Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 16

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 16

அத்தியாயம் – 16
தன்னை நோக்கி அழகாய் நடைப்போட்டு அப்பா அப்பா என அழைக்கும் அழகிய மழலையை பார்த்தபின் அவனுக்கு உலகமே மறந்துபோனது.. அதற்குள் அங்கிருந்த வேலையாட்களை அப்புறப்படுத்தி இருந்தான் சாஹித்யன்..
ஓடிச்சென்று தன் மகளை அள்ளி அணைத்தவன் அவளது முகம் முழுவதும் முத்தமிட்டு அவளை கொஞ்சினான்.. அவனது கண்கள் ஆனந்தத்தில் கலங்கி இருந்தது..
எல்லோரும் இதனை நெகிழ்வாய் பார்க்க ஆராஷியும் சந்தோஷமாய் திரும்பி இந்த காட்சியை பார்த்து சந்தோஷப்பட்டான்.. ஆனால் இதை பார்த்து கோவப்பட்ட தேஜு தன் மகளை அதட்டினாள்..
“Shachi..என்ன பன்ற நீ? அம்மாகிட்ட வா” என்று அவள் கோவமாய் அழைக்க குழந்தையோ பயந்து
“வதமாட்டே போ..ப்பா..நான் போமாட்டே” என்று அவனிடம் புகுந்து கொண்டது..
தன்னிடம் அடைக்கலம் ஆன குழந்தையை தன்னோடு மேலும் சேர்த்து அணைத்தவன் அவளைத்தான் பார்த்தான்..
“என் பிள்ளையை இறக்கி விடுடா.. உனக்கும் எனக்கும்தான் எந்த சம்மந்தமும் இல்லையே அப்புறம் எதுக்கு என் பிள்ளைய தூக்கி வெச்சுட்டு இருக்க..கொடு அவளை.. உன் மூச்சுக்காத்து பட்டாக்கூட அவளும் உன்னைமாதிரி ஆகிடுவா” என்றபடி குழந்தையை பிடுங்க முயற்சி செய்ய அவளோ அவனது கழுத்தை இறுக பிடித்து கொண்டு அழுதாள்..
“ப்பா..நான் போலே” என்று அழ ஆரம்பித்துவிட்டாள் குழந்தை..
அங்கு நின்ற அனைவரும் அவர்கள் பிரச்சனையை அவர்களே தீர்த்துக்கொள்ளட்டும் என்று அமைதியாய் நின்றனர்..
“என்ன பன்ற நீ தேஜு? அவ பயந்து அழறா?” என்று அவன் கூற..
“என் பொண்ணு அவ.. அவள என்ன வேணா நான் செய்வேன் அதை கேட்க நீ யாரு?” என்று அவள் குழந்தையை அவனைவிட்டு பிரிப்பதிலேயே குறியாய் பேச.. காயப்பட்டவன்..
“அவளோட அப்பா நானு..நான் கேட்காம வேற யார் கேட்பா? உனக்கு இந்த குழந்தைகிட்ட எவ்ளோ உரிமை இருக்கோ அதே உரிமை எனக்கும் இருக்கு..” என்று அவனும் கோவமாய் பேச அவனை முறைத்தவள்..
“ரெண்டு வருஷமா அப்பா இல்லாமதான் என் பிள்ளைய வளர்த்தேன் இனிமேலும் அப்படியே வளர்ப்பேன் நீ ஒன்னும் அவளோட அப்பாவும் இல்ல அவகிட்ட உனக்கு உரிமையும் இல்ல..கட்டினவள நம்பாம நண்பனை நம்பினவனையெல்லாம் நான் என் பிள்ளைக்கு அப்பானு சொல்லிக்க விரும்பல..ரெண்டு வருஷமா இல்லாத அப்பா இப்போ மட்டும் எங்கிருந்து வந்தாரு?” என்று கோவமாய் பேசியபடி அழுதாள்..
“தேஜு.. அது அப்போ இருந்த கோவத்துல ஒரு உயிர் போன ஆத்திரத்துல நடந்தது அதுக்கு அப்புறம் தப்பை உணர்ந்து நான் உன்னை தேடாத இடம் இல்ல.. ஆனா கிடைக்கலை இப்போதான் கிடைச்ச தேஜு.. என்னை மன்னிச்சு ஏத்துக்க.. எனக்கு நீயும் என் பொண்ணும் வேணும் தேஜு..நடந்த எதையும் மாத்தமுடியாது ஆனா மன்னிக்க முடியும்ல.. எனக்கு ஒரே ஒரு சான்ஸ் கொடு தேஜு” என்று அவளிடம் மன்றாட..
வலுக்கட்டாயமாக மகளை அவனிடமிருந்து பிரித்தவள் திரும்பி நடக்க ஆரம்பிக்க பட்டென அவளது கன்னத்தில் அடி வைத்தாள் அப்போதுதான் வந்து சேர்ந்த ஷ்ரத்தா.. அவள் பின்னோடு வந்து நின்றான் அவளது கணவன்..
அவள் அப்படியே கன்னத்தை பிடித்தபடி பார்க்க அவளை பார்த்து முறைத்த ஷ்ரத்தா..
“என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என்று கேட்டாள் கோவமாய்..
“எல்லாம் தெரிஞ்சுதான் பண்றேன்..எனக்கு அவன் வேணாம்டி” என்று கூற மீண்டும் அவளை அறைந்தாள் ஷ்ரத்தா.. அதனை தடுக்க வந்த ரியோட்டோவை பார்த்து நிற்கும்படி தடுத்தவள்..
“நீங்க நகராதீங்க சார்..ஏன்டி அவரு வேணாம் ஆனா அவரு மூலமா வந்த குழந்தை மட்டும் வேணுமோ? அப்போ நீங்க ஒன்னு பண்ணுங்க சார் உங்க பொண்ண நீங்களே வெச்சுக்கோங்க இவளுக்கு வேணாம்” என்று ஷ்ரத்தா கூற திகைத்தபடி பார்த்தான் ரியோட்டோ ஆனால் இது மேதாவினுடைய ப்ளான்தான் என்பதை கண்டுபிடித்துவிட்டான் ஆராஷி அதனால் தனது டிரான்ஸ்லேட்டரையும் தனது அண்ணனின் டிரான்ஸ்லேட்டரையும் ஆன் செய்துவிட்டு அமைதியாக கவனிக்கும்படி கண்காட்டியவன் கையை கட்டியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான்..
“அவ என் பொண்ணு நான்தான் பெத்தவ வேற யாருக்கும் அவளநான் விட்டுக்கொடுக்க மாட்டேன்..” என்று கத்தினாள் தேஜு..
“ஓஓ..அப்படி.. அப்போ இதுக்கு பதில் சொல்லு நீதான் பெத்த சரி அவரு இல்லாம எப்படி பெத்துகிட்ட? டெஸ்ட்டியூப் மூலமாவா? சரி அப்படியே பெத்து இருந்தாலும் எங்களுக்குலாம் சொல்லாத ரகசியத்தை அதான் நீ பெத்த பிள்ளையோட அப்பா யாருங்குற விஷயத்தை எங்ககிட்டலாம் மறைச்சமாதிரி பிள்ளைகிட்டயும் மறைக்க வேண்டியது தானே? ஏன் உன் அப்பா செத்துட்டாரு” என்று முடிப்பதற்குள்
“ஷ்ரா” என்று கத்தினாள் தேஜு..
“உனக்கு வேண்டாதவன் உயிரோட இருந்தா என்ன? செத்தா உனக்கு என்னடி?” என்று கேட்க தேஜுவின் கண்களில் கண்ணீர் நிரம்பி முகமே சிவந்துவிட்டது.. ரியோட்டோ முன்னே செல்லப்போக அவனை தடுத்தான் நிதின்.. வேண்டாம் என்பது போல சைகை செய்தவன் அவனது பிடித்த கையை விடவில்லை..
“சொல்லுடி பதில் சொல்லு? அப்பா இல்லனு சொல்லி வளர்த்து இருக்கலாம் இல்ல வேற யாரையாவது கூட அப்பானு சொல்லி வளர்த்து இருக்கலாம் எதுக்கு இவர அப்பானு காட்டி வளர்த்து இருக்க? பதில் சொல்லு?” என்று அவள் கத்த அதிர்ந்த தேஜு..
“ச..ச..சப்போஸ்.. எ..எனக்கு ஏதாவது ஆனா..அதா..அவரு..தானே அப்பா..” என்று முடிக்காமல் அவள் அழ..
“ஓஓ… இது என்னடி கூத்தா இருக்கு? அவரு வேணாம் அவரால வந்த குழந்தை வேணும்.. அவரு வேணாம் ஆனா நாளைக்கு உனக்கு ஏதாவது ஆனா அந்த குழந்தைக்கு அப்பா வேணும்…நல்லா இருக்கே உன் நியாயம்.. அவங்க நாட்டு சட்டப்படி அவரு என் பிள்ளை எனக்கு வேணும்னு கேஸ் போட்டா அப்போ என்ன பண்ணுவ?” என்று அவள் கேள்வி மேல் கேள்வி கேட்க அதிர்ந்து போனாள் தேஜு..
“நோ..அவ எனக்குத்தான்” என்று அழ..
“அவரு கேஸ் போட்டா நீ பிள்ளைய கொடுத்துதான் ஆகனும் மிசஸ்.தேஜுஶ்ரீ ரியோட்டோ ஷிமிஜு..
புள்ளைக்கு அவங்க குடும்ப பேர் வைப்பாளாம் ஆனா அவங்க பிள்ளைமேல அவங்களுக்கு உரிமை இல்லனு சொல்லுவாளாம்.. எவ்ளோ சுயநலமா யோசிக்கிற நீ?” என்றவள் மேலும்..
“சரி நாளைக்கே அந்த பிள்ள விவரம் தெரிஞ்சு அவ அப்பாக்கிட்ட இருந்து பிரிச்சவனு உன்ன வெறுத்துட்டா? இல்லனா நீ குழந்தை உண்டானதையே அவ அப்பாக்கிட்ட இருந்து மறைச்சவனு தெரிஞ்சா? அப்பா இருந்தும் இல்லாத ஒரு பொண்ணோட மனநலம் எவ்ளோ பாதிக்கப்படும் அவளுக்கு எவ்ளோ இன்செக்யூர் ஃபீல் இருக்கும் அதை அவ எப்படி ஃபேஸ் பண்ணுவா? அவளும் உன்னமாதிரி கோழையா ஓடி ஒளிஞ்சா? அப்போ என்ன செய்வ?” என்று கேட்க அவளிடம் பதில் இல்லை அதிர்ச்சி மட்டுமே..
‘ஆண்டவா இதெல்லாம் நான் யோசிக்கவே இல்லையே’ என மனதில் புலம்பினாள்..ஆனாலும்
“எ..என்னடி இதெல்லாம் மேதா சொல்லி கொடுத்தாளா? அவ பேச சொல்லி உன்ன அனுப்பினாளா? நீ சொல்றமாதிரி ஏதாவது நடந்தா என் அ..அண்ணா பார்த்துக்குவாரு” என்றாள் அப்போதும்..
“ஏன்டி அவளுக்கு என்ன வேற வேலை இல்லையா? உனக்கு பேச ஆள் அனுப்புறதுதான் அவ வேலையா என்ன? அவளையும் சேர்த்து தான் திட்ட வந்தேன்.. இதுல அவ சொல்லிதான் நான் பேசனுமா? நீ என் ப்ரண்ட்டி உனக்காக நான் பேச வந்தா நீ என்னையே சந்தேகப்படுவியா? ஹான்..வா..அப்புறம் என்ன சொன்ன? அண்ணன் பார்த்துக்குவாரா? என்னடா இன்னும் அந்த தியாக செம்மல இழுக்கலையேனு பார்த்தேன் இழுத்துட்ட.. இல்ல தெரியாம தான் கேட்கிறேன் நீ யோசிச்சு தான் பேசுறியா? இல்ல கோவமா கத்தனும்னு ஏதோ வாய்க்கு வந்ததையெல்லாம் ஒலர்ரியா? ஏன்டி நீயும் வாழமாட்ட? அந்த மனுஷனையும் காலத்துக்கும் உங்க ரெண்டு பேருக்கு மட்டும் சேவகம் பன்ற அடிமையாவே மாத்திடுவியா? எவ்ளோ செல்ஃபிஷ்டி நீ.. உங்க அப்பா உங்க ரெண்டு பேரையும் பெத்து தண்டமா வளர்த்து அவரு தலையில எல்லா பொறுப்பையும் தூக்கி போட்டுட்டு அவரு போய் சேர்ந்துட்டாரு உன்னை தூக்கி சுமக்குறது இல்லாம உன் புள்ளைய வேற அவரு தூக்கி சுமக்கனுமா? அப்போ அவருக்குனு பொண்டாட்டி புள்ளைங்கனு ரெண்டு பேர் இருக்காங்களே அவங்கள என்ன பண்ணுறதாம் அவங்களுக்கு எப்போதான் அவர் டைம் ஒதுக்குறதாம்? நீ நல்லா இருக்கனும் உன் புள்ள நல்லா இருக்கனும் ஆனா உன் அண்ணன் கடைசி வரைக்கும் உங்க குடும்பத்துக்கு நாயா பேயா உழைக்கனும் அதானே உன் எண்ணம்..” என்று கோவமாய் கேட்க..
“அச்சோ.. அப்படியெல்லாம் இல்லடி.. அ..அண்ணா லைஃப் நல்லா ஹாப்பியா இருக்கனும்.. அவருமேல நான் ஏன் பாரத்தை ஏத்தப்போறேன்?” என்று அவள் வருத்தமாய் அழுதபடியே பேச.. அவளை முறைத்தாள் ஷ்ரத்தா..
‘ப்பா.. என்ன வேல்யூபல் பாயிண்ட்ஸ்’ என்று ட்ரான்ஸ்லேட்டர் மூலம் கேட்டுக்கொண்டு இருந்த ஆராஷி நினைத்தான்..
“உங்க அண்ணன்மேல தான் இப்போ மொத்த பாரமும் ஏத்தி வெச்சு இருக்கீங்க ரெண்டு பேரும்.. அது எப்போ இறங்கும் தெரியுமா?” என்றவளை புரியாமல் பார்த்தாள் தேஜு..
“ஷேர் ஹோல்டரா நீ என்ன செஞ்ச? மீட்டிங் மட்டும் வருவ அவரு நீட்டுற எடத்துல சைன் பண்ணிட்டு போய்ட்டே இருப்ப அதையெல்லாம் மெயின்டெயின் பண்ண அவரும் இதோ நிக்குறாங்களே மூனு பேரும் எவ்ளோ கஷ்டப்படுறாங்கனு தெரியுமா உனக்கு? இன்னும் ஶ்ரீ குரூப்ஸ்ஸோட அடாப்டட் வாரிசா அவரு மட்டும் தான் இருக்காரு நீங்க ரெண்டு பேரும் அவரோட ஷேடோல ஜாலியா எந்த கஷ்டமும் படாம சுத்திட்டு இருக்கீங்க..அவரோட பொறுப்பு எப்போ குறையும் தெரியுமா? நீங்க ரெண்டு பேரும் தான் ஶ்ரீ குரூப்ஸ்ஸோட உண்மையான வாரிசுனு பொறுப்பு ஏத்துக்கும்போதும்..நீங்க ரெண்டு பேரும் உங்க லைஃப்ப வாழ ஆரம்பிக்கும்போதும்தான்.. உங்களுக்கான பொறுப்புல நீங்க ரெண்டு பேரும் வந்து உட்கார்ந்து உங்க வேலைய பார்க்கும்போது தான் அவரு கொஞ்சம் அப்பாடானு மூச்சு விட முடியும் அது தெரியுமா உனக்கு? அவரு வீட்டுக்கு போய் எவ்ளோ நாளாகுதுனு தெரியுமா? அவரு ஒழுங்கா தூங்கி எவ்ளோ நாள் ஆகுதுனு தெரியுமா உனக்கு? உன் புள்ளைக்கு அப்பா வேணாம்னா அவரு புள்ளைக்கும் அப்பா வேணாமா? இதெல்லாம் கேட்டு சண்டை போட அண்ணி நினைச்சா நீ நிம்மதியா ஒரு சொட்டு தண்ணி கூட குடிக்க முடியாதுடி..
உன்ன பத்தி மட்டுமே யோசிச்சியே உன்ன சுத்தி இருக்குறவங்க உன்னால எவ்ளோ ஹர்ட் ஆனாங்கனு கொஞ்சமாச்சும் யோசிச்சியா நீ? சரி அவங்களவிடு.. உன் புள்ளைக்கு எதிர்காலம்னு ஒன்னு இருக்கே அதுல என்ன காட்ட போற அவளுக்கு நீ.. அவளோட லைஃப்ல அப்பாங்குற கேரக்டர்க்கு அவ காலம்பூரா ஏங்கி சாகணுமா? பெத்த அப்பாவ வில்லனா காட்ட போறியா? மத்த எல்லாரோட நிழல்ல தான் அவளும் வாழணும்னு காட்டப்போறியா?
இப்போ அவருக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்? அவரு நண்பனை நம்பி கைபுடிச்சவள நம்பாம வாழ்க்கையை தொலைச்சாரு.. நீ மத்தவங்கள நம்பி உன்ன நம்பி பொறந்த பிள்ளையோட எதிர்காலத்தை அப்பா இல்லனு சொல்லி பாழாக்க போற அதானே வித்தியாசம்..
அவராவது பரவாயில்லை தெரியாம தப்பு பண்ணாரு ஆனா அதுக்கும் தண்டனை அனுபவிச்சுட்டாரு ஆனா நீ தெரிஞ்சே தப்பு பண்ணுறியே உன்ன என்ன செய்யுறது?” என்று விடாமல் பேசினாள் ஷ்ரத்தா..
அவள் கேட்க கேட்க அவளுக்கு தலையே சுற்றுவது போல் ஆகிவிட்டது..
“இல்ல..இல்ல..இல்ல..என் பொண்ண நான் அப்படி வளர்க்க மாட்டேன்.. நான் ஒன்னும் சுயநலவாதி இல்ல..அவ வாழ்க்கை பாழாக விடமாட்டேன்..என் கடமையை நான் கண்டிப்பா செய்வேன்..” என்றவளை ஏளனமாய் பார்த்தவள்..
“அப்புறம் ஏன் உன் புருஷன் வந்து மன்னிப்பு கேட்டு கூப்பிட்டும் இங்கேயே உட்கார்ந்துட்டு இருக்க? போகவேண்டியது தானே உன் புருஷனோட..” என்று கேட்க..
தன் அண்ணனை பார்த்து திரும்பி கண்களை துடைத்தவள்
“அண்ணா நாளைக்கே ப்ரஸ்மீட் வைங்கனா.. ஶ்ரீ குரூப்ஸ்ஸோட முதல் வாரிசு அவங்க குடும்பம்னு அறிமுகம் செய்ங்கனா” என்றாள்..
“குடும்பம்னா உன்னையும் ஷாச்சியையும் மட்டும் அறிமுகம் செய்யனுமா? அப்படி பண்ணா நிறைய கேள்வி வருமேமா?” என்று கேட்டான் நிதின்..
‘எப்பா..இது உலகமகா நடிப்புடா சாமி’ என்று மனதில் எண்ணினான் ஆராஷி..
“குடும்பம் னா இவருதானே என் புருஷன் புள்ளைக்கு அப்பா அப்போ அவரையும் சேர்த்து தான் சொல்றேன்” என்றாள்..
“அவரு உன் புருஷன்னு சொல்லிட்டா அப்புறம் நீ அவரோடதானே இருக்கனும்..நீங்க புருஷன் பொண்டாட்டியா இருக்கனும்.. நிறைய நேரம் ஒன்னாதான் இருக்கனும்.. வெளி உலகத்துக்காகனு நடிக்க ஆரம்பிச்சீங்கனா அப்புறம் லைஃப் புல்லா நடிக்க வேண்டியதுதான் தேஜுமா? அதுக்கு உனக்கு ஓகேவா தேஜுமா? நடிப்புக்காக ஒரு வாழ்க்கையை ஏத்துக்க வேணாம்டா..நீ அண்ணாகூடவே கூட இருந்திடு இப்படி ஒரு நிலமை வேணாம் மோளே..” என்றான் மீண்டும்..
“இ..இல்ல அண்ணா.. நா..நான் அவரோட சேர்த்து வாழுறேன்.. இது நடிப்புக்காக இல்ல.. என் பொண்ணுக்காக.. அவளோட எதிர்காலத்துக்காக.. எனக்கும் சில பொறுப்புகள் இருக்குல அதை செய்யனும்ல.. நீங்க எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க போதும்.. ஆனா அதுக்காக அவரை நான் முழுசா ஏத்துக்கிட்டேன்னு அர்த்தம் இல்ல.. என் பொண்ணுக்காக அவரை ஏத்துக்கிறேன்..என் கோவம் போற வரைக்கும் அவரு பொறுமையா இருந்து தான் ஆகணும்” என்றாள் ரியோட்டோ வை பார்த்து தீர்க்கமாக..
அவனோ நடப்பதை நம்பமுடியாமல் பார்த்தபடி நின்றிருந்தான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *