Skip to content
Home » 05.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

05.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

கூட்டத்தின் நடுவில் மாட்டிக்கொண்டு கோழி குஞ்சை போல் நடுங்கிக்கொண்டு இருந்தவளின் கரத்தை பற்றி இழுத்தது‌ ஒரு கரம் அந்த கரத்திற்கு சொந்தகாரர் யார்? என நிமிர்ந்து பார்க்க யாதவ் எதிரில் இருந்த கூட்டத்தை கோபமாக முறைத்தப்படி நின்றுக்கொண்டு இருந்தான்.

“எனக்கும் இவளுக்கும் என்ன உறவுன்னு தெரிஞ்சிக்கிட்டு நீங்க அப்படி என்ன பண்ண போறீங்க…” என்றவனின் கேள்வியுடன் சேர்த்து அவனையும் அங்கு எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவர்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு ஓரமாக நின்றுகொண்டு இருந்த ஸ்ரீ தேவையில்லாமல் காலேஜ் முழுக்க பரப்ப படும் வதந்திக்கு முற்றுப்புள்ளி இவன் மூலம் தான் வைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவனுக்கு அழைத்து தகவல் சொல்லி இருந்தாள்‌.

“தேவையில்லாம அடுத்தவங்க விஷயத்துல மூக்கை நுழைக்காம உங்க வேலை என்னமோ அதை பாருங்க‌ செல்வி யாராவது ஏதாவது பிரச்சினை பண்ணா என்கிட்ட சொல்லு நான் அதை பார்த்துக்கிறேன்…” அங்கிருந்தவர்களை முறைத்துப் பார்க்க வந்த கூட்டம் வந்த வழியே வெளியே ஓடியது அதன் பிறகு தான் நிம்மதியாக மூச்சு விட்டாள் கலைச்செல்வி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் ஃபோனில் வந்த அழைப்பை ஏற்று பேசியபடி வெளியே சென்று விட்டான் யாதவ்.

தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தவள் “என்னடி நடக்குது இங்கே அவங்களா வந்தாங்க ஏதேதோ கேக்குறாங்க சீனியர் வந்தாரு அவரு பாட்டுக்கு பேசிட்டு போறாரு எனக்கு ஒன்னும் புரியலடி…” என்றவள் சோர்வாக மேசையில் தலைசாய்க்க அவள் தலையை வருடி விட்டவள்.

“எல்லாம் பொறாமை தான் கலை நேத்து உன்னை சீனியர் பாராட்டிட்டு பேசிட்டு போனாருலே அது காலேஜ் முழுக்க வேற மாதிரி பரவி போச்சு…” என்றவள் வாட்ஸ்அப் க்ரூபில் வந்த மெஸேஜ் எல்லாம் காட்டினாள்.

“என்னடி இது அவரு என்னை லவ் பண்ணுறதாவும் நான் அவரோட லவர்னு பேசிக்கிறாங்க இது எப்போ நடந்திச்சு எனக்கும் அவருக்கும் ஏணி வெச்சாலும் எட்டாது அவர் அழகு எங்கே நான் எங்கே இதை எல்லாம் பார்க்கிறப்போ எனக்கு சிரிப்பு தான் வருது கடவுளே ஏன் இந்த தேவையில்லாத வேலையை பார்க்கிறாங்க பேசினது ஒரு குத்தமா?…”

“அவளுகளை பொறுத்தவரைக்கும் அது குத்தம் தான் அவரு இந்த காலேஜ்ல உள்ள நிறைய பொண்ணுங்களோட கனவு நாயகன் அவரோட அழகை விடு ஆனா சீனியரோட பேக்ரவுண்ட் இருக்கே அது தான் மெயின் இவங்க அவரை சுத்திட்டு இருக்க காரணமும் அதுக்கு தான்…”

“அப்படி என்ன பேக்ரவுண்ட் எனக்கு புரியல…” என்றவளிடம் அவன் சீஎம்யின் மகன் என்பதை கூறினாள் “அவ்ளோ பெரிய இடத்து பையனா என்னோட சாதாரணமா பேசினாங்க ரொம்ப ஆச்சிரியமா இருக்கு ஸ்ரீ…” என்றவளுக்கு “எனக்கும் தான் கலை அது தான் இயல்போ யாருக்கு தெரியும் சரி நீ இதை எல்லாம் போட்டு யோசிச்சு டென்ஷன் ஆகாத‌ அதான் சீனியர் பார்த்துக்கிறதா சொல்லிட்டாருல விடு…” என்ற இருவரும் பாடத்தில் கவனமாகினர் இன்று பாடம் நடாத்த வந்த பேராசிரியர்களில் சிலர் இங்கே யாரு கலைச்செல்வி என கேட்டு அவள் எழுந்து நின்றதும் நீயா? என சந்தேகத்துடன் கேட்படி நகர்ந்தனர் அதற்கான காரணம் பெண்ணவளுக்கு புரியாமல் இல்லை இருந்தும் அமைதியாக இருந்து விட்டாள்.

மெஸேஜ் பார்த்தீங்களாடா? அவ இவனோட லவர் சோ இதுக்கு தான் அன்னைக்கு அவளை காப்பாத்தி இருக்கானா?..”

“ஆமா ஆமா என்ன கன்றாவி டேஸ்ட் மச்சான் இவனுக்கு அதுவும் இந்த கருவாச்சியே போய் காதலிக்கிறான் ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல நின்னா ப்ளேக் என்ட் வைட் வால்பேப்பர் மாதிரி இருக்கும்…”

“சரியா சொன்ன மச்சான் அவளும் அவ மூஞ்சும் நினைச்சாலே வாமிட் வர மாதிரி இருக்கு பொண்ணுன்னா எப்படி இருக்கனும் தெரியுமா? சிவத்த தோளா, ஒல்லியா இப்படி இருந்தா தானே பொண்ணுக்கே அழகு இது என்னடான்னா காஞ்சுப் போன கருவாடு மாதிரி ஒரு கலரு குட்டியானை மாதிரி உடம்பு…” என அவன் சொல்லி சிரிக்க உடன் மற்றவர்களும் லேசாக சிரித்தனர்.

“நீ இப்படி சொல்லுற ஆனா நாமளே பார்த்து பொறாமைப்படுற அளவுக்கு பாலிவுட் ஹீரோ மாதிரி இருக்கிற அந்த யாதவ் இவளை செலக்ட் பண்ணி இருக்கான்னா அப்போ ஏதோ ஒன்னு அவகிட்ட இருக்கு ஐ திங்க் அவ ஒரு பணக்காரியா இருக்கலாம்னு அதனாலே கூட இந்த யாதவ் லவ் பண்ணி இருக்கலாம் இப்போ எல்லாம் லவ் மனுஷங்களை பார்த்தா வருது அவனோட தோற்றம் பேக்ரவுண்ட் இதை வெச்சு தானே வருது இங்கே இருக்கிற முக்கால் வாசி பொண்ணுங்க அவன் பின்னால க்ரெஸ்னு நாய் மாதிரி சுத்த அதானே மெயின் ரீசன்…”

“ம்ம் அது என்னவோ கரெக்டு தான் நாமலும் இந்த காலேஜ்ல தானே இருக்கோம் பார்த்துக்கலாம் இது எவ்ளோ தூரம் போகுதுன்னு…” என அந்த நால்வரும் பேசிவிட்டு களைந்து செல்ல அதை அந்த வழியாக லைப்ரரிக்கு செல்லலாம் என வந்த கலைச்செல்வி அனைத்தையும் கேட்கும் படியானது அருகில் இருந்த கண்ணாடி ஜன்னலில் தன் முகம் பார்த்தவளுக்கு அவர்கள் கூறிய வாமிட் வர மாதிரி இருக்கு, கருவாச்சி, கருப்பட்டி, காக்கா, காஞ்சுப் போன கருவாடு என இவ்வாறான வார்த்தைகள் தான் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

இவளை தேடி வந்த ஸ்ரீ “என்ன இங்கே நிக்கிற கலை வா போலாம்…” என அழைத்துச்செல்ல தன்னுடைய கலங்கிய விழிகளை அவளறியாமல் துடைத்துக் கொண்டு உடன் நடந்தாள்.

அன்று காலேஜ் நிர்வாகம் மூலம் ஏற்பாடான இசை நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துக்கொண்டு அதை என்ஜாய் பண்ணிக்கொண்டு இருக்க இங்கே ஸ்ரீ முன்பு சோகமாக அமர்ந்து இருந்தாள் கலைச்செல்வி.

“இப்போ என்ன உன் பிரச்சினை…”

“எல்லாம் இந்த ட்ரெஸ் தான் பாரு கொழுந்து பச்சை நிறத்தில பாவடையும் ரவிக்கையும் இதுலே மாம்பழ கலருல தாவணி ச்சே எனக்கு அசிங்கமா இருக்குடி எனக்கு இந்த கலர் நல்லாவே இல்லை…” என தன்னை அங்கு இருந்த கண்ணாடியில் திருப்பி திருப்பி காட்டி சோகமாக சொன்னவளை கவலையாக பார்த்தாள் ஸ்ரீ.

“எல்லாரும் இது மாதிரி தான் ட்ரெஸ் போடனும்னு சொல்லி இருந்தாங்க சீனியர் என்ன பண்ண சொல்லுற கொஞ்சநேரம் தானே போய் ஆடிட்டு வந்து கலட்டி கொடுத்திடலாம் சரியா என் செல்லம்லே அடுத்தது நாம தான் பர்பாமென்ஸ் பண்ணனும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ கலை…” என்றவளிடம் சோகமாக தலையசைத்தவளை பல ஒப்பனைகள் செய்து அழகுப்படுத்தினாள் ஸ்ரீ சிறிது நேரத்தில் அவர்களை அழைத்துக் கொண்டு அனைவரும் ஸ்டேஜ் ஏறினர்

இவர்கள் தெரிவு செய்த பாடல் ஒலிக்க இத்தனை நாள் ப்ராக்டிஸ் செய்ததை இன்று அனைவர் முன்பும் ஆடி காட்டினர் அதை பார்த்து மாணவர்களும் வைப் ஆகி உடன் சேர்ந்து ஆட கடைசியாக கலைச்செல்வி ஆடி முடித்து வைக்க வேண்டிய தருணம் அவளும் பயம் இருந்தாலும் இத்தனை நாள் தன் டீம் செய்த ஹார்ட்வொர்க் வீணாகி போய் விடக்கூடாது என்று ஆட தொடங்கினாள் நன்றாக ஆடிக்கொண்டு இருந்தவளை கீழே சில பெண்கள் முறைத்தப்படி அமர்ந்து இருந்தனர் அதில் ஒருத்தி மேடையில் இருந்த ஒருத்திக்கு கண்ணை காட்ட அவளும் தலையசைத்து அவள் ஆடும் போது லேசாக நெருங்கி வந்து கலைச்செல்வியின் காலை தட்டி விட இதை எதிர்ப்பாராத கலைச்செல்வி பிடிமானம் இன்றி தொப்பென்று தரையில் விழுந்தாள் அதைப்பார்த்ததும் அனைவரும் கேலி கிண்டல் செய்து சிரித்தனர் அதையும் தாண்டி மெதுவாக எழுந்து ஆட தொடங்கியவளை கண்டு ஒருவன் ஒரு வயரை பிடுங்கி எறிய பாட்டு சத்தமும் நின்று போய் விட்டது அதை தொடர்ந்து கூச்சல் சத்ததுடன் நான்கு பக்கங்களில் இருந்து திடிரென நீர் நிரப்பிய பலூன்கள் அவளை நோக்கி வீசப்பட்டது அதில் முக்கால் வாசி அவள் மீது தான் பட்டு வெடித்து சிதறியது.

கருப்பி டவுன் டவுன்… கருப்பி டவுன் டவுன்.. வெளியே போ.. வெளியே போ…‌ என அனைவரும் ஒன்று சேர்ந்து சத்தம் எழுப்ப அவமானத்தில் முகம் இருண்டு போனது கலைச்செல்வியிற்கு அவசரமாக மேடையை விட்டு ஓட அவளை தொடர்ந்து ஸ்ரீயும் ஓடினாள்.

“ஹேய் கலை நில்லு ஏய் கலை ப்ளீஸ் நில்லுடி…” என தன் பின்னால் ஓடி வந்தவளை திரும்பி நின்று பார்த்தவள் “நான் தனியே இருக்கனும் ஸ்ரீ அதான் வீட்டுக்கு போறேன் என்கிட்ட எதுவும் பேச ட்ரைப் பண்ணாதே…” என்றவளிடம் ஸ்ரீ ஏதோ சொல்ல வர காது கேட்காதது போல் அவசர அவசரமாக தன் பையை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு ஓடி விட்டாள் கலைச்செல்வி.

தன்னறைக்குள் நுழைந்து கதவை சாற்றியவள் கதவில் சாய்ந்து கால்களை மடக்கி அமர்ந்தவளுக்கு அவர்களின் கேலி கிண்டல் தான் அத்தனை பேர் முன்பும் அவமானப்பட்டு நின்றது எல்லாம் விடாமல் மூளையை குடைந்து கொண்டு இருக்க அணை உடைத்த வெள்ளம் போல் நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க தரையில் கையை அடித்து அடித்து ஓவென சத்தம் போட்டு அழுதாள் யாருமில்லாத அந்த வீடும் ஒரு பக்கம் அவளுக்கு வசதியாகி போய் விட்டது ஏனோ மனம் விட்டு அழ அந்த தனிமை தேவைப்பட்டது போலும் எவ்வளவு நேரம்‌ தன்னை நினைத்து அழுதாலோ அப்படியே மயங்கி சரிந்தாள் கலைச்செல்வி.

7 thoughts on “05.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்”

  1. Kalidevi

    Pavam oru ponnu karupa iruntha avlo periya thappa ethuku keli, kindal intha alavu oruthanga manasa Yen kaya paduthurangalao intha pasanga

  2. CRVS 2797

    சே…! ஏன் தான் நிறத்தைக் பார்த்து குணத்தை பிரிக்கிறாங்களோ தெரியலை…???

  3. Avatar

    இப்படிலாம் கூட பன்னுவாங்களா??… இதுக்கெல்லாம் சேர்த்து அவுங்களை வச்சு செய்யனும்!!!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *