பீர்பால் கதைகள் - Praveena Thangaraj Novels Forum

கண்ணால் காண்பது பொய்யா?
அக்பர் வழக்கம்போல் பீர்பாலைப் பார்த்து 'கண்ணால் கண்டது பொய் ஆகுமா?'' என்று வினவினார்.

'பொய் ஆகிவிடும்; தீர விசாரிப்பதே மெய் ஆகும்'' என்றார் பீர்பால்

''இதற்கு என்ன ஆதாரம்?'' எனக் கேட்டார் அக்பர்.

சில நாட்களில் நிரூபிப்பதாக வாக்களித்தார் பீர்பால்.

ஒரு நாள் அக்பரின் படுக்கை அறையில் கட்டிலில் படுத்திருந்தார் பீர்பால்.

அடுத்த சில நிமிஷங்களில், அங்கே வந்த ராணியார், படுத்திருப்பது அக்பர் சக்கரவர்த்தி எனக் கருதி அருகிலே சிறிது தள்ளிப் படுத்து உறங்கிவிட்டார்

அடுத்து, படுக்கை அறையில் நுழைந்த அக்பர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிட வைத்துவிட்டது

படுக்கையில் பீர்பாலும் அருகில் சிறிது தள்ளி அரசியும் படுத்திருப்பதே அந்தக் காட்சி!

முகம் கடுகடுத்தது அக்பருக்கு.

அரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்; அமைச்சர்களில் முக்கியமானவர்; அறிவுத்திறன் உடையவர்; ஒழுக்க சீலர்; பல சோதனைகளில் வெற்றி பெற்றவர் - இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பீர்பால் செய்யும் காரியமா இது?

பீர்பாலை எழுப்பி, ''இது என்ன செயல்?'' என்றார் அக்பர்.

''மன்னர் பெருமானே, 'கண்ணால் கண்டது பொய்யாகும்' என சில நாட்களுக்கு முன் நமக்குள் ஒரு போட்டி ஏற்பட்டது நினைவு இருக்கிறதா? அதை நிரூபிக்கவே இவ்வாறு செய்தேன்'' என்றார் பீர்பால்.

அக்பர் இந்தக் கூற்றை ஏற்கத் தயாரில்லாதவராகக் காணப்பட்டார். உடனே ராணியை எழுப்பினார்; ''ஏன் என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பினீர்கள்?'' என்று கேட்டார் ராணி. அதே சமயத்தில் பீர்பாலும் அங்கே நிற்பதைக் கண்ட ராணியார் திடுக்கிட்டார்.

''மேன்மை மிக்க ராணியாரே, படுக்கையில் உங்களுக்கு அருகில் சிறிது தள்ளிப் படுத்திருந்தவர் யார்?'' என்றார் பீர்பால்.

''எங்கள் படுக்கை அறையில், மன்னரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?'' என எதிர்கேள்வி போட்டார் ராணி.

''இதை நீங்கள் உறுதியாகக் கூற இயலுமா?'' என்றார் பீர்பால்.

இந்தக் கேள்வியைக் கேட்டதும் ராணியார் சீற்றம் கொணடு, ''உமக்கு என்ன புத்திக்கோளாறு ஏள்பட்டுவிட்டதா? அரசரின் படுக்கையில் வேறு எவர் வந்து படுக்கத் துணிவார்?'' என்று ஆத்திரத்தோடு கேட்டார்.

ராணியின் கோபத்தைச் சாந்தப்படுத்தி, ''நீ கட்டிலில் படுக்கும்பொழுது, நான் அங்கே தூங்கிக் கொண்டிருந்ததை நீ கண்ணால் பார்த்தாயா?'' என்று கேட்டார் அக்பர்.

இந்தக் கேள்வியின் பொருள் எனக்குப் புரியவில்லையே. நான் அறைக்கு வந்தபொழுது கட்டிலில் ஒரு உருவம் படுத்திருந்தது தெரிந்தது. அது உங்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் என எண்ணி எழுப்பாமல் நான் படுத்து கண்ணயர்ந்துவிட்டேன்'' என்று கூறினார் ராணியார்.

ராணியின் நித்திரைக்குப் பங்கம் இன்றி, அவரைத் தூங்கும்படி கூறிவிட்டு அக்பரும் பீர்பாலும் அடுத்த அறைக்குச் சென்றனர். ''ராணியின் சொற்களிலிருந்து உங்களுக்கு உண்மை புலப்பட்டிருக்கும் எனக் கருதுகிறேன்; கண்ணால் காண்பது பொய்'' என்பதை இதன் மூலம் இப்பொழுதாவது உணர்ந்து கொள்வீர்கள் அல்லவா?'' என்றார் பீர்பால்.

இது ஒரு விஷப்பரிட்சை என்ற போதிலும், பீர்பாலும் ராணியும் முற்றிலும் நம்பிக்கைக்கு உரியவர்கள் ஆகையால், 'கண்ணால் கண்டது பொய்தான்' என்பதை அரசர் நம்ப வேண்டியதாயிற்று.

மாப்பிள்ளைக்கு மரண தண்டனை
தடங்களுக்கு வருந்துகிறோம்

அசலும் போலியும்
அசலும் போலியும்

ஒரு நாள் மாறுவேடத்தில் மன்னர் அக்பரும், பீர்பாலும்  நகர்வலம் வந்தனர். அச்சமயம் நடக்க முடியாதவர்களும்,

பார்வையற்றவர்களும் வீதியில் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தனர்.

இக்காட்சியைக் கண்ட அக்பரின் மனம் வேதனையடைந்தது.
அதனால், பீர்பால் அவர்களே! ஊனமுற்ற இவர்களுக்கு நாம் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றார்.

ஊனமுற்றவர்கள் பிச்சை எடுப்பது என்பது ஒரு கொடுமையான செயலாகும். ஊனமுற்றர்களாகப் பிறந்தது அவர்களது குற்றம்இல்லை. செய்யாத குற்றத்திற்கு ஆண்டவன் அளித்த தண்டனையாகும். ஆண்டவனுக்கு ஒப்பான அரசர் இதற்கு
பரிகாரம் செய்வது நல்லது தான் என்றார்

பீர்பால்.இவர்களுக்கு என்ன செய்யலாம்? என வினவினார் மன்னர்.

இவர்களுக்கு உணவை நாமே அளித்தால் அவர்கள் பிச்சை எடுக்கமாட்டார்கள் என்றார் பீர்பால். பீர்பால் கூறிய யோசனை மன்னருக்கு சரியாகப் பட்டமையினால் மறுநாளே ஊனமுற்ற எல்லோருக்கும் இலவசமாக உணவு அளிக்கபட்டது.

இது நல்ல திட்டம் என்றாலும் சில சோம்பேறிகள் உடல்ஊனமுற்றவர்கள் போன்று நடித்து இலவச உணவை வாங்கிஉண்பது அதிகமானது.

இதனால் நாட்டிலுள்ள சோம்பேறிகள் கூட்டம் நாளுக்கு நாள்இலவச உணவை வாங்கிச் செல்ல வந்தமையினால் அரசாங்கத்திலுள்ள உணவு களஞ்சியமே காலியாகி நிலைமை மோசமாகிவிட்டது.

இதனை தடுத்திட நல்ல யோசனை ஒன்றை கூறிட அக்பர்பீர்பாலிடம் கோரினார்.

மன்னர் பெருமானே! இதற்காகக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். இதற்கான முடிவை நான் செய்கிறேன் என்றார் பீர்பால்.

மறுநாள் – ஊனமுற்றவர்களுக்காக இலவச உணவு வழங்கும்இடத்திற்கு சென்றார். பீர்பால் கூறியபடி இலவச உணவு வழங்கும்நேரம் தாமதப்படுத்தபட்டது.

இதனால் இலவச உணவு வாங்க காத்திருந்தவர்களிடையே கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.அச்சமயம் ஒரு அரசு அதிகாரி அங்கே வந்தார். எதற்காக கூச்சலிடுகின்றீர்கள்?

இன்று முதல் இலவச உணவு வழங்கும் இடம் அடுத்த தெருவிலுள்ள பெரிய சத்திரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போது உணவு வழங்கி கொண்டிருக்கிறார்கள்.
ஆதலால் உடனடியாகச் செல்பவர்களுக்கு இப்போதே உணவு கிடைக்கும் என்றார்.

அரசு அதிகாரி கூறியதைக் கேட்டதும் – சற்றும் யோசனைசெய்யாமல். ஊனமுற்றவர்கள் போன்று போலியாக நடித்தவர்கள் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு சத்திரத்தை நோக்கி
ஓடினார்கள்.ஆனால் உண்மையில் ஊனமுற்ற பார்வையற்றவர்கள், கை-கால்களை இழந்தவர்கள் அந்த இடத்திற்குச் செல்வதற்கு துணையில்லாமல் தவித்தனர்.

உண்மையான ஊணமுற்றவர்கள் தவிப்பதைக் கண்ட பீர்பால் உடனடியாக அவர்களுக்கு உணவு வழங்குமாறு கட்டளையிட்டார். அவர்களும், சநதோஷத்துடன் உணவருந்தி சென்றனர்.

இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட போலியானவர்கள் மீண்டும் பழைய இடத்தை நோக்கி வந்தனர். உணவளிக்கும் மேலதிகாரிஅவர்களை எச்சரித்து போலியான நீங்கள் மீண்டும் வந்தால் கைது செய்து சிறைக்கு அனுப்பப்டுவீர்கள் என்றார்.

அன்று முதல் உண்மையான ஊனமுற்றவர்கள் மட்டுமே வந்து உணவருந்திச் சென்றனர். போலியானவர்கள் காணாமல் போயினர்.பீர்பாலின் அறிவு நுணுக்கத்தை புகழ்ந்து பாராட்டினார்
மன்னர் அக்பர்.

*தொகுக்கப்பட்ட பொதுவுடமை கதை.

அக்பரும் பீர்பாலும்
அக்பரும் பீர்பாலும்

ஒரு நாள் அக்பர் அரசவையில் அக்பரும் பீர்பாலும் பேசி கொண்டிருக்கும்போது

அக்பர் கேட்டார் பீர்பாலே இந்து மதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா

பீர்பால் அரசே அவருக்கு ஆயிர கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் ஏன் கேட்கிறீர்கள்?

அக்பர் இல்லை ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததர்காவா உங்கள் திருமால் கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டும் நீர் கூறியது போல் ஆயிர கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றியிருக்கலாமே?

அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும்?

இதற்க்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார்

அதை பார்த்ததும் அக்பருக்கு ஒரு சந்தோசம் பீர்பாலே பதில் சொல்ல முடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று

ஒரிரு நாட்கள் சென்ற

அக்பரும் அவர் குடும்பத்தாரும் அவர்களுடன் பீர்பாலும் சில மெய் காப்பாளர்களும் கங்கை கரையை கடப்பதற்கு படகில் சென்று கொண்டிருந்தனர்

அக்பரின் மூன்று வயது பேர குழந்தையை கொஞ்சி கொண்டிருந்த பீர்பால் படகு ஆழமான பகுதிக்கு வந்ததும் பீர்பால் படகோட்டிக்கும் படகில் வந்த ஒரு வீரனுக்கும் சைகை காட்டிவிட்டு அக்பரின் பேரனை கங்கையில் தூக்கி போட்டுவிட்டார

பதறிய அக்பர் உடனே நீரில் குதித்து தன பேரனை காப்பாற்ற துணிந்தார்

அவரோடு சேர்ந்து பீர்பால் சைகை செய்த வீரனும் நீரில் குதித்து அக்பரையும் குழந்தையும் தூக்கி வந்து படகில் சேர்த்தான்

படகில் பேரனுடன் ஏறிய அக்பர் தன்னை ஆசுவாசப்படுத்தி விட்டு பீர்பால் என்ன இது நீயா இப்படி என் பேரனை கொல்ல துணிஞ்ச என்னால நம்பவே முடிலயே சொல்லும் என்ன காரணத்துக்காக என் பேரனை தண்ணீர்ல தூக்கி போட்டீர் சொல்லும்? என்றார் கோபமாக

பீர்பால் அமைதியாக உங்களுக்கு திருமாலை பத்தி தெரியனும் என்பதற்காக அப்படி செஞ்சேன் அரசே என்றார்

அக்பர் பீர்பாலே என்ன விளையாடுறியா நீ என் பேரனை தூக்கி தண்ணீர்ல போட்டதுக்கும் உமது திருமாலை நான் தெரியுறதுக்கும் என்ன சம்மந்தம்

பீர்பால் அரசே மன்னித்துக்கொள்க நீங்க அன்று ஒரு நாள் உங்கள் கடவுள் திருமாலுக்கு சேவகர்களே இல்லையா அவர்தான் வந்து யானையை காப்பாற்றணுமான்னு கேட்டிங்களே ஞாபகம் இருக்கா உங்களுக்கு?

அக்பர் ஆமாம் அதுக்கும் இன்று நீ என் பேரனை தூக்கி தண்ணீர்ல போட்டதுக்கும் என்ன சம்மந்தம்?

பீர்பால் அரசே கொஞ்சம் யோசித்து பாருங்கள் என்னையும் சேர்த்து இந்த படகில் உங்களுக்கு 10 சேவகர்கள் இருக்கிறார்கள் ஆனால் இவர்கள் யாருக்கும் நீங்கள் உத்தரவு பிற்பிக்காமல் நீங்களே உங்கள் பேரனை காப்பற்ற தண்ணீரில் குதித்து விட்டீர்கள் ஏன் அரசே?

உங்களை நீங்கள் நம்பவில்லையா என்று கேட்டார்

அக்பர் கொஞ்சம் கோபம் தணிந்து அப்படி இல்லை பீர்பால் என் பேரன் மேல் அளவு கடந்த பாசம் வச்சுருக்கேன்னு உனக்கு தெரியும் நீர் திடிர்னு தண்ணீர்ல அவனை தூக்கி போட்டதால் எனக்கு அவனை காப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் மேலோங்கி இருந்ததே தவிர உங்களுக்கு உத்தரவிட்டு அவனை காப்பாற்ற சொல்லும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லமால் நானே குதித்து அவனை காப்பாற்றினேன் என்றார்

பீர்பால் புன்னகையுடன்

அரசே இந்த நாட்டை ஆளும் உங்களுக்கே இவளோ பாசம் இருக்கும் போது அண்ட சாகசரங்களையும் ஆளும் எங்கள் திருமாலுக்கு எவளோ பாசம் இருக்கும் உயிர்கள் மேல்

அதனால்தான் எத்தனை சேவகர்கள் இருந்தாலும் தன்னை நம்பி அழைப்பவர்களை எங்கள் கடவுள் நேரில் காக்க வருகிறான்

அரசே இப்பொழுது புரிந்ததா திருமால் ஏன் நேரில் வந்து யானையை காப்பாற்றினார் என்று

நான் நீரில் வீசிய உங்கள் பேரனை காப்பற்ற இங்குள்ள ஒரு வீரனிடமும் படகோட்டியிடமும் நான் முன்னமே சொல்லி வைத்திருந்தேன் தவறு இருந்தால் மன்னியுங்கள் அரசே என்றார்

அக்பர் இல்லை பீர்பால் நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்

உங்கள் கடவுளை பற்றி தவறாக எண்ணி இருந்தேன் உங்கள் கடவுள் தாயினும் மேலானவர் என்பதை புரிந்து கொண்டேன் என்றார் நெகிழ்ச்சியாக

ஏற்கனவே பல முறை பலர் உபன்யாசகங்களிலும் கதைகளிலும் சொன்னது போல் அன்புக்கு பண்புக்கு நேர்மைக்கு பகவான் கட்டுண்டவன் கூப்பிட்ட குரலுக்கு யார் மூலமாவது இன்றும் உதவுபவன்

அதனால் தான் கலியில் "தெய்வம் மனித ரூபேன" என்பர்

அவனே தாய் தந்தை போல் நமக்கு இருக்கும் போது அவன் அருளாலே எல்லாம் நடக்கிறது அவனின்றி அனுவும் அசையாது என்று மட்டும் நினைப்போம்

என்றும் எப்போதும் நன்மையே நடக்கும்

"ஓம் நமோ நாராயணாய

நம:

"சர்வம் கிருஷ்ணார்பனமஸ்து"

*தொகுக்கப்பட்ட பொதுவுடமை கதை.