Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய்-107

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-107

அத்தியாயம் – 107

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

எப்படியெல்லாம் தேடி அலைஞ்சு இருப்பாரு அதை யோசிச்சாளா? இதான் அவ காதலை மதிக்குறதா?

இல்ல அட்லீஸ்ட் இண்டியா வந்தாருல அப்போ என்ன பண்ணா அப்ப அவருக்கு வேலைக்காரியா போய் நின்னா அவரால எப்படி அவளை கண்டுபிடிக்க முடியும் இவ மீராவா பணக்காரியா இருந்தா ஆனா மேதா வேலைக்காரியா வந்தா எப்படி அவருக்கு அவளை தெரியும்? மீராவை போலவே மேதா பிஹேவ் பண்ணா அவருக்கு ஒரு ஈர்ப்பு தான் வரும் ஆனா அவ மேல வெச்ச ஈர்ப்பு இவமேல திரும்பிட கூடாதுனும் அவர் அனுபவிச்ச வலியில ஏமாத்ததம்ல இவ மேல வெறுப்பை காட்டினதுல என்ன தப்பு சொல்லுங்க?
மீராவா அவரோட உயிரை காப்பாத்தினவ அப்போ அவருக்கு அவதானே முக்கியமா தோணும் வேலைக்காரியா இருக்குறவளையா முக்கியமா தோணும் அவர் சைட்ல இருந்து யாராவது யோசிச்சீங்களா? எல்லாத்தையும் மறைச்சு செஞ்சவ இவ அதுக்கு அவளுக்கு நாம எல்லாரும் உடந்தை ஆனா பழி மட்டும் அவர்மேல.
இல்ல தெரியாம தான் கேட்கிறேன் இவள யாரு ஃபவுண்டரா மாத்தினது? இவ எந்த விதத்துல ஸ்டாராங்னு அப்பா இவள ஃபவுண்டரா மாத்திவிட்டு போய் இருக்காரு?
நாளைக்கே உனக்கோ இல்ல அருந்ததிக்கோ ஏதாவது செஞ்சுடுவேன் நீ உன் ஃபவுண்டர் பதவியை ராஜினாமா செய்தாதான் அவங்கள உயிரோட விடுவேன்னு சொன்னா மேடம் உடனே பதவியை ராஜினாமா செய்துடுவாளா?
ஏன் இப்போ நீங்க கேட்டீங்களே ஒரு கேள்வி அருந்ததிய பார்த்து ஏன் நீ போய் கத்திக்குத்து வாங்கின அங்க இருந்த சத்தம் போட்டு இருந்தாலே அவரு நகர்ந்து இருப்பாரேனு அதை ஏன் மேதா ஆராஷியை ஒருத்தன் குத்த வரும்போது கத்தியோ இல்ல அவரை கையை பிடிச்சு இழுத்தோ காப்பாத்தி இருக்கலாமே? அப்பவே போலீஸ் விசாரிச்சு அப்பவே அவங்க சித்தி அதான் அந்த மியோ அவங்களுக்கு தண்டனை கிடைச்சு இருக்குமே? எதுக்கு குறுக்க போவானே? எதுக்கு உயிர்போற அளவுக்கு ரிஸ்க் எடுப்பானே? லவ்ல முட்டாள்தனம் இருக்கலாம் ஆனா லவ்வரே முட்டாளா இருந்தா அவரு என்ன செய்வாரு?

மத்த விஷயம்ல லாம் தெளிவா
யோசிச்சு ஒவ்வொருத்தர் லைஃப்பையும் சரி செஞ்ச மேதாக்கு ஏன் அவ லைஃபை மட்டும் இவ்ளோ இடியாப்ப சிக்கலா மாத்திக்கவேண்டிய அவசியம் என்ன?” என்று ஷ்ரத்தா சரமாரியாக கேள்விகளை கேட்க அனைவரும் வாயடைத்து போயினர்.

அந்நேரம் நிதின்
“இல்லமா அவதான் ஆராஷியோட ஸ்பான்சர்னு தெரிஞ்சா அவரோட பாசம் மறைஞ்சு பணத்துக்காக தான் அவளை விரும்பினா போல ஆகிடும் அவள ஒரு சாதாரண பொண்ணா தான் அவர் விரும்பனும்னு தான் அவ இவ்ளோவும் செஞ்சா” என்று விளக்கம் கொடுக்க

“அப்போ அவ என்ன செஞ்சு இருக்கனும் அண்ணா ஃபவுண்டர் பதவியை ராஜினாமா செஞ்சுட்டு சொத்தையெல்லாம் அநாதை ஆசிரமம்க்கு எழுதி வெச்சுட்டு சாதாரண ஒரு பொண்ணா போய் அவர் முன்னாடி நின்னு நான்தான் மீரானு சொல்லி இருக்கனும் அப்படி செஞ்சு இருந்தா அது அவளோட காதலுக்கு அவ கொடுக்குற மரியாதை ஏன்னா அவரு தேடினது அம்மா போல பாசம் காட்டி பேசின மீராவைத்தான் அவ பணக்காரியா? ஏழையா? இல்ல பிச்சைக்காரியானு லாம் தெரியாமலே தான் அவமேல லவ் வந்தது அவருக்கு அப்போ அவ எந்த நிலமையில இருந்தாலும் அவர் அவளை ஏத்துட்டு இருந்து இருப்பார் அவளோட பாசத்துக்காக அந்த காதல் ஏன் அவளுக்கு புரியாம போச்சு?
இவ ஆடின ஆட்டத்துக்கெல்லாம் அடிப்பட்டது அவரோட காதல் தானே? இதுல அவரு அவளை அசிங்கப்படுத்திட்டாருனு எல்லாரும் அவர்மேலேயே கோவப்பட்டீங்க அதையும் அவர் தாங்கி நீங்க சொன்ன தப்பையும் தன்மேலேயே போட்டுட்டு அவளுக்காக அவளோட பாசத்துக்காக அவளோட காதலுக்காக அவர் நின்னாரு நாம யாருமே ஏன் அவரோட அண்ணா கூட அவருக்கு சப்போர்ட்டா நிக்கல
அப்படிபட்டவரோட காதல் பெருசா இல்ல எல்லாத்தையும் விட்டு ஓடி ஒளிஞ்சு நின்ன மேத வோட காதல் பெருசா?

அவளுக்கு நாம எல்லாரும் சப்போர்ட் பண்ணோம் அவளோட சைட்ல இருந்து பார்த்தா அவளோட பாசம் அவ மறைஞ்சு இவருக்காக எல்லாம் பார்த்து பார்த்து செஞ்சதுனு அவ பாசம் பெருசா தெரியும்.

ஆனா ஆராஷி ஒத்தை ஆளா எல்லா தப்பையும் தன் தலையில போட்டு அவரோட காதலுக்காக அவர்மட்டுமே நின்னு போராடினாரு.
ஒரு பக்கம் அவரு சித்தி அவருக்கு பண்ண கொடுமை அவங்க பேச்சை கேட்டு இவதான் மீரானு அவரோட அப்பா வேற ஏதோ பொண்ணை கூட்டி வந்து ஏமாத்தி வேற விதமான பிரச்சினை பண்ணாங்க அவரோட உணர்வோட எல்லாருமே விளையாடி இருக்காங்க அந்த உணர்வுக்கு உறவுக்கு மதிப்பு தரவேண்டியவளும் அவரோட உணர்வோட விளையாட தானே செஞ்சா?
அப்போ அவர் காதல் அவருக்கு பெருசு இல்லையா?
அவரோட உணர்வுக்கு என்ன மதிப்பு?” என்று அவள் நிறுத்த இதை வேறு பக்கத்தில் இருந்து கேட்டுக்கொண்டு இருந்த மேதாவிற்கும் கூட அழுகைதான் வந்தது.
மயக்கம் தெளிந்தவள் பேசக்கூடாது என்று டாக்டர் கூறி இருப்பதாக சொன்ன நர்ஸ்ஸிடம் சைகை மூலம் தன் தோழியின் நலம் அறிய வேண்டும் என கேட்டதால் அவளை வீல் சேரில் அமரவைத்து அழைத்து வர இவளது பேச்சில் அங்கேயே நின்று விட்டிருந்தாள் மேதஷ்வினி.
ஆராஷிக்கும் ஷ்ரத்தாவின் பேச்சில் கண்கள் கலங்கினாலும் தன் மேதாவை அவர் கோபமாக பேச அவனுக்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை அதனால் உள்ளே வந்தான் அவன்.
அவனை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைய
ஷ்ரத்தா அருகில் வந்தவன்.

“நீங்க எனக்கு சப்போர்ட் பண்றேன்னு மேதாவை திட்டுறது சரி இல்ல எந்த காரணமா இருந்தாலும் என் மேதா என்னை விட்டு விலகி இருந்தது அவ எனக்கு கொடுத்த ஃபணிஷ்மெண்டாதான் நினைக்கிறேன் அதை நான் சந்தோஷமாவே ஏத்துக்கிட்டேன் அதனால அவளை திட்ட வேணாம் அவ எப்படி இருந்தாலும் என் மேதா அவ என் மீரா அவ அவளை என்னை காரணம் காட்டி திட்டுற உரிமையை உங்களுக்கு நான்
கொடுக்கமாட்டேன் ஷ்ரத்தா மேடம் நீங்க வேணா அவளோட சின்ன வயசுல இருந்தே கூட வளர்ந்தவங்களா இருக்கலாம் அதுக்காகலாம் அவளை திட்ட நான் அல்லோவ் பண்ணமாட்டேன். என்னை பொறுத்தவரை என் அஷ்ஷூ ரொம்ப இன்னசெண்ட் அவளுக்கு பணம் காசைவிட அவளை சுத்தி இருக்கும் நீங்களும் நானும்தான் முக்கியம் அவளோட உலகமே நாமதான்.
நீங்க கேட்டீங்களே அருந்ததிய கிட்னாப் செஞ்சுட்டு அவளோட பதவியை ராஜினாமா பண்ணனும்னா செஞ்சுடுவாளானு? கண்டிப்பா செய்வா ஏன்னா அவ மேதஷ்வினி.
அருந்ததினு இல்ல உங்கள்ள யாரை வேண்டுமானாலும் கடத்தி வெச்சுட்டு அவள ப்ளாக்மெயில் பண்ணா ஈசியா அவ பலமிழந்து போய்டுவா ஏன்னா அவளோட பலம் பலவீனம் ரெண்டுமே நம்ம எல்லாரும்தான்.
பணம் காசுலாம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும் அதை ஈஸியா சம்பாதிச்சுடலாம் ஆனா பாசம் அதை சம்பாரிக்கிறது ரொம்ப கஷ்டம்.
அவளோட பாசம் கிடைக்க எவ்ளோ கொடுத்து வெச்சு இருக்கனும் தெரியுமா? ஏன் தெரியுமா சரத்ஶ்ரீ சர் உங்களலாம் அடாப்ட் பண்ணி ஷேர் ஹோல்டர்ஸ்ஸா மாத்தி வெச்சு இருக்காருனு யோசிச்சீங்களா? மாட்டீங்க ஏன்னா அவருக்கு தெரியும் அவரோட பொண்ணு மேதாவை பத்தி அவ பணத்துக்காக போறவ இல்ல பாசத்துக்காக போறவனு அதனால தான் மத்தவங்க அவளை ஈஸியா ரவுண்ட்அப் பண்ணிட கூடாதுனு வெளி ஆளு யாரையும் சேர்க்காம அவ கூடவும் தேஜு கூடவும் படிச்ச உங்க எல்லாரையும் அடாப்ட் செஞ்சு ஷேர் ஹோல்டரா மாத்தி இருக்கார் அவளுக்கு நீங்க சொன்ன மாதிரி ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தா நீங்க எல்லாரும் அவளுக்கு ஆதரவா நிப்பீங்கனு நம்பிக்கையில தான் அவர் இதை செஞ்சு இருப்பார் இது நிதின் சர்க்கு தெரியாம இருக்காது கேட்டு பாருங்க அவரை” என்றான்.
அனைவரும் நிதினை பார்க்க
அவனோ “ஆமாம் அப்பா உங்கள என்னைலாம் அடாப்ட் செய்யும்போதே இப்படிதான் சொல்லி செஞ்சாரு. ஆனா உங்கள அடாப்ட் செய்யும்போதே மேதா அவளுக்கு அப்போதைக்கு இருக்கும் ஷேர் தவிர மீதி ப்யூச்சர்ல வர்ற எல்லா ப்ராஃபிட்டும் நம்ம எல்லாருக்கும் ஈக்குவலா வரணும்னு தான் மாத்தினா அவளுக்கு அப்பா கொடுத்த சொத்தை கூட அவ ஆராஷியோட பாதுகாப்புக்கு ஸ்பான்சர்க்குனு தான் யூஸ் பண்ணிட்டு இருக்கா இப்போ வரை அண்ட் அவ இந்த ஃபவுண்டர் வேலைக்கு அவளுக்குனு கொஞ்சமா சம்பளம் வாங்கிட்டு இருக்கா.
வேற எந்த உரிமையும் அவ எடுத்துக்க விரும்பல ஏன்னா எப்பவும் அவர் உங்கள பேருக்காக அடாப்ட் பண்ணிட்டாரோனு ஒரு எண்ணம் உங்கள்ள யாருக்கும் வந்துட கூடாதுனு தான் யோசிச்சா” என்று கூற
அனைவருக்கும் கண்கள் கலங்கி விட்டது அவர்கள் மீதான அவளது பாசத்தை எண்ணி.
அதே நேரத்தில் அவளது மீதான ஆராஷியின் காதலை எண்ணி மிகவும் பெருமையாகவும் இருந்தது.

“இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும் பார்க்குறீங்களா? எனக்கு எதுவுமே தெரியாது ஆனா என் மேதாவை பத்தி எனக்கு நல்லா தெரியும்.
அவ இப்படித்தான் யோசிப்பானு இனிமேல் நீங்கனு இல்ல யாரும் அவளை ஒரு வார்த்தை தப்பா பேசவோ இல்ல எனக்காக சப்போர்ட் பண்றேன்னு அவளை திட்டவோ நான் அனுமதிக்கமாட்டேன் அவளை அவ காட்டிக்காம இருந்ததும் நல்லதுக்குதான் இல்லனா என்னோட சித்தினு இருந்தாங்களே அவங்க அவளையும் கொன்னு எனக்கு நரகவேதனையை கொடுத்து இருப்பாங்க.
நீங்கலாம் அவ அவளை வெளிபடுத்திக்கவே இல்லையேனு கோவப்படுறீங்க நானும் வருத்தப்பட்டேன் ஆனா இந்த ஒரு விஷயத்துக்காகவே நான் சந்தோஷம் படுறேன்” என்று அவன் கூறி முடிக்க பேச முடியாமல் அழுகை அதிகம் ஆக நர்ஸ்ஸை கூட்டிக்கொண்டு போக சொல்லி சைகை செய்தவள். நர்ஸ் வீல்சேரை உருட்ட வெளியே போகும்படி சொன்னவள்.
திடீரென நிறுத்தும்படி சொன்னாள்.
வெளியே ஒட்டுமொத்த மீடியாவும் குவிந்து இருந்தது இவர்களை பற்றி அறிய.
அதனால் வீல்சேரை விடுத்து இறங்கியவளை நர்ஸ் தடுத்தும் தனது புடவையை மறைக்க அங்கிருந்த ஒரு ரெயின்கோட்டை போட்டுக்கொண்டு மீடியாவின் கண்ணில் படாமல் வெளியே வந்து ஒரு கேப் புக் செய்து அவனை தினமும் பார்த்து ரசித்த அந்த வீட்டிற்கு சென்றாள்.

1 thought on “வேண்டும் நீ எந்தன் நிழலாய்-107”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!