அத்தியாயம்-18
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
இரண்டு மூன்று நாட்கள் கடந்திருந்தது. மணிமேகலை சௌந்திராஜன் இருவரும் மகள் வீட்டிலிருந்து வெளியேறியிருந்தனர்.
சதா பித்து பிடித்தது போல மணிமேகலை இருக்க, மயங்கி சரிந்தார்.
அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றார் சௌந்திராஜன். பொதுவாக உடலை ஆராய்ந்து மருந்து மாத்திரை தந்தார். ஜீவனேயின்றி மணிமேகலை மாத்திரை சீட்டை வாங்கி வர, அப்பொழுது தான் அங்கே மனநல மருத்துவர் என்ற பலகை கண்ணில்படவும், தயக்கமாய் இருவரும் பார்த்து கொண்டனர்.
“நம்ம பாரதிக்கு பைத்தியம் பிடிச்சிருக்குமோ?” என்று கணவர் கேட்க, மணிமேகலையோ “இத்தனை வருஷத்தால அவ நம்மிடம் கோபப்பட்டு அமைதியா இருந்திருக்கா. அன்னிக்கு மாதிரி ஆக்ரோஷமா கத்தலை. அவளுக்குள்ள என்னமோ செய்யுதுங்க. எதுக்கும் எதையும் யோசிக்காம டாக்டரை பார்க்கலாம்” என்றார்.
இருவரும் மனநல மருத்துவரிடமும் பெயரை தந்துவிட்டு அமர்ந்தனர்.
எப்பொழுதும் பேஷண்ட் பெயரை கேட்க, பாரதி இல்லாததால் தங்கள் பெயரை தந்தனர்.
சௌந்திராஜன் என்று பெயர் பதிவு செய்து பதினைந்து நிமிடம் கழித்து உள்ளே போக கூறினார் அந்த பெண்.
இருவருமாக அறைக்குள் சென்றனர்.
அங்கே நர்மதா மனநலமருத்துவர் பலகை இருந்தது. இதுவரை இளம் வயதில் உள்ளவர்கள் மட்டுமே மனநலம் சார்ந்து தங்கள் நிலையை பகிர்ந்து ஆலோசனை பெற்று அதற்கான தீர்வை அடைவார்கள். இன்று மூத்த தம்பதியர்கள் வரவும் அமர வைத்து என்ன ஏதென்று வினவ, இருவரும் தயங்கினார்கள்.
“யாருக்கு என்ன பிராப்ளம்மா? பேஷண்ட் பெயர் சௌந்திராஜனா?” என்று கேட்க அவசரமாய் “இல்லைங்க… என் பொண்ணுக்காக வந்தோம்.” என்றார்.
“உங்க பொண்ணுக்கு என்ன?” என்று கேட்க, மீண்டும் தயக்கம்.
“சார்… மேம்… இங்க பாருங்க.. இது மனநல மருத்துவமனை. சாதாரணமாவே ஒரு பேஷண்டோட ஹிஸ்ட்ரி வெளியே போகாது. அப்படியிருக்க இது மனதை திறந்து தங்கள் பிரச்சனையை சொல்லற இடம். நீங்க பேசுவது இந்த நாலு சுவத்தை தாண்டி போகாது. யாருக்கு என்ன பிரஞ்சனைனு தெளிவா சொல்லுங்க” என்று புன்னகை முகமாக கூறினார் டாக்டர்.
மணகமேகலைக்கு இத்தனை நாள் யாரிடமும் பகிராத வலியும், பாரதியை பற்றிய வேதனையும் இருக்க, கண்ணை துடைத்து கூற துவங்கினார்.
“என் பொண்ணு பெயர் பாரதிம்மா. பி.இ படிக்க வச்சோம். ஐடில வேலை செய்யறா. நல்ல வேலை நல்ல சம்பளம். அவ எங்களுக்கு ஒரே பொண்ணு. நல்லபடியா பார்த்துக்கிட்டோம்” என்று ஆரம்பித்து நிறுத்தினார்.
ஐடி என்றதும் வேலையில் ஸ்டரஸ், அல்லது ஏதேனும் தீய பழக்கத்திற்கு அடிமையானாளா? அல்து காதல் கீதல் என்று லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்கின்றாளா?’ என்று மெதுவாக கேட்கவும், “அய்யோ.. அதெல்லாம் என் மக தப்பு செய்ய மாட்டா. ரொம்ப நல்ல பொண்ணு. அவளுக்குன்னு நாங்க ஒரு வரன் பார்த்தோம். அவர் ஒரு நாள்….’ என்று தொடர்ந்து யாரோ ஒருவனால் கெடுக்கப்பட்டது முதல், கடைசியாக சந்தித்த நிகழ்வு வரை கூறினார் மணிமேகலை.
நர்மதாவோ “இப்ப அவங்க தனியா தான் இருக்காங்களா?” என்று கேட்டதும், “ஆமாம்மா… தனியா ஒரு ஸ்லம் ஏரியா மாதிரி இருக்கு. அங்க இருக்கா. அது ஏதோ அந்த தெருவுல இருக்கறவங்களில் ஒருத்தங்க காப்பாற்றியதால அவங்களிடம் உதவி கேட்க போய், அதுவும் முடியாம போனதால தனியா அவங்களிடமே தனியா தங்க வீடு கேட்டு அங்க இருக்கா.
நாங்க ஓரளவு வசதியானவங்கம்மா. இப்படி அங்க இருக்கணும்னு அவசியம் இல்லை.
அதோட அவ நடந்ததை மறந்து நாங்க பார்த்தவரையே கல்யாணம் பண்ணி வாழலாம். ஆனா அவ பைத்தியம் மாதிரி கத்திட்டா. இதுவரை அவ அப்படி கத்தியதேயில்லை.” என்றார்.
நர்மதாவோ நிதானமாக, “அம்மா.. உங்க பொண்ணுக்கு எதுவும் இல்லை. சொல்லப்போனா அவங்க தன்னை தன் மனதை, நடந்த விபரீதத்திலயிருந்து திசை திருப்ப, தனக்கான சூழலை மாற்றிக்கிட்டு புது இடத்துல இருக்க முயற்சி பண்ணறாங்க. அதுக்கு தான் அவங்க தனிமையை நாடறாங்க. இந்தளவு ஒரு பொண்ணு தன்னை மாத்திட்டு நீங்க பார்த்த பையனிடம் பேசியிருக்கானா, அவளே கொஞ்ச நாளில் உங்களை தேடி வருவா. நீங்க அவளை கஷ்டப்படுத்தாதிங்க. இப்பவே கல்யாணம், மாப்பிள்ளை, வீட்டுக்கு வாவானு குடைச்சல் தராதிங்க
அவங்களா வருவாங்க. மேபீ.. அவங்களை பொறுத்தவரை நீங்களுமே அவங்களை காயப்படுத்தியிருக்கிங்க. போலீஸுக்கு போகாம தவிர்த்ததால் உங்க மேலயும் கோபம் இருக்கு.
அதெல்லாம் அவங்க மறந்து வாழ வித்தியாசமான இடமா அந்த ஸ்லம் ஏரியாவை சூஸ் பண்ணிருக்கலாம். இடத்தை வைத்து யோசிக்காதிங்க. என்னை பொறுத்தவரை உங்க பொண்ணுக்கு ஆலோசனை தரணும்னா அவங்க கல்யாணமே வேண்டாம்னு சொல்லறாங்க பாருங்க அந்த மனநிலையை மாற்ற மட்டும் இரண்டு மூன்று கவுன்சீலிங் தேவைப்படலாம்.
இந்தளவு மனமாற்றத்தை தானா யோசித்து தெளிவா இருக்கற பொண்ணுக்கு அதுக்கூட தேவைப்படாது.
ஆக்சுவலி மாத்திரையும் மருந்தும், ஏன் கவுன்சீலிங்கும் உங்களுக்கு தான் தேவைப்படுது. உங்க பொண்ணிடம் நீங்க எப்படி அணுகறதுனு உங்களுக்கு தான் நான் சொல்ல வேண்டியது இருக்கு.” என்று கையில் இருந்த பேனாவை தட்டி கூறினார்.
மணிமேகலை சௌந்திராஜன் இருவரும் விழிக்க, “சம்பவம் நடந்து முழுசா மூன்று மாதத்துக்கு மேல இருக்குமா? ஒரு ஆறுமாசமாவது அவங்களை தனியா ஃப்ரியா விடுங்க.” என்றார்.
“வீட்ல பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலையா? அவ எங்க இருக்கா என்னனு கேட்பாங்க டாக்டர்.” என்றார் சௌந்தர்ராஜன்.
