ரி-ஷி-வா-27
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அடுத்த நாள் காலை எழுந்த போது ரிஷி இன்னமும் உறங்க, லீவு என்று அவளுமே மீண்டும் போர்வையை போர்த்தி உறங்கினாள்.
மணி அப்படியே ஒன்பதை தாண்டவும் தான் ரிஷி எழுந்து கவனித்ததே.
“அடப்பாவமே இவ்ளோ நேரம் தூங்கிட்டேன்.” என்று துயில் கலைந்து பல் விலக்கி பக்கத்து அறைக்கு சென்று ஒர்க் அவுட் செய்ய ஆரம்பித்தான்.
அரைமணி நேரம் தாண்டவும் வேர்வை சொட்ட வெளி வந்தான். அதே போல சிகையை அள்ளி முடித்து கொட்டாவி விட்டபடி ஷிவாலி வந்தாள்.
“குட் மார்னிங்.” என்று சோம்பல் முறிக்க, ரிஷி குளிக்க சென்றான்.
தன்னை திட்டவில்லை கேலி கிண்டல் எதுவும் செய்யவில்லை. தான் எழுந்த நேரம் வைத்து கோபமோ? என்று யோசித்தாள்.
‘இதுக்கெல்லாம் கோபப்பட்டா நான் ஒன்னும் பண்ண முடியாது பா. ஒன்னு எழுப்பி விட்டிருக்கணும். இல்லை நான் இப்படி தான்னு அட்ஜஸ்ட் பண்ணணும்.’ என்று பல் விளக்க சென்றாள்.
அவன் குளித்து கீழே சென்றிட, அவளோ குளித்து முடித்து அவனை தேடினாள்.
கீழே வந்ததும் முட்டை தேசை சாதா தோசை என்று எடுத்து வைத்து அவன் வெங்காய தோசையை பிய்த்து உண்டான்.
“எனக்கு இட்லி பொடி.. டெய்லி சாப்பிட பிடிக்காது.” என்றாள்.
“அதுக்கு… நீ தான் சமைக்கணும். தினமும் நானே செய்து தர முடியுமா?
“தென் நான் சமைக்கணும்னு சொல்ல வர்றியா” என்றாள்.
“அப்படி சொன்னா தான் உனக்கு பிடிக்காதே.” என்று சாப்பிட்டு அவன் சாப்பிட்ட தட்டை மட்டும் கழுவி வைத்தான்.
சாப்பிடலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் வைத்து விட்டு வயிறு காந்த விழுங்கினாள்.
மதியம் நான் சமைக்கணுமா?” என்று கேட்டாள்.
“உன்னிஷ்டம் ஷிவ். ஆர்டர் பண்ணிடலாம்னாலும் ஓகே. இல்லை…. வெளியே லஞ்ச் பார்த்துக்கலாம்னாலும் ஓகே” என்று கூறிட, அங்கும் இங்கும் நடந்தவள் பேங்க் பேலன்ஸ் பார்த்தாள்.
அடிக்கடி முன்பு போல ஆடினால் பணம் மாயமாகிடுமோ என்று அஞ்சினாள்.
“எனக்கு சமைக்க தெரியாதுனு அம்மா கல்யாணத்தப்பவே சொன்னாங்க” என்று யாரிடமோ கூறுவது போல பேசினாள்.
“ம்… தெரியும். ஆனா தெரியலைனு நீ காலேஜ் போகாம இருந்தியா படிக்காம இருந்தியா. போனா தானே படிக்க முடிஞ்சுது.
நான் போஸ் பண்ணலை. சமைனு ஆர்டர் பண்ணலை. அப்பறம் டிவோர்ஸ் கேட்டு நிற்ப, இப்ப இதுக்கெல்லாம் கூட டிவோர்ஸ் தர்றாங்களாம்.
கணவன் சமைக்க கூறியதால் மனைவி விவாகரத்து.” என்று பேப்பரை நீட்டினான்.
பேப்பரை பிடுங்கி தூரயெறிந்து எனக்கு ஹெல்ப் பண்ணுவியா? ட்ரை பண்ணறேன்.” என்று கேட்டாள்.
“என் சேவிங் இருபதாயிரம் தான் இருக்கு. அப்பா வேற பணம் போடுவாரா இல்லையானு தெரியலை. இருக்கற காசையும் வேஸ்ட் பண்ண விரும்பலை” நிதிநிலையால் தான் என்று விளக்கினாள்.
“பொடிடப்பி நல்லா விவரமா தான் இருக்க,” என்று பதினொன்றுக்கு மேலே சமைக்கலாமென கூறினான்.
மதியம் கையை கட்டி கொண்டு மெட்ராஸ் சமையல் என்ற சேனலில் எதையோ பார்த்து ரிஷி சொல்ல சொல்ல செய்தாள்.
சமையல் செய்து முடிப்பதற்குள், “டேய் பணியாரம் இந்த கிட்சன் பிப்’ எல்லாம் இல்லையா. பாரு என் டிரஸ் அழுக்காகுது. என்று திட்டினாள்.
“அழுக்கான கழட்டிக்கலாம் பொடிடப்பி. அந்த ஆனியன் வதக்கு.” என்று கரண்டியை அவள் கையில் திணித்தான்.
“டேய் நைஸா என் கையில கரண்டி கொடுத்துட்டல, உன்னை வச்சிக்கறேன் டா.” என்று மூக்குறிந்து வெங்காயத்தால் வந்த கண்ணீரை துடைத்தபடி கூறினாள்.
“நீ பிசியோதெரபிஸ்ட் தானே. அடுத்து என்ன பண்ணுவ” என்றான்.
“ம்ம்… உன் நரம்பு, தசை, எலும்பை உடைச்சி அதுக்கு வைத்தியம் பார்த்துக்கிட்டு இங்கயே இருக்கலாம்னு ஐடியா இருக்கு. பார்ப்போம்.” என்றாள்.
“நீ செஞ்சாலும் செய்வடி.” என்று தாளிக்க கற்றுக் கொடுத்தான்.
ஸப்பா டா. முடிஞ்சுது.” என்று டைனிங் டேபிளில் வைக்க சென்றாள்.
“எங்கம்மா குழம்பு ரசம் பொரியல் கூட்டுனு நாலு வகை பண்ணுவாங்க. ஆனா என்னைக்கும் இப்படி அலட்டிக்க மாட்டாங்க. ஆனா நீ இருக்கியே ஸப்பா….. ஓவரா சீன் போடுற,” என்றான்.
“டேய்… நான் பப்பட் ரைஸ் செய்துயிருக்கேன். இதுவரை சாப்பிட்டு இருக்கியா.. ஆஹ்… இங்க பாரு நெய் ஊற்றி முந்திரி பாதம் கூட வறுத்து போட்டிருக்கேன்.
இங்க பார்த்தியா கையில அப்பளம் பொறிக்கறப்ப சுட்டுக்கிட்டேன்.” என்று தனது வீரத்தை பறைச்சாற்றினாள்.
“இதோடா… அப்பள சாதம் செய்து பெருமை வேற.” என்று கலாய்த்தான்.
“அப்படின்னா நீ சாப்பிடாதே.” என்று தட்டை பிடுங்கினாள்.
“என்ன நீ சட்டு சட்டுனு கோபப்படற இங்க பாரு எந்த எமோஷனலையும் சட்டுனு வெளிப்படுத்தாதே. கொஞ்சம் யோசி. நான் உன்னிடம் ஜஸ்ட் கிண்டல் பண்ணி விளையாடினேன்.” என்றான்.
“என்னிடம் விளையாடாத. அதுவும் கிண்டல் பண்ணி.” என்றாள்.
“நீ கூட தான் பணியாரம், தொப்பை இருக்கு, சுமாரா இருக்கேன் என்றெல்லாம் கிண்டல் பேசற. நான் கண்டுக்கலையே. ஜஸ்ட் ஃபன் என்று விடலையா. நீயும் ரியாக்ட் பண்ணாதே ஃபன்னாவே எடுத்துக்கோ” என்றான் ரிஷி.
“லுக் நான் எது பண்ணினாலும் எல்லாத்தையும் அக்சப்ட்(accpect) பண்ணு. எதையும் திரும்ப என்னிடம் எக்ஸப்ட்(expect) பண்ணாதே.” என்று பப்பட் ரைஸ் சாப்பிட ஆரம்பித்தாள்.
கூடவே அதற்கு சிப்ஸ் வேறு கொரிக்க எடுத்து கொண்டாள்.
“வாவ் இது நல்லாயிருக்கே. எல்லாத்தையும் அக்சப்ட்(accept) பண்ணு பட்(but) எதையும் எக்ஸப்ட்(expect) பண்ணாதே ஆட்டோ பின்னாடியே எழுதி வைக்கலாம் ஷிவ். ஷிவ்… நீ பேசறது நல்லாயிருக்கு.” என்று கூறினான்.
அவனை விநோதமாக பார்த்து கொண்டு திரும்பினாள். அவனோ ‘பேசறது நல்லாயிருக்கு ஆனா நடைமுறை என்று இருக்கே… ரிஷி… அதுக்கு என்ன பண்ண போற… இப்படியே பார்வையாளரா இருந்து அவ சொற்பொழிவுக்கு கை தட்ட போறியா.’ என்று மனசாட்சி இடித்துரைத்து இகழ்ந்தது.
தான் பேசியதற்கு ஷிவாலி எந்த எதிர்வினை காட்டாது போக, அவன் மனசாட்சிக்கு அவன் எதிர்வினை காட்டாமல் சாப்பிட செய்தான்.
கடவுளே விக்கிட்டு செத்துடுவேன் போல… இவ என்ன முழுங்கறா… என்று “உனக்கு டிரை ரைஸ் பிடிக்குமா ஷிவ்” என்றான்.
“ம்ம்ம.. ப்ரைடு ரைஸ் பிடிக்கும்.” என்றாள்.
‘அதான்… இந்த விழுங்கு விழுங்கறா… டேய் ரிஷி அம்மாவிடம் இரண்டு சட்னி இரண்டு குழம்புனு அண்டா அண்டாவா ஊத்தி குழைவா சாப்பிட்டு இப்ப கைப்பிடி அளவுக்கு கூட குழம்பில்லாம சாப்பிடறியே டா. இதுக்கு தான் கல்யாணத்தை நிறுத்தாம நீயா வாலண்ட்ரியா தலையை கொடுத்தியா..?’ என்று மீண்டும் மனசாட்சி முன் வந்து சலாம் வைத்தது.
தட்டிலிலிருந்த உணவை சாப்பிட்டு முடித்து கை அலம்பி நின்றான். லேப்டாப்பில் திருட்டு தனமாக டவுண்லோட் செய்த புது படத்தை மீண்டும் பார்க்க ஆரம்பித்தார்கள்.
“எப்படி டவுண்லோட் பண்ணின. க்ளியர் பிரிண்டா இருக்கு.” என்று கேட்டாள்.
“ஆபிஸ்ல ஒரு பிரெண்ட் டவுண்லோட் பண்ணினான். அப்போ பென்டிரைவ்ல காபி பண்ணினேன். நீ வேற அன்னிக்கு படத்தை சரியா பார்க்கலைனு சொன்னியா… பச் நானும் படத்தை பார்க்கலை” என்று பிளே செய்து போட ஆரம்பித்தான்.
“அன்னிக்கு என்னையே பார்த்த இன்னிக்கு படம் பார்க்கற மூட்ல இருக்கியா?” என்று கேட்டாள்.
“ஆமா… ஆபிஸ்ல பக்கத்துல உட்கார்ந்து வேலை செய்யற நேரம், லஞ்ச் டைம் என்று இந்த பர்டிக்குலர் படத்தையே பேசறாங்க. நான் பார்க்காம பேச முடியலை. சோ பார்த்துட்டா நானும் ஜோதில ஐக்கியம் ஆகி படத்தை பற்றி என் பாயிண்ட் ஆப் வியூ சொல்லலாமேனு தான்” என்று படத்தை தீவிரமாய் பார்க்க ஆரம்பித்தான்.
கட்டிலில் நன்றாக சாய்ந்து தலையணையை மடியில் வைத்து வண்ண விளக்கை ஒளிர விட்டு ரிஷி பார்க்கவும், ஷிவாலியோ கையை பிசைந்து அவனின் கவனம் தன்பக்கம் இல்லையே என்று நகம் கடிக்க ஆரம்பித்தாள்.
பாதி படம் ஓடிக்கொண்டிருக்க அவளாகவே அவனின் தோளில் சாய்ந்தாள்.
தலையை மட்டும் திருப்பி தன் தோளில் பதிந்த அவளின் சிரத்தில் நயனம் பதிந்து, கையை தலையில் அழுத்தினான். அதன் பின் மீண்டும் கவனம் படத்தில் மூழ்கினான்.
தியேட்டரில் இன்டர்வல் முடிந்தப்பின் அவன் கொடுத்த முத்தம் வந்த காட்சி வந்ததும், ஷிவாலி நாவல் உதட்டை ஈரப்படுத்தி தவித்தவளாய் அவனின் கையை இறுக பிடித்தாள்.
அவனோ அவளின் செயலில் கவனம் சென்றாலும் விழியை லேப்டாப்பில் பதிந்து நின்றான்.
அடிக்கடி அவள் தன்னை கண்டு திரும்புவது அவன் அறிந்தாலும் அவனாக எதையும் கேட்கவில்லை.
படம் முடிவடையும் வரை இதே நடக்க, மாலை ஆறானது.
ஸ்நாக்ஸ் எடுக்க கிச்சன் வந்தார்கள்.
ஷிவாலி கவனம் மேல் ஸெல்ப்பில் பதிந்து மீண்டது.
“அங்க என்ன பார்வை குயிக்கா ரிமூவ் பண்ணறேன். இப்ப எதையும் எடுத்து உடைச்சிடாதே.” என்று அவளை இழுக்க, “எவரி சாட்டர் டே ட்ரிங் பண்ணுவியா?” என்று கேட்டாள்.
“சேசே அப்படியில்லாம் இல்லை. எப்பயாவது. பிரெண்ட்ஸோட மூவி போயிட்டு வந்தாலோ டின்னர் ஹெவியா சாப்பிட்டாலோ லைட்டா எடுத்துப்பேன்.” என்று கூறி முறுக்கை எடுத்து வா போகலாம்” என்று கூப்பிட்டான்.
“இன்னிக்கு சாப்பிடலை” என்று கேட்டு விட, “ஓய்… விட்டா கம்பெனி கொடுப்ப போல” என்று விளையாட்டாய் கூறி இழுக்க, “டேஸ்ட் பண்ணவா?” என்று கேட்டாள்.
இம்முறை தட்டை கிச்சன் மேடையில் வைத்து, “என்னாச்சு உனக்கு. ஷிவ்… இதுக்கு முன்ன சரக்கு அடிச்சியிருக்கியா?” என்று கேட்டான்.
“ஒரு தடவை பிந்து வாங்கிட்டு வந்தா. அவ லவ்வரிடம் கேட்டு. அப்போ டேஸ்ட் பண்ணினேன். பட் அது பிடிக்கலை உடனே வாமிட் எடுத்துட்டேன். மட்டமானதா இருக்கும்னு தோனுச்சு” என்றதும், ரிஷியோ ‘ஆத்தி… டேய் ரிஷி 2k kid தைரியசாலியில்லை’ என்று கலாய்த்தது.
தலையை உலுக்கி ரிஷியோ, “ஷிவ்… பசங்க குடிக்கிறதே தப்பு. நீ எப்படி?” என்றான்.
“நான் என்ன உன்னை மாதிரி சாட்டர் டே சாட்டர் டே என்று அடிச்சேனா. ஒன்ஸ் அப்பான் எ டைம் ஒரு முறை சின்ன கப்ல பட் அதுவே பிடிக்கலை. அன்னிக்கு வேண்டாம்னு சொல்லி படுத்துட்டேன். இன்னிக்கு ட்ரை பண்ண தோணுது.” என்றாள்.
ரிஷிக்கு அவள் பேச்சு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
ஆனால் காலவோட்டத்தில் இதையெல்லாம் வாட்ஸப்பில் காணொளி மூலமாக காணாதது அல்ல. பள்ளி சீருடை அணிந்த சிறுமிகள் கூட நாலைந்து பாட்டிலை முன் வைத்து மொடாக்கென்று குடித்து அதனை காணொளியாக உலாவ விட்டு போனில் சுற்றி கொண்டிருப்பது உண்மை தானே.
“ஓகே ஷிவ்… பட் உனக்கு வேற ரெட் ஒயின் வாங்கி தர்றேன். இது வேண்டாம்.” என்று கூறினான்.
“இல்லை… இன்னிக்கு ட்ரை பண்ணி பார்க்கறேன். வாமிட் வந்தா வேண்டாம்.” என்றதும் ரிஷிக்கோ தலை சுற்றியது.
“ஏன் நீ பண்ணினதை நான் பண்ண கூடாதா.” என்று கேட்டதும், ‘தப்பை யார் செய்தாலும் தப்பு தான். இதுல பாலின வேறுபாடு என்ன இருக்கு.’ என்று யோசித்தான்.
தனக்கு இந்த பழக்கம் இருக்கு என்றதும் அவள் எளிதாக தானே எடுத்து கொண்டாள் ஆவளுக்கு பழக்கம் அல்ல சிறு குழந்தையின் ஆசை. அதை பேராசையாக கொண்டு செல்லாமல் பார்த்து பக்குவமாய் முடித்திடு என்றது மனம்.
ஒரு முறை கொடுத்துவிட்டு இனி வீட்டில் வாங்கி வைக்கவே கூடாதென முடிவோடு அதனை எடுக்க ஸ்டூல் போட்டு ஏறினான்.
-அலப்பறை தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Paavam avana entha paadu paduthurale
Wow Rishi you are so pavam da. Very intresting sis