலும் நம்பமாட்டேன் என கூறி விட்டான் ரியோட்டோ.. ரென்னைபற்றி தவறாக கூறியதால் அந்த நண்பனுனுடனான நட்பையும் முறித்துக்கொண்டான்..

அதனாலேயே ரென்னைபற்றி அவனிடம் சொல்வதையே நிறுத்திவிட்டாள்..இதனால் தன் காதல் முறியுமோ என பயந்து அவள் மறைத்துவிட்டாள்..ஆனால் அதுவே அவர்கள் பிரிவுக்கு வழிவகுக்கும் என அறியவில்லை இருவரும்..

தீய எண்ணம் கொண்ட நண்பனை நம்புவதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை உணராததால் ரியோட்டோவும் துயரப்படும் நாள் வந்தது..

“தேஜு” என அவளை அழைக்கும் நேரம் அவளும் திரும்பி பார்த்தாள்..

“சொல்லுங்க ரென்” என்று அவள் கேட்க.. அதே நேரம் ரியோட்டோ வரவும் சரியாக இருந்தது ஆனால் இவர்கள் பேச்சு குரல் கேட்க அமைதியாக நின்றுவிட்டான்.. ஆனால் அவன் வந்தததை கவனித்த ரென் எங்கு தடுப்பானோ என கடகடவென பேசிவிட்டான்..

“உன்கிட்ட ரொம்ப நாளா ஒரு விஷயம் சொல்லனும்னு இருந்தேன்..அது வந்து..ஐ லவ் யூ” என்று சொல்லிவிட 

ரியோட்டோ அதிர்ந்து போனான் என்றாள் தேஜுவிற்கோ கோவம் வந்துவிட்டது.. தான் ரியோட்டோவை காதலிப்பதை ரென்னும் அறிவானே என்ற கோவம்தான் அது..

இருப்பினும் அதை காட்டிக்கொள்ளாமல்

“மன்னிச்சிடுங்க ரென்..நான் வேற ஒருத்தரை விரும்புறேன்..தப்பா எடுத்துக்காதீங்க” என்று உடனே பதில் அளிக்க அவனுக்கு முகத்தில் அடித்தாற்போல் ஆனது.. ஆனாலும் அதை காட்டிக்கொள்ளாமல்..

“ஓஓ..ஐயம் சாரி..அந்த ஒருத்தர் 

யாருனு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்க.. அவள் சொல்லப்போகும் பதிலுக்காய் ரியோவும் தன் காதை கூர்மையாக்கி கேட்டான்..

“அது அவருக்கு சொல்லும்போது உங்களுக்கும் தெரியும் அதனால இப்போ உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல..ரியோ வந்தா நான் கிளம்பிட்டேன்னு சொல்லுங்க” என்றுவிட்டு கிளம்பிவிட்டாள்..

அவளை தடுத்தவன்..

“ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் லவ் தேஜு” என்று வழிவிட போய்விட்டாள் அவள்..

‘போடி போ..என்னைக்கா இருந்தாலும் நீ எனக்குத்தான் அந்த ரியோவ நீ கல்யாணம் பண்ண விடமாட்டேன்டி.. என்னை அவமானப்படுத்தினதுக்கு நீ அனுபவிப்படி’ என்று மனதுக்குள் கருவியவன் வெளியே சோகமாக இருப்பதுபோல் முகத்தை வைத்துக்கொண்டான்..

அவன் அருகில் வந்த ரியோட்டோ எதையும் காட்டிக்கொள்ளாமல் வந்தவன் தேஜுவை பற்றி விசாரித்தான்..

“எங்கடா தேஜுவ காணோம் நீ மட்டும் இருக்க?” என்று ஜாப்பனீஸில் கேட்க..

“அவ..அவங்களுக்கு ஏதோ வேலையாம் கிளம்பிட்டேன் சொல்ல சொன்னாங்க” என்று பதில் கூறினான்..

அவள் பேசியதை காட்டிக்கொள்ளாமல் அவளை மரியாதையாக பேசும் தன் நண்பனின் நல்ல எண்ணத்தை 

மனதில் மெச்சிக்கொண்டு சென்றான் ரியோட்டோ..

அடுத்த இருதினங்களுக்கு டீக்வாண்டோ டோர்ணமெண்ட் இருப்பதால் தேஜுவை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ரென்னிடம் விட்டு சென்றான்..

ஆனால் அவளுக்கோ ரியோ மேல் கடும்கோவம் வந்தது..ஏனெனில் அவள் உறங்கி கொண்டிருந்த நேரம் அவளிடம் சொல்லாமல் கிளம்பியிருந்தான்..

அதை அப்படியே ரென்னிடம் காட்டிவிட்டாள்..

முதல்நாள் அவளுடன் அவன் வர

“நீங்க எதுக்கு என்கூட வர்றீங்க? ” என்று கேட்க..

“ரியோ தான் அவன் வர்றவரைக்கும் நீ என் பொறுப்புனு ஒப்படைச்சுட்டு போனான்..அவன் வர்றவரை நான்தான் ரியோ ப்ளேஸ்ல” என்று ஒரு மாதிரி பேச

“ச்சீ.. பொறுக்கி.. இப்படி பேச வெட்கமா இல்ல உனக்கு.. உன்னைபோய் நல்லவன்னு நம்புறான் பாரு அவன சொல்லனும்.. என்கிட்ட இப்படி பேசின கொன்னுடுவேன்” என்று திட்ட சிரித்துக்கொண்டே அவளை குரூரமாய் பார்த்தவன் 

“பேபிமா.. நீ என்ன சொன்னாலும் ரியோ நம்பமாட்டான்..அப்புறம் உன் பேர் தான் கெட்டுபோகும்” என்று கூற 

அவனை அருவருப்பான பார்வை பார்த்தவள்..

“ஒருநாள் அவனுக்கு உன் சுயரூபம் தெரியும் அன்னைக்கு உன்ன யாராலையும் காப்பாத்தமுடியாது” என்றுவிட்டு கிளம்ப அவளது கையை பிடித்துவிட்டான் ரென்..

பட்டென திரும்பி அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தவள்

“இன்னொரு முறை என்னை டச் பண்ண நினைச்ச உயிரோட புதைச்சுடுவேன்.. உயிரோட இருக்கனும்னா ஒழுங்கா இருந்துக்க” என்றுவிட்டு அவள் சென்றுவிட எல்லோரும் அவர்களைதான் பார்த்துக்கொண்டு இருந்தனர் அதில் அவமானமாக உணர்ந்தவனுக்கு அவளை பழிவாங்கும் எண்ணம் அதிகம் ஆகிக்கொண்டே சென்றது..

அடுத்த நாள் ரியோட்டோ வந்ததும் அவனிடம் தன் காதலை சொல்லி திருமணம் செய்து கொள்ள சொல்ல வேண்டும் என்று எண்ணியவள் அதை செயல்படுத்தும் நோக்கில்

இந்த விஷயத்தையும் ரியோட்டோவிடம் சொல்லாமல் மறைத்துவிட்டாள் தேஜு..

அடுத்த நாள் ரியோட்டோ வந்துவிட அவனிடம் முதல்வேலையாக நடந்ததை மாற்றி தேஜு தன்னை தவறாகவே நினைத்து இருப்பதாக நடித்து தன்பக்கம் தவறே இல்லை என்பது போல மாற்றி பேசிவிட்டான் ரென்..

ரென் ப்ரபோஸ் செய்ததால் தேஜு அவனை தவறாக புரிந்து கொண்டுள்ளாள் என எண்ணினானே தவிர நண்பனின் குறுக்குபுத்தியை அறியாமல் விட்டுவிட்டான்..

அன்றைய தினம் மாலை தேஜு ஒருவித கலக்கத்தோடே வீட்டுக்கு வந்தாள்.. இன்றோடு மூன்று நாட்கள் ரியோட்டோவை காணாமல் வாடி போனாள் வந்தவளை கிட்சனில் காஃபி கலக்கிக்கொண்டே வரவேற்றான் ரியோட்டோ

“வெல்கம் ஹோம்” என்று அவனது குரல் கேட்டதும் தன்னை மறந்து ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொண்டாள் தேஜு.. 

முதலில் அதிர்ந்தவன் அவள் தன்னை தேடி இருக்கிறாள் என்று உணர்ந்து அவளை அணைத்தவன் 

“என்ன ஆச்சு ஶ்ரீ?” என்று கேட்க

அவளோ விசும்பியபடி..

“மூணு நாளா ஒரு ஃபோன் கூட பண்ணல என் நியாபகமே இல்லையா உங்களுக்கு? 

உங்கள பார்க்காம நா..நான் எவ்ளோ தவிச்சுட்டேன் தெரியுமா?” 

என்று விசும்ப அவளை தன்னிடமிருந்து பிரித்து அவளது கண்களை துடைத்தபோது தான் தன்னிலை அடைந்தவள் வேகமாய் அவனிடம் இருந்து திரும்பி செல்லப்போக அவளது கையை பிடித்து செல்லாமல் தடுத்தான்.. அதில் அப்படியே நின்றவளுக்கு நாணம் வந்துவிட தலைகுனிந்து நின்றாள்..

அவளது கையை விடாமல் தன்னிடம் திருப்பியவன் 

“என்ன சொல்ல நினைச்ச? அதை சொல்லு ஶ்ரீ” என்று சிறு புன்னகையுடன் கேட்க..

“ஒ..ஒன்னுமில்லையே” என்று அவள் திக்க

“ஓஓ..ஒன்னுமில்லையா? அப்போ சரி நான்கூட நீ என்னை லவ் பண்றனு நினைச்சுட்டேன்.. அதான் எதுவும்இல்லனு சொல்றியே..அப்போ அந்த ஷியோஹூங்க்கு ஓகே சொல்லிட வேண்டியதுதான்” என்று கூற கோவமானவள்..

“என்ன? என்னை விட்டுட்டு வேற எவளுக்காவது ஓகே சொல்லுவீங்களா? கொன்னுடுவேன்” என்று கோவமாய் கூற சத்தமாய் சிரித்தவன்..

“சும்மா சொன்னேன் ஶ்ரீ..இப்போ சொல்லிட்டல உன் லவ்வ” என்று சிரித்தபடி கூற வெட்கம் கொண்டவள் ஓடிச்சென்று அறைக்குள் புகுந்துகொண்டாள் பின்னே கேட்ட ரியோவின் குரல் அவளுக்கு மேலும் வெட்கத்தையே தந்தது..

அன்றுமுதல் ஏதோ ஒரு நாணம் அவனை தனியே காணும்போதெல்லாம்..

மற்ற காதலர்களை போல இல்லாமல் அவளை எங்கும் கூட்டிக்கொண்டு சுத்தாமல் காதல் என்ற பெயரில் காமம் காட்டாமல் கண்ணியமாய் காதல் செய்து வந்தான்.. அதை தன் நடத்தையால் அவளுக்கும் புரிய வைத்தான்.. 

ஆனால் அவனது கண்ணியத்தை அவனது ஆருயிர் நண்பனே குலைக்கும் காலம் வரும் என்று கனவா கண்டான்..

கடைசிவருடம் எக்ஸாம் இன்னும் இருமாதங்களில் முடியும் தருவாயில் பரீட்சைக்கு படிக்கும் வேலையில் தங்கள் காதலை ஒதுக்கி வைத்தனர் இருவரும்.. ஆனால் தேஜுவின் தந்தை அவளிடம் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும் படிப்பு முடிந்து திருமணத்திற்கு வாக்கு கொடுத்ததாகவும் கூற அழுது அழுது அவளுக்கு ஜுரம் வந்துவிட்டது..

அவளை ரியோட்டோ தான் பார்த்துக்கொண்டான்..

2 thoughts on “வேண்டும்நீ எந்தன் நிழலாய் – 6”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *