Skip to content
Home » Forum

Forum

நந்தினி சுகுமாரன்-த...
 
Notifications
Clear all

நந்தினி சுகுமாரன்-தந்தை மண் முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு

1 Posts
1 Users
0 Reactions
35 Views
Site-Admin
(@veenaraj)
Reputable Member
Joined: 7 months ago
Posts: 160
Topic starter  

💝நந்தினி சுகுமாரன்-தந்தை மண் முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு 💝 

தமிழினியா ரிவ்யூ 

#Tamizhiniya_Review

#Praveenathangaraj_novels

#முகத்தில்_அறையும்_ரியாலிட்டி_கதைகள்_2024

#நந்தினி_சுகுமாரன்

#தந்தை_மண்

தமிழினியாவின் பார்வையில் தந்தை மண்.🥰

என்னன்னு கதைய பத்தி நான சொல்றதுன்னு தெரியல அக்கா. 🥹🥹

ரொம்ப ரொம்ப அருமையான கதை அக்கா. 🫂🫂 எப்போவும் மனித உணர்வுகள்ல அழகா நீங்க வார்த்தைகள்ல சொல்லுவீங்க. அது தனிப்பட்ட முறைல எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா, இந்த கதைல உறவினர்களோட முகம், ஒரு கட்டத்துல பணம், சொத்துன்னு வந்தா எந்த மாதிரி நடந்துப்பாங்க அப்டிங்குற விசயத்த உண்மையாலுமே முகத்துல அறைஞ்ச மாதிரி சொல்லி இருக்கீங்க அக்கா. 😕

தந்தை மண். திவ்யான்னு பெயர்ர பாத்த உடனே அட இந்த பேர்ல கதையா? அப்டின்னு தான் படிக்க ஆரம்பிச்சேன். படிக்க படிக்க ஒவ்வொரு எபிசோடும் நான் அழுது தான் முடிச்சேன். என்னோட தனிப்பட்ட வாழ்க்கைல இதே மாதிரி பிரச்சனை நடந்து இருக்கு. அதுக்கு தீர்வா ரெண்டு மூத்தவங்களும் இல்லாம போனது தான் கொடுமை. 

காதம்பரி, லோகு போலத்தான் இன்னமும் இருக்காங்க. இது உண்மைதான். அதுவும் கிராமம் பக்கம்லாம், பொண்ணுக்கு சொத்துல பங்கு கொடுத்தா உறவு விட்டு போய்டும், அதான் கல்யாணத்துக்கு சீர் செஞ்சோமேன்னு பேசுவாங்க. செஞ்ச சீர் விரல் விட்டு எண்ணுற அளவு இருக்கும். சொத்து மதிப்பு அத விட பத்து மடங்கு அதிகமா இருக்கும். பையனுக்குத்தான் சொத்துல உரிமை, கடைசி காலத்துல அவன்தான் பெத்தவங்கள பாத்துக்க போறான்னு இன்னமும் சொல்லிட்டு இருக்கத்தான் செய்றாங்க. ஆனா, பையன்னோ, பொண்ணோ பெத்தவங்கள பாத்துக்குறது ரெண்டு பேரோட கடமைன்னு என்னைக்கு புரிஞ்சிக்க போறாங்கன்னு தெரியல. 🥺🥺

தன் பேச்சதான் மத்தவங்க கேட்கணும்னு நினைக்குற காதம்பரி, அவருக்கு தப்பாம பிறந்து இருக்குற லோகு. பாசம் (சொத்து) விட்டு போய்டக் கூடாதுன்னு தன்னோட தம்பி ரவிக்கே லோகுவ கட்டிக்கொடுத்து தன் கைப்பாவையா வச்சுக்குற காதம்பரி. சுயநலம் தேவைதான், ஆனா அதோட அளவு அதிகமாகுறப்போ வாழ்க்கைல என்னனென்ன நடக்கும்னு உணர்த்திய கோபால கிருஷ்ணன். 🫂🫂

இவங்களுக்கு எல்லாம் மொத்தமா அப்படியே தன் தந்தையோட குணத்த கொண்டு இருக்குற ஜோதி. இவங்களோட பெத்தவங்க மீனாட்சி சுந்தரமும் ருக்மணியும் என்னதான் பிள்ளைங்கள வளர்த்து இருந்தாலும் நாம நினச்ச மாதிரி பிள்ளைங்க வளருறது கிடையாதுன்னு உணர்த்திய விதம் அருமை. 🥳🥳🥳

சொத்துன்னு வரப்போ பெத்த தந்தையையே மதிக்காம பிள்ளைகள் விடுற வார்த்தைகள் ஒருத்தர எந்த அளவுக்கு நோகடிக்கும்னு அப்படியே எடுத்து சொல்லி இருக்கீங்க அக்கா. 🥹🥹🥹

கணவன இழந்து தவிக்குற ஜோதிக்கு தந்தையோட சொத்து எந்த விதத்துல என்ன செய்யுது? அது யார் கைக்கு போகுது. அதுக்கு அவங்க மனசளவுல போராடுற பிரச்சனை. அந்த சொத்து பின்னாள்ல என்னதான் ஆகுது? இதுலாம் தான் இந்த கதை சொல்லுது. அக்கான்னு பாசம் வச்சு, அவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்னு நினச்சிட்டு இருந்த ஜோதி எண்ணத்துல எவ்ளோ பெரிய அடி விழுது, அதுல இருந்து எப்டி வெளில வராங்க, அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு கதை ரொம்ப சுவராஸ்யமா போகுது. 

இதுல எந்த சூழ்நிலைலயும் தன்னோட தன்மானம் விட்டுப் போய்டக் கூடாதுன்னு அந்த தாய் படுற வேதனை, இன்னல்கள், தன் மகள எப்டி கரை சேர்க்குறதுன்னு சிங்கிள் பேரண்ட் விசயத்தயும் சரியா காட்சிப்படுத்தி இருக்கீங்க. இதுக்கு மேல கதைய படிச்சு தெரிஞ்சிக்கிட்டாதான் சரியா இருக்கும்னு நினைக்குறேன். 

இப்படி இருக்குற மனுசங்களுக்கு நடுவுல செல்வம், சுப்பு மாதிரி மனுசங்களும் இருக்காங்க. நிஜமா இருக்காங்க. ஒரு மனுசனோட வாழ்க்கைல வர கஷ்ட நஷ்டங்கள் தான் அவனுக்கு பலரோட உண்மையான முகத்த காட்டும். அப்படி ஜோதிக்கும் திவ்யாவுக்கும் கிடைச்ச நல் உறவுகள் இவங்க. 🥰🥰

அதுவும் இறுதியா முடிக்குறப்போ சொல்லி இருந்தீங்க பாத்தீங்களா என்னால போன்ன கீழ வைக்க முடியல அக்கா. நிஜமா என்ன சொல்றதுன்னு தெரியல. என்னை இந்த கதை ரொம்ப பாதிச்சு இருக்கு. 😌

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா.🥳🥳🥳

------------------------------------------------

வேதா விஷால் விமர்சனம்

தந்தை மண்

நந்தினி சுகுமாரன் 

 விவசாயக் குடும்பமும் கொடுக்கல் வாங்கலில் சிக்கலும், பாகப்பிரிவினை சண்டைகளும் நிகழ்வியல்பாகக் கண் முன்னே விரிகிறது. சதீஷை முழுதாகத் தவறு என்று சொல்ல முடியாது. அவன் ஒரு சாதாரண ஆண்மகன். அவ்வளவே. சுந்தரம் ஒரு அற்புதமான கதாபாத்திரம் 👏👏

காதம்பரி, லோகு குள்ள நரிக் கூட்டம்😡😡 எத்தனை சூழ்ச்சி, ஏமாற்று, வன்மம்🙄😡

திருமணமாகி அதே கிராமத்தில், அதே நிலத்தை ஆளப்போகும் சுப்பு, திவ்யாவுக்கான காதம்பரி & கோவின் எதிர்வினை, மகளின் திருமணத்துக்குப் பிறகு ஜோதி என்ன செய்தார் என ஒரு சின்ன எபிலாக் குடுங்க🌷🌷

 வாழ்த்துகள் மா.🌷

------------------------------------

Agninga ram review

நந்தினி சுகுமாரன் தந்தைமண் அருமையான இயல்பான கதை மா. எப்போதுமே உங்கள் எழுத்து என்னை ஏமாற்றாது அந்த வகையில் இந்த கதையும் சூப்பர் தான் நிஜவாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே கண்முன் கொண்டு வந்துட்டீங்க. இடப்பிரச்சனை இப்படி எல்லாம் நடக்கும் தான் அண்ணன் தம்பி பங்காளிகளாக மாறுவதும் நடப்பது தான். நன்றாக இருந்தது மா கதை

--------------------------------------

Selvarani selvarani review 

தந்தை மண்.

தாய் மண்தானே கேள்விப்பட்டு இருக்கிறோம்.தந்தை மண் கதை.சுந்தரம் பிள்ளைகளுக்கு நிலத்தை பிரித்துக் கொடுக்கிறார். ஜோதியின் கணவனின் இறப்பிற்கு பிறகு அண்ணனிடம் வாங்கிய கடனுக்கு தன்பங்கு நிலப்பத்திரத்தை கொடுக்கும் ஜோதியை மணத்தாசையால் அக்காவும் அவள் மகளும் கொத்திப் பிடுங்க வாய் மூடி நிற்கும் ரவி.

அடி மேல் அடியாக விழுந்தாலும் தந்தையின் மண்ணை மீட்டு எடுக்கிறாள்.உடன்பிறப்புகளின் துரோகம் தந்தையின் மனவேதனை அவரின் இறப்பு என ஜோதி திணறினாலும் செல்வம் குடும்பம் கை கொடுப்பது நல்லார் ஒருவர் உளரேல் பொன்மொழி தான் கண் முன் வருகிறது.திவ்யாவிடமே மண் சேர்வது நெகிழ்வான முடிவு.

 


   
ReplyQuote