“அட பொய் சொல்ல தெரியாதா. எவ்ளோ பெரிய உண்மையை மூடி மறைச்சி இருக்கிங்க. சின்ன சின்ன பொய் தானே. ஆபிஸ் மூலமா வெளியே ஆஃபர் வந்திருக்கு. கல்யாணம் ஒரு வருடம் தள்ளி போட்டிருக்குனு ஏதாவது சொல்லுங்க.” என்று கூற, மணிமேகலை கையை பிசைந்து கவனித்தார்.
“இங்க பாருங்க… உங்க பொண்ணு நீங்க சொன்னதை வச்சி, நான் கொடுக்கற ட்ரீட்மெண்ட் என்ன தெரியுமா?
நடந்த கசப்பான சம்பவத்துல இருந்து வெளிய வரணும். அவங்க ஆல்ரெடி அப்படி தான் முயற்சி செய்யறாங்க.
புது மனிதர்கள் புது இடம் தேடி அவங்க பாதுகாப்பா இருக்கணும். மனசு ரிலாக்ஸ் பண்ணணும். அவங்க உங்களையும் சேர்த்து தான் புதுமனிதரை புது இடத்துல ரிலாக்ஸா சேஃப்பா இருக்காங்க.
நடைமுறை வாழ்க்கையில் பாதிக்கப்படாம மூவ் ஆக பழகணும். உங்க பொண்ணு வேலைக்கு போறாங்க, நார்மல் லைஃப்ல அவங்க இருக்காங்க.
தனக்கு நடந்ததுல தன் மேல தப்பில்லைனு அவங்க நம்பணும். அப்படி தான் அவங்க ஆணித்தரமா சொல்லறாங்க. நீங்களும் மத்தவங்களும் தான் அவங்களை விக்டிமா மாத்தறிங்க.
உங்க பொண்ணு தெளிவா இருக்கு. பட்… கல்யாணமே வேண்டாம்னு சொல்வது சரியில்லை. கொஞ்ச நாள் கழிச்சு யோசிக்கலாம் ஒருவேளை அவங்களுக்கு பிடிச்ச மாதிரி யார் மேலையாவது விருப்பம் வந்தா இந்த தாட்ஸ் மாறும். கல்யாணம் பண்ணுவாங்க.
நீங்க பொறுமையா இருக்கணும். காத்திருக்கணும், தைரியமா உங்க பொண்ணோட மனதில் என்ன இருக்குனு தெரிந்துக்க பாருங்க. முடிந்தா அதற்கேற்ற மாதிரி முடிவெடுங்க. சிம்பிள்.” என்றதும் மணிமேகலை அபைதிகாத்தார்.
சௌந்திர்ராஜனும் ஒப்புதலாக தலையாட்டினார். இருவரும் வெளியே வரும் போது இரண்டு மணிக்கு மேலாக அங்கே பேசியதாக நேரம் காட்டியது. பீஸ் கொடுத்துவிட்டு நகர்ந்தனர்.
மணிமேகலை அமைதியாக வர, சௌந்திராஜனோ “இந்த பிரஷாந்த் வீட்டு ஆளுங்க ரொம்ப நல்ல கேரக்டர். அவருமே விஷயம் தெரிந்த பிறகும் கல்யாணம் பண்ண சம்மதிக்கறார். அதுவொண்ணு தான் உறுத்துது மணிமேகலை. இந்த வரன் போனப்பிறகு திரும்ப இந்தளவு வசதி மனுஷாளுங்க கிடைப்பாங்களா.” என்று வருந்தினார்.
மணிமேகலையோ எதுவும் கணவரிடம் பேசவில்லை. மனதில் இருந்த அழுத்தம் தாண்டி அசதியாக உணரவும் ஒய்வெடுத்திட சென்றார்.
சௌந்திரராஜன் குறுக்கும் நெடுக்குமாக நடக்க, காலிங் பெல் அடித்தது.
மணிமேகலையை பார்வையிட்டார். அவர் இமை மூடி இருக்க, கதவை திறந்தார்.
ரஞ்சித்தும் அவனது அப்பா அம்மா தங்கை என்று முன் வந்திருந்தனர்.
யார் நீங்க?” என்று கேட்டதும், ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு “சொல்லறோம் உங்களை பார்க்க தான் வந்தோம் உள்ள வரலாமா?.” என்று கூற, சௌந்திராஜன் வழிவிட்டார்.
உட்காருங்க” என்று மனைவியை எழுப்ப முயல, ரஞ்சித்தின் தாய் தந்தை மற்றும் அவன் தங்கை கூட இருக்கையில் அமர்ந்தனர்.
ரஞ்சித் சுவரை போல நின்றான்.
“உட்காருங்க தம்பி” என்று கூற “இல்லைங்க சார். பேசினப்பிறகு பார்ப்போம்” என்றவனை மணிமேகலை “யாருங்க இவங்களாம்” என்று கேட்டு வந்தனர்.
“தெரியலைம்மா” என்று கூறவும், “நாங்க பாரதி பத்தி பேச வந்தோம்” என்றதும், மணிமேகலை சௌந்திராஜன் இருவரும் ஏதோவொரு பயத்தில் பார்த்துக்கொண்டனர்.
மகளை பற்றி ஏதாவது கேட்டால் என்ன சொல்வது? முதலில் யார் இவர்கள்?
“நீங்க யாரு… பாரதியை பத்தி என்ன பேசணும்.” என்றார் சௌந்தர்ராஜன்.
“என் பெயர் சாந்தகுமார் சார். இவ என் மனைவி திவ்யா. என் பொண்ணு சுவாதிகா. என் பையன் பெயர் ரஞ்சித்.” என்று அறிமுகப்படுத்தினார். பாரதி ரஞ்சித் என்ற பெயரை கூட தந்தையிடம் கூறியதில்லை அப்படியே இடைப்பட்ட நாளில் கூறியிருந்தாலும் அவர் கவனித்தாரா என்பது சந்தேகம். அதனால் அதற்கென்ன. என்பது போல பார்த்தார். சௌந்திராஜனுக்கு இருக்கும் கவலையில் இவர்கள் யாரோ என்ற எண்ணம்.
சாந்தகுமார் மெதுவாக முன் வந்து “சார் என் பையன் ரஞ்சித் உங்க பொண்ணு பாரதியை லவ் பண்ணறான். கொஞ்ச நாள் முன்ன நீங்க உங்க பொண்ணு பாரதிக்கு பையன் பார்த்து பொண்ணு பார்க்கற நிகழ்வு எல்லாம் நடந்ததை சொன்னான்.” என்று ரஞ்சித்தை கண்டார்.
சௌந்திரராஜனுக்கு லேசாக சந்தேகம் முளைத்தது. ஒருவேளை பாரதியை நாசம் செய்தவன் இவனா? என்று.
ஆனால் ரஞ்சித் தோற்றம், உடை, அவன் அணிந்திருந்த நகைகள் பிராண்ட் ஷூ, பிராண்டட் வாட்ச் என்று அவன் பணக்காரன் என்று சுட்டிக்காட்டியது.
‘இல்லை… மகளை நாசம் செய்தவன் இவனாக இருக்காது” என்று எண்ணி, “சார் லவ் பண்ணினாரா? பாரதிக்கு தெரியுமா?” என்று கேட்டார்.
“பாரதியைக்கு தெரியும். அதோட பாரதி இப்ப… இங்க.. உங்களோட இல்லாததுக்கு காரணம் ரஞ்சித் தான்” என்றார் திவ்யா.
மணிமேகலையோ, “அப்படின்னா… அப்படின்னா… என் மகளை கெடுத்தவன் இவன் தானா?” என்று ரஞ்சித் காலரை பிடித்து கோபமாய் நின்றார்.
சௌந்திராஜனோ “மணிமேகலை… வார்த்தை விடாத.” என்று கூறினார்.
“இல்லைங்க… உங்க மனைவி சொல்றது சரி தான். ரஞ்சித் தான் அந்த காரியத்தை செய்தது.” என்று திவ்யா கண்ணீர் தளும்ப கூறினார்.
சௌந்திரராஜன் அதிர்ந்தவரோ, “என்ன தைரியம்? என் மகளை கெடுத்து குப்பைத்தொட்டில போட்டுட்டு… இப்ப எங்க முன்ன வந்து நிற்கறிங்க. நாங்க இன்னும் உயிரோட தான் இருக்கறோமா இல்லையானு பார்க்க வந்திங்களா?” என்றார் கோபமாக.
”ஏன்டா… மனிஷனா மிருகமா நீ. என் மகளை கொதறி கடிச்சி வச்சியிருக்க நாயே. என் ஒரே பொண்ணுடா.. அவளை போய் நாசம் பண்ணிட்டு என்ன தைரியம் உனக்கு” என்று கையில் அகப்பட்ட பொருளை கொண்டு அடிக்க ஓடினார்.
“அம்மா” என்று சுவஸ்திகா அலற, திவ்யாவோ “அடிங்க.. கொல்லுங்க.. என்னவேண்டுமனாலும் பண்ணுங்க. அதுக்கு தான் கூட்டிட்டு வந்திருக்கோம்.
உங்க கோபம் குறையற வரை ரஞ்சித் இந்த இடத்தை விட்டு நகர மாட்டான்.
ஆனா… அவன் தப்பு செய்ததை ஒத்துக்கிட்டான். உங்க மக பாரதி நேர்ல வந்து திட்டி தீர்த்து, எங்களிடம் எங்க மகனை பத்தி சொல்லிட்டு தான் போனா. இப்படியொரு மகனை பெத்ததுக்கு அசிங்கப்படறேன். கோர்ட் மூலமா தண்டனை வாங்கி தர மீடியலையே என்ற வருத்தம் உங்க பொண்ணு பாரதிக்கு இருக்கலாம். ஆனா உங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கணுமோ அதை கொடுங்க. என் பையனை தண்டிக்க உங்களுக்கு முழு உரிமை இருக்கு” என்று அழுதாலும் பேசியும் முடித்தார் திவ்யா.
மணிமேகலை அங்கிருந்த ஒளிவிளக்கால் ரஞ்சித் மண்டையை அடித்து, கை வலிக்கும் அளவுக்கும் அடித்து ஓய, சௌந்திராஜன் செருப்பை கழட்டி விளாசினார்.
அவ்விடமே கலவரமாகி மயான அமைதியாகும் வரை ரஞ்சித் அசையவில்லை.
வீட்டிலிருந்து வரும் பொழுதே சில முடிவுகள் எடுக்கப்பட்டு தான் அவர்களும் வந்திருந்தனர்.
சாந்தகுமாரோ அமைதியாகவும், “பாரதியை எங்களுக்கும் பிடிச்சிருக்கு. ரஞ்சித் செய்த தப்பை நியாயப்படுத்த நாங்க வரலை. அவன் செய்த தப்பை சரிப்படுத்த நினைக்கறோம். பாரதியை நாங்க மருமகளா பார்க்கறோம். உங்களுக்கு விரும்பம்னா எங்க மகனுக்கே கட்டி வைப்பிங்களா?” என்று கேட்டார்.
சௌந்திரராஜனும் மணிமேகலையும் அதிர்ந்து போனார்கள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Ipo nallavan mari vanthu kalyanam panikirenu sonna panipala ava manasula ena iruku theriya venam avaluku una pidichi iruntha apove samatham solli irupale oru naal kuda nee ava munnadi nallavana illaye
Super super. Ranjita u deserve this punishment. Again good twist. Now bharathi will accept ranjith? Intresting sis.
Super super super super super super super super super super super super super super super super
Ava othukka maata ethukku
Interesting
Ranjith parents thoughts are not acceptable .
மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 18)
அட ராமா ! இது இன்னும் கொடுரமாச்சே…ஏற்கனவே நடந்த கொடுமையை எதிர்த்து போராடி, முட்டி மோதி ஒண்ணும் பண்ண முடியாம கடைசியில மறந்தவது தொலைக்கத்தான் பாரதி வீட்டை விட்டு வெளியிலப் போய் அந்த நிலம் ஏரியாவிலயே தங்கியிருக்கா ..
இதுல இது வேறயா ?
கெடுத்தவனையே கட்டினால் தப்பை சரி பண்ணிடலாமா..?
இது என்ன லாஜீக் டா..?
அப்படின்னா அந்த நேர வேதனைகள், அலறல்கள், நோவல்கள், பரிதாபங்கள், அலறல்கள், அருவருப்புகள், கண்ணீர் துளிகள், அசிங்கங்கள்… இதெல்லாம் திருமணம் என்கிற ஒரு சடங்கே காம்ப்ரமைஸ் பண்ணிடுமோ ?
அட என் புத்திசாலிங்களா..!
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super sis nice epi 👌😍 Ranjith vandhadhum therinja bharadhi enna solla poralo🙄
Nice going
Nice