Skip to content
Home » 02.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

02.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டு இருந்த நேரம் அடுத்த பாடங்களும் தொடங்கியது அதில் கலைச்செல்வி கவனத்தை பதிக்க அவள் அருகில் இருந்தவளோ முன்பு போல் அதை எதையும் கண்டுகொள்ளாமல் நோட்புக்யில் கிறுக்கி கொண்டு அங்குஇங்கு என பார்வையை திருப்பி திருப்பி பார்த்தப்படி அமர்ந்து இருந்தாள் ஒருவாறு காலேஜ் முடிய தன் பையை எடுத்துக்கொண்டு வெளியேற போனவளின் நோட்ஸ் அனைத்தையும் போட்டோ எடுத்துக் கொண்டு “ஓகே நாளைக்கு பார்க்கலாம்…” என விடைப்பெற்றவள் இவளிடம் மீண்டும் வந்தாள் “ஆமா உன் பேர் என்ன?..”என கேட்டவளிடம் புன்னகையுடன் கலைச்செல்வி என்று கூற அவள்‌ கன்னம் கிள்ளி பெயருக்கேற்ற பொருத்தம் தான்.

“என் பேரு ஸ்ரீ ஓகே கலை பாய் பஸ் போயிடும் நான் வரேன்…” என ஓடினாள்.

கலைச்செல்வி என்ற பெயரை வைத்து பொருத்தம், பொருத்தமில்லை என்ற இரு மாறுப்பட்ட கருத்துகளை கேட்டு மனிதனின் இயல்பு கண்டு வெகுவாக ஆச்சரியப்பட்டாள் பார்க்கும் கோணம் சரியாக இருந்தால் இங்கு எதுவும் குறையாக தெரியாது என்பதை கூடிய விரைவில் புரிந்து கொள்ள போவதை அறியாமல் தன் வீட்டை நோக்கி நடையை கட்டினாள்.

வரும் போது தந்தையுடன் வந்தவள் போகும் போது பஸ்ஸில் செல்ல வேண்டும் என்பதால் அதற்காக காத்திருக்க பைக்கில் வந்த இரு இளைஞர்கள் இவள் அருகில் இருந்த இரு பெண்களை சைட் அடிக்க அந்த இரு பெண்களும் வெட்கப்பட்டு தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்தப்படி இருந்தனர் அதில் ஒருவளுக்கு‌ அவன் பூங்கொத்து கொடுத்து தன் காதலை உரைக்க அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு இது போல் ஒரு அன்பான காதல் தனக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என வயதுக்கேற்ற எண்ணங்கள் தோன்ற தன் நிறமும் தோற்றமும் மனக்கண் முன்பு வந்து கேலியாக சிரிக்க தன் எண்ணங்களுக்கு சிப் போட்டு மூடிக்கொண்டு வந்த பஸ்ஸில் ஏறிக்கொண்டாள்.

பஸ்ஸில் தனியாக பயணம் செய்வது இன்று தான் முதல் முறை அனைத்திற்கும் தந்தை உடன் வரும் போது ஏதும் தெரியவில்லை இன்று அந்த சன நெரிசல் கொண்ட பஸ்ஸில் நெருங்கி நசுங்கி பயணம் செய்ய மூச்சு முட்டிப்போனது தன் பருத்த உடலை அசைத்து பெண்களுடன் வந்து நின்று கொண்டாள் சில ஆண்களின் வக்கிரமான பார்வையும், வேண்டும் என்று பெண்கள் அருகில் வந்து நின்று அவர்களை இடிப்பதும் ஒட்டிக்கொண்டு நிற்பதும் என நடந்துகொள்ள இவளுக்குப் பின் ஒருவன் நிற்பதில் பயந்து ஒரு பெண்ணருகில் போய் நின்று கொண்டாள்.

“டேய் உன் டேஸ்ட் என்னடா? இது போயும் போய் இந்த கரிக்கட்டையே இடிச்சிட்டு நிக்கிற…”

“யாரு நானா? இந்த குட்டியானை இடையிலே நிக்கிறதாலே நகர்ந்து போக முடியாம நிக்கிறேன்டாஅதோ அங்கே பாரு சிவப்பு தோளோட ஒன்னு தங்கம் மாதிரி மின்னுது அவ ஸ்டாப்லே இறங்கிறத்துக்குள்ள அவளை ஒரு தடவையாவது தொட்டுடனும் அதுக்கு தான் ட்ரைப் பண்ணுறேன்…” என இரு தறுதலைகளின் பேச்சை கேட்டு மேனி நடுங்கியது பெண்ணவளுக்கு “என்ன பொது இடத்தில் கூட கூச்ச நாச்சம் இன்றி இப்படி பேசுகிறார்களே…” என்று அவர்கள் ஒன்னும் சத்தமாக பேசவில்லை தான் ஆனால் அவர்களை சுற்றி நிற்கும் ஒன்றிரண்டு பேரிற்காவது அவர்கள் பேசியது கேட்காமல் இருக்க வாய்ப்பு இல்லை கேட்டும் அவர்கள் அமைதியாக நின்றது தான் வேடிக்கை.

கலைச்செல்வியை சற்று தள்ளி விட்டு அந்தப்பெண்ணை இவர்கள் நெருங்க முற்பட அதற்கு வழிகொடுக்காமல் தானும் ஒரு பெண் என்பதாலோ என்னவோ உடனே அந்த பெண்ணை காக்க முனைந்தாள் அவள் புடவை தான் கட்டி இருந்தாள் ஆனால் மாடர்ன் என்ற பெயரில் மறைக்கப்பட வேண்டியது கூட அப்படியே காட்சி கொடுத்தது அதையே இந்த வக்கிர எண்ணம் கொண்ட ஓநாய்கள் தீண்ட நினைத்தனர் அந்த பெண்ணை நெருங்கி நின்று அதை மறைக்கும் விதமாக புடவை மடிப்பை இழுத்து விட அந்த பெண்ணோ இவளை முறைத்து பார்த்து விட்டு கன்னத்தில் அறைந்து இருந்தாள்.

“அறிவில்லை உனக்கு நீயும் பொண்ணு தானே நாகரீகம் இல்லாம புடவையை பிடிச்சு இழுக்குற ச்சீ தள்ளி நில்லு அசிங்கம் பிடிச்சது…” என நாய் பாய்வது போல் பாய்ந்தாள்.

அவள் கத்திய கத்தில் அத்தனை பேரும் தன்னை பார்க்க ஏனோ பெரிய தவறை இழைத்தது போல் நின்று இருந்தவளுக்கு கண்களும் கலங்கி போனது “அவர்கள் இந்த பெண்ணை நெருங்க விடாமல் செய்தது என்ன அவ்வளவு பெரிய தவறா?…” என தனக்குள் கேட்டப்படி நினைத்தவளுக்கு கன்டெக்டர் விசில் ஊதி இவள் இறங்க வேண்டிய ஸ்டாப் பேரை அறிவிக்க தலைகுனிந்தப்படி இறங்கி நடந்தாள்.

வீட்டுக்கு வந்தவள் தாயும் தந்தையும் இல்லாததை கண்டு ஒரு பெருமூச்சுடன் வழக்கமாக சாவி வைக்கப்படும் இடத்தில் சாவியை தேடி எடுத்து கதவை திறந்து உள்ளே வந்தாள்.

கலைச்செல்வியின் தந்தை ஒரு உணவகம் வைத்து நடாத்திக்கொண்டு வருகிறார் மதிய உணவு வேலையை முடித்து விட்டு அவருக்கு ஒத்தாசையாக இருக்க கல்யாணியும் சென்று விடுவது வழக்கம் பகல் நேரங்கள் எல்லாம் கலைச்செல்வி தனியாக தான் அமர்ந்து இருப்பாள் இன்று நடந்தவை எல்லாம் நினைத்தப்படி அமர்ந்து இருந்தவளுக்கு தனிமை தான் துணையாக இருந்தது எவ்வளவு நேரம்‌ அப்படியே இருப்பது என்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு உடை மாற்றி வெளியே வந்தவள் தன் செடிக்கு தண்ணி பிடித்துக்கொண்டு இருக்க பக்கத்து வீட்டு ஆன்டி இவளை கண்டதும் வேலி அருகில் வந்து நின்றார்.

“அம்மாடி செல்வி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா உன்னோட படிச்சதுல அந்த கணக்கு வாத்தியார் பொண்ணு‌ அதுக்கு நிச்சயம் வெச்சிருக்காங்கன்னு நான் போனேன் ஆளை மதிச்சுக்க முடியாம போயிடுச்சு வெள்ளை வெள்ளேன்னு மொச குட்டி மாதிரி ஆளே மாறி போய்‌ இருக்குறா தெரியுமா? எப்படி கருப்பா இருந்தா இப்போ நிஜமா அடையாளமே தெரியலே…” என்றவர் சொன்ன பெண் தன் அளவிற்கு கருப்பான பெண் அல்ல பொதுநிறத்தில் இருப்பவள் என்பது இவளுக்கு நன்றாகவே தெரியும் இருந்தும் அதைப்போய் இவர்களிடம் சொல்லிக்கொண்டு இருக்க முடியாதே லேசாக சிரித்து விட்டு தன் வேலையை பார்த்தாள்.

“ஏன் செல்வி நீயும் அந்த புள்ள என்ன பூசுதுன்னு கேட்டு வாங்கி பூசுறது அது அளவுக்கு தான் வேணாம் ஆனா கொஞ்சம் பொதுநிறத்துக்காவது மாறும்ல அந்த புள்ளைக்கு படிப்பு வரலேன்னு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு மாப்பிளை பாத்திருக்காக வந்த மாப்பிளை எல்லாம் நிறத்தை தான் குறையா சொல்லி இருக்காங்க அதான் ஏதோ க்ரீமை பூசி வெள்ளையாகி இருக்கு அப்பறம் அடுத்த முகூர்த்ததுலே வரன் கூடி வந்திருக்கு பாரேன் அதான் சொல்லுறேன் நீ காலேஜ் முடிச்சதும் உனக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணுவாங்க இப்படி உனக்கு நடந்தா எவ்வளவு சங்கடம் அதான் உன் மேல உள்ள பாசத்துல சொன்னேன் பார்த்து ஏதும் செய்…” என அக்கறை இருப்பது போல் தாழ்வு மனப்பான்மையை தூண்டி வீட்டு சென்றது பக்கத்து வீட்டு புஷ்பா.

படிப்பு, காலேஜ், அப்பறம் ஒரு நல்ல வேலை இதை மட்டும் கனவில் வைத்து தன் வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருப்பவளுக்கு கல்யாணம் அதற்கு பிறகு ஒரு குடும்பம் என யோசிக்கவில்லை இது எல்லாம் தன் வாழ்வில் நடக்கப்போவதும் இல்லை பிறகு எதற்கு அந்த சிந்தனை என தூக்கி ஓரமாக போட்டு விட்டு தன் வேலையை முடித்து விட்டு அறைக்குள் சென்றவள் இன்று நடாத்திய பாடங்களை மீட்டல் செய்து படிக்க தொடங்கினாள் பெற்றோர்கள் வர அவர்களுடன் முதல் காலேஜ் அனுபவத்தை பகிர்ந்தவள் தப்பி தவறி கூட சீனியர் ஒன்று சேர்ந்து தன்னை வம்பிழுத்ததையோ, பஸ்ஸில் நடந்ததையோ சொல்லவில்லை மாறாக ஸ்ரீயுடனான நற்பை பகிர்ந்தாள் ஏற்கனவே வேலை செய்து களைத்துப் போய் வந்து இருப்பவர்களிடம் இதை சொன்னால் எங்கு வருத்தப்படுவார்களே என்று தான் ஏதும் சொல்லாமல் இருந்தாள்.

எவ்வித மாற்றமும் இன்றி புலர்ந்த கதிரவனுக்கு தன்னிடமும் எவ்வித மாற்றமும் இல்லை என அதே கருப்பு நிற சுடிதாரை எடுத்து அணிந்து வழமையாக எப்படி இருப்பாளோ அதே போல் தன்னை தயார்படுத்திக் கொண்டு வெளியே வந்து தரிசனம் கொடுத்தாள் மங்கையவள் தந்தையுடன் காலேஜ் வந்து சேர்ந்தவளை நேற்று ரேகிங் செய்த சீனியர்கள் அழைக்க அதை கண்டும் தனக்கு கேட்காதது போல் அவசரமாக தன் க்ளாஸ் ரூமிற்குள் ஓடி மறைந்தாள்.

மூச்சு வாங்க வந்து அமர்ந்தவளை பார்த்தப்படியே தண்ணீரை நீட்டினாள் ஸ்ரீ “வர வழியிலே நாய் ஏதும் தொரத்திச்சா இப்படி ஓடி வர…”

“இல்லை அது சீனியருக்கு பயந்து தான் ஓடி வர வேண்டியதா போச்சு…” என்றவளை புரியாமல் பார்த்தவளிடம் நேற்று நடந்ததை சொன்னாள்.

“அடே பைத்தியமே அவனை திருப்பி ஒரு அறை விடுறதை விட்டு ஓடி ஒழியிற அவன் பேசின பேச்சுக்கு அவனை தான் இப்படி ஓட வெச்சு இருக்கனும் பயந்தாங்கொள்ளியா இருக்காத அது நல்லதுக்கு இல்லை…”‌‌ என்றவள் கூறியதை கேட்டுக் கொண்டு இருந்தவளின் கவனத்தை திசை திருப்பும் பொருட்டு பேராசிரியர் வகுப்பிற்குள் நுழைந்தார் அதன் பின்னர் இருவரும் பாடத்தில் கவனமாகினர்.

மதிய உணவு வேளையில் இருவரும் உணவை பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்க பெண்ணவளோ பெரும் யோசனையில் இருந்தாள்.

“நான் பண்ணது தப்பா ஸ்ரீ…”

ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுக்க செஞ்சதுக்கு அப்பறம் சரி எது தப்பு எதுன்னு யோசிக்ககூடாது கலை நீ பண்ணது சரிதான் ஆனா அதை தவறான இடத்துலே பண்ணிட்ட இப்படிபட்ட ஆளுங்க இருக்கிறதாலே தான் உதவ கூடிய நல்ல மனசு உள்ளவங்க கூட நமக்கு‌ எதுக்குடா வம்புன்னா விலகி போறாங்க அதுக்காக உன் குணத்தை மாத்திக்க சொல்லலே கொஞ்சம் தைரியமா இந்த சமூகத்தை சந்திக்க பழகு குட்ட குட்ட குனிஞ்சா உன்னை கீழே போட்டு புதைச்சிடுவாங்க தைரியம் வேணும் கலை அவள் உன்னை அறைஞ்ச அடுத்த நிமிஷம் நீயும் கையை நீட்டி அறைஞ்சி புடவையே ஒழுங்கா தூக்கி கட்டிட்டு போடி கண்டவன் பார்வை அங்கே தான் மேயிதுன்னு எல்லார் முன்னாடியும் திருப்பி சொல்லி இருந்தா அந்த நாய்ங்களும் சரி அவளுக்கும் சரி புத்தியிலே உரைச்சு இருக்கும் சரி விடு இனிமே அடிவாங்கிட்டு வந்து யோசிக்காதே…” என்றவளை அணைத்துக் கொண்டாள் கலைச்செல்வி.

6 thoughts on “02.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்”

  1. Avatar

    ஸ்ரீ சூப்பர்!!… ரொம்ப அருமையான நட்பு!!… சீக்கிரமே இவளும் எல்லாத்தையும் கத்துப்பா!!!… அந்த பக்கத்து வீட்டு ஆண்டி🤦🏻‍♀️🤦🏻‍♀️

  2. CRVS 2797

    ஸ்ரீ சூப்பரா அட்வைஸ் பண்றா. ஆனா, கலைக்கு அந்த துணிச்சல் வருமா…???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *