மௌனமே வேதமா - Praveeena Thangaraj - Praveena Thangaraj Novels Forum

மௌனமே வேதமா-14 (முடிவுற்றது)
https://praveenathangarajnovels.com/மௌனமே-வேதமா-14-முடிவுற்றது/

மௌனமே வேதமா-13
https://praveenathangarajnovels.com/மௌனமே-வேதமா-13/

மௌனமே வேதமா-12
அத்தியாயம்-12

நேரம் கழித்து உறங்கியதால் என்னவோ பிரணவி அடுத்த நாள் எழுந்துக்கொள்ளவும் தாமதமாக எழுந்தாள்.

‌‌ மடமடவென சுடிதாரோடா தலைவிரிக் கோலமாக ஹாலுக்கு வர, ஆத்ரோயன் டோஸ்டரில் பிரட்டை வைக்க வெண்ணெய் தடவிக் கொண்டிருந்தான்.‌

அவனை கண்டு சங்கடமாய் நிற்க, "இப்ப தான் எழுந்தியா? குயிக்கா கிளம்பு. லஞ்ச் கேண்டீன்ல பார்த்துக்கலாம். இப்ப சாப்பிட பிரட் இருக்கு" என்றதும் தாமதப்படுத்தாமல் குளிக்க ஓடினாள்.‌

‌ அவள் கல்லூரிக்கு செல்ல தயாராகி வரவும் சாப்பிட்டு, ஆத்ரேயன் ஷாக்ஸ் அணிந்து ஷூவிற்கு பாலீஷ் போட்டிருந்தான்.

மடமடவென தட்டிலிருந்ததை விழுங்கினாள்.

ஷூ பாலீஷ் செய்து அணியும் கனம் ஆத்ரேயன் குணிய, பிரணவி கொடுத்த செயின் மின்னியது.

இது அது தானா? என்று‌ கண்ணை கசக்கி ஏறிட, ஆத்ரேயன் பைக் கீசெயின் எடுத்து புறப்பட தயாரானான்.

அவசரமாய் தட்டை சிக்கலில் போட்டு புஸ்தக பையை எடுத்து வீட்டை பூட்டுவதாக வெளியே வந்தவள் பார்வைக்கு, ஆத்ரேயனின் நெஞ்சில் முதல் பட்டன் போடாமல் இருக்க, அவன் நெஞ்சு ரோமத்தோடு நீலாம்பரி என்ற பெயர் பதித்த தங்கசெயின் உறவாடியது.

அவள் அதனை ஆச்சரியமாக காணும் நேரம் ஆத்ரேயன் புறப்பட்டு விட்டான்.

அய்யோ அவரு நீலாம்பரின்னு பெயர் இருக்குற செயினை கழுத்துல போட்டிருக்கறார்.

இனி எவளும் பார்க்க மாட்டாளுங்க.

அப்படியே பார்த்தாலும் மேரேஜ் ஆனவர்னு சட்டுனு பார்வையை மாத்திப்பாளுங்க' என்ற கொண்டாட்டத்துடன் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தாள்.

பேருந்து இருக்கையில் வீற்றுக்கொண்ட போது கனவில் மிதந்தாள்.

இருசக்கர வாகனத்தை இயக்கிய படி, இடது கையால் செயினை தொட்டு பார்த்தான்.

நேற்று முழுக்க போடலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் வைத்து, மற்ற பெண்களின் மனதில் சலனத்தை விதைக்க வேண்டாமென்று நல்லெண்ணத்தில் அணிந்தான்.

தவறு செய்பவரையை விட தவறு செய்ய தூண்டும் அழகிற்கு இனி யாரும் உரிமைக் கொண்டாட வேண்டாமென்ற தகவலாக அணிந்தான்.‌

பெண்கள் மட்டும் தாலி மெட்டி பொட்டு அணிந்து கொள்வதை போல இது இருக்கட்டும் என்ற எண்ணம்.

அழகால் ஆபத்து. இங்கே பிரச்சனை அழகால் வருகின்றதே. தவிர்க்கும் முடிவு அவ்வளவே. மற்றொரு காரணம் பிரணவி முகம் வாடி கோபமாய் நீட்டினாள்.

மிதுனா போல இங்கு யாராவது வந்து நின்றால்?

ஆத்ரேயன் வண்டி நிறுத்தி வரும் போதே செக்கியூரிட்டி கண்கள் கூர்நோக்கி செயினை கண்டது. புது செயின் வேறு‌ பளபளப்பில் மின்னியது‌.

வருகை பதிவேட்டில் கையெழுத்தானது போட அங்கே சிலர் 'செயின் நல்லாயிருக்கு சார்." என்றனர்.

"ஓய்ஃப் பெயரா சார்?" என்றதற்கு அளவான புன்னகையை வீசினான்.

நீலாம்பரி என்ற பெயர் ஆத்ரேயனை பார்க்கும் அனைவரின் கண்களுக்கும் புலப்பட்டது.

மாணவிகள் 'சார் ஓய்ஃப் பெயர் நீலாம்பரியா?' என்று கிசுகிசுத்தனர்.

மதியத்திற்கு மேலாக கேண்டீனில் சாப்பிட சென்றார்கள். அதன்‌பின் பிரணவி வகுப்பிற்கு வந்தான்.

வரும்போதே மாணவ மாணவியர்கள் தங்கசெயினை கண்டு விட்டனர்.‌

"சார்… செயின் இதுக்கு முன்ன போட்டிருந்திங்களா?" என்று கேட்டான் ஒரு மாணவன்.

"சார் நீலாம்பரி தான் மேமோட நேமா சார்" என்று மோனிகாவிற்கு முன்னிற்கும் மாணவி கேட்க, "ஆமா மா" என்றவன் மாணவர் பக்கம் பார்த்து, "நேத்து இங்க நடந்த கூத்து, ஓய்ஃபிடம் பேசப்பட, அவங்க ஓவரா சண்டை.

என்னது 22 பேர் காதலிச்சிருக்காங்களா? அதுல காலேஜ்ல வேலை பார்க்குற இடத்துல மூன்றா? அப்படின்னு இங்கேயும் யாராவது பிரப்போஸ் பண்ணிட போறாங்கன்னு பயந்து நைஸா என் கையில் அவங்க பெயரை பொறிச்ச செயினை கொடுத்து போட்டுக்க சொல்லிட்டாங்க. சோ… நான் இதை போட்டுக்க வேண்டிய நிர்பந்தம்" என்று சிரித்துக் கொண்டே உரைத்தான்.

பிரணவியோ முன்னின்று மாணவி 'மேமோட பெயர் நீலாம்பரியா சார்?' என்ற மேமில் சிரிக்க, ஆத்ரேயன் பேசவும், கமுக்கமாய் தான் எந்த காரணத்தில் அவனுக்கு செயினை அணிந்திட நீட்டினோம் என்பதை அறிந்ததில் பதுங்கினாள்.

"சார் அப்ப நீலானு செல்லமா கூப்பிடுவாரா?" என்ற கிசுகிசு எழவும், என்றைக்கும் இந்த பக்கம் திரும்பாதவன், பேசி முடித்து பிரணவி பக்கம் பார்வையை திருப்பினான். மாணவி பேசியதை கேட்டும் கேளாதவன் போல நடந்துக் கொண்டான்.

அவள் ஒளிவதை கண்டு மேலும் புன்னகை விரிந்தது.

"ஓகே ஸ்டூடண்ட் அடுத்த பாடம் நடத்தறதுக்கு முன்ன, லாஸ்ட் சேப்டர்ல ஒரு டெஸ்ட் வச்சிடலாம். படிக்க சொன்ன போர்ஷன் படிச்சிங்களா?" என்று கேட்டு போர்டில் வினாவை எழுத, "எஸ் சார்‌" என்ற கோரஸ் குரல்கள் எழுந்தது.

அதன்பின் நேரங்கள் நெட்டி முறித்து கடத்திட, இனிமையாக சென்றது.

இதில் பிரணவிக்கு ஏககுஷி.

மதியம் கேண்டீனில் சாப்பாடு வாங்கியவள் சாப்பிட்டு கொண்டே ஆத்ரேயனை நோக்கவும், அவனோ ஒரு சின்ன முறைப்புடன் சாப்பிட்டான்.

'இவர் கிளாஸ்ல நல்லா தானே பேசினார்.‌ இப்ப என்னவாம் எதுக்கு முறைக்கறார்? ஒருவேளை ஸ்டாப் ரூம் முழுக்க கிண்டல் கேலின்னு மத்தவங்க பேச அதுக்கு என்‌மேல கோபப்படுறாரோ? இருக்கும் இருக்கும்' என்று கையை அலம்பி வகுப்பை நோக்கி நடந்தாள்.

சற்று முன் தான் ஆத்ரேயனுக்கு சங்கவி அழைத்தாள். சாதாரணமாக தான் நலம் விசாரிப்போடு பேச்சு கடந்தது. நடுவில் பிரணவி பற்றி விசாரிக்க, 'ஆஹ் நல்லா பார்த்துக்கறேன், நல்லா சமைக்கறா, அவ கிளாஸ் டெஸ்ட்ல நல்ல மார்க் ஸ்கோர் பண்ணறா,' என்று அடுக்கினான் ஆத்ரேயன்.

சங்கவி பொருக்கமாட்டாது, "நிறுத்துடா… எப்ப பாரு அவளோட புரப்பஸர் மாதிரியே பழகற. அவளுக்கும்‌ அறிவேயில்லை. புருஷன் சுத்தி வர வைக்க தெரியலை‌. பாட புஸ்தகமே கதின்னு கிடக்கா." என்று திட்ட, "இப்ப என்ன நானும் பிரணவியும் நல்ல கணவன் மனைவியா வாழறோம். எல்லாத்தையும் வெளிச்சம் போட்டு காட்டணுமா?" என்று ஆத்ரேயன் பல்லை கடித்து பேசினான்.‌

சங்கவியோ "நான் உனக்கு அக்காடா. நீ சின்ன வயசுல, முதல் முதல்ல அனா ஆவன்னா படிக்க கத்துக்கிட்டதே என்னிடம். குருவை மிஞ்சின சிஷ்யனா சமாளிக்காத.

தினமும் வீட்ல வீடியோ கால் போட்டு பேசறப்ப எல்லாம். நீ ஒரு ரூம் வரும், அவ ஒரு ரூம்லையும் இருப்பதையும் ரூம்லயிருக்கற பெயிண்ட் கலரே காட்டி கொடுக்கும்.

இதுல ஒரே ரூம்ல இருப்பியா? இந்த ஆறு மாசமா தனி தனியா தங்கறது எங்களுக்கு தெரியாதா?

அப்பா அம்மாவுக்கு கூட தெரியும்‌. சரி ஏதோ புரப்பஸரா இருக்கான். அவனுக்கு தெரியாததான்னு உன்னிடம் இதை பத்தி பேசலை. கேட்கலை.

அந்தபொண்ணை கொடுத்த வீட்ல அந்த மகராசனும் எல்லாம் தெரிந்தும் உன்கிட்ட கேட்காம நாகரீகமா இருக்கார். எல்லா நேரமும் இப்படி இருக்க மாட்டாங்க ஆத்ரேயா‌." என்று திட்ட, "ஏய் போனை கொடு" என்று சங்கவியின் கணவர் வினய் வாங்கி, "ஏன்‌மாப்பிள்ளை இப்படி இருக்க, படிப்பு மட்டும் அவசியமா? பொண்டாட்டியும் அவசியமாச்சே.

நீ தேன்நிலவுக்கு கூட போகலை. ஏதாவது படத்துக்காவது கூட்டிட்டு போங்க மாப்பிள்ளை." என்று கேலி செய்ய ஆத்ரேயனுக்கு வந்த கோபத்திற்கு அக்கா புருஷனிடம் காட்ட முடியாது "சரிங்க மாமா" என்று துண்டித்து விட்டான்.‌

ஆத்ரேயன் மனதில் ரூம்லயிருந்து வீடியோ கால் பேசியிருக்கா. ஏன்‌ ஹால்ல வந்து பேச வேண்டியது தானே? சை… இவளால மாமா என்னை பேசறார். இதுல அக்கா வேற' என்று எண்ணியவன் முன் பிரணவி புன்னகைத்தாள் பதிலுக்கு சிரிப்பானா என்ன?

அன்று வீட்டிற்கு வந்து இதை கூறி அதட்டினான். கிட்டதட்ட சண்டை.

"இல்லை சார் ரூம்ல சம்டைம் நைட்டி போட்டுப்பேன்.‌ ஹால்லன்னா உங்களை பார்க்கணும் சங்கடமா இருக்கும்." என்று உரைத்தாள்.

இதற்கு பின் எப்படி திட்டுவான்.
அவனுமே வீட்டில் முட்டி வரை ஷார்ட்ஸ், கையில்லாத பனியன் என்று சுற்றுவான்.
பிரணவி இருப்பதால் இங்கு அறவே தவிர்த்து விட்டான்.

வீட்டில் எந்நேரமும் பிடி மாஸ்டர் போல ஃபுல் டிராக் டீஷர்ட் என்று அலைகின்றான்.

அவனை போலவே அவளும் அறைக்குள் நைட்டி போட்டு சுத்துபவளாக கருதியப்பின் மௌனமாய் சென்றான்.‌
அதன் பின் வந்த நாட்கள் எல்லாம் அமைதியாக கழிந்தது.

பெரும்பாலும் ம்ம் சரி ஓகே என்ற‌ ஓரிரு வார்த்தைகள் உதிர்த்து கடந்திடுவார்கள்.

பிரணவி ஆத்ரேயனிடம் இயல்பான கணவன் மனைவி வாழ்வை நினைத்து பார்க்கவில்லை.

தான் க்ரஷாக எண்ணிய பேராசிரியர் கணவனாக வந்தடைந்ததே பெரும் பாக்கியம். இதில் பேராசை எதுவும் வேண்டாமென முடிவெடுத்தாள்.

அவள் முடிவெடுத்தால் எல்லாம் சரியாக இருக்குமா? விதி சும்மாயிருக்காதே.

அன்று எம்.எஸ்.சி முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் பிரணவியை அழைத்தார்கள்.

கல்லூரி ஆண்டுவிழா வருவதால் 'கிளாஸ் நடப்பது அரிதாக போவோர் வருவோரை நிறுத்தி வெட்டியாக பேசி நேரத்தை கடந்தினார்கள்.

அப்படி தான் பிரணவியை அழைத்து பேசும் நேரம் அவள் குங்குமமும் தாலியும் கண்ணில் படவும், "நீ கல்யாணம் ஆனப்பொண்ணா?" என்றான் ஒருத்தன்.

"ம்ம் ஆமா அண்ணா" என்றாள்.

"அண்ணாவா? ஏய்.. சீனியர்னு சொல்லணும்" என்றான் மிரட்டலாக.‌

"ஓகே சீனியர்" என்றாள்.

"ஆமா கல்யாணமாகி எப்படி படிக்கறிங்க? ஹஸ்பெண்ட் படிக்க எல்லாம் விட்டாரா?" என்று கேட்கவும் அந்த தோரணையே அருவருப்பை தந்தது.

"அவர் படிப்புக்கு இம்பார்டன்ஸ் தருவார்." என்றாள் பிரணவி.

"அந்த தாலி எடுத்துகாட்டு" என்று ஒருவன் கேட்க, நடுக்கமாய் கையில் ஏந்தினாள்.

"என்ன மாங்காய் சங்கு எதுவும் இல்லை.?" என்றான். அவன் தெலுங்கன்.‌ அதனால் அவ்வாறு கேட்டான்.

"அது ஒவ்வொருத்தங்க ஒவ்வொரு மாதிரி தாலி டிசைன் உண்டு." என்று உரைத்தாள் தோழி மோனிகா. மோனிகா கைகளை பிடித்து நின்றாள் பிரணவி.

"டிசைனை விடுடா. ஜீனியர் பாப்பா பாடம் படிக்கறப்ப படுக்கையறை நினைப்பு வராதா? இல்லை உன் ஹஸ்பெண்ட் உன் புக்கை மூடி வச்சிட்டு ரூமுக்கு கூப்பிட மாட்டார்?'' என்றான் விஷமமாக.

பிரணவிக்கு கண்ணீர் சுரந்தது. "டேய் விட்டுடு அந்த பொண்ணு அழுவுது" என்றான் சகமாணவன். பிரணவி அழுவதற்கு மற்றொரு காரணம் தூரத்தில் ஆத்ரேயன் அவள் அழுவதை பார்த்தும் அவளை தேடி வந்து விசாரிக்காமல் கல்லு போல நிற்பதே.

"இல்லைடா மச்சான். நாம விழுந்து விழுந்து படிச்சும் மார்க் வர மாட்டேங்குது. இவளுங்க மாதிரி இருக்குற பொண்ணுங்க எப்படி படிப்பாங்க? மனசு புத்தகம் பக்கம் போகுமா?" என்று கேட்கவும், "அதான் நான் முன்னேற என் புருஷன் காரணம் என்று பக்கம் பக்கமா அடிச்சி விடுவாளுங்க." என்று அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.

"என்ன முன்னேற்றம் மாமு. வயிறு பெருத்து குட்டி போடுவாங்க" என்றதும் சரவெடி போல சிரித்தனர்.

அதன் பின் கொஞ்ச நேரம் கழித்து வேறு மாணவிகள் அகப்பட மோனிகா பிரணவியை விட்டார்கள்.

பிரணவி அழுதுக் கொண்டே இருக்க, மோனிகாவோ இப்ப எதுக்கு அழுவற பிரணவி? அவனுங்க அப்படி தான் பேசுவாங்க. பொறுக்கிங்க சீனியர் என்ற கொம்பு.

இது மாதிரி கூட படிக்கிற பொம்பள பிள்ளைங்க என்கிட்ட கேட்டாங்க. என்ன பண்றது. எல்லாம் அவங்க இந்த நிலையில் இருந்து பார்த்தா இப்படி கேட்பங்களா?  எல்லாம் நம்ம பதில் சொல்லி ஓய்ந்து போனது தான் மிச்சம்." என்று சாதாரணமாக கடந்தாள்.

பிரணவிக்கு அவ்வாறு கடக்க முடியவில்லை. அதுவும் ஆத்ரேயன் தூரத்தில் இருந்து பார்த்து அருகே வந்து விசாரிக்காமல் போனது நெஞ்சை அழுத்தியது.

தொடரும்.

https://praveenathangarajnovels.com/மௌனமே-வேதமா-12/

மௌனமே வேதமா-11
https://praveenathangarajnovels.com/மௌனமே-வேதமா-11/

மௌனமே வேதமா -10
https://praveenathangarajnovels.com/மௌனமே-வேதமா-10/

மௌனமே வேதமா-9
https://praveenathangarajnovels.com/மௌனமே-வேதமா-9/

மௌனமே வேதமா-8
https://praveenathangarajnovels.com/மௌனமே-வேதமா-8/

மௌனமே வேதமா-7
https://praveenathangarajnovels.com/மௌனமே-வேதமா-7/

மௌனமே வேதமா-6
அத்தியாயம்-6

சங்கவி அண்ணி பேசியதையும் பாட்டி பவானி பேசியதையும், மனதில் ஓடவிட்டு பேனாவை கையில் பிடித்தபடி சிந்தனையை எங்கேயோ செலுத்தினாள்.

நேற்று இதே நேரத்தில் சாப்பிட கேட்டாளே இன்று ஏதாவது அக்கா பேசியதில் யோசிப்பாளோ? என்ற ஐயத்தோடு ஹாலுக்கு வந்தான்.

கதவு மூடியிருக்க மெதுவாக கை வைக்கவும் லேசான கீறிச்சிட்டு திறந்தது.

சிந்தனையை தறிக்கெட்டு செலுத்தியவளுக்கு ஆத்ரேயன் காண்பது உணரவில்லை.

"பிரணவி" என்றதும் ஆஹ் சார்" என்று எழுந்தாள்.

நோட்டும்‌ புத்தகமும் கீழே சரிந்தது. பேனா உருண்டு அவன் காலடி வந்தடைந்தது.

அதனை எடுத்து, "அக்கா போன் போட்டப்பவே நினைச்சேன். ஏதாவது திங்க் பண்ணிட்டு படிப்பை புறம் தள்ளிருப்பன்னு.
என்ன பேசினா?" என்று அதட்டினான்.

பிரணவி ஆத்ரேயனை ஏறிடாமல் தலை கவிழ, "இங்கப்பாரு… உன் பெர்ஸன்ல் லைப்ல யாரும் தலையிட கூடாது.

அது என் பேரண்ட்ஸ், உன் பேரண்ட்ஸா இருந்தாலும் சரி. அப்படியிருக்க என் அக்கா நம்ம லைப்பை டிசைட் பண்ண விடாத.
உன்னை கல்யாணம் பண்ணியதுக்கு முக்கிய காரணம். என்னால உன் லைஃப், உன் ஸ்டடிஸ் பாதிக்கப்படக்கூடாதுன்ற ஒரே காரணத்துக்கு தான்.

கடைசில என்னாலயே என் வீட்டு ஆட்களால் உன் ஸ்டடிஸ் பாதிக்க ஆரம்பிக்குது.

கல்யாண ஆனா தேவையில்லாம பேசுவாங்க. அதை இக்னோர் பண்ணிட்டு படிப்புல கவனத்தை வைக்கணும்." என்று கூற‌ தலையாட்டினாள்.

"உன்‌ பே‌னா." என்று நீட்டவும் பெற்றுக் கொண்டாள்.

புத்தகம் நோட்டை எடுத்து எழுத முனைய, பேனா விழுந்ததில் எழுதாமல் சதி செய்தது.

"பச்" என்று சலித்து கொள்ள, ஆத்ரேயன் திரும்பினான்.

கீழே விழுந்ததில் பேனா முனை தரையில் மோதி சரியாக எழுதவில்லை என்பது புரிந்தது.

தன் ஷர்ட் பேக்கெட்டில் இருந்து கோல்டன் பார்க்கர் பேனாவை வழங்க, வாங்க தயங்கினாள்.

"எழுதிட்டு கொடு" என்றான்.

அவளும் வாங்கிக் கொண்டு எழுதினாள்.

அசைமெண்ட் புத்தகத்தை பார்த்து தானாக எழுத ஆரம்பித்தாள்.

வேறென்ன செய்ய ஹாலில் ஆத்ரேயன் சோபாவில் அமர்ந்து இவளை கண்பார்வையில் வைத்திருக்க சிந்தனையை ஓடவிடாமல் எழுத ஆரம்பித்தாள்.

இப்படி வீட்டிலும் புரப்பஸராக கண்கானிக்க எதிரே உட்கார்ந்தால்…

பிரணவிக்கு ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தது.

பாட்டி பவானி பேசியது, அன்னை அமலா கொடுத்த அறிவுரை, அத்தை காஞ்சனாவின் போதனை, இன்று சங்கவி அண்ணியின் சுட்டிக்காட்டிய பேச்சு எல்லாமே ஒரு பெரிய பெட்டியில் மூடி வைத்து பூட்டு போட்டு அதற்கு மேல் ஆத்ரேயன் வீற்றிருப்பது போல தோன்றியது.

அவளாக கை வலிக்க எழுதி முடித்து திரும்ப கோதுமை தோசையும், தக்காளி ஊறுகாயும் தட்டில் எடுத்து வந்திருந்தான்.

"எழுதற கவனத்துல இருந்த, அதனால் தோசை சுட்டுட்டேன்." என்று கொடுக்க, "உங்களுக்கு ஏன் சார் சிரமம்?" என்று வாங்கினாள்.

"இதெல்லாம் சிரமம் இல்லை." என்று கூறிவிட்டு‌ அகலவும் பிரணவி சாப்பிட்டாள்.‌

நேற்று போல வெளிக்கதவை எல்லாம் அடைத்து விட, பிரணவி அறைக்கு அடியெடுத்து வைக்க, அவனும் அவனது அறைக்கு சென்றான்.

'இத்தனை நாளா புரப்பஸர் மட்டுமா இருந்தார். இப்ப ஹாஸ்டல் வார்டனா மாறிட்டார்.' என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

அடுத்த நாள் பருப்பு ரசமும், அவரை பொரியலும் வைத்துவிட்டு, நேற்று கரைத்த கோதுமை மாவில் தோசை சுட்டு தேங்காய் சட்னி வைத்தாள்.

அதெல்லாம் கூட சுவையாக செய்யவும் ஆத்ரேயன் சாப்பிட்டு புறப்பட்டான்.

பிரணவியும் அவளது புத்தக பையை மாட்டிக்கொண்டு பேருந்தில் ஏறிக்கொண்டாள்.

நான்கு நிறுத்தம் தள்ளி மோனிகா ஏறவும் அவள் பையை வாங்கி மடியில் வைத்துக் கொண்டாள். மோனிகா நின்றபடி வந்தாள்‌.

ஒரு மூன்று ஸ்டாப் நின்று தான் வந்தாள்.

ஓரிடம் வந்ததும் குனிந்து ஜன்னல் பக்கம் பார்க்க, பிரணவியும் எங்க பார்க்கின்றாளென்று திரும்ப, ஆத்ரேயன் பைக் சிக்னலில் நின்றிருந்தது.

"அது ஆத்ரேயன் சார் தானே?" என்று மோனிகா கேட்க, ஹெல்மெட் அணிந்தவனாக ஆத்ரேயன் இருக்க, "ம்ம்" என்றாள் பிரணவி.

"இந்த மனுஷன் ஹெல்மேட் போட்டாலும் கண்டு பிடிச்சிட்டேன்." என்று பெருமையாக பேசிக்கொண்டாள்.

பிரணவிக்கு அந்த பேச்சு உவப்பாக இல்லை என்றதால் அம்மாவிடம் பேசுவதாக தவிர்த்தாள்.

உண்மையில் அமுதா அழைத்திருந்தார். பஸ் ஏறும் நேரமென்பதால் தவிர்த்து இருந்தவள் பஸ்ஸில் உட்கார்ந்ததும் பேச முடிவெடுத்து மறந்திருந்தாள்.

"என்னம்மா?' என்று தான் கேட்டாள்.

"என்னடி சமைச்ச?" என்று அம்மாவின் முக்கிய பணியை தான் தலையாய கடமையாக கேட்டார்.

"நேத்து காலையில உப்புமா, மதியம் கேரட் ரைஸ் பக்கோடா. நைட் கோதுமை தோசை. இப்ப காலையில் அதே கோதுமை தோசை மாவு ஊற்றி தேங்காய் சட்னி. மதியத்துக்கு பருப்பு ரசம், அவரக்காய் பொரியல். நானும் அவரும் காலேஜிக்கு போறோம். காலேஜ் போனா போன் பேச முடியாது.
சீக்கிரமா சொல்ல வந்ததை சொல்லுங்க." என்றாள்.

"மாப்பிள்ளை உன்கிட்ட நல்லா பழகறாரா?" என்று அன்னை மனதாக கேட்டாள்.

"நல்லா பழகறார். என்ன பிரச்சனை. அவர் கூடயிருக்கறப்ப ஏதாவது கேட்டுட்டே இருக்காதிங்க. நான் ஈவினிங் வீட்டுக்கு வந்து பேசறேன்" என்று துண்டித்தாள்.

அமலாவும் பைக்கில் போகும் போது பேசினால் மாப்பிள்ளைக்கு கேட்குமென எண்ணினார்.‌ மாப்பிள்ளை தான் வண்டியை முறுக்கி கொண்டு முன்னால் சென்று விட்டானே.

பிரணவி ஆத்ரேயன் வாழ்க்கை மற்றவர்கள் தலையீடாமல் இப்படி தான் அழகாக கடந்தது.

அவர்கள் உண்டு அவர்கள் வேலையுண்டு என்று.

கல்லூரிக்கு சென்று பாடம் நடத்த, வீட்டுக்கு வர, சில நேரம் பிரணவியை கவனிப்பான்.‌

தான் கொடுத்த பேனாவை வைத்து எழுதுபவள், எழுதும் ஆர்வத்தில் தலையில் பேனாவை சொறுகுவாள். பேனாவை உதட்டில் வைப்பாள். சில நேரம் லேசாக அவள் பல்லில் கடிபடும்.

அதை பார்த்தபின் அவன் பேனாவை ஏன்டா கொடுத்தோம் என்றெண்ணுவான்.

ஆனாலும் அவன் பேனாவை கேட்கவில்லை.

பிரணவிக்கு படிப்பு வீடு சமையல் புது நட்பு என்று பொழுது போனது. ஆத்ரேயன் வகுப்பு கூட அவள் பக்கம் பாராது பாடம் நடத்தி செல்லவும் இவளுக்கு வசதியாக போனது.

அதே போல் மற்ற மாணவிகளுக்கு வசதியாக இருந்திருக்கும் போல, ஆத்ரேயனை வஞ்சனையில்லாமல் பார்த்து ரசித்தனர்.

அடிக்கடி பெண்கள் பக்கம் சலசலப்பு பேச்சு கேட்க, "கேர்ள்ஸ் பேசாம பாடத்தை கவனிக்கறிங்களா?" என்று அதட்டுவான்.‌

அதன்‌பின் வகுப்பு அமைதியாகும். அன்றும் அப்படியே சலசலப்பு கேட்க திரும்பியவன் பார்வைக்கு பிரணவி மோனிகாவிடம் பேசுவது கண்ணில்படவும் ''பிரணவி கிளாஸ் நடக்கும் போது என்ன பேச்சு. வெளியே போ" என்று கத்தினான்.

இதுவரை பூ முகமாக அழகனாக காட்சி தந்த முகம் ரௌத்திரம் பொங்க அதட்டவும் வகுப்பில் நிசப்தம் மட்டுமே.

"ஒவ்வொருத்தர் வீட்லையும் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு படிக்க அனுப்பறாங்க. அப்படியிருக்க தேவையில்லாம பேச எப்படி மனசு வருது.

என் கிளாஸ்ல அமைதியா பாடம் கவனிக்கறவங்க உள்ள இருங்க. இல்லையா வெளியே போயிட்டே இருக்கலாம்." என்று காட்டு கத்தலில் பிரணவிக்கு அழுகை வந்தது.

ஆனால் பாடம் எடுக்கும் நேரம் பேசியது தன் தவறு என்று மௌனியானாள்.

இங்கு வந்து இந்த இரண்டு மாதத்தில் முதல் முறை கோபத்தை பார்க்கின்றாள்.

முன்பு மிதுனாவிடம் ஆத்ரேயன் காட்டிய ஆக்ரோஷத்தை காட்டிலும் குறைச்சல். ஆனாலும் பிரணவிக்கு 'சார் திட்டிவிட்டார்' என்றதில் சிறு வருத்தம் பெருகியது. அது மாலை திரும்பும் வரை அதே வருத்தம் நீடித்தது. மோனிகாவிடம் கூட பேசாமல் பேருந்தில் வந்தாள்.

நமக்கு எப்போழுது பள்ளியில் கல்லூரியில் பிடித்த ஆசிரியர் என்று சிலர் இருப்பார்கள். அப்படி தான் கல்லூரியில் ஆத்ரேயனை அவளுக்கு பிடிக்கும்.

அதுவும் மிதுனா போன்ற பெண் அவரிடம் காதலென கதைத்து வழிந்தும் முகம் கொடுக்காது பொறுப்பான ஆசிரியராக நடந்துக் கொண்டது ஆச்சரியம் இல்லையா?!

இதே ஆத்ரேயன் இடத்தில் வேறு ஒரு‌ புரப்பஸர் இருந்தால் மிதுனா போல உருகிஉருகி காதலிப்பதாக உரைத்தவளை மஞ்சத்தில் விழவைத்து காரியம் சாதித்து இருப்பார். மிதுனாவை அறைந்து அறிவுரை கூறி ஒரு பெரிய பிரச்சனையை சந்தித்து இதோ இப்படி வேறு கல்லூரியில் மாற்றிக்கொண்டிருக்க மாட்டார். இன்று தன்னை திட்டினாலும் அவர் மேல் தப்பில்லை என்று தான் பிரணவி அவள் மனதிடம் வாதாடுவாள்.

நடந்ததை எல்லாம் நினைத்து பார்க்க ஆரம்பித்தாள். சென்னை 'சாரதா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி' என்ற தனியார் கல்லூரியில் ஆத்ரேயன் கல்லூரி பேராசிரியராக இருக்க, பிரணவி இரண்டாம் வருடத்தில் படித்திருந்த காலம்.

கல்லூரியில் திருமணம் ஆகாத புரப்பஸர் என்ற காரணத்தாலும், பார்க்கவும் கட்டுமஸ்தான உடலும் அழகும், பழக இனிமையாகவும் இருப்பவன் ஆத்ரேயன்.‌ அதனால் அங்கே பயிலும் கல்லூரி மாணவிகள் சிலரும் ஆத்ரேயன்‌ என்றால் கொள்ளைப் பிரியம்.

ஆத்ரேயன் வகுப்பு என்றால் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் கூட வந்துவிடுவார்கள். பலரின் கனவு நாயகனாக அவனறியாது வலம் வந்தான்.

அவன் கல்லூரி படிக்கும் போது பலருக்கு க்ரஷாக இருந்தான்.‌ பேராசிரியராக மாறிய போதும் இம்மியளவு மாற்றமின்றி அதே போல பல இதயத்தை கொள்ளை அடித்தான்.

சீனியர் மாணவி மிதுனாவின் மனதையும் ஆத்ரேயன் கொள்ளையிட்டு இருந்தான்.

அதுவும் இரண்டு வருடமாய் நேசிக்கின்றாள். ஆத்ரேயன் வரும்போது போகும் போது மற்ற மாணவிகள் என்னதான் ஏக்கமாய் பார்த்தாலும் ஆத்ரேயனின் நேர்பார்வையில் 'மாணவிகள்' என்ற வட்டத்தில் சென்று கொள்வார்கள்.

மிதுனா மட்டும் அதை தாண்டி காதல் அம்பை வீசினாள்.

ஏற்கனவே புரப்பஸர் மாணவியை 'தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது' என்றும், 'புரப்பஸர் ஸ்டூடண்ட் பந்தமானது புனிதமானது' என்று கொள்கையில் இருப்பவன்.

அவனுக்கு வேதியல் பாடம் எடுப்பதால் மிதுனாவின் வேதியல் பார்வை அறியாமல் இருப்பவனா?

முதலிலேயே கண்டித்து அனுப்பினான்.

மிதுனாவின் மதிமயக்கம் ஆத்ரேயன் மீது பித்தாக, செவிகள் முடமாகியது. அவள் புத்திமதியை கேட்க மறுத்தாள்.

முதலில் பார்வையால் பறைச்சாற்றிய பொழுது உதாசினம் செய்துவிட்டான்.‌

நேரில் படிப்பில் சந்தேகம் என்று‌ கூறி நிற்க வைத்து காதலிப்பதாக கதைக்க, ஆத்ரேயன் "நீ படிக்க வந்தா படிக்க மட்டும் செய்யணும். காதல் கீதல்னு சுத்த கூடாது.
அட்லீஸ்ட் காலேஜ்ல கூட படிக்கிற பசங்களை விரும்பினா கூட பரவாயில்லை. என்னை காதலிக்க கூடாது. இது தப்பும் மா" என்று அறிவுறுத்தினான்.‌

அதை தாண்டி வந்து நின்றவளிடம் எரிந்து விழுந்தான். வீட்டில் பெற்றவரிடம் கூறிவிடுவதாக பயமுறுத்தி தள்ளி நிறுத்த போராடினான்.

உதாசினங்கள், எரிந்து விழுதல், அவமானம், என்று அனைத்தையும் தூரயெறிந்து ஆத்ரேயனை மணக்கும் முடிவோடு நடமாடினாள் மிதுனா.

மிதுனா வீட்டில் ஒரே பெண். வசதியான குடும்பம் என்பதால் அவளை உள்ளங்கையில் தாங்குபவர்கள். அதனாலே அளவுக்கதிகமாக செல்லமும் கொடுத்து கெடுத்து குட்டி சுவராக்கியிருந்தனர்.

அதன் பலன் மனம் விரும்பியதை அடைந்தே தீரும் குணம்.

கல்லூரியில் மிதுனா ஆத்ரேயன் என்று வகுப்பறை பலகையில் யாரோ எழுதியதாக காட்டி வகுப்பறைக்குயில் தன் காதலை பகிரங்கப்படுத்த, அடுத்து வகுப்பிலேயே கூப்பிட்டு வைத்து எல்லோர் எதிரிலும் திட்டி அனுப்பினான்.

அன்று தான் எம்.எஸ்.சி படிக்கும் சீனியர் மாணவி மிதுனா, புரப்பஸர் ஆத்ரேயனை விரும்புவது சிலரால் கசிந்து அங்கு பயின்ற பி.எஸ்.சி‌ மாணவி பிரணவிக்கு தெரிய வந்தது. பிரணவிக்கு மட்டுமில்லை சிலருக்கு பரவியது. அப்படியே சென்றாலும் மேனேஜ்மென்ட் வரை பரவியிருக்க வாய்ப்பில்லை.

வீட்டுக்கு வந்தவள் கையில் நரம்பு மண்டலத்தை கீறி முடித்தாள் மிதுனா. மெத்தையில் மல்லாக்க படுத்து ரத்தாறு ஓடியது.

அதன் பின்….

நடந்தவைகள் தான் ஆத்ரேயன் வாழ்வை சூறையாடியது.

-தொடரும்.

https://praveenathangarajnovels.com/மௌனமே-வேதமா-6/

மௌனமே வேதமா-5
https://praveenathangarajnovels.com/மௌனமே-வேதமா-5/