அத்தியாயம் – 62
அவள் ஓடுவதை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. சிரித்தபடி அவள் அவனுக்காக எடுத்த நோட்ஸ்ஸை எடுத்து பார்த்தான்.
அதில் அவள் அவனுக்காக எடுத்த கஷ்டம் தெரிந்தது. அதை பார்த்தவன் அதையும் நோட் செய்து கொண்டு ப்ராக்டிஸ்ஸில் ஈடுபட்டான்.
இடையில் தனது உலகெங்கும் இருக்கும் ரசிகர்களுக்காக லைவ் செல்வதும் அவனது அடுத்த ப்ராஜெக்ட் பற்றி பேசுவதும் என பிஸியாகவும் அவளது வேலையால் தனக்கு வேலைபளுவும் குறைந்தது அவனுக்கு.
ஆறாவது மாதமும் ஆகி இருந்தது இன்னும் இரண்டு வாரங்களில் அவன் ஜப்பான் கிளம்ப வேண்டும் அப்போது அவன் ஒத்துக்கொண்ட பாடலின் ரெக்கார்டிங் வேலைக்காக சென்னையில் இருந்த ரெக்கார்டிங் சென்டருக்கு சென்றான்.
மேதா மாஸ்க் அணிந்து இருந்தாள்.
அவள் இருந்தாலும் கூடவே ட்ரான்ஸ்லேட்டரை எடுத்து வந்திருந்தான்.
அங்கிருந்த அனைவரும் அவனது அவனது அழகையும் பார்த்தவர்களுக்கு வார்த்தையே வரவில்லை அவர்கள் சொன்ன சேஞ்சஸ்ஸை மேதா மொழிபெயர்ப்பு செய்ய கவனமாக கேட்டு கொண்டவன் மேதா அந்த பாடல் வரிகளை அவனுக்கு புரியும் வகையில் எளிதாக ஜாப்பனீஸில் எழுதி கொடுக்க அதை படித்தவனுக்கு பாட சுலபமாக இருந்தது. அங்கு இருப்பது போல இங்க டெக்னாலஜி கம்மியாக இருந்தாலும் அவர்கள் செய்யும் வேலையை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு.
அவர்கள் கேட்டபடி பாடி கொடுத்தான் அவனது குரலில் அனைவரும் மெய்மறந்து போயினர்.
எல்லோரும் அவனை பாராட்டி விட்டு அவனுடன் இணைந்து ஃபோட்டோவும் எடுத்து கொண்டனர்.
அவன் பாடும்போது அதை தனது மொபைலில் அவள் ரெக்கார்ட் செய்து கொண்டாள் யாருக்கும் தெரியாமல். ஆனால் அதை கவனித்து விட்டான் ஆராஷி.
ஆனால் எதையும் கேட்டு கொள்ளவும் இல்லை யாரிடமும் அவளை பற்றி கூறவும் இல்லை இத்தனை நாட்களில் அவளது செய்கையில் அவனது மனது கொஞ்சம் அவளை நம்ப ஆரம்பித்து இருந்தான்.
அதனால் அவள்மேல் ஒரு சாஃப்ட் கார்னர் இருந்தது அவனுக்கு.
பாடி முடித்து அவன் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருக்க அவனது அறைக்கு வெளியே இருந்தாள் மேதா.
அந்நேரம் அங்கே வந்தார் ஒரு பெரிய டைரக்டர்.
வந்தவர் நேரே ஆராவின் அறைக்குள் செல்வது போல நுழைய பாடிகார்ட்ஸ் அவரை தடுத்தனர் அதற்குள் பதறியபடி வந்த மேதாவும் அவரை பார்த்து
“சார் யார் நீங்க? இது ஃபாரின் சிங்கர் ஆராஷி அவங்க ரூம் நீங்க மாறி வந்துட்டீங்களா?” என்று கேட்க இதை பார்த்துக்கொண்டு இருந்த ஆரா ட்ரான்ஸ்லேட்டரை ஆன் செய்து அவள் என்ன பேசுகிறாள் என கேட்டுக்கொண்டு இருந்தான்.
அவளை மேலும் கீழுமாய் பார்த்தவர்.
“நான் எவ்ளோ பெரிய டைரக்டர் தெரியுமா? என்னையே உள்ளே போக விடாம தடுப்பியா நீ? எவ்ளோ திமிர் இருக்கனும் உனக்கு நான் அந்த பையனை என் படத்துல நடிக்க வைக்க கேட்க வந்து இருக்கேன் வழிய விடு” என்று அவர் கோவமாக ஒருமையில் பேச அவரது பேச்சு அவனுக்கும் பிடிக்கவில்லை மேதாவிற்கும் பிடிக்கவில்லை.
அதற்குள் அங்கு ஸ்டூடியோ மெம்பர்ஸ் வந்து என்னவென்று பார்க்க மேதாவோ
“நீங்க அவர்கிட்ட அவரை பார்க்க அப்பாயிண்மெண்ட் வாங்கினீங்களா? இல்லனா உங்கள பார்க்கறதா வர சொன்னாரா? அப்படி எதுவும் ப்ரோக்ராம் லிஸ்ட்டில் இல்லையே?” என்றாள் அவளும்.
“அவர் வெக்கேஷனுக்கு தானே வந்து இருக்காரு என்கிட்ட நல்ல ஃபாரின்கார ஹீரோ கதை இருக்கு அதுல இந்த பையன் நடிச்சா சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் அதை கேட்க எதுக்கு அப்பாயிண்மெண்ட்? அவர் சும்மாதானே ஊர் சுத்தி பார்த்துட்டு ரெஸ்ட் எடுக்க வந்து இருக்காரு ஒரு அரைமணி நேரம் பேசினா என்ன ஆகிட போகுது வழியை விடுமா?” என்று அவர் பேச அவரது பேச்சில் கோவமடைந்த மேதா வாசலின் முன் சென்று நின்று கொண்டு அவரை பார்த்து.
“சார் உங்ககிட்ட ஒன்னு கேட்கவா?” என்றாள்.
‘என்னத்த கேட்க போறா?’ என்று எண்ணிய அந்த டைரக்டர்
“என்ன?” என்றார்
“நீங்க வெகேஷனுக்கு ஃபாரின் ஏன் போறீங்க? இங்கேயே எங்கேயாவது போலாமே? எதுக்காக ஃபாரின்?” என்று கேட்க என்ன இவள் சம்பந்தமில்லாம பேசுறா என்று எண்ணியவர் அவளிடம்
“நான் செலிபிரிட்டில இங்கேயே எங்கனா வெகேஷன் போனா என்னை அடையாளம் தெரிஞ்ச ஃபேன்ஸ் அது இதுனு ப்ராப்ளம் வராதா? என் ஃபேமிலி கூட என்னால சுதந்திரமா ஊர் சுத்த முடியுமா? என்னோட ப்ரைவசி பாதிக்காது அதான் ஃபாரின் போறது” என்று அவர் வாயாலேயே அவரை மடக்கி இருப்பதை அறியாமல் உளறினார் அவர். ஆராஷியும் சுவாரஸ்யமாக கேட்டு கொண்டு இருந்தான்.
லேசாக சிரித்த மேதா “அதே தான் சர் அவரும் அவங்க ஊர்ல ரெஸ்ட் எடுக்க முடியல ப்ரைவசி இருக்காதுனு தான் அவரோட ஃபாரின் கண்ட்ரியான இந்தியாவுக்கு வந்து இருக்காரு நீங்க முன்னமே அவர்கிட்ட அப்பாயிண்மெண்ட் வாங்கி இருந்தா கூட பரவாயில்லை அதும் இல்ல நேரா வந்து அவரை பார்க்கனும் கதை சொல்லனும்னா அவரோட ப்ரைவசி பாதிக்கபடாதா? உங்கள யாருமே தொந்தரவு பண்ணாத உங்கள பத்தி அதிகம் தெரியாத ஊருக்கு உங்க நிம்மதிய தேடி நீங்க போறீங்க அதே போல தானே அவரும் வந்து இருக்காரு.
இப்படி வந்து அவரை நீங்க டிஸ்டர்ப் பண்ணா நம்மள பத்தியும் நம்ம நாட்ட பத்தியும் அவர் என்ன நினைப்பார்னு கொஞ்சமாவது யோசிச்சீங்களா?”
என்று கேட்க.
“அட என்னமா நீ நான் ஒரு ஆள் பார்க்குறதுல என்ன ஆகிட போகுது?” என்றார் அவரது பேச்சிலேயே.
“உங்களுக்கு அவர் உங்க படம்ல நடிக்க வைக்க ஆசையா இருந்தா அவரோட ஜப்பான் ஆபீஸ்க்கு ஃபோன் பண்ணி சான்ஸ் கேட்டு அங்க போய் கதை சொல்லி அவர் ஓகே சொன்னா படம் எடுங்க அதை விட்டு அவர் ரெஸ்ட்க்காக அம்மா மடி தேடி வந்த மாதிரி நம்ம நாட்டுக்கு வந்து இருக்காரு இப்படி வந்து தொல்லை பண்ண நான் அனுமதிக்க மாட்டேன் சார்.
இங்க அவரோட மேனேஜர் நான்தான். அவர் யாரை சந்திக்கனும் சந்திக்க கூடாதுனு லிஸ்ட் போடுற ஆள் நான்தான் இப்படி நேரா வந்து அவரோட ப்ரைவசியை கெடுத்து நம்ம மக்களை பத்தி தப்பா அவர் நினைக்கவும் நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன். நீங்களும் ஒரு செலிபிரிட்டிங்கிற முறையில நான் சொன்னது புரிஞ்சு இருக்கும் நினைக்கிறேன் ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட் சர்”
என்று அவள் கைகளை கட்டியபடி நிமிர்ந்து பேச அவளது பேச்சில் இருந்த உண்மை அவருக்கும் புரிய
“சரிமா சாரி நான் அவர அங்கேயே போய் பார்த்துக்கிறேன் நம்ம நாட்ட பத்தி அவர் தப்பா நினைக்க விடமாட்டேன்.
நல்ல மேனேஜர தான் அப்பாயிண்ட் செஞ்சு இருக்காங்க சாரி ஃபார் ஃபாதரிங்மா” என்றார் அவர்.
“சாரிலாம் வேணாம் சர் நீங்க புரிஞ்சுகிட்டதே போதும்” என்று அவள் கூற அவரும் சரியென கிளம்பி சென்றுவிட்டார். உள்ளிருந்து இதையெல்லாம் கேட்டவன் அவளை மெச்சிக்கொண்டான். அங்கு இருந்தவர்களும் அவள் அந்த கோவக்கார டைரக்டரை சாதூர்யமாக கையாண்டதை எண்ணி அவளை பாராட்டினர்.
அதை ஒரு தலையசைப்போடு ஏற்று கொண்டவள் அவளது இடத்தில் சென்று நின்று கொண்டாள்.
பாடலின் எடிட்டிங் வேலை முடிந்ததால் அவனுக்கு போட்டு காட்டினர் அழகாக வந்திருக்கிறது என்றும் கூறினர். அதை கேட்டவன் அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு கிளம்பி வெளியே வந்தான் அவன் வரவும் அவன் அருகே ஓடி வந்த மேதாவிடம்
“எனக்கு சென்னை ரொம்ப ஹாட்டா இருக்குற மாதிரி இருக்கு கூலான ப்ளேஸ்ல ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பலாம்னு இருக்கேன் நான் இங்க இருக்க போற ட்டூ வீக்ஸ்ஸும் சில் ப்ளேஸ்ல வீடு பார்க்க சொல்லு” என்றான் அவளும் சரியென்று நிதினுக்கு ஃபோன் செய்து விவரத்தை கூற சரியென மறுநாள் அவர்களை ஊட்டிக்கு அழைத்து செல்ல சொன்னான்.
மறுநாள் குளுகுளுவென ஊட்டிக்கு வந்து இறங்கினர் ஆராஷியும் அவனது ஜிம்மியும் கூடவே மேதா, நிதின், அருந்ததி,நிலவினி, சாஹித்யன் பட்டாளமும்.
நிஜமாகவே இவங்கலாம் பிஸினஸ் தான் பன்றாங்களா? என்ற சந்தேகம் வலுத்துவிட்டது ஆராவிற்கு.
பின்னே மேதா பின்னாலேயே எல்லாம் வால் பிடித்து தொங்கினால் வேறு என்ன நினைப்பான் அவனும்.
அதிலும் நிதின் ஒரு உலக அளவில் ஃபேமஸ்ஸான கம்பெனியின் மெயின் சி.இ.ஓ ஆனால் அவன் மேதாவையே பார்த்துக்கொண்டு அவள் பின்னாலேயே சுற்றுவதும் ஆ ஊ என்றால் அவளை தன் தோளோடு அணைத்துக்கொள்வதும் அவனுக்கு அறவே பிடிக்கவில்லை..
ஒரு சாதாரண பி.ஏ விற்காக இவன் இப்படி உருகுவது அவனுக்கு ஏதோ தப்பாகவே பட்டது.
நன்றாக சில நாள் இருந்தால் ரெண்டு நாள் வேதாளம் முருங்கை மரம் ஏறி அவளை வதை வதை என வதைத்து விடும். அவன்மேல் கொண்ட காதலால் அனைத்தையும் பொறுத்து போவாள் மேதா.
மனது மிகவும் பாரமாகும் சமயங்களில் தனக்கு பிடித்த அந்த பார்க்கில் படியில் வந்து அமர்ந்து கொள்வாள். ஒரு சில சமயம் அந்த இடத்தில் தனிமையில் அமர்ந்திருக்கும் அவளது கலங்கிய கண்களை கண்டதுண்டு ஆராஷி ஆனால் எதையும் காட்டிக்கொள்ளாமல் உடனே கண்ணீரை துடைத்துவிட்டு யாருக்கோ ஃபோன் பேசுவாள் தமிழிலேயே பேசுவதாலும் இரகசியம் போல பேசுவதாலும் அவனுக்கு புரியாமலே போகும்.
ஆனால் அவளது பிடித்த இடம் அது என்பது மட்டும் அவனுக்கு விளங்கியது.
ஒருநாள் அவனும் நிதினும் பேட்மிண்டன் விளையாடிக்கொண்டு இருந்தனர். அன்று மேதாவிற்கு விடுமுறை அளித்து இருந்தான். அதனால் அவள் அன்று மருத்துவமனைக்கு செக்கப் சென்று இருந்தாள் யாருக்கும் சொல்லாமல் அங்கு அவளை முழுவதுமாக ஸ்கேன் செய்த டாக்டர் ப்ளட் ரிப்போர்ட் வர ஒரு வாரம் ஆகும் அதனால் அப்போது வந்து ரிப்போர்ட் வாங்கி கொள்ளும்படி கூற மாலை இருட்டில் வந்தவள் வீட்டுக்கு கூட செல்லாமல் நேராக அவள் வழக்கமாக அமரும் பார்க்கில் வந்து அமர்ந்து விட்டாள் அவனுக்கும் ரெஸ்ட் என்பதால் அவனும் விளையாட வந்தான் அதே சமயம் நிதினும் வர அவனோடு விளையாடினான் இருவரும் நன்றாக விளையாடி களைத்தபிறகு ஒன்றாக அமர்ந்து பேசினர்.
அப்போது நிதினிடம் அவன் மேதாவை பற்றி கேட்க.
“அவ ரொம்ப ஜாலி டைப் இப்போதான் இப்படி அமைதியா ஆகிட்டா அவ அப்பா இறந்ததுல இருந்து.
பாசக்காரி பாசத்துக்காக என்ன வேணா செய்வா எதை வேணா விட்டு கொடுப்பா ஐ திங்க் அவ உங்கள லவ் பன்றானு நினைக்கிறேன்” என்று நிதின் கூற ‘இவரே அவகூட ஒட்டிக்கிட்டு சுத்திட்டு இப்போ அவள என் தலையில கட்ட பார்க்கிறாரா? அவ பணத்துக்காக நடிக்கிறது கொஞ்சம் கூடவா இவங்களுக்கு புரியல?’ என்று எண்ணியபடி அவனை அமைதியாய் கோவத்தை அடக்கியபடி பார்த்தான் ஆராஷி.
“சோ” என்று அவன் புரியாத பார்வை பார்க்க அவனது பார்வையை உணர்ந்த நிதின்
“அவ சாதாரண பி.ஏ னு அவளை வெறுத்திடாதீங்க அவளை நீங்க ஏத்துக்கிட்டா எவ்ளோ சொத்து வேணாலும் எழுதி கொடுக்க நான் தயார் உங்களுக்கு ஈக்குவளா அவள நான் பணக்கார பெண்ணா மாத்திடுவேன் கொஞ்சம் யோசிங்க உங்களுக்கு அவள புடிச்சு இருந்தா அவகிட்ட பேசுங்க இவ்ளோநாள் இதை பேசாததுக்கு காரணம் நீங்க ஆரம்பம்ல அவமேல கோவமா இருந்தீங்க அதான் ஆனா இத்தனை மாசம்ல அவள ஓரளவு புரிஞ்சு இருப்பீங்கல அதான் இப்போ பேசுறேன் அவ உங்க பக்கத்தில இருந்தா எங்க யாரையும் பேசகூட விடமாட்டா அதான் அவ வீட்டுல இருக்கும்நேரம் பேசுறேன்” என்றவனை பார்த்த ஆராஷி அமைதியாக எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றுவிட்டான்.
போகும் அவனையே பார்த்த நிதின் ஒரு பெருமூச்சை விட்டு எழுந்து சென்றான்.
அவள் நடிக்க வந்தவள் அதும் அவனது சித்தி ஏற்பாடு செய்து அனுப்பிய ஆள் என்று என்னைக்கு அவளது வாயால் கேட்டானோ அன்றிலிருந்து அவள் பக்கம் சாயும் மனதை கோவத்தை காட்டி இழுத்து பிடித்து வைத்துள்ளான்.
அதை தெரியாத நிதின் அவளுக்காக பேசுகிறேன் என்று அவனிடம் அவளை பற்றி பேசி கோவத்தை கிளறி விட்டு விட்டான்.
‘வைஃப்ப விட்டுட்டு அவ பின்னாடி சுத்தி ஃபோர் அடிச்ச அப்புறம் எந்த இளிச்சவாயனும் கிடைக்கலனு பணத்தை கொடுத்து எனக்கு அவள கட்டி வைக்க பார்க்கிறானா? எவ்ளோ கேவலமா யோசிக்கிறாங்க இவங்க? லவ்வாம் லவ்வு உண்மையான லவ்னா என்னானு கூட அவளுக்கு தெரியாது ஒரு தேர்ட் ரேட்டட் பர்சன் அவ அவகூட என்னை சேர்த்து வெச்சு பேசுறாரு அசிங்கமாவே தோணலையா இவருக்கு ஸ்பான்சர் கம்பெனினு அமைதியா இருந்தா என்ன வேணா செய்வாங்களா? என் லைஃப்ப முடிவு பன்ற உரிமை யாரு இவங்களுக்கு கொடுத்தது?’ என்று கோவத்தில் வீட்டுக்குள்ளேயே வாக்கிங் சென்று கொண்டு இருந்தவன் தன்னை பார்க்க அருந்ததி சாஹித்யன் நிலவினி வந்து இருப்பதாக கார்ட்ஸ் வந்து கூற கோவத்தை சற்று தள்ளி வைத்தவன் யோசனையோடு ரூமிலிருந்து வெளியே வந்தான்.
அவர்களும் அவனிடம் மேதாவின் காதலையே எடுத்து சொல்லி நிதின் கூறிய அதே டயலாக்கையும் சொல்லி சென்றவர்கள் அவள் லீவ் அதான் பேச வந்தோம்னு அவ்வளவு தான் அவனுக்கு புசு புசுவென கோவம் கொதித்து எழுந்தது “ஆக இதுவும் இவளோட நாடகம்தானா சொல்லி வெச்ச மாதிரி நிதினும் பேசுறாரு இவங்களும் எழுதி கொடுத்தத ஒப்பிக்கிற மாதிரி பேசுறாங்க இவளோட நாடகத்துக்கு இப்போவே முற்று புள்ளி வைக்கிறேன். அவ வழியிலேயே போய் இன்னைக்கு அவளோட வேஷத்தை கலைக்கிறேன்” என்று கோவமாக பேசியவன் அவளிடம் உண்மையை வாங்க வேண்டும் என எண்ணி அவளை மயக்குவதாக நினைத்து அழகாக மெரூன் நிற ஃபுல் ஸ்லீவ் டீஷர்ட்டை அணிந்தவன் அதன்மேல் கோட் அணிந்து புறப்பட்டான் ஆனால் அந்த வேஷதாரி எங்கு இருப்பாள் என்று எண்ணியவன் அங்கதான் இருப்பா என்று தனக்குதானே பேசியபடி பார்க்குக்கு கிளம்பினான்.