Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 27

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 27

அத்தியாயம்- 27

“நீ என்ன கேட்க போறனு எனக்கு தெரியும்.. அதுக்கு நான் சம்மதிக்கவும் மாட்டேனு உனக்கும் தெரியும்.. அமைதியா கிளம்பு அம்மு.. ஏற்கனவே உன்ன இப்படி பார்க்க எனக்கு கஷ்டமா இருக்குறதால தான் நான் வேலையை காரணம் வெச்சு உன்ன இழுத்துட்டு போறேன்.. அட்லீஸ்ட் கொஞ்சமாச்சும் உன்ன பழைய மாதிரி மாத்தமுடியும்னு ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையிலதான் இதுல நீ திரும்ப திரும்ப உன்ன தாழ்த்திக்கிறது எனக்கு பிடிக்கலமா.. உன் லவ்வ நான் மதிக்கிறேன் ஆனா அதுக்காக நீ செய்யுற பையித்தியக்கார தனத்தைலாம் என்னால ஏத்துக்க முடியாது..
ஒரு மாசம் கழிச்சு நீ வந்து என்னனா செய் நான் கேட்கமாட்டேன் ஆனா நான் உன் பக்கத்துல இருக்கும்போது நீ காயப்படுறத என்னால தாங்கமுடியாதுடி..ஒழுங்கா கிளம்பு” என்றுவிட்டான்..
அமைதியானவள்..

“அவரு கோவப்படுவாருதான் நான் ஒத்துக்கிறேன் ஆனா அவரு ரொம்ப நல்லவருடா..புரிஞ்சுக்கடா” என்றாள்..

“அவரு எவ்ளோ நல்லவரா இருந்தாலும் எனக்கு வேணாம் அம்மு.. ஒரு மாசம் அவருக்கு நான் அப்பாயிண்ட் பண்ண ஆள் செட்டாகிட்டா அவரையே போட்டுடுவேன்.. அதுக்கு அப்புறம் நீ நடிக்கவேண்டி இருக்காது.. இதுதான் என்னோட முடிவு.. என்கூட ஒன் மன்த் அவுட்டிங் வரேன்னு ப்ராமிஸ் பன்னி இருக்க அதுக்குத்தான் உன்ன இழுத்துட்டு போறேன் ஒழுங்க வா..இதுக்கு மேல எதுவும் பேசின அது உன் ப்ராமிஸ்ஸ நீயே ப்ரேக் பண்றமாதிரி” என்றுவிட்டு அவளது பேக்கிங்க்கு ஹெல்ப் செய்தான்…

“சரி ஓகே..சரண்டர்..நான் எதுவும் கேட்கலை.. ஆனா அவர அட்லீஸ்ட் தூரத்துல இருந்து பார்த்துட்டு நாம கிளம்பலாம் ப்ளீஸ்டா..” என்று கூற..
இதற்குமேல் அவளை ஏதாவது சொன்னால் அவள் அடம் பிடிப்பாள் என்று அவனுக்கு தெரியும் தாங்களும் அதே ஏர்போட்டில்தானே கிளம்ப போகிறோம் என்று அமைதியாகிவிட்டான்..
ஒருவேளை அவன் வேண்டாம் என மறுத்திருந்தால் அவளுக்கு இன்று ஓடி ஒளியும் நிலை வந்திருக்காதோ?

இருவரும் கிளம்பி ஏர்போர்ட் சென்றனர்..
தனது புது மொபைலில் இருந்து தனது அண்ணனுக்கு ஃபோன் செய்தவள் கிளம்பியதை தெரிவித்து விட்டு ஷர்மாவிடமும் பேசவைத்து ஃபோனை ஆஃப் செய்து வைத்தாள்..
ஆராஷியின் ப்ளைட் லேண்ட் ஆகியபின் அரைமணி நேரம் கழித்து தான் இவர்களது ப்ளைட் டேக் ஆஃப் ஸ்லாட் ஒதுக்கப்பட்டு உள்ளது அதனால் அங்கிருந்த ஷாப்பிங் மாலை சுற்றி வந்துகொண்டு இருந்தனர்..

பிரபல உலக அளவில் புகழ்பெற்ற பாடகரும் நடிகருமான ஆராஷி ஷிமிஜு.. அவரது வருகைக்காகதான் இவ்வளவு மாற்றங்களும்..
அப்போது தான் சைனாவில் கொரோனா என்னும் கொடிய நோயால் மக்கள் இறக்கும் செய்தி கேட்டு மற்ற நாடுகள் தங்களது ஆரோக்கியம் மற்றும் மருத்துவ வசதிகளை அலசி ஆராய்ந்து கொண்டு இருந்தது..

ஒரு வசந்த கால நேரத்தில் இந்திய மண்ணில் கால் பதித்தது ஜப்பானிய ப்ளைட்..
அதிலிருந்து இறங்கியவனுக்கு
அங்கேயே இந்திய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது..
அமைதியாக சிரித்தமுகத்துடன் அதை ஏற்றவன்.. அவனது லக்கேஜ் வர நேரமாகும் என அறிவிப்பு வந்ததால் அவனும் அங்கிருந்த ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தான்..
மாஸ்க் தொப்பி என இருந்ததால் அவனை அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை அதனால் பாடிகார்ட்ஸ்க்கும் சற்று தூரம் இடைவெளி விட்டு தொடரும்படி ஆணையிட்டவன் முன்னே சென்று ஒரு நகை கடையில் நுழைந்தான்..
அங்கு கண்ணாடியில் வைக்கப்பட்டு இருந்த ஒரு மெல்லிய டாலர் செயின் அவனது கவனத்தை ஈர்த்தது..
‘ஒருவேளை அவளை நான் இந்தியாவுல பார்த்தா அவளுக்கு கிஃப்ட் பண்ணனும்’ என்று மனதில் எண்ணியவன் அதை உடனே வாங்கிவிட்டான்.. தூரத்திலிருந்து அவனை பார்த்துவிட்டாள் மேதா..
அவனை அருகில் இருந்து பார்க்கவேண்டும் என்று எண்ணியவள் தன் நண்பனை அழைக்க பார்க்க அவனோ மும்முரமாக எதைபற்றியோ கடைகாரரிடம் பேசிக்கொண்டு இருந்தான்..
சரி நாமலே கிட்டபோய் பார்க்கலாம் என எண்ணியபடி மெல்லமாக சென்றவள் சட்டென நின்றாள் தூரத்தில் ஒருவன் கையில் கத்தியை மறைத்து வைத்தபடி ஆராஷியை நோக்கி வருவதை கண்டாள்.. பாடிகார்ட்ஸ்ஸும் வேறு புறம் திரும்பி நின்றிருக்க ஆராஷியை நோக்கி அவன் வேகமாக ஓடி வர நின்றவள் வேகமெடுத்து ஓடினாள்..
ஓடிப்போய் அவனை இழுக்க போனவள் அவன் ஒரு அடி நகர அவனது முதுகின் பின் அவள் நிற்கும்படி ஆனது அவனை குத்த ஓங்கிய கத்தியும் அவளது வயிற்றை பதம் பார்க்க.. அவளது கையில் இருந்த பொருட்கள் எல்லாம் சிதற..குத்தியவன் ஓடிவிட்டான்..ஆராஷியை வேறுபுறம் தள்ள அவனது கையில் இருந்த நகையும் அவளது பொருட்களோடு கலந்து கீழே விழுந்தது.. ஒருவன் ஓடுவதை பார்த்த பாடிகார்ட்ஸ்ஸும் உடனே ஆராஷியை சூழ்ந்தபடி அவனை அழைத்து சென்றுவிட்டனர்.. அவன் திரும்பி பார்க்க அவளது பின்புறம் மட்டுமே அவனுக்கு தெரிந்தது.. வேறு எதையும் யோசிக்கும் நிலையில் அவன் இல்லை.. அதன்பின் அங்கிருந்த போலீஸ் ஒடிவர அவளை தேடியபடி வந்த ஷர்மா இரத்தவெள்ளத்தில் திளைத்த மேதாவை கண்டவன்
“மேதா” என்று கத்தியபடி ஓடிவந்தவன்.. அவளை அள்ள போலீஸ் உடனடியாக அவளது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய..
கண்விழித்த மேதா..
முதலுதவி செய்து தன்னை ஊருக்கு கூட்டிசெல்லும்படியும் இந்த விஷயம் யாருக்கும் சொல்லக்கூடாது என்றும் அவள்மீது சத்தியம் பெற்றாள்..
அவளது ஆணைப்படி அவளது உடைமைகளை எடுத்தவன் அந்த நகைபெட்டியும் அத்தோடு எடுத்து வைத்தபடி அவளது முதலுதவி முடிந்ததும் ஒரு டாக்டரின் உதவியோடு அவளை அங்கிருந்து ஜப்பான் அழைத்து சென்றான்.. மெடிக்கல் எம்பஸியிடம் உடனடியாக ஃபர்மிஷன் வாங்கி அவளை உடனே அழைத்து சென்று விட்டான்..
ஆராஷிக்கு மனசே சரியில்லை.. அந்த பெண் யார் என்ன ஆச்சு என்பதுகூட தெரியவில்லை.. பாடிகார்ட்ஸ்க்கும் எதுவும் விவரம் தெரியவில்லை.. அவள் அவனை தள்ளும்போது பார்த்ததால் அவர்களுக்கும் எதுவும் புரியவில்லை.. அவள் மாஸ்க் அணிந்து இருந்ததால் யாரென்றும் தெரியவில்லை..
பின் அங்கிருந்தவர்கள் ஏதோ காதலர்கள் பிரச்சனை போல என பேசிக்கொண்டதாக கூறினர்..
அதனால் அவனும் விட்டு விட்டான்..
பத்திரமாய் அழைத்து வரப்பட்ட ஆராஷியை சந்தித்து அவனை வரவேற்றவன் முதலில் சென்னையில் உள்ள அவர்களது ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டான்..கதவை திறந்ததும் ஒரு ஹால் போன்ற அமைப்பு..அதை தாண்டி உள்ளே சென்றால் நீச்சல் குளம்..குளத்தின் மேல் அந்த வேளை போலவே இருக்கும்.. வெளியே வெயில் அடித்தால் வெளிச்சம் மட்டுமே இருக்கும்.. ஆனால் வெளியே மழை பெய்தால் உள்ளேயும் மழை சாரல் போல இருக்கும்.. வெளியே குளிர் என்றால் அந்த சூழ்நிலைக்கேற்ப உடல் சூட்டை மெயின்டெயின் செய்யும் முறையில் இருந்தது..அனைத்தும் சென்சார் முறைப்படி அமைக்கப்பட்டு இருந்தது..அதன் வேலைப்பாடு அத்தனை அழகாய் செய்திருந்ததனர்..நடுவில் அதனை சுற்றியவாறு அமைந்த மூன்று அறைகள்.. முதல் அறை மாஸ்டர் பெட்ரூம்.. அடுத்து ஒரு குட்டி ஜிம்.. அடுத்த அறை கூட வருபவர்கள் முக்கியமான நபராக இருந்தால் தங்குவதற்கு இருந்தது..அங்குதான் தங்க வைக்கப்பட்டான் ஆராஷி.. அவனுக்கு அந்த இடம் மிகவும் பிடித்து இருந்தது.. அதனால் டிசைனர் யார் என கேட்டான் அவன்.. அது புரியாமல் நின்ற நிதினிடம் ஒருவர் வந்து அவன் கேட்டதன் விளக்கத்தை கூற அவனது தங்கைதான் என்று பதிலளித்தான்..
அவங்கள நான் பார்க்கலாமா? என்று அவன் ஜாப்பனீஸ்ல கேட்க அதை மீண்டும் மொழி பெயர்த்தார் அவர்..ஊட்டிக்கு கூட்டி சென்றான் நிதின்..
ஊட்டியில்தான் அவனது ஷுட்டிங் இருப்பதாக சொல்லி இருந்தனர்

2 thoughts on “வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 27”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *