Skip to content
Home » தேநீர் இடைவெளியில்…-1

தேநீர் இடைவெளியில்…-1

     ☕தேநீர் இடைவெளியில்….🤏🏻

அத்தியாயம்-1

  ஆண்கள் பெண்கள் இங்கே இந்த உலகில் யாராகயிருந்தாலும் அழகு முக்கியம்.
   மாதந்திர சம்பளம் வாங்கும் பலரும் தங்கள் சம்பளப் பணத்தின் பாதி தொகையை தங்கள் அழகுக்காக ஒதுக்கி வைக்கின்றனர்.

இதில் படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடுயில்லை. யாராகயிருந்தாலும் அழகான தோற்றம் தங்களுக்கு வேண்டும். அதிலும் தங்கள் வீட்டு கண்ணாடி, தங்களை இந்த உலகத்தில் உள்ள மற்றவரை விட அழகானவர்களாக காட்டிட வேண்டும். அதிலும் ஆண்களை விட பெண்கள் அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து மெனக்கெடுக்கின்றனர்.‌

அதற்காக நித்தமும் முகக் பராமரிப்பு, மேக்-அப், தலைமுடி வெட்டுதல், மசாஜ், கை பாத பராமரிப்பு போன்ற சேவைகளை வழங்கும் ஒரு வணிக நிறுவனத்தை சார்ந்திருக்கின்றனர். அந்நிறுவனத்தின் பொதுப்படையான பெயர் அழகு நிலையம்.

  இன்று சின்ன சின்ன கிராமத்தில் கூட அழகு நிலையம் வந்துவிட்டது. பூப்பெய்தியது முதல், கல்யாணம், வளைகாப்பு விழா, காதுகுத்து விழா மட்டுமின்றி, சின்ன சின்ன விழாக்களுக்கும் பெண்கள் அழகு நிலையத்தை நாடுகின்றனர்.
  
  வேலைக்கு போகும் பெண்கள் எல்லாம் மாதம் இருமுறை கண்டிப்பாக அழகுநிலையத்துக்கு நேரம் ஒதுக்கி விடுவதுண்டு. சிலர் அழகு நிலையத்தில் வாடிக்கையாளர்களாகி, முன்கூட்டியே புக் செய்து காத்திருக்கவும் தயார்.

  ‘ரம்யா ப்யூட்டி பார்லர்’ அது போன்றதே.
  சற்று சின்னதாக ஆரம்பிக்கப்பட்ட அழகு நிலையம் என்றும் கூறயிலாது. அதே சமயம் மிகப் பெரியது என்றும் உரைத்திட முடியாது.

  ஹைக்கிளாஸ் லோக்கிளாஸ் இரண்டிற்கும் நடுவே இருக்கும் மிடில் கிளாஸ் போல இதுவும் அந்த வகையான அழகுநிலையம்.
 
  இங்கே வசதிக்கு பஞ்சமானவர்களும் வருவதுண்டு. செலிபிரிட்டி ஆட்களும் அழைப்பார்கள்.

ஆட்களை பொறுத்து இடத்திற்கு தகுந்தது போல அழகுநிலையத்தில் ஆட்களை வைத்துக் கொள்வாள் ரம்யா.

  ரம்யா ப்யூட்டி பார்லரின் உரிமையாளர்.

புருவத்தை திருத்துவதில் மும்முரமாக இருக்க, அவளது கைப்பேசி இடைவிடாமல் அடித்தது.

  “முதல்ல போனில் பேசிட்டு வாங்க ரம்யா. உங்க உதவியாளர் கூட இந்த வேலை செய்யட்டும்” என்று சின்னதிரையில் ‘வண்ணங்கள் நீயா’ என்ற சீரியலின் துணை நடிகை மதுமிதா கூறினார்.‌
ரம்யா அடிக்கடி அழகுநிலையத்தில் வரும் மதுமிதாவின் சீரியலை பற்றி புகழ்வதால் கூடுதல் சலுகையாக போன் பேச அனுமதித்தார். ரம்யாவோ  நன்றி நவில்ந்து தனது போனை காதில் வைத்து, “சொல்லு சுவாதி?” என்றாள். அவளுக்கு பதில் வேலை செய்யும் மற்றொரு அழகு நிபுணரிடம் வேலையை தொடர கூறி பால்கனி பக்கம் போனை எடுத்து வந்தாள்.

  “என்னத்த சொல்ல… அவசரமா ஒரு பங்ஷன் வந்துடுச்சு ரம்யா. தாடைக்கு கீழே இரண்டு மூன்று முடிகள், பார்க்க அசிங்கமா இருக்கு. நாளைக்கு வேற பங்ஷனுக்கு ஸ்லீவ்லெஸ் போடணும். கைக்கு அடியில் குட்டி குட்டி முடி. கொஞ்சம் காலையில் வீட்டுக்கு வந்துடு. உன்னிடம் டிரஸுக்கு ஏற்றார் போல மேக்கப் போட்டப்பிறகு தான் பங்ஷனே போகணும். இப்ப போய் அப்பாயின்மெண்ட் செய்யறேன்னு நினைக்காத” என்று சுவாதி அழகு செய்திட முன் பதிவுக்கு கோரிக்கை வைத்தாள்.

அவளோ, “ஏன்டி இப்படி பேசற. எனக்கு கடை ஆரம்பித்து நல்லது கெட்டது‌ சொல்லி தந்தவ நீ தான். உனக்கு பங்ஷன் போகணும் அதுக்கு மேக்கப் போடணும் வான்னா வரப்போறேன். நீயும் மத்தவங்க மாதிரி அப்பாயின்மெண்ட் கேட்கணுமா?” என்று உரிமையாக சலித்து கேட்டாள்.

“அட ரிசப்ஷன்ல நீ ஏதோ சீரியல் நடிகைக்கு மேக்கப் பண்ண போனதா சொன்னாங்க. அதான் தொந்தரவு செய்ய வேண்டாமேனு கேட்டேன். முன்ன மாதிரியா நீ. இப்ப எல்லாம் துணை நடிகைகளுக்கு மேக்கப் போட்டு பிஸியாவதாக கேள்விப்பட்டேன்.” என்றாள் சுவாதி.

“இதே மத்தவங்க என்றால் தொந்தரவு தான் சுவாதி. ஆனா நீ எனக்கு எப்பவும் தொந்தரவு இல்லை.” என்றாள் ரம்யா.

  “சரிடி… நாளைக்கு வந்துடு. அப்பறம் சஞ்சனா உனக்கு விஷயத்தை சொன்னாலா? அவளுக்கு ஒரு வாரத்துல நிச்சயதார்த்தம் நடக்க போகுது தெரியும்ல.” என்று கூற, “ஆஹ்.. ஆஹ்.. சஞ்சனா மெஸேஜ் செய்துட்டா ரம்யா. அவளுக்குமே மேக்கப் செய்ய போகணும்‌.’ என்று பேச, தோழியிடம் பேசினால் நேரம் கடத்த, துணை நடிகையோ புருவம் திருத்த பணத்தை நீட்டினாள்.

  “ஓகே சுவாதி.. நாளைக்கு நேர்ல பேசறேன்” என்று கூற, ரம்யா முன்பை விட முன்னேற்றம் அடைந்து உள்ளதை நினைத்து  அணைத்தாள் சுவாதி.
 
   ரம்யாவோ, பணத்தை வாங்கி துணை நடிகை மதுமிதாவை இன்முகத்தோடு வழியனுப்பி வைத்து தன் இருக்கையில் அமர்ந்தாள்.

கல்லூரியில் படித்த பொழுது பழகிய தனது, இரு தோழிகளை நினைவேட்டில் மீட்டெடுத்தாள்.

  ஒருத்தி சுவாதி. தொழிலதிபர் பைரவை மணந்து வாழ்வில் செட்டிலானவள். துளியும் இறைச்சியின் வாடையை நுகர, முகம் சுழித்து கடப்பாள். இன்று ஆட்டிறைச்சியை பதப்படுத்தி விற்கும் தொழிற்சாலைக்கு உரிமையுடையவள். கணவரின் தொழிலால் தான் அவளது வாழ்வில் ஆடம்பரமும் வசதியும் சிவப்பு கம்பளத்தில் ஏந்திக்கொண்டது. இல்லையேல் ரம்யாவின் துணைக்கு அழகுநிலையத்நில் பணிப்புரிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எல்லாம் காதல் படுத்தும் பாடு. சுவாதி-பைரவ் இருவரும் விரும்பி மணந்துக்கொண்டனர்.
 
  மற்றொருத்தி சஞ்சனா தற்போது அவளும் தீப்சரண் என்பவனை காதலித்து, அக்காதல் திருமணத்தில் முடிவடையும் விதமாக, அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் நிகழ போகின்றது.

தீப்சரண் ஒரு போலீஸ். எல்லா கேடித்தனமும் செய்பவள் சஞ்சனா. காதலையும் திருட்டுத்தனமாக செய்தவளே. அதுவும் போலீஸ்காரன் தீப்சரணை பற்றி எவ்வித கருத்தும் உரைத்திட முடியாது. ‘அவர் அப்படி தான்’ என்ற கோட்பாட்டில் சிக்காதவன்.

  தன்னிரு தோழிகளின் அடுத்தக்கட்ட வாழ்வு பிரகாசமாய் பளிச்சிட, ரம்யாவிற்கு தான் வாழ்வில் செட்டிலும் ஆகமுடியவில்லை‌, திருமணம், காதலென்றும் எதுவும் கிடையாது.

கல்லூரி படித்த பொழுது ஒருவனை காதலித்து இருந்தாள். ஆனாலும் ரம்யாவின் குடும்பத்தில் அவள் மூத்த பெண், அவளுக்கு பிறகு ஒரு தங்கை, தம்பி, என்றிருக்க, அவர்களை படிக்க வைத்து, வீட்டில் நிதிநிலைமை சமாளிக்க நேரம் சரியாக இருந்தது. காதலித்தவனும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவனே.
அதனால் அவனுக்கு தன் காதலை, தெரியப்படுத்தாமலேயே காதலை புதைத்து கொண்டாள். அவனுக்கு தன்னை ரம்யா என்பவள் விரும்பியது கூட தெரியாமலே போனது.

ரம்யாவுக்கு தாய் தந்தை எல்லாம் உயிரோடு இருந்தாலும், தந்தை இருந்தும் இல்லாத அளவிற்கே நடமாடுபவர். மதுகிருஷ்ணன் பெயரிலேயே புரிந்திருக்கும். மதுவை தன் பெயரிலும்  கையிலும் நிலையாக வைத்து கொள்பவர்.

தாய் ஆனந்தி ஓரளவு பரவாயில்லை. தந்தையை அடக்கி, நல்வழிப்படுத்த முயன்று தோற்றுப்போய் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, ரம்யா தரும் பணத்தை வைத்து வீட்டை கவனிப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றார். 

  தங்கை கவிதா, தம்பி விஷால், என்று இருவரின் படிப்பும், அதற்கான ஓட்டமும் ரம்யா வாழ்வில் செல்ல, சின்ன சந்தோஷமும், இளைப்பாறுதலும் இல்லாமல் ரம்யா எந்த கோட்டையை பிடிக்க செல்கின்றாளென்றே தெரியாமல் வாழ்வில் பயணித்தாள்.
சொல்லப்போனால் பித்தளை சமான் கருத்திருப்பது போல வாழ்வு.
  அதென்ன சமாளிக்க முடியாததா? எல்லார் வாழ்வும் ஒரு இடத்தில் தேங்கி நிற்கும் பச்சைப்பாசை பிடித்த வாழ்வில், மழை பெய்து தேங்கிய பச்சைபாசையை ஓடவைத்திடுமே. அந்த நாட்களுக்காக காத்திருக்கின்றாள்.

  ரிசப்ஷன் பெண் ரம்யா அருகே வந்து, “மேடம் நாளைக்கு இரண்டு மூன்று அப்பாயின்மெண்ட் மட்டும் தான்‌.” என்று சுட்டிக்காட்டி காட்டினாள்.
சரி நான் பார்த்துக்கறேன். ஏதாவது நடுவுல மாற்றம் வந்தா மெஸேஜ் பண்ணு” என்றாள்.
சில நேரம் இடங்கள் மாறும். வீட்டில் அழகு செய்ய அழைத்திருப்பார்கள். ஆனால் சட்டென்று சத்திரம் வர சொல்வார்கள்‌, பள்ளிக்கு வரக்கூறுவார்கள் சட்டென்று பள்ளி விழா நடக்கும் நாட்டியாலயம் மாற்றப்பட்டு அங்கு வரக்கூறுவார்கள். இவ்வாறு கடைசி நிமிடம் இடம் மாற தனது ஸ்கூட்டி எடுத்து அங்கே செல்ல மூச்சு முட்டும்.

நல்ல வேளை நாளைக்கான அப்பாயின்மெண்ட், ஒன்று இங்கே பக்கத்து தெருவில் கல்லூரியில் நடனமாடும் பெண்ணிற்கு சேலை கட்டி ஒப்பனை செய்ய வேண்டும். காலை எட்டு மணிக்கே அவளை தயார் செய்வதால் அதற்கேற்று சென்றாக வேண்டும்.
அடுத்து சுவாதி வீட்டிற்கு செல்ல வேண்டும். பத்து பதினோன்று என்று சென்றால் கூட சுவாதி வீடு தான்.
  மூன்றாவதாக ஒரு ரிசப்ஷன் பெண்ணிற்கு மண்டபம் சென்று அலங்காரம் செய்ய வேண்டும். அது மாலை என்பதால் நான்கு மணிக்கு சென்றால் போதும்.

நாளை ரம்யாவின் பணிக்கான அட்டவனை அவ்வளவே. அழகு நிலையத்தில் வரும் வாடிக்கையாளர்களை காலையிலிருந்து மாலை வரை துணைக்கு சேர்ந்து உதவியாளர் கயல்விழியே பார்த்துக்கொள்வாள். அதனால் பெரிதாக வேலைகள் தடைகளின்றி செல்லும்.

  இந்த அழகு நிலையத்தில் மூன்று பேர் வேலையில் இருக்கின்றனர்.
  அதுவும் முன்பு தனக்கு உதவியாக இருந்த ஆட்கள். அதனால் சம்பளம் எல்லாம் ஏதோ பார்த்து செய்வாள். மற்றபடி இந்த குறைவானா ஆட்களை வைத்துக்கொண்டே துணை நடிகைக்கு மேக்கப் செய்யும் அளவிற்கு முன்னேறியது எல்லாம் தொழில் சுத்தம் மட்டுமே.

ஓரளவு இப்பொழுது தான் ரம்யா கடனை அடைத்து, தங்கள் பொருளாதார நிதி நிலைமையில் போராடிக் கொண்டு மூச்சு விடும் அளவிற்கு உயர்ந்துள்ளாள். இன்னும் கூட தன்னிரு தோழிகளான சஞ்சனா, சுவாதி அளவிற்கு உயர வேண்டுமென்ற எண்ணம் உண்டு.

அதற்கு தான் கடுமையாக உழைக்கின்றாள்.
அவளது ஓட்டத்திற்கு ஓய்வுயில்லாத காரணத்தால், சற்று கிடைக்கும் நேரம் இந்த பால்கனியில் தலைசாய்வாள்‌.

இன்றும் அவ்வாறு சாய்ந்து இமை மூடியிருக்க, அவளது அலைப்பேசியில் நோட்டிபிகேஷன் சத்தம்.

‘யாரிது” என்று எடுத்து பார்க்க, “ஹே ப்யூட்டி… தூங்கும் போது அழகாயிருக்க” என்று குறுஞ்செய்தி அதிலிருந்தது.

ஒரு பெண்ணை அதுவும் அழகான பெண்ணை ‘ப்யூட்டி, ஸ்வீட்டி’ என்றால் அப்பெண் வானத்தில் மிதக்க வேண்டும். ஆனால் ரம்யா விஷயத்தில் அதற்கு எதிர்ப்பதமாக, “எவன் இவன் புதுசு புதுசா வந்து தொலையறான்.” என்று பார்த்து விட்டு போனை தூர வைத்து தனது அழகு நிலையம் இருக்கும் பால்கனியின் திரைசீலையை நகர்த்தி வலது இடது என்று யாரையோ தேடினாள்.

சில நாட்களாக ரம்யாவுக்கு ஏற்படும்‌ உணர்வு. தன்னை யாரோ பார்த்து பின் தொடர்வது. இந்த நம்பருக்கு அழைத்தால் அது பிரைவேட் நம்பர் என்று அழைப்பு செல்லவில்லை‌.

ஆனால் யாரோ தன்னிடம் நன்றாக விளையாடுவதில் எரிச்சலடைந்தாள்.

ஏனெனில் வரும் அனைத்தும் தன்னை ஏதோ உலக அழகி ரேஞ்சிற்கு புகழ்ந்து ஐஸ் மழையை கொட்டி, கடைசியில் சில்மிஷ பேச்சாகவும் இருந்தது.

ரம்யாவின் மனநிலையை பொறுத்து இந்த உரையாடலை ரசிப்பாள், அல்லது உபயோகமற்றதென்று கடப்பாள். இன்றோ சஞ்சனா கணவர் தீப்சரண் போலீஸ் என்பதால் இந்த விஷயத்தை அவளது நிச்சயதார்த்தம் அன்று சென்றால் தனிமைக்கிடைக்குமா நேரம் சொல்ல வேண்டும். நிச்சயம் நேரம் கிடைக்குமோ இல்லையோ என்ற ஐயமில்லை. சஞ்சனாவுக்கு அலங்காரம் செய்ய செல்ல வேண்டும். அப்படியே இந்த விஷயத்தை காதில் போட்டு விட்டால் விடிவு காலம் பிறக்கலாம்.
யாருக்கு வேண்டும் இந்த மன்மதலீலை பேச்சு? என்று சலிப்படைந்தாள்.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.

ஹாய்…

நான் எழுதும் கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவு தரும் அன்பான வாசகர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.‌

நீங்க கொடுக்கற கமெண்ட்ஸ் எனக்குள் வித்தியாசமா எழுது. ஆர்வம் தூண்டீம் விதமா கதையை வாசகருக்கு கொடு. வீட்டில் அலுவலகத்தில் இருக்கும் எண்ணற்ற வாசகர்களுக்கு உன் கதை ஒரு புத்துணர்ச்சியும், பொழுதுபோக்கும் விதமாகவும் அமைய வேண்டும். அவர்களோட பயணிக்க கதை எழுது இப்படி தான் நான் என்னை செதுக்கி நேரம் ஒதுக்கி எழுதறேன். இப்பவும் தனிதனி நன்றி சொல்ல நேரமில்வை என்றாலும் உங்களுக்கு ஒரு கதையோட வந்துட்டேன். உங்களுக்கு நான் நன்றி சொல்லும் விதம் இது தானே.?!

தேநீர் இடைவெளியில்…. இது எந்த மாதிரி வகை என்று யோசித்து சொல்லுங்க. எப்பவும் போல ஆதரவும் தாங்க. Register செய்யாம வாசிக்கறவங்க அதை செய்துட்டு வாசிங்க. அப்பறம் கமெண்ட்ஸ் கொடுக்கலாம்.

🙏💗

11 thoughts on “தேநீர் இடைவெளியில்…-1”

  1. Love romantic mathiri therila! 🤔🤔🤔 Friendship story mathiriyum therila! 🤔🤔🤔🤔 Oruvela break timela namma appadiye palasu ethavathu ninachi paarthu ninaivugala meetedupome appadiya???? Illati kodaikaala saaral mathiri appapo vanthutu pora relationship mathiri ya??? Thappa iruntha sorry sis

  2. இப்பதானே ஆரம்பம் ஒரு ரெண்டு UD கண்டுபிடித்து விடலாம். கண்டிப்பாக ஒரு சின்ன காதல் இருக்கும், பெண் முன்ற்றம் பற்றிய கதையா ? Guess Only, All the very best sis for new story

  3. Excellent story sis. Our daily life story sis. We can see such a beautiful parlour ladies in our day to day life. Keep rocking sis. Intresting

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *