அத்தியாயம்-5
“அப்பா…” என்று பதறி மலர் தந்தையை கவனித்தாள். கட்டிலிலிருந்து கீழே விழுந்து வாயில் எச்சி ஒழுகியது.
ஏதோ பேச வாயெடுத்து காற்று வந்து சேர்ந்தது.
“எதுக்கு தான் உருண்டு உருண்டு வர்றிங்க. உங்களை நான் நல்லா தானே பார்த்துக்கறேன்.” என்று ஆற்றாமையுடன் தந்தையின் வாயை துடைத்து விட்டு கைத்தாங்கலுடன் மெத்தையில் படுக்க வைத்திட முயன்றாள்.
“உன்னை கஷ்டப்படுத்திட்டேன். என்னை மன்னிச்சிடு” என்று கூறி முடிக்க, அவரால் அகன்ற முத்திரபையால் கழிவுநீர் வெளியாகி அதை சுத்தப்படுத்த ஆரம்பித்தாள்.
“தினம் இப்படி ஆயிரம் முறை சொல்லுங்க. இதை கேட்க தான் கஷ்டமாயிருக்கு.
ஏன்ப்பா… இப்படி பண்ணற. கட்டிலில் இருந்து விழுந்தா நீ செத்துடுவியா?
எனக்கு கஷ்டம் கொடுக்காம நீ சாகணும்னு எத்தனை முறை விழுந்தாலும் அடிதான் படும். சாகமாட்ட. உன்னை நான் சரியா பார்த்துக்கலையா சாக ஆசைப்படற.” என்று கோபமாய் பெனாயில் ஊற்றி துடைத்து விட்டு இப்பொழுது டெட்டால் ஊற்றி இடத்தை சுத்தப்படுத்தினாள்.
“என்னை குளிபாட்டி சேவகம் செய்து நீ கஷ்டப்படணுமா? இதோ இப்ப கூட பாரு.” என்று சுட்டிக்காட்டினார்.
தந்தை செந்திலால் தனியாளாக நடக்க முடியாது, உட்கார முடியாது, ஏதோ வார்த்தை தந்தியடித்து பேச்சு வந்துவிடும். சிறுநீர் மலம் கழிக்க கஷ்டமே. இதே ஆண் மகனாக இருந்தால் இந்தளவு வேதனை இருந்திருக்காது. மகளை பெற்றெடுத்து அவளே எல்லாம் செய்யவும், அந்த எமன் அழைத்தால் சென்றிடலாமே என்ற வருத்தம். அதற்கு தான் இறப்பை நாடி முயற்சித்து தோல்வியடைந்து துவண்டுவிடுகின்றார்.
“நீ செத்துட்டா எல்லாம் சரியாகுமா அப்பா. ஏன் இப்படி சாகறதுக்கு ஆசைப்படற.
பெத்த பொண்ணு உன்னை குழந்தையா பார்த்துக்க கூடாதா? இதே எனக்கு கல்யாணமாகி நான் உண்டாகி பையன் பிறந்து அவன் உன்னை போல ஜாடையில் இருந்தா எல்லாம் செய்வேன்ல. இப்ப என் பையனா நினைச்சிக்கறேன்.” என்று பேச கண்ணீரை தவிர அவரால் பதில் அளிக்க முடியவில்லை.
”உனக்கொரு கல்யாணம் பண்ணணும். அதுக்கு எனக்கு வக்கில்லை. கல்யாண பதிவு செய்யற இடத்துல தானே வேலையில் இருக்க. நீயும் கல்யாணம் பண்ண உன்னை பத்தி பதிய வைக்கலாமே?” என்று மகள் நலனை கருத்தில் கொண்டு கேட்டார்.
“என்னத்த.. பதிவு எல்லாம் பண்ணிட்டேன். சாதி மதம் பார்ப்பதில்லைனு போட்டாச்சு. நீ பார்க்கலைன்னா என்னம்மா நான் சாதி மதம் பார்ப்பேன்னு என்னைமத்தவங்க ரிஜெக்ட் பண்ணிடறாங்க.
இதுல நகை நட்டு சீர்வரிசைன்னு நினைச்சாளே பயமாயிருக்கு. வெட்கமேயில்லாம பையனை பேரம் பேசி இம்புட்டு நகை வேண்டும்னு மென்ஷன் பண்ணறாங்க.
சரி நம்மளை மாதிரி ஆதரவுயில்லாத ஆட்கள் இருப்பாங்கன்னு அவங்களை கல்யாணம் பண்ணுவோம்னு அதுக்கும் முயற்சி பண்ணி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அனாதையா கூட கேட்டுப்பார்த்தேன். அவனுக்கும் குடும்பம் வேண்டுமாம்.” என்றவள் முகம் விரக்தியில் சிரிப்பானது.
“கல்யாணம் செய்ய பதிவு செய்து காத்திருப்பது என்னை மாதிரி பொண்ணுக்கு வேஸ்ட். ” என்று கூறி கைகளை சோப்பு போட்டு கழுவி, மற்ற வேலையை கவனிக்க ஆரம்பித்தாள் நம் நாயகி தமிழ்மலர்.
தமிழரசனிடம் போனில் பேசி சண்டையிட்டு, இது வேலைக்கு ஆகாது என்று சற்று முன் அவனை பற்றிய நினைப்பையும் உதறியப்படி, அவனது வீட்டை வெறித்தாள்.
பழைய வீட்டை வாங்கி பெயின்ட் அடித்து பளபளப்பாய் வைத்திருந்தான். இங்கிருந்து பார்த்தாலே அவன் வீடு தெரிந்தது.
‘பரவாயில்லை… வீடு பெரிசா பார்த்து வாங்கியிருக்கான். ஆசையா கல்யாணம் முடிச்சி பெரிய குடும்பமா வாழ நினைக்கிறான். ம்ம்.. ஆனா பொண்ணை கல்யாணம் செய்த வீட்டில் அப்பா அம்மா வேண்டுமின்னா தங்குவாங்க. கூடுவே பெரிய குடும்பம் கேட்கறான். கேனப்பைய… இவனுக்கு வேற சாயந்திரம் பால் ஊத்தணும்.
ஆனாலும் இவன் எதுக்கா இங்க வந்து வீடு வாங்கியிருக்கான். எங்கயாவது வாங்கலாம்ல? என்னை பத்தி தெரிய வந்திருப்பானா? என்று நினைத்தவளின் மனசாட்சி, ‘ம்கூம்.. உன்னை பத்தி சீக்ரெட் என்னயிருக்கு? பால்காரி அப்பனை வச்சி கஞ்சி ஊத்தறதை தெரிந்து தலைத்தெறிக்க ஓடியிருக்கணும். அவன் நிச்சயம் உன்னை ஆராய வரலை.’ என்று காறி உமிழ்ந்தது.
அங்கிருந்த பசுமாடு கத்தவும், ‘இவனை பத்தி நினைச்சி வேலைக்கு ஆகாது. நம்ம வேலையை கவனிப்போம்’ என்று வைக்கோலை அள்ளி மாட்டிற்கு தீவினம் போட்டு தன் பணியை கவனித்தாள் தமிழ்மலர்.
இங்கு நம் நாயகன் தமிழரசன், தன் கனவில் பார்த்த இடங்களை தன் வீட்டில் பொருத்தி பார்த்தான்.
அவனுக்குள் அட இந்த இடத்துல இந்த ஜாடி வச்சா நல்லா தான் இருக்கும். இங்க ஒரு பெயிண்டிங் இருந்ததே. அது போல நம்மளும் இங்க பெயிண்டிங் வச்சி பார்க்கணும். இங்க வெள்ளைநிற ஸ்கீரின் இருந்தது. கடைக்கு போனா அந்த கலர்லயே ஸ்கீரின் வாங்கிடணும்.
ஒருயிடத்தில் வந்ததும், இங்க கனவில் பெரிய குடும்ப போட்டோ இருந்தது. இங்க என் அப்பா அம்மா போட்டோ கூட வைக்க முடியலை. அப்பா முகம், அம்மா முகம் இது கூட தெரியாம வாழறேன். பெத்தவங்க யாருனு தெரியாம வாழறது எல்லாம் தலைவிதி.’ என்றவன் தன் வலியை மறக்க, தன் கனவில் கண்டதை வரைய ஆரம்பித்தான்.
தமிழரசனுக்கு ஓவியம் வரையவும் நன்றாக வரும். ஏன் ஓரளவு ஆயக்கலையில் பாதியை அறிந்தவன். எல்லாம் அனாதை ஆசிரமத்தின் புண்ணியம். ஒன்றை மாற்றி ஒன்றை கற்றுக்க கொடுக்க யாராவது வந்தால் சோம்பல் படாமல் அனைத்தும் சமூகப்பணியை செய்ய வருபவரிடம் கூச்சமின்றி கற்றுக்கொள்வான்.
இன்று மனதை மாற்றிட ஓவியம் வரைய துவங்கி மனதை மாற்றிவிட்டான்.
ஆதிகாலையில் கண்டதில் அவனுக்கு பிடித்த புகைப்படத்தை வரைந்தான். ஆம் குடும்ப புகைப்படம்.
கல்யாண கோலத்தில் இருந்தவனை மட்டும் தன்னை போல வரைந்திருக்க மற்றவர்கள் எல்லாம் தன் இஷ்டத்திற்கு வரைந்து முடித்தான்.
மணமக்கள் முன்னே ஐந்து சிறுவ சிறுமியர் இருக்க, தன் அருகே தாத்தா பாட்டியும், மணப்பெண்ணின் அருகேயும் தாத்தா பாட்டியையும், அதன் அருகே அப்பா-அம்மா, என்று தோற்றத்திலும் பெரிம்மா, சித்தி என்று தனிதனிக்குடும்பமாக வரைந்து முடித்தான்.
காலிங்பெல் சத்தம் கேட்டதும், ஓவியத்தூரிகையை காதில் சொருகி, யாரென்று பார்க்க வந்தான்.
“பால்… அரை லிட்டரா? ஒருலிட்டரா?” என்று கேட்டு மலர் நின்றிருந்தாள்.
தமிழோ நெற்றிச்சுருக்கி அவளை காண, அவனுக்கு தன்னை தெரியவில்லையோ என்று, “காலையில் டீக்கடையில் பசும்பால் வேண்டுமுன்னு கேட்டிங்களே.” என்று உரைத்தும் முகமாற்றத்தை மாறது பார்க்கவும், “பால் வேண்டுமா?வேண்டாமா?” என்று கோபமாய் மாறினாள்.
“வேணுமுங்க.. அதுக்காக இப்பவேவா? ஈவினிங் கொடுங்க” என்று கூறவும், தலையிலடித்தாள் மலர்.
“மணி நாலு முப்பது. இதுக்கும் மேலன்னா? ஆறுமணிக்கா?” என்று கேட்டதும் கடிகாரத்தை கவனித்தான்.
“அச்சோ.. மணியை கவனிக்கலைங்க. படம் வரைந்தேன். அப்படியே நேரம் போயிடுச்சு. ஒன் மினிட்… ஒன் மினிட்..” என்று ஓடினான்.
பால் பாத்திரம் எடுத்து வந்து நீட்டியபடி, “காலையில் வரைய ஆரம்பிச்சேன். நேரம் போனதே கவனிக்கலைங்க. மதியம் சாப்பிடக்கூடயில்லை” என்றான்.
‘பேச்சு வளர்க்கவே கதை கட்டறான்’ என்று பாலை ஊற்றி விட்டு “காலையில் எத்தனை மணிக்கு வேண்டும்?” என்று தன் காரியத்தை பற்றி கேட்டாள்.
“ஆறு மணிக்குங்க. அதுக்குமுன்ன நல்லா துங்கணும். எழுப்பி விட்டுடாதிங்க” என்று கூறவும் ‘எனக்கு வேற வேலையில்லைப்பாரு. உன்னை வந்து எழுப்ப’ என்று வண்டியை உதைத்து முறுக்கினாள்.
அந்த டீக்கடைக்காரன் ‘மதியம் சாப்பிட வரலைம்மா அந்த தம்பி. பாலை வேற கொடுக்க. இனி டீ குடிக்கவும் வராது.’ என்று புலம்பியதில், ‘மதியம் சோறு தண்ணி இல்லாம என்னத்தை வரைந்தானோ? பெரிய ரவிவர்மா மாதிரி நினைப்பு. இதுல பெயிண்ட் பிரஷை காதுல சொறுகிட்டு’ என்று சென்றாள்.
“இந்த பொண்ணு என்ன ஒரு மார்க்கமா பார்க்குது. என்றவன் பாலை அடுப்பில் வைத்து, அச்சோ… செமையா பசிக்கு. மதியம் சாப்பிடாலை. நேர்ததை கூட மறந்திருக்கேன்.’ என்று பாலும் பிரெட்டும் வயிற்றுக்கு திணித்து முடிக்க, முடிவடைந்த பெயிண்டிங்கை காய வைக்க தனியிடத்தில் வைத்தான்.
அதற்குள் மணி ஐந்தை நெருங்க, தண்ணீர் ஊற்றி செடியை குளிர்வித்துவிட்டு, மேகி செய்ய ஆரம்பித்தான்.
அடுத்து ஓடிடியில் ரிலீசான படத்தை போட்டுவிட்டு ருசித்தான்.
நடுவே மசாலா தோசை வாங்கி வீட்டிக்கு வந்து சுவைத்து படுக்க துவங்கினான்.
கையெல்லாம் வலிக்க, கடிகார முட்கள் வேகமாய் நகர்ந்தது.
அதிகாலை நான்கு மணிக்கு மீண்டும் அவன் காதில் மங்கல நாதஸ்வர ஒலிகள், ‘அந்த தாலியை மட்டும் கொடுங்கடா. பொண்ணை மட்டும் காட்டுங்க. அவ கழுத்துல கட்டிட்டு முகத்தை மட்டும் பார்த்துக்கறேன்” என்று உச்சரித்ததும், “பொண்ணை விட மாப்பிள்ளை அவசரப்படறார்.”
“மாப்பிள்ளைக்கு வேஷ்டி சட்டை இந்தா இங்க எடுத்து வச்சிட்டேன்” என்ற குரல், கோவிலுக்கு வேற போகணும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்ப சொல்லுங்க அவனை” என்ற குரல்கள், அதற்கு பின்னனி இசை கூட்ட, “அந்த நாதஸ்வரம் ஊத சொல்லுங்க. கல்யாண எஃபெக்ட் வரலை” என்று கூற, கண்ணை கசக்கி எழுந்தான்.
நேற்று போலவே ஆளாளுக்கு அங்கும் இங்கும் பரபரப்பாக தோன்ற, ‘இந்த கனவு வேற’ என்று அலுத்துக்கொண்டு படுக்க சென்றவனை, “மாப்பிள்ளை பையன் திரும்ப தூங்கறான். கொஞ்சம் அவனை என்னனு கேளுங்க” என்றதில், தன் பிட்டத்தில் யாரோ அடித்து எழுப்புவதை கண்டு, “கனவு ரியாலிஸ்டிக்கா இருக்கா என்ன வலிக்கு’ என்று எழுந்தவன், இன்னும் கனவு களையலை என்று நேரத்தை பார்க்க, மணி ஆறானது.
அதே நேரம்காலிங் பெல் அடிக்க, எழுந்து கதவை திறக்க சென்றான்.
தலை முடியெல்லாம் அலங்கோலமாக, மேலாடையின்றி, ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து அவன் கதவை திறக்க செல்ல, ‘கல்யாணப்பையன் பட்டு வேஷ்டி கூட கட்டலை இன்னமும் டவுசரோட சுத்தறான்.’ என்ற அலுப்பல் பேச்சை கேட்டு, ‘என்னை தானே சொல்லுங்க’ என்று கதவை திறந்தான்.
‘கனவுல பால்காரி எல்லாம் வர்றா’ என்று பாத்திரம் ஏந்தி நின்றான்.
மலர் தமிழின் அலங்கோலமான வருகையை கண்டு ‘அறிவில்லை டவுசரை போட்டுட்டு நிற்கறான். ஆண்டவா… இந்த கண்றாவி வேற பார்க்கணும்’ என்று அரை லிட்டர் ஊத்த சென்றவள், வீட்ல நிறைய விருந்தாளிங்க வந்திருக்காங்க. எக்ஸ்ட்ரா பால் வேண்டுமா?” என்று கேட்க, “அட நீ வேற அதெல்லாம் கனவுல வர்றவங்க. காணாம போயிடுவாங்க. ஆமா.. நீ ஏன் என் கனவுல வர்ற” என்று கேட்டான்.
மலரோ தலையிலடித்து ‘நேத்து சனிக்கிழமை தண்ணி அடிச்சிருக்கானா என்ன? போதை தெளியாம பேசறான்.
மத்தவங்கள்ல யாராவது வந்து பால் வாங்கலாம்ல. அரைகுறையா இவனை அனுப்பிட்டு. மனசுல ஆம்பளை ரேஷ்மிகானு நினைப்பு. சேசே பொண்ணுங்களை ஏன் சொல்லணும்… அந்த முத்தம் வச்சி காஜில சுத்துவானே… ஆங்… அஜய் தேவர் அவன்னு நினைப்பு’ என்று பாலை ஊற்றி திரும்பி பார்க்காமல் சென்றாள்.
”என்ன தான் கனவு என்றாலும் பால்காரி முன்ன ஷார்ட்ஸ் போட்டுட்டு வந்திருக்க கூடாது. கனவுல இதை எப்படி மாத்தறது.” என்று புலம்பி பாலை அடுப்பில் வைத்து லைட்டரால் பற்ற வைத்தான்.
“பொண்ணு ஓடிட்டா… பையன் கேஸ் பத்த வச்சி சாக போறான்.” என்ற குரலை கண்டு, திரும்ப யார் யாரோ ஓடி வரவும், அடுப்பில் கை வைத்தவன் லைட்டரை அப்படியே வைத்திருக்க, கை சுட்டது.
‘அம்மா’ என்று ஊதியவன், ‘அச்சோ… கனவில்லை’ என்று மற்றவரை காணும் நேரம் ஒவ்வொருத்தராய் மாயமாக மறைந்தனர்.
ஒவ்வொருத்தராக மறையவும், கண்கள் கசக்கி அதிர்ச்சியாக நின்றான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
Super sis nice epi semmaiya pogudhu story 👌👍😍 appo ethellam kanavu ellaiya oruvela epi ya erukumo🙄 parpom 🤔🧐
Nalla kanavu pavam marriage panni vechrunga sis
Spr going 👌 waiting for nxt ud 😍
Superb👌👌👌👌👌👌👌
Ena pa ithu pavam avanuku ippadi kalyanam nadakura maariye kanavu varuthu ellarum irukanmari feel. Panran aana Avan thelinjathum elarum maranjiduranga intha Mari irukum nu ethana intuition kamikutha Avan mrg ku
Super super sis 😍😍😍😍😍😍😍 interesting😍😍
Enna nadakudu.. Dream illa anda ponnuku epdi theriuranga ellarum… Ena vishyama irukum