Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 20

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 20

அத்தியாயம் – 20
ஹோட்டல் அறையில் வந்து படுத்தவனுக்கு தூக்கம் தூரபோய்விட்டது
அதே நேரம் அவனுக்கு வீடியோ கால் செய்தான் ரியோட்டோ..
அதை அட்டென் செய்தவன்
(டிரான்ஸ்லேட்டட்)
“சொல்லுங்கனா.. அண்ணிக்கு வீடு ஓகேவா? என்ன சொல்றாங்க? பேபிக்கு சின்னதா கட்டில் ரெடி பண்ண சொன்னேனே ஹர்ஷத் செஞ்சாரா?” என்று கேட்க..
“எல்லாம் செஞ்சு கொடுத்துட்டான் உங்க அண்ணிக்கும் ஓகேதான்.. நீ ஏன் இங்க வராம ஹோட்டல் போன? இது உன்னோட வீடு ஞாபகம் இருக்கா?”
“எப்போல இருந்து பிரிச்சு பார்க்க ஆரம்பிச்சீங்கனா.. அது நம்ம வீடு அதை மனசுல வெச்சுட்டு பேசுங்க.. உங்களுக்கும் அண்ணிக்கும் சம் ப்ரைவசி வேணும்னு தான் நான் ஹோட்டல் வந்தேன் அதைபோய் இப்படி யோசிப்பீங்களா? நீங்களும் சேர்த்து என்னை கஷ்டப்படுத்துறீங்களா?” என்று அவன் வருத்தமாய் கேட்க..
“பின்ன என் மேதா குழந்தைடா அவள நீ கஷ்டப்படுத்தி இருக்க எனக்கும் கோவம் இருக்கும்ல.. தம்பிங்கிறதால உன்ன விட்டுடுவேனா?” என்று ரியோட்டோ பதில் பேச..
“தெரியாதவங்க பேசினா ஓகே எல்லாம் தெரிஞ்ச நீங்களே பேசினா எப்படினா?” என்று அவன் வருந்த..
“ஹேய்..சும்மாடா.. எனக்கு என் பொண்ணு எவ்ளோ முக்கியமோ அதே அளவு மேதாவும் முக்கியம்டா ஆரா.. அது உனக்கு தெரியனும்ல அதான் அப்படி பேசினேன்.. சாரி இனிமேல் எதுவும் பேசல” என்றான் ரியோட்டோ..
“எல்லாரையும் அவ பக்கம் இழுத்துடுறா.. எனக்குனு ஒருத்தரும் சப்போர்ட் இல்ல.. இருக்கட்டும் இருக்கட்டும்.. அந்த வசியக்காரிய நான் எப்படி வசியம் பன்றேன்னு பாருங்க” என்று அவன் வருந்தும் மனதை மறைத்தபடி பேச அவனது மனம் புரிந்தவன் பேச்சை மாற்றினான்..
” ஆமாடா உன் ஆள பார்த்ததும் அண்ணன்னு ஒரு ஜீவனை அண்ணினு ஒரு ஆள்கிட்ட தனியா விட்டுட்டு போறோமேனு கொஞ்சமாவது யோசிச்சியாடா நீ.. உனக்கு நான் சப்போர்ட் பண்ணனுமா?” என்று கேட்க..
“ஓஓ..ரிவென்ஞ்சா?.. அதுசரி.. அப்போ இருந்த எக்சைட்மெண்ட்ல உங்கள கவனிக்கலனா” என்று அவன் வெட்கப்பட..
“பார்ரா சார்க்கு வெட்கம்லாம் வருது..” என்றவன் சிரிக்க..
“கிண்டல் பண்ணாதீங்கனா..நான் வைக்கிறேன் ஃபோனை போங்க” என்று கூறியவன் கட் செய்யப்போக..
“ஆரா வெச்சுடாதே உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லத்தான் ஃபோன் செஞ்சேன்..அப்பா ஃபோன் பண்ணாருடா..உன்கிட்ட ஏதோ அவசரமா பேசனுமாம்” என்று கூற.. சற்று யோசித்தவன்..
“சரினா..நான் பேசுறேன்..நீங்க அண்ணிகிட்ட நல்லா அடி வாங்கிட்டு காலைல மேக்கப் போட்டுட்டு மீட்டிங் வந்து சேருங்க..இப்போ வைக்கிறேன் பை..” என்றுவைத்துவிட்டான்..
“டேய்..டேய்..டேய்” என்றவன் அவன் கட் செய்துவிட்டதால்
“நீ நேர்ல சிக்காமலா போய்டுவ.. நாளைக்கு கவனிச்சுக்கறேன்டா உன்னை” என்றபடி திரும்ப அவ்வளவு நேரம் அவர்கள் உரையாடலை கேட்டபடி நின்றிருந்தாள் தேஜு..
அவளை பார்த்ததும் பம்மியவன் ரூமிற்குள் ஓட பார்க்க..
“நில்லுங்க” என்றாள் தேஜு..
அங்கேயே நின்றவன் திரும்பி அவளை பார்க்க..
“இது யாரோட வீடு?” என்றாள்..
“நம்ம வீடுதான் ஶ்ரீ” என்று அவன் கூற..
“நம்ம வீடுனா புரியல?” என்றாள் மீண்டும்..
‘என்னமோ வம்பு பண்ணப்போறா’ என்று எண்ணியவன் தீர்க்கமாய் அவளை பார்த்து..
“நீ நான் நம்ம பொண்ணு என் தம்பி எல்லாரும் சேர்ந்து வாழப்போற நம்ம வீடு போதுமா?” என்று விளக்கம் கொடுக்க..
“அப்போ உங்க தம்பி எதுக்கு போய் ஹோட்டல்ல தங்கினாராம்?” என்று தேஜு கேள்வி கேட்க..
“அது..அது வந்து இன்னைக்கு தானே நீ வந்த.. ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறோமேனு நமக்கு ப்ரைவசி கொடுக்கிறேனு ஹோட்டல்ல தங்கி இருக்கானாம்..நாளைக்கு நானே நம்ம வீட்டுக்கு இழுத்துட்டு வந்துடுறேன்” என்று கூற..
“ம்ம்” என்றவள் திரும்ப..
“ஶ்ரீ” என்று ரியோ அழைக்க..
திரும்பி பார்த்தாள்..
“இல்ல.. ஆராக்கும் மேதாக்கும் நடுவுல என்ன பிரச்சனைனு உனக்கும் தெரியும்.. ஆனாலும் நீ ஆராவ ஏத்துக்கிட்டயா? இல்ல உனக்கும் அவன்மேல கோவமா?” என்று தயக்கமாய் கேட்டான் ரியோ..
“எனக்கு இன்னும் கூட அவங்க லவ் முழுசா தெரியாது ஆனா அவங்க பிரியும்போது நான் இங்கதான் இருந்தேன்.. அப்போதான் வந்தேன்.. நீங்க எப்படி கட்டினவள நம்பலையோ அப்படித்தான் அவரும் தன்னை விரும்பினவள நம்பல.. இதுதான் எனக்கு தெரியும்.. இதுல என் தங்கச்சி ரொம்ப மனவேதனை பட்டு இருக்காங்கிறதும் தெரியும்..
ஆனா அந்த வேதனையை உங்க தம்பியால மட்டும் தான் ஆத்தமுடியும்னும் தெரியும்..
உண்மையான காதல்ல வேதனை கொடுக்கிறவங்கதான் மருந்தாவும் இருப்பாங்க..
இதுல என்னோட கருத்துனு எதுவும் இல்ல.. இது அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கை.. அவங்கதான் முடிவு பண்ணனும்..
உங்கள என் பேச்சு கஷ்டப்படுத்தி இருந்தா மன்னிச்சிடுங்க” என்றாள் கடைசியாக..
அவள் பேச்சு வலித்தாலும் தான் அவளை வேதனை படுத்தியதற்கு தனக்கு இந்த வேதனை தேவைதான் என்று அறிந்தவன்
“அதெல்லாம் ஒன்றுமில்லை ஶ்ரீ.. நான்தான் உன்ன கஷ்டப்படுத்தி இருக்கேன்..எல்லாம் ஒரே நைட்ல மாறிடாதுல.. டேக் யுவர் ஓன் டைம் ட்டூ ஃபார்கிவ் மீ” என்றவன்.. சற்று தூரம் சென்று திரும்பி பார்த்து
“குட்நைட் பே” பேபி என்று கூற வந்தவன் அவளது முறைப்பில் அப்படியே நிறுத்திவிட்டான்..அவளும் தலையசைத்து சென்றாள் வேறொரு அறையினுள்..
அண்ணன் சொன்னதும் தனது தந்தைக்கு ஃபோன் செய்து பேசினான் ஆராஷி.. அவனது பேச்சிலேயே அவருக்கு புதுவிதமான ஆராஷி தெரிந்தான்..
அண்ணனை பற்றியும் அண்ணியை பற்றியும் குழந்தையை பற்றியும் பேசியவன் அவருக்கு புதிதாய் தெரிந்தான்.. அவர் கண்ட ஆராஷி இவனல்லவே..
அனைவரையும் ஒதுக்கி வைப்பவன் இன்று பாசம் அன்பு என மாறிவிட்டானே.. அவனை மாற்றிய அந்த காதலை கொடுத்தவள் சீக்கிரமே அவனோடு சேர வேண்டும் என அவர் வருந்த..ஆனால் அதை அவனிடம் காட்டாமல் பேசி முடித்தார்..
இத்தனை பேரையும் தேடவைத்தவள் யாரும் தேடமுடியாது என நினைத்து பதுங்கி இருப்பது ஜப்பானின் yokosuka (யோகோசுகா) பகுதியில் அமைந்துள்ள மரைன் எர்த் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி யில் அவனது நண்பன் ஷர்மாவுக்கு பதிலாக பணியாற்றிக்கொண்டு இருந்தாள்..
அவளுடன் வேலையில் உதவியாகவும் ஷர்மா கேட்டுக்கொண்டதால் அவளுடனேயே சுற்றி திரியும் தோழியாகவும் இருப்பவள் தான் மெடில்டா..அவளை பற்றி அனைத்தும் அறிவாள் அவள்..ஆனால் எதையும் கேட்டு அவளை கஷ்டப்படுத்த மாட்டாள்..
தனக்கு ஒரு முக்கியமான வீடியோ கான்பரன்ஸ் இருப்பதாக சொல்லி கொஞ்சநேரம் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ளும்படி கூறியவள் வியர்க்க விருவிருக்க அவளது அறையிலிருந்து வெளியே வந்ததை பார்த்த மெடில்டா..
“ஏய்..என்ன ஆச்சு உனிக்கு? இப்பிடி வர்ரே? எனிதிங் ராங்?” என்று கேட்டபடி அவளுக்கு பருக தண்ணீர் எடுத்து கொடுத்தாள்..
அதை வாங்கி அவசரமாய் பருகியவளுக்கு புறையேறியது.. இருமல் வர ஆரம்பித்தது..
அதை கண்டவள் அதிர்ந்து அவளது தலையில் தட்டி முதுகை வருடி கொடுத்தாள்
“ஆர் யூ..ஆர் யூ ஸ்டில் லவ் தட் ஆக்டர்?” என்று கேட்க டக்கென்று இருமல் நின்று அவளை ஆவென பார்த்தாள் நம் மேதஷ்வினி ஶ்ரீ..
“ஸ்டில் யுவர் ஐஸ் ஷோயிங் வாட் யூ திங்க் பேபி” என்றவள் சிரிக்க..
‘ச்சே நம்ம கண்ணுதான் நமக்கு எதிரி’ என்றபடி எண்ணியவள்..அவளை முறைக்க சிரித்தவள்..
“சில் பேபி..யுவர் ஐஸ் ஆர் மெஸ்மைரிசிங் மீ..ம்ம்..ஒரு கேர்ள் எனிக்கே உன்மேலே லவ் வருது.. அந்த ஆராஷிக்கு ஏன் வர்லே?” என்று கேட்க..
“அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது மெடில்டா.. சரி ஷர்மா ஃபோன் பண்ணானா?” என்று கேட்க..
“ம்ம்..பண்ணான்..உன்னே கேர்ஃபுல்லா பார்த்துக்க சொன்னான்.. அண்ட் உன்கிட்டயும் பேசணும்னு சொன்னான்” என்று கூறினாள்
“ம்ம்..நான் பேசுறேன்” என்றவள் அமைதியாகிவிட..
அவளையே பார்த்த மெடில்டா வை பார்த்தவள்
‘என்ன?’ என்பது போல பார்த்தாள் மேதா..
“ஹவ் ஹாசம் யுவர் லவ் மேத்தா..ப்ளீஸ் டெல் மீ யுவர் லவ் ஸ்டோரி ஐயம் சோ எக்சைட்டட் திஸ் மச் ஆஃப் லவ் அண்ட் அஃபெக்ஷன்..டெல் மீ டியர்” என்று அவள் கேட்க..
சிறிது நேரம் யோசித்தவள் “நாளைக்கு லீவ் தானே..நாளைக்கு சொல்றேன்..ப்ளீஸ்.. இன்னைக்கு என்னால பேச முடியாது”என்றாள் மேதா..
அவளது நிலை உணர்ந்தவள்..
“இட்ஸ் ஓகே டியர்.. நாளிக்கு ரூம்ல மீட் பண்றேன்” என்று விட்டு கிளம்பி சென்றாள்..
அவள் சென்றதும் அவள் செய்யவேண்டிய வேலைகளை சரிபார்த்தவள் வேலையில் தன்னை மூழ்கவைக்க முயற்சி செய்ய அவளால் முடியவில்லை..
‘தன்னை கண்டதும் எழுந்து நின்று “அஷு” என்றவன் கண்களில் எத்தனை ஏக்கம் சற்று மெலிந்து வேறு காணப்பட்டானே..
எப்போதும் போல அந்த கண்கள் தன்னை கட்டுப்படுத்த முயன்றதுவோ.. எப்போதும் தன்னை கோவமாய் பார்க்கும் கண்கள் இப்போது தன்னை தேடுகிறதோ..
ச்சே.. ச்சே..இருக்காது.. அவருக்குத்தான் நம்மமேல லவ்வே இல்லையே.. அப்புறம் எப்படி..மே..பி.. அவரோட ஃபவுண்டர்னு தெரிஞ்சு தான் என்கிட்ட பேச ட்ரை பண்றாரு போல’ என்று எண்ணியவள் (அவளிடம் இதுவரை யாரும் ஆராஷியின் காதலை சொல்லவில்லை..)மறுநாள் தன் அக்காவிடமும் அண்ணனிடமும் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்..
அந்நேரம் அவளுக்கு ஃபோன் வர எடுத்து பார்த்தாள் அவளது உயிர்தோழன் ஷர்மா தான் கால் செய்து இருந்தான்..
எடுத்தவள் ஹலோ சொல்லும்முன்..
“என்னம்மா.. மேதா..என்ன பண்றீங்க? ஏன்டி நான் எவ்ளோ பெரிய பிஸினஸ் மேன்.. எவ்ளோ பெரிய சைன்டிஸ்ட் ஆகவேண்டியவன நீ இடம் மாத்தி உட்கார வெச்சு இருக்க..என்னையெல்லாம் பார்த்தா உனக்கு பாவமா இல்லையா தாயே?” என்று பரிதாபமாக கேட்டான் அவசர அவசரமாய் ஷர்மா..
அவனது அவசரமான பேச்சில் புன்னகைத்தவள்..
“அவன் அவன் ப்ரண்ட்க்காக உயிரையே கொடுக்கிறான் நீ எனக்காக வேலைய கொடுக்க மாட்டியாடா? அவ்ளோதானா என்மேல பாசம்? அவ்ளோதானா நம்ம ப்ரண்ட்ஷிப்?” என்று அழுவது போல அவள் பேச
“பாருடி பக்கத்தில இல்லனு அப்படியே கர்ணன் பட டையலாக்லாம் விடாதே.. நேர்ல கிளம்பி வந்து கொல்லுவேன்..ஆல்ரெடி என் வேலையத்தான்டி நீ பார்த்துட்டு இருக்க அது நியாபகம் இருக்கட்டும்.. உன் ஆளு உன்னை தேடக்கூடாதுனு என் வேலையை நீ புடுங்கிட்டு என்னை துரத்திவிட்டுட்ட.. இதெல்லாம் நியாயமே இல்லடி.. ” என்றவனை
“எல்லாம் கொஞ்ச நாள்தான்டா.. நான் பண்ணாலும் ப்ரொஜக்ட் உன் பேர்ல தான்டா ரிலீஸ் ஆகும் உன்னோட ப்ரோகிராம்ஸ் தானே நான் ப்ராசஸ் பண்ணிட்டு இருக்கேன் அப்புறம் என்னடா?” என்று அவள் பேச.. அவளது மனநிலையை உணர்ந்தவன் தன் கோவத்தை விடுத்து அவளிடம் சமாதானமாய் பேச ஆரம்பித்தான்..
“சரி விடுடி..நான்தான் லூசுனு உனக்கு தெரியாதா? அடிக்கடி இப்படி பொலம்புவேன்..அதெல்லாம் கண்டுக்காதே.. நான்பேச வந்த விஷயமே வேற..” என்று பேச
“சொல்லுடா” என்று கேட்டாள் மேதா..
“இன்னைக்கு கான்பரன்ஸ் மீட்ல.. உன் ஆள பார்த்தல்ல?” என்று கேட்க அவளிடம் மெளனமே..
“ஐ க்நோ பேபி.. அதான் உன்னால பேச முடியலல?” என்று கேட்க அவளிடம் மீண்டும் மெளனம்..
அதை புரிந்தவன்
“நீ என்ன நினைக்குறனு புரியுதுடா.. ஆனா எனக்கு தோணுற விஷயம்.. ஒருத்தருக்காக நீ உன்மேல பாசமா இருக்குறவங்க எல்லாரையும் விட்டுட்டு வரணுமா? இப்படி ஓடி ஒளிஞ்சு யாருக்கும் நீ யாருனு தெரியாம ஒரு லைஃப் வேணுமா? அண்ணா அக்காலாம் நீ இல்லாம எவ்ளோ ஃபீல் பண்ணுவாங்கனு நீ யோசிக்கவே இல்லையா பேபி?” என்று அவன் தன்மையாய் கேட்க..
சிறிது நேரம் அமைதி காத்தவள்..ஒரு பெருமூச்சை விட்டு அவனுக்கு பதில் கூறினாள்..
“எனக்கே ஆயிரம் வேலை இருக்கும்போது நான் உன் வேலையை வாங்கிட்டு வந்து இங்கே இருக்கேன்னா எதுக்குடா எல்லாம் மறக்கனும் கூடவே இருந்தா நான் கஷ்டப்படுறத பார்த்து எல்லாரும் கஷ்டப்படுவாங்க அவங்களுக்காக நான் சிரிக்கிற மாதிரி நடிக்கனும்டா.. அது இன்னும் என்னை நானா இருக்கவிடாது.. அவங்க கிட்ட நடிக்கவும் என்னால முடியாது.. அதனால தான் எல்லாத்தையும் விட்டு கொஞ்சம் விலகி வந்து இருக்கேன்.. கூடிய சீக்கிரமே நான் நார்மல் ஆகிடுவேன்.. புரிஞ்சுக்கடா” என்றாள் அவளும் தன்மையாய்..
“என்னமோ போ.. எனக்கு உன்ன அங்க விட்டுட்டு நீ வேற எங்கேயாவது என்கிட்ட கூட சொல்லாம போய்டுவியோனு தான் பயமா இருக்குடி..” என்று அவனது பயத்தை கூற..
“கவலைப்படாதே உன் வேலையை முடிக்காம எங்கேயும் போக மாட்டேன்” என்று அவள் கூற சிறிது ஆசுவாசமானவன்
“சரி பேபி எனக்கு வொர்க் ஜாஸ்தியா இருக்கு.. நான் அப்புறம் உன்னை கூப்பிடுறேன்..டேக் கேர்” என்று கூறியபடி கட் செயய் போனவனை தடுத்தது அவளது குரல்..
“ஷர்மா.. நான் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறேனாடா?” என்று கேட்க..
“ப்ளைட் ஏறிவந்து வாயிலேயே அடிப்பேன்.. இதெல்லாம் ஒரு கஷ்டமா? நீ சரியாகுறது தான் எனக்கு முக்கியம்.. அதுக்காக நான் என்ன வேணா செய்வேன்.. புரிஞ்சுதா? இனிமேல் இப்படிலாம் பேசின நான் பாட்டுக்கு அண்ணன போய் கூட்டிட்டு நேரா அங்க வந்துடுவேன் பார்த்துக்க..சரி நான் நாளைக்கு ஃபோன் பன்றேன்” என்றபடி வைத்துவிட்டான்..

2 thoughts on “வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 20”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *