அத்தியாயம் – 12
கட்டுப்படுத்த முடியுத அளவிற்கு கோவமானவன் அவளது அருகில் வந்து
“ச்சீ.. நீயெல்லாம் ஒரு பொண்ணா? கடைசியில நீயும் காசு பணம்னு முக்கியத்துவம் கொடுக்குறவளா ஆகிட்டல அதான் என்னை சாகடிக்க பார்க்குறேன்னு ஏழையான என் ப்ரண்ட்ட கொன்னுட்ட நீ விஷம் கலந்த ஜுஸை கொடுத்தேன்னு தெரிஞ்சதும் அதை வாங்கி எதுவும் சொல்லாம அவன் குடிச்சுட்டு போய் சேர்ந்துட்டான் இதைதான எதிர்பார்த்த.. உன்ன மாதிரி ஒரு கேவலமான பொண்ண நான் பார்த்ததே இல்ல என் மூஞ்சியிலேயே முழிக்காதே எங்கேயாவது போடி..இன்னும் ஒரு நிமிஷம் நீ இங்க நின்னாலும் நானே உன்ன கொன்னுடுவேன்..” என்று விட்டு அவன் திரும்பி நிற்க அதிர்ச்சியில் உறைந்து செய்வதறியாது நின்றிருந்தாள் மங்கை..
“ரி..ரியோ..சீரியஸ்லி நா..நான் ஜுஸ் மட்டும் தான் கொடுத்தேன்..என்னை நம்புங்க..நா.. நா.. நான் எதுவும் பன்னலை..ப்ளீஸ் என்னை நம்பு ரியோ” என்று அவள் அழ..
“எதை வெச்சு உன்ன நம்ப சொல்ற? அவன் அன்னைக்கே உன்ன பத்தி சொன்னான் நீயும் பணக்காரி மாதிரி தான் நடந்துக்குவனு சொன்னான் நான்தான் நம்பல ஆனா இன்னைக்கு அதை ப்ரூவ் பண்ணிட்டல.. போடி வெளியே இனி நான் என் வாழ்க்கையில உன்ன பார்க்கவேகூடாது.. என் ப்ரண்ட்ட கொன்ன பாவி நீ..நாளைக்கு என்னையும் கொல்லுவ போ இங்க இருந்து இல்ல உன்ன நானே கொன்னுடுவேன்..நான் வர்றதுக்குள்ள அந்த வீட்டைவிட்டு போயிடு இல்ல அசிங்கமாகிடும்” என்று அவளை பிடித்து தள்ளிவிட்டு சென்றுவிட்டான்.. தன்னை கீழே விழாமல் சமாளித்தவள் அழுதபடியே கிளம்பினாள் நேரே ரூமுக்கு வந்தவள் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு தான் கர்ப்பமாக இருப்பதை அவனிடம் சொல்லாமலே கிளம்பினாள்..
நேரே இங்கிலாந்து சென்றவள் அங்கிருந்த தங்களது வீட்டிற்கு சென்றவள் அங்கிருந்து தனது தந்தைக்கு ஃபோன் செய்து வரச்சொல்லி அழ அவரும் அடித்து பிடித்து ஓடிவர அவரிடம் எல்லாம் சொல்லி அழுதாள்.. முதலில் அதிர்ந்த அவளது தந்தை அவளுக்கு இப்போது தேவை ஆறுதல் என்ற நிதர்சனத்தை உணர்ந்தவர்.. ரியோட்டோவிடமும் அவனது தந்தையிடமும் பேசுகிறேன் என்று சொல்லி அவளை சமாதானம் செய்ய பார்க்க.. அவளோ அடியோடு மறுத்துவிட்டாள் இனி அவன் முகத்தில் முழிக்க போவதில்லை என்றும் அவர் அவனிடம் பேசவே கூடாது அப்படி பேசினால் அவள் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் மிரட்ட அப்போதைக்கு அவளது உடல்நலம் அவருக்கு முக்கியமாக பட அவரும் அவளை சமாதானம் செய்துவிட்டு தன் இளையமகளுக்கு ஃபோன் செய்து அவளிடம் நடந்ததை கூற அவளும் கிளம்பி வந்தாள்.. வந்தவள் தேஜுவை பார்த்துக்கொள்ள ஆள் ஏற்பாடு செய்தவள் அவளை அங்கேயே படிப்பை தொடரும்படி செய்தாள் ஆனால் அவளது விவரங்கள் வெளியே தெரியாதவாறு மறைத்துவிட்டாள்.. அவளும் அடிக்கடி தன் அக்காவை வந்து பார்த்துக்கொண்டாள் குழந்தையை காரணம் காட்டி அவளை அவளது சோகத்திலிருந்து வெளியே வர வைத்தாள்.. ஆறு மாதங்கள் கழித்து அவளது படிப்புக்காக அவள் கிளம்பவேண்டிய கட்டாயம் அதனால் தந்தையிடம் கூறிவிட்டு தன் அக்காவிற்கும் ஆயிரம் பத்திரங்கள் சொல்லிவிட்டு அவளும் கிளம்பினாள் இருந்தாலும் அவளை நலம் விசாரிக்க அவளை பேசவைக்க மறக்கவில்லை.. தேஜுவும் வீட்டிலிருந்தபடியே நன்கு படித்தாள்.. படிப்பில் கவனம் செலுத்தி தன் குழந்தைக்காக தன்னை தயார் படுத்திக்கொள்ள ஆயத்தமானாள்..
நண்பனை இழந்த சோகத்தில் தன்னை நம்பி வந்தவளை தேடவே மறுத்துவிட்டான் ரியோட்டோ.. அவனும் அங்கிருந்து காலி செய்துகொண்டு அவனது சொந்த ஊருக்கே சென்றுவிட்டான் அப்போது தான் அவனது உண்மையான சூழ்நிலை அவனுக்கு தெரிந்தது… நண்பர்களால் ஏமாந்த அவனது தந்தை ஒரு பைசா இல்லாமல் அனைத்து சொத்துக்களையும் இழந்துவிட்டார் அவரது உடல்நிலையும் மோசமாகி இருந்தது.. அவருக்கு இதயத்தில் வால்வில் ஓட்டை இருந்தது.. அவர் தங்கி இருந்ததோ ஒரு ஷீட் போட்ட வீட்டில்தான் அவரது வையித்திய செலவுக்கு கூட பணம் இல்லாமல் இருந்தார்.. அவரது நிலையை கண்டவன் அதிர்ந்து போனான்.. இழந்த சொத்துக்களை மீட்கவும் வழி இல்லாமல் போனது.. அவனது தந்தை நல்ல மனநிலையில் கையெழுத்து போட்டதால் அதை திரும்பபெறும் வழியும் இல்லை.. அடுத்த வேலை உணவுக்கு கூட பஞ்சமாகி போனது அவர்களுக்கு..அப்போது தான் ரியோட்டோ காலேஜில் கலந்து கொண்ட டான்ஸ் ப்ரோகிராமில் அவனை ஒரு மியூசிக் பேண்ட் வேலைக்கு எடுப்பதாக கால் செய்ய அவனது தந்தையின் மருத்துவ செலவுக்கு காசு வேணும் என்று உணர்ந்தவன் அந்த வேலையை ஏற்றுக்கொள்ள அவனது நிலையை உணர்ந்த அந்த மியூசிக் பேண்ட் ஓனரான ஆராஷியின் தந்தை அவனது தந்தையின் மருத்துவ செலவுக்கு பணம் கொடுக்க அதற்குள் அவனது தந்தை உடல்நிலை மிகவும் மோசமாகி அவரும் இறந்துவிட ஒரு பக்கம் நண்பனின் இழப்பு இன்னொரு பக்கம் தந்தையின் இழப்பு என்று அவனை புரட்டி போட்டது..
தனது சோகத்தை தன்னோடு வைத்துக்கொண்டு ஆராஷியின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டான்.. ஆம் அவன்தான் ஆராஷியின் டான்ஸ் டீச்சர்.. கூடவே அவனது பிஸிக்கல் ட்ரெயினர்.. யாரிடமும் மனம்விட்டு பேசாத ஆராஷி ரியோட்டோவிடம் மட்டும் ஒட்டிக்கொண்டு சுற்றுவதை கண்ட அவனது தந்தை தனக்கு பிறகு தன் மகனுக்கு உறவென்று ஒருவன் வேண்டும் என எண்ணியவர் ரியோட்டோ எவ்வளவு தடுத்தும் அவனது மனசை மாற்றி ரியோட்டோவை ஆராஷியின் அண்ணனாக தத்து எடுத்தார்..
ஆராஷியும் ரியோட்டோவை தன் அண்ணனாகவே பார்க்க அவனும் ஆராஷியை உடன்பிறந்த தம்பியாகவே அவன்மேல் அக்கறை எடுத்து அவனை பார்த்துக்கொண்டான்..அவனது முன்னேற்றத்திற்காக அவனும் சேர்ந்து உதவியாக இருந்தான்.. மிகவும் பொறுமைசாலியாக ஆகிவிட்டான்..நடுவில் ஒருநாள் தன் பழைய நண்பனை சந்தித்தவன் அவன் ரென்னை பற்றிய உண்மைகளை கூற முதலில் நம்பாதவன் அவன் காட்டிய ப்ரூப்பை பார்த்தவனுக்கு அப்போது தான் தான் செய்த தவறு உரைத்தது..அதிலும் தேஜு ஜுஸை மட்டும் தான் கலந்தாள் அதில் விஷம் கலந்து நாடகமாடியவன் அவன் கலந்த விஷத்தாலேயே இறந்தான் என்பது புரிய துடித்து போனான்..
தன்னை நம்பி வந்தவளை நம்பாமல் நண்பன் என நம்பியவன் தன் வாழ்வில் செய்துவிட்டு போன அநியாயங்களை அறிந்து மனதளவில் நொந்து போனான் அதன்பின் எங்கெங்கோ தேஜுவை பற்றி விசாரித்தான் ஆனால் பலன் என்னமோ பூஜ்ஜியம்தான் அவனது கல்லூரியிலும் விசாரிக்க அவள் அப்போதே போய்விட்டதாக அறிவித்தனர் ஆனால் அவள் எங்கே சென்றாள் என்று யாருக்கும் தெரியவில்லை..
அவனது நிலையை உணர்ந்த ஆராஷி அவனுக்கு ஆறுதலாய் இருந்தான்.. அடுத்த ஒன்னரை வருடத்தில் ஆராஷியை முன்னனி நடிகனாக மாற்றினான்.. அப்போது தான் ஆராஷி ஓய்விற்காக இந்தியாவிற்கு சென்று வந்தவன் காட்டிய பார்ட்டி புகைப்படத்தில் தேஜுவை பார்த்தவன் அவளைப்பற்றி ஆராஷியிடம் விசாரிக்க அவனும் அவளைப்பற்றி கூற தன்னால் இப்போது எட்டமுடியா தூரத்தில் தேஜு இருப்பதை உணர்ந்தவன் அவளாவது அவளது வாழ்க்கையை சந்தோஷமாக வாழட்டும் என்று எண்ணினான் ஆனால் மேதாவை பற்றிய விசாரணையில் தான் தேஜுவிற்கு குழந்தை இருப்பதும் அவள் வேறு யாரையும் மணக்கவில்லை என்ற தகவலும் தெரியவர இதோ அவளையும் அவனது மகளையும் தேடி ஓடி வந்துவிட்டான்..
ரியோட்டோ சொல்லி முடிக்க..
“அது எப்படி எல்லா பாய்ஸ்ஸும் ஒரே மாதிரி யோசிக்கறீங்க?” என்று கேட்டாள் அருந்ததி..
“புரியல பிரின்ஸஸ்” என்றான் ரியோ குழப்பமாய்..
“இல்ல நம்மள நம்புறவங்கள விட்டுட்டு மத்தவங்கள நம்புறீங்களே அதான் கேட்டேன்..ஒரு பாப்கார்ன் வேஸ்ட்டா போச்சு” என்று அவள் கேட்க..
அதை கேட்டவன் வலியோடு புன்னகைக்க..
“மன்னிச்சிடுங்க மாம்ஸ்.. நான் உங்கள ஹர்ட் பண்ணனும்னு சொல்லல..” என்று அவள் மன்னிப்பு கேட்க..
“ஹேய்ய்..நோ வொர்ரீஸ் பேபி.. உண்மையதானே சொன்ன நீ..அப்போ இருந்த ரியோட்டோக்கு அதை பிரிச்சு பார்த்து உண்மையை கண்டுபிடிக்குற அளவுக்கு மெச்சூரிட்டி இல்ல.. வாழ்க்கையில மேல மேல வாங்கின அடி தான் எல்லாத்தையும் எனக்கு கத்து கொடுத்துச்சு.. ப்ரண்ட்னு ஒருத்தனை நம்பி என்னை நம்பினவள நான் விட்டுட்டேனேனு வருத்தப்படாத நாள் இல்ல..
அவளோட கால்ல விழக்கூட தயாரா இருக்கேன்.. ஆனா அவ மன்னிக்குவாளா? நானும் என் குழந்தை மனைவினு சந்தோஷமா வாழ்வேனானு தெரியல” என்று வருந்தினான் அவன்..
“அதெல்லாம் சந்தோஷமா வாழ்வீங்க மாமா நாங்கலாம் எதுக்கு இருக்கோம் தேஜுவ சமாதானம் பண்ணி திரும்ப உங்கள லவ் பண்ண வைக்கலாம்..கவலைபடாதீங்க” என்றான் சாஹித்யன்..
அவனை பார்த்து புன்னகைக்க..
“பார்ரா..புள்ளபூச்சிக்கு கொடுக்கு வந்துடுச்சு” என்று அருந்ததி பேச
“போடி எரும.. உன் வாய்க்கு எங்கனா அடி வாங்கிட்டு தான் வருவ பாரு..அப்போ இருக்குடி உனக்கு” என்றான் சாஹித்யன்..
“நான் என்ன நீயா? அடி வாங்கிட்டு வர்றதுக்கு.. நான் திருப்பி அடிச்சுட்டு வருவேன் போடா” என்று அவள் கூற இருவரின் சண்டையை பார்த்து அனைவரும் புன்னகைக்க எல்லோரையும் முறைத்தவள்..
“உங்களையெல்லாம் நம்பி வாயில வடை சுட முடியுதா? குடும்பமாடா இது?” என்றுவிட்டு கோவத்தோடு போவதுபோல் வாசல்வரை சென்றவள் நின்று திரும்பி
“யோவ் அண்ணா நீங்களாவது ஒரு புள்ள கோச்சுகிட்டு போகுதே தடுப்போம்னு பாக்குறீங்களா? ஈஈனு இளிச்சுட்டு நிக்குறீங்க?” என்று அவள் பேச..
“நீ இன்னும் போகலையா? போய்ட்டனு நினைச்சேனே? நான் வேணா கழுத்தை புடிச்சு வெளியே தள்ளவா?” என்று நிதின் கேட்க..
“அண்ணனா நீங்க? நான் போய்டுவேன் ஆனா நான் போய்ட்டா உங்களுக்கு எண்டர்டெயின்மெண்ட் மிஸ் ஆகிடுமேனு தான் நான் போகாம இருக்கேன்..என் நல்ல மனசு உங்களுக்கு லாம் எப்போதான் புரிய போகுதோ..ஓ மை காட் கருப்புசாமி.. இவங்களுக்கு நல்ல புத்தி கொடுங்க” என்று வேண்ட அவளை அடிக்க துரத்தினான் சாஹித்யன்..
அதை பார்த்து அனைவரும் சிரித்தனர்..
“சரி சரி சிரிச்சது போதும் இனிமே நாம தீயா வேலை செய்யனும்” என்றாள் அரூ..
“இப்போ பேயா வேலை செய்யறோமா?” என்றாள் நிலவினி.. அதை கேட்டு மீண்டும் அனைவரும் சிரிக்க..
“பேபிமா.. யூ ட்டூ புரூட்டஸ்?” என்று முகத்தை அஷ்டகோணலாக வைத்து அவள் கேட்க..
“சும்மா அடிச்சுவிட்டேன் அது பர்ஃபெக்ட்டா மேட்ச் ஆகிடுச்சுடி” என்று நிலவினி கூற..
“உன் சும்மால எருமை சாணி போட” என்று அவள் சாபமிட..
“அட பக்கி” என்றாள் நிலவினி..
அனைவரும் சிரித்துக்கொண்டு இருக்க ஆராஷி மட்டும் அவர்களிடம் இருந்து தூர வந்துவிட்டான்..வந்தவன் வேறு புறம் திரும்பி நின்றிருந்தான்..
இதை கவனித்த நிதின் மற்றவர்களுக்கு சைகை செய்ய அனைவரும் அவன் அருகில் வந்து என்ன ஆச்சு என விசாரிக்க..
அவர்கள்புறம் திரும்பாமலே பேசினான்..
“இவ்ளோ ஹாப்பியா இருக்கே ஃபேமிலியே விட்டு அவ தெனியா போக நா..நான் ரீசன் ஆகிட்டேன்லே” என்று அவனுக்கு தெரிந்த தமிழில் பேச..
“ப்ளீஸ் சார் சீரியஸ் டையலாக் பேசும்போது தமிழ்ல பேசாதீங்க.. சத்தியமா சிரிப்பு வருது” என்றாள் அருந்ததி சோகமாய் முகத்தை வைத்தபடி..
முதலில் அவள் ஏதோ கோவமாய் பேசுகிறாள் என பார்த்த அனைவரும் அவள் அப்படி கூறவும் சட்டென சிரித்துவிட்டனர்.. அதன் பின்னரே அவள் கிண்டல் செய்கிறாள் என உணர்ந்தவன்..
“ஐயம் சாரி.. ஐயம் லியர்னிங் தமில்.. சோ அஜ்ஜஸ்ட் மை கில்லிங் ஸ்லாங்” என்று கூறியவன்..
“ஒன்ஸ் அகெய்ன் ஐயம் சாரி ஃபார் ஆல்..” என்றுவிட்டு கண்களை துடைக்க..
அவனது வருத்தம் தோய்ந்த குரல் அனைவருக்கும் வருத்தத்தை கொடுக்க..
“சரி நீங்க உங்க லவ் ஸ்டோரி சொல்றீங்களா?” என்று கேட்க..
“ஈஸ் ஷீ டிட்ன்ட் டெல் எநிதிங்?” என்று அவன் கேட்க..
அனைவரும் ஒருசேர தெரியாது என மண்டையை ஆட்ட..
“ஒரு வோர்ட் கூடவா?” என்று அவன் கேட்டுவிட்டு
“தென் ஹவ் யூ ஆல் சப்போர்ட் அண்ட் டாக்ட் ஹர் லவ் வித் மீ..ஆன் தட் டே?” என்று அவன் கேட்க..
“இட்ஸ் ஆல் அவர் கெஸ் ஒன்லி ஷி டிடின்ட் கன்ஃபஸ் எநிதிங் வித் அஸ்” என்றான் நிதின்..