Skip to content
Home » 3. சுடரி இருளில் ஏங்காதே!

3. சுடரி இருளில் ஏங்காதே!

இது சின்ன யூடி தான் தோழமைகளே! வெளியே போற வேலை வந்துருச்சு. நிறைய டைப் பண்ண முடியலை சாரி. நெக்ஸ்ட் யூடி பெருசா போஸ்ட் பண்றேன்.

🌸🌸🌸🌸🌸

அந்த மூவருக்கும் உணவின் மீது வெறுப்பு இல்லை. ஆனால், அதை உண்பது தான் அவர்களுக்கு அவ்வளவு கடினமாக இருந்தது.

அதைக் கண்டு மேலும் வருத்தமுற்ற தாட்சாயணியோ,”இங்கே வா. நான் ஊட்டி விட்றேன்” என்று இளைய மகளை அழைத்து அவளிடமிருந்து தட்டை வாங்கி அதிலிருந்து உணவை அவளுக்கு ஊட்டி விட்டார்.

அதே மாதிரி, தனது தட்டில் கோலம் போட்டுக் கொண்டிருந்த மூத்த மகளையும் தன்னருகே அழைத்து அவளுக்கும் உணவைக் கொடுத்தார் அவளது அன்னை.

“நீங்களும் சாப்பிடுங்க ம்மா” என அவரையும் உண்ண வைத்தனர் அவருடைய இரு மகள்களும்.

“சரிம்மா” என்று அம்மூவரும் தங்களது சாப்பாட்டை முடித்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டார்கள்.

தனது மூத்த மகளின் நிச்சயத்தார்த்தத்தில் கலந்து கொள்ள வேண்டி, தான் வேலை பார்க்கும் இடத்தில் மிகவும் முயன்று விடுப்பைக் கேட்டு வாங்கிக் கொண்டவர்,“எப்படியோ லீவ் கிடைச்சிருச்சு ம்மா” என்று அதைத் தன் மனைவியிடம் கூறினார் தூயவன்.

“நல்லவேளை ங்க! நீங்க எந்த ஃபங்க்ஷனிலும் கலந்துக்கிறது இல்லைன்னு பிள்ளைங்க ஃபீல் பண்ணுவாங்க. இப்போ இதைக் கேட்டால் சந்தோஷமாக ஆகிடுவாங்க” என்று அவரிடம் கூறினார் தாட்சாயணி.

“ம்ஹ்ம். நடக்கப் போறது நம்மப் பொண்ணோட கல்யாணம். அதுக்கு நானே வராமல் இருந்தால் எப்படி?” எனக் கூறி விட்டுச் சென்றார் அவரது கணவர்.

அதன் பின்னர், அவருடைய விடுப்பைப் பற்றித் தங்களது மகள்களிடம் தெரிவித்தார் அவர்களது தாய்.

தினகரன் மற்றும் புவனாவின் நிச்சயத்தின் அன்று காலையில், வெகு விரைவாகவே எழுந்து தாங்கள் முதலில் அந்த மண்டபத்திற்குச் சென்ற தூயவனும், தாட்சாயணியும், அங்கே அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்து விட்டதா? என மேற்பார்வை செய்து முடித்து விட்டு, மணப்பெண்ணையும், தங்களது இளைய மகளான ரேவதியையும் வரவழைத்து மணமகள் அறையில் இருந்து காத்திருக்கச் சொன்னார்கள்.

இங்கே வருவதற்கு முன்பாகவே, வீட்டிலேயே தனது நிச்சயத்திற்கான முகம் மற்றும் சிகை அலங்காரங்களை முடித்து தான் வந்திருந்தாள் புவனா.

அதனால், சகோதரிகள் இருவரும் தங்களைப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.அவர்கள் வந்த, சிறிது நேரத்திலேயே, தினகரனும், அவரது வீட்டாரும் மண்டபத்திற்கு வந்திருந்தார்கள்.

“மாப்பிள்ளை வீட்டாளுங்களைப் பார்த்துட்டு வருவோம்” எனத் தன் கணவனுடன் அவர்களிடம் போனார் தாட்சாயணி.

“வாங்க ஐயா! வாங்க ம்மா” எனத் தங்களது சம்பந்தி வீட்டுக்காரர்களை வாயார அழைத்தனர் இருவரும்.அதற்குப் பிறகு, சில மணி நேரங்களிலேயே, தினகரன் மற்றும் புவனாவின் நிச்சயத்தார்த்தம் சுபமாக நடந்து முடிந்திருந்தது.

அவர்களுக்கான திருமண நாளும், அப்போதே, குறிக்கப்பட்டு விட, அதில் இரு வீட்டாருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியாக இருந்தது.அந்த நிகழ்வு நடந்து முடிந்ததும், மாலையில் மண்டபத்திலிருந்து கிளம்பி வீடு சென்று சேர்ந்தார்கள்.அந்த நிச்சயத்தில் ஆன செலவுகளை எல்லாம் ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொண்டனர் தூயவன் மற்றும்‌ தாட்சாயணி.

ஏனெனில், தங்களுடைய முதல் மகளுக்குத் திருமணத்தை நடத்தி முடித்தப் பிறகு, இரண்டாவது மகளுக்கும் இதையெல்லாம் பார்த்துச் செய்ய வேண்டுமல்லவா? எனவே, அதற்குரிய செலவுகளைக் தெரிந்து கொண்டு இப்போது குறிப்பாக எழுதி வைத்துக் கொண்டால் அது பிற்காலத்தில் தங்களுக்கு நிச்சயமாக உதவும் என்று தான், கணவனும், மனைவியும் இப்படி செய்கிறார்கள்.

இந்த திருமணத்தை நடத்துவதற்கு அவர்களிடத்தில் கணிசமான அளவிற்குப் பணம் இருந்தது. அதை வைத்துச் சமாளித்துக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக, அந்தப் பணத்தை வேறு ஒரு விஷயத்திற்கு அவர்கள் செலவு செய்ய நேர்ந்தது.

அதிக அளவிலான பணம் செலவாகி விட்டது என்பதை விட, அதை எதற்கு உபயோகித்தார்கள் என்பதை நினைக்கவே அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு வேதனையாக இருந்தது.

தனது வயது ஏறுவதாலும், வேலையில் இருந்த அழுத்தத்தாலும், அதனால், அதைச் சமாளிக்க முடியாமலும், திணறிக் கொண்டிருந்தவரோ, தன்னுடைய முதல் மகளின் திருமணத்தை நடத்தி முடிக்கும் வரையிலாவது தான் பார்க்கும் வேலையை விட்டு விடக் கூடாது என்று உறுதியாக இருந்தார் தூயவன்.

ஆனால், அவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாகி, ஒரு கட்டத்தில் இரண்டாவது முறையாகத், தான் வேலை செய்யும் இடத்தில் மயங்கி விழுந்தவரை, முன்பை போலவே, அவருடன் வேலை செய்து கொண்டிருந்த சிலரோ, மருத்துவனையில் சேர்த்து விட்டுத் தாட்சாயணிக்குத் தகவல் தெரிவித்து இருக்கவும், அதைக் கேள்விப்பட்டதும், துவண்டு போய் அவரைப் பார்க்கச் சென்றார்கள் மூவரும்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு, வேலையை விடுமாறு அவரிடம் மன்றாடிக் கொண்டு இருந்தார் அவரது மனைவி.

“அதெல்லாம் முடியாது தாட்சா! நம்மப் பொண்ணுக் கல்யாணத்தை வச்சிட்டு இப்போ போய் லீவ் போட்டால் சம்பளத்தில் பிடிச்சுப்பாங்க!” என்று அதை நிர்தாட்சண்யமாக மறுத்து விட்டார் தூயவன்.

“அப்பா ஏன் ம்மா இப்படி இருக்கார்? வேலை விட்டுட்டு வீட்டில் ரெஸ்ட் எடுக்கலாம்ல?” என்று அவரிடம் வினவினர் அவர்களது மகள்கள்.

அவர்களிடம் உண்மையான காரணத்தைக் கூறாமல்,”அவருக்கு அந்த வேலை மேல் அவ்ளோ இஷ்டம் டா ம்மா. அதான், அவரால் அதை விட முடியலை” என்று இருவரிடமும் கூறி விட்டார் தாட்சாயணி.

“அப்போ லீவ் கூடப் போடச் சொல்லுங்க!” எனவும்,அவர்கள் கூறியதைப் போல, தனது வேலைக்கு ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு ஓய்வில் இருந்தார் தூயவன்.ஆனால், அந்த விடுப்பிற்குப் பிறகு, வேலைக்குச் சென்றவருக்கு, தனது உடலின் பாகங்கள் முறையாகச் செயல்படுவதைப் போலத் தெரியவில்லை.

தொடரும்

9 thoughts on “3. சுடரி இருளில் ஏங்காதே!”

  1. CRVS 2797

    அச்சோ…! என்ன பிரச்சினை அவருக்குன்னு தெரியலையே. ஒருவேளை, அதனால் தான் , அவர் இறந்தாரா…???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *