2024 புத்தாண்டு வாழ்த்து
ஆங்கில புத்தாண்டு
ஆக்கம் பூர்த்தியாகும்
இன்பங்கள் பெருகிடும்
இன்னல்கள் களைந்திடும்
ஈசலாய் வந்திடும்
பூசல்கள் நீங்கிடும்
இயற்கை சீற்றங்கள்
இல்லாமல் சீராகட்டும்
எத்தகர் இல்லா
உத்தமர் பூமியென
எக்காளம் ஒலிக்கட்டும்
எக்காலமும் ஒளிரட்டும்
எதிலார் குற்றங்களை
ஏசுதல் ஓயட்டும்
பணம் படைத்திடும்
பொருள் விளைவித்திடும்
விவசாயம் ஓங்கட்டும்
விவசாயி உயரட்டும்
கற்றவர் மேன்மையும்
உற்றவர் மென்மையும்
உறுதுணையாய் இணையட்டும் ஊன்றுகோல் என்றாகட்டும்
சாதிமதஇன வேறுபாடு
சாதுரியமாய் களையட்டும்
சாத்தியம் ஆகட்டும்
சாத்திரம் படைக்கட்டும்
பாலியல் வன்முறைகள்
பாவச்செயல்கள் மறையட்டும் மாணவர்கள் கனவுகள்
மாண்புமிகு நனவாகட்டும்
20 24ஆண்டின் வருகை
நன்னெறி புகட்டும்
நல்லாண்டாக மலரட்டும்
நல்வாழ்த்தாக அமையட்டும்
–
-முத்துலட்சுமி மோகன்தாஸ்
Super super sago
ஆதிரா நிபுணன் ஃபேமிலி மீண்டும் எங்களுடன் செம்ம happy ஃபீல் சகி
Super 😍😊
கதையின் ஆரம்பம் மிகவும் அசத்தலாகவும் அருமையாகவும் இருக்கிறது. நிபுணன் ஆதிரா பெயரைப் பார்த்ததும் குஷியாகி விட்டது. சூப்பர்.
அம்மா நீங்க வாசிக்க வந்தது எனக்கு எவ்ளோ ஹாப்பி தெரியுமா? உண்மையவே கண்கள் கலங்குது அம்மா. love u so much 🫂🫂🫂🫂