சிறுவர் கதைகள் | தமிழ் - Praveena Thangaraj Novels Forum

யார் காரணம்?
யார் காரணம்?

ஒரு துறவி இருந்தார், அவர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை அவர் வைத்திருந்தார் .

எங்கே சென்றாலும் அதை எடுத்து செல்ல மறக்க மாட்டார்.அவ்வப்போது அதை எடுத்து தன் முகத்தை பார்த்துக் கொள்வார்.

அவருடைய சீடர்களுக்கு அது வேடிக்கையாக இருந்தது.

இவர் எல்லா ஆசைகளும் துறந்தவர் ஆயிற்றே, பிறகு எதற்காக இப்படி அடிக்கடி தன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறார் என்று குழப்பம் எழுந்தது.

துறவிக்கு தெரியாமல் தங்களுக்குள் அது பற்றி அடிக்கடி பேசிக் கொண்டார்கள்.

ஒரு கட்டத்தில் தங்கள் குருவான அவரை கிண்டல் செய்யவும் ஆரம்பித்தார்கள்.

மேலும் நம் குருநாதருக்கு, தான் ரொம்ப அழகு என்று நினைப்பு! அதனால்தான் அடிக்கடி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார் என்று பேசிக் கொண்டனர்.சில நேரங்களில் அவர்கள் அப்படி பேசியது துறவியின் காதுகளில் விழுந்தது, ஆனாலும் அவர் தன் இயல்பை மாற்றிக் கொள்ளவில்லை .இவ்வாறு இருக்க,ஒருநாள் அந்நாட்டு மன்னன் அந்தத் துறவியைப் பார்க்க வந்திருந்தான்.

அவன் பணிவுடன் ஆசிரமத்திற்குள் நுழைந்து துறவியை வணங்கிய போது அவர் வழக்கம் போல கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இப்பொழுது மன்னனுக்கு அதிர்ச்சி!" சுவாமி நீங்கள் எல்லாவற்றையும் துறந்தவர் ஆனால் இப்படி அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கும் ஆசையை மட்டும் துறக்க முடியவில்லையா என்ன? என்று அவரிடம் கேட்டான் மன்னன் .துறவி சிரித்தார்." இதே சந்தேகம் என் சீடர்கள் பலருக்கு இருக்கிறது, அவர்கள் கேட்கவில்லை நீங்கள் கேட்டுவிட்டீர்கள் என்றவர், தான் கண்ணாடியை பார்ப்பதற்கான காரணத்தை மன்னனிடம் சொன்னார் .

மேலும் எனக்கு ஏதாவது பெருமை கிடைத்தால் அதற்கு காரணம் யார் என்று தெரிந்து கொள்ள இந்த கண்ணாடியை பார்ப்பேன் .அதில் என் உருவம் தெரியும்.

எனக்கு பெருமை கிடைக்க நானே முதல் காரணம் என்பதை உணர்ந்து கொள்வேன். இந்த பெருமையை மண்டைக்கு ஏற்றி தலைகனம் கொண்டால் வீழ்ச்சி அடைய போவது யார் என்று கேட்டுக் கொண்டு கண்ணாடியை பார்ப்பேன் .அதில் நான் தெரிவேன் .இந்த உண்மையை புரிந்து கொண்டு என்னுடைய இயல்பு நிலையை பெறுவேன் .

கூடவே எனக்கு ஏதாவது பிரச்சினை வந்தால், பிரச்சனைக்கு யார் காரணம் என்று தெரிந்து கொள்ள கண்ணாடியை பார்ப்பேன் .

அங்கே அந்தக் கண்ணாடியில் என் உருவம் தோன்றும் எனவே என் பிரச்சனைக்கு நானே முதல் காரணம் என்று புரிந்து கொள்வேன்.

சரி, பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டாமா அதற்கு பொருத்தமான நபர் யாரென்று தேடுவதற்காக மறுபடியும் கண்ணாடியை பார்ப்பேன், அங்கே நான் மீண்டும் தெரிவேன் .

எனவே, என் பிரச்சினையை யாரோ வந்து தீர்ப்பார்கள் என்று காத்திருக்காமல், நானே தான் என் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று புரிந்து கொள்வேன் .

எப்போதும் இந்தக் கண்ணாடி என்னிடம் இருப்பதால் எனக்கு நேரும் நன்மைக்கும் தீமைக்கும் யார் காரணம் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது .

என் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் யார் காரணமாக இருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது என்றார் துறவி .

அன்பிற்கினிய உறவுகளே நம் வளர்ச்சிக்கும் நம் வீழ்ச்சிக்கும் நாம்தான் முதல் காரணமாக இருக்க முடியும் .

வாழ்க்கை நாம் நினைப்பது போல மிக கடினமானது அல்ல

மிகவும் எளிமையானது.

அதை கடினமாக்குவதும், அல்லது அதை எளிமையாக கையாளுவதும் நம் கையில் உள்ளது.

தொப்பி வியாபாரியும் குரங்குகளும்
🐒 தொப்பி வியாபாரியும் குரங்குகளும்

ஒரு நாள், ஒரு தொப்பி வியாபாரி தனது தொப்பிகள் நிறைந்த கூடையைத் தலையில் தூக்கி விற்பதற்காகப் பாதையில் நடந்து சென்றான். வெயிலில் களைப்பாகி, ஒரு மரத்தின் கீழ் தூங்கினான். அந்த மரத்தில் சில குரங்குகள் இருந்தன. வியாபாரியின் கூடையைப் பார்த்த குரங்குகள், அதிலிருந்த தொப்பிகளை எடுத்து, தங்களது தலையில் போட்டுக்கொண்டு மரத்தின் மேலே ஏறின.

வியாபாரி எழுந்ததும், தொப்பிகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தான். மரத்தில் குரங்குகள் தொப்பி போட்டிருப்பதைப் பார்த்ததும், அவன் தன் தொப்பியை எறிந்தான். குரங்குகள் அவனைப் பின்பற்றி தங்கள் தொப்பிகளையும் கீழே எறிந்தன! வியாபாரி மகிழ்ச்சியுடன் எல்லா தொப்பிகளையும் திரும்பப் பெற்றுக் கொண்டு தனது வியாபாரத்தைத் தொடர்ந்தான்.

📘 பாடம் (Moral of the Story):

புத்திசாலித்தனமாக யோசித்தால் எந்த பிரச்சனையும் தீர்க்கலாம்.

தேவதையும் விறகுவெட்டியும்
தேவதையும் விறகுவெட்டியும்

ஒரு ஊரில் ஒரு விறகு வெட்டி இருந்தான். அவன் ஒரு நாள் குளத்து ஓரமாக மரங்களை வெட்டிக்கொண்டிருக்கும் போது, அவனுடைய கோடரி தவறி குளத்தில் விழுந்து விட்டது.

அவன் குளத்தங்கரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தான். அவன் அழுகையைக்கண்டு மனம் இரங்கிய அந்த குளத்தில் குடியிருக்கும் தேவதை அவன் முன்பே தோன்றி, “ஏன் அழுகிறாய்? உனக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டது.

அவன் உடனே தன்னுடைய கோடரி குளத்தினுள் விழுந்து விட்டதைக் கூறினான். கோடரி இல்லாவிட்டால் தன்னுடைய வாழ்க்கையை ஓட்டுவது மிகுந்த சிரமம் என்று கூறி அழுதான்

உடனே தேவதை குளத்தில் மூழ்கி ஒரு தங்கக் கோடரியை எடுத்து வந்து அவனிடம் காட்டி “இது உன் கோடரியா?” என்று கேட்டது.

அவர் நேர்மையாக “இது என்னுடையது இல்லை” என்றான். அடுத்ததாக ஒரு வெள்ளிக் கோடரியை எடுத்து வந்து காட்டியது. “இதுவும் என்னுடையது இல்லை” என்றான் விறகுவெட்டி.

இறுதியாக தேவதை அவனுடைய இரும்புக் கோடரியை எடுத்து வந்து காட்ட “இதுதான் என் கோடரி” என்றான் விறகுவெட்டி.

அவனுடைய நேர்மையைப் பாராட்டிய தேவதை மூன்று கோடரிகளையும் அவனுடைய நேர்மைக்குப் பரிசாக அவனுக்கே கொடுத்து விட்டு மறைந்தது.

இந்தத் தகவல் இந்த விறகுவெட்டியின் பக்கத்து வீட்டுக்காரனுக்குத் தெரிந்தது. அவனும் அதே குளத்தங்கரை ஓரமாக உள்ள மரத்தை வெட்டச் சென்றான்.

வேண்டுமென்றே தன்னுடைய கோடரியைக் குளத்தினுள் போட்டு விட்டான். குளத்தங்கரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தான்.

அவன் முன்பும் தேவதை தோன்றியது.”ஏன் அழுகிறாய்?”என்று கேட்டது.

அதற்கு அவன் “என்னுடைய பக்கத்து வீட்டுக்காரனுக்கு இதுபோன்று கோடரி தவறி குளத்தில் விழுந்து விட்டது. அவன் நேர்மையாக இருந்ததற்காக அவனுக்கு தங்கம், வெள்ளி, இரும்பு என மூன்று கோடரிகளை நீ பரிசாகக் கொடுத்திருக்கிறாய்.”

“எனவே எனக்கும் அவ்வாறு கிடைக்கும் என்று நினைத்துதான் இங்கு வந்தேன், எனது கோடரியைக் குளத்தினுள் போட்டேன்”என்று அவன் தேவதையிடம் உண்மையைக் கூறினான்.

அவனுடைய நேர்மையைக் கண்டு வியந்த தேவதை, அவனுக்கும் மூன்று கோடரிகளைப் பரிசளித்தது. அவன் மகிழ்வுடன் தன் வீடு திரும்பினான்!

நீதி:

நேர்மையால் நன்மையே நடக்கும்.