Result Announcement
JJ-2024 Competition Result
(ஜுன் போனால் ஜூலை காற்றே...-2024) போட்டி முடிவுகள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபத்திருநாளில் எல்லாம் வல்ல இறைவன் அருளால் உடல்நலமும் மனபலமும் அனைவருக்கும் பெற வேண்டி போட்டியின் முடிவை வழங்க வந்துள்ளேன்.
இந்த போட்டி ஏற்கனவே சொன்னது போல வித்தியாசமான போட்டியாக வைத்தேன்.
தீம் சைட் அட்மின் கொடுக்க, அந்த தீமை வச்சி எழுத்தாளர்கள் கதையை கொடுக்கணும்.
அதை எப்படி கொடுக்கின்றார்கள்? கற்பனை, எழுத்துநடை சுவாரசியமா சம்பவம், இப்படி எழுதும் எழுத்தாளர்கள் அவங்க திறமையை எழுத்தில் காட்டணும். கதையின் தீம் ஒரு பேராகிராப் மட்டுமே. மற்றபடி உங்க கற்பனையில் கதையை எப்படி வேண்டுமென்றாலும் கொடுக்கலாம் அதில் என் தலையீடு இல்லை. எழுத்தாளர்கள் கதையை குறுநாவலாகவோ அதிகபட்ச அத்தியாயம் கொண்ட பாகங்களாகவோ எழுதலாமென்று கூறியிருந்தேன். நாலு மாதத்தில் தாராளமாக நல்ல கதை கொடுக்கலாம்.
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு தீம்.
JJ competition Theme
இப்படி தான் எழுதணும் என்ற விதிமுறை அல்ல. இது கதையில் துளி கலந்து உங்கள் கற்பனையில் கதை கொடுங்க.
மேகத்தின் மோனம்-நித்யா மாரியப்பன் அவர்களுக்கு கொடுத்த YouTube தீம்.
Guest Performance Writer
யூடூயுபர் பிரபலம் அதீத காதல் ரெக்வஸ்ட் வர மிதக்கின்றான். சில தவறான காணொளியை ஏற்றி விட்டு ஒரே நாளில் தவறான கருத்து வீடியோவால், சிறைக்கு சென்று வந்தப்பின் ஏற்படும் வாழ்க்கை முறை. சூசைட் செய்ய முடிவெடுக்கும் பெண் ஏதோவொரு காணொலியில் நாயகனின் நம்பிக்கை பேச்சால் நாயகனை தேடி வந்து காதலிப்பது. அவனே விரக்தியில் இருக்க காதலை ஏற்பானா?
டாக்டர் ரஜினிகாந்த்-வத்சலா ராகவன் அவர்களுக்கு கொடுத்தது மருத்துவ தீம்
மருத்துவமே உயிர் என நினைத்து படித்த ஹீரோ ஹீரோயின். மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதற்காக திருமணமே வேண்டாம் என்று இருவரும் இருக்க அன்னையின் கட்டாயத்தில் அவரது மருத்துவ பரிசோதனையை சாக்காக வைத்து அவளை பெண் பார்த்து செல்கிறான். அவளை பிடித்து விட அவளுக்கும் அவனை ரொம்பவே பிடிக்கிறது. அவனும் மருத்துவன் என்று அவளுக்குத் தெரியும் நேரத்தில் திருமண ஏற்பாடுகள் நடக்க அந்த நேரத்தில் இவனது மருத்துவமனையில் நடந்தாக சொல்லபடும் உடல் உறுப்பு திருட்டில் இவனுக்கும் பங்கு உண்டா? என்று அவள் ஒரு கேள்வி கேட்டு விட அவள் மீது கடும் கோபம் கொள்கிறான். பின்னர் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பது அவளுக்கு தெரியவர அவனுக்கு அவள் மீதுள்ள கோபம் மட்டும் குறையவில்ல. கடைசியில் இணைகிறார்கள்
தட்டாதே திறக்கிறேன் - சுமையா பேகம்
சைல்ட் ஹுட் காலத்தில் சந்தித்த பெண் மீண்டும் சந்திக்க நேர்கின்றது.
பிற்காலத்தில் காதலாக.
தாமரையின் தழலவன் -பானுரதி அவர்களுக்கு கொடுத்த தீம் antihero
தன்னை காதலித்தவள் வேறொருத்தனுடன் உல்லாசமாய் இருக்க, அவளை விடுத்து தந்தை பார்க்கும் பெண்ணை மணக்கின்றாள்.
அவளை பிடிக்காமல் போனாலும் தன் தேர்வு தவறாய் போனதால் வருத்தம் கொள்ளாமல் தந்தையிடம் தன் காதலை அவருக்காக விட்டு தருவதாக திமிராய் வலம் வந்து நாயகி இம்சிக்கின்றாள்.
ஆனால் காதலி நல்லவளா என்று ஆராய அவன் தான் ஒருத்தனை அனுப்பி சோதித்து பார்க்கின்றன். தன் காதலி தேர்வை ஏற்காமல், வேண்டாவெறுப்பாய் தந்தை பார்த்த பெண்ணுடன், வாழ்வது, பின் சேர்வது.
பிரியமானவளின் நேசம் -அனுஷா டேவிட் அவர்களுக்கு கொடுத்த தீம். விலங்குகள் மனிதாபிமானம் தீம்.
புதிதான திருமண ஜோடியில்....
மரம் செடி கொடி, விலங்குகள் மீது ப்ரியமான பெண் சாஃப்ட் நேச்சர்.
தன் தம்பியை புதரில் நாய் கடித்து குதறியதால் விலங்கையும், செடி கொடியையும் முற்றிலும் வெறுத்து மனிதநேயத்தை தொலைத்த நாயகன் கதை.
இயற்கையின் படைப்பில் எல்லா உயிரினமும் ஒன்றாக மதித்து புரிய வைப்பது கதை களம்.
அரிதாரம்-அருள்மொழி மணவாளன் அவர்களுக்கு கொடுத்த தீம் நடிகை கதை
மூன்று படம் ஹிட் கொடுத்த நடிகையின் வாழ்வில் ரசிகனின் வருகை.
ஷீட்டிங் நடக்குமிடத்தில் கேரக்டர், துணை டேரக்டரால் கற்பை இழந்து கேரவனில் மயங்கியிருக்கும் போது அசிஸ்டெண்ட் காப்பாற்றுதல்.
அசிஸ்டெண்ட் நல்லவிதமாக நடப்பது. ஒரு கட்டத்தில் காதலிப்பது.
கடைசியில் அசிஸ்டெண்ட் தான் நடிகையை விலை பேசி இக்கட்டில் தள்ளியதாக அறிவது. தொழில் அதிபரை மணப்பது.
நிழல் தேடும் நிலவே -தனக்யா கார்த்திக் அவர்களுக்கு மிடில் கிளாஸ் கதை.
காலம் கடந்து திருமணம் செய்த தம்பதிக்கு இரண்டு மகள்.
மேனேஜரின் மகன் வேலை செய்யும் பெண்ணிடம் அத்துமீறிட, அதனை தட்டி கேட்டு வேலை பரிபோனதால் இரண்டு மகளோடு மிடில்கிளாஸ் வாழ்க்கை. மகளை பொத்தி பொத்தி வளர்த்தவர் வேறு வழியின்றி பணிக்கு அனுப்புகின்றார். அங்கே அவள் காதலிக்க ஆரம்பமாகின்றது. தங்கள் வாழ்வில் காதல் வேண்டுமா என்று தவிர்க்க, அவனோ அவள் தந்தையிடம் வந்து நிற்கின்றான். சாதி மதம் பாராது மகளை கட்டிக் கொடுப்பாரா. இல்லை மகளும் மிடில்கிளாஸ் வாழ்விற்கு வேண்டாமென மறுப்பாரா. நடுவில் மிடில்கிளாஸ் மைண்ட் செட். காட்சிகள்.
மெய்யென கொள்வாய்- தேவி அவர்களுக்கு கொடுத்த கதை நடிகை கதை
நடிகைக்கு திருமணம் என்று மீடியாவில் பதியப்படுகிறது. ஆனால் அந்த நேரம் பார்த்து நடிகையின் அம்மா மற்றும் பழைய புரடியூஸர் பேச்சு வார்த்தை வீடியோ வெளிவருகின்றது.
நடிகையின் அம்மா முன்பு நடிகையாக வரவேண்டும் என்ற கனவுகளோடு இருக்கும் போது அவரது வீட்டில் பேசும் சுதந்திரம் கூட அளிக்காமல் மணமுடித்து வைக்கின்றனர் அவள் பெற்றோர். அழகாக வாழும் சூழலில்...
நாளடைவில் பெண் குழந்தை பிறக்க ஃபேஷன் டிசைனிங் படிக்க வைத்து அப்படியே சின்ன சின்ன மாடலிங் செய்ய மகளை பழக்குகின்றார்.
ஒரு கட்டத்தில் நடிகையாகும் வாய்ப்பு மகளுக்கு வருகின்றது.
கணவர் விவாகரத்து என்று பிரிக்கின்றனர்.
ஆறேழு வருடம் நடிகை உச்சம் பெற்ற நடிகரோடு படம் நடித்து பெயர் பெற திருமணம் என்றதும் பூகம்பம்... எவ்வாறு சூழலை கையாள்கின்றாள்? அன்னையை வெறுப்பாளா?
வஞ்சிப்பதரோவம் பேரவா -பார்கவி முரளி அவர்களுக்கு கொடுத்த தீம் க்ரைம் மர்மம்
ஐடி ஜாப் - இருவரும் விரும்புவது. அதீத சொகுசு வாழ்விற்கு ஏங்கி வேறொரு மீட்டிங்கில் சந்தித்த பணக்கார வாலிபனை காதலித்து கரம் பற்றுகின்றாள்.
ஏற்கனவே காதலித்தவன் மனம் வாடுகின்றான். சந்தர்ப்பத்தில் காதலி ஊருக்கு வந்தவனுக்கு முன்னால் காதலியை காணும் ஆவல் வர சோஷியல் மீடியாவில் தேடுகின்றான்.
அவளை காணவில்லை. தேடுதலில் கணவனான பணக்கார வாலிபன் அப்பெண்ணை மோசமாய் போட்டோ வீடியோ அவளறியாது எடுத்து ஆன்லைனில் காட்டி சம்பாதிக்கின்றான். அது தெரியவர காதலியை கொல்வது. குக்கரில் வேகவைத்து கொன்றதை நாயகன் அறிந்து மாட்டிவிடுகின்றான்.
கடல் விடு தூது - கமலி அய்யப்பன் அவர்களுக்கு கொடுத்த தீம் sea story
கடல் ஆராய்ச்சி செய்யும் காதலர்கள். சில சூழலால் தனி தீவில் நாயகன் மட்டும் செல்ல அன்று பார்த்து கடலலையால் காணாமல் செல்கின்றான்.
நாயகி அவனை தேடி அந்த பகுதி தீவில் வலம் வருகின்றாள்.
ஆக்டோபஸ் ஒன்று வட்டமிடுகின்றது. கூடவே மற்றொரு நாயகன் அவளை ஒருதலையாக காதலிக்கின்றான்.
மனம் உன்னாலே பூப்பூக்குதே-ஜெயலக்ஷ்மி கார்த்திக் அக்ரஹாரத்து கதை அக்ரஹாரத்து பாஷை மஸ்ட். பாட்டி பேத்தி பாண்டிங்
தியாகிய தீபம் - சுபஸ்ரீ பிரேமா அவர்களுக்கு கொடுத்த கதை தீம்
சரியான பாதை கேட்டு வரும் கும்பல் கூடவேயிருக்கும் காதலியிடம் சில்மிஷ பார்வை வீசும் வம்பு செய்யவும் வேண்டுமென்றே மாற்று பாதையை தவறாக கூறுகின்றான் நாயகன்.
ஆனால் அந்த மாற்றுப்பாதையில் சென்ற கும்பல் ஒரு பெண்ணை கற்பழிக்க செய்கின்றனர்.
சரியான வழியை கூறியிருந்தால் இந்த நிகழ்வே நடந்திருக்காதென்று நாயகன் கடைசியாக கெடுக்கப்பட்ட பெண்ணை மணக்கின்றான்.
பெயர் கொடுத்தா எழுதி முடிப்பேன் என்பவர் மட்டும் பெயர் கொடுக்க சொன்னேன். ஆனாலுமே சிலர் பெயர் கொடுத்து பாதியில் எழுதயியலா சூழல். உண்மையான சூழ்நிலை நம்மை இக்கட்டும் போது நாம் மனிதர்கள் சூழ்நிலையை புரிந்துக்கொள்வோம்.
முடித்தவர்களை பற்றி மட்டுமே நாம் இங்கு காண்போம்.
போட்டி முடிவுற்று சொன்ன சொல்படி அவரவர் திறமையை எழுத்தில் செயலில் காட்டினார்கள்.
உண்மையில் எனக்கு இந்த போட்டி ரொம்ப பிடிச்சிருந்தது. நான் ஒரு தீம் வச்சி இப்படி எழுதலாம், இப்படி கதையை கொண்டு போகலாம் என்று யூகித்திருந்தேன். சிலர் அதை விட மிக அற்புதமாக அழகான சொல்லாடலில், ஆர்வம் தூண்டும் விதமாக எழுதியிருந்தாங்க.
கதை கருமட்டும் வச்சி சிலர் அதை சுற்றி மட்டுமே கதையும் புனைந்திருந்தாங்க. அதுவுமே அவரவர் எழுத்தாளரின் தனிதன்மையில் இருந்தது. படிக்கும் போது அவரவர் ரைட்டிங் ஸ்டைல் அதுல அழகாக தெரிந்தது.
இன்று முடிவு அறிவிக்கும் நேரம். முதல்ல நவம்பர் 16 ஆம் தேதி முடிவு அறிவிக்க இருந்தேன்.
எனக்கு இந்த நல்ல நாள் கிழமை எதுவும் கவனிக்கற வழக்கம் இல்லை. அதனால் ரயில் வந்தப்ப உதித்த யோசனையில் ''ஜூன் போனால் ஜூலை காற்றே' என்று போட்டி ஆரம்பித்து நான்கு மாதம் முடிய பார்த்தேன். என் பிறந்த நாள் வர்றப்ப முடிவு அறிவிக்கலாம்னு இருந்தேன். ஆனா தீபாவளி எல்லாரும் கொண்டாடும் பண்டிகை வரவும். இந்த நன்னாளில் முடிவு அறிவிச்சிடலாம்னு எண்ணத்தை மாற்றினேன்.
சம்மந்தப்பட்ட போட்டி எழுத்தாளரிடம் அனுமதி கேட்டு முடிவு அறிவிக்க இதோ தீபாவளி நன்னாளில் முடிவு வந்தாச்சு.
போட்டிக்கு எழுத வந்ததே எழுத்தாளரின் தன்னம்பிக்கை. அதுல நேரத்துக்கு, நல்லபடியா கதையை சிறப்பாக முடிந்ததே வெற்றியானது. குறிப்பிட்ட காலநேரத்திற்குள் ஒரு கதை நம்மால் எழுதி முடிக்க வேண்டும் என்ற சவாலான பழக்கம் தான் போட்டிகள்.
அதில் முடிவுற்ற கதையின் அனைத்து எழுத்தாளருமே சிறப்பாக முடித்தது அற்புதம்.
மலரில் எல்லா மலரும் சிறப்பானது. ஆனா ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச்சிறப்பு வாய்ந்தது.
அது போல போட்டி முடிவு என்று அறிவிக்கும் போது முதல் மூன்று சிறப்பான தேர்வுக்கு சென்றாக வேண்டும். இந்த போட்டியில் அவ்வாறு வெற்றி பெற்ற கதைகள்👇
முதல் பரிசு வத்சலா ராகவன் அவர்கள் எழுதிய டாக்டர் ரஜினிகாந்த்
இரண்டாம் பரிசு தேவி அவர்கள் எழுதிய மெய்யெனக் கொள்வாய்
மூன்றாம் பரிசு பார்கவி முரளி அவர்கள் எழுதிய வஞ்சிப்பதோரும் பேரவா.
மேற்குறிப்பிட்ட மூன்று கதைகளும், கொடுத்த தீம், எழுத்துநடை, கதைக்களம் கதைமாந்தர்களை உள்ளத்தில் ஆழமாய் எடுத்து சென்ற விதம் என்று படிக்கட்டில் ஒருபடி மேலே சென்றதாக நடுவர் கூறியது.
வாசித்து பார்த்தவர்களுக்கு நிச்சயம் புரியும். வெற்றி பெற்றவர்களுக்கும் எழுதி முடித்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். கோப்பைகள் தங்கள் வீடு தேடி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நன்றோ அல்லது தீபாவளி விடுமுறை முடிந்தோ வந்தடையும். சான்றிதழ்கள் முகநூலிலும் வாட்சப்பிலும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-----
ரைட்டர் மட்டும் மகிழ்ந்தால் சரியா... அனைத்து கதைகளையையும் உடனுக்குடன் வாசித்து கருத்து பதிந்த வாசகரும் மகிழ வேண்டும்.
JJ Competition கதைகளில் அனைத்து கதையையும் வாசித்து சைட் கமெண்ட்ஸ், சைட் ரிவ்யூ இரண்டிலும் எழுத்தாளருக்கு ஊக்கம் தந்த வெற்றிப் பெற்ற வாசகர்கள். 👇
எல்லா கதைக்கும் தளத்தில் கமெண்ட்ஸ் பகுதியிலும், தளத்தில் விமர்சனப் பகுதியிலும் விமர்சனம் அளித்தவர்கள்.
Kothai Hariramprasad
Kalidevi
அனைத்து கதையிலும் தளத்தில் கமெண்ட்ஸ் பகுதியில் உடனுக்குடன் வாசித்து கருத்து வழங்கியவர்கள்.
Vino prakash
Sarathi Rio
Priyarajan
Eswari
அனைத்து கதைக்கும் தளத்தில் விமர்சனப பகுதியில் மட்டும் விமர்சனம் அளித்தவர்.
Chitrasaraswathi.
இந்த நாளை மேலும் இனி தாக்க இன்று வெற்றியாளரை பகிர்ந்துள்ளேன்.
வெற்றி பெற்ற வாசகருக்கு அனுப்ப வேண்டிய புத்தகம் நேற்றோ அல்லது தீபாவளி விடுமுறை முடிந்தோ உங்களை வந்தடையும்.
-----
தளத்தில் போட்டி என்றதும் சம்பிரதாயத்திற்கு வெறும் வாழ்த்து மட்டும் சொல்லி விட்டு செல்லாமல், அன்பும் ஆதரவும் நல்கிய நல்லுள்ளங்களுக்கு என்றென்றும் அன்பும் நன்றியும்.🙏💞
வாழ்த்து மட்டும் சொல்லிட்டு சைலண்டா விட்ட ரீடரும் இருக்கிங்க அது ஏன்னு தெரியலை. வாசிப்பது அவரவர் விருப்பம். நான் யாரையும் கைப்பிடித்து வற்புறுத்த மாட்டேன்.
வாழ்த்து மட்டும் சொல்லியதுக்கு நன்றிகள். அதுக்கும் ஒரு மனசு வேண்டும்ல. நல்லதாகவே எடுத்துப்போம் 🤪
----
தனியாளாக... நினைத்ததை தனியாக செய்ய விரும்பும்... எனக்கு இந்த ஆதரவு என்றும் நேசம் கொண்டவளாக நேர்மையான முறையில் யாரையும் வீழ்த்தியோ, அல்லது தகிடுதத்தம் செய்யாமல், நல்ல கதை எழுதி, நல்ல முறையில் மட்டுமே மேன்மை அடைவேன்.
ஒரு எழுத்தாளராக... அதே போல அட்மினாக...
நன்றி,
அன்புடன்
பிரவீணா தங்கராஜ்.
வெற்றிக்கு அடுத்த படியில் இருந்த கதைகளை பற்றி பொத்தம் பொதுவாக பெயரை கூறாது நடுவர் கூறிய நிறை குறை. (இந்த கதை என்று சுட்டிக்காட்டமல்... காரணம் மனதை தவறியும் காயப்படுத்த வேண்டாம் )
குறைகள்:
*உரைநடைக்கும் உரையாடலுக்கு வித்தியாசம் இல்லாமல் அப்படியே எழுதுவது. உரரையாடல் என்றால் "..." கொட்டேஷன் மார்க் போட்டு எழுத வேண்டும். போட்டிக்கு கதைக்கு முக்கியம்.
*ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றால் நல்ல ஆக்கப்பூர்வமான வார்த்தையை பயன்படுத்த வேண்டும். தேவையற்ற வார்த்தைகள் வசனம் நிராகரிக்க
வேண்டும். சிலது காட்சிக்கு தேவையற்று கணவரை வசைமாறி பொழியும் திட்டு. இது கதாபாத்திரத்தின் தன்மையை மாற்றிவிடுகின்றது.
*கொடுக்கப்பட்ட கதைக்கருவிற்கு ஏற்ப பேச்சு சுற்று சூழல் இல்லாத ஏமாற்றம்.
*கதை சுவாரசியம் இது தான் என்று கிரகிக்கும் வகையில் எழுதுவது. படிக்கும் போதே சுவாரசியம் குறைந்துவிடும்.
*கதையில் கூடுதலாக தேவைப்படும் விஷயம் எழுதாமல் குறைத்து வாசிப்பில் அதிருப்தி.
*எழுத்துப்பிழை... வாக்கியபிழை. வல்லினம் மிகும் இடம் எல்லாம் தேவைப்படும் இடத்திலும் வாக்கிய பிழையும் காணப்பட்டது.
நிறைகள்:
*ஒரு கதையில்
வர்ணனை, தொடக்கக்க காட்சிகள் மட்டுமே அடுத்தடுத்த கதையை வாசிக்க தூண்டும் ஆர்வத்தை தரும். அப்படியிருக்க வாசித்த கதைகள் அனைத்தும் அடுத்தடுத்த அத்தியாயம் வாசிக்க ஆர்வத்தை தந்தது.
*கொடுத்த கதைக்கருக்கான தீம் மற்றவர்கள் சரியாக பயன்படுத்தி அதை சுற்றி கதைக்களத்தை புனைந்தது.
*இயற்கை காட்சியோடு ஒன்றிய நாயகன் நாயகி காட்சிகள் மனதை கொள்ளை கொண்டது.
*இளமை ததும்பும் வார்த்தைகள், காலத்திற்கு ஏற்ப ரசனையும், புதுவிதமான காட்சி அமைப்பும் வாசிப்பவரையும் இளமை ததும்ப வைத்தது.
*வார்த்தை சொல்லாடல், உவமை சொல்லி காட்சியை கோர்வைப்படுத்தியது அழகு.
குறிப்பு: ஏதேனும் போட்டியில் அதிருப்தி குற்றம் குறை இருந்தால் தெரிவிக்கவும். அல்லது நிறைகள் இருந்தாலும் தெரிவிக்கலாம். என்னை மெருக்கேற்ற உதவும். நானும் தளம் நடத்துவதற்கு புதியவளே.
❤️---❤️
எழுத்தை நேசிப்போம் எழுத்தாளரை அல்ல.
அன்பை விதைப்போம் அன்பை அறுவடை செய்வோம்.
-
போட்டி கதைகள் வாசித்த ரீடர்ஸ் லிஸ்ட்.3 months ago
-
JJ-2024 போட்டியில் கதை முடித்த எழுத்தாளர்கள் மற்றும் கதை பெயர்3 months ago
-
ஜுன் போனால்... ஜூலை காற்றே... போட்டி அறிவிப்பு8 months ago
- 129 Forums
- 1,937 Topics
- 2,197 Posts
- 5 Online
- 875 Members