அத்தியாயம்-20
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
வட்டிகடை ஆனந்தராஜ் தட்டு தடுமாறி எழுந்து நின்றவனோ, “ஏன்டா பரதேசி… குப்பையை அள்ளுற நாயே. என்னையே தள்ளிவிட்டுட்டியா? இனி என் வீட்ல என்னடா வேலை உனக்கு? வீட்டை உடனடியா காலி பண்ணு.
இங்க பாருடி…. நீயும் உடனே வீட்டை காலிபண்ணு. இல்லையா… என்னை அட்ஜஸ்ட் பண்ணிட்டு இரு. என் வீட்ல வாடகைக்கு இருந்துக்கிட்டு என்னையே தள்ளி விடுவிங்களா? என் ஆசைக்கு இணங்கறவங்கள்ல காசே இல்லாம கூட குடிவச்சிப்பேன். இப்படி அடம் பிடிக்கற கழுதைங்க எனக்கு தேவையேயில்லை. நான் பார்க்காத பொண்ணுங்களா?!” என்று பேசினான்.
பாரதியோ வாடகைக்கு இருக்கும் ஆட்களை வீட்டு உரிமையாளர் உடனடியாக வீட்டை காலி செய்ய இயலாதென்றும், அப்படியே காலி செய்ய வைக்க முயன்றால் முன்கூட்டியே தகவல் அளித்திருக்க வேண்டும். ஏதாவது நோட்டீஸ் போர்டாவது கொடுத்திருக்க வேண்டுமென்று பாரதி அவளுக்கு தெரிந்த நீதியை கூறினாள்.
“இந்தாம்மா… அதெல்லாம உங்க பணக்கார வர்க்கத்துக்கு. இங்க நான் வச்சது தான் சட்டம். உடனே வீடு காலி பண்ணலை. நான் வூட்டான்ட வந்து மல்லாந்து படுத்துப்பேன்.
நீ வெளியே போனு சொன்னாலும் கேட்க மாட்டேன். ஏன் குடிச்சிட்டு நடுவூட்ல வாந்திக் கூட எடுப்பேன். ஒழுங்கு மரியாதையா இங்க இருக்கறதா இருந்தா அட்ஜஸ்மெண்ட் பண்ணு. இல்லையா இரண்டு நாள்ல வீட்டை காலி பண்ணு. சரவணா உனக்கும் தான்.” என்று கூறிவிட்டு கோபமாய் சென்றான்.
விமலாவோ அனிதா அவசரமாய் வந்தவர் அனிதாவிடம் விவரம் கேட்க அவளடைந்த அனுபவம் இருந்ததால், “அந்த ஆனந்தராஜ் அண்ண நீயும் அண்ணாவும் இல்லாதப்ப பின் வாசல் தாழ்பாள் சரியில்லாததால அந்தபக்கமா வந்து, எனனை வந்து தொட்டு தொட்டு பேசுச்சும்மா. நம்ம பாரதி அக்கா ஏன் உம்முனு இருக்கனு கேட்கவும், பாரதி அக்காகிட்ட கூட சொன்னேன். அது நம்ம அண்ணாகிட்ட சொல்லிச்சு. அண்ணா கூட தாழ்பாள் எல்லாம் மாத்துச்சு.
இப்ப பொசுக்குன்னு அந்தக்கா வீட்டுக்கு போய் அவரிடம் ஏதோ வம்பு பண்ணிருக்கார். நம்ம அண்ணா போய் திட்டவும் கலாவோட சேர்ந்து வந்தவ தானேனு நக்கலா பேசவும் அண்ணா தள்ளி விட்டுயிருக்கு போல. இப்ப வீட்டை காலி பண்ண சொல்லிட்டு போயிட்டார் ஆனந்தராஜ் அண்ணா” என்று கூறிமுடிந்தாள்.
இதே விமலா முன்பென்றால், ‘யாரோ ஒருத்திக்கு பிரச்சனைனா உனக்கென்ன? என்று கூறியிருக்கலாம்.
மகளிடமும் சில்மிஷம் செய்ய முயன்று பாரதியிடமும் கைவரிசை காட்டியதில் கோபம் உண்டானது.
ஏழை என்பதால் இந்த விஷயத்திலும் பொறுத்து போக முடியுமா? அதுவும் சின்ன பெண்ணிடம் தொட்டு பேசியிருக்கின்றானாமே.
விமலாவுக்கு சுறுசுறுவென்ற கோபம் வந்து, “அந்த வட்டிக்கடை நாய் என்னடா காலி பண்ண சொல்லறான். நாம காலி பண்ணுவோம். இந்தா… ஒரு ரூம் கிச்சன் சிமெண்ட் தரை, வீட்டுக்கு வெளிய பாசை பிடிச்ச பாத்ரூம். பின் வாசல் தாழ்பாள் ஓங்கி உதைச்சா திறந்துக்கும். இப்படியிருக்கற வீட்லயே வாழ தெரியறப்ப, வெளிய இதை விட மோசமாவா வாழப்போறோம். நீ உனக்கு தெரிஞ்சவங்களாண்ட சொல்லி வை. நான் எனக்கு தெரிந்தவங்களாண்ட சொல்லி வைக்கிறேன்.
பொட்டப்புள்ள மேல கை வச்சிட்டு திமிரா வேற பேசுவானா அந்த ஈத்தரை” என்று விமலா வாயுக்கு வந்த வார்த்தையால் வசைப்பாடினார்.
பாரதியோ சரவணனை பார்த்து, “அவர் என்னை தப்பா அணுகும் போது, கலா தானே கூட்டியாந்தா. நீ என்ன யோக்கியமான்ற விதத்தில் பேசினார். ஏன் அப்படி பேசினார்” என்று சந்தேகத்தை கேட்டாள்.
சரவணன் கூற வரும் முன், விமலா பாய்த்து “அட… கலா முன்ன அவ புருஷன் கூட இருந்தா. இப்ப எவன் கூடவோ வெப்பாட்டியா கிடக்கா. அதுக்கு தான் அந்த வட்டிக்கடை அப்படி பேசினான்.” என்றார்.
“வெப்பாட்டியா?” என்று திகைத்தாள்.
“அய்யோ அம்மா… எல்லாரும் பேசற மாதிரி அந்த அக்காவை தப்பா பேசாத.” என்று அன்னையிடம் உரைத்துவிட்டு, “கலாக்கா… அதோட புருஷனை விட்டுட்டு வேறொருத்தன் கூட வாழுதுங்க. ஆனா அதுல அது தப்பு எதுவும் இல்லை.
புருஷன்காரன் கலா அக்காவையே முதலா போட்டு தொழில் பண்ண பார்த்தான். தினம் ஒருத்தனை கூட்டிட்டு வந்து படுக்க சொல்லி மிரட்டியிருக்கான். அந்தக்கா அந்த தப்பை செய்ய மறுத்துச்சு. ஆனா அடிச்சு உதைச்சு வியாபாரம் பார்த்தான். மனசுக்கு பிடிக்காம கலாக்கா வாழறப்ப, மெத்து வீடு போட்ட வீட்ல இருக்கறவர் அடிக்கடி கலா அக்கா வீட்டுக்கு போக, ஒரு நாள் வெப்பாட்டியா வச்சிக்க கேட்டிருக்கார். வேற வேற பொண்ணை தேடி போனா நோய் வந்துருமாம்.
அதுக்கு கலா அக்கா, வெப்பாட்டியா இருந்துக்கறேன். ஆனா நான் என் புருஷனை விட்டு வர்றேன் என்னை காலம் முழுக்க உன் கூட மட்டும் பாயை விரிக்கறேன்னு பேரம் பேசவும், அவரும் சம்மதிச்சிட்டார்.
புருஷனோட இருந்து பலரோட படுத்து கெட்ட பெயர் எடுக்கறதுக்கு பதிலா, வெப்பாட்டியா ஒருத்தனுக்கு முந்தி விரிச்சிக்கறேன்னு இருக்கு.
இங்க பலருக்கும் கலாக்காவோட புருஷன் செய்த காரியம் தெரியாது. அதனால் மத்தவங்க பார்வைக்கு புருஷனை விட்டுட்டு மெத்த வீட்டு ஆளுக்கு வெப்பாட்டியா இருக்கானு பேசிப்பாங்க.
மத்தபடி அந்தக்கா மனசால சொக்கதங்கம்.
இந்த ஆனந்தராஜ் பார்வைக்கு கலாக்கா எல்லாம் இளப்பமா தெரிய, அவங்க மூலமா வீடு தேடி வந்த உங்களையும் அப்படி பேசி கையை பிடிச்சிட்டான். அந்தக்கா நல்ல அக்கா” என்று விவரித்தான்.
ஒருவிதத்தில் கலா அக்காவின் மனமும் இவளை போலவே. எருத்தனுக்கு ஒருத்தியா இருக்கேன்னு வெப்பாட்டியா வாழ்ந்தாலும் உண்மையா ஒருத்தனுக்கு வாழணும்னு மத்தவங்க பேச்சை பொருட்படுத்தாம வாழறாங்க’ என்று பெருமிதமாக தான் உணர்ந்தாள்.
விமலாவோ “அதானா விஷயம். பார்றேன் இது தெரியாம அந்த கலாவை பார்த்தா மூஞ்சை திரிப்பேன்.” என்று கூறியவர் பாரதி கையை பிடித்து, “ஏங்கண்ணு… நீயும் வீடு காலி பண்ண போற. எங்க போவ?” என்று கேட்டதும், “தெரியலை ஆன்ட்டி. ஏற்கனவே அப்பா அம்மா இங்க வந்து ஏதாவது சொல்லிட்டே இருக்காங்க. எனக்கு வுமன்ஸ் ஆஸ்டல் தான் பார்க்கணும்” என்றாள். சரவணனோ ‘அத்த செய்யுங்க’ என்பது போல பார்வையிட்டான். அடுத்த வினாடி, “ஏங்க ஹாஸ்டலுக்கு போறதுக்கு பதிலா உங்க வூட்டுக்கே போலாமே. என்ன தான் பயம்? பிரச்சனைகுரியதையே ஒரு கை பார்த்திங்க. அவங்களோட இருக்கவும் பாருங்க.” என்று ஆலோசனை தந்தான்.
பெற்றவர்களை நினைவுப்படுத்தவும் பாரதிக்கு கோபம் தான் வந்தது.
பிரஷாந்த் வந்து பேசவும் காலில் விழுந்து கல்யாணம் செய்து வைக்க நினைத்தார்கள் போல. பிரஷாந்த் பேச்சு அவனுக்கும் மற்றவருக்கும் சரியாக இருக்கலாம். பாரதிக்கு எரிச்சலை தந்தது. ஒருவேளை முன்பே பிரஷாந்த் அவன் மலேசியா ட்ரிப் பற்றி கூறியிருந்தால் இப்படி தோன்றியிருக்காது.
அதென்னவோ பிரஷாந்த் தனக்கு சரியானவனாக காட்டிவிட்டு, இந்த கடவுள் வில்லங்கமான மறுப்பாக தன் மனதில் செலுத்தியதில் பிரஷாந்த் மீதான ரசனை தற்போது துளியும் இல்லை.
அன்றைய நாள் ஏதேதோ எண்ணங்களுடன் கழிந்தது.
அடுத்த நாள் ஞாயிறு அதுவும், போனிலேயே ஹாஸ்டலில் இடம் பார்த்தாள்.
ஒரு புறம் ‘பெற்றவரை தேடி செல்’ என்றது. மறுபுறமோ, முதலில் ‘அவங்க என்னை கற்பிழந்தவளா பார்ப்பதை நிறுத்தணும்.
நான் சுத்தமானவள், முன்பிருந்த அதே மகள்’ என்ற கோணத்தில் பார்த்து தொலைக்க மாட்டேங்கின்றனரே. கற்பு என்பது மனசு சம்பந்தப்பட்ட ஒன்று. உடலை சார்ந்ததது அல்ல என்று எத்தனை முறை கூறுவது?
பொழுது சொடக்கிட்டு முடிக்கும் அளவிற்கு விரைந்து செல்ல, அடுத்த நாள் வேலைக்கு செல்ல ஆயத்தமானாள்.
அனிதாவுடன் தான் பேருந்து நிலையம் வரை நடந்தாள்.
“என்னால உங்களுக்கும் கஷ்டமா அக்கா?” என்று கேட்டாள்.
“என்ன கஷ்டம்?” என்று பாரதி விழிக்க, “இல்லை… நான் பாட்டுக்கு ஆனந்தராஜ் அண்ணாவை பத்தி உங்களிடம் சொல்லாம இருந்தா, உங்களுக்கு அவரை பத்தி தெரியாது. அண்ணாவும் தாழ்பாள் போட்டிருக்காது. அந்த ஆனந்தராஜ் அண்ணா அவர் எங்க வீட்டுக்கு வந்து என்னை சீண்டிட்டு போயிருப்பார். தாழ்பாள் போடவும், அங்க வந்து உங்களை சீண்டி, இப்ப வீட்டை வேற மாத்தறதா போயிடுச்சே.
நான் பேசாம இருந்திருக்கும். இப்ப அம்மாவும் அண்ணாவும் வீடு தேடி அலையுறாங்க. இன்னிக்கு இரண்டாவது நாள். அந்த ஆனந்தராஜ் மூனு நாள் தான் தவணை தந்ததா அம்மா காத்தால புலம்புச்சு. அண்ணாவும் சாயந்திரத்துக்குள்ள பார்க்கறேன்னு உம்முனு போச்சு.
எல்லாம் என்னால தான். என் கஷ்டத்தை நான் மறைச்சிருக்கணும்” என்றாள்.
பாரதியோ “இங்க பாரு.. முதல்ல அந்த பொறுக்கிய அண்ணானு சொல்லறதை நிறுத்து. அடுத்து இந்த மாதிரி விஷயத்தை ஊக்குவிப்பது போல அமைதியா கடந்துட முடியாது. அன்னிக்கு உன் தோளை தட்டான் கன்னத்தை தொட்டான்னு நீ நினைக்கலாம். அடுத்து கை கண்ட இடத்துல போகும். நாம நம்ம குடும்பத்துக்குன்னு மானம் மரியாதைக்குனு, குடும்ப பொருளாதார பிரச்சனைனை யோசித்து வாயை மூடினா, அதே கஷ்டத்தை அந்த ஆளு அடுத்தவங்களுக்கும் தருவான். எங்கயாவது ஒருயிடம் எதிர்ப்பு வந்து மூக்குடைப்பு நடந்தா தன்னால யாரை பார்த்தாலும் மரியாதை தருவான். மரியாதை தர்றானோ இல்லையோ சுய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பான்.
வீடு பார்க்கறதை உங்கண்ணன் சரவணன் பார்த்துப்பார். நீ எதையும் யோசிக்காத. பிளஸ் டூ படிப்பை கவனி. அடுத்த வருஷம் காலேஜ். எந்த காலேஜிக்கும் மார்க் முக்கியம்.” என்று தட்டிக் கொடுத்தாள்.
அனிதா செல்லும் பேருந்து வரவும் அவள் சரியென்று கிளம்ப, பாரதியோ ‘பாவம் சரவணன். என்னால அவர் வேற கஷ்டப்படுறார். அவருக்கு ஏதாவது நல்லது செய்யணும். என்னசெய்யறது?” என்று குழப்பமாய் அலுவலகம் செல்லும் பேருந்தா வரவும் ஏறினாள்.
அவள் அலுவலகம் வந்து வேலை பார்த்து இடைவேளை வந்ததும் சௌந்திரராஜன் மற்றும் மணிமேகலை பாரதியை பார்க்க வந்திருந்தார்கள்.
எப்படியும் பாரதியை வீட்டில் அந்த ஏரியாவில் பார்ப்பதற்கு பதிலாக இங்கே அலுவலகத்தில் நல்ல சூழலில் சந்திக்க வந்து விட்டனர்.
பாரதியோ, “இங்க எதுக்கு வந்திங்க? பிரஷாந்த் பத்தி பேசறதா இருந்தா தயவு செய்து வராதிங்க” என்றாள்.
“நாங்க பிரஷாந்த் பத்தி பேசலை.” என்று சௌந்திரராஜன் கூற, “வேற… என்னிடம் என்ன பேசணும்?” என்றவளுக்கு வீட்டுக்கு அழைக்க வந்திருப்பாரோ? அப்படி அழைத்தால் இந்தமுறை வீட்டிற்கே சென்றிடலாம். ஹாஸ்டல் எல்லாம் தேவைப்படாது.
பாரதியுமே இரண்டு நாளில் தன் வீட்டிற்கு போனால் கூட பரவாயில்லை. அம்மா அப்பாவை எப்படி கையாள வேண்டுமென கணக்கீட்டு போட்டுக் கொண்டாள்.
அதனால் இம்முறை பெற்றவர்கள் அழைத்தால் செல்லும் முடிவில் இருக்க, அவர்கள் வந்த விஷயமோ அவளை மென்மேலும் அனலை கக்க வைத்தது.
ரஞ்சித் என்பவனை பற்றி பேச வந்திருந்தனர்.
ரஞ்சித் இவர்களை குடும்பமாக பார்க்க வந்து பேசி சென்றதை விவரித்தனர்.
பாரதிக்கு உள்ளம் நெருப்பில் வாட்டுவது போல இருந்தது. என்ன நெஞ்செழுத்தம் இருந்தால் தன்னையே கல்யாணம் பேச வந்திருப்பார்கள்.
ஒரு பெண்ணை கெடுத்தால்.. அவளையே மணந்துக் கொள்வதாக கூறிவிட்டால் எல்லாம் சரியாகி விடுமா? பாரதிக்கு உண்மையில் கைகள் ரஞ்சித் முன்னிருந்தால் அடித்து. துவைக்கும் அளவிற்கு வெறியானது. நினைத்ததை செய்திட முடியுமா என்ன?
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Super baharathi. Anadaraj u deserve this punishment. Bharathi will accept ranjith? Never she wont accept. Sema twist. Intresting sis.
Paakalam eva yenga poranu
மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 20)
அப்படியாப்பட்டவன் வீட்ல வாடகைக்கு குடியிருக்கிறதை விட காலி பண்ணிட்டு ப்ளாட்பாரத்துல கூட படுக்கலாம். எத்தனை தூரம் குளிர் விட்டுப் போயிருந்தால் அந்த ஆனந்தராஜ் அப்படியெல்லாம் கூசாமல் பேசுவான் ச்சே…!
இப்ப இந்த பாரதி எதுக்கு அநாவசியமா பெத்தவங்க மேல கோபப்படுறாள்..? அவங்கத்தான் அந்த ரஞ்சித் வீட்டுக்காரங்களை மூஞ்சியில அடிச்ச மாதிரி பேசி விரட்டி விட்டுட்டாங்கத்தானே, அதேப்போல அவனையும் கண்டபடி அடிச்சே துரத்தி விட்டுட்டாங்கத்தானே..?
அப்புறமும் எதுக்கு இவ டென்ஷன் ஆகணும் ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Interesting
Super super super super super interesting
Ava iruka nelamaiku veetuku kupduvanga ninaichitu iruka aana ivanga ranjith pathi pesa vanthu irukanga athuve avaluku innum kovam athigama than akum atha intha pethavanga purinjika matranga avanga situation mattum yosikuranga
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 Ranjith sonnadha avanga parents othukutangala🤔 aana bharadhi kandipa sammadhikka maataley🙄
Nice going
Interesting