அத்தியாயம் – 39
கையிலும் வலி வயிற்றிலும் வலி நெஞ்சில் தன்மேல் உயிராய் இருப்பவர்களை காயப்படுத்திய வலி என அனைத்தும் ஒன்று சேர அப்படியே தோட்டத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்தவள் அங்கேயே சத்தம் வராமல் வாயை பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.
அவள் அழுவதை எதேச்சையாக வெளியே வந்த அருந்ததி பார்த்துவிட்டு பதறி அவளிடம் ஓடி அவளை சமாதானம் செய்து உள்ளே அழைத்து சென்றாள்.
இதையெல்லாம் மேலே பால்கனியில் நின்று பார்த்திருந்தவன்
‘என்னம்மா டிராமா பண்ணி இவங்களலாம் வசியம் செஞ்சு வெச்சு இருக்கா…ச்சீ இவலாம் என்ன ஜென்மம்?’ என்று மனதில் அவள்மேல் கோவத்தை வளர்த்துகொண்டே போனான் ஆரா…
மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்தவன் குளித்து முடித்து ரெடியாகி வெளியே வர கிட்சனில் லைட் எரிவதை பார்த்தவன் செஃப் எழுந்துவிட்டார் என நினைத்து,
“செஃப் ஒரு கிரீன் டீ ப்ளீஸ்” (shefu, wa ryokucha o kudasai)என்று தன் மொபைலை பார்த்துக்கொண்டே பேசியபடி ‘இந்த டிராமா குயின் எப்போ எழுந்து வருவாளோ? இல்ல காயத்தை காரணம் காட்டி லீவ் போட்டுடுவாளோ? இவள் எப்போது வந்து தனக்கு டையலாக் டெலிவரி சொல்லி கொடுப்பது’ என்று மனதில் எண்ணியபடி இன்றைய அவனது ப்ரோக்ராம் லிஸ்ட்டை செக் செய்தான், அப்போது அவன் முன் கிரீன் டீ கப் நீட்ட பட்டது…
நிமிர்ந்து கூட பார்க்காமல் வாங்கியபடி தேங்கஸ் கூறியவன் அதை பருக அவன் ரசைனைக்கு ஏற்றபடி லேசான துவர்ப்பு சுவையோடு தேன் கலந்து அதோடு லேசான புளிப்புக்காய் லெமென் ஜுஸ் விட்டு அதன் மேல் இரண்டு புதினா இலைகள் போட்டு இருக்க அதன் சுவை
அவனுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க…
“வாவ் ஆசம் கிரீன் டீ” என்றபடி நிமிர செஃப் இருப்பார் என்று எண்ணிய ஆராஷி முன் கையில் பேண்டேஜ் கட்டுடன் நின்றிருந்தவளை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவன்,
“குட் மார்னிங் சார்” என்றபடி அவள் நிற்க,
“ம்ம்…குட் மார்னிங்” என்று தலையை ஆட்டியவன்,
“செஃப் எங்கே?”(shefu wa dokodesu ka?) என்று கேட்க,
“அது…வந்து…செஃப்” (shefu ni todokimashita)என்று அவள் இழுக்க அப்போது தான் எழுந்து வந்தார் கண்ணை கசக்கி கொண்டே செஃப்…இருவருக்கும் குட் மார்னிங் சொன்னவர்
“சார் டீ வேணும்னா என்னை எழுப்பி இருக்கலாமே? நான் போட்டு கொடுத்து இருப்பேனே? நீங்க ஏன் சிரமபடுறீங்க?” (okyakusama kuremasen ka, di kyo? Agemasu ka? Naze meiwaku suru nodesu ka?)என்று கேட்க அதிர்ந்து பார்த்தான் ஆராஷி…
“அப்போ யார் கிரீன் டீ போட்டது?” (dewa, dare ga ryokucha o tsukutta nodeshou ka?)என்று அவன் கேட்க
“நா..நான்தான் சார்…செஃப் எழுந்துக்கலைனு சொல்ல வந்தேன் ஆனா நீங்க வேலையா இருந்தீங்க அ..அதான் நா..நானே போட்டேன்” (na..shefu ga okite inai no ni, anata wa isogashikatta koto o tsutae ni kita nodesu..sore wa watashidesu.. watashi wa iremashita..)என்று அவள் கூறி முடிக்க அவளை பார்த்தவன்
‘இவ எப்போ வந்தா? இது என்ன என்னையும் சேர்த்து கவுக்க போடுற நாடகமா?’ என்று எண்ணியவன் அமைதியாக டீயை குடித்துவிட்டு
“லெட்ஸ் கோ” என்றுவிட்டு கிளம்பினான்.
நேரே வெளியே வந்தவன் போய் தோட்டத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்தான் அவன் தோட்டத்திற்குள் நுழைவதை கண்டவள் வாசலிலேயே நின்றுவிட்டாள் ஏனெனில் அவளுக்கு தெரியும் அவன் இயற்கையை நாடுகிறான் என்றால் அது அவன் அவனது மனதுக்கு பிடித்தவரின் நினைவில் வாடுகிறான் என்று அதனால் அவனாக அழைப்பான் என அமைதியாக நின்றாள்.
உள்ளே சென்றவன் அந்த கிரீன் டீயின் சுவை தன் தாயை நியாபகம் செய்துவிட செஃப் என நினைத்தவன் அவள் வந்து நிற்க ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டான் ஆனால் நேற்றைய அவளது பேச்சு அவனுக்கு கோவத்தையும் கொடுக்க அமைதியாக வந்துவிட்டான்.. உள்ளே வந்தவன் அங்கிருந்த வண்ண வண்ண மலர்களை பார்த்தவன் அங்கு அரிதாக வைக்கப்பட்டு இருக்கும் கருப்பு வண்ண ரோஜாவையும் பர்பிள் வண்ண ரோஜாவையும் பார்த்து முதல் நாளே பிரம்மித்து போனான்…
ஏனெனில் பயோடெக்னாலஜி கண்டுபிடிப்பில் இவை இரண்டும் அரிய வகை கண்டுபிடிப்பு அதன் விலை கொஞ்சம் அதிகம் பராமரிப்பு செலவுகள் அதிகம்…
அதனாலேயே அதை இங்கே வைத்து பராமரிப்பது அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது…
அதன் அருகில் சென்று இரண்டையும் மெல்லிய புன்னகையோடு வருடியவன் அதன் அழகில் மெய்மறந்து போனான் அவன் சிரித்தால் அவ்வளவு அழகாக இருப்பான் ஆனால் சிரிப்பது மிக அரிது… அவனது புன்னகையை கண்டவள் அதில் மெய்மறந்து நின்றாள் ஆனாலும் நேரமாவதை உணர்ந்த மேதா தொண்டையை கணைக்க அதில் சுயம் வந்தவன் வெளியே வந்து
“வில் மூவ்” என்றுவிட்டு முன்னே செல்ல அவளும் நடந்தாள்.
மனது இப்போது லேசாக இருக்க அவளிடம் தனது வேலைகளை கேட்டவன் அதிலிருந்து தனக்கு தோன்றிய சந்தேகத்தையும் கேட்டான் அதையெல்லாம் சிறு குழந்தைக்கு விளக்குவது போல் அவள் விளக்க அவனுக்கு எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது.
அவளது இந்த திறமைக்காகத்தான் சரத்ஶ்ரீ சார் இவளை எனக்கு அஸிஸ்டென்ட்டாக நியமித்தார் போல என எண்ணி கொண்டான். ஆனால் அவனுக்கு அவளை பிடிக்கவில்லையே.
ஆனால் அதே சமயம் அவளது கேரக்டர் அவனுக்கு பிடிக்காமல் போய் விட்டது அவளது செய்கைகள் அனைத்தும் அவனுக்கு நடிப்பாகவே பட்டது அதும் நேற்று அவளே டிராமா என பேசினாளே அதிலிருந்து அவள்மேல் இருந்த மதிப்பு போய் வெறுப்புதான் குடியேறியது.
‘இவளாக இந்த வேலையை விட்டு ஓடவைக்க வேண்டும் என்ன செய்யலாம்’ என்று எண்ணியபடி அவன் இருக்க அவள் அடுத்தகட்ட வேலைகளை பார்க்க மொபைலில் மூழ்கி விட்டாள் யாரோ தன்னை பார்ப்பதுபோல் தோன்ற நிமிர்ந்தவள் பார்வை நேரே அவனிடம் தான் சென்று நின்றது
அவளை எப்படி ஓடவைப்பது என எண்ணியபடி அவளையே முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தான் ஆரா…
அவள் திடீரென அவனை பார்க்க சட்டென ஏதும் செய்ய முடியாமல் அவனும் அவளை பார்த்தான்.
அந்த பார்வை அவளுக்கு ஏதோ செய்ய அவள் தனது பார்வையை வேறுபுறம் திருப்பி கொண்டாள்…
அவனும் திருப்பிவிட்டான்…
‘என்னா கண்ணுடா இவனுக்கு? விட்டா கண்ணுலேயே கப்பலை கவுத்திடுவான் போல… மாட்டிக்காதடி மேதா’ என்று தனக்குள் பேசிக்கொண்டு வராத ஃபோனை காதுக்கு கொடுத்து பேச ஆரம்பித்து விட்டாள்.
கையில் வலி இருந்தாலும் அவளும் அதை கண்டு கொள்ள வில்லை அவள்மேல் இருந்த கோவத்தில் இரக்கமான ஆராஷியும் அதை பற்றி விசாரிக்கவில்லை.
ஷூட்டிங் ஸ்பாட் வந்து இறங்கியவுடன் மேதா பம்பரமாய் சுழன்றாள்… அவனுக்கு ஏத்தபடி எல்லாம் உள்ளதா? ஹீரோயினாக நடிக்க போகும் பெண் தயாரா? என அனைத்தும் செக் செய்தவள் தனது வேலையெல்லாம் முடித்துவிட்டு அவனுக்காக ஒதுக்க பட்ட கேரவன் முன்பு நின்றாள்.
ஷூட்டில் கேமரா வுமனாக இருக்கும் அருந்ததிக்கும் ஷன்மதிக்கும் அவளது இந்த தோற்றம் கோவத்தை வரவழைத்தது. ஆனால் ஷன்மதி அருந்ததியை தடுக்க அமைதியாக பொறுத்துக்கொண்டு இருந்தாள் அருந்ததி.
“அப்படி என்ன கன்றாவி லவ்வோ? இப்படி தான் அவ லவ்வ காட்டணுமா? அது அவனுக்கு புரியவா போகுது?” என்று ஷன்மதியிடம் புலம்ப ஆரம்பித்து விட்டாள் அருந்ததி.
“இது அவளோட லவ் அரூமா.. நாம ஏதும் சொல்ல முடியாது அவங்க அவங்களுக்குனு பர்சனல் தாட்ஸ் இருக்கும்ல விடு நாம வேலையை பார்க்கலாம். அண்ணா நேத்து சொன்னது நியாபகம் இருக்குல?” என்று கேட்டாள் ஷன்மதி.
“ம்ம்..இருக்கு இருக்கு போங்க” என்றாள் அருந்ததி கோவமாய்.
“விடு அரூமா… முடிஞ்சவரை அவள ஹர்ட் ஆகாம நாம பார்த்துக்கலாம்… அப்பாவோட இழப்பை அவ மறக்க இந்த லவ் அவளுக்கு ஹெல்ப்பா தானே இருக்கு?” என்று ஷன்மதி பேச
“அவளோட நடவடிக்கை மொத்தமா மாறி இருக்குகா.. நம்மகிட்ட ஏதோ பெரிய விஷயத்தை மறைக்கிறா ஆனா அது என்னானு தான் தெரியல?” என்று அரூ கூற.
“என்னடி சொல்ற? எதைவெச்சு அப்படி சொல்ற?” என்று ஷன்மதி கேட்க.
“எப்பவும் எதையும் பிரிச்சு பேசாத மேதா நேத்து பேசினது… அதும் இல்லாம நீங்க எல்லாம் போன அப்புறம் தோட்டத்தில உட்கார்ந்து அழ ஆரம்பிச்சுட்டா அவ நம்ம முன்னாடி அழுது நான் பார்த்ததே இல்லக்கா… ஆனா நேத்து அழுதா… ஏதோ தாங்கமுடியாத வலி இருக்குற மாதிரி அழுதா… அந்த ஜப்பான்காரன் அவள கஷ்டப்படுத்துற மாதிரி ஏதாவது சொல்லிட்டானோ? இல்ல திட்டிட்டானோனு தோணுதுகா? எனக்கு அவன்மேல அப்படி ஒரு கோவம் வருது இவளுக்காக பொறுமையா போறேன்” என்று அருந்ததி புலம்ப ஷன்மதிக்கும் இது புதிதே மேதா அழுததாக சொன்னது.
“சரி இதைபத்தி நாம அப்புறம் பேசலாம் சீக்கிரம் இங்கே ஷூட்டிங் முடிச்சுட்டு சென்னை கிளம்பனும் வேலையில கவனம் வை… அப்புறம் அதுக்கும் அவதான் ஹர்ட் ஆவா” என்றுவிட்டு வேலையை பார்க்க தனது தோழியை ஒரு பார்வை பார்த்த அருந்ததி ஒரு பெருமூச்சை விட்டு அவளும் வேலையில் மூழ்கினாள்.
ஷூட்டிற்காக ஷன்மதி கொடுத்த அவுட்ஃபிட் போட்டு தயாரானவன் வெளியே வர அவனை பார்த்த மேதாவிற்கு மூச்சே வரவில்லை… அவ்வளவு அழகாக இருந்தது அவனுக்கு அந்த உடை… அவனது கண் அவளைதான் பார்த்தது ஆனால் உடனே அவனது பார்வை கோவப்பார்வையாக மாறியது.
அவனது கோபப்பார்வை எதனால் என்று அறியாமல் அதே நேரம் அவனை விட்டு கண்கள் அகலாமல் பார்த்தபடியே நின்றாள்.
முதலில் ஃபோட்டோ ஷூட் என்பதால் அங்கு உள்ளவர்களை தவிர வெளி ஆட்கள் யாரும் அங்கு இல்லை.
ஆனால் அவனை பார்த்து இவென வாய் பிளந்த அஸிஸ்டென்ட் கேமராமேன் கை தவறிகேமராவை அவனது பக்கம் திருப்பிவிட அதை சரி செய்வதற்குள் அருந்ததி வந்து விட அவசரமாக கையை எடுத்தவன் ரெக்கார்ட் பட்டனை டச் செய்து விட்டதால் ஆன் ஆகிவிட்டது மட்டுமில்லாமல் அங்கு நடந்தது ரெக்கார்ட் ஆகிவிட்டது.
தன் பார்வையை வேறு எங்கோ பார்த்தபடி வந்தவன் அவள்மேல் மோதுவதுபோல வருவதை உணர்ந்து சட்டென பின்னால் அடி எடுத்து வைத்தாள் மேதா.
சினிமாக்களில் ஹீரோ ஹீரோயினை முத்தமிட அவன் முன்னோக்கி நடக்க ஹீரோயின் பின்னோக்கி நடந்து சுவற்றில் முட்டி நிற்பது போல அவள் பின்னோக்கி நடக்க அதுவரை முன்னால் நடப்பவளை பார்க்காமல் அவன் நடக்க சுதாரித்து பக்கவாட்டில் விலகிவிட்டாள் மேதா அப்போதும் பார்வையை வேறு எங்கோதான் பதித்த படி நடந்தவன் மொபைல் அலற அதை எடுத்தவன் தன் அண்ணன் என்று அறிந்து எடுத்து பேசினான். சிறிது நேரம் பேசியவன் ப்ரீ புரொடக்ஷன் முடிந்தது ஷூட்டுக்கு நேரமாகிறது என்று அஸிஸ்டென்ட் டைரக்டர் கூற அவனது பேச்சை முடித்து மொபைலை கொடுக்க அவனது ஜப்பானின் மேனேஜரை தேட அவரை காணவில்லை அப்போது தான் அவர் இன்று விடுமுறை என்று நியாபகம் வந்தது அவனுக்கு. அதனால் மேதாவை அருகில் அழைத்தவன் அவளிடம் மொபைலையும் அவனது வாலட்டையும் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.
ஃபோட்டோ ஷூட் துவங்க அவனது போஸும் அடுத்து அடுத்து அவனுக்கு கொடுக்கப்பட்ட உடைகளும் அவனுக்கே அவ்வளவு பிடித்தமாய் இருந்தது. அந்த உடைகளை பற்றி அவன் அருந்ததியிடம் விசாரிக்க “அதெல்லாம் எங்க சீ.இ.ஓ சாரோட சிஸ்டர் செஞ்ச டிசைன்ஸ் சார்” என்றுவிட்டு அது யார் என்ன என்று கேட்பதற்குள் முகத்தை திருப்பி கொண்டு சென்றுவிட்டாள்.
ஃபோட்டோஷூட் முடிந்து அரைமணி நேரம் ஓய்வு அதன்பின் ஹீரோயின் உடன் ஷூட்டிங் என்று கூறி இருக்க அதற்கான உடைகளை எடுத்துக்கொண்டு வந்து கேரவன் உள்ளே வைக்க வந்தாள் மேதா.
ஒரு கையில் ஃபைல் மறு கையில் அவனுக்கான உடைகள் என வந்தவள் கேரவனில் முதல் படியில் ஏறி இரண்டாவது படியில் ஒரு காலை வைத்து ஏறும்போது திடீரென அவளது மேல்சட்டை டெனிம் ஜாக்கெட்டில் இருந்த பாக்கெட்டிலிருந்த அவனது மொபைல் அலறியது.
யாரோ படியில் ஏறும் சத்தம்கேட்டு அவன் அவனது அறையின் கதைவை திறக்க அப்போது மொபைல் அடிக்க திடீரென கேட்ட சத்தத்தில் அவள் நிலைதடுமாறி விழப்போக அவளை விழாது தன்னோடு சேர்த்து தூக்கிவிட்டான் ஆராஷி.