Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 80

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 80

அத்தியாயம் – 80

Thank you for reading this post, don't forget to subscribe!

ரியோட்டோவிடம் அவளது முழுப்பெயரை கேட்க அவனோ மீரா என்று கூற அது அவளாக இருக்காது என்றுவிட்டான்.
வேறு யாராவது ஆஸ்திரேலியா சென்று இருந்தால் சொல்லவும் என்று கேட்க அந்த பெயரில் யாருமே போகவில்லை என்ற தகவலே அவனுக்கு வந்தது.

அவனது பேச்சை கேட்ட ரியோட்டோ
“ஆரா ஒருவேளை அந்த பொண்ணு எமர்ஜென்சினு வேற யாரோட டிக்கெட்லயாச்சும் போய் இருந்தா?” என்று கேட்க அப்படி நடந்து இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்று யோசித்தவனுக்கு மண்டையே வெடித்துவிடும் போல் இருந்தது.
அவளது புகைப்படம் ஏதாவது இருந்தாலாவது அதை வைத்து தேடலாம் ஆனால் அவன் பார்த்தது அவளது கண்களை மட்டுமே.
ரியோட்டோ ஒருவனே அவளை பார்த்து உள்ளான் அதும் ஒருமுறை தான் அவளது வீட்டில் அவளை பார்த்தவன் தான் அதன்பின் அவனும் அவளை மாஸ்க் அணிந்தபடியே பார்த்து உள்ளான்.
இதெல்லாம் யோசித்த ஆராவுக்கு ரியோட்டோ மேல் கோவம்தான் வந்தது.

“நீங்கலாம் என்ன அண்ணன்? தம்பிக்காக ஒரு பொண்ணோட நம்பர் இல்லனா அந்த பொண்ணோட ஒரு ஃபோட்டோவாச்சும் எடுத்து வெச்சீங்களா நீங்க? அட்லீஸ்ட் சீக்கிரமா போய் அவளை பார்த்தீங்களா? அதுவும் இல்ல.
இப்படி அவளை கோட்டை விட்டுட்டு வந்து ஹாயா நிக்குறீங்களே?” என்று அவன்மேல் காய்ந்தான் அதை கேட்டு அதிர்ந்த ரியோட்டோ
“நான் என்னத்த கண்டேன் டேய் அவ இப்படி சொல்லாம கொல்லாம போவானு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்? நானே அவகிட்ட பேச நம்பராவது வாங்கனும்னு இருந்தேன் அதுக்குள்ள அவளே காணோம்னா நான் என்ன செய்ய? உனக்குலாம் அண்ணனா பொறந்தேன் பாரு என்னை சொல்லனும்”

“அதான் சொல்லிட்டீங்களே. அவளைதான் துரத்திவிட்டீங்களே. போங்க போய் அவளோட ப்ரண்ட்ட கான்டாக்ட் பன்ன முடியுதா பாருங்க எதையும் சரியா செய்யாம வந்துட்டாரு. குடுங்க அவளை நானே வளர்த்துக்கிறேன்” என்று அவனையே குறை கூறிவிட்டு சென்று விட
தலையை சொறிந்தபடி
“இல்ல எனக்கு புரியல இவனா ஒன்னு நினைச்சுட்டு அவள பார்க்காம இருந்துட்டு இப்போ என்னமோ அவள நான் வாண்டடா அடிச்சு துரத்திவிட்ட மாதிரி பேசிட்டு போறான். எம்மா மீரா அட்லீஸ்ட் அந்த லெட்டர்ல ஒரு ஃபோன் நம்பர் கொடுத்துட்டு போய் இருக்கலாம்ல” என்று அவன் புலம்பவும் வேறு ஏதோ அவளை பற்றி கேட்க வந்த ஆராஷியின் காதில் லெட்டர் என விழவும்
“லெட்டரா என்ன லெட்டர்? எனக்கு எழுதினாளா? அதையும் மறைச்சுட்டீங்களா? என்ன சொன்னா?” என்று தவிப்போடு கோவமும் சேர்ந்து கேட்ட ஆராஷியை
பையித்தியமா இவன் என்னும் தோரணையில் பார்த்த ரியோ அந்த கடிதத்தை பாக்கெட்டில் இருந்து எடுக்க டக்கென்று அதை பிடுங்கியவன் “நான் போய் என் ரூம்ல படிச்சுக்கிறேன் நீங்க ஒரு டிடெக்டிவ்வ ஏற்பாடு பண்ணுங்க அவளை சீக்கிரமே கண்டுபிடிக்க” என்றுவிட்டு முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாதவன் போல கடிதத்தையும் ஜிம்மியையும் தூக்கி கொண்டு அவனது அறைக்குள் சென்று தாழ் போட்டுக்கொண்டான்.
ஜிம்மியை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்தவன் அந்த கடிதத்தை படித்தான் கடிதத்தில் அவள் அவனிடம் அவளது காதலை சொல்லக்கூடாது என்று கூறி இருக்க அதை படித்தவனுக்கு கண்கள் கலங்கி போனது.
எப்படியாவது அவளை கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவன் அப்போது தான் ஜிம்மியை பார்த்தான்.
அவளோ அவனிடம் நன்றாக ஒட்டிக்கொண்டாள்
ரியோட்டோவிடம் கூட அவள் அமரவில்லையே என்று எண்ணியவனுக்கு எங்கு தெரிய போகிறது அவள்தான் அவனது புகைப்படம் ஜாக்கெட் வீடியோ என்று அனைத்தையும் வைத்து அவனை அப்பாவாக்கி விட்டாளே அவளுக்கு அதனால்தான் அவன் வாசம் அப்படியே இருக்கிறது என்று அவளும் அவனோடு ஒண்டிக்கொண்டாள்.
அந்த ஜாக்கெட்டை அவனிடம் திருப்பி கொடுத்து பேச நினைக்கும்போது தானே அவன் தற்கொலைக்கு முயன்றது.

அதன்பின் நாட்கள் நகர்வது கடினமாக இருந்தது ஆராஷிக்கு அவளை பற்றிய தகவல் எதுவுமே அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவனது பிஸி ஷெட்டியூலினால் அவனால் அவளை தனியாக எங்கும் தேடி அலையவும் முடியவில்லை.
அவனுக்கு ஒரே ஆறுதல் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பார்க்கும் சரத்ஶ்ரீ சர்தான்.
அவரிடம் மட்டும் ரியோட்டோ போல அவனால் மனம்திறந்து பேச முடிந்தது அதற்கு காரணம் அவர் அவனை நடத்திய முறைதான். சிறு பிள்ளைபோல அவனிடம் ஒரு நண்பனாய் அவரது காதல் லீலைகளையெல்லாம் சொன்னவர் அவனையும் பேச வைத்தார்.
அவரது காதல் அவனுக்கு அவ்வளவு ஆச்சர்யத்தை தந்தது தன் காதலுக்காக ராஜபாரம்பரியத்தையே விட்டு வந்து அவரையும் உயர்த்தி அவரது காதலையும் உயர்ந்த இடத்தில் வைத்து அவர் இறந்த பின்பும் அவர் மனைவிமேல் வைத்த காதலை மாற்றாமல் அப்படியே இருப்பவரை பார்க்க பார்க்க தானும் தன்னவளுக்கு உண்மையாக ஒருவனுக்கு ஒருத்தி என இருக்க வேண்டும் என எண்ணியிருந்தான்.
இதை எண்ணி அவன் பின்னாளில் வருந்தாத நாள இல்லை.
ஒருவளை நினைத்து அதை காதல் என நினைத்து கொண்டு இருந்தவன் இந்திய மண்ணில் கால் வைத்ததும் வேறு ஒருவளிடம் தன் மனம் சாய்ந்துவிட்டதே என்று தன்னைத்தானே நொந்து கொண்டு இருந்தான்.

அவனது மனதில் காதல் உள்ளது ஆனால் அதுநன்றியுணர்ச்சியால் ஆனது அது உண்மைக்காதல் என அவன் உணரவேண்டும் அதற்கு இன்னும் பக்குவம் தேவை என உணர்ந்தவர் அவனை சீக்கிரமே இந்தியா வரவேண்டும் என வற்புறுத்தினார்.
அவனுக்கு நண்பனாய் மாறி அட்வைஸ்களை அள்ளி தெளித்தார். பின்னே தன் வருங்கால மருமகன் அல்லவா.
ஆம் என்னதான் கவலைகள் எத்தனை இருந்தாலும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ஜப்பான் வருவதை அவர் வழக்கமாக வைத்திருந்தார்.
ஆனால் அவனிடம் தன் மகள் மற்றும் குடும்பம் அப்போது லண்டனில் இருப்பதாகவே சொல்லி இருந்தார்.
அதனால் அவன் அவரது குடும்பம் என்றே எண்ணினான்.
அதனால் லண்டன் ஜப்பான் இந்தியா என அவர் உலகம் சுற்றும் வாலிபனாக இருந்தார்.

இடையில் தன் தந்தை வேறு ரியோட்டோவை பொய் சொல்லவைத்து ஒரு பெண்ணை அவள்தான் மீரா என்று நடிக்க வைத்து அதை அவனது சித்தி மியோதான் அனுப்பினார் என்று கண்டறிந்து கடுப்பானவன் தந்தையிடம் பேசுவதையே நிறுத்தி விட்டான்.

இடையில் தான் அருந்ததியின் கனவு ப்ராஜெக்ட் டான ஆல் ஓவர் இந்தியா கல்ச்சர் வெட்டிங் ஆட் வித் ரெனி ஃபேஷன்ஸ் காஸ்ட்யூம் என்று தந்தையிடம் கோரிக்கை வைத்தான் நிதின் அது பிடித்து போக இதில் மேதாவும் ஆராவும் நடித்தால் நன்றாக இருக்குமே என்று கற்பனை செய்தவர் முதலில் தன் மகளிடம்தான் கேட்டார்.

“அவளோ இருக்கும் வேலைகளில் என்னால் இதையும் செய்ய முடியாது அதும் ஆராஷியோடு நடிக்கவே முடியாது. அவரிடம் அருகில் நின்றாலே தனது குட்டு வெளிவந்துவிடும்” என்று மறுத்து விட்டாள். ஆனால் தந்தையிடம் அவன் இந்தியா வந்தால் தான்தான் அவனுக்கு டிரான்ஸ்லேட்டராக இருக்க வேண்டும் என்று மட்டும் வேண்டுதல் வைத்தாள் ஆசைமகளின் ஆசையை தடுப்பாரா அவர் ஓகே என்று கூறி அப்போதே அவளுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி உயில் எழுதி வைத்துவிட்டார்.
எப்படியும் உயிலில் மென்ஷன் செய்து விட்டால் அவள் நடித்து தானே ஆகவேண்டும் என்ற நப்பாசையில் அதை எழுதி வைத்துவிட்டார். அதை அவளிடம் கோவமாக பேசித்தான் நிதின் அவளை சம்மதிக்க வைத்தது.

எதற்கு உயில் என்று கேட்ட மேதாவிடம் தான் கான்டாக்ட் பண்ணமுடியாத தூரத்தில் இருந்தால் இந்த உயிலை பார்த்து நிதின் அதை செயல்படுத்துவான் என்று கூற அவளும் அப்போது அமைதியாகி விட்டாள் ஆனால் அவர் அப்போது வாழ்நாள் முழுவதும் தொடர்பே கொள்ள முடியாத அளவுக்கு இருப்பார் என்பது அவள் அப்போதே அறிந்திருந்தால்
எப்படியாவது அதையெல்லாம் தடுத்து இருப்பாளே.

இடையில் குறுக்கிட்ட அருந்ததி
“அப்படி எங்கதான் போனா மேதா அப்போ உங்களை பார்க்காம?” என்று கேட்க அவனோ அமைதியாக தேஜூவை பார்த்தான்

“என்னைத்தான் பார்த்துக்க வந்திருந்தா” என்று தேஜுஶ்ரீ சொல்லவும் எல்லோரும் அவளை ஆச்சரியமாய் பார்த்தனர்.
ஆமென தலையாட்டியவள் அங்கு நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.

“என்ன அவ உங்கள அப்பவே கண்டுபிடிச்சுட்டாளா? உங்களுக்கு தெரியுமா?” என்று அருந்ததி தேஜூவையும் ஆராஷியையும் மாறி மாறி பார்த்து கேட்க
ஆமாமென தலையை ஆட்டினர் இருவரும் இப்போது தேஜு அவளுக்கு நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.

(எத்தனை ப்ளாஷ்பேக்)

அன்றைய தினம் மேதாவிற்கு ஃபோன் வந்தது தன் தந்தையின் ப்ரண்டிடமிருந்து அதாவது ஷர்மாவின் தந்தை.
யோசனையோடு ஃபோனை எடுத்தவளுக்கு மறுமுனையில் சொன்ன செய்தியில் “வாட்” என்று எழுந்து நின்று விட்டாள் அவள்.

ஆம் தேஜுவை அவர் ஆஸ்திரேலியாவில் ஒரு சாதாரண உடையில் ஹோட்டலில் பார்த்ததாகவும் அவள் கர்ப்பம் போல தெரிகிறது என்றும் சொன்னவர் அவளது தந்தைக்கு தான் முதலில் அழைத்ததாகவும் அவர் எடுக்கவில்லை அதனால் அவளை அழைத்ததாகவும் கூற உடனே யோசித்து தனது பொறுப்பான சாம்ராஜ்யத்தின் தோரணையோடு அவரிடம் பேசினாள் மேதா.
முதலில் அது தேஜு தானா என கன்ஃபார்ம் செய்யும்படியும் அவளை ரகசியமாக ஃபாலோ செய்யும்படியும் அவளை பற்றிய அனைத்து தகவல்களையும் உடனே சேகரித்து அனுப்பும்படியும் சொன்னவள் ஊது எல்லாம் நடந்த பின் தந்தையை தானே அழைத்து வருவதாகவும் அவருக்கு மெதுவாக சொல்லலாம் எனவும் பேசியவள் தந்தையை அழைக்க வேண்டாம் எனவும் கூற அவளது சமயோஜிதமான உடனடி வேலைகளால் உடனே தகவல் சேகரிக்கப்பட்டு இருந்தது அவளது தங்கியிருக்கும் அறை உட்பட.

எல்லா விவரங்களும் கன்ஃபார்ம் ஆனதும் தனது தந்தையை நேரில் சென்று சந்தித்தாள்.
அவரிடம் உடனடியாக நாம் இருவரும் ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் என்று கூற அவர் என்னவென்று கேட்க அவள் சேகரித்த ஆதாரங்களை அவர்முன் வைத்தவள் ஆனால் அவளது கணவன் யாரென தெரியவில்லை என்றுவிட்டனர் என்று கூறியபடி அவரை உடனே கிளம்பும் படி கூறினாள்.
அவருக்கு அதிர்ச்சி சந்தோஷம் ஒருநாள் ஃபோன் செய்து யாரோ ஒருவனை திருமணம் செய்து கொண்டதாக கூறியவள் அடுத்த இரண்டு மாதாங்களில் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதி கொரியர் செய்துவிட்டு காணாமல் போனவளை எங்கெங்கோ தேடி அலைந்தனரே நிதின் மேதா சரத்ஶ்ரீ என ஆனால் அவளை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை என்ற பதில்தானே கிடைத்தது.
தான் நம்பியவன் தன் நண்பனின் பேச்சை கேட்டு என்னை விட்டதாகவும் அவனது மரணத்திற்கு தானும் ஒரு காரணமானதால் அந்த குற்ற உணர்வில் தனக்கு இங்கு இருக்கவே விருப்பமில்லை தன்னை யாரும் தேடவேண்டாம் எப்போதாவது சந்தித்தால் பார்க்கலாம் என்று எழுதிவைத்து சென்றாளே.
இப்போது அவள் கிடைத்துவிட்டாள் என்றால் அவருக்கு மகிழ்ச்சியில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
அவர் தன் நிதானம் இழந்து இருந்தார். எவ்வளவு துருதுருவென இருக்கும் பெண் சொல்லாமல் கொல்லாமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு மனமுடைந்து சென்றுவிட்டவளை தேடி தேடி கலைத்து போயினர் மூவரும். எது நடந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்தும் சரத்ஶ்ரீயை போலவே மேதாவும் அவளும் தைரியமானவளாக வலம் வந்தாள்.
இப்போது தந்தை உடைந்து போயிருக்க அவளே பொறுப்பை கையிலெடுத்தாள்.

அதன்படி இருவரும் அவர்களது சொந்த ப்ளைட்டில் ஆஸ்திரேலியாசென்றனர். அங்கு அவள் கலெக்ட் செய்த விரவங்களின் படி அவள் அங்கு சாதாரண ஹோட்டலில் வேலை செய்து தன் பிழைப்பை செய்துள்ளாள் என்றும் அங்கு வேலை செய்யும் ஆட்களோடு ஒரு ரூமில் தங்கி இருக்கிறாள் எனவும் தெரியவர இடிந்துபோய் விட்டார் சரத்ஶ்ரீ

நேரில் வந்து நின்றவர்களை கண்டதும் உடைந்து அழுதுவிட்டாள் தேஜு. தன் மகளை அணைத்துக்கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்துவிட்டார் சரத்ஶ்ரீ.
சரியான உடை உடுத்தாமல் கருவில் சிசுவோடு கைகள் காய்த்து போக வேலை செய்து இருந்தவளை பார்க்க மேதாவிற்கு அழுகைதான் வந்தது ஆனாலும் தான் அழுதால் தந்தையையும் தமக்கையையும் தேற்றுவது கடினம் என உணர்ந்தவள் உடனே அங்கு ஒரு வீடு பார்க்க சொன்னாள் அதற்குமுன் அவளை அங்கிருந்த ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று அவளுக்கு முழு பரிசோதனை செய்தாள்.
அவளது கணவன் பற்றியோ அவள் ஏன் இங்கு இப்படி இருக்கிறாள் எனவோ கேட்டாள் அமைதியாகிவிடுவதை பார்த்த மேதா அவளை எதுவும் கேட்கவேண்டாம் என்று கூறிவிட்டாள். அவளும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கின்றனர் ஆனால் இந்த க்ளைமேட் அவளுக்கு செட் ஆகவில்லை என்பது தெரிந்ததும் வீடு பார்க்கும் படலத்தை உடனே நிறுத்தினாள்.
அவளுக்கும் ஊருக்கு வருவதற்கு விருப்பம் இல்லையென கூற ஜப்பானுக்கு கூட்டி செல்கிறேன் என்றாள் அங்கிருந்து தான் எங்காவது செல்ல வேண்டும் என வந்ததாக கூறினாள்.

அதனால் மிகவும் யோசித்த மேதா தந்தையின் ஆலோசனைப்படி
அவளது வேலை செய்யும் ஊருக்கு அருகில் இருக்க வேண்டும் தந்தையின் வேலைக்கு ஏற்ப அவரும் வந்து அவளை பார்க்க வேண்டும் அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்று யோசிக்க மேதா ஃபோன் செய்தது தனது நண்பனுக்கு தான்.
அப்போது அவர்கள் குடும்பம் இருந்தது லண்டனில் தான் அதனால் அங்கேயே அவளை அழைத்து வந்துவிடும்படியும் கூற அதுதான் அவளுக்கும் சரியென பட தந்தையிடமும் தேஜுவிடமும் பேசினாள்.
ஆனால் அறிமுகம் இல்லாத ஆட்களோடு எப்படி தங்குவது என்று தேஜு யோசிக்க அவளோடு மேதாவும் வந்து தங்குவதாக முடிவு செய்தாள்.
ஷர்மாவும் அவளும் ஒரே டீமில் இருக்க அவர்களது ப்ராஜெக்ட்டும் அப்போது லண்டனில் நடைபெற போக உள்ளதாக தகவல் வர அவளுக்கும் வேலை அங்கேயே என்றானது.
ஷர்மாவின் வீட்டினர் அவளை நன்றாகவே பார்த்துக்கொண்டனர்.
எப்போதும் சோகமாகவே இருக்கும் தேஜுவை குழந்தையின் நலனை காரணம் காட்டியே திசை திருப்பி அவர்கள் அங்கு ஆரம்பிக்க போகும் புது ப்ரான்ச்சின் பொறுப்புகளை அவளிடம் கொடுத்து அவளது கவனம் முழுவதும் வேலையிலும் குழந்தைமீதும் இருக்கும்படி செய்தாள்.
இதையெல்லாம் மேலோட்டமாக நிதினுக்கு சொல்லி இருந்தாள் அவனும் இடையில் ஒருமுறை வந்து அவளை பார்த்து ஊருக்கு அழைக்க வரமுடியாது என்றுவிட்டாள் அதனால்.அவனும் சென்றுவிட்டான்.
அவளுக்கு அழகான மகள் பிறந்தது குழந்தையை முதலில் வாங்கியவள் மேதாதான். அவளது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தனது பொறுப்புகளையும் தமக்கையையும் அவளது குழந்தையையும் நன்றாக பார்த்துக்கொண்டு தாயாய் தன்னை பார்த்து கொண்டு இருந்த மேதாவிடம் அன்று அவளது கதையை சொன்னாள் தேஜு அவளது தந்தையும் அதை கேட்க மேதாவிற்கு ஏதோ பொறி தட்டியது. ஆனால் அப்போதைக்கு அதை பற்றி பேசாமல் இருந்துவிட்டாள்.
அதன்பின் தேஜுவை தேற்றி கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு அவளது மகளுக்கு தந்தையின் தேவையை உணர்த்தினாள்.

4 thoughts on “வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 80”

    1. Thank you so much sis❤️💜 ennoda name la check panni paarunga sis illana story name pottale vandhudum ud ellam ungala epdi tag panna nu theriyala adhan admin kita sonnen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *