Skip to content
Home » Hello Miss எதிர்கட்சி-18

Hello Miss எதிர்கட்சி-18

அத்தியாயம்-18

   தன் வயிற்றில் ஆராவமுதனின் குழந்தை உதித்தை அறிந்த சுரபி, அதனை உடனடியாக அமுதனிடம் உரைக்கவில்லை.

   மூன்று நாட்களாக இந்த விஷயத்தை சொன்னால், ஆராவமுதனின் தந்திரப்புத்தி எப்படி தன்னை அவனுக்கு கீழ்படிய வைக்குமென்று சிந்தித்தாள்.

   நிச்சயம் ஆராவமுதன் இதை பகடையாக முடிவெடுத்து காய் நகர்த்தினால், தன்னால் அதை தாங்க இயலுமா?

  இதில் தேர்தலுக்கு பின்னரே திருமணம் என்று குறிப்பிட்டு இருக்க, இந்த நேரம் இதை தெரிவித்தால் குழந்தையை வைத்து, தனக்கு வேறு வழியில்லை என்றெண்ணி ‘தேர்தலில் நிற்பேன்’ என அமுதன் மனம் மாறினால்?
   ஆனால் எத்தனை நாள் குழந்தை உருவானதை மறைக்க முடியும்? வயிறு காட்டி கொடுத்திடும். குழந்தையை கலைக்கவோ, அழிக்கவோ சுரபியால் முடியாத காரியம். அவள் அந்தளவு கல்நெஞ்சக்காரி கிடையாது. என்ன கூடுதலாக அவளுக்கு அவப்பெயர் கிடைக்கும்.
  கண்டதையும் யோசிக்காமல் முதலில் ஆராவமுதனிடம் சொல்லிப்பார்.’ என்றது மூளை.

   அதன் காரணமாக போனில் ஆராவமுதன் பேசும் போது, “அமுதா நான் உன்னை நேர்ல சந்திக்கணும்” என்றாள்.

  “ஏன்? என்ன காரணம்?” என்று கேட்டான்.

“நேர்ல சொல்லறேன்” என்றாள்‌ சுரபி.‌
 
  “எங்க சந்திக்கலாம்?” என்று கேட்டான் அமுதன்.

  “இதுக்கு முன்ன சந்திப்பு நிகழ்ந்த உன்னோட பீச்ஹவுஸ்லயே சந்திப்போம்.” என்றாள்.

“சரி” என்றவன் போனை வைத்து அரைமணி நேரம் ஆனப்பின்னும் அதையே வெறித்தான்.

‘இவளா சந்திக்க கேட்பது ஆச்சரியமாக இருக்க, என்ன காரணமா இருக்கும்’ என்று பற்பல யோசனையில் சென்று வந்தான்.

  உன்னிகிருஷ்ணனை சுரபிக்கு மணமுடிக்க நட்ராஜ் விரும்புவதை அறிந்தப்பின், இப்படி ஏதேனும் ஒரு நாள், வித்தியாசமாய் சுரபி நடக்க கூடும் என்று எதிர்பார்த்தான்.

  அதனால் சற்று எரிச்சலோடு சுரபியின் வருகைக்காக, அவனது பீச்ஹவுஸில் காத்திருந்தான்.

  சுரபி வரவும், ஆராவமுதன் அவளை முறைத்துக் கொண்டு தான் இருந்தான்.

சுரபியும் தயங்கி தயங்கி சோபாவில் அமர, “என்ன சாப்பிடற” என்றான்.

  “ஃப்ரெஷ் ஜூஸ்” என்றாள்.

   பணியாளோ “மேம் ஆப்பிள், ஆரேஞ்ச், பைனாப்பிள், மேங்கோ, மாதுளை, தர்பீஸ் இதுல எந்த ஜூஸ் போடறது” என்று கேட்டார்.

  “ஆஹ்… போமோகிரேட்” என்று கூறிட, பணியாள் நகர, “உன்னிடம் முக்கியமான விஷயம் பேச வந்திருக்கேன் அமுதா.” என்றவள் சுற்றிமுற்றி பார்வையிட்டவாறு “ரூம்ல பேசலாம்” என்றாள். 

  ஆராவமுதனின் பாடிகார்ட்ஸ் சிலர் அங்கே தான் தோட்டத்து பக்கமாய் ரவுண்ட்ஸில் இருந்தார்கள்.

ஆராவமுதனோ பதில் பேசாமல் எழுந்து அறைக்கு செல்லும் பாதையில் நடந்தான்.
அவனை பின் தொடர்ந்தபடி, தன் முகத்தில் விழுந்த சிகையை ஒதுக்கி விட்டு, அவனது அறையில் அவன் கை நீட்டிய இடத்தில் அமர்ந்தாள்.

   அவள் அவன் முகம் பாராமல் கீழேயே குனிந்து சொல்வதற்கு தயங்கினாள்.

   ஆராவமுதனும் அவளாக வாய் திறக்கும் முன், எதுவும் பேசக்கூடாதென்ற வீம்பில் இருந்தான்.
  
   கதவு தட்டும் சத்தம் கேட்க, “வாங்க” என்றான். பணியாள் ஜூஸ் கொண்டு வந்து நீட்ட, அங்கே மேஜையில் வைத்துவிட்டு செல்ல கூறினான்.

  பணியாள் சென்றதும், கடிகாரத்தை திருப்பி பார்த்து, “சுரபி.. ஜூஸ் குடி” என்று கூப்பிட, “பச்” என்று சலிக்க, “என்ன உங்கப்பா உன்னிகிருஷ்ணனையே கல்யாணம் செய்னு, தினம் தினம் மூளை சலவை செய்துட்டாரா? உனக்கும் இந்த அமுதனை விட, அந்த கிருஷ்ணன் பெட்டர்னு தோன்றுதா? காதலிச்சு கல்யாணம் வரை போனப்பின்னும் ஒரு கிப்ட் இல்லை கார்ட் இல்லை. அவன் கோடில பரிசு தர்றான்னு மதிப்பீடு போடுதா?” என்று கேட்டதும் சுரபி கோபமானாள்.

“யூ ஷட் அப். உன்னை அப்ப, இப்ப, எப்பவும் விரும்புற சுரபி நான். உன்னை கல்யாணம் செய்ய முடியாம போனாலும், ஏன் சந்திக்காம போனாலும் வேறொருத்தனை புருஷனா ஏற்றுயிருக்க மாட்டேன். நீ விரும்பறனு சொன்னப்பிறகு யாரோ ஒருத்தனை எப்படி கல்யாணம் செய்வேன்.” என்றவள் கோபத்தை காட்டிவிட்டு மீண்டும் தலையை தாங்கினாள்.

  “தென்… ஏன் ஒரு மாதிரி இருக்க? வந்ததிலருந்து இயல்புக்கு மாறா இருக்க. ஏதோ சொல்ல முடியாம இருந்தா, இந்த முகத்தை உற்று பார்த்து நான் என்ன காரணமா இருக்கும்னு எடுத்துக்க?” என்றான்.

  ஆராவமுதனுக்கும் சில பிரச்சனைகள் உள்ளுக்குள் தீயாக உருவாகின்றது. அதற்கான கோபத்தை காட்டினான்.

  “நான் என்னனு சொல்லறது? என் நிலைமைக்கு நீ தான் காரணம்” என்று கூற தயங்கினாள்.

“விஷயத்தை செல்லறியா?” என்றதும், “நான் கர்ப்பமா இருக்கேன்” என்றாள்.

  ஆராவமுதனோ ‘அடிசக்கை’ என்ற துள்ளலுடன் “ஏ… சுரபி..” என்றவன் ஆனந்தமாய் அவளை கட்டிப்பிடித்து தனக்குள் புதைத்துக்கொண்டு, “இந்த விஷயத்தை ஏன் டென்ஷனா சொல்லற. சந்தோஷமா சொல்லறதுக்கு என்னவாம்” என்று நெற்றியில் முட்டினான்.

  ஒரு சில நொடியில் சுரபி தடுமாறி, “இ… இல்ல.. கல்யாணத்துக்கு முன்ன கர்ப்பம்னா.. நீ..” நீ உனக்கு சாதகமா ஏதாவது செய்திடுவியோனு பயமாயிருக்கு’ என்று உலற வந்தவள், வார்த்தையை நிறுத்திக்கொண்டாள்.

  “ஆமால… கல்யாணத்துக்கு முன்ன கர்ப்பம்னா… அதை சொல்ல கஷ்டமா தான் இருக்கும். நமக்குள்ள நடந்து முடிந்தது இரண்டு மாசத்துக்கு மேல இருக்கும்ல? என்றான்.

  “அதிகமாவே.” என்றாள்.

“ஏய்… மேரேஜை வச்சிட்டு எப்படி? வயிறு அப்போ கொஞ்சம் பெரிசா இருக்கும்ல?” என்றான்.

  “ஆராவமுதன்… இப்ப அதுக்கு தான் என்ன செய்யறதுன்னு கேட்க வந்தேன்” என்றாள்.
 
  “இமிடியட்டா மேரேஜ் பண்ணணும். வேற ஆப்ஷன் என்னயிருக்கு. இங்க பாரு சுரபி… தேர்தல் முடிந்தப்பிறகு கல்யாணம் என்று யோசித்தா வயிறு பெருசா காட்டி கொடுக்கும்.
  உங்கப்பா வேற உன்னி, பன்னினு அவன் பின்னாடி போறதும் எனக்கு பிடிக்கலை.
  இங்க பாரு… எனக்கு எங்கப்பா உங்கப்பா சேர்ந்து கல்யாணம் நடத்தி வைக்கணும்னு பேராசை கிடையாது.
  சொல்லப்போனா தேர்தலுக்கு பிறகு நடக்கப்போறதா இருக்கற, நம்ம கல்யாணம் நடக்குமானு டவுட்டாவே சுத்தறேன்.

  தினம் தினம் நம்ம கல்யாண கனவுகள் காணறேனோ இல்லையோ, எங்கப்பா கட்சி ஆட்கள், உன் கட்சி ஆட்கள் இரண்டு பேரும் நம்ம கல்யாணத்தில மோதி சண்டை வருமோ வராதோனு திக்திக்னு இருக்கு சுரபி. இதுக்கு பேசாம, சொல்லாம கொள்ளாம நாம கல்யாணம் செய்துடலாம்னு கூட தோன்றும்.
   இந்த நிமிஷம் நீ சொன்ன, ஹாப்பி நியூஸ்ல தான் நம்ம கல்யாணம் கன்பார்ம்னு ஆறுதல் வருது. பேசாம சொன்ன தேதில கல்யாணம் பண்ண வேண்டாம். இப்ப இந்த நிமிஷம் கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று பட்டாசு வெடியாக சந்தோஷத்துடன் கேட்டான்.

  சுரபி ஆச்சரியமாக “எப்படி?” என்றாள். தமிழகத்தின் ஆளுங்கட்சியின் முதல்வர் இலக்கியனின் மகனுக்கும், எதிர்கட்சி தலைவரின் மகள், அதோடு ஜனநாயக விடியல் கட்சியின் இளைஞர் அணி தலைவிக்கும் திருமணத்தை எவ்வாறு நிகழ்த்துவது?

“பச் எப்படின்னா? செலிபிரெட்டிஸ் எல்லாம் தங்கள் காதலை, கசிய விட்டு, சட்டுனு ஒரு நாள் சர்பிரைஸ் பண்ணறது தான். எத்தனை கல்யாணம் திருப்பதி சந்நிதியில் நடக்குது.” என்றான்.

“இப்ப நாம அது மாதிரி மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொல்லறியா?” என்றாள் சுரபி..

  ஆராவமுதனோ “பண்ணலாம்னு சொல்லறேன். ஆனா திருப்பதி கிடையாது. குருவாயூரப்பன் கோவில் சந்நிதியில் கல்யாணம் செய்துக்கலாம். அந்த கோவிலில் என்னயென்ன புரஸூஜர்னு கேட்டு வைக்கணும்.” என்றவன் நகம் கடித்தபடி, “சிதம்பரம் அங்கிள். அவரிடம் எல்லா வேலையும் செய்ய விட்டுடலாம்.” என்று கூறி, “ஏய்.. உனக்கு ஒகே தானே?” என்றதும் சுரபி மெதுவாய் தலையாட்டினாள்.
 
  உன்னிகிருஷ்ணனின் ஏரியாவில் கல்யாணம் வைக்க ஆராவமுதனுக்கு இனித்தது.

  “நாளைக்கு மார்னிங் மேரேஜ்.” என்று மடமடவென போனை எடுத்து சிதம்பரத்திடம் தெரிவிக்க, “தம்பி அப்பாவுக்கு தெரியாமலையா? என்ன அவசரம் தம்பி? பச் உங்களுக்காக செய்யறேன் தம்பி. சரிங்க தம்பி அப்பாவிடம் கூட சொல்ல மாட்டேன்” என்று நாயகன் பேச பேச அனைத்திற்கும் கட்டுப்பட்டு போனை அணைத்தார்.

    ஆராவமுதனோ, “ஹலோ மிஸ்…. எதிர்கட்சி மேடம், நாளையிலருந்து மிஸ்ஸஸ் ஆகிடுவிங்க” என்று அவள் முகத்தை தன் புறம் திருப்பி இதழ் பக்கம் குனிந்தான்.

”அமுதா..” என்று தள்ளிவிட்டவள் ”ஸ்மோக் பண்ணினியா? சை…” என்று வயிற்றை பிடித்து குமட்ட ஆரம்பித்தாள்.

  “சாரி சாரி சாரி.. வாந்தி வந்துடுச்சா?” என்று கேட்க, “குமட்டுது… ஆனா வரலை. நீ எதுக்கோ தள்ளி நில்லு” என்றவளிடம் மாதுளை பழச்சாறை நீட்டினான்.

  “இதை குடி” என்றதும் வாங்கி பருகினாள். 

   ஆராவமுதன் திருமணத்தை உடனடியாக நடத்த மறுப்பான் என்று எண்ணியதற்கு மாறாக, இலக்கியனிடம் கூட தெரிவிக்காமல் மணக்க சம்மதித்தது அவளுக்கு ஆனந்தம் கிட்டியது.

இந்நாள் வரை ஆராவமுதனை, தான் மட்டுமே அளவுக்கு அதிகமாக விரும்பியுள்ளோம். அதனால் தான் அந்த நிலையிலும் அவன் தீண்ட அனுமதித்து விட்டோமென்று தவித்தாள்.
இன்று கர்ப்பவதியாக நின்றப்பின் நொடியும் தாமதிக்காமல் மணக்க ஏற்பாடு செய்தவனின் காதல் அவளுக்குள் இதமளித்தது.
   அவனுமே தன்னை இழக்க தயாராகயில்லை என்ற நிஜம் புரிந்தது.

    அவள் சிந்தனையில் மூழ்கியிருக்க, சூயிங்கம் மென்றபடி, எச்சியை விழுங்கி, “இப்ப ஓகேவா? கிஸ் பண்ணட்டா?” என்று நின்றவனை கண்டு சிரித்தாள்.

  “இப்பன்னு இல்லை… இனி எப்பவும் என்னை கிஸ் பண்ணணும்னா ஸ்மோக் பண்ணக்கூடாது. ஓகேவா?” என்று கேட்டாள்.

  ஆராவமுதனோ, “சரின்னு சொன்னா தானே எனக்கு காரியம் ஆகும்” என்றவன் இதழை கொய்யும் வேலையில் மூழ்கினான்.

அதன்பின் சிறு கூடலை முடித்து விட்டு, அவளை அனுப்பி வைக்க தன் உடையின் பட்டனை மாட்டினான்.‌

  “உன்னோட பேச வந்தேன். என்னை இப்படி பண்ணிருக்க” என்று திட்டியபடி சேலையை கட்ட துவங்கினாள்.

  “பச்… நான் அப்பா ஆகிட்டேன்ற  ஹாப்பி நியூஸ் சொல்லிருக்க. வர்றப்ப ஸ்வீட் வாங்கணும்னு உனக்கு தோன்றுச்சா? அதான் நானே ஸ்வீட்ட மொத்தமா எடுத்துக்கிட்டேன்” என்றான்.

  சுரபி உதட்டில் மென்னகை எட்டி பார்த்தபடி, “உருட்டு உருட்டு நீ உருட்டு.” என்றவளிடம், “எங்கடி உருட்டறேன். நாளைக்கே கல்யாணம் செய்ய போறேன்” என்று அவள் உதட்டை இருவிரலால் தொட்டு இழுத்து விடுவித்தான்.

  சுரபி நிதானமாக “நான் எதிர்பார்க்கலை‌ அமுதன். நீ குழந்தையை கலைச்சிட சொல்லியோ, இல்லை… என்னை கேலி செய்து கை கழுவிடுவியோனு பயந்தேன்.” என்றதும் ஆராவமுதன் அருகே வர, “நிஜமா… பயந்தேன். நீ சப்போஸ் அப்படி பேசியிருந்தாலும் போடானு, நான் என் குழந்தையை வளர்க்கற முடிவுல இருந்தேன். அதுக்காக உன்னிடம் கெஞ்ச கூடாதுனு தைரியத்தோட வந்தேன்.
  நீ நாளைக்கே கல்யாணம் செய்யலாம்னு சொல்லவும்… நான் ஒன்னும் கண்ணை மூடி என்னை உனக்கு தரலை. உன் கண்ணுல இருந்த உண்மை காதலை பார்த்து தான் தந்தேன்னு புரியுது.
  இயற்கையோட நிலசரிவுல நீ என்னை காப்பாத்தினப்ப, அந்த உண்மை முகம், உண்மை காதல், எனக்குள்ள நீ தீண்டினப்ப, உசுரையே தர முடிவெடுக்க வச்சது. மத்தபடி நான் உன்னை விரும்பியதால் என்னை இழந்து நிற்கலை. நீயும் என்னை விரும்பவும் தந்தேன்.” என்றாள்.

  ஆராவமுதனுக்கு இந்நேரம் இது போன்ற பேச்சை கேட்டு தலைக்கு கர்வம் ஏறியிருக்க வேண்டும். ஏனோ நெஞ்சடைத்தது. சுரபியை எழுப்பி அவளது கைப்பையை கொடுத்து, “நேரத்துக்கு வீட்டுக்கு கிளம்பு நாளைக்கு குருவாயூர்ல கல்யாணம். எப்படி தனியா வரப்போற? நானே மிட்நைட்ல வந்து பிக்கப் பண்ணிடவா?” என்று கேட்டான்.

  “நானே வந்துடுவேன்.” என்றாள்.

  ஆராவமுதனோ “இந்த அப்பாவி பையனை ஏமாத்த மாட்டல்ல?” என்று சிரிப்போடு கேட்க, “கண்ணாடில மூஞ்சை பாரு. நீ அப்பாவி இல்லை. அடப்பாவி” என்று கூற, “என்னோடவே இருந்துட, சேர்ந்து போகலாம்” என்றதற்கு சுரபியோ அவன் அணைப்பை தளர்த்தி, “அங்கிருந்து வர்றேன்.” என்றவள் அவளாக முத்தமிட்டு விடுவித்தாள்.

அவள் செல்லும் வரை புன்னகை முகமாக இருந்தவன், அழுத்தமாய் தலைகோதி, ‘உப்ஸ்… இரண்டு மாசமாகியும் கன்சீவ் ஆகலையேனு நினைச்சேன். இந்த சுரபி டேட்டை கூட மறந்திருக்கா. வெல்… எல்லாமே சரியா போகுது. இனி ஆராவமுதன் தொட்டது எல்லாமே வெற்றி தான்’ என்று சீட்டி அடித்தபடி மகிழ்ந்தான்.

-தொடரும்.

13 thoughts on “Hello Miss எதிர்கட்சி-18”

  1. அடப்பாவி பையா
    என்னென்ன திட்ட மனசுல இருக்கோ தெரியலையே சுரபி.
    வெரி இன்ட்ரஸ்டிங்

  2. M. Sarathi Rio

    Hello Miss எதிர்கட்சி..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 18)

    அய்யய்யோ..! இந்த அமுதன் தான் நினைச்சப்படியே, திட்டம் போட்டே காயை நகர்த்துறானே.
    ஆனா, சுரபி அந்தளவுக்கு ஏமாந்தவளாவும் என்னால கெஸ் பண்ண முடியலை.
    ஏன்னா, ரைட்டர் அப்படி. தன்னோட எந்த கதையிலேயும் ஹீரோயினை குறைச்சு காட்டிட மாட்டாங்க. அவங்க மேக் அப்படி. பொறுத்திருந்து பார்க்கலாம். அமுதமா ? அட்சயபாத்திரமா..?
    அட.. அமுதனா ? சுரபியா ?ன்னு கேட்டேன்ங்க. (சுரபின்னா அட்சயபாத்திரம்ன்னு பொருள்படும்).

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. Yaaru sami nee oru neram nallavana theriyira ennoru neram ketavan ah theriyira Unnoda plan ennava erukum ethellam surabi ku therinjidhu ennalam panna poralo kadavuley🙄🧐🤔 super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *