Skip to content
Home » 11) மோதலில் ஒரு காதல்

11) மோதலில் ஒரு காதல்

மோதலில் ஒரு காதல்         பிரியாவிடம் சென்ற வம்சி— குட்டிமா குழந்தை ஏன்டா அழவே இல்லை என கேட்க , அனைவரது மனதும் உடலும் உள்ளமும் பதைபதைத்து.சீப் டாக்டர்: வம்சி குழந்தையின் முதுகை நல்ல நீவி விடு என கூற, வம்சி குழந்தையின் முதுகை நீவினான். குழந்தை அசையவில்லை, பிரியா: தாயின் உடல் கதகதப்பில் வைத்தால், குழந்தை அசைய வாய்ப்புள்ளது என கூற,வம்சி: குழந்தையை தூக்கிக் கொண்டு தாயிடம் செல்ல அப்பெண்ணோ எந்தவொரு அசைவின்றி இருக்க, வம்சி, லோகேஷ், ஆன்ந்த், என‌ ஆண்கள்‌ அனைவரும் அவளை எழுப்ப  பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள,பிரியா: ஒரு வேளை சிஸ்டர்க்கு எதாவது ஆஆஆஆகிடுச்சா?என  வெளி வரதா குரலில் சொல்ல,கௌரி: வாய மூடு பிரியா, இந்த சிஸ்டர் அவங்க கணவரோட ஆசையை நிறைவேற்றாமல் எங்கேயும் போக மாட்டாங்க என பதிலுறைக்க,அனைவரும் சிறிது நேரம் மௌன மொழி பேச,         மகி மகி என ராகேஷ் கத்த, அவர்களின் பார்வை மகிழிடம் போக,மகிழ்: டிரிப் கனக்க்ஷன் பிடிங்கபட, இரத்தம் வடிந்து பிக்ஸ் வந்து பெட்டில் மேலும் கீழும் துள்ள ஆரம்பித்தாள்.ராகேஷ்: மகிழினியின் கையில் ஒரு இரும்பு கீயை கொடுத்து, சிறிதாக துள்ளல் நிற்க மகிமா எழுந்திரிடா …. செல்லம் என்னவிட்டு எங்கேயும் போயிடாத , நீயும் இல்லை என்றால் நான் தனி மரமாகி விடுவேன்‌ என மகிழை உலுக்கினான்.சுமித்ரா: தலையில் அடித்து கொண்டு , அடக்கருமம் பிடிச்சவனே , ஒரு பொண்ணு கிட்ட  இப்டி கெஞ்சுற எழுந்திரு என கைபிடித்து தூக்க,ராகேஷ்: உன்னாலதான்டி இது எல்லாம் உன்னால் தான் மகி இப்டி கடக்கா , அந்த டிரிப் கலட்டிவிட்டு லூசு மாதிரி போய் நின்னுக்கிட்ட , எந்த சேப்டியும் பண்ணாம‌ல் போய்ட்ட, அதனால்தான் இன்னைக்கு என் மகி குட்டி இப்படி பிக்ஸ் வந்து உயிருக்கு போராடிட்டு இருக்காடி , என் மகிகுட்டிக்கு எதாவது ஆச்சு உன்ன சும்மா விட மாட்டன்டி என எகிரினான்.           மூவரின் நிலையும் என்னவென அனைவருக்கும் பதற்றம் ஏற்பட்டது. வம்சியின் நிலை படுமோசமாக இருந்தது, நான்மகிழ், என்மகி  என் பிதட்டி கொண்டிருக்க,           பிக்ஸ் சரிசெய்யும் இன்சக்சனை மகிழுக்கு ராகவன் செலுத்த , ஒரு அறை மணி நேரம் எந்த வித அசைவமில்லாமல் இருக்க,            கௌரி சுமித்ராவிடம் சென்று ஏய் நீயெல்லாம் ஒரு பொண்ணாடி அவளே பாவம் உன்னால எத்தனை தடவடி அவ மரணகண்டத்துக்கு போய்ட்டு போய்ட்டு வருவாள் என கத்தி அவளது கன்னத்தில் மாறிமாறி பளார் பளார் என அறைந்தான்.            அவளது முடியை கொத்தாக பிடித்து ஆப்ரேஷன் தியேட்டரின் கடைசி நுனிக்கு அழைத்து சென்று,          ஏய் ராட்சசி எதுக்குடி அவ மேல இவ்வளவு கோபம் உனக்கு? …. இப்படிலாம் பண்றயே உனக்கென்ன பைத்தியமா?… நீ என் தங்கச்சின்றதால் தான் இப்படி பேசிட்டு இருக்க இல்ல என் மகிக்கு  வேற யாராவது இப்படி பண்ணிருந்தால் இந்நேரம் பிணமாக்கிருப்பன் என பொறிந்தான்.      சுமித்ரா என்னடா, அவளுக்காக கூட பிறந்த தங்கச்சியவே நீ கொல்லுவவயா ?…அந்த பணப்பேய்க்காக  என்கிட்ட சண்டை போடுற அன்னைக்கும் இதேபோல தான் என ஆரம்பிக்கும்போது,      “ஏய் லிமிட் யுவர் வேர்ட்ஸ் “என பிரியா கத்த , மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தனர். நேராக சுமியிடம் சென்ற பிரியா வெளிய போடி என கத்த, மற்றவர்கள் அமைதியாக இருந்தனர்.        எரிச்சலடைந்த சுமித்ரா” ஹேஏஏஏஏ மகிழினிகிருஷ்ணன் உன் சாவு என் கைலதான்டி ” என்னஎன கத்திவிட்டு வேகமாக வெளியே ஓடினாள்_________________&&&&-_______&&&______      ஆப்ரேஷன் தியேட்டரின் வெளியில் அமர்ந்திருந்த ஆதித்யா ,     சுமித்ரா வெளிவர அவளிடம் சென்று என்ன ஆச்சு சிஸ்டர்? குழந்தைகள் இரண்டும் நல்லா இருக்காங்களா?… அந்த ப்ரக்னன்ஸி லேடி எப்டி இருக்காங்க?…. மகி சிஸ்டர் எப்படி இருக்காங்க என கேள்விகளை அள்ளி தெளித்தார் ஆதி.        ஆத்திரத்தில் வந்த சுமித்ரா __ ம் மூணுங்களும் இன்னும் கொஞ்ச நேரத்தில செத்துடுவாங்க என சொல்லி வேறு எந்த பதிலும் சொல்லாமல்  அழுது கொண்டே ஓடினாள்.                 ஆதி மனமுடைந்து நாம தவறு பண்ணிட்டமோ?…. எல்லாம் என்னால் தான் என மனமுடைந்து சேரில் அமர            ஆதியிடம் வந்து சொடக்கு போட்டு ,  டேய் ஆதி என்ன நான் சொன்னது போலவே நடந்துடுச்சு போல. இப்ப எங்கடா உன் முகர கட்டையை வப்ப,  இப்ப தான்டா எனக்கு நிம்மதியா இருக்கு.  இனிமேல் உன்ன என்ன பண்றனு பாருடா என் கத்தினான்.  வாசு ப்ரண்ட்: எவ்வளவு திமிரா சொன்ன , என்னசொன்ன என்னசொன்ன , தைரியம் இருந்தால் போதுமா ஹாஹாஹா என வாசு முதலாக அனைவரும் ஒரு ஏளனத் திமிருடன் சிரித்தனர் ஆதி:   டேய், வம்சி கிருஷ்ணா வந்து சொன்னானா?… அவங்கிட்ட இருந்த கான்பிடன்ட்  என பிதற்றினான்.________________&&&&_______________________   பின் மகிழிடம்  சென்று  அமர்ந்த பிரியா  எழுந்திரு குள்ள என கூற,  மகிழின்‌ பெட்டிடம் வந்து முட்டி கால் இட்டு அமர்ந்தான் வம்சி.வம்சி: மகிமாஆ….மகி: …..வம்சி: மகிமா எழுந்திரு….மகி: பேச்செதும் இல்லை ஆனால் கண்கள் அசைந்தது,வம்சி: எழுந்திரு மகி எழுந்திரு என உழுக்கினான்.மகி: கண்ணை திறந்தவள் அவனை பார்த்து,  வசி குழந்தைகள் இரண்டு பேரும் ஓக்கேவா? அந்த சிஸ்டர் எப்டி இருக்காங்க?…என கேட்டவளை ,வம்சி: என்ன விட்டு போய்டாத‌ மகி என கையை பிடித்து கெஞ்சினான்.பிரியா: வம்சியின் கையிலிருந்த குழந்தையை வாங்கி இங்க பாரு மகிழ் குழந்தை அழவே இல்லை என குழந்தையை கட்டி கொண்டு அழுந்த தாய் அவளது கண்ணீர் குழந்தை வாயில் விழ வீர்  என கத்தியது.குழந்தையின் அழுகுரலை கேட்டவுடன் மயக்க நிலையில் இருந்த தாய் என் மகன் என் மகன் அந்த வலியிலும்   பிதற்ற , இரு குழந்தைகளையும் அந்த தாயிடம் படுக்க வைக்க தாயின் உடல் சூட்டில் குழந்தைகள் உறங்கின.   நூறூ சாமிகள் இருந்தாலும்         அம்மா உன்னை போல                 ஆகிடுமா கோடிகோடியாய் கொடுத்தாலும்         நீ தந்த அன்புக்கு                 ஈடாகுமா….‌‌      தன் காதலை வெளிப்படுத்த நினைத்த வம்சி இது சரியான சமயம் இல்லை என அமைதி காத்தான்.           ஆப்ரேஷன் தியேட்டரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஓய்வு தேவையென , ஒரு நர்ஸ்ஸை அப்பாய்ன்ட் செய்துவிட்டு             அவங்களை பத்ரமாக பார்த்துக்கோங்க சிஸ்டர் , இரண்டு பிள்ளைங்கள பெற்றவங்க எதாவது தேவையாக இருந்தால் இந்த நம்பர்க்கு கால் பண்ணுங்க என்று நம்பர் குடுத்தான் கௌரி.  அதை மனப்பாடம் செய்தாள் பிரியா ( இன்னும் போன் நம்பர் கூட தரவில்லை இதுலாம் லவ்வாமா)               வம்சி மகிழ் மயக்க நிலையில் இருக்க நடக்க  இயலாததால் தன்னவளை ஒரு பொம்மை போல கை தாங்காய் தூக்கி கொள்ள,      தம்பி என் பிரசவத்துக்கு வந்துட்டு உன் கல்யாணத்துக்கு ரெடி பண்ணிட்டு இருக்கப்  போல என்று இரு பிள்ளை பெற்ற தாய் கலாய்க்க ,       என் மைன்ட் வாய்ஸ் உங்களுக்கு எட்டி பார்த்துடுச்சா சிஸ்டர் என ஆனந்த் கண்ணடித்தான்.                 ஆமான் தம்பி , நீ சொல்லலை நான் சொல்லிட்ட வாய அடக்க  முடியவில்லை.”இந்த ரண களத்துலையும் உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு” … என்று யாஷினி ஆனந்த் மண்டையில் மங்கென்று கொட்டினாள்.         ”   சட் அப் யு வர் மௌத் ஆல் ஆஃப் யூ கெட் அவுட்  ஐ நீட் சம் ரெஸ்ட்” என்று சிறுகோபமாய் அந்த கர்ப்பிணி  சிணுங்க,       “நல்லதுக்கு காலமே இல்ல வம்சிராசா, நம்மள  கழுத்த பிடிச்சு வெளிய  தள்ளுறதுக்குள்ள நம்மலாவே போய்விடலாம் ” என வம்சியின் தோளில் கை போட்டு சொன்னான் கௌரி.        இதுதான் சரியான பாய்ண்ட் என்று அனைவரும் வெளியேற,               வெளியே பதற்ற நிலையில் இருந்த ஆதித்யா,  வம்சியிடம் வந்து நிற்க ,         ஆதியின் கையை பிடித்த கௌரி ” சார் ஆப்ரேஷன் சக்ஸஸ் ” என்று சிரித்த வண்ணம் சொல்ல,      “ஆமா ஆமா ஆப்ரேஷன் சஸ்சஸ் பட் பேசண்ட் டெத்” அப்படித்தான என வாசுவும் வாசுவின் நண்பர்களும் ஹைபை போட்டு கொண்டனர்.               சிறிது கோபமடைந்த வம்சி  மகிழை இறக்கி சேரில் சாய்ந்தபடி அமர வைத்துவிட்டு ஆதியை நோக்கி சென்று ” ஆதி சார் ஆப்ரேஷன் சக்ஸஸ் அண்ட் பேசண்ட் ஆல் ஆஃப் சேப்” பட் இப்பதான் இங்க ஒரு கொலை நடக்க போகுதுனு நினைக்குற என்று தனது கைச்சட்டையை மேலேற்றினான்.     ஐய்யோ இதுலாம் ஆபத்தாச்சே என்று வாசுவின் வயிற்றில் கடமுட என்று சத்தம் கேட்டது‌.          நான் அப்பவே நினைச்சேன் தம்பி உங்கிட்ட அறிவுக்கும்,  திறமைக்கும் நீ ஃபேமஸ் ஆகிருப்பனு நினைச்சேன். இந்த ஆப்ரேஷன்லாம் உங்களுக்கு எல்லாம் ஒரு கால் தூசிக்கு சமம் தம்பி “,என வாசுவின் நண்பர்கள் லேசாக  கலட,     ஆமாண்டா , நானும் அததான் நினைச்சேன்.  அதுக்குள்ள நீயே சொல்லிட்டு என வாசு ஹைபை போட ,     அதெப்படி சீனியர் கொஞ்சம் கூட வெட்கமாகவே இல்லையா?….. என வாயை பிதிக்கி கொண்டு கேட்டாள் பிரியா.    இதுக்குலாமா வெட்க பட முடியும் என வாசு சொல்ல,     கேவலமான பார்வையில் அனைவரும் பார்க்க, அன்னைக்கு எதோ ஆடு கோழினு சொன்னிங்க என யாஷினி இடுப்பில் இரு கைகளையும் வைத்து கேள்வியாக கேட்க,     இதுக்கு மேல ஆகாதென்று, வாசு மற்றும் அவன் நண்பர்கள் முட்டியிட்டு பரம தெய்வங்களே , நாங்க தெரிந்தும் தெரியாமலும் புரிந்தும் புரியாமலும் உங்களிடம் கொஞ்சம் என சொல்ல    என்ன கொஞ்சமாவா என்று மதுப்பிரியா நெற்றி புருவத்தை உயர்த்தி கேட்க,     அடியாத்தி வாயு கொலறுதே,  இல்ல இல்ல தாயி புரிந்தும் புரியாமலும் உங்களிடம் நிறையவே வாலாட்டி விட்டோம் ” எங்களை தங்கள் சிநேகிதனாக நினைத்து மன்னித்து அருளுங்கள் என கடவுளை வணங்குவது போல நீட்டி படுத்து கெஞ்சினார்கள் வாசுவும் வாசுவின் நண்பர்களும்,      என்னடா இரண்டு எபிசோட்ல வில்லாதி வில்லனுங்க மாதிரி திமிரா பேசுனிங்க இப்ப என்னனா சட்டு புட்டுனு  கால்லயே விழுந்துட்டிங்க உங்களை நினைச்சா  சிரிப்புதான் வருது என ஆனந்த் நக்கலடித்தான்.      “என்ன பண்றது இந்த ரைட்டர் மேடம் என்ன நினைக்குறாங்கனு புரிஞ்சிக்கவே  முடியலயே” அதான் அவங்க போக்குலயே போகிடலானு சொல்ல ,வம்சி: வாடா மச்சான் வாடா  என்று அவனை கட்டி அணைத்து பச்சபிள்ளைய   இப்படியா படுத்துவது , அந்த சொரக்கா மட்டும் எங்கிட்ட சிக்கட்டும் என்று எகிறவாசு: டே உனக்கும் அடி கொஞ்சம் அதிகம் போல என நக்கலடிக்க,கௌரி: யாருடா மச்சி அந்த சொர்க்கா??…வம்சி: ம்ம் நம்ம கதை ரைட்டர் தான்டா …கௌரி: ஏன்டா ? உனக்கு அம்புட்டு காண்டு , அவங்க உன்னதானடா ஹீரோவா போட்டு இருக்காங்க, என‌ அதி முக்கியமான கேள்வி கேட்க,வம்சி:  மூடிட்டு இரு ஹீரோவாம் ஹீரோ, நீயெலாம் பஸ்ட் எபிசோட்ல இருந்து ரொமான்ஸ் பண்ற ஆனால் நானு ,,,,( என்னடா அங்க சத்தம் -ரைட்டர் மைன்ட் வாய்ஸ்)    சும்மா அக்கா உங்க பெருமைகளை தான் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம் என்று கோரசாக கூறி தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடினார்கள்.( அனைவரும் நல்ல நண்பர்களாக மாறினார்கள் , ஏன் நம்ம ஆதி சார் கூட)________________&&&&&_________________        மகிழினியை காரில் அமர வைத்து டிரைவர் சீட்டில் வம்சி அமர,  கண்ணிலே காதலை பரிமாற்றிக்கொண்டு  காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்த கௌரி, பிரியா,       வம்சி போட்ட சடன் பிரேக்கில் , தற்கால நினைவிற்கு வர ,         “மச்சி தங்கச்சி இறங்க வேண்டிய இடம் வந்துருச்சு ” சோ  அவங்கள இறக்கி விட்டுறையா இல்லை இன்னும் ரொமான்ஸ் பண்ணனுமா என்னும் போதே ,     செவ்வானமாக சிவந்தாள் பிரியா. அண்ணா என்ன பேசுரிங்க என தன்னை சமாளித்து கொண்டு கேட்க,      உண்மையதானமா சொன்ன என அப்பாவியாக வம்சி கூற,          என்ன நம்ம வீட்டு முன்னாடி கார் நிக்குது என மகிழின் பெற்றோர்கள் வெளிவர, சிரித்து கொண்டே பிரியா கார் டோரை ஓப்பன் செய்ய,.          நம்ம பிள்ளைங்க தான் என பெருமூச்சு விட்டு மகிழ் எங்கடா செல்லம் என்று பிரியாவின் தலையை கோதியவாறு கிருஷ்ணன் கேட்க ,     இங்க இருக்கா அங்கிள் என்று பூ போல மகிழை தூக்கி கொண்டு வந்தான் வம்சி.         அவரின் பதற்றமான முகத்தை கண்ட வம்சி இன்று நடந்த அனைத்தையும் சப்டைட்டில் மாறாமல் சொல்லி முடிக்க, தன் மகளை நினைத்து பெருமைபட்டாள் தேவசேனா.     பின் அந்த பூ வை அவளது ரூமில் படுக்க வைத்து ஒரு முத்தம் நெற்றியில் பதிக்க ( நீங்க நினைக்கிற மாதிரிலாம் ஒன்னுமில்லை ப்ரண்ஸ்), வசி வசி என முணுகினாள் மகிழ்.    தன் பிள்ளை யாருடைய பெயரை சொல்கிறாள் என்று குழப்பத்துடன் படி இறங்கிய கிருஷ்ணன் ,     தம்பி இந்தாங்க காஃபி எடுத்துக்காங்க என தேவசேனா அவர்களுக்கு குடுக்க , படி இறங்கிய கிருஷ்ணன் சாப்பிட்டு தான் போகனும் தம்பி என கட்டளையிட,    இல்ல அங்கிள் நாங்க ரிப்ரஸ் ஆகிட்டுதான் சாப்பிடனும் சோ சாரி என்று சொல்லிகூட முடிக்காத நிலையில்,        ஆமா அம்மா பசிக்குது சாப்பாட்ட எடுத்துட்டு வாமா என டைனிங் டேபிள் மீதமர்ந்து கொண்டு பிரியா கூச்சலிட,      சரியான” சாப்பாட்டு சைத்தான் கிட்ட சிக்கிட்டன்போல” ஆமா இங்க சாப்டாம சும்மா கடக்குறா, எப்டி பிச்சைக்காரி மாதிரி தட்டைய தூக்கிட்டு சோறுசோறுனு கத்துறா பாரு “”என  மனதில் நினைத்து கௌரி புலுங்க,     மச்சி மெதுவாடா மூளைக்கு மூச்சு வாங்க போகுது பொறுமையா யோசிடா என நக்கலடிக்க,    “பேவென விழித்து அங்கிட்டு வரைக்குமா கேக்குது “…மச்சி என பார்வையில்  கௌரி கேட்க        ஆமான்டா என கண்ணிசைத்தான் வம்சி.     அய்யோ இந்த மானங்கெட்ட மூளைய முதல்ல தூக்கி வீசனும் என மீண்டும் உள்ளுக்குள்ளே கௌரி பேசி கொண்டிருக்க,    செத்துடுவ அப்படி பண்ணா செத்துப்போய்டுவடா பண்ணாட என பிரியா சிரிக்க,   உனக்குமாஆஆஆ….. என வாயை பிளந்தான்.  ஆமா ஆமாம் வாய மூடு கொசு எதாவது உள்ள போயிட போகுது என பிரியா கலாய்க்க,   வீட்டிற்கு வந்தவங்க கிட்ட இப்படி தான் பேசுவையா செல்லம் என்று  கிருஷ்ணா கண்டித்தார்.     இப்ப இவரு திட்டுறாரா இல்ல கொஞ்சுராரா என மீண்டும் கௌரி மனதில் நினைக்க,.       கண்டிக்கிறார் என கோரசாக மொத்த குடும்பமும் ஒன்றுக்கூட, ஐயோ என தலையை பிடித்தான் கௌரி.( என்னடா கொடுமை இந்த குழந்தைக்கு )    சிறிது சிரிப்பு மழை பொழிய , இதுக்கு மேல எதாவது யோசிச்சு அசிங்க பட கூடாது என  அப்போ நாங்க கிளம்புறம் கிருஷ் டேட், சேனா மம்மி பாய்  என்று  தன்னையே மறந்து  கௌரி சொல்லிவிட,    கிருஷ் டேடாஆஆ  இது இது அவன்தான் அப்படி கூப்பிடுவான் என கௌரியை சந்தேகமாக கிருஷ்ணன் மற்றும் தேவசேனா பார்க்க,       கண்ணடித்த கௌரி, வம்சியிடம் சொல்லிடாதிங்க என சைகையில் கெஞ்ச, கிருஷ் பிரியாவை  பார்த்து நல்லது நடந்தாங சரிதான் என புன்னகையுடன் வழி அனுப்பி வைத்தார்.__________________&&&&&___________________     தங்கள் அரையில் தூங்காமல் மகிழை நினைத்து நினைத்து கௌரியின் உயிரை வம்சி வாங்கி கொண்டிருக்க கௌரியின் போன் அடித்தது.   எவன்டா எனக்கு நைட் பத்து மணிக்கு மேல கால் பண்றுது என எரிச்சலாக கட் செய்ய, மீண்டும் போன் அடிக்க போனை எடுத்துகௌரி:  ஹல்லோ யாரு….போன்: ………ஒன்லி சைலன்ட்கௌரி: ஹல்லோ யாரு? கண்ட நேரத்தில கால் பண்ணி கழுத்தருக்குரது என கத்தகால் கட் ஆனது.மீண்டும் தூங்க கண்ணை மூடிய கௌரியை              மச்சி உன் தங்கச்சி சாப்பிடிருப்பாலாடா?.. என வம்சி கேட்க..    எத்தனை தடவை தான்டா  ஒரே கேள்விய கேட்ப என கௌரி எரிந்து விழுக      எனக்கு அவள பார்க்கனும் போல இருக்குடா என் வம்சி கூற,      அடித்து பிடித்து எழுந்த கௌரி மச்சி அப்ப நீ என பேச ஆரம்பிக்க      ஆமான்டா நீ நினைக்கிறதே தான். அவளை முதல் முறையாக சேரியில் பார்த்த அப்பவே நான் அவகிட்ட சிக்கிட்டன்டா என வம்சி சொல்லி கொண்டிருக்க,                  கௌரியின் மொபைல் அடித்தது….கருமம் பிடிச்ச இந்த மொபைல் கண்ட நேரத்துல தான் அடிக்கும் இத முதல்ல உடைக்கனும் என்று  கத்தியபடி        ஹல்லோ , ஹு ஆர் யூ என கேட்ட வம்சி உனக்கு தான்டா கால் என கௌரியிடம் கொடுக்க,.        எனக்கா என்ற ரீதியில் போனை வாங்கி கடுப்பாக யாருங்க என கேட்க,   ம்ம் உங்க ஆயாஆஆஆ…. என கூறிய பதிலிலே ஆளை கண்டு பிடித்து விட்டான் கௌரி.        யாருனு யோசிக்கிறிங்களா ப்ரண்ஸ்  நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க, நெக்ஸ் எபில நான் சொல்ற  ப்ரண்ஸ்._________________&&&&&_________________  ஆனந்த் மற்றும் லோகேஷ்  மொட்டை மாடியில்  படுத்து இருக்க, தூக்கம் வராமல் மாடியேறி       நாஅஅனேஏஏஏ வருவேன்            அங்கும் இங்கும்                      என்று பாடிக்கொண்டு மாடி ஏறினார்கள் மதுவும் யாஷினியும், (எதிர்ரெதிர் வீட்டில் குடி இருந்தார்கள் )       பீதியடைந்த ஆனந்த் என்னடா ஏதோ அமானுஷ்யம் சத்தம் வருது என பயத்தை அடக்கி கொண்டு லோகேஷிடம் கேட்க     செல்லாத்தா மாரியாத்தா இந்த பச்சபிள்ளய மட்டும்  எப்படியாவது காப்பாத்திடுமா உனக்கு மொட்டை போடுறேன் என வேண்டினான் லோகேஷ்.           என்னடா பண்ற என லோகேஷை ஆனந்த் கிள்ள,  லோகேஷ் ஆ என கத்திவிட,         என்ன அங்க சத்தம் வருவது என பெண்கள் எதிர் வீட்டு மாடியை எட்டிப்பார்த்து,      ஒரு வேளை பேயா இருக்குமா என மது யாஷினியின் காதில் முணுமுணுக்க,      மதுவின் காதை பிடித்து திருகி, எல்லாம் உன்னால தான்டி அப்பவே சொன்ன உங்கிட்ட சாமி பாட்டு பாடலானு ஆனா நீதான் நான் வருவேன் கீழ திரியுவனு பேய் பாட்ட பாடி பேய வரவச்சிட்ட என பயத்துடன் அவளை திட்டினாள்.    “நான் என்ன கனவா கண்ட இப்படி பேய்‌ சொல்லாம குள்ளாம  வருனு” என மது நடிங்கி கொண்டே கூறஇவர்களை பார்த்து சரியான பயந்தாங்கோளிகளுக்கு, சரியான ஜோடிகளை தான் அனுப்பிருக்கம் என  விதி சிரித்தது.  ____________________&&&&&__________________             போன் பேசி களைத்த கௌரி வம்சியை பார்க்க தூக்கத்தில் சொர்க்க லோகத்தை தொட்டு இருந்தான் வம்சி.       காலங்கள் இவ்வாறு இனிமையாக கறைய , முதல் தேர்வை நன்றாக எழுத வேண்டும் என அனைவரும் உறுதி எடுத்தனர்.         கௌரியின் மொத்த அன்பையும் பிரயாவிடம் காட்ட, தன் காதலை வெளிப்படுத்தினாள் தன்னுடன் பேச மாட்டாளோ என ஒரு தலை காதலனாக தவித்து கொண்டிந்தான் வம்சி.      ஆனந்த் யாஷினியின் காதல் பதிலுக்காக காத்திருக்க, லோகேஷ் மதுவிடம் பேசக்கூட தயங்கி கொண்டிருந்தான்.       மகிழ்தான் பிரியாவின் பழைய வாழ்க்கை திரும்ப கிடைத்ததை எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தாள்.         சண்டை மீளும்               

1 thought on “11) மோதலில் ஒரு காதல்”

  1. CRVS2797

    ஆக மொத்தம் நாலு உயிரை காப்பாத்தி ஆபரேஷன்ஸ் சக்ஸஸ், பேஷன்ட்ஸ் ஆல் ஆர் ஷேப்புன்னு வயித்துல பாலை வார்த்திட்டாங்கன்னு சொல்லுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *