க(ந)டந்து வந்த பாதை - Praveena Thangaraj - Praveena Thangaraj Novels Forum

புத்தகப் புழுவான தருணம்
குழந்தைகள் எங்க பார்த்தாலும் அதுங்களுக்கு பிடிச்ச சாக்லேட், பலூன் மேல கண்ணு போகும் அது போல தான் அடுத்து என் கண்ணு புக்கை தேடுச்சு. இத்தனை நாள் கடைக்கு அந்த ஏரியாவை ரவுண்ட்ஸ் அடிச்சப்ப எல்லாம் புக் கடை கண்ணில் பட்டாலும் கருத்தில் படலை.
புக் படிக்க ஆரம்பிச்சதும், கருத்தில் பட்டு நானா இரண்டு மூனு புக் வாங்கினேன். அப்ப தான் ஒரு நாள் ரோடு கிராஸ் பண்ணும் போது, ஒரு லைப்ரரி கண்ணுலப்பட்டுச்சு.

'கிளைநூலகம்' என்று போட்டு லாக் பண்ணிருந்தது. இந்த தெருவுல இத்தனை நாளா போறேன் இதை கவனிக்கலையேனு லைப்ரரி எப்ப திறக்கறாங்க ஒப்ப மூடறாங்கனு பார்த்தேன். காலையில் 8 to 11
மாலையில் 4 to 7

ஓகே...‌நமக்க எது சரியான நேரமோ அப்ப வந்து எட்டி பார்ப்போம்னு வந்தேன்.

குறிப்பு:ஒவ்வொரு மெயின் ஊரிலும், ஏரியாவிலும் கிளை நூலகம் இருக்கும். நீங்க அதுல மெம்பரா மாறினா புக் எடுத்து படிக்கலாம். ஒருத்தருக்கு 3 புக் வீட்டுக்கு கொண்டு போய் படிக்கலாம். 15 டேஸ்ல ரிட்டர்ன் தரணும். வருஷத்துக்கு பத்து ரூபா சந்தா கட்டினா போதும்.
அங்கே மெம்பராக மாற, ஏதாவது ஐடி கார்ட் இருந்தா போதும்.

சரி என் கதைக்கு வாங்க. கிளை நூலகத்தில் மெம்பராகி புக் எடுத்துட்டேன். 15 டேஸ்ல ரிட்டர்ன் தரனும். ஆனா நான் நாலு நாள்ல படிச்சிட்டேன். உடனே உடனே படிச்சி அங்க போய் டெய்லி ஒவ்வொரு ரேக்கா போய் ரமணி அம்மா கதை பெயரை பார்த்து புக் எடுத்தேன்.

எனக்கு முதல்ல அவங்க கதையெல்லாம் முடிப்போம்னு. அடுத்து ஒவ்வொரு ரேக்கா பட்டுபட்டுனு படிச்சி முடிச்சேன்.

ஆனா எழுத்தாளர் பெயரை நோட் பண்ணலை. பண்ணிருந்தாலும் எனக்கு சமகால எழுத்தாளர் ப்றறி விவரம் தொரிந்திருக்காது.

இதுக்கு நடுவுல லைப்ரரில இருந்த லேடி பிரெண்ட் ஆனாங்க. என்னை பத்தி விசாரிச்சாங்க. நான் கவிதை எழுதுவேன். புக்ல வந்தது. இப்ப எழுத முடியலைனு சொல்லிருந்தேன்.

இப்படி போயிட்டு இருக்கும் போது, கதை படிக்கிறப்பவே இது இப்படி தான் முடியும். இதுக்கு பிறகு இந்த மாதிரி சீன் வரும். அப்படின்னு நானா கெஸ் பண்ணினேன். எண்பது விழுக்காடு அது சரியா இருந்தது.

மனசாட்சி கவிதை எழுதிய உனக்கு கதை எழுத வராதா. எழுதி பார்க்கறியானு கேட்க, அடுத்து கதை எழுதற ஆசை உதித்தது.

ஆல்ரெடி கவிதையில் நிறைய சர்டிபிகேட் அதுயிதுனு வந்தாலும், ஏதோ அலுப்பு. அப்ப தான் அண்ணா 2015ல praveenathangaraj.blogspot.com Open பண்ணி தந்தார். அதுல கவிதை எல்லாம் போட்டு publish பண்ணி விளையாடிட்டு இருந்தேன். அதுலயே Draftல கதை எழுதினேன்.
முதல் கதை என்பதால் தலைப்பும் *முதல் முதலாய் ஒரு மெல்லிய..* அப்படினு வச்சி எழுத ஆரம்பிச்சேன்.

இதுக்கு இடையில் கன்சீவ் ஆனேன். தனியா தான் இருந்தேன். ஸ்டேஷனரி கடைக்கு போனப்ப மயக்கம் வந்துடுச்சு. தள்ளாடி ஒரு சேர்ல உட்கார்ந்துட்டேன். பதினைந்து நிமிஷம் கண்ணை திறக்க முடியலை. பக்கத்துல இருக்கறவங்க, தண்ணி வேணுமானு நீட்டறாங்க. வாங்கி குடிக்கறேன் ஆனா கண் திறக்க முடியலை 'பேன் போடவா அக்கா. யாராவது போன் போட்டு கூப்பிடணுமா'னு கேட்கறாங்க. வீட்ல தான் யாருமில்லையே. தலைமட்டும் மறுத்து ஆட்டறேன். முகமெல்லாம் வேர்த்துடுச்சு. அப்படியே கடையில கண்ணாடி ரேக்ல தலை வச்சிட்டேன். கடைக்கு வர்ற ஆட்கள் என்னை சுத்தி சுத்தி  கடையில் பென்சில் பேனா வாங்குவது காதுல விழுந்தது.
அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா கண் திறந்தேன்.

'என்னாச்சுக்கா' என்று கடையில இருந்த அண்ணா அக்கா கேட்டாங்க.
'இல்லை கன்சீவா இருந்ததால் மயக்கமாகிடுச்சு'னு சொன்னேன். அவங்க அப்பறம் தான் என் வயிற்றை பார்க்கறாங்க. கன்சீவா இருக்கிங்களா?னு வாயை பிளக்க, 5 மந்த்னு சொன்னேன். அச்சோ நீங்க சொன்ன பிறகு தான் வயிறே தெரியுது. முன்னவே தெரிந்தா கடையில நிற்க வைக்காம எடுத்து கொடுத்திருப்போம்னு அந்தக்கா சொன்னாங்க.
வயிறு சின்னதா தொப்பை விழுந்த லெவல்ல தான் இருந்தேன்.
அப்பறம் டேப் வாங்கிட்டு வீட்டுக்கு வந்தேன். வீட்ல அவர் வந்ததும் சொன்னேன். லைப்ரரி போயிட்டு அப்படியே டேப் வாங்க போய் மயங்கிட்டேனு.
அதுக்கு பிறகு தனியா லைப்ரரி போக முடியலை. பத்து மணி ஆனா தூக்கம் வரும். அதனால அசதில எங்கயும் போகாம போரடிக்க படுப்பேன். புக் படிக்க ஆசையும் இருந்தது
அப்ப தான் இன்னும் லைப்ரரில புக் எடுத்து படிக்க, நெட்லயே படிக்கலாம்னு சொன்னார். அப்படியா படிக்கலாமா?னு கேட்டேன். நொட்ல தேடு... எல்லாம் படிக்கலாம்னு சொன்னார்.
நெட்ல தேடவும் இளந்தளிர்.காம் என்ற சைட் இருந்தது. அதுல தான் கதை படிச்சேன். தினமும் 2 கதை மூன்று கதைனு புத்தகப்புழுவா படிச்ச காலம்.
அப்ப பிடிஎப் பத்தியோ தளத்தை பற்றியோ அறிமுகம் இல்லை‌
கதை எழுதினேன்ல அதை பிரிண்ட் அவுட் எடுத்து என் அத்தை மாமாவுக்கு காட்டினேன். அவங்க முதல் கதை படிச்சிட்டு நல்லாயிருக்குனு சொன்னாங்க.
அந்த கதையை மேகஸினுக்கு அனுப்பவும் செய்தேன்.
நான் ஆன்லைன் ரைட்டரா வந்து மேகஸினுக்கு நுழைந்தவள் இல்லை. முதல்ல மேகஸினுக்கு வந்து சில அனுபவத்தால் பயந்து தான் ஆன்லைன் எழுத்துலகில் கால் பதித்தேன்.
அதுயென்ன பயம்? ஏன் ஆன்லைன் தளத்தில் வந்தேன்னு அடுத்த பதிவில்....

நாவல் புத்தகம் அறிமுகம்
நாவல் புத்தகம் அறிமுகம்

நான் நாவல்னு உதல் உதல்ல வாசிக்க ஆரம்பிச்சது தமிழ்வாணனோட சங்கர்லலால் கதை தான். அதை தவிர அடிக்கடி குமுதம் ஆனந்தவிகடன்ல வர்ற சிறுகதை. வாரமலர்ல வர்ற சிறுகதை.
இதை தாண்டி ராஜேஷ்குமார் சாரோட பாக்கெட் நாவல் கதைகள் ஒரு மூன்று வாசித்திருப்பேன். அப்பாவோட பழக்கம். அதோட பெரிப்பா வீட்ல சில நாவல் புக். எழுத்தாளர் பெயர் பார்க்காம அப்படியே வாசித்து தள்ளியிருப்பேன்.

அதனால் பெண் எழுத்தாளர் கதைகள் எல்லாம் ரொம்ப குறைவு. சொல்லப்போனா நிறைய குட்டிஸ் சிறுவர் கதை வாசித்த அளவு கூட காதல் கதைகள் வாசித்ததில்லை.
ஆனா நிறைய படம் பார்த்திருக்கேன்.
கதைகள் இப்படி மாத்தலாம். இப்படி முடிவை தரலாம். இந்த மாதிரி கதை இப்படி முடியும், இப்படி செல்லும் என்ற யூகம் 90% ஒத்துப்போகும்.
சீரியலும் அப்படி தான்.

என்ன தான் இருந்தாலும் புத்தகமா நாவல் வாசிக்காம இருந்தேன்.

அன்னிக்கு எங்க (மாமியார்) வீட்ல இருந்தேன். பக்கத்துல அத்தையின் தம்பிகள் வீடு இருக்கும். அதுவொரு காம்பவுண்ட் வீடு. அங்க அத்தை அவங்க தம்பி பேமிலி எல்லாம் ஒரே இடம்.
அங்கேயிருக்கும் (அத்தையின் தம்பி மனைவி) எனக்கு சித்தி. அவங்க மகள்(எனக்கு தங்கை உறவு) 'பேங்க் போகணும். துணைக்கு வர்றிங்களா அக்கா'னு கேட்டா. திருமணமாகி பெரியவ பிறந்து ஒன்றிரண்டு வருடம் இருக்கும்.
அங்க சும்மா சுற்றிட்டு டைம்பாஸ் பண்ணினேன். அதனால துணைக்கு வர்றேன்னு கிளம்பிட்டேன். அத்தையும் போக சொல்லிருந்தாங்க.

பேங்க் ரோட்டுக்கு மெயின் பிளேஸ்ல இருக்கும். அதனால் போக வர வந்துடலாம்னு இருந்தோம்.
ஆனா தங்கையின் சொந்த தாய்மாமா வீடு பேங்க் பக்கமா அங்கயிருக்கவும், அவ அங்க போயிட்டு பேங்க் போக நினைத்தாள்.
நானோ 'தெரியாத வீடா அய்யோ'னு முழிச்சேன். சௌந்தர் சொன்னா, 'அக்கா நம்ம சாந்தி அக்கா வீடு தான் பயப்படாதிங்கன்னு' கூட்டிட்டு போனா. அவ சொன்ன நேம் எனக்கு நல்லா தெரிந்தவங்க தான்.

அத்தை-சித்தி வீட்டுக்கு அவங்க வந்து போவதை பார்த்திருக்கேன்.
பேங்க்ல போகும் முன்ன அவங்க வீட்ல போனதும் அவங்க என்னை வரவேற்று உட்கார வச்சிட்டாங்க. பேங்க்ல நிறைய கூட்டம் என்றும், நிறைய பிரஸீஜர் இருக்கும் என்றும் சௌந்தரும் அவ மாமாவும் செல்வதாக இருந்தாங்க.
எனக்கு அப்ப நான்? அதே தான்... கொஞ்சம் என்ன செய்ய போரடிக்குமேனு திருதிருனு விழிச்சேன். இதுல சாந்திக்கா வேற பாட்டு கிளாஸ் டீச்சர் வந்துட்டாங்க. நான் வேற போகணும்.  பிரவீணா சாரிடா.. டிவி பார்க்கறியா இல்லை புக் படிக்கறியானு தவிப்பா கேட்டாங்க.
சிலரோட முகம் அவங்க மனதை பிரதிபலிக்கும். அவங்க பேஸ் அப்படி இருந்தது. இல்லைக்கா டிவி வேண்டாம் புக் படிக்கறேன்னு சொன்னேன். ஒரு சில புக் தந்து எந்த ரைட்டர் கதை படிக்கறியோ எடுத்துக்கோனு நீட்டினாங்க.

நான் ரமணிசந்திரன் அம்மா கதை ஒன்றை எடுத்தேன்.
டிவி பார்த்தா பாட்டு கிளாஸுக்கு டிஸ்டர்பா இருக்கும்னு நினைச்சேன். அதோட புக்னா கவனம் கண்கள் இரண்டும் புத்தகத்துல போயிடும்.
ஆக்சுவலி நான் கொஞ்சம் பாஸ்ட்ரீடர். அதோட புக் எடுத்தா முடிச்சிடற கேரக்டர். அதனால் வேகமாக வாசித்தேன்.
நல்லா நினைவுஇருக்கு, ரமணிசந்திரன் அம்மாவோட 'ஒருமலர்' கதை வாசிக்கறேன்.
சுவாரசிமாக நேரம் போனதே தெரியலை. ஒரு இருபது பேஜ் வாசிக்காம இருக்கும் சமயம், அக்காவும் கிளாஸ் முடிந்து வந்தாங்க.

"சாரிடா பாட்டு கிளாஸ் மேம். எனக்காக ரொம்ப தொலைவில் இருந்து வர்றாங்க. கிளாஸ் கேன்சல் பண்ணவும் முடியலை. உன்னை தனியா உட்கார வச்சிட்டோமேனு கஷ்டமாயிருக்குனு சொன்னாங்க. அதெல்லாம் ஒன்னுமில்லைக்கா டைம் நல்லா போச்சு. புக் இருந்ததால் தனியா இருந்த பீல் இல்லைனு சொன்னேன். அப்பறம் முழுச படிக்கலைன்னா இந்த புக் எடுத்துட்டு கூட போடானு சொன்னாங்க.
இல்லைக்கா.... இருக்கட்டும்னு சொன்னேன். அதேநேரம் தங்கை மாமா வந்துட்டாங்க. அடுத்து வீட்டுலயிருந்து போன் மேல போன். ஜிகிஷா எங்க அம்மா எங்க கேட்டுட்டே இருந்திருக்க, வீட்டுக்கு போக அவசரமா கிளம்ப,நீ புக் எடுத்துட்டு போடா. படிச்சிட்டு அங்க வை. சௌந்தர் திரும்ப வந்து தருவா.' என்று சொன்னாங்க.

ஓகேனு கிளம்பிட்டேன்.

வழிநடுவுல சௌந்தர் வேற சாரிக்கா மத்த நேரம் சீக்கிரம் வேலை முடியும். இன்னிக்கு ஹிந்தி ஆட்கள் பேங்க்ல நிறைய பேஅ ஊருக்கு பணத்தை அனுப்ப வந்துட்டாங்க. அவங்களால டிலே ஆகிடுச்சுனு சொன்னா. அப்ப அங்க நிறைய ஹிந்திக்காரர்கள் பேங்க் மூலமாக வீட்டிற்கு பணம் அனுப்பும் வாரம் போல.
புக் படிக்க நேரம் போச்சு சௌந்தர். அதோட அந்த அக்கா வர்றப்ப எல்லாம் பார்த்ததால் பிரெண்ட்லியா பீல் ஆச்சு. வித்தியாசமா இல்லை.னு சொன்னேன்.

இந்த புக் 'ஒரு மலர்' சாப்பிட்டு அடுத்த பதினைந்து நிமிடத்தில் வாசித்துட்டேன். அப்பறம் அத்தையும் வாசித்தாங்க. புக் அங்கயே கொடுத்துட்டு சென்னை வந்துட்டேன்‌.

இங்க வந்த பிறகு புக்கோட தாக்கம். ஐ மீன்... நாவல் படிக்கிற ஆர்வம் அதிகமாச்சு. நாவல் புக் படிக்க தேடினேன். இந்த இன்சிடெண்ட் தான் என்னோட பாதைக்கு முதல் செங்கல்.

-தொடரும்.

கவிதையே... தெரியுமா...!?
கவிதையே... தெரியுமா...!?

நான் கவிதை எழுதுவது நெருங்கிய உறவினருக்கு நல்லா தெரியும். அதுலயும் அப்பாவோட சின்ன தங்கையின் மகள்(அண்ணி) 'பிரவீ நீ கவிதை எழுதுவல முகநூலில் கவிதை குரூப் நிறைய இருக்கு. ஜாயின் பண்ணி விடவா'னு கேட்டாங்க. கரும்பு திண்ண கூலியா? "சேர்த்து விடுங்க அண்ணி கவிதை வாசிப்போம்' சொன்னேன்.

அவங்களும் இரண்டு மூன்று கவிதை குரூப்ல என்னை கோர்த்து விட்டாங்க. முதல்ல எப்பவும் பார்வையாளராக பார்ப்பேன். நாம இருக்கற இடம் என்ன மாதிரியான இடம். இங்க நாம கால் பதிக்கலாமா வேண்டாமானு. ஏன்னா கண்டதுலயும் நுழைந்திட மாட்டேன். ஒரு இடம் போறோம்னா முதல்லயே அது எத்தகைய இடம்னு தெளிவாக தெரிந்துக்கிட்ட பிறகு போகணும். போனப் பிறகு அய்யோ அம்மானு புலம்பறதுல எனக்கு உடன்பாடுயில்லை.
அதனால் முதல்ல வாட்ச் பண்ணினேன்.
நாட் பேட்...

மிக நல்ல கவிதைகள் கொஞ்சம் சுமாரான கவிதை, கொஞ்சம் ஆர்வகோளாறான கவிதைகள் என்று எல்லாவிதமான கவிதைகளும் அங்கே குவிந்தது.

நிறைய வாசித்து பார்ப்பேன். மனசாட்சியோ 'ஏ பெண்ணே... ஒரு காலத்தில் நீயும் கவிதை எழுதி மேகஸினுக்கு அனுப்பி அது அப்புத்தகத்திலும் வந்திருக்கு. நீயென்ன வெறும் வாசிக்க பிறந்தவளாக இருக்க. 'பேப்பரை எடு கவிதையை கிறுக்கு'னு தூண்டிவிட்டது.
நானும் கிறுக்கினேன். எஸ்... நான் கிறுக்கினேன். எனக்கு தெரியும்.... நான் இன்னமும் அரை வைத்தியன். மிக அற்புதமான கவிதை எழுதுபவள் இல்லை.

மேகஸினுக்கு எழுதப்பட்ட பொழுது அதற்கான முதிர்ச்சி + முயற்சி இருந்தது. தற்போது மீண்டும் என்னிடம் சிறுபிள்ளை தனம் மிச்சம் எஞ்சியிருந்தது.

நானும் தினமொரு கவிதை கிறுக்கி குரூப்ல போடுவேன். இயற்கையை பற்றி, காதலை பற்றி சமூகத்தின் அவலம் இப்படி கிறுக்குவேன். அப்ப தான் போட்டி நடக்கு அங்க கவிதை எழுதி பாருனு சொன்னாங்க.

முயன்றேன்...

சில விஷயம் மேஜிக் மாதிரி நடக்கும். போட்டிக்குன்னு கவிதை வரிகளை எதார்த்தமான வார்த்தை கொண்டு கோர்த்தேன். நிகழ்காலத்திற்கு தேவையான விஷயம் அந்த போட்டி கவிதைக்கு தேவையானதாக என்னிடம் இருந்தது. அதனால் வெற்றியும் கிட்டியது. எண்ணிக்கையில் அடங்காத சான்றிதழ் வரிசையாக வந்தது.

எப்பவும் ஜெயிச்சிட்டே இருந்தா ஒருவிதமான சலிப்பு வரும். அந்த சலிப்பு வந்துச்சு.
எனக்கு வெற்றி தோல்வி பெரிய விஷயமில்லை. இரண்டையும் சமபங்கா பார்ப்பேன். அந்த தெளிவு எப்பவும் இருக்கு.

ஆனா ஈஸியா ஜெயிக்கறேன்னா? போட்டில சக போட்டியாளரின் எண்ணிக்கை குறைவா? அதனால நான் ஜெயிச்சேனா? இப்படி தான் யோசித்தேன். ஏன்னா அப்படி கலந்துக்கிட்டவங்க குறைவா இருந்து, எனக்கு வெற்றி கிடைத்தால், அது வெற்றி கிடையாது. ஆளில்லாத இடத்தில் பத்துல ஒன்னு தேறியது. அப்படி தான் நினைப்பு போகும் எனக்கு.

எனக்கு தேவை அதிகமான போட்டியாளர்கள் பங்கு பெறும் போட்டியில் நான் கலந்துக்கணும். தோற்றாலும் பரவாயில்லை‌. போட்டி கஷ்டமா இருக்கணும்.

அடுத்து கவிதை போட்டியில் யார் எல்லாம் கலந்துக்கறாங்க. எத்தனை பேர் போட்டியில் இருக்காங்க. எனக்கு இது ஆரோக்கியமான போட்டியா. இங்க கஷ்டப்பட்டு தான் நான் முன்ன வர்றேனா? என்றெல்லாம் அலசி ஆராய்ந்தேன்.
இந்தமுறை எத்தனை போட்டியாளர் என்று கணக்கெடுத்தப்ப மலைச்சிட்டேன். 50 ல இருந்து 80 கிட்ட வரை போட்டியாளர்கள் இருந்தாங்க.(குறைவானவங்க தான்)

அதனால் இத்தனை பேர்ல என் கவிதை முன்ன வர்றப்ப, வெற்றி பெற்றதும் மகிழ்ந்தேன்.
ஐம்பது எண்பது பேர்ல ஐந்து பேருக்கு சர்டிபிகேட் என்றதில் நான் அதை பெருமையா உணர்ந்தேன்.

வார்த்தையில் கவனம் போச்சு. கவிதை எழுதவும் என் பழைய சுறுசுறுப்பு துளிர்விட்டது.

அப்ப தான் ஒரு கவிதை குரூப்ல இ-மின்னிதழில் மாதம் மாதம் அந்த குரூப்ல வர்ற கவிதைகளை கவனித்து, அதில் சில கவிதையை தேர்ந்தெடுத்து மின்னிதழில் பிரசுரிப்பாங்க.

தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை.... நோட் பண்ணுங்க... தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை.

அதனால் இதுல என் கவனம் போச்சு. நமக்கு போட்டி கடினமா வேண்டும். அப்ப தான் அதுல நுழைவேன்.

டார்க்கெட் வச்சேன்.

இந்த மின்னிதழில் நம்ம கவிதை வரணும். அதுக்கு ஆக்கப்பூர்வமா எழுதணும். வசன கவிதை என்றாலும் கவிதையின் கரு ஆழமா உள்ள தாக்கணும். ஏதோ புதிதான சிந்தனை அல்லது உணர்வுகளை புகட்டணும்னு யோசித்து தினமும் பெரிய கவிதையா எழுதி தள்ளினேன்.
எப்பவும் என்னை சுற்றி இருக்கற இடத்தை சரியா கவனிக்க மாட்டேன். கவனிக்கணும்னு நான் முடிவு எடுத்து பார்த்தா மட்டும் தான் அந்த இடத்தையே லேசர் பார்வையால் துழாவுவேன்.
அப்படி தான் காணும் எல்லா இடத்தையும் கவனிக்க ஆரம்பிச்சேன். வாடகை தாயாக... இறைவன் ... சில நல்ல கவிதை உதிர்த்தது.
ஒவ்வொரு மாதமும் சிலருக்கு சிறந்த கவிதையாளர் என்று பட்டமும் ஏதாவது ஒரு கவிதை மின்னிதழில் வெளிவரும் அதெல்லாம் பார்த்து, 'பச் நான் இன்னமும் நல்லா எழுத ஆரம்பிக்கலை என்று வாடினேன்.

இந்த இடத்துல இடம் பெறணும்னா அப்ப ஏதோ என் எழுத்துல குறையுதுன்னு புரிந்தது.

அது என்னனு கூர்மையா  கவனிச்சேன்.
எஸ்... எதை மிஸ் பண்ணினேன்னு கண்டுபிடிச்சேன். அடுத்தடுத்து எழுதினேன்.

உழைப்புக்கும், வெற்றியை துரத்தறதுக்கும் பலன் இல்லாமலா? நான் எதிர்பார்த்த கவிதை குரூப்ல மின்னிதழில் என் கவிதை வந்துச்சு. கிட்டதட்ட பல ஆயிரம் மெம்பர்ஸ் கொண்ட குரூப். பல்வேறு ஆண் பெண் கவிஞர்கள் இருக்கும் இடம். என் கவிதை வந்துச்சு.

கவிதை போட்டியில் பங்கேற்றதும் இந்த மற்றொரு குரூப்ல மின்னிதழில் கவிதை வந்ததும் எனக்குள்ள மீண்டும் ஒரு ஆற்றல்.

ஹைக்கூ போட்டி, குறுங்கவிதை போட்டி, படம் பார்த்து கவிதை எழுதுவது, இப்படி எல்லாத்திலும் அன்னா ஆவன்னா படிச்ச பிள்ளையா தலைகாட்டி அந்த படில ஏறினேன். எஸ் ஆரம்பகால இடம் தான்.

அந்த நேரம் கவிதை எழுதி போட்டில வின் ஆனவங்களுக்கு விழாவில் கோப்பை சர்ட்டிபிகேட் தருவதாக சொன்னாங்க. நான் பரிசு கோப்பை வாங்கற லிஸ்ட்ல இருக்கேன். அதோட சென்னையில் தான் அந்த விழா. அதனால் யோசிக்காம போனேன். ஏன்னா என் கூட என் வழிக்காட்டியான முத்து அத்தையும் அந்த இடத்துக்கு அவங்களும் பரிசு பெற வந்தாங்க. அதனால் அது என்‌முதல் மேடை ஏறிய தருணம்.

என் கவிதையை நானே வாசித்து முடித்து பரிசு வாங்கி சான்றிதழ் வாங்கி வந்த நாள்.

இதுவரை இ-சர்டிபிகேட் மட்டுமே பார்த்திருந்த எனக்கு ஷீல்ட் கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆனா என்னோட இலக்கு என்ன?னு நான் அப்பவும் முடிவெடுக்கலை. அதுவொரு ஜாலியான மௌமொண்ட் என்று தான் இருந்தேன்.

அதே போல திருச்சியிலும் ஷீல்ட் சர்டிபிகேட் கிடைத்தது. அதையும் ஒரு அனுபவமா, ஜாலியா போய் வாங்கிட்டு வந்தேன். எனக்கான இலக்கு குறிக்கோள் எதையும் நான் உணரவில்லை.

நிறைய பேருக்கு இலக்கு இல்லாம வாழும் போது இதான் உன்‌பாதை பிடிச்சிக்கோ இதுல தொடர்ந்து போ.' அப்படின்னு ஒரு கன்பார்ம் மெஸேஜ் கடவுள் தருவார். அது அப்பவும் எனக்கு தோணலை.

ஏதோ கவிதை கிறுக்கினா இரண்டு ஷீல்ட் வாங்கினா' இதான்..‌... அடுத்து காட்டுல தீக்குச்சி கிடைச்ச கதையோட வர்றேன்.

-தொடரும்.

தூசு தட்டிய தருணம்
காலேஜில் தேர்ட் இயர்ல படிக்கறப்ப அனுப்பிய கவிதை எல்லாம் லைன் கட்டி கல்யாணம் ஆனப்பிறகு மங்கையர் மலரில் வெளிவந்தது. ஹைக்கூ முதல் கொண்டு பத்து வரி கவிதை வரை.
எல்லாமே அப்பா போன்ல சொல்வார். அந்த நேரம் குட்டியா கார்ட் வடிவில் சான்றிதழும் பணமும் அனுப்புவாங்க. அந்த சான்றிதழ் ரொம்ப கியூட்டா இப்பவரை வச்சியிருக்கேன். பணம் தான் அப்படியே வச்சியிருக்கணும்னு நினைச்சி செலவு பண்ணிட்டேன்.
அப்ப யோசித்தது... பணம் கைக்கு கை மாறும். இதே சான்றிதழ் நினைவேட்டில் அப்படியே இருக்கு.(சைட்ல கதை போட்டி வச்சப்ப, பணத்தை விட ஷீல்ட் வைத்தது இது போன்ற நீங்கா நினைவுக்கு தான்.)

ஆல்ரெடி இங்க ஆப்டர் மேரேஜ் கணவர் வீட்டில், மங்கையர் மலர் ரெகுலரா வாங்கவும் புக்ல பார்த்துப்பேன். ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா இதெல்லாம் இனி ஓவர்ல. இனி எழுதவும் வரலை என்று மூட்டைக்கட்டிட்டேன். சமைக்க தெரியாது என்பதால் சமைக்க கத்துப்போம்னு அந்த பக்கம் டேக் டைவர்ஷன் ஆனேன்.
காலேஜ் பிரெண்ட்ஸ் அப்பாவோட அத்தை இவங்களாம் கூட போன்ல பேசறப்ப சந்திக்கும் பொழுது, கவிதை எழுதறியா? என்று கேட்பாங்க. இல்லை டச் விட்டு போச்சுன்னு சொல்வேன்.
அதோட நார்மல் மனைவியா நேரத்தை கடத்தினேன்.
பெரிய மகள் பிறந்தப்ப, பிறக்கும் முன் மாஸ்டர் டிகிரி கரஸ்ல போட்டேன். அதனால் மீண்டும் மாணவர்களுக்கான கவிதை பக்கத்தில் கவிதை எழுதி அனுப்பினேன். ஆக்சுவலி மாணவர் என்ற அடையாள அட்டை ஜெராக்ஸ் அனுப்பணும். கல்லூரிக்கான பகுதியில் அப்ப தான் பிரசுரிப்பாங்க.

அப்பவும் சிலது பிரசுரமாகி வீடு தேடி புக், பணம், சான்றிதழ் வந்தது. முன்பு எல்லாம் நம்ம படைப்பு ஒரு புத்தகத்தில் வருகின்றது என்றால் நமக்கு ஒரு காபி புக் தருவாங்க. படைப்புக்கான பணம் வரும். புக் போஸ்ட் கவருடன் சான்றிதழ் வரும்.
மங்கையர் மலருக்கு எழுதி வருது என்றதும் 'ராணிமுத்து' நாவல் இதழில் அனுப்பினேன். 20 வரி கவிதை ஆறு வரியுடன் வந்தது. இதை தப்பு சொல்லக்கூடாது‌. கவிதை கதை அனுப்பும் பொழுதே, படைப்பை திருத்த பதிப்பக ஆசிரியருக்கு முழு சுதந்திரம் உண்டு என்ற ஒப்புதலும் போட்டு தான் அனுப்பணும்.
அதனால் சுருக்கமாக வந்தது. 'ராணிமுத்து' புக் பணம் இரண்டும் வீடு தேடி கிடைத்தது.
இதற்கு பிறகு குமுதம் சிநேகிதியில் ஒரு கட்டுரை அனுபவம் எழுதினேன். அதுவும் பிரசுரமானது. அந்த புக்கும் பணமும் வீடு தேடி வந்தது. பணம் என்றதும் ரொம்ப எல்லாம் யோசிக்காதிங்க. கவிதை கட்டுரைக்கு குறைந்தது 50 முதல் 200 வரை இருக்கும்.
பணத்தை விட நம் படைப்பு பிரசுரமாகும் என்றதே எனக்குள் திருப்தி தந்தது.

அதுக்குப்பிறகு புதுசா கவிதை எதுவும் எழுதலை. அதோட பெரியமகள் பிறந்து அவளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இருந்தது.
அவள் வளர வளர அவளை மட்டுமே ரசித்தேன். அவளை மட்டுமே செதுக்கினேன். சொல்லப்போனா அவளை வளர்த்ததில் ஒரு பெருமை இருக்கு. அவள் எனக்கு கிடைத்த வரம்‌.
இதுக்கு நடுவுல வாரமலர் புக்கிற்கு கவிதை எழுதுனு அத்தை(மாமியார்) சொன்னாங்க.
எழுதியும் போட்டேன்.... ஆனா.... இந்த முறை வரலை. ரொம்ப சோகம்.
அறிவும் கற்பனையும் இருந்தாலும் அது அடிக்கடி பட்டைத்தீட்டப்பட்டுக் கொண்டு இருக்கணும். இல்லைன்னா.. கற்பனை வறட்சியாகும். வார்த்தை தேடுதலாகும்.
இது காலதாமதமாக உணர்ந்தேன்.
கவிதை எழுதுன்னு சொன்னாளே சட்டுனு பத்து நிமிஷத்துல எழுதி தர்ற ஆளு. காலேஜில் கூட தானாக புனையும் கவிதையும், கதையும் தான் கடைசி பத்துமார்க் பகுதில தேர்ந்தெடுக்கற ஆளு.

ஆனா... வார்த்தையும் கோர்வையும் வராம தள்ளாடினேன். நமக்கு அறிவு அவ்ளோ தான். வேஸ்ட் பெல்லோவா மாறிட்டோம்னு நினைச்சேன். இதுல சின்ன பிள்ளையாட்டும் சிஸ்டம்ல கார்ட்ஸ் விளையாடுவேன், finding games, gold collect, supwr mario, vudwo game ல சின வயசுல விளையாடிய எல்லா கேமும் விளையாடிட்டு டைம் பாஸ் பண்ணினேன்.‌

எஸ்.... எந்தவிதமான எனக்கான அடையாளம் மறந்து சராசரி குடும்ப பெண்ணாக மட்டும் என்னால் இருக்க முயன்றது. கவிதை எல்லாம் எழுதி என்ன பண்ணப்போறோம். மிஞ்சி மிஞ்சி முகநூலில் ஷேர் பண்ணினா சிலர் லைக் கமெண்ட்ஸ் பண்ணி பாராட்டுவாங்க. அதோட வேற...
இந்த டைம்ல தான் எங்கண்ணா(தங்கராஜா) எண்ட்ரி. அண்ணாவுக்கு என் டேலண்ட் மங்கியதில் வருத்தம். 'ஏன் பிரவீ எழுதலை. ஏற்கனவே எழுதியதை பிளாக்ல போடு. நாலு பேரு படிப்பாங்க.' என்று கூறினான். ஆக்சுவலி எங்கண்ணா கவிதை எழுதுவான். அவன் காலேஜ் படிக்கறப்ப எழுதிய கவிதையை நான் ஸ்கூல் படிக்கிறப்ப திருட்டு தனமா படிச்சிருக்கேன்.‌

காதல் கவிதை மட்டுமில்லை.. சமூக கவிதையும் அண்ணா எழுதுவான். காலேஜ்ல 'போதையில்வா பாதை' அப்படின்னு கட்டுரை எழுதி பிரைஸ் வாச்கியிருக்கான். இதெல்லாம் எதுக்கு சொல்லறேன்னா... எழுத்து எனக்குள் என் அப்பா அண்ணா அத்தை பெரிப்பா... இப்படி எல்லாரிடமும் ஒவ்வொரு விதத்தில் இருக்கு.

அண்ணா கேட்டதும்...

"படிச்சு?" என்று அசட்டையா கேட்டேன்.
"பிரவீ... எழுதறது எல்லாம் எல்லாருக்கும் வராது. நான் எல்லாம் பாரு.. வேலை வேலைனு ஓடுவதால் எழுத முடியலை. சொல்லப்போனா தமிழே தப்பு தப்பா தான் எழுதறேன். தெரிந்த விஷயம் கூட நாம தினசரி செய்யாம விடுவதால் மறந்துடும். நீ எழுத எழுத தான் உனக்கு கவிதைக்கு கற்பனை வரும். வார்த்தை வரும். மச்சானை பிளாக் ரெடி பண்ணி தரச்சொல்லு. ஆக்சுவலி மச்சான் வெப்சைட் டிசைன் பண்ணுவாரே. அவரிடம் வெப்சைட் க்ரியேட் பண்ண சொல்லு." இப்படி நிறைய சொன்னான்.

"மச்சான் எல்லாம் செய்ய மாட்டார்" என்றேன்.‌ (இப்ப வெப்சைட் வாங்கி தந்தது அவரே.)

'சரி அவரை தொல்லை பண்ணாத. நான் க்ரியேட் பண்ணி தர்றேன். Blog Open பண்ணறது ரொம்ப ஈஸி.' என்று வேகமாய் create செய்தார்.

https://praveenathangaraj.blogspot.com/ பெயரை வச்சி create பண்ணிட்டு எப்படி போஸ்ட் பண்ணணும் draftல வச்சிக்கணும் என்ற இரண்டை மட்டும் சொன்னார். அப்பறம் டைம் ஆனதால் கிளம்பிட்டார்.

சும்மாவே ஏதாவது தெரிந்ததுக்கணும்னு ஆசை. அதுவும் பாப்பா ஸ்கூல் போனப்பிறகு நேரம் இருக்கவும் நான் எழுதிய கவிதை எல்லாம் நோட்ல இருந்ததை ஓபன் பண்ணி வச்சிட்டு டைப் பண்ணினேன்.
கவிதையை போஸ்ட் பண்ணினேன்.
அது கொஞ்சம் என்னை சுறுசுறுப்பா மாற்றியது. பாப்பாவை ஸ்கூவுக்கு அனுப்பிட்டு நான் எழுதி வச்ச, 200 கவிதையையும் ஒவ்வொன்னா டைப் பண்ணி ப்பளிஷ் செய்வேன். அதோட பிளாக்ல எப்படி வைக்க பிடிக்கும்னு பிளாகை நொண்டிட்டு இருப்பேன்.

*Blog உருவாக்குவது மிக எளிது. இரண்டே நிமிடத்தில் அதை உருவாக்கிடலாம்.
*Blog நமக்கு தேவையான விதத்தில் நாம மாற்றி அமைத்து கொள்ளலாம். (அந்த நேரம் எனக்கு வைக்க தெரியாது.)
*கதை கவிதை தத்துவம் கட்டுரை எதுனாலும் பிளாக்ல பதிவிடலாம். இதற்கு எவ்விதமான பணமும் செலவு இருக்காது.
*வாசகரை படிக்க வைக்க இழுக்கணும்.
உங்க எழுத்து மேல நம்பிக்கை வச்சா யார் வேண்டுமென்றாலும் ஆரம்பிக்கலாம்.

*Blog லபணம் வருமா?னு கேட்டா... சாரிங்க... பணம் ஈட்ட வருடம் கடந்துடும். அதுகூட 100 டாலர் சேரும் வரை காத்திருக்கணும்.
அப்ப கூட ads இல்லைன்னா எப்பவும் பணம் வராது. Ads இல்லாத Blog ஒரு Rough Note அவ்ளோ தான்.
உங்க திறமை மட்டும் அடுத்தவர் வாசிக்கணும்னு நினைக்கறவங்களுக்கு பிளாக் சரியானது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

என்‌ எழுத்திற்கான பிள்ளையார் சுழி
https://praveenathangarajnovels.com/என்-எழுத்திற்கான-பிள்ளைய/

எனக்கு புத்தகம் அறிமுகமானது எப்படி?
அப்பா...‌ அவர் தான் எப்பவும் புக் வாசிப்பார். நான் சின்ன வயதிலிருந்து பார்த்து வளர்ந்தபோது புத்தகம் ஆழ்ந்து வாசிப்பவர் அப்பா மட்டுமே. அப்படியென்ன புக்ல இருக்கு. சாப்பிடும் போது கூட புக் படிச்சிட்டே சாப்பிடறார்? என்று அவர் முதுகில் ஏறி, தோளில் இரண்டு பக்கம் கால்களை போட்டு தலைமுடியை பிடித்து யோசிப்பேன். அப்ப எனக்கு வயசு ஐந்தோ ஆறோ இருக்கலாம்.

இரண்டாம் வகுப்பு படிச்சேன்.

அப்பா மளிகைக்கடை வியாபாரம். அதனால் பொருட்களை மடித்து கொடுக்க நிறைய புக் இருக்கும். அதுல சிறுவர்மலர் தங்கமலர் வரும். ஏழு வித்தியாசம் என்று முதலில் சின்ன கதையை வாசித்து அந்த விளையாட்டை துவங்கினேன்.‌

வர்ற புக் எல்லாம்‌ முடிச்சிட்டு காலாட்டி கடையில் மிட்டாய் பிஸ்கேட்ஸ்னு ஒருபிடி.

இப்படி விளையாட்டு தனமாக செய்ததை அப்பா கவனித்து எல்லா புக்கிலும் பாப்பா புதிருக்கு விடை எழுதறா. எட்டு வித்தியாசம் கண்டு பிடிக்கறா. எல்லா அறிவு சார்ந்த துணுக்குகள் வாசிக்கின்றா என்று புத்தகம் வாங்கி கொடுத்து எனது வாசிப்பிற்கு பிள்ளையார் சுழி போட்டார்.

பள்ளி விடுமுறை எல்லாம் புத்தகமும், விளையாடும் என்று பொழுது ரம்மியமாக போகும். எந்த புத்தகமும் திருப்பி படித்து வழக்கத்தை எனக்குள் விதைந்தது. விடுமுறைக்கு பெரிப்பா வீட்டுக்கு வந்தாலும் அங்கே தினசரி பேப்பர் மற்ற சிறுவர் படிக்கும் புத்தகமும் எடுத்து வாசிப்பேன். வாசிப்பு தடுமாற்றமின்றி பள்ளியில் எளிதாக எழுத பேச இயல்பாய் அமைந்தது. கஷ்டப்பட்டு படிக்காமல், ஓரிரு முறையிலே நெஞ்சில் பதியும் விதமாக வாசிப்பு அமைந்தது.

அப்படி வாசித்து ஆரம்பித்த காலத்தில் கல்கண்டு அறிமுகம். அப்பா தீவிரமான தமிழ்வாணன் விசிறி. அவரின் தன்னம்பிக்கை வரிகள் கதைகள் அவருக்கு பிடிக்கும். அது போல எனக்கும் கல்கண்டு வாங்கி தந்து, லேனா தமிழ்வாணன் எழுத்தை பழக்கினார். ஆனாலும் எனக்கு தமிழ்வாணனின் பழைய புத்தகமும் வாசிக்க பிடிக்கும். நான் படித்த முதல் நாவல் என்றால் சங்கர்லால் கதைகள். இவ்வாறு ஏற்பட்டது புத்தக அறிமுகம்.

தொடரும்.

ஹாய், இதுவும் ஒரு தொடர் தான். என்ன தொடர் என்றால், எனக்கும் என் வாசிப்புக்கு எழுத்துக்கும் நான் நடந்து கடந்து வந்த அனைத்தும் என் பாணியில் கதைகளாக, கட்டுரை வடிவில் வரும். இந்த பதிவில் நான் சந்தித்த நல்லது கெட்டது, அனுபவம், வலி, தோல்வி, நண்பர்கள், நண்பர்கள் காலத்தில் மாறிய விதம், எழுத்துலகில் நான் சந்திக்கும் விசித்திரம், கேளிக்கை, மற்றவரின் கோமாளித்தனம், அரசியல், இன்னும் பல சுவாரசியமாக தகவல் வரும்.