சங்கரி அப்பன்

அன்பு வாசகர்களுக்கு என்னைப் பற்றி சில வரிகள். என்னுள் எழுத்தார்வம் வந்த போது அதை நான் உணரவில்லை கல்யாணமாகி குழந்தைகள் பிறந்த பிறகு, அவர்களும் பள்ளி செல்ல ஆரம்பித்த பிறகு தான், எழுத ஆரம்பித்தேன்.
மனசு அமைதியாக இருக்கும் போது தான் எழுதுவேன் முதல் சிறுகதை பத்திரிகையில் வந்த போதும் சந்தோஷம் தங்க இயலவில்லை நல்ல விஷயங்களை சிந்திக்கும் போது அதை சிறுகதையாக நாவலாக மினி தொடராக எழுத வேண்டும் என்ற ஆர்வம் என்னை எழுத்தாளர் ஆக்கிவிட்டது.
பிறகு சுமார் 40 சிறுகதைகள் பிரபல பத்திரிகைகளில் எல்லாவற்றிலும் வந்தது.
நான்கு குறுநாவல் பிரசுரம் ஆயின. கல்கி சிறுகதை போட்டியில் இரண்டு முறை கலந்து கொண்டு பரிசு வென்றேன்.
அடுத்து நாவல்களை எழுத ஆரம்பித்தேன் முதலில் என்னால் நாவல் எழுத முடியுமா? என்று மலைப்பாக இருந்தது.
*எங்கே போய்விடும் காலம்* என்ற என் முதல் நாவல் பாராட்டு கிடைத்தது.
சமீபத்தில் லேடிஸ் ஸ்பெஷல் பத்திரிக்கை நடத்திய குறுநாவல் போட்டியில் ஆறுதல் பரிசம் கிடைத்தது. கண்மணியில் மாலைமதியில் என் நாவல்கள் பிரசுரமாகின்றது என் மகிழ்ச்சியின் இரட்டிபை கூட்டியது.
வெளிவந்த சிறுகதைகள் ஒரு தொகுப்பாக *வாழ்வியல் பூக்கள்* என்று என் முதல் புத்தகம் வெளிவந்தது எழுதுவது பெரிய விஷயம் இல்லை அதை அழகாக தொகுத்து வாசகர்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் பணி சாதாரணமல்ல. அதை தொடர்வேன்.
-சங்கரி அப்பன்.
Leave a reply
-
Yazhini1 year ago
-
G. Shyamala Gopu1 year ago
-
Nithya Mariappan1 year ago
-
அனுஷா டேவிட்1 year ago
-
S.B1 year ago
- 137 Forums
- 2,217 Topics
- 2,536 Posts
- 6 Online
- 1,517 Members