
அத்தியாயம் – 73
ஆராஷியின் கோபப்பேச்சை கேட்டதும் டிடெக்டிவ் மற்ற வேலைகளை விட்டு ஓடிவந்தான்.
“ஆரா பொறுமையா இரு ஆரா என்னானு விசாரிக்கலாம்” என்று அவனது தோளை தொட கோவமாக அமர்ந்து இருந்தவன் அப்படியேதான் இருந்தான்.
இவனிடம் நெருங்குவது கஷ்டம் என உணர்ந்த ரியோட்டோ அமைதியாகவே இருந்தான். அவன் வருவதற்குள் யாருக்கோ அழைத்தவன் கோவமாய் பேசிவிட்டு வைத்தான்.
அடுத்த இருபது நிமிடங்களில் வந்தவனை நிறுத்திய செக்யூரிட்டி கேமிராவில் ஆராவை தொடர்பு கொண்டு விஷயத்தை கூற அவனை பார்த்த ஆரா அவனை உள்ளே விடும்படி கூற அவனும் உள்ளே ஓடிவந்தான் மூச்சிரைக்க.
வந்தவன் பார்த்தது கோபத்தில் கொதித்துகொண்டு இருந்த ஆராஷியை தான்.
“சர்” என்று பயந்தபடி அவன் அழைக்க அவனை தீயாய் முறைத்தவன் எழுந்து அவனது சட்டையை கொத்தாக பிடித்த ஆராஷி
“மீரா யாரு? நீ என்ன கண்டுபிடிச்ச? சரத்ஶ்ரீ சர்க்கு ரெண்டு பொண்ணுங்கலாம்” என்று அவன் கோவத்தில் கத்த அதை கேட்டு அதிர்ந்த அந்த டிடெக்டிவ்
“சர் சர் அவருக்கு ஒரு பொண்ணுனுதான் நாங்க விசாரிச்ச வரை தெரிந்தது” என்று அவன் பயந்தபடி கூற அவனது கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டான் ஆராஷி.
“ஆரா” என்று பதறியபடி அவனை தடுத்த ரியோட்டோ
“என்னடா பன்ற?” என்று கேட்க கோவத்தில் சிவந்திருந்தவனை பார்த்து பயந்து கன்னத்தை தாங்கியபடி நின்றிருந்தான் அந்த டிடெக்டிவ்.
“இவன் ஒழுங்கா விசாரிக்காம தப்பான இன்ஃபர்மேஷன கொடுத்து நான் எவ்ளோ வேதனையை அனுபவிச்சேன் தெரியுமானா?” என்று அவன் கத்த
“சரி ஆரா டென்ஷன் ஆகாதே விசாரிக்கலாம்” என்று அவனை பற்றியபடியே டிடெக்டிவ்வை பார்த்த ரியோட்டோ
“என்ன இது? என்ன பண்ணி வெச்சு இருக்கீங்க நீங்க? விஷயத்தோட சீரியஸ்னஸ் தெரியுமா உங்களுக்கு? ஒழுங்கா விசாரிச்சு இல்ல நீங்க ஃபைனல் இன்ஃபர்மேஷன் கொடுத்து இருக்கனும்?” என்று அவன் கேட்க.
“(Gomen`nasai) சாரி சர்” என்றவன்
“நான் அனுப்பின ஆள் சொன்ன விஷயத்தை செக் பண்ணாம சொல்லிட்டேன் மன்னிச்சிடுங்க சர்” என்று அவன் மன்னிப்பு வேண்ட அதற்குள் அவனது மொபைல் ரிங் ஆனது.
அதை எடுத்து பார்த்தவன் டிடெக்டிவ்வை அமைதியாக இருக்கும்படி கையை வாய்மீது வைத்து சைகை செய்தவன்.
ஃபோனை அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட்டான்.
மறுமுனையில் சொன்ன செய்தியில் அங்கு நின்றிருந்த டிடெக்டிவ் க்கு கால்கள் நடுங்க துவங்கியது.
இதுதான் அந்த செய்தி.
“ஆரா நீ எமர்ஜென்சினு சொன்னதால தான் நான் அவசர அவசரமாக விசாரிச்சேன். சரத்ஶ்ரீ சர்க்கு ரெண்டு பொண்ணுங்க ஒருத்தர் தேஜுஶ்ரீ இன்னொருத்தர் மேதஷ்வினி ஶ்ரீ
இதுல தேஜுஶ்ரீ க்கு படிக்க போன இடத்திலேயே அங்கேயே யாரையோ லவ் பண்ணி ஆனா அவங்க பிரிஞ்சுட்டதா சொல்றாங்க. அவங்களுக்கு ஒரு கேர்ள் பேபி இருக்காங்க. அவங்கள பத்தி ஃபுல் டீடெயில்ஸும் கிடைக்கலை டைம் கொடுத்தா விசாரிச்சு சொல்றேன்.
இப்போ ரீசண்ட்டா தான் அவங்க அப்பா கம்பெனியை கவனிக்க அவங்க தங்கச்சி கம்ப்பள் பண்ணி வரவெச்சு இருக்காங்க.
மேதஷ்வினி ஶ்ரீ சரத் சர் இறந்ததும் கம்பெனியோட ஃபவுண்டரா பொறுப்பு ஏற்று இப்போ வரை எல்லாம் பக்காவா பார்த்துட்டு இருக்காங்க. ஆனால் இதுநாள் வரை என்ன ரீசன்னு தெரியலை அவங்க அவங்களோட ஐடென்டிட்டிய காட்டிக்காம வாழ்ந்துட்டு இருக்காங்க. இதுநாள்வரை அவங்க ஃபவுண்டர் னு மட்டும் தான் எல்லாருக்கும் தெரியும் ஆனால் யாரும் அவங்கள பார்த்தது இல்ல.
அவங்களோட நெருங்கின வட்டம் நிதின் அண்ட் அந்த கம்பெனி ஷேர் ஹோல்டர்ஸ்தான்.
ஏதோ ஒரு ரீசன்காக தேஜு அண்ட் மேதா அவங்களோட ப்ரண்ட்ஸ்ஸ தான் சரத்ஶ்ரீ சர் ஷேர் ஹோல்டர்ஸ்ஸா அப்பாயிண்ட் பண்ணி இருக்காரு.
உனக்கு அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் சரத்ஶ்ரீ பேர்ல ரகசியமாக ஸ்பான்சரா இருக்குறது மேதஷ்வினி ஶ்ரீ தான்.
அவங்க நீங்க ஸ்டார்ட்டிங்ல தனியா தங்கி சான்ஸ்க்கு ட்ரை பண்ணும்போது உங்க வீட்டு பக்கத்தில தான் தங்கி இருந்தாங்களாம் அப்போ உன் திறமையை பார்த்து ஸ்பான்சர் செஞ்சு இருக்கலாம்.
மேதஷ்வினிக்கு ஜப்பான்ல ஒரு ப்ரண்ட் இருக்காரு அவர்பேர் ஷர்மா.
உனக்கு சரத்ஶ்ரீ சர் அண்ட் அவங்க ரெண்டு பொண்ணுங்க கூட இருக்கும் ஃபோட்டோவும் ஒன்னுதான் கிடைச்சது அதை செண்ட் பண்ணி இருக்கேன் பார்த்துக்க இதுவே கிடைக்கல ரொம்ப கஷ்டப்பட்டு தான் கலெக்ட் பண்ணேன்.
ஏதோ ரீசன்காக சரத்ஶ்ரீ சர் ரெண்டு பொண்ணுங்களையும் பிஸினஸ் வேர்ல்ட்க்கு அறிமுகமே செய்யாம இருந்து இருக்காரு” என்று ஜாப்பனீஸில் பேசிவிட்டு வைக்க ரியோட்டோ தேஜுஶ்ரீ என்ற பெயரிலேயே நின்றுவிட்டான்.
டிடெக்டிவ்வோ அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டான்.
தனது கோபத்தை அடக்கிய படி தனது மொபைலின் திரையை அங்கிருந்த புரொஜெக்டரில் கனெக்ட் செய்தவன் மெயிலை ஓபன் செய்து புகைப்படத்தை ஓபன் செய்ய முதலில் வந்தது மேதா மாஸ்க் அணிந்து இருந்த புகைபடம் அதும் அவள் இங்கு தங்கி இருந்த போது ஆராஷியோடு ஹாஸ்பிடலில் அவனது கைகளை பிடித்தபடி அழுது கொண்டிருந்த புகைப்படம். கூடவே வெளியே போகும்போது மாஸ்க்கை கழட்டியபடி இருந்த புகைப்படமும். வெளியே நின்று ஹாஸ்பிடலை திரும்பி பார்த்து அவள் அழுத கண்களோடு செல்வது.
அவன் தேடிய அதே கண்கள்.
இரண்டாவது சரத்ஶ்ரீ தேஜு மற்றும் மேதா நிதினுடன் இருந்த புகைப்படம் அது தேஜு படிப்பதற்கு செல்லும்முன் எடுத்தது.
அதை பார்த்த அனைவருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அதிர்ச்சி.
ஆராஷிக்கோ தன் கூடவே இருந்து தன் உயிரை காத்து தனக்கான அடையாளத்தை கொடுத்தவள் அவளைதானே தேடினான் அவளைதானே இப்போது இப்படி அவமானப்படுத்திவிட்டு வந்துள்ளான்.
டிடெக்டிவ்க்கோ தன் வேலையாள் செய்த சோம்பேறிதனம் தெரிந்ததில் அவனுக்கு பயப்பந்து உருண்டு கொண்டு இருந்தது.
ரியோட்டோவிற்கு தேஜு என்ற பெயரே அவனது உலகத்தை நிறுத்திவிட இரண்டாவதாக ஓபன் செய்த புகைப்படத்தில் தேஜுவை முதலில் பார்த்தது போன்ற தோற்றத்தில் பார்க்க அவனுக்குள் பெரிய பூகம்பமே உருவாகி இருந்தது.
இப்போது அவள் யாரன தெரிந்த மகிழ்ச்சி எங்கெங்கோ தேடி அலைந்தானே தேடிய பொக்கிஷம் அருகிலேயே இருந்திருக்கிறதே ஆனால் வேறு ஒருவரின் மனைவியாக வேறு ஒருவரின் குழந்தைக்கு தாயாக. உதறிவிட்டாளா என்னை? இத்தனை நாள் தவம் கையில் சேருமா? என்று காத்திருந்தது எல்லாம் வீணா?
முதலில் சுயம் வந்த டிடெக்டிவ் ஆராஷியின் காலில் விழுந்துவிட்டான்.
தனது வேலையாள் செய்த தவறை சொல்லி புலம்பியவன் மன்னிப்பு கேட்க அவனை அங்கிருந்து போக சொன்னான் ஆராஷி. விட்டால் போதுமென உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடியேவிட்டான் அவன்.
எல்லாம் அவனது தப்பு என்றே தோன்றியது அவனுக்கு.
தான் நிதானமாக ஆராய்ந்து நம்பகமான இடத்தில் விசாரிக்க சொல்லி இருந்தால் இந்நேரம் இத்தனை தவறுகள் நடக்காமல் பார்த்து இருப்பானே?
யாரை குற்றம் சொல்வது?
கூடவே இருந்தும் அடையாளம் காணதெரியாத பாவியாய் இருந்துவிட்டானே அவனையா? இல்லை தன் அடையாளத்தை மறைத்து இங்கு மீராவாகவும் அங்கு பி.ஏ வாகவும் வாழ்ந்த மேதாவையா? இல்லை உண்மை தெரிந்தும் அவளுக்கு உதவி செய்த அவளது குடும்பமா? இல்லை அவளை நேரில் கண்டு பேசிய ஒரே ஆளான தன் அண்ணனிடம் அங்கு இருந்தவரை அவளை ஒருமுறை கூட காட்டாத தானா?
கோவம் கோவம் இந்த கோவம் தன் வாழ்க்கையை எப்படியெல்லாம் நாசம் செய்துவிட்டது.
கோவத்தை முதலாய் கொண்டு மற்ற அனைத்தையும் ஆராய்ந்து பார்க்க தவறி விட்டானே?
மன்னிக்க கூடிய தவறா செய்தான் பெரிய பாவத்தை அல்லவா செய்துவிட்டான்.
எப்படி எப்படி இந்த கேள்விதான் அவனை நிலைக்குலைய செய்து கொண்டு இருந்தது.
துவண்டு போய் நிலத்தில் அமர்ந்து விட்டான்.
இப்போது சென்று அவளிடம் நின்றால் அவளது வசதிக்காக அவளை தேடி வந்ததாக தவறாக எண்ணிவிட்டால் யாருக்காக தன் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தானோ அதெல்லாம் ஒருநொடியில் தவிடுபொடி ஆனதுபோலாகி விடுமே?
இனி அவளது முகத்தில் தன்னால் முழிக்க முடியுமா? தனக்காக தன்னை காக்க அவளது உண்மை அடையாளத்தை மறைத்து சாதரண பெண்ணாக சுற்றியவள் தன்னை காக்க அவளைதான் நாம் அவமான படுத்தி காணாதேசம் அனுப்பிவிட்டோம்.
இனி அவளை காண முடியுமா?
தன் உயிரை காத்தவளை தாய் போல் தன்னை அரவணைத்தவளை என்னவெல்லாம் செய்துவிட்டான்.
நினைக்க நினைக்க நெஞ்சம் பதறியது அவனுக்கு.
நெஞ்சை பிசையும் வலி அதிகம் ஆக அங்கேயே தரையில் மண்டியிட்டவன்
ஓவென கதறி அலறிவிட்டான்.
அவனது அலறலில் சுயம் வந்த ரியோட்டோ அவனிடம் ஓட அவனது சத்தத்தில் எல்லோரும் ஓடிவந்தனர் அங்கே.
முதலில் அவனிடம் வந்த ரியோட்டோ
“ஆரா ஆரா” என்று அவனும் அழ அங்கே ஒடி வந்தவர்கள் என்ன என்று கேட்க ஒன்றுமில்லை என்று சமாளித்த ரியோட்டோ ஆராவின் தந்தை மட்டும் அங்கே நிற்க மற்றவர்கள் எல்லாம் சென்று விட்டனர்.
என்னவென்று அவர் ரியோட்டோவை கேட்க என்ன சொல்லுவான் அவனும் அவனுக்கும் அல்லவா இதயத்தை குத்தி கிழித்துக்கொண்டு இருக்கிறதே அவனளவின் நினைவு.
ஆனால் அவன் எதையும் சமாளிக்கும் திறன் கொண்டவன் அல்லவா தன் சோகத்தை தன்னோடு வைத்து பூட்டியவன் கலங்கிய கண்களை கண்சிமிட்டி கண்ணீரை உள்ளே தள்ளியவன் நடந்ததை அவரிடம் கூற அவருக்கோ பேரதிர்ச்சி.
“என்ன ஆரா? என்ன இது? நீயா இப்படி?” என்று அவர் கோவமாய் கேட்க அவரை தடுத்த ரியோட்டோ எதுவும் பேசவேண்டாம் என தலையை அசைக்க அவரோ சற்று அமைதியானவர்
“சோ அந்த பொண்ணு சரத்ஶ்ரீ சாரோட பொண்ணுதானா? இப்போ என்ன செய்ய?” என்று கேட்க
யாருக்கும் எதுவும் புரியாத நிலை.
முட்டி போட்டு அழுதபடி இருந்தவனை தோளில் பிடித்து எழுப்பிய ரியோட்டோ அவனை அங்கிருந்த மெத்தையில் அமர வைத்தான்.
அவனுக்கு இப்போது ஓய்வு தேவை என்று உணர்ந்தவன் தண்ணீரில் தூக்க மாத்திரையை கலந்து அவனை குடிக்க வைத்துவிட்டு
தந்தையிடம் அவனை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு அந்த அறையை விட்டு விருட்டென்று வெளியேறினான்.
புயல்போல் தன் அறைக்குள் நுழைந்தவன் தன் அறையில் மெளனமாய் கதறினான்.
தன்னால் அவளுக்கு நடந்த கஷ்டங்களை எண்ணியவன் அவள் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டாளே என்று தான் எண்ணி இருந்தான் ஆனால் அவளோ வேறு ஒரு வாழ்க்கையையே உண்டாக்கி கொண்டு இருந்திருப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லையே கையில் கிடைத்த பூவை காகிதம் என்று கசக்கி எறிந்தேனே இப்போது நான் பூவாய் அவளை தாங்க தேடிய நேரம் அவள் வேறு ஒரு தோட்டத்தின்மலராய் மாறி போய் இருக்கிறாளே? யாரிடம் சொல்லி அழுவான் அவன் மனக்குறையை மன்னிப்பாவது வேண்டலாம் என்று பார்த்தால் தன்னை மறந்து சந்தோஷமான வாழ்க்கை வாழ்பவளுக்கு தான் மீண்டும் அந்த கசப்பான வாழ்க்கையை நியாபகம் செய்துவிட்டால் அவளது நிம்மதி குலைந்துவிடுமே?
என்று ஏதேதோ எண்ணியவன் எண்ணம் மீரா என்று அவனுக்கு அறிமுகமான மேதாவிடம் வந்து நின்றது.
Interesting