அத்தியாயம் – 66
அருந்ததி கோபமாவதை தடுக்க எல்லோரும் முயல அதற்குள் அருந்ததியின் கோப முகம் பார்த்து அங்கு ஓடி வந்த மேதா அருந்ததியை பார்த்தவாறும் அவனுக்கு முதுகு காட்டியும் நின்றாள்.
“அவரு என்ன சொல்றாரு தெரியுமா?” என்று அருந்ததி கோபமாக அவளை பார்த்து பேச அவளை தடுத்தவள்
“அரூ அரூ ப்ளீஸ் அவருக்கு என்னை அவரோட வேலையாளா தான் தெரியும் உண்மை தெரியாதுல அட்ஜஸ்ட் பண்ணிக்கோடி இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு போய்டுவாரு அதுக்குள்ள நம்ம ஊரை தேடி வந்தவங்கள நாம மரியாதை இல்லாம நடத்தினோம்னு பேரு வந்துட கூடாதுடி புரிஞ்சுக்கடா” என்று கூறி அவளை கெஞ்ச.
“உன்னலாம் திருத்தவே முடியாதுடி நீ என்னைக்கு தான் இவர பத்தி கவலைபடுறத நிறுத்த போறீயோ? உன்னால நாங்களும் வேஷம் போட வேண்டி இருக்கு” என்றபடி அவள் அங்கிருந்து தூரமாக போய் நின்றுவிட்டாள்.
அரூ என்று மேதா அழைத்தது அவளுக்கு கேட்காதது போல நடந்து கொண்டாள்.
அப்படியே நின்று மற்றவர்களை பார்வையாலே கெஞ்ச அவளை பார்த்த தேஜூ “அனுபவத்துல சொல்றேன் இப்படி பாசம் வைக்காதே பின்னாடி ரொம்ப வருத்தபடுவ” என்று விட்டு எல்லோரும் ஒரு ஒரு பக்கமாக பிரிந்துவிட்டனர்.
“ஐயம் சாரி ஃபார் பாதர் யூ சர்” என்று திரும்பாமலே அவனுக்கு சாரி சொன்னவள் உணவு மேசையை செக் செய்ய சென்றாள்.
அவளையே பார்த்தவன் ‘பாரு ஆக்டிங்க சைகையிலேயே எல்லாரையும் வசியம் செஞ்சு வெச்சு இருக்கா?’ என்று கோபப்பட்டவன் பார்ட்டிக்கு வந்தவர்கள் அவனிடம் பேச வர கவனத்தை அங்கு செலுத்தினான்.
மேதாவிற்கு ஒரு ஃபோன் வர அவள் அதை எடுத்துக்கொண்டு சமையல் நடக்கும் பகுதியில் சென்று யாரேனும் வருகிறார்களா என பார்த்தபடி பேசினாள்.
அவள் செக்கப்க்கு சென்றிருந்த டாக்டர்தான் பேசினார்.
அவர் நேற்றிலிருந்து அவளுக்கு தொடர்பு கொள்வதாகவும் லைன் பிசியாகாவே இருந்தது என்றும் கூற அவரிடம் என்ன செய்தி என்று கேட்டவளை அவரோ உடனடியாக ஃபாரின் சென்று மருத்துவம் பார்க்க வேண்டும் என கூற என்ன விவரம் என உன்னிப்பாக கேட்டவளுக்கு உலகமே இருண்டு போனது. கண்களில் கண்ணீர் வழிய டாக்டர் சொன்னதை கேட்டவளுக்கு அவர் ட்ரீட்மெண்ட்காக ஃபாரின் போக வேண்டும் என மீண்டும் வற்புறுத்த அதிர்ச்சியில் கலங்கி போனவளுக்கு என்ன செய்வது யாரிடம் ஆறுதல் தேடுவது இத்தனை வருடம் தன்னை துன்பம் வரும் நேரமெல்லாம் காத்தவன் இப்போது அவனும் பெரிய துன்பத்தை கொடுத்து கொண்டு இருக்கிறானே? என்ன செய்வாள் ஆறுதலுக்கென? தோள் சாய்ந்து அழ தந்தை அருகில் இல்லையே? ஒருவேளை இப்படியெல்லாம் தனக்கு நேரும் என தெரிந்ததால் தான் அவர் முன்பே இறந்துபோனாரோ? என ஆற்றுவார் தேற்றுவார் யாருமின்றி கண்கள் தானே கண்ணீரை சிந்த சட்டென்று சுயம் வந்தவள் யாரும் பார்க்காத வண்ணம் தன் கண்ணீரையும் முகத்தையும் துடைத்தவள் அவரிடம் இதைப்பற்றி யாரிடமும் சொல்லவேண்டாம் நான் ட்ரீட்மெண்ட் எடுக்கிறேன் அடுத்த வாரத்தில் செல்கிறேன் என்று கூற மறுமுனையில் சொல்லப்பட்ட செய்தியில் மேலும் அதிர்ந்தாள்.
ஆம் நேற்றுமுதல் அவர் இவளுக்கு கால் செய்ததாகவும் அவளை தொடர்பு கொள்ள முடியாததால் நேற்று எதுக்கோ ஃபோன் செய்த ஷர்மாவிடம் அவர் எல்லாவற்றையும் கூறி விட்டதாக கூற அவ்வளவுதான் அவளுக்கு சர்வமும் ஆட்டம் கண்டு போனது அவரிடம் பேசக்கூட முடியாது போக
அவரிடம் பேச முடியாமல் ஃபோனை கீழே போட்டவளுக்கு உலகமே தலைகீழாக சுழல்வதை போலானது.
அப்படியே அமர்ந்தவளுக்கு அதிர்வு ஒருபுறம் இந்நேரம் அவன் அண்ணாக்கு ஃபோன் செய்து ஏதாவது சொல்லிட்டா? என்ற பயம் ஒருபுறம் தோன்ற டாக்டர் சொன்ன அதிர்ச்சியான தகவலை விட ஷர்மா யாரிடமும் எதுவும் சொல்லிவிட கூடாதே என்ற பயம்தான் அவளை ஆட்கொண்டது.
இப்போது என்ன செய்வது என்று புரியாமல் அவள் அப்படியே அமர்ந்த வண்ணம் அவள் இருக்க கீழே போட்டதில் அவளது ஃபோன் உடைந்து இருக்க யாரோ ஒருவர் அங்கு வந்து அந்த உடைந்த ஃபோனை எடுத்தபடி ஃபோனில் பேசினார் அது யார் என்று நிமிர்ந்து பார்க்கும் முன் கண்களை துடைத்தவள் நிமிர பாடிகார்ட் ஒருவர் அங்கு நின்றிருந்தார்.
அவரோ அவளை புரியாமல் பாரத்து “மேடம் கீழ விழுந்துட்டீங்களா? அடி எதுவும் பட்டுடுச்சா?” என்றபடி அவள் எழ கையை கொடுக்க அவரது கைப்பற்றி எழுந்தவள்
“இல்லண்ணா லேசா ஸிலிப் ஆகிடுச்சு” என்று கூற
“சார் உங்கள தேடினாரு உடனே வர சொன்னாரு ஏதோ கோவமா வேற பேசினாரு மேடம் உங்களுக்கு ஃபோன் பண்ணாரு போகல ஏதேதோ பேசினாரு எங்களுக்கு ஒன்னும் புரியல அதான் உங்கள கூட்டிட்டு போக வந்தேன்” என்று அவர் கூற.
மீண்டும் அவனுக்கும் அருந்ததிக்கும் சண்டையோ? என்று பயந்தவள் வேகமாக
“என்ன கோவமா இருக்காரா? என்ன ஆச்சு? வாங்க போலாம்” என்றபடி வேகமாக அவள் உள்ளே சென்று ஆராஷி இருக்கும் இடத்தை தேட அவளது கண்ணில் பட்டான் ஆராஷி.
அப்போது அங்கே யாருமே இல்லை நிதின் தேஜுவை அனுப்பி விட்டிருந்ததால் அவள் அந்த வீட்டின் மற்றொரு மூலையில் இருந்தாள் அவளோடு சாஹித்யனும் இருந்ததால் அவனுக்கும் எதுவும் தெரியாது.
நிதின், நிலவினி, அருந்ததியை சமாதானம் செய்து வெளியே இருந்த தோட்டத்தில் அமரவைத்து பேசிக்கொண்டு இருந்தனர்.
மற்ற பிஸினஸ் மேன்ஸ் மற்றும் விருந்தினர்கள் மட்டுமே அங்கு இருக்க அவனது அழகிய வெள்ளை முகம் கோவத்தில் மொத்தமாய் சிவந்து போய் இருந்தது.
என்னவோ ஏதோ என்று அவள் பதறி அவன் அருகில் வர அவளை பார்த்தவனுக்கு அப்படியொரு கோவம் வர பளாரென அவளது கன்னத்தில் அறைந்தான் அவன்.
அதில் அவள் நிலையில்லாமல் தடுமாறி விழ அங்கிருந்த அனைவரும் அவர்களைத்தான் பார்த்தனர்.
அவள்முன் கோவமாய் நின்றான் ஆராஷி ஷிமிஜூ
Nice
Mikka nandri sago🥰