Skip to content
Home » 21) மோதலில் ஒரு காதல்

21) மோதலில் ஒரு காதல்

கதவை திறந்து பார்த்த வம்சி வாங்க ஆதி என அழைத்தான்.             ஒரு விஷயம் சொல்ல வந்திருந்தார் ஆதித்யா.அவரை சிரித்த முகத்துடன் வரவேற்றாலும் வம்சிக்கு ஒரு பயம் இருந்தது மகிழ் எங்கு சென்றிருப்பால் என்று.

     அவரை சோப்பாவில் அமர வைத்தவன் அவருக்காக கூல்ரிங்கஸ் கொண்டு வந்து கொடுத்து, அவனும் அவருடன் சேர்ந்து பேச ஆரம்பித்தான்.

வசி,” என்ன சார் அதிசயமா இருக்கு, ஒரு கால்கூட பண்ணாம திடீர்னு வந்திருக்கிங்க” என அவரிடம்  கேட்டான்.

ஆதி_ ஏன் வம்சி சொல்லிட்டு வந்தா தான் சோறு போடுவையா , சொல்லாம வந்தா சோறு போட மாட்டையா என சிரிப்பு காட்டிட,வசியும் ஆதியும் சிறிது நேரம் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.

பின் வந்த வேளை நினைவு வர ஆதி வம்சியை கூப்பிட்டு அந்த வாசுவோட நண்பன் ஜெய்ல்ல இருந்து ரிலீஸ் ஆகிட்டான் என்றார்.  

சந்தோஷத்தில் இருந்த வம்சி யின் முகத்தில் திடீரென  இருள் சூழ, எப்படி ஆதி வந்தாங்க அதான் ஃபை  5 இயர் ஆகும்னு சொன்னிங்க அப்புறம் எப்படி என வினவினான்.ஆதியும் பெருமூச்சு விட்டு, காந்தி ஜெயந்திய முன்னிட்டு ரிலீஸ் பண்ணிட்டாங்கலாம் என்றார்.    

ஓக்கே ஆதி நீ கொஞ்சம் பார்த்து பத்திரமா இருங்க என வம்சி ஆதிக்கு அறிவுரை  சொல்ல, அட வம்சி அவன் வெளியே வந்ததுல இருந்து உங்கள பற்றி தான் விசாரிக்கறானு கேள்விபட்டேன் சோ நீங்க  முதல்ல கேர்ப்புல்லா  இருங்க, ஏன்னா எனக்கு உதவுற யாரும் அவனுக்கு எதிரிபோலதான் நினைப்பான் என சொல்ல வம்சியின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.  

  எங்கும் செல்லாதே என்று சொல்லியும் மகிழ் வீட்டில் இல்லாததால், ஒரு வேளை இது அவனுடைய வேலையா இருக்குமோ என யோசித்து கொண்டே அமர்ந்திருக்க அந்த ஏசி அறையிலும் அவனுக்கு வியர்த்து கொட்டியது.    

வம்சியின் இந்த பதற்றத்தை பார்த்த ஆதி என்னாச்சு வம்சி ஏன் உங்க மூஞ்சு இப்புடி மாறிப்போச்சு எதாவது  ப்ராப்ளமா?…. என அவனை நலம் விசாரிக்க, ஆதியை  கட்டி பிடித்த  வம்சி  காலையில் இருந்து மகிழை காணவில்லை என சொல்லவும் ஆதிக்கும் இதயம் வெடிக்காத குறைதான்.  

  என்ன வம்சி சொல்றிங்க,ஏன் இவ்வளவு நேரம் சும்மா இருந்திங்க என கேட்டிட,      அவ பக்கத்துல எங்கையாவது போய் இருப்பானு நினைத்தேன் பட் இப்போ  என சொல்லி கூட முடிக்க வில்லை,,…..    

டே மச்சி , டே மச்சி என ஒரு பதற்றத்துடன் படியிறங்கிய கௌரி கால் தடிக்கி விழ, உருண்டு புரண்டு வந்து கடைசி படிகட்டின் கீழ் ஜம்மென அமர்ந்தான்‌.     

இதை கண்டு ஆதிக்கு அந்த சமயத்தில் சிரிப்பு வந்தாலும் அடக்கி கொண்டிருக்க, வம்சி பெக்கபெக்கவென தன்னை மறந்தும் சிரித்தான்.      

அவனருகில் வந்து முட்டி காலிட்டு அமர்ந்த வம்சியும் ஆதியும் எதுக்கு இப்படி உருண்டுட்டு வந்த நடந்து வந்தா பத்தாதா பைத்தியமே என அவன் தலையில் மட்டென கொட்டினர்.   

    டே விஷயம் தெரிஞ்சா உங்களுக்கே நெஞ்சு அடச்சி போய்டுவிங்க என விரிந்த விழியுடன் கூற, அப்புடி என்னடா மேட்டர் என ஆதி அவனுடைய தோளை தட்டி கேட்க, வம்சி அவனிடம் பேசாததால் என்ன என அறைகுறையாக கேட்டான்.    

  அதையேன்டா கேட்குறிங்க, இந்த ஆதி சாரால்ல ஜெயில்லுக்கு போனவன் ஜெயில்ல இருந்து வெளியே வந்துட்டானாம். வந்தது கூட பரவாயில்லை அவன் நம்மள தான் கேட்டுட்டு  இருக்கானாமாடா என தன் நெஞ்சை பிடிப்பது போல நடித்தான்‌.     

டே ஓவரா நடிக்காத நாங்க பேசிட்டு இருந்தத ஒட்டு கேட்டுட்டு இப்ப ஏதோ புது மெசேஜ் சொல்ற மாதிரி ஆக்டிங் விடுற என ஆதி கையை தூக்கினான்.     

பயப்படுவது போல கௌரி நடித்து விட்டு, சும்மா ஜாலிக்கு என இளிப்பு காட்டினான். ஏய் இருக்க டென்ஷனுக்கு நீ வேறடா என எகிரினான் வம்சி.    

முகத்தை பாவமாக வைத்து கொண்டு என்னடா ஆச்சு என கௌரி கேட்டிட, மகிழ் வீட்டில இல்லடா எவ்வளவு நேரமா தேடியும் அவ இங்க இல்லடா பயமா இருக்குடா என கூறி வம்சி தன் உதட்டை கடித்து நெற்றியில் கைவைத்து யோசித்திட,    

ஆனந்த் மற்றும் லோகேஷ் வெளியில் தோட்டத்தில் இருந்தவர்கள், வீட்டில் நுழைய வம்சி இருக்கும் நிலையை கண்டு அவனருகில் வந்து  அமர்ந்தனர். கௌரி அவர்களிடம் விஷயத்தை சொல்ல, அவரக்ளின் முகத்திலும் பயம் ஒட்டிக்கொண்டது.    

கௌரி தன் மனைவிக்கு கால் செய்து பாரக்க அது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்துவிட அவனுக்கும் இங்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

இதுவரை விளையாட்டாய் இருந்தவன் பிரியா போன்னும் ஸ்விட்ச் ஆஃப்னு வருது என்றிட அவர்களின் முகத்தில் பயம் குடிக்கொண்டது.    

பின் ஆனந்த் மற்றும் லோகேஷ் எந்தவித பேச்சும் பேசாமல் எழுந்து சென்று தன் துணைவிகளை  தங்களது ரூமில் தேட அவரக்ளும் இல்லாததால் ஒரு முடிவுக்கு வந்து வம்சி இருக்கும் இடத்தில் வந்தமர்ந்து அவனை பார்த்து சிரித்தனர்.      

ஆனந்த் வம்சியை கண்டு என்ன வம்சி அதான் நீ மகிழ லவ் பண்ணாம தான மேரேஜ் பண்ண அப்புறம் எதுக்கு உனக்கு இவ்ளோ பயம், இல்ல லவ் பண்ணலனு சொல்லிட்டு உன்ன நீயே ஏமாத்திக்கிறையா?…. அந்த சமயத்தில் அதிமுக்கியமான கேள்வி கேட்டான்.     

  ஆனந்தின் பேச்சில் கோபமுற்ற ஆதி நீ என்னடா மெண்டலா அவனே பயத்துல இருக்கா இதுல நீ வேற என தன் தலையில் அடித்து கொள்ள, லோகேஷ் கண்ணடித்து ஒரு சிக்னல் காட்டினான்.     

அதை பார்த்தபோதுதான் புரிந்தது ஆதிக்கு எதோ….. இங்கு ஏதோ  விளையாட்டு தனம் இருக்கு என யோசித்து கொண்டவன் ஆமா ஆனந்த் எனக்கு இந்த டவுட் இருந்ததது நல்ல வேலையா  நீயே கேட்டுட்ட என பேசிக்கொண்டே கௌரியை பார்த்து கண்ணடித்தான்.    

   பதிலுக்கு கௌரியும் கண்ணடித்து விட்டு அதே தானடா என் பாப்பாவதான் உனக்கு பிடிக்காதே அப்புறம் எதுக்கு இப்படி பீல் பண்ற மாதிரி ரியாக்ட் பண்ற இல்ல எங்கள நம்ப வைக்க இந்த மாதிரி நடிக்கிறையா?…. என வம்சியை  ஏறிட்டு கேட்க,   

தரையை பார்த்து அமர்ந்திருந்த வம்சி முகத்தை மேல் தூக்க அவனது கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. அதே அழு குரலுடன் என்னடா கௌரி சொல்ற, நான் நடிக்கிறேனா உனக்கு தெரியாதா  நான் என் மகிய எவ்வளவு லவ் பண்ண அவமேல எவ்வளவு பைத்தியமா இருந்தனு ம்ம்ம்ம் ஏதோ இப்ப கொஞ்சம் கோபம் அவ்ளோதான்டா மத்தபடி அவதான் என உலகம்,அவனா எனக்கு உயிர், அவளுக்காக தான்டா நான் வாழ்றேன், அவ என்னுடைய ஜெல்ல ராட்சசி, என் அம்மு ,என் உயிர், என் குட்டி உலகம், என் மின்னல் என பேசிக்கொண்டே சோப்பாவில் அமர்ந்திருந்தவன் மண்டியிட்டு அழவே ஆரம்பித்து விட்டான்.     

  இவன் இப்படி அழுதிட கௌரிக்கு மகிழினியை வம்சி காதல் செய்த போது, அவள் இரண்டு நாட்களாக காலேஜ் வராமல் இருக்க, இதே போல உடைந்து விட்டான் என்பது நினைவுக்கு வர,     மீண்டும் அழுது கொண்டிருந்த வம்சி ஏன் உனக்கே தெரியுமேடா மகிழ் இரண்டு நாள் காலேஜ் வராம அவள பார்க்க முடியாம நான் தவித்தனேடா அப்படி இருந்த நான் அவள லவ் பண்ணலையா?…. என அழ     அன்றைய நினைவுக்கே சென்றனர் இருவரும்.

ஹாஸ்பிடல் டியூட்டி முடித்து சென்ற மகிழ் தொடர்ந்து காலேஜிற்கு மூன்று நாள் வராததால் நொந்து போய் அடுத்த நாள் ஹாஸ்பிடலுக்கு ஒரு நடை பிணம் போல சென்றான் வம்சி. அவனுக்கு சாப்பாடு, தண்ணீர் என்பதையே கௌரி கொடுத்து அதட்டினால் மட்டுமே சாப்பிடுவான்.     

ஹாஸ்டலில் வாடிய முகத்துடன் வம்சி வொர்க் செய்து கொண்டிருக்க, எமர்ஜன்சி என ஒரு பேசண்ட் அட்மிட் செய்யப்பட எரிச்சலாக அவர்களை கவனிக்க திரும்பியவன் அதிர்ச்சியில் உறைந்தான்.   

ஆம் அது அவனுடைய உயிரான மகிழே, டெங்கு ஃபீவரால் பாதிக்கப்பட்டவள் இன்று சீரியஸ் கண்டிசனாக பெட்டில் கண் விழிக்க இயலாத நிலையில் கடந்தாள். வம்சிக்கு தலை சுற்றி விட ராகேஷ்தான் மகிழுக்கு டிரிப், டெஸ்டிங், ஸ்கேன் என அனைத்தையும் பார்த்து கொண்டான்.    வம்சி மகிழை விட்டு ஒரு நொடி கூட பிரியவில்லை. அவள் அருகிலே அமர்ந்து அவளது கையை இருக பிடித்து கொண்டு மகி மகி என அழைக்க வார்த்தை வராமல் வெறும் காற்று மட்டுமே வந்தது.   

கௌரிக்கும் தகவல் சொல்ல ஓடிவந்த அவளை பார்த்தவன் வம்சியை கண்டு அவனது  இந்த துடிப்பை கண்டவன் அவனை எந்தவித தொந்தரவும் செய்யவில்லை. மூன்று நாட்களாக எங்கும் செல்லாமல் அவள் அருகிலே இருந்து பார்த்து கொண்டான் வம்சி.   பிரியா மற்றும் கௌரி வம்சியையும் அவனுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து பத்திரமாக பார்த்துக் கொண்டனர்.  

  இவ்வாறு அன்றைய,நினைவளைகளுக்கு சென்று திரும்பினர் வம்சியும் கௌரியும்.

வம்சியை  கட்டியணைத்த கௌரி டே எதுக்கு இப்படி அவள் ப்ளீஸ் ஸ்டாப் டா  என் பொண்டாட்டி உன் பொண்டாட்டி அவனுங்க பொண்டாட்டிலா சேர்ந்து தான் எங்கயோ போய் இருக்காங்க என்று சொல்லவே அழுவதை நிறுத்தினான்‌ வம்சி.   

இதை யாரும் அறியாமல் தன்னுடைய மொபைலில் ரெக்கார்ட் செய்து கொண்டிருந்த லோகேஷின் கண்களிலும் கூட கண்ணீர் எட்டிப்பார்த்தது.   

  டே ஏன்டா இப்படி என மூச்சு விட்ட வம்சி எழுந்து சோப்பாவில் அமர்ந்து மற்றவரின் முகத்தை பார்க்க முடியாமல் தலை குணிந்து கொண்டான்.     அதன் பின் ஆனந்த் அவனை அடேங்கப்பா என்னமா நடிக்கிறான் வில்லனுக்கும் கரக்டா இருப்பான் ரொமான்ஸ் சீனுக்கும் கரெக்ட்டா இருப்பான் போல என அவனை கலாய்த்தான்.   

எதையுமே பேச முடியாத நிலையில் இருந்த வம்சி சிரித்து சிரித்தே சமாளித்து கொண்டிருக்க, காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. மற்றவர்களிடம் இதை மகிழ் கிட்ட சொல்லிடாதிங்க  நானே சொல்லிக்கிறேன் ப்ளீஸ் என கெஞ்ச சரி. ஒப்பு கொண்டிட  அவள் வந்துவிட்டாள் என ஆசையாக கதவை திறந்தான்.            

  ரெட் நிற சுடியில் ஆங்காங்கே சில கோலங்கள் இட்ட டிசைனுடன் அதற்கு அழகு சேர்க்கும் வகையில் ப்ளாக் நிற துப்பாட்டாவை அணிந்து அலை அலையாய் திரியும் முடியை ஒரு கிளிப்புடன் இணைத்து அதில் அவளுக்கு பிடித்த ஊசி மல்லி பூவை தலையில் வைத்திருக்க அதன் மணம் வாசலையே தூக்கியது.  ஆம்  வந்திருந்தது வம்சியின் பெற்றோர் மற்றும் அவனுடைய அக்கா நித்யாவும்தான்.       

நித்யாவை வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தான் ஆதி. அவளை முதன்முறையாக பார்த்தபோதே அவளது குறும்பில் அவனை துளைத்தவன் அவள் இங்கு வரும் சமயம் அறிந்துதான் வந்திருந்தான் போல.    

  அவர்களை அழைத்து வந்து சோப்பாவில் அமரவைத்த வம்சி , அவர்களிடம் விளையாட்டு காட்டி கொண்டிருக்க கௌரி சமையலறைக்கு சென்று காஃபி போட்டு கொண்டிருந்தான்.   லோகேஷ், ஆனந்த் இருவரும் டே சீக்கிரம் டா நீ காஃபி போடறதுக்குள்ள விடிஞ்சிடும் போல இருக்கு என நக்கலடித்தனர்.

இருங்கடா பண்டாரங்களா என்ன அவசரம் உங்களுக்கு என் பதிலடி கொடுத்தவன்,    ஒரு டிரேவில் அழகான வடிவமைப்பு கூடிய கண்ணாடி தம்ளர்களில் காஃபியை கொண்டு வர அனைவரின் நாவிலும் எச்சில் ஊறியது. கௌரி கொண்டு வருவதை பார்த்த வம்சியின் தாய் ஆமா “எங்க என் மருமகங்கள  ஆளேயே காணோம்”….. என விசாரணை நடத்த,    

காஃபியை  குணிந்து வம்சி அம்மாவிற்க்து குடுத்த படி அவங்க சாப்பிங் போய் இருக்காங்க இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துடுவாங்க என கூற,

வம்சி இவன் எதாவது சொல்லுவான் என எதிர்பாராதவன் கோவிலுக்கு போய் இருக்காங்க இன்னும் கொஞ்ச நேரத்துல பூஜை முடிந்ததும் வந்திடுவாங்க என்றிட,

ஆனந்த் அவங்க உங்களுக்காகத்தான் மாதாஜி சிக்கன் மட்டன் வாங்கிட்டு வந்து குழம்பு வைக்க போறனு வாங்க போய் இருக்காங்க என சொல்ல,

லோகேஷ் அவங்க பியூட்டி பார்லர் போய் இருக்காங்க அத்தஜி என ஆளுக்கு ஒரு பதிலை பிதற்றினார்கள்.   

  இப்படி ஆளாளாளுக்கு ஒரு பதில் சொல்ல இதை எதிர் பார்க்காதவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொள்ள,        ஏய் என்னடா எல்லாம் ரீல் சுத்துறிங்களா?….. என நித்யா பெரிய மனுஷி போல கேட்க, அனைவருக்கும் கண்ணடித்த வம்சி நான் பார்த்துக்கிற என கையசைத்தான். 

    பின் நித்யாவை பார்த்து சைகை செய்ய, அவள் அவனை முறைத்தாள். பின் மண்டியிட்டு அமர்ந்த வம்சி அவனுடைய தாயின் முந்தானையை பிடித்து சுருட்டி அவங்க எல்லாரும் பஸ்ட் பியூட்டி பார்லர் போய் மேக்கப் போட்டுகிட்டு, அப்புறம் சாப்பிடக் போய் டிரஸ் பட்ஜஸ் பண்ணிகிட்டு, கோவிலுக்கு போய் புருஷனுங்களான எங்களுக்கு வேண்டிகிட்டு, அப்புறம் மட்டன் சிக்கன் வாங்கிட்டு வரனு சொன்னாங்க அம்மா என நெளிந்து கொண்டே சொன்னான்.   

அவன் தலையை பிடித்து விட்ட அவனது அம்மா, சரிடா எழுந்திரு என சொன்னார்.எழுந்து நின்ற வம்சியிடம் மச்சி ஆசை இருக்கலாம் இவ்வளவு பேராசைலாம் இருக்கக்கூடாது டா அதும் உன் பொண்டாட்டி உனக்காக சாமிக்கிட்ட வேண்ட போறாளா?…. என கேட்ட ஆனந்தை  முறைத்து தள்ளினான்.       

மறுபுறம் ஹே இன்னும் எவ்வளவு நேரம் தயவு செய்து எங்கள விடுங்க, அங்க எங்க மாமியார் மாமனார் எல்லாம் வந்திருப்பாங்க நாங்க போகனும் என கத்த   

   ஹே இது என்ன உங்க வீடா உங்க இஷ்டத்துக்குலாம் எதும் பண்ண முடியாது வாய மூடிக்கிட்டு கப்சினு உக்காருங்க என அவர்களை ஒரு விரல் நீட்டி மிரட்டினார்கள்.    

💞💞💞💞 சண்டை மீளும் 💝💝💝💝        

  உங்களில் ஒருத்தி நான் 🥰💞.                   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *