Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 40

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 40

அத்தியாயம் -40

கீழே மொத்தமாய் விழப்போனவளை இருகை கொண்டு அவன் தூக்க அவனோடு ஓட்டிக்கொண்டாள் மேதா இந்த கூத்துக்கு காரணமாய் இருந்த அவனது மொபைல் ஆஃப் ஆகிவிட்டது. அவன் தூக்கியதில் அவனது முகத்திற்கு மிக அருகில் அவள் முகம் வந்துவிட மிகவும் பதட்டமாகி போனாள் மேதா.
இதுவரை அவனது மொபைலின் ரிங்டோனை அவள் கேட்டதே இல்லை.. ஏனெனில் அவன் பெரும்பாலும் சைலண்ட் மோடில்தான் வைத்து இருப்பான் அதனால் அதன் டோன் அவளுக்கு தெரியாமலே போய்விட இப்போது அதும் அவ்வளவு சத்தமாய் கேட்க அவள் அதிர்ந்துவிட்டாள்.
ஆனால் அவளது வாசம் அவனை என்னவோ செய்தது அவனது தாயிடமும் அவனை வாழவைத்து கெண்டிருப்பவளிடமும் உணர்ந்த வாசம் அதனால் அவளை இறக்கி விட மனமில்லாமல் ஏதோ மாயவலையில் சிக்கியவன் போல் நின்றான் அவன்.
மேதாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட “சர்..ப்ளீஸ் லீவ் மீ டவுன்” என்று அவளுக்கே கேட்காத குரலில் கூற அது அவனுக்கு கேட்டால்தானே.

“சர்..சர்..” என்று அவள் கூற அவன் அப்படியே தான் அவளையே பார்த்தபடி நின்றான். மிக நெருக்கமாக அவனது ஸ்பரிசம் அவளுக்கு வெட்கமே தர அவனது பிடியிலிருந்து விலகுவதற்கு தனது கைகளும் சுதந்திரமாக இல்லையே என்று தவித்தவள் கத்தி சர் என கூப்பிட வாயெடுக்க மீண்டும் அவனது மொபைல் அலறியது.
அதில் மீண்டவன் கண்களை அலைபாய விட அவளது நெஞ்சின்மீது தான் அவனது மொபைல் இருப்பதால் அவனுக்கு மிக அருகில் கேட்க குனிந்து பார்த்தான் அப்போது தான் அவன் உணர்ந்தான் அவள் தனது கையில் இருப்பதையும் அவளது முகம் அவஸ்தையில் துடிப்பதையும் உடனே பதட்டமாகி அவளை கீழே இறக்கிவிட கைகள் நடுங்க அவளோ தன் கையில் இருந்த அவனது உடைகளை அங்கிருந்த டேபிள் மேல் வைத்துவிட்டு தன் மேல்சட்டை பாக்கெட்டில் இருந்த அவனது மொபைலை எடுத்து கொடுத்தாள்.
மீண்டும் அது அணைந்துவிட வேறு புறம் திரும்பி மொபைலை வாங்கியவன் யாரென செக் செய்துவிட்டு மெஸேஜை போட்டுவிட்டு மீண்டும் அவளிடமே நீட்டி
“கீப் இட் இன் சைலண்ட் மோட்” என்று கூற,
அதை அவள் வாங்குவதற்குள் மொபைல் லாக் ஆகி விட்டது.
திருதிருவென முழிக்க அடிப்பட்ட கையால் அந்த மொபைலை பிடிக்கவும் முடியாமல் அவள் தவிக்க அதை மீண்டும் அவளிடமிருந்து பறித்தவன் லாக் ஓபன் செய்து சைலண்ட்டில் போட்டவன் அவளிடம் நீட்ட போக அவள் மீண்டும் அடிப்பட்ட கையையே நீட்ட ‘உஃப்’ என உதட்டை குவித்து ஊதியவன்
“எங்கே வைக்கனும்னு சொல்லுங்க நானே வைக்கிறேன்” என்றான் ஜாப்பனீஸில். அவளது மற்ற கையில் நிறைய ஃபைல் இருந்தது அதனை இந்த கைக்கு மாற்றவும் முடியாது அவளால் அதனால் அவள் தடுமாற இன்னும் அவள் பதட்டத்தோடே அவளது கோட்டின் மேல் பாக்கெட்டை பார்த்தபடி இருக்க அவன் அவளது லெனின் கோட் ஜாக்கெட்டை இழுத்து அவள்மேல் கை படாதவாறு அவளது மேல் பாக்கெட்டிலேயே வைத்தான்.
அதில் இன்னும் படபடப்பானவள் வெளியே போய்விட வேண்டும் என அவள் திரும்ப
“Mizu ga joshi”(எனக்கு கொஞ்சம் தண்ணிர் வேணும்) என்று அவன் கூற
“எ..எஸ் சர்” என்றுவிட்டு வெளியே வந்தவள் படபடப்பில் தனது இதயத்தை நீவிவிட அங்கே அவளது பாக்கெட்டில் அவன் வைத்த மொபைல் அகப்பட அவள் முகம் குப்பென சிவந்து போனது அங்கு வந்த ஹெல்பரிடம்
“அண்ணா ஹீரோ சார்க்கு தண்ணீர் வேணும் கூடவே ஒரு ஜுஸும் கொஞ்சம் தர்றீங்களா?” என்று அவள் கேட்க.
இதை மீண்டும் கேரவனில் கொண்டு சென்று கொடுக்க வேண்டுமா? என எண்ணியவள் இது என் வேலை நான் பார்த்து தான் ஆகணும் என்று எண்ணியபடி திரும்ப
அவர் தண்ணீரையும் ஜுஸையும் கொண்டு வந்து கொடுத்தார் அதை வாங்க முடியாமல் அவள் தடுமாற
“வேணாம்மா அடிப்பட்டு இரத்தம் வேற வந்து இருக்கு வாங்க நானே கொண்டுவந்து தர்றேன்” என்றபடி அவளுடன் அவரும் வந்தார்.
மீண்டும் படியேறி கதவை தட்டினாள்.
உள்ளே அவளது அந்த நெருக்கமாக இருந்த ஸ்பரிசம் அவளது வாசம் எல்லாம் அவனை ஏதோ செய்ய அப்படியே அங்கேயே இருந்த சோபாவில் அமர்ந்து விட்டான்.
நெஞ்சம் அவனுக்கும் படபடக்கத்தான் செய்தது, ‘என்ன இது? எத்தனை ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்வது போல் நடித்து இருக்கிறேன் அப்போதெல்லாம் இப்படி ஒரு உணர்வு வந்ததே இல்லையே?ஆனால் இவ்வளவு நெருக்கமாக நடித்தது இல்லையே அதனால் இப்படி தோன்றவில்லையோ?’ என்று தனக்கு தானே பேசிக்கொண்டவனுக்கு அப்போதும் அவள்மேல் கோவம்தான் வந்தது.

‘ஒரு வேலையை கூட ஒழுங்கா செய்யுறது இல்ல.. இர்ரெஸ்பான்ஸிபில் இடியட்’ என்று மீண்டும் அவளை கரித்து கொட்டியபடி சட்டையை கழட்ட சென்றான்.
ஏனெனில் அவள் கையை அவன் அழுத்தி பிடித்ததை அப்போதுதான் உணர்ந்தான் அதில் அவளது காயத்தில் அழுத்தம் ஏற்பட்டு இரத்தம் வந்து அதில் ஒரு துளி அவனது கையிலும் கை சட்டையிலும் ஆகி இருப்பதை அப்போது தான் உணர்ந்தான்.
‘அவளுக்கு இன்றும் வலித்து இருக்குமோ? அதனால் தான் அவளது முகம் அப்படி சுருங்கியதோ?…ச்சே நான் ஏன் அவளை பத்தி கவலை படணும் ஷி ஈஸ் ஜஸ்ட் ஆன் எம்ப்ளாயி அண்ட் டிராமா குயின்’ என்று எண்ணியவன் ஆனால் நேற்றும் இன்றும் அவளது வலி உண்மைதானே என்ற எண்ணமும் வர குழப்பமாகவே இருந்தான். கதவு தட்டும் ஓசையில் நினைவு கலைந்து கதவை திறந்தான்
மீண்டும் அவளே நிற்க
‘என்ன?’ என்பது போல் பேசாமலே அவனது புருவத்தை மட்டும் உயர்த்தி கேட்க.
அவனது விழியையும் அதன் அசைவையும் சமாளிக்க முடியாமல் திணறியவள் தொண்டையை செருமி

“Your juice and water sir”(உங்களோட ஜுஸ் மற்றும் தண்ணீர்) என்று கூற அவனது கண்களோ அவளது கையை தான் ஆராய்ச்சி செய்தது. கையை மறைத்தபடி இருந்தாள் மேதா அதனால் அவனுக்கு தெரியவில்லை, அதனால் அவன் வழிவிட அவளுடன் வந்தவர் அதை உள்ளே வைத்தார்.

“Thanks” என்றவன் அவளை பார்க்க அவளும் அவனைதான் பார்த்தாள் வந்தவர்
“போலாமா மேடம்… உங்க கைக்கு மருந்து போடணும்” என்று கூற ம்ம் என தலையை ஆட்டியவள் சிரிக்க சிரமப்பட்டு சிரித்தார்போல சென்றாள்.

அவள் சென்றதும் கதவை அடைத்தவன்
‘இவளுக்காக நான் ஏன் யோசிக்கணும்? இவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் வர வர வேலைக்காரங்க மேலேலாம் ரொம்ப இரக்கப்பட ஆரம்பிச்சுட்டேன் போல? முதல்ல இவள ஏதாவது பண்ணி வேற ஆள் மாத்திடணும்.
இல்லனா இவளாலேயே நான் டென்ஷன் ஆகிடுவேன் போல?’ என்று எண்ணியவனுக்கு ஒன்று மட்டும் புரியாமல் போனது.
அவன் எல்லோரிடமும் கோவமானவன் போல காட்டிக்கொண்டு இருக்கிறான் மற்றவர்களை விட மேதாவிடம் உரிமையும் கோவத்தையும் அக்கறையும் அதிகமாக அவன்தான் வைத்துள்ளான் ஆனால் அதை உணராமல்தான் இப்படி நடந்து கொண்டிருக்கிறான் என்பதை அவனுக்கு யார் உணர்த்துவது அதை அவன் உணரும் வேளை எல்லாம் மாறி இருக்குமே? அப்போது அதை எப்படி சரி செய்வான்?

வெளியே வந்த மேதாவை அழைத்து சென்ற அந்த உதவியாளர் அவளது கை காயத்திற்கு மருந்து போட்டு விட்டார்.
“தேங்க்ஸ்னா” என்று அவள் நன்றி சொல்ல
“இதுல என்னம்மா இருக்கு? காயம் கொஞ்சம் பெருசு போல தோணுதுமா எதுக்கும் ஹாஸ்பிடல் போய் பாருங்க செப்டிக் ஆகிட போகுது” என்றார் அவர்.

“சரிங்கண்ணா போறேன் வேலை முடிஞ்சதும்”அவளுக்கு ஜுஸை கொடுத்து குடிக்க சொன்னார் அவளுக்கும் அது அப்போது தேவையாக இருந்ததால் வாங்கி பருகினாள். அவர் சென்றதும் தான் அமர்ந்திருந்த சேரில் கண்மூடி சாய்ந்தவள்
கண்களில் அவளது கைவண்ணத்தில் உருவாக்கிய உடைகளை அணிந்து கண்களாலேயே பேசிய அந்த மாயக்கண்ணன்தான் வந்து நின்றான்.

அவ்வளவு அழகாக போஸ் கொடுத்திருந்தான் அந்த ஃபோட்டோஷூட்டில்.
அடுத்து ஹீரோயின் உடன் அவனுக்கு கொஞ்சம் ரொமான்ஸ் போன்ற சீன் இருக்கிறது அதை அவனிடம் எப்படி விவரிப்பது என்று எண்ணியவளுக்கு அவன் மாரோடு உரசி முகத்துக்கு அருகில் நின்ற நிலை நினைவு வர சட்டென இருமல் வந்துவிட்டது அவளுக்கு.
அதுவரை வேறு வேலையில் பிசியாகஇருந்த ஷன்மதியும் அருந்ததியும் அவளது இருமல் சத்தத்தை கேட்டு அவள் அருகில் ஓடி வந்தனர்
“என்ன மேதா என்னாச்சு? உடம்பு சரியில்லையா?” என்று ஷன்மதியும் அருந்ததியும் விசாரிக்க
“ஒன்னுமில்லக்கா லேசா இருமல் வந்துடுச்சு வேற ஒன்னும் இல்ல” என்று அவள் சாதாரணமாய் கூறியதை கூட அவர்கள் ஏற்க மறுக்க அப்போது தான் உடைமாற்றி வெளியே வந்தவன் கண்ணில் இது பட மீண்டும் கோபமானான்
‘இவ ஏதோ ராஜகுமாரி மாதிரியும் இவங்கலாம் அவ வேலைக்காரங்க மாதிரியும் அவ இருமினதுக்குலாம் என்னா ஆக்ட் பண்றாங்கபா இவங்க? இவங்க ஆக்டர்ஸ்ஸா இல்ல நான் ஆக்டரானே தெரியல அவ்ளோ நடிக்கிறா? மாயக்காரி’ என்று மனதில் வசைபாடியவன் வேறு எங்கோ பார்க்க அவனது அருகில் வந்து இன்னொரு அஸிஸ்டென்ட் டைரக்டர் ஸ்கிரிப்ட் பேப்பரை கொடுக்க அவனுக்கு அதை படிக்கவும் சில இங்கிலிஷ் வார்த்தைகள் புரியாததால் அவன் அவனிடமே கேட்க அவன் மண்டையை பிய்த்துக்கொண்டான்.
இவனிடம் கேட்டு யூஸ் இல்லை என்று எண்ணியவன்
தொண்டையை செருமி
“மிஸ்.பி.ஏ மேதா” என்று சத்தமாக அழைக்க எல்லோரும் அவனைத்தான் பார்த்தனர்.
அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட
அவளை பார்த்து கண்களாலேயே “கம் ஹியர்” என்று கூற மற்றவர்களை விலக்கி விட்டு அவனிடம் சென்றாள் மேதா.
“எஸ் சர்” என்று அவள் கேட்க அவளிடம் அந்த ஸ்கிரிப்ட் பேப்பரை நீட்டினான் அவன்.
“மேடம் அவர் என்னவோ பேசுறாரு டவுட் போல எனக்கு ஒன்னுமே புரியல மேடம்” என்று அந்த அஸிஸ்டென்ட் டைரக்டர் கூற
“நா..நான் பார்த்துக்கறேன் நீங்க போய் ஹீரோயின் ரெடியானு பாருங்க” என்று அவரை அனுப்பியவள் அந்த பேப்பரை படிக்க அதில் இப்போது நடந்த சீனை போலவே ஹீரோயின் கால் தடுக்கி விழுவது போலவும் அவன் தாங்குவது போலவும் பின்பு ஹீரோயினை திருமணம் செய்து அவளை முத்தமிடுவது போலவும் இருக்க அவளுக்கு படபடப்பு அதிகமாகியது.
இதை எப்படி இவனிடம் சொல்லப்போகிறோம் என்று எண்ணியவள் இந்த ஆட் ஷூட் கான்செப்ட்டே ஆல் கன்ட்ரீஸ் வெட்டிங் தானே என்று எண்ணியவள்
இன்னும் இவனுக்கு தமிழ்நாட்டின் கலாச்சார திருமணங்களை பற்றி வேறு எடுத்து உரைக்க வேண்டுமே என எண்ணியவள் ஒரு பெருமூச்சை விட்டு அவனுக்கு புரியும்படி விளக்கம் கொடுக்க அதில் கிஸ்ஸிங் சீன் சொல்லவும் அவன் காச்மூச் என்று கத்த ஆரம்பித்து விட்டான் அவளிடம் ஏனெனில் அவன் எந்த திரைப்படம், ஷூட்,சீரீஸ், சாங்க்ஸ், எதிலும் லிப்லாக் சீன் ஒத்துக்கொண்டதே இல்ல அதை கண்டிப்பாக மறுத்து விடுவான் அதற்காகதான் அவளிடம் கத்த அவளிடம் வந்த அருந்ததி என்ன என்று விசாரிக்க அவள் சொன்னதும்
“இதுல என்ன இருக்கு? இவரு என்ன ரொமான்டிக் சீன் நடிச்சதே இல்லையா? என்று கேட்க அவள் லிப்லாக் எந்த ஒரு நடிகையோடும் செய்ய ஒத்துக்க மாட்டார் என்று மேதா விளக்க
“ஆனாலும் இவன் ரொம்ப பன்றான்டி உனக்காக எல்லாத்தையும் பொறுத்துட்டு போக வேண்டி இருக்கு. ஆனா என் பொறுமைக்கும் எல்லை இருக்குடி சொல்லிவை அவன்கிட்ட ” என்று அவளது காதை கடித்தவள்
ஷன்மதி “அருந்ததி” என்று அழைக்க உடனே முகத்தை மாற்றியவள்

“ஓஓ.. சாரி சர் வில் சேன்ஞ் திஸ்” என்றபடி மேதாவிடம் அந்த சீனில் சேஞ்சஸ் சொல்லிவிட்டு அதை அவனுக்கு சொல்லும்படி சொல்லிவிட்டு போனாள்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த மேதா கோவமாக அவளையே முறைத்தபடி நின்ற ஆராஷியிடம் அவனை நிமிர்ந்து பார்க்காமலே அவனுக்கு மீண்டும் விளக்க இப்போது தான் அவனுக்கு ஓகே என்று தோன்ற எல்லாம் கேட்டுக்கொண்டவன்.
“ம்ம் ஓகே.. ஐயம் ரெடி” என்றவன் அங்கிருந்த குடையின் கீழே சென்று அமர அவனுக்கு உடனே ஒரு டேபிள் ஏசி வைக்கப்பட்டது நிமிர்ந்து பார்த்தவனுக்கு ஏசி வைத்தவன் மேதாவை கைகாட்டி விட்டு சென்றான் அதிகம் இல்லாமல் லேசான அதே நேரம் குளிர்ந்த காற்று முகத்தில் உரச நன்றாக இருந்தது அவனுக்கு… மேக்கப் ஆர்டிஸ்ட் வந்து அவனுக்கு மேக்கப் போட ஆரம்பிக்க ஹீரோயின் வந்து அவரும் தயாராகி விட்டதால் ஷாட் ரெடி என அழைக்க வந்தாள் மேதா.

அதுவரை சேரில் அமர்ந்து கால்களை விரித்து தலையை கீழே குனிந்தவாறு காற்று வாங்கி கொண்டு இருந்தவன் தன் எதிரில் காலை பார்க்கவும் தலையை நிமிர்ந்து அவளது முகத்தை பார்த்து புருவத்தை உயர்த்தி என்ன? என்பதுபோல் பார்க்க மூச்சே நின்றுவிட்டது அவளுக்கு.

“வாட்” என்று அவன் கேட்க.

“ஷ..ஷாட் ரெடி சர்” என்று அவள் கூற
“ம்ம்” என்று தலையை ஆட்டியபடி எழுந்து நிற்க அப்போதும் அவளது அருகில் தான் நின்றான் அதில் மேலும் அதிர்ந்தவள் என்ன செய்வதென புரியாமல் அங்கேயே அசையாமல் நிற்க
‘இவ வேற’ என்று மனதில் எண்ணியபடி அவளை தாண்டி சென்றான் ஆரா.

3 thoughts on “வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 40”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *