Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 14

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 14

அத்தியாயம் – 14
கார் சரியாக அவன் சொன்னது போலவே ஒன்பது இருபதுக்கு நிதினின் ஆபீஸ் வளாகத்தினுள் நுழைய அங்கே காத்திருந்தனர் பத்திரிக்கையாளர்கள்..
காரிலிருந்து இறங்கும்முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.. முதலில் இறங்கிய ஹர்ஷத் ஒரு ஓரம் நிற்க பாடிகார்ட்ஸ் பாதுகாப்பை உறுதி செய்தபின் கதவை திறந்துவிட இருவரும் இறங்கினர்..வெள்ளைநிற ஷர்ட் மேல் ப்ரவுன் நிற கோட் அவனை மிகவும் அழகாக காட்ட அனைத்து கேமராக்களும் அவர்களை புகைப்படம் எடுக்கத்துவங்கியது..
எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்தவர்கள்
ப்ரஷ் அப் ஆகிவிட்டு வருவதாக கூறிவிட்டு உள்ளே செல்ல அங்கோ ஒருவன் மும்முரமாக நிதினை கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தான் யாரென பார்க்க அவனை எங்கேயோ பார்த்தது போல் இருந்தது ஆராஷிக்கு.. ஆனால் சட்டென நினைவு வரவில்லை அவர்களை திரும்பி பார்த்த அந்த இளைஞன் நேரே ஆராஷியை நோக்கி வந்தான்..
வந்தவன் “ஹலோ சார்.. என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கா? இருக்காதுனு நினைக்கிறேன் நானே சொல்றேன்.. ஐயம் சிவா..ஓனர் ஆஃப் ஃபிலிப்பினோ மெஷின்ஸ்..
உங்ககிட்ட மேனேஜரா இருந்தாங்களே மேதஷ்வினி அவங்க இப்போ எங்க இருக்காங்கனு உங்களுக்கு தெரியுமா? அவங்க மட்டும் அன்னைக்கு இந்த பிச்சைகாரனுக்கு வேலை கொடுக்கலைனா இந்நேரம் நான் எங்கேயோ பிச்சை எடுத்துட்டு தான் இருப்பேன்..
என்னை நல்ல பொஷிஷன்க்கு வரவெச்சவங்கள தேடி வந்தா இவங்க தெரியாது தெரியாதுனு சொல்றாங்க நீங்களாவது சொல்லுங்க சார் என்னோட மேதா எங்க?” என்று அவன் அதிகாரமாய் கேட்க.. அதை அப்படியே மொழிப்பெயர்த்தான் ஹர்ஷத்..
அவன் கடைசியாக கேட்ட என்னோட மேதா என்னும் வாக்கியத்தில் கோவம் தலைக்கு ஏற அவனை மேலும் கீழும் நோட்டமிட்டவனுக்கு அப்போதுதான் அவன் யாரென நினைவு வந்தது..
அந்த பிரம்மாண்டமான மாலின் உள்நுழையும் கேட் அருகே நின்றிருந்தான் கையில் தட்டை ஏந்தியபடி ஒற்றை காலோடு அன்று அவள்மேல் ஏதோ கோவமாய் இருந்ததால் அவளை என்டரன்ஸ்லேயே நிற்க சொல்லிவிட்டு அவளது மொபைலையும் பிடுங்கி கொண்டு சென்றுவிட்டான் ஆராஷி.. அதனால் பொழுது போகாமல் அவள் அங்கும் இங்கும் பார்க்க அவளது கண்ணில் பட்டான் சிவா..அவனது அருகில் சென்றவளை பார்த்து
“தருமம் பண்ணுங்க” என்று அவன் கேட்க..அதே நேரம் அவளது ஃபோன் விடாமல் அடித்ததால் அவளிடம் தூக்கி எறிந்துவிட்டு செல்லலாம் என வந்தவன் கண்டது பிச்சைகாரனோடு நின்று பேசுபவளை தான்.. டிரான்ஸ்லேட்டர் டிவைஸ் அணிந்து இருந்ததால் அவனுக்கு அவர்கள் பேசுவது சுலபமாக புரிந்தது.. அதனால் அவள் என்ன பேசுகிறாள் என கவனித்தான்..
அவளோ
“மன்னிச்சுக்கோங்க.. நான் தருமம் பண்ணமாட்டேன்.. ஆனா நீங்க ஏன் வேற வேலைக்கு போகாம பிச்சை எடுக்குறீங்கனு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்க அவனோ..
“படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கல கூட பொறந்த தங்கச்சிய காப்பாத்தனும் ஊனமானவன்னு வேலையும் தரமாட்டேங்கிறாங்க.. அதான் மேடம் இந்த வேலை செய்யுறேன்” என்றான் அவன் கவலையாக..
“அப்போ உங்க படிப்புக்க ஏத்த வேலை கிடைச்சா நீங்க பிச்சை எடுக்கமாட்டீங்க அப்படித்தானே..” என்று அவள் கேட்க..
“கண்டிப்பா மேடம்.. ஆனா ஊனமுற்றவனுக்கு யார் மேடம் மதிச்சு வேலை தர்றாங்க.. படிச்ச படிப்பும் வேஸ்ட்.. உங்கள மாதிரி ஒருத்தங்க சொல்லிதான் நான் ஒரு வேலைக்கு சேரப்போனேன் அசிங்கம்தான் மிச்சம்..” என்று அவன் வருந்த..
“அது யாருனு எனக்கு தெரியாது ஆனா நான் சொல்ற இடத்துக்கு வேலைக்கு போனீங்கனா கண்டிப்பா வேலையும் இருக்கும் மதிப்பு மரியாதை எல்லாம் இருக்கும் ஓகேவா?” என்று அவள் கேட்க..
“கண்டிப்பா வேலை கிடைக்குமா மேடம்?” என்றான் அவன்..
“கண்டிப்பா கிடைக்கும்..நானே நாளைக்கு உங்கள கூட்டிட்டு போய் வேலை வாங்கிதர்றேன் ஓகேவா?” என்று அவள் கூற அவனும் மகிழ்ச்சியாய் தலையாட்ட நாளை என்னதான் நடக்கப்போகிறது என்பதை கவனிக்க அவர்கள்மேல் கவனத்தை வைத்தவன் ஷாப்பிங் செய்யாமலே வந்து மொபைலை அவளது கையில் திணித்தவன் வேகமாய் சென்று காருக்குள் அமர்ந்துவிட்டான்..
அவன் சென்றதும் ஒரு துண்டுசீட்டில் தனது நம்பரை எழுதியவள் அவனிடம் நீட்டி நாளைக்கு காலையில எனக்கு ஃபோன் பண்ணுங்க நான் வந்து கூட்டிட்டு போறேன் என்று கூறியவள் அவன் பின்னே ஓடிவந்து காரில் ஏறிக்கொண்டாள்..
மறுநாள் அவள் ஒரு மணி நேரம் ஃபர்மிஷன் எடுத்திருக்க எப்படியும் அவள் அந்த மாலுக்கு தான் செல்வாள் என யூகித்தவன் ரகசியமாக அங்கே சென்றான் சிவாவும் மேதாவும் பேசிக்கொண்டு இருந்தனர் அங்கிருந்த ரோட்டோரக்கடையில் இருவருக்கும் உணவு வாங்கி கொடுத்தவள் அவனுடன் சேர்ந்து உண்டாள்..
‘இவளுக்கு கொஞ்சம்கூட அருவருப்பாவே இல்லையா ஒரு பிச்சைக்காரன்கூட சரிசமமா சாப்பிட்டுட்டு இருக்கா?’ என்று எண்ணியவன் அவர்களைத்தான் ஃபாலோ செய்தான் அவன் சாப்பிட்டதும் அவனை தன் டூவீவரில் அழைத்துச்சென்றவள் அங்கிருந்தபடி சாஹித்யனுக்கு ஃபோன் செய்ய அவனே வந்து சிவாவை அழைத்து சென்றான் மகிழ்ந்த சிவா அவளுக்கு நன்றி கூறிவிட்டு சென்றான்..
அன்று பிச்சைக்காரனாய் பார்த்தவன் இன்று எப்படி முதலாளியாய் என்று அவன் சாஹித்யனை பார்க்க..
“அவரு பிஸினஸ் மேனேஜ்மெண்ட் அதனால அவருக்கு சிறுதொழில் செய்ய கத்து கொடுத்து லோன் அரேஞ்ச் பண்ணி கொடுத்தோம் அவரோட திறமையால அவரு நல்ல பிசினஸ்மேன் ஆகிட்டார்..லோன்ஸ்ஸும் கிளீயர் பண்ணிட்டார்” என்று அவன் கூற அதையும் மொழிப்பெயர்த்தான் ஹர்ஷத்..
“சொல்லுங்க சார் உங்ககிட்ட வேலை செஞ்ச என் மேதா எங்கே சார்.. மூனு மாசமா தேடி வர்றேன் எனக்கு சரியா பதிலே கிடைக்கல..நீங்களாவது சொல்லுங்க சார்.. அவ உங்ககிட்ட தானே கடைசியா வேலை செஞ்சா?” என்று அவன் கேட்க ஆராஷிக்கு கோவம் மலையளவு இருந்தாலும் தன் கோவம் தன்னவள் பெயரை கெடுத்துவிடும் என்பதால் அமைதியாக இருந்தான்..
“மே பி ஷீ வென்ட் ஃபாரின்..பிகாஸ் ஆஃப் ஹர் ஹையர் ஸ்டடீஸ்” என்றான் தோளை குலுக்கியபடி..
“அதுதான் எங்கே? அந்த இடம் சொன்னா நான் அங்கேயே போய்கூட என் லவ்வ சொல்லி அவளை என்னை கல்யாணம் பண்ணிக்க வைப்பேனே..எங்கே இருக்கானு யாருமே தெரியாதுனு சொல்றாங்களே?” என்று அவன் கத்த..
‘எனக்குனே வருவீங்களாடா?’ என்று எண்ணியபடி நிதினை பார்க்க
‘அனுப்பி வெச்சு இந்த கூத்தை ஆரம்பிச்சு வெச்சவன் நீதானே பதில் சொல்லு’ என்று எண்ணியபடி அவனை பார்த்தபடி நின்றான் நிதின்..
எல்லோரும் இவனை எப்படி சமாளிப்பது என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தனரே தவிர அவனது காதலை பற்றி யாருமே கண்டுகொள்ளவில்லை..
அவனது காதல் பதிலுக்கு பதில் என்ற கணக்கில் இருப்பதை உணர்ந்த ஆராஷி..
“சீ..மிஸ்டர்.ஷி..ஷி..” என்று அவன் இழுக்க
“சிவா” என்றான் அவன்..
“யா..தட்ஸ் ஒன்.. ஷீ கேம் ஆஸ் ஏ கான்டிராக்ட் எம்ப்ளாயி.. ஆஃப்டர் ஷீ ரிசைன் ஹர் ஜாப்..ஷீ டோல்ட் த ரீசன் ஈஸ் ஹர் ஹையர் ஸ்டடீஸ் இன் ஃபாரின் சோ வீ அக்செப்ட் ஹர் ரிசைன் அண்ட் சென்ட் ஹர்..
இஃப் யூ வாண்ட் ஹர்.. யூ சர்ச் இன் ஆல் கண்ட்ரீஸ் காலேஜ் அண்ட் ஆஃப்டர் யு ஃபவுண்ட் ஹர் கன்வே யுவர் லவ்..இஃப் ஷீ அக்செப்ட் யுவர் லவ் மேரி ஹர்” என்று கூற அவனுக்கு ஒரு தெளிவு பிறந்தது ஆனால் மற்றவர்கள் முகத்தில் குழப்பம்..
“தேங்க்யூ சார்..உடனே போறேன் போய் அவளை கண்டுபிடிச்சு என் காதலை ஏத்துக்க வைக்கிறேன்” என்றுவிட்டு கிளம்பினான் அவன்..
அவன் சென்றதும்தான் பேச ஆரம்பித்தான் சாஹித்யன்..அவன் பேச வாய்திறக்கும் முன் தடுத்தவன்..
“யூ ஆல் ஆர் ஹாவ் டவுட் ஃபார் திஸ் ஆன்சர் கரெக்ட்? ஐ செட் ஐ லவ் ஹர் பட் நவ் ஐயம் டோல்ட் வித் ஹிம் யு கேன் ப்ரப்போஸ் வித் ஹர்..
(ட்ரான்ஸ்லேட்டட்)
அஷுவ நாம எல்லாருமே தேடிட்டு இருக்கோம் சப்போஸ் இவனோட கண்ணுல அவ படலாம்ல அவன் பார்த்ததும் நமக்கு சொல்லுவான் மே பீ அவகிட்ட பேசுவான்..
நமக்கு இது ஒரு நல்ல சான்ஸ்தானே அவளை கண்டுபிடிக்க.. ஆனா அதுல ஒரு மிஸ்டேக்கும் செஞ்சு இருக்கேன் அவ காலேஜ்ல படிக்கிறானும் சொல்லி இருக்கேன் சோ அவன் காலேஜஸ்ல மட்டும் தேடினா அவனுக்கு அவ கிடைக்காம போகவும் சான்ஸ் இருக்கு அவள தேடுற வேலையை விட்டுட்டு அவன் அவனோட லைஃப்ப பார்க்கவும் சான்ஸ் இருக்கு..அதான் அவன்கிட்ட அப்படி சொல்லி அனுப்பினேன்..இன்னும் ஏதாவது டவுட் இருக்கா?” என்று அவன் கேட்க.. நிதின் பேசத்துவங்கினான்..
“உங்ககிட்ட ஒன்னு கேட்கனும்னு நினைச்சேன் கேட்கலாமா?”

“தாராளமா கேளுங்க”

“அன்னைக்கு அந்த மினிஸ்டர் உங்களையும் மேதாவையும் தானே இணைச்சு பேசினார் அதுக்கு ஏன் நீங்க அவ்ளோ கோவப்பட்டீங்க? நீங்கதான் மேதாவ லவ் பன்றீங்களே? அப்புறம் என்ன?”

“அது அப்படி இல்ல சார் நான் மேதாவை லவ் பன்றேன் ஆனா அது அந்த மினிஸ்டருக்கு தெரியாதே.. தெரிஞ்சு பேசினா நான் அமைதியா இருநது இருப்பேன் ஆனா அவரு எதுவுமே தெரியாம ஒரு பொண்ணோட இணைச்சு பேசினாருனு தான் என் கோவம்..
நா..நாளைக்கே மேதா என் காதலை ஏ..ஏத்துக்காம போகலாம்.. அவ..சாரி அவங்க வேற ஒ..ஒருத்தர கல்யாணம் பண்ணிக்க இருக்கலாம்..ஏன் அந்த சிவாவ கூட கல்யாணம் செய்ய ஓத்துக்கலாம் அந்த டைம்ல இந்த மினிஸ்டர் பேசினது அவங்க லைஃப்ல ப்ராப்ளம் ஆகிறகூடாதுல.. என் காதல் எந்த விதத்திலும் அவளுக்கு அவமானத்தை தேடி தரக்கூடாதுனு ஒரு முடிவோட இருக்கேன்.. அதான்..” என்று கூறிமுடிக்க அதை கேட்ட அருந்ததி..

“அப்போ மேதா உங்க லவ்வ அக்செப்ட் பண்ணமாட்டானு சொல்றீங்களா?” என்று கேட்க

“மே..பீ..நான் அவள பேசி கஷ்டப்படுத்தினதை அவ மறக்குறதே பெரிய விஷயம் இதுல அவ என் லவ்வ நம்புறது ரொம்ப கஷ்டம்.. என் மேதா எனக்குத்தான்னு இருந்தா அது நடக்கும்.. ஆனா அதேசமயம் அவ வேற ஒருத்தரை விரும்பினா அதுக்கு நான் தடையாவும் இருக்கமாட்டேன்..
அவ சந்தோஷமா இருந்தா போதும் எனக்கு” என்று கூற..

“ஆமா பெரிய தேவதாஸ் இவரு.. எங்கிருந்தாலும் வாழ்கனு பாடிட்டு போகபோறாரு.. எவன் எதிர்ல வந்தாலும் தான் ஆசைப்பட்டவள தட்டி தூக்கிறனும் அதான் வீரனுக்கு அழகு” என்றாள் அருந்ததி..

“அரூ..பெரியவங்ககிட்ட ரெஸ்பெக்ட்டா நடந்துக்கனு எத்தனை முறை சொல்லி இருக்கேன்..” என்று நிதின் கூற..

“இல்ல அண்ணா அவரு பேசினது” என்று அவள் கூற..

“அது அவரோட ஓன் லைஃப் அவரு என்ன வேணா முடிவு பண்ணலாம் மாத்த சொல்ல நாம் யாரு?” என்றான் நிதின்..

“காம் டவுன் நிதின் சார் ஐ வில் ஆன்சர் ஹர்..” என்றவன் அவள் பக்கம் திரும்பி..

“பேபி..லவ் பன்ற பொண்ண அவளுக்கு இஷ்டம் இருக்கா இல்லையானுகூட யோசிக்காம அவள தூக்கிட்டு வந்து கட்டாயப்படுத்தி குடும்பம் வேணா நடத்த வைக்கலாம் மே பீ அவளும் இதுதான் தலையெழுத்துனு வாழலாம் இல்லனா டைவர்ஸ் வாங்கிட்டு போகலாம்..இதெல்லாம் மோஸ்ட்லி சினிமாவுல தான் நடக்கும் நிஜம்ல உண்மையான காதல் விட்டுக்கொடுத்துதான் போகும் அது காதலிலானுலும் சரி காதலியே ஆனாலும் சரி.. அவங்க அவங்க சொந்த விருப்பு வெருப்புகளையெல்லாம் யோசிச்சுதான் முடிவு பண்ணமுடியும் பேபி.. எடுத்தோம் கவுத்தோம்னு பேசிட்டு நான் படுற கஷ்டமே வாழ்நாள் பூரா போதும்னு நினைக்கிறேன்.. இதுல அவளை கட்டாயப்படுத்தியோ இல்ல சிம்பதி கிரியேட் பண்ணியோ காதலிக்கவோ கல்யாணமோ செய்யலாம் அது எவ்ளோ நாளைக்கு நிலைக்கும்..” என்று கூற அவனது பேச்சை கேட்டவள்

“அப்போ எனக்கு ஒரு டவுட் அதை கிளீயர் பண்ணுங்க..
ஒரு ஆக்டர் சிங்கரான நீங்க உங்க சினிமாவுல காட்டுற அதே லவ்வ தானே உங்க வைஃப் கிட்டயும் காட்டுவீங்க சேம் டிராமாட்டிக் லவ்?” என்று கேட்க சட்டென சிரித்துவிட்டான் ஆராஷி..

“பேபி.. சினிமா ஈஸ் டிராமா.. அது நடிப்பு என்னால எல்லாரையும் உண்மையா லவ் பண்ணிட முடியாது..என் உண்மையான லவ்வ அவளால நிச்சயமா புரிஞ்சுக்க முடியும் பிரிச்சு பார்க்கவும் முடியும்..அது.. என்னால எக்ஸ்ப்ளைன் பண்ணமுடியாது.. மேதா வில் பீ ஆன்சர் தட்” என்று கூறியவன்..

“நான் ப்ரஸ்க்கு ஆன்சர் பன்னிட்டு வர்றேன்” என்றுவிட்டு வெளியே சென்றான் அவனோடே வந்தனர் அனைவரும்..

2 thoughts on “வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 14”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *