அத்தியாயம் – 67
அதிரடியாய் அவன் அடித்த அடியில் நிலையில்லாமல் விழுந்தவளுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவே சிறிது நேரம் ஆனது.
இதனை பார்த்த அவளை அழைத்து வந்த பாடிகார்ட் அதிர்ந்து நிதினை அழைத்து வர ஓடினான்.
கோவத்தில் குரலை உயர்த்தி கத்தினான் ஆராஷி.
“நீயெல்லாம் என்ன ஜென்மம்டி உனக்குலாம் அப்படி என்ன பணம் வேணும்?
பணத்துக்காக என்ன வேணா செய்யலாம்னு நினைச்சுட்டு இருக்கியா?
உடம்ப வித்து சம்பாதிக்கிறது பத்தாதுனு என் திறமைய திருடி வித்து சம்பாதிக்க பாக்குறியே வெட்கமா இல்ல உனக்கு?” என்று அவன் ஆக்ரோஷமாக கேட்டு விழுந்தவளை எழுப்பி உலுக்க அவன் பேச்சில் உடம்பெல்லாம் கூசிபோனது அவளுக்கு. கண்கள் கலங்கிவிட்டது
என்ன தவறு செய்தோம் ஒரு வேளை முன்னர் நடந்ததை எண்ணி எல்லோர் முன்னும் காயப்படுத்த வேண்டும் என இப்படி பேசுகிறானோ? இல்லையே அதைப்பற்றி பேசமாட்டேன் என்றானே? இப்போது என்ன? என்று எண்ணியபடி கண்கள் கலங்க அவனை புரியாத பார்வை பார்த்தாள். அவனது பாஷை அங்கிருந்தவர்களுக்கு புரியாததால் எல்லோரும் அவர்களையே தான் பார்த்து நின்றனர்.
அவளது பார்வையை பார்த்தவன் “இப்படி அப்பாவி மாதிரி நடிக்காதடி. கொஞ்சமாச்சும் நீ நல்லவளா இருந்திட மாட்டியா? உன்ன நான்தான் தப்பா நினைச்சுட்டு இருந்திருப்பேனோனு ரெண்டு நாளா யோசிச்சு யோசிச்சு எனக்கு எவ்ளோ ஃபீல் ஆச்சுனு தெரியுமா உனக்கு? ஆனா நீ திரும்ப திரும்ப நான் தப்பானவதான்னு ப்ரூப் பண்ணிக்கிட்டே இருக்கியே வெட்கமா இல்லையா உனக்கு?” என்று மீண்டும் மீண்டும் அவளை குற்றவாளி கூண்டில் ஏற்றி நிற்கவைத்தானே தவிர அவளது பேச்சை கேட்க தயாராகவே இல்லை அவன்.
ஏற்கனவே அவனது முத்தம் தந்த காயத்தை இப்போது தான் ஆறவைக்க பாடாய் பட்டு சரி செய்தபடி வந்தாள் இவன் அடித்ததில் கன்னம் வீங்கி மீண்டும் உதட்டில் ரத்தம் வழிந்தது.
அதற்குள் அங்கு பாடிகார்ட் சொல்ல அதிர்ந்த மூவரும் ஓடிவர அவளை பந்தாடிக்கொண்டு இருந்தான் ஆராஷி.
நிதின் ஓடிவந்து அவளை தன் பக்கம் இழுத்துக்கொள்ள அவனது கோவ முகத்தை பார்த்து அப்படியே அவளுடன் நின்றுவிட்டனர் அருந்ததியும் நிலவினியும்.
உள்ளே வந்த பாடிகார்ட் மற்ற கார்ட்ஸ் உதவியுடன் அனைவரையும் வெளியேற்ற முயல நிதின் நிலவினிக்கு கண்காட்ட அவளும் சென்று அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு அனைவரையும் கிளம்ப செய்தாள்.
நிதின் பின்னால் நின்றிருந்தாலும் அவளது கலங்கிய பார்வை அவன்மீது தான் இருந்தது.
அப்போது கூட நிதின் அவளை மறைக்க “ச்சீ” என்று ஜாப்பனீஸில் சொல்லி முகத்தை சுழித்தான்.
அதை கேட்டு பதறியவள் நிதினின் கையை தீயில் கையை விட்டவள் போல உதறிவிட்டு நகர்ந்துநின்றாள்.
அவளை திரும்பி புரியாமல் பார்த்த நிதின்
“என்ட மோளே? எந்தாயி? என்ன பிரச்சினை உங்க ரெண்டு பேருக்கும்? அதும் இப்படி பட்ட நேரத்தில? எந்தா காயம் இது?” என்று அவன் அவளை புரியாது கேட்க
அவளிடம் பதிலே இல்லை. அவளுக்கே தெரியாத ஒன்றை கேட்டால் அவள் எப்படி சொல்வாள்?
“சேட்டா தடுக்கி விழுந்துட்டேன்..சேட்டா அது ஞான் ஏதோ தப்பு” என்று அவள் திக்கி திணறி தலையை குனிந்து கொண்டே கூற
“என்ன? தப்பா நீயா? மோளே நீ தப்பு பன்ற ஆள் இல்லையேடா?” என்றபடி அவளை நெருங்க பார்க்க மேலும் விலகினாள் அவள் அவளது உடல்மொழி புரிந்தும் புரியாமல் பார்த்த நிதின் ஆராஷியை பார்த்து
“அவ என்ன தப்பு பண்ணா? அப்படியே தப்பு பண்ணி இருந்தாலும் அதை என்கிட்ட சொல்லணும் அவள கண்டிக்க அப்பாவா அண்ணனா நான் இருக்கேன் நீங்க யாரு அவளை கண்டிக்க?” என்று கேட்க அவனது பேச்சு புரியாமல் அதையும் தவறாய் நினைத்தவன் ஜாப்பனீஸில் பேச இதற்கும் இவளைதான் நான் கேட்கணும் உண்மையை சொல்லமாட்டா என உணர்ந்தவன் கைநீட்டி தடுத்தபடி “அரூ போய் அந்த டிரான்ஸ்லேட்டரை உடனே எடுத்துட்டு வா” என்று கோவமாய் கத்த பயந்த அருந்ததி ஓடிச்சென்று அதை கொண்டு வந்தாள்.
அவனுக்கும் சேர்த்தே.
அதை கொடுத்துவிட்டு மேதாவை பிடித்தபடி நிற்க
இருவரும் அதை ஆன் செய்து மாட்டியபடி மீண்டும் அவனை கேட்டதையே கேட்டான் நிதின்.
அதை புரிந்த ஆராஷி
“இவ செஞ்ச வேலைக்குலாம் நான் இவள கொல்லாம இருக்கேனேனு சந்தோஷப்படுங்க இவ செஞ்சதெல்லாம் சொன்னா நீங்களே இந்த துரோகிய அடிச்சு துரத்திடுவீங்க” என்று அவன் கூற அவளோ அதிர்ந்து பார்த்தாள் அவனை.
துரோகியா? தானா? என்றுதான் அவளது அதிர்ச்சி.
“அப்படி என்ன செஞ்சா இவ அதை சொல்லுங்க அப்புறம் அவ துரோகியா இல்லையானு நான் பார்த்துக்கிறேன் அதை நீங்க சொல்லாதீங்க” என்று அவனை விட அதிகமாய் பேசினான் நிதின். இப்போது என்ன நடந்தது அதற்கு என்ன பழிச்சொல் சொல்ல போகிறானோ? எப்போது என்மீதான தவறான பார்வை மாறும் என்றுதான் பார்த்தாள் அவனை. நிதின் பேசும் தமிழில் ஏதோ பெரிய பிரச்சனை என்று மட்டும் உணர்ந்த அருந்ததி நிதின் ஏற்கனவே அவளை அமைதியாக இருக்கும்படி சத்தியம் வாங்கியதால் அமைதியாக தன் கோபத்தை அடக்கியபடி நின்றிருந்தாள்.
மீண்டும் தன் கோபப்பார்வையை அவள்மீது செலுத்தியவன்
“இந்த துரோகி பணத்துக்காக என்னோட நெக்ஸ்ட் லவ் சாங் நான் ஸ்பெஷலா கஷ்டப்பட்டு கம்போஸ் பண்ணி வெச்சு இருந்த சாங்கை எனக்கு தெரியாம திருடி அதிக பணத்துக்காக வேற ஒரு கம்பெனிக்கு வித்து இருக்கா இதை செய்ய இவளுக்கு உதவி செஞ்சவன் இன்னைக்கு எனக்கு இவளுக்கு பதிலா ஒருத்தன் வந்தானே அவன்தான்.
அதுவும் இல்லாம என்னோட சம் ரகசிய டாக்குமெண்ட்ஸ்ஸ நியூஸா வெளியே ஜப்பான் முழுசும் பரப்பி விட்டு இருக்கா இவளை துரோகினு சொல்லாம? என்ன சொல்ல?” என்று அவன் கத்த அதிர்ந்து பார்த்தவள் கண்ணீர் வழிய இல்லையென்பது போல தலையை அசைத்தாள்.
ஆம் மேதா உணவு பொருட்களை சரிபார்க்க சென்ற நேரம் அந்த கூட இருந்த டிரான்ஸ்லேட்டரோ ஆராஷி வேறு ஒருவரிடம் ஆங்கிலத்தில் உரையாடுவதை பார்த்து அங்கிருந்து நைஸாக ஓடிவிட்டான். இதை யாரும் கவனிக்கவில்லை ஆராஷியும்தான். சிறிது நேரத்தில் அவனது ஃபோன் ஒலியெழுப்ப எடுத்து பார்த்தவன் அவர்களிடம் சாரி கேட்டுவிட்டு ஃபோனை அட்டென் செய்தான் அவனது ஜப்பானிய மேனேஜர்தான் ஃபோன் செய்திருந்தார்.
அவர் சொன்ன செய்தி இதுதான்
“ஆரா அங்க யாரோ உன் லேப்டாப் ஓபன் பண்ணி இருக்காங்க அதுல இருந்து அந்த பர்ட்டிகுலர் ஃபைல மட்டும் எடுத்து இருக்காங்க அதை வெளியேவும் விட்டு இருக்காங்க கூடவே நீ ஏதோ ஒரு பொண்ணோட டேட் பன்றனு வேற போட்டு இருக்காங்க இது உன் இன்டியன் சர்வர்லதான் தெஃப்ட் ஆகி இருக்கு. எப்பட நீ இவ்ளோ அசால்ட்டா விட்டுடலாம் இன்னைக்கு ஈவ்னிங் பிஃபோர் சிக்ஸ்” என்றுஅவனைபிடித்து கத்த முதலில் அதிர்ந்தவனுக்கு அவர் சொன்ன நேரமும் இன்டியன் சர்வரில் தான் திருடப்பட்டது என்பதும் அவர் சொன்ன நேரத்தில் மேதா ஆங்கிலத்தில் அந்த ஆளிடம் ரகசியமாக பேசியதும் ஓட அவள்மீது தான் அவனுக்கு சந்தேகம் வந்தது.
ஏனெனில் அவனது அந்த லேப்டாப் மற்றும் அந்த பர்ட்டிகுலர் ஃபோல்டரின் பாஸ்வேரட் அவனை தவிர்த்து மேதாவிற்கு மட்டுமே தெரியும்.
மேதா பி.ஏ மற்றும் மேனேஜராக இருந்ததால் அவள்தான் அதில் அதிகம் நோட்ஸ்ஸை குறித்து வைக்க வேண்டும் என்பதால் அவளுக்கு மட்டுமே அவன் கொடுத்திருந்தான். உடனே அந்த ஆளை தேட அவனை காணவில்லை என்றதும் தன் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்தவன் அடுத்து மேதாவை தேடினான் அவளையும் காணவில்லை என கோபப்பட்டவன் உடனே மேதாவிற்கு ஃபோன் செய்தான் ஆனால் அவள் மொபைல் சுவிட்ச் ஆஃப் என்று வர கார்ட்டுக்கு ஃபோன் செய்து அவனையும் மேதாவையும் தேட சொன்னான அந்த ஆளை காணவில்லை அதை தான் அவன் நிதினுக்கு
நிதினுக்கும் இது அதிர்ச்சியே. ஆனால் இவன் தவறாக அவளை புரிந்து தன் தங்கைமீது பழியை கோபத்தில் சொல்கிறான் என்று உணர்ந்தவன்.
சற்று நிதானமாக
“இங்க பாருங்க ஆராஷி உங்களுக்கு பெரிய பிரச்சனை வந்து இருக்குதான் அது புரியுது ஆனால் அதை இவதான் செஞ்சானு எதை வெச்சு சொல்றீங்க? ஆதாரம் இருக்கா உங்ககிட்ட? காலையில வந்த ஆள் இவ அப்பாயிண்ட் பண்ணவர்தான் அவருமேல கூட தப்பு இருக்கலாம் இல்லையா? இவமேல அந்த பழி விழுந்து இருக்கலாம் இல்லையா?” என்றான் நிதின்.
“ஆதாரமா? சொல்றேன் கேளுங்க.
என்னோட லேப்டாப்ல தான் எல்லா டீடெயில்ஸும் இருந்தது அதோட என்னோட ப்ரோக்ராம் இருக்குற அந்த பர்ட்டிகுலர் ஃபோல்டரை ஓபன் பன்ற பாஸ்வேர்ட் அந்த ஆளுக்கும் தெரியாது வேற யாருக்கும் தெரியாது என்னையும் இவளையும் தவிர. அதும் அந்த குறிப்பிட்ட ஃபோல்டரோட பாஸ்வேர்ட் அதுவும் இல்லாம ஈவ்னிங் அந்த ஆள்கிட்ட நான் சொன்னதெல்லாம் சரியா செஞ்சுட்டீங்களானு கேட்டா? அதுவும் தனியா ரகசியமா?” என்று கூற
என்ன இது? என்பது போல அவளை திரும்பி பார்த்தான் நிதின்.
அவளது அதிர்ந்த பார்வையும் கலங்கிய கண்களும் அவன்மீதே இருக்க அவளிடம் இதற்கு பதில் கிடைக்காது என்று உணர்ந்தவன்.
மீண்டும் அவனிடம் திரும்பி
“சரிங்க சார் அதை என்கிட்ட நீங்க ஏன் அப்பவே சொல்லல? இப்படி இவமேல பழியை போட்டா எப்படி? முதல்லேயே சொல்லி இருந்தா நான் இதை விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிச்சு இருப்பேனே”என்று கேட்க
“அப்போவே எனக்கு சந்தேகம் வரலையே ஏதோ பேசுறானு தானே விட்டேன் இப்போ என் ஜப்பான் கம்பெனி மேனேஜர் ஃபோன் பண்ணி சொல்லவும்தானே எனக்கே தெரிஞ்சது அதும் ஈவ்னிங் தான் என் இன்டியன் சர்வர்ல திருட்டு நடந்து இருக்குனு அவர் சொன்ன டைம்லதானே இவ அந்த ஆள்கிட்ட பேசினா இங்க வந்து எனக்கு ஃபோன் வந்ததும் அந்த ஆளையும் காணோம் இவளையும் காணோம். கார்ட்ஸ்கிட்ட தேட சொன்னா அந்த ஆளை எங்கேயும் காணோம் இவ மட்டும் மாட்டிக்கிட்டா… ஆப்ட்ரால் ஒரு வேலைக்காரி பணத்துக்காக இப்படிலாம் கீழ்தரமா நடந்துக்கிறா அவளை கேட்காம உங்க கம்பெனி ஸ்டார் நானு என்னை கேள்வி கேட்கறீங்க நீங்க பணத்துக்காக என்னவேணா செய்யலாம்னு செய்யுற இவள நீங்க கேட்க மாட்டீங்க? அவளோ முக்கியமா போய்ட்டாளா இவ? ம்ஹூம் நீங்க என்ன செய்வீங்க இவ உங்களையும் நல்லவ வேஷம்போட்டூ ஏமாத்திட்டு மயக்கிதானே வெச்சு இருக்கா” என்று அவன் கூற நிதினுக்கு கோவம் தலைக்கு ஏறியது.
“ஷட்அப் மிஸ்டர் ஆராஷி. இவ்ளோ நேரம் ஏதோ கோவத்தில பேசுறீங்கனு அமைதியா பேசினேன் இதுக்கு மேல ஏதாவது பேசினீங்க நான் மனுஷனா இருக்கமாட்டேன். அவ யாருனு தெரியுமா உங்களுக்கு? அவள பத்தி என்ன தெரியும் உங்களுக்கு? அவ” என்று நிதின் சொல்ல வர
அவனது கையை தொட்டவள் வேண்டாம் என்பது போல தலையை அசைத்தாள்.
“அவரு என்ன பேசுறாருனு புரியுதா உனக்கு? நீ யாருனு அவருக்கு புரியவைக்க வேணாமா? இன்னும் நான் பொறுமையா இருக்கமாட்டேன் மேதா” என்று நிதின் கூற
“ப்ளீஸ் வேண்டாம் உங்கள கெஞ்சி கேட்கிறேன்” என்று அவள் கையெடுத்து கும்பிட
“டேய் என்னடா” என்று அவளது கையை பிடிக்க வர உடனே கையை விலக்கியவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள் அவளை தாங்கியபடி சென்ற அருந்ததி நின்று ஒருநிமிடம் அவனை முறைத்துவிட்டு சென்றாள் அதில் அவன் எரிந்து சாம்பலாகி இருப்பான்.
தளர்ந்து செல்லும் தன் பாசமான தங்கையை கையாலாகதவனாக பார்த்தவன்
கோவமாக ஆராஷியிடம் திரும்பி
“போதும் இதுக்கு மேல உங்கள எங்க கம்பெனி ஸ்டாரா வெச்சுக்க எனக்கு விருப்பம் இல்ல இனிமேல் உங்களுக்கும் எங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் வேண்டாம் நாளை காலையில நீங்க இங்க இருந்து போய் இருக்கனும். உங்கள கூட்டிட்டு வந்தது நாங்க நீங்க போக வேண்டிய வேலையை சாஹித்யன் செய்வான் குட் பை ஃபார் யுவர் ஆல்” என்றுவிட்டு வெளியே ஓடி சென்றான் நிதின்